செவ்வாய், 11 ஜூன், 2019

கேட்டுவாங்கிப் போடும் கதை : ஒலிவடிவம் - அனு பிரேம்

மீண்டும் ஒரு சிறு கதையுடன் வந்துள்ளேன்....

வாய்ப்புக்கும்....வாழ்த்தும் அன்பு உள்ளங்களுக்கும் மிகவும் நன்றி..


அன்புடன்
அனுபிரேம்.  
ஒலி வடிவம் 
அனு பிரேம் 
பாப்பா தத்தி தத்தி நடை பயின்று அப்பா அருகில் சென்றது, தன் பால் பாட்டிலைத் தூக்கி அப்பாவிடம் கொடுத்து ஏதோ சொல்ல வந்தது…. ஆனால் அப்பாவிற்கு நிற்க நேரமில்லை பாப்பா சொல்லுவதைக் கேட்கப் பொறுமையும் இல்லை. 

அதனால் அவர் வேகமாக டாட்டா சொல்லி ,ஒரு முத்தம் வைத்துச் சென்றுவிட்டார் ….

அதையெல்லாம் பார்த்த  தாராவிற்கு , கண்ணில் நீர் .

...பாப்பா என்ன சொல்றான்னு கூட கேட்க முடியல என்ன அவசரமோ உங்களுக்கெல்லாம் என்று மனதுக்குள்ளேயே    போட்டுத் தாளிக்க ஆரம்பித்தாள், கைகள் தன் பாட்டில் காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தது.

பாப்பாவுடன் விளையாண்டு அந்த நாள் மகிழ்ச்சியாகவே சென்றாலும், மனத்தில் மட்டும் ஒரு முணுமுணுப்பு, இப்படி பண்ணிட்டாங்கன்னு.

மீண்டும் மாலை வரவும் மனதில் ஒரு பயம் திரும்பிவிட்டது.

வாசல் மணி ஒலிக்கவும்….

வழக்கம் போல அப்பா என்று , பாப்பா தத்தக்கா பித்தக்கா என்று அப்பாவைத் தேடி ஓடினாள் , அவரோ நிற்காமல் நேராக கை கால் கழுவச் சென்றது ,பழையபடி தாராவிற்கு முகம் விழுந்து விட்டது,

ஆயினும் அவருக்குத் தேவையானக் காப்பி பலகாரத்தை சென்று  கொடுத்தாள். தன்னை உடல் சுத்தி செய்து கொண்டு வந்த அப்பா , மேஜை மேல் இருந்த பலகாரத்தை , எடுத்துக்கொண்டு பாப்பாவைக் கூப்பிட்டார்.

அதுவும் தன் பொம்மையுடன் அழகு நடை போட்டு ஓடி வந்தது .

பாப்பாவைத் தூக்கி மடிமீது வைத்து , அம்மு குட்டி அப்பா கை கழுவிட்டு வரத்துக்குள்ள என்ன அவசரம்….ம்ம்

இப்ப சொல்லுங்க... அம்மா சொல்லுங்க ..

சொல்லுங்க்க அம்மா, அப்பா, அம்மா... ,

அப்பா  சொல்லச் சொல்ல…. பாப்பாவும், அம்மா அப்பா என்று  தொடங்கியது .

அடுத்து ,அம்மா பெயர் என்ன சொல்லுங்க என கேட்க அது உதட்டைப் பிதுக்கி பாவம் போல அம்மா முகத்தைப் பார்க்கவும், இங்க பாருங்க நான் சொல்றேன் ன்னு சொன்னார் அப்பா.

தாரா... என்று நான்கு முறை அழுத்தி அழுத்தி..

தா ரா என நிறுத்தி, பொறுமையாக அப்பா சொல்லக் கேட்ட  பாப்பா, தா தா.ம்ம்….
தா…. தா... ரா..ரா...ரா.. தா ...ரா...தாரா  என்று சொன்னது.

அதைக் கேட்கவும் தாராவின் கண்ணில் பொலபொலவென்று கண்ணீர் .

மனம்  எல்லாம் மகிழ்ச்சி ,முகத்தில் மகிழ்ச்சியின்  வகையான வேதனை புன்னகைப் பூ .

அவள் கண் நிமிர்த்தி தன் கணவனைக் காண அவரோ ,  எனக்குப் புரியும் என்ற பாவனையில் தன் இமை மூடி, தன் உணர்வை வெளிப்படுத்தினார்.

  ஆஹா ...பாப்பா என்ன அழகா சொல்றா, நமக்குத்தான் வார்த்தைகள் வரவில்லை...

பாப்பாவுக்கு எப்படி பேச்சு வருமோ  என்ற பயத்தில் தினம் தினம் ஒரு புது கவலை .

ஆனால் இன்று அவள் என் பெயரைக் கூறும் போது நானே வாய்விட்டுக் கூறியது போல் பெருமையாக இருக்கிறது என தன் மனதில் எண்ணினாள்.

என்னால் தான் எதுவும் கூற இயலாது, மனதிற்குள் பேசுவதெல்லாம் வார்த்தை வடிவம் ,ஒலி வடிவம் பெறுவது இல்லை...எல்லாம்  எழுத்து வடிவமே .

….இன்று ஒலி வடிவில் என் மழலையின் சிறு மொழியில்... எனது பெயர் என்ன அழகாக ஒலிக்கிறது….தாரா...தாரா  அம்மா ….

தாராவின் முகத்தில் நிம்மதி  புன்னகை.

48 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்

  ஓ இன்று அனுவின் கதையா வருகிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 2. அன்பின் ஸ்ரீராம்..
  கீதாக்கா / கீதா மற்றூம் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் இனி வரப்போகும் மற்றும் நம் நட்புறவுகள் அனைவருக்கும் நல்வரவு வணக்கமும் துரை செல்வராஜூ ஸார்.

   நீக்கு
  2. வரவேற்ற துரைக்கும், வந்திருக்கும் நண்பர்களுக்கும் இனி வரப்போகும் அனைவருக்கும், நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

   நீக்கு
  3. வாங்க கீதா அக்கா. நல்வரவும், வணக்கமும்

   நீக்கு
 3. சின்னஞ்சிறு கதை... கதை கூட அல்ல - கவிதை!...

  ஒலி வடிவம்...

  மனம் நெகிழ்ந்து விட்டது..

  பாராட்டுகள் அனு!,,

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 4. அனு அழகான கதை வித்தியாசமான கரு! அதற்கு முதலில் வாழ்த்துகள்! பாராட்டுகள்.

  பேச இயலாத தாயின் தவிப்பு! தன் குழந்தையின் மழலையைக் கேட்கத் துடிக்கும் உள்ளம். தன்னால் இயலாதது பாப்பாவுக்கும் வந்திருமோ என்ற பயம்...முடிவு மகிழ்ச்சி!

  கீதா

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 6. கதை நெகிழ்வு.
  தாயின் கவலை மறைந்து களிப்பு.
  வாழ்த்துக்கள் அனுபிரேம்.

  பதிலளிநீக்கு
 7. அழகிய கவிதை! தாரா அதிர்ஷ்டசாலி தான்! நாள் முழுதும் தன்னுடனே இருக்கும் குழந்தைக்குப் பேச்சு வருமா, வருதா எனத் தெரியாமல் தவிக்கும் தாய் உள்ளம் கடைசியில் மகிழ்ந்தது கண்டு நமக்கும் ஓர் ஆறுதல்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் மா...நமக்கு இருக்கும் உடல் வேதனை நம் குழந்தைக்கும் வருமோ என்னும் பயமே மிகபெரிய கஷ்டம் ...தாராவிற்கு அந்த கவலை இனி இல்லை ...

   மிகவும் நன்றி மா தங்கள் கருத்திற்கு ..

   நீக்கு
 8. அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 9. வரவேற்ற துரைக்கும், வந்திருக்கும் நண்பர்களுக்கும் இனி வரப்போகும் அனைவருக்கும்,அன்பு கீதாமா,கீதா ரங்கன்,கோமதிமா,ஸ்ரீராம் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  அனுப்ரேம் கதை மிக நெகிழ வைத்தது. சாதாரண அம்மாவின்
  புலம்பல் என்று ஆரம்பித்துப் பேச முடியாத அன்னையின் தவிப்பு,
  மகளின் வார்த்தைகளைக் கேட்டதும் எப்படி மகிழும்
  என்று நினைத்ததும் மிக உணர்ச்சிப் பட வைத்திருக்கிறார்.
  குழந்தையின் அப்பா அழகாகச் சொல்லித்தரும் பெருமையை எப்படி வர்ணிப்பது.

  ஸ்ரீராமுக்கும் அனுப்ரேமுக்கும் மனம் நிறை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் அன்பான கருத்திற்கு மிகவும் நன்றி மா..

   நீக்கு
 10. மனம் நெகிழ்ந்துதான் போனது

  பதிலளிநீக்கு
 11. எல்லோர் இல்லங்களிலும் ஒலிக்க வேண்டிய ஒலியே...
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 12. வாழ்த்துக்கள் அனு. அழகான க(வி)தை. மனம் நெகிழவைதுவிட்டது. மகிழ்ச்சியான முடிவு.

  பதிலளிநீக்கு
 13. ஆஆஆஆ அனுவின் கதையோ அதுவும் ரெண்டாவது.....
  சூப்பர் அனு சூப்பர் சோட் அண்ட் சுவீட்டில் இன்று பானுமதி அக்காவை அடிச்சிட்டீங்க ஹா ஹா ஹா...

  தாராவுக்கு பேச வராது என்பதை ஒரு ருவிஸ்ட்டாகவே பாவிச்சிட்டீங்க அருமை...
  வாழ்த்துக்கள் அனு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அதிரா ...

   ஆனால் இந்த சிறுகதை நான்காவது கதை ...

   நீக்கு
 14. மனதைத் தவிக்க வைக்கும் கதை.... சிலர் உயரம் மிகவும் குறைவாக இருப்பார்கள், தங்கள் குழந்தையும் அதுபோல ஆகிடுமோன்னு பயம் இருக்கும். காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களும் இதுபோன்ற பதைபதைப்பில் இருப்பார்கள்.

  கதையின் முடிவு மகிழ்ச்சி. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சார் ..அவர்களின் வேதனை மிக அதிகம் அவர்களின் குழந்தைக்கு ஏதும் பாதிப்பு இருக்குமோ என்பதிலே பல நேரம் அவர்களின் கவலை இருக்கும் ...

   இங்கு தாரா விற்கு இனி அந்த கவலை குறையும் ..

   நீக்கு
 15. வாவ் !! சூப்பர்ப்பா அனு .வித்தியாசமான கதை சிறிதானாலும் சிறப்பு . பேச இயலா தாயின் உணர்வுகளை அழகாய் வெளிப்படுத்தியது .வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் சகோதரி

  நல்ல கதை. ஒரு தாயின் எண்ண கொந்தளிப்புகளை அழகாக சுட்டிக் காட்டி விட்டீர்கள்.தான் எவ்வளவு கஸ்டப்பட்டாலும், தன் குழந்தைகள் அவ்வாறே கஸ்டப்பட்ட கூடாது என நினைப்பது பெற்றோர் மனமே... அதிலும் தாய் தன் குழந்தையை நினைத்து கொஞ்சம் அதிகப்படியாக தவித்துதான் போகிறார்.வேதனைகள் விளிம்பு தொடரும் முன் தன் கணவரும் தன்நிலை புரிந்து கொண்டதும், அந்த தாய்க்கு ஒரு வரப்பிரசாதந்தான்.. மிகவும் அழகாக தாய்பாசத்தை விளக்கும் கதை. படைத்த தங்களுக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக மகிழ்ச்சி மா...அழகான கருத்துக்கு பல பல நன்றிகளும் ...

   நீக்கு
 17. சிறிய கதைதான், ஆனாலும் தாயின் பரிதவிப்பை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 18. அருமையான கதை! பேச இயலாத தாயின் மனப்போராட்டத்தை அழகாக சொல்லியிருந்தார். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 19. சகோதரி அனுவிற்கு வாழ்த்துகள்!
  ஒரு வித்தியாசமான கருவை, மனதின் பரிதவிப்பை உணர்வுகளைக் கொஞ்சம் வரிகளிலேயே புகுத்திவிட்டீர்கள். பாராட்டுகள். முடிவு பாசிட்டிவ் முடிவானது மகிழ்வான விஷயம்.

  வாழ்த்துகள்!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 20. வணக்கம்.

  நல்லதொரு கதை. அனு அவர்களுக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!