வியாழன், 20 ஜூன், 2019

ரேபரேலியில் நாங்கள்... நைமிசாரண்யம் நோக்கி

முன்னரே சொன்னபடி திங்கட்கிழமை என்பதால் ஆனந்தபவனம் லீவு.  பார்க்க முடியவில்லை.

திரும்ப வரும் வழியில் மீண்டும் சாலைகளின் சந்திப்பில் அலங்காரச் சிலைகள்.


தெருவிளக்கு வித்தியாசமாக...   


இதோ ஒன்று..  சிக்கலான வொயர்களுடன்...

இடித்(ந்)த வீட்டிலும் குடியிருப்போம்!

தெருவிளக்கின் கீழே சைக்கிள் ரிக் ஷா!  இங்கு சென்னையில் இது இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை!

சுவர், பாலங்கள் ஓவியம் பற்றிச் சொன்னேன் இல்லையா?  உயரமான அந்த தண்ணீர்த் தொட்டியின் மேலும் கைவரிசை (கைவண்ணம்)!


அந்த ஊரில் நான் கண்ட இரண்டு விசேஷங்கள்.  ஒன்று மரங்கள்.  நிறைய மரங்கள் எங்கு பார்த்தாலும்.  மழைக்கு, தண்ணீருக்குப் பஞ்சமிருக்காது!  இரண்டாவது மாடுகள்.  
சாலையெங்கும் நீக்கமற நிறைந்திருந்தன மாடுகள்.  சாலைகளின் நடுவே கவலை இல்லாமல் நின்றிருந்தன ஏகப்பட்ட மாடுகள்.  நான் எங்குமே பார்க்காத ஒருவர் போக்குவரத்துக்கு காவலர்!  என் கண்ணில் ஒருவர் கூட படவில்லை!  ஒரு வீட்டின்முன் பசுவை நிறுத்தி பால் கறந்து கொண்டிருந்தார் பால்காரர்.  வீட்டு வாசலில் ஒரு பெண்மணி பால் வாங்கத் தயாராய் கையில் ஒரு பாத்திரத்துடன் நின்றிருந்த காட்சியும்...

மாலை காஃபி கொடுத்தபின் எங்கள் குழுவினர் குழுக்குழுவாக கிளம்பி வெளியே வந்தோம்.  நாங்கள் ஆறுபேர் ஒருகுழுவாக ஒரு ஷேர் ஆட்டோ பேசிக்கொண்டோம் - பாலாஜி உதவியுடன்.    ஒரு ஆட்டோவுக்கு ஐநூறு ரூபாய்.  அந்த ஆட்டோவில் செல்பவர்கள் அதை ஷேர் செய்து கொள்ளலாம்.முதலில் வேணி மாதவர் கோவில் சென்றோம்.   சிறிய சந்துக்குள் இருக்கும் சிறிய கோவில்.  கீழே வேணி மாதவர்.  மாடி ஏறிச் சென்றால் மேலே (கல்கத்தா) காளி.  ஆட்டோக்காரர் அருகிலிருந்த சிறு சந்தில் காத்திருந்தார்.   தரிசித்துத் திரும்பினோம். 

மறுபடியும் சாலைச் சந்திப்பில் ஒரு சிலைவடிவம்...வேணி மாதவர் கோவிலிலிருந்து திரும்பும்போது சுதாரிக்கும் முன்பு சடாரென தாண்டிச் சென்ற ஒரு வாகனம்!!!ஆட்டோக்காரரிடம் வேறு ஏதாவது புகழ் பெற்ற அல்லது நல்ல கோவில் இருக்கிறதா என்று கேட்டதும் அவர் எங்களை  அழைத்துச் சென்ற இடம் அலோக் தசாஷ்ட மாதேஸ்வரி அல்லது மஹேஸ்வரி மாதா சக்தி பீடம்.  ஒரு சாலையின் முடிவில் இடது பக்கமாக இருந்த கோவில்.  குறிப்பிட்ட தூரத்துக்கு முன்னாலேயே நிறுத்தி நடக்கச் சொன்னார்கள்.  சாலையில் தடுப்புகள்போட்டு, உள்ளே செல்ல ஒரு வழி, வெளியே வர ஒரு வழி என்று ஏற்படுத்தி இருந்தார்கள்.  ஆட்டோக்காரர் ஒரு இடத்தைக் காட்டி அங்கு காத்திருப்பதாய்ச் சொன்னார்.

செருப்புகளை விடும் இடதத்தில் தவிர்க்க முடியாமல் அத்தை கொஞ்சம் பூக்கள் வாங்கி கொண்டார்கள்.  உள்ளே செல்கையில் ஒரு குழு தனிப் பிரார்த்தனையில் இருந்தது.  ஒரு பெண் வெறும் கையில் கற்பூரம் கொளுத்திக் காட்டிக்கொண்டிருந்தார்.  பயங்கரமான பக்தி போல!

நன்றி இணையம்.

வேணி மாதவர் கோவிலிலும் சரி, இங்கும் சரி..   இசைக்குழு மாதிரி மாதிரி ஒன்று அமர்ந்து 'தின்னக்க தின்னக்க தின்னக்க' என்று தாளம் தட்டி உரத்த குரலில் பஜன் பாடிக்கொண்டிருந்தார்கள். பொதுவாக ஊரே சப்தம்தான் என்று தோன்றியது. மூங்கில்களால் பிரிக்கப்பட்டு பாதை எல்லாம் போட்டு வரிசை செல்ல வழி செய்திருந்தார்கள்.  நல்ல கூட்டம்.  தரிசனம் முடிந்து ஒரு சிறு கடைத்தெரு வழியே வெளிவந்து ஆட்டோவை அடைந்தோம்.  செருப்பை எடுக்கும்போது அங்கு அமர்ந்திருந்த பெண்மணியைச் சுற்றி இருந்த குழந்தைகள் காரணமாக சில பத்து ரூபாய்கள்...

நன்றி இணையம்.

திரும்பி வரும் வழியில் செம டிராஃபிக்.  அப்போதுகூட ஒரு போக்குவரத்துக்காவலர் கண்ணில் படவில்லை.  இரவுக்கு சப்பாத்தியும், புடலங்காய்க் கூட்டும்.  அந்தக் கடுப்பிலேயே அதை படம் எடுக்கவில்லை!  சப்பாத்திக்குப் போய் புடலங்காய்க் கூட்டு தொட்டுக் கொள்வார்களா?!!!   வீடாய் இருந்தால் சாப்பிட்டிருக்கவே மாட்டேன்!  

மறுநாள் காலை மூன்றுமணிக்கு டீ சாப்பிட்டு விட்டு நான்கு மணிக்கு முன்னரே கிளம்பிவிட வேண்டும் என்றார்கள்.  அடுத்துச் செல்ல இருக்கும் இடம் நைமிசாரண்யம்.  

ஒருநாளைக்கு ஒரு ஆளுக்கு ஒரு தண்ணீர் பாட்டில்தான் அவர்கள் தருவார்கள்.  மேற்கொண்டு வேண்டுமானால் விலைகொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும்.  ஒரு லிட்டர் இருபது ரூபாய்.  அவர்களிடமே காசு கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்பது எங்களுக்குப் பின்னர்தான் தெரிந்தது.  எனவே அன்றிரவு நாங்கள் படுக்கும் முன் வெளியில் கடைக்குச் சென்று தண்ணீர் பாட்டில் ஆளுக்கு இரண்டு வாங்கி கொண்டோம்.  நல்ல வெயில், அனல். அந்நிலையிலும் லஸ்ஸி சாப்பிட வேண்டும் என்று தெரியவில்லை எனக்கு!  சுவைத்திருக்கலாம்.

அடுத்த நாள் காலை வழக்கம்போல நான்கு மணிக்கு என்று சொல்லி இருந்தாலும் வழக்கம் போல நான்கே முக்காலுக்குதான் கிளம்பினோம்.  தாமதமாக வருபவர்கள், கேடரர்கள் தங்கள் பொருள்களை பஸ்ஸில் ஏற்ற ஆன நேரம்..   எங்கள் பெட்டிகளை அதில் ஏற்ற ஆன நேரம்.   அந்த இடைப்பட்ட நேரத்தில் அங்கு நின்றிருந்த செல்லத்தையும் படம் எடுத்துக் பொழுது போக்கிக் கொண்டிருந்தோம்.

அதிகாலை நான்கு மணி! அலஹாபாத் செல்லம்!


பின்னர் கிளம்பி நேமிசாரண்யம் செல்லும் வழியில் ஒரு க்ளிக்...  இருள்பிரியும் வரை சும்மா இருந்துவிட்டு வெளிச்சம் வந்த உடன் கண்ணுக்குக்கிடைத்த காட்சிகளை க்ளிக்....   க்ளிக்...


புகழ்பெற்ற ரேபரேலியில் நாங்கள்!  அங்கு பெட்ரோல் போட பஸ் நின்றபோது வெளியே வந்து எடுத்த ஒரு படம்.  எப்போதோ விபத்துக்குள்ளாகி இருக்கவேண்டும். கார் எவ்வளவு உருக்குலைந்திருந்தாலும் அந்த டயர்களைப் பாருங்கள்...பஸ் தாண்டிச் செல்லும்போதே எடுத்த போட்டோக்கள்தான் இவை.  வீர சிவாஜி சிலை...

வழியில் கண்ணில் பட்ட தாபா...   'அண்ணாமலடா...' என்று ரஜினி சொல்வது போல 'சோமு டா' தாபா!!!!தெருவில் கலைப்பொருள் விற்பனை...தாண்டிச் சென்ற மெட்ரோ 


சர்தார் படேல் பல் மருத்துவக்கல்லூரி 


சாலை வழியில் பார்த்த இரண்டு கட்டிடங்கள்..

பக்ஷி கா தாலாப்!


ரேபரேலியில் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு காலை உணவை முடிக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.  

இறங்கும் நேரம் பார்த்த காட்சி.  ஸ்டியரிங்கில் இரண்டு 5 ரூபாய் நாணயங்கள் ஒட்டி வைத்திருந்தார் டிரைவர்.  எதற்கோ?!!அங்கு சாப்பிட ஆகும் நேரத்தில் நடுவிலேயே நான் அங்கே என் செல்லை கொஞ்சம் சார்ஜ் செய்துகொண்டேன்!  போட்டோக்கள் எடுத்தால் சார்ஜ் விரைவாகக் குறைகிறது.  அதோ தெரியும் ஹாலுக்குதான் சாப்பிடச் செல்கிறோம்.


சாப்பிடும் ஹால் ரெடி.  மக்களும் மெதுவாய்த் தயார் ஆகிறார்கள்.  அங்கு  இருக்கும் ஒரு டாய்லெட்டுக்கு கியூ, போட்டி!!!சற்றே காய்ந்த நிலையிலிருந்த இட்லிகளுக்கு மிளகாய்ப்பொடியும் தக்காளி சட்னியும் இணைத்துச் சாப்பிட்டுக் கிளம்பினோம்.  வெளியே சாலையில் அடுப்புப் பற்றவைத்து பால் காய்ச்சி காஃபி கொடுத்தார்கள்.


===========================================================================================================

116 கருத்துகள்:

 1. வரவிருக்கும் அனைவருக்கும் காலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க... வாங்க...

   உங்களுக்கும் இனி வரப்போகும் மற்றும் நம் நட்புறவுகள் அனைவருக்கும் நல்வரவும் வணக்கமும் கீதா அக்கா

   நீக்கு
 2. இன்னிக்கு யாரும் இல்லை போல, போன பதிவின் பேயைத் தவிர்த்து? அது இருக்கும் துணையில் தெம்பாகப் படிச்சுட்டுக் கருத்துச் சொல்லறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேற்று இரவு அந்த பேயை பார்த்த பார்வையில்தான் வரவேயில்லை.பட்டப் பகலிலிலேயே பேயே வந்து பதில்கள் சொல்லுமளவிற்கு வந்த நேற்றைய பதிவு கொஞ்சம் கிலி ஊட்டியது. ஆனால் கொஞ்ச நாளில் அந்த பேயும் நமக்கு இப்படியே நட்பாகிவிட்டால், பேய் பற்றிய பயம் போய் விடும். ஹா.ஹா. ஹா. பேயப்பாவுக்கும் நன்றி..

   நீக்கு
  2. அதெல்லாம் பயப்படவே வேண்டாம். சமர்த்துப் பேய்! பழகிட்டாப் போதும். உயிரையே கொடுக்கும்! அது சரி, பேய்க்கு உயிர் உண்டா என்ன? நேத்திக்குக் கேட்டிருக்கணுமோ இந்தக் கேள்வியை! பேயே வந்து பதில் சொன்னால் தான் உண்டு! :P:P:P:P:P

   நீக்கு
  3. ஹாஹாஹா, ஹிந்திக்காரப் பேயா? ஆப் கா ஷுப்நாம் க்யா ஹை? ஆப் கஹா(ன்) ஸே ஆரஹே ஹை?

   ஹிந்தியிலேயே எழுதி இருப்பேன். மத்தவங்களால் படிக்க முடியாதே!

   மிஸ்டர்/மிஸ்/மேடம் பேய்! நீங்க படிப்பீங்க தானே?

   நீக்கு
  4. பேயாரே, நான் அப்புறமா வரேன்!

   நீக்கு
 3. அந்தச் சிலை, வீர சிவாஜி தானா? சந்தேகமா இருக்கு! ஏனெனில் உத்திரப் பிரதேசத்தில் ராணி லக்ஷ்மிபாயின் சிலைகள் தான் காணப்படும், தூரப்பார்வைக்கு சிவாஜி சிலை போல் தோன்றியதோ/தோன்றுகிறதோ? தெரியலை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிவாஜி மாதிரிதான் தெரிந்தது.........!

   நீக்கு
  2. மஹாராஷ்ட்ரா என்றால் சிவாஜி தான் எனக் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். ராஜஸ்தான் எனில் ராணா பிரதாப்சிங்! உத்திரப்பிரதேசம் எனில் ப்ருதிவி ராஜ் சௌஹான் அல்லது ராணி லக்ஷ்மிபாய் என்னும் ஜான்சி கி ராணி! ராணி லக்ஷ்மிபாயையும் குதிரையில் உட்கார்ந்து வாளை ஓங்கிய வண்ணமே சிலை வடித்திருப்பார்கள்.

   நீக்கு
  3. உண்மைதான். பஸ் தாண்டும் வேகத்தில் படம் எடுத்தேன். ஓரம் எல்லாம் கூட சரியாய் வரவில்லை பாருங்கள்! எனவே தெரியவில்லை. லட்சுமிபாய் என்றால் சிலையின் போஸ் வேறுமாதிரி அல்லவா இருக்கும்? இடுப்பில் வேறு குழந்தை இருக்கும்!

   நீக்கு
  4. முதுகில் குழந்தை இருக்கும். லக்ஷ்மிபாய் இல்லைனா ப்ருதிவி ராஜ்சௌஹானாக இருக்கலாம். சிவாஜி அங்கே அவ்வளவு பிரபலம் இல்லை. காசி, ப்ரயாக் போன்ற இடங்களில் உள்ள கோயில்களைப் புனருத்தாரணம் செய்த ராணி அகல்யா பாய்க்குக் கூடச் சிலைகள் உண்டு. சோம்நாத் கோயிலையும் ராணி அகல்யாபாய் திருப்பணி செய்திருப்பதாகப் போட்டிருக்கும்.

   நீக்கு
  5. நான் அது சிவாஜி என்றே நினைத்துக் கொள்கிறேன்!

   நீக்கு
  6. ம்ஹூம், வேறே மாநிலம்னா, குறைந்தது ம.பி. என்றால் கூடப் பொருந்துமோ என்னமோ! உ.பியில் ஜிவாஜி? இஃகி,இஃகி,இஃகி!

   நீக்கு
 4. அப்புறமா அது பக்ஷிகளின் குளம் இல்லை! பக்ஷி கா தாலாப்! என்பது. அது பக்ஷி என இருந்தாலும் ஓர் ஆளின் சர்நேம்! நம்ம ஹிந்தி திரைப்படப் பாடலாசிரியர் ஆனந்த் பக்ஷி போல்! இது வேறே யாரோ பக்ஷியைக் குறிக்கிறது. அவர் நினைவில் கட்டப்பட்ட குளம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் அப்படிதான் நினைத்தேன். எனக்கும் ஆனந்த் பக்ஷி தான் நினைவுக்கு வந்தார்.

   நமக்குத்(எனக்குத்)தெரிந்த ஒரே பக்ஷி!

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும்,காலை வணக்கம். படங்கள் நன்றாக இருக்கின்றன. இடநெருக்கடியால் பழசான ஊர் மாதிரி தெரிகிறது. இன்னும் செய்திகளைப் படித்து உள் வாங்கிக் கொண்டு வருகிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா... நாங்கள் சுற்றியது ஊரின் ஒரு பகுதியில்தானே? இன்னொரு பகுதி வேறு மாதிரி முகம் கொண்டிருக்கலாம். நான் பார்க்கவில்லையே...

   நீக்கு
 6. டாங்கா வண்டிகள் இன்னமும் இருக்கின்றன போலும். அவற்றில் பயணம் செய்தீர்களா? நம்ம ஊர் குதிரை வண்டிகளை விட வசதி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. லஸ்ஸி சாப்பிடலை... ஆனந்த பவனம் போகலை... அட்சயவடமே பார்க்கலை... இந்த வண்டியில் மட்டும் சவாரி செய்திருப்பேனா என்ன? ஆனால் வாய்ப்பு வந்திருந்தாலும் ஏறியிருக்க மாட்டேன்!!! என்னவோ போங்க.. நானும் போய்வந்தேன் ஒரு ஆன்மீகப்பயணம்....!!!!

   நீக்கு
  2. அதெப்படி லஸ்ஸியை விட்டீங்கனு புரியலை! மாலை ஏழு மணி ஆச்சுன்னா எல்லாப் பால்க்கடைகளிலும் வாசலில் இருக்கும் அடுப்புகளில் பெரிய பெரிய இரும்புக் கடாயை வைச்சுப் பாலைக் கொட்டிக் கிளறிக் கொண்டிருப்பார்கள். அங்கே அவங்களிடம் பாதாம் பாலும் நன்றாக இருக்கும். நாங்க 2013 ஆம் ஆண்டு அயோத்தி போனப்போ ஒரு பெரிய தம்பளர் பாலுக்கு 20 ரூ கொடுத்தோம். பாதாமும், பிஸ்தா, முந்திரி எல்லாம் போட்டு நன்றாக இருக்கும்.

   நீக்கு
  3. கீதா அக்கா எனக்கு அது அங்கே ஸ்பெஷல்னு தெரியாதே... காசியில் பார்த்தேன்.. ஆசையும் வந்தது. மாமாக்கள் ஒத்துழைக்கவில்லை. நடந்து கொண்டே இருந்தார்கள்.. அந்நேரம் வயிறும் திம்!

   நீக்கு
  4. :( ஏற்கெனவே இதெல்லாம் சொல்லி இருந்த நினைவு! என்னவோ போங்க! நம்ம ஊரிலே இதெல்லாம் கொடுப்பது எனில் அதிகமாகப் பணமும் கொடுக்கணும், ருசியும் இருக்காது. ஏனெனில் இங்கெல்லாம் பெரும்பாலும் ஆவின் பால் அல்லது வேறே ஏதேனும் செயற்கைப் பொருட்கள் கலந்த பாக்கெட் பால். ஆனால் அங்கெல்லாம் சுத்தமான நல்ல பசும்பால்!

   நீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 8. அங்கெல்லாம் உ.கி. நிறையவும் கிடைக்கும், நன்றாக ருசியாகவும் இருக்கும். குறைந்த பட்சமாக அதிலாவது சப்பாத்திக்குக் கூட்டுப் பண்ணிக் கொடுத்திருக்கலாம். புடலங்காய்க் கூட்டு! இஃகி,இஃகி,இஃகி, ரசனையே இல்லாத சமையல் குழு போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தப் புடலங்காய் மூன்று நான்கு நாட்கள் எங்களைத் துரத்தியது. சீப்பாய்க் கிடைத்திருக்கும் போல... பேசாமல் சமையலறை சென்று பாக்கி இருக்கும் புடலங்காயை எடுத்து தூக்கிப் போட்டிருக்கலாம்!!!!!

   நீக்கு
  2. உ.கி.யும் அங்கெல்லாம் விலை மலிவு தான். உகியை வேக வைத்துத் தோலுரித்துக் கொண்டு கொஞ்சம் மி.பொடி, உப்பு, பெருங்காயப் பொடியுடன் தக்காளியைச் சாறெடுத்துச் சேர்த்துக் கொதிக்க வைத்தால் சுவையான உ.கி. கூட்டு மசாலா சாமான்கள் இல்லாமலே தயார். தாளிக்கையில் ஜீரகம் சேர்த்தால் போதும், மசாலா சுவை வேணும்னா கொஞ்சம் சோம்பை ஜீரகத்தோடு தாளித்துக் கொண்டு கூட்டை இறக்கும்போது கொஞ்சம் போல் கரம் மசாலா சேர்க்கலாம். அல்லது ஏலக்காயையும், கிராம்பையும் பொடித்துச் சேர்க்கலாம். வெங்காயமெல்லாம் இதுக்குத் தேவையே இல்லை. கற்பனை தான் தேவை! :))))))

   நீக்கு
  3. அவர்கள் அங்கு எதுவும் காய் வாங்கி கொண்டார்களா என்றே தெரியவில்லை!!! எல்லாக் காயும் முதலிலேயே வாங்கி வைத்து விட்டார்களோ என்னவோ!

   நீக்கு
  4. ஜீரகம் மட்டும் போட்டு ஆலூ ஜீரா கூடப் பண்ணி இருந்திருக்கலாம். என்னவோ! இதனால் தான் நாங்க இந்த மாதிரிக் குழுவினரோடு போவதைத் தவிர்ப்போம். அதிலும் நாங்க இரண்டு பேருமே கேள்விகள் கேட்கும் ரகம்! :(

   நீக்கு
  5. இதுதானே எனக்கு முதல் அனுபவம்... பார்ப்போம்!

   நீக்கு
 9. இன்றைக்குப் பெண்கள் தினமா? பானுமதி, கமலா, கோமதி என வரிசையாகப் பெண்களாகவே வந்திருக்கோம். தி/கீதா கல்யாணத்தில் பிசி போல! ஆளைக் காணோம்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை ஸார் நெட் கிடைக்காமல் இருக்கலாம் அல்லது அலுவலக பிஸி... கீதா ரெங்கன் மற்றும் நெல்லை பயணத்தில்.. அதுதான்!

   நீக்கு
  2. இன்றைக்குப் பெண்கள் தினமா!...

   நேற்று ஒருவரும் கேட்கவில்லை...

   நீக்கு
  3. ஹாஹாஹா, நேற்றுப் பேய்கள் தினம் இல்லையோ! :)))) அதான் பயந்துண்டு யாரும் கேட்கலை!

   நீக்கு
 10. படங்கள் நன்றாக இருக்கிறது.
  முதல் படத்தில் கேரளா கதகளி சிலைகள்
  காசியில் இந்தமாதிரி குதிரை வண்டிகள் உண்டே! பார்க்கவில்லையா அங்கு?

  //ரேபரேலியில் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு காலை உணவை முடிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். //

  உணவகம் முன்பு பள்ளிக்கு செல்லும் மாணவன், இரு சக்கர வாகனத்தில் பால் கொண்டு போவதையும் பார்த்தேன்.  //ஸ்டியரிங்கில் இரண்டு 5 ரூபாய் நாணயங்கள் ஒட்டி வைத்திருந்தார் டிரைவர். எதற்கோ?!!//

  அவரிடம் கேட்டு இருக்கலாம், சொல்லி இருப்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காசியில் என் கண்ணில் இந்த வண்டிகள் படவில்லை. இங்கு ஒன்றே ஒன்று இதைதான் பார்த்தேன். உணவகம் மாதிரியும் தெரியவில்லை அது. இப்படி டூர் வருவபவர்கள் அமர்ந்து சாப்பிட வாடகைக்கு விடுவார்களோ என்னவோ! சந்தேகம் கேட்கும் தோதில் டிரைவர் கண்ணில் சிக்கவில்லை. கேட்டாலும் அவர் வேகமான மொழி சரியாய்ப் புரியாது!!!!

   நீக்கு
  2. அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நற்காலை வணக்கம்.
   வைத்தியரிடம் போய் வந்து நேரமாகிவிட்டது.
   படங்கள் வெகு ஜோர். நல்ல நெரிசல் இருக்கும் போல இருக்கிறதே.
   எல்லோருக்கும் உ.பி, மற்ற வடக்கு மானிலங்களைக் கேட்டாலே தூத்
   பற்றிதான் சொல்வார்கள். அதுவும் மதுராவில் கட்டித்தயிரும் கெட்டிப் பாலும் தான்
   பிரசித்தி.
   இன்னோரு தடவை போய் வந்து சொல்லுங்கள்.
   தம்பதி சமேதராகப் போகலாம்.
   நைமிசாரண்யம் போகிறீர்களா. அட நல்ல பாக்கியம் தான்.

   ஜான்சியா சிவாஜியா தெரியவில்லையே.


   நீக்கு
  3. படங்களை ரசித்ததற்கு நன்றி வல்லிம்மா... வாங்க...

   நாம் அது சிவாஜின்னே வச்சுக்குவோம்!

   //இன்னோரு தடவை போய் வந்து சொல்லுங்கள். தம்பதி சமேதராகப் போகலாம்.//

   உங்கள் ஆசீர்வாதம்.

   நீக்கு
 11. //உணவகம் முன்பு பள்ளிக்கு செல்லும் மாணவன், இரு சக்கர வாகனத்தில் பால் கொண்டு போவதையும் பார்த்தேன்.// பால் காரங்க பக்ஷி கா தாலாபுக்கு முன்னாடி தான் போறாங்க. உணவகம் முன்னால் எனக்குத் தெரியலை! மறுபடி பார்க்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பக்ஷி கா தாலாப்! இதற்கு முன்புதான் நான் பார்த்த காட்சிகள் கீதா. சரியாக பார்த்து இருக்கிறீர்கள்.

   நீக்கு
 12. ரேபரலி என்றால் என்ன?..

  ரேபர் + அலி.. !?

  டீச்சரம்மா எங்கே?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Raebareli ரா பரேலி என உச்சரிக்கணும் நம்ம தமிழ்நாட்டு உச்சரிப்பின்படி ரேபரேலி! இஃகி,இஃகி!

   நீக்கு
 13. நல்ல விவரமான செய்திகளுடன்
  ஸ்ரீராம் அவர்களது கைவண்ணம் மிளிர்கிறது....

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  முதல் படம் கதகளி சிலைகள், நன்றாக உள்ளது. அன்னப்பறவை சிலை, சங்கில், பெருமாள் ஆதிசேஷன் சயனத்துடன் சிலை, சிவபெருமான் உருவம் பொறிக்கப்பட்ட சிலை, ஆலயமணி மாதிரியிருந்த தெருவிளக்குகள், காலையில் எடுத்த இயற்கைப்படங்கள், முகத்தில் சற்று சோகத்தை.காட்டும் செல்லம், மற்ற படங்கள் எல்லாமே மிக அழகு. அங்கு மாடுகள் முட்டாது.. எனினும் மாடுகள் அசையாது தெருக்களில் நின்றால், போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்குமே.!

  ரிக்ஷா வண்டிகள், குதிரை வண்டிகள் என பழைய மாடல்கள் இன்னும் அங்கு இருப்பது பழங்காலத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது. அதனால்தான் சப்பாத்திக்கு புடலங்காய்கூட்டும் இடம் பெற்றிருக்கிறது. அந்த காலத்தில் ஏதோ இப்படி தொட்டுக் கொண்டு சாப்பிட்டு விடுவோம் இல்லையா? வக்கினையாய், சப்பாத்திக்கு சப்ஜி வகைகளை அவ்வளவாக எதிர்பார்க்கமாட்டோம். (பொதுவாக பசி ருசியறியாது.)

  ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு. அங்கு பசுமாடுகள் தாராளமாக உள்ளதால், சகோதரி கீதா அவர்கள் சொல்லியிருப்பது போல், லஸ்ஸியும், சுண்டக்காய்ச்சிய பாதாம்பாலும் பிரசித்தி போலிருக்கிறது. ஆனால் நாம் தனியாக நம் வீட்டவர்களுடன் மட்டும் சேர்ந்து சென்றால் எங்கெங்கு எது கிடைக்கிறது என புரிந்து,அவகாசப்படுத்திக் கொண்டு பயணத்திருக்கலாம்.குழுவுடன் செல்லும் போது ஊரோடு ஒத்து வாழத்தான் வேண்டும்.

  தாங்கள் இந்தப்பகுதியோடு. இந்த வார்த்து கதம்பத்தை நிறைவு செய்து விட்டீர்களே.. வேறு செய்திகள் இடம்பெறவில்லையே. ஏன்? கதம்பம் முழுமையாக நிறைவு பெறாத உணர்வை தருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கமலா, அது கதகளி சிலையாட்டமாத் தெரியலை! பெரிசு பண்ணிப் பார்த்தேன். சரியாப் புரியலை. ஆனால் கதகளி மாதிரித் தெரியலை. அங்கெல்லாம் கேரளக்கலையைத் தெரிஞ்சு வைச்சுப் போற்றுபவர்கள் யாரும் இல்லை! உ.பியின் ஏதோ கிராமியக் கலைஞர் உடைனு நினைக்கிறேன்.

   நீக்கு
  2. //தாங்கள் இந்தப்பகுதியோடு. இந்த வார்த்து கதம்பத்தை நிறைவு செய்து விட்டீர்களே.. வேறு செய்திகள் இடம்பெறவில்லையே. ஏன்? கதம்பம் முழுமையாக நிறைவு பெறாத உணர்வை தருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.// அதே, அதே, கமலா, எனக்கும் ஏதோ விட்டுப் போன உணர்வு காலம்பர! பேயோட பிசியா இருந்ததில் கவனிக்கலை. இப்போ நீங்க சொன்னதும் அதான் தோன்றியது! முகநூல் பக்கம், யாரேனும் எழுத்தாளரின் பக்கங்கள், ஶ்ரீராமின் கவிதை போன்றவை இடம்பெறாமல் பதிவு முடிவு பெறாத பதிவாய்த் தான் எனக்கும் தோன்றியது/ தோன்றுகிறது.

   நீக்கு
  3. காலம்பற பேயோட பிஸியா இருந்தீங்களா? யாரைத் திட்டறீங்க கீசா மேடம்?

   இதை திருப்பதி கோபுரம் அருகிலிருந்து எழுதறேன். இடுகை படிக்கலை

   நீக்கு
  4. கமலாக்கா... அது கதகளி சிலைகள் மாதிரி தெரியவில்லை! நிறைய மாடுகள் சாலையில் எல்லா இடங்களிலும்...

   பழங்காலத்தை நினைவு படுத்தியதால்தான் புடலங்காய்க் கூட்டா? பழங்காலத்தில் கூட புடலங்காய்க்கூட்டு செய்திருக்க மாட்டார்கள் கமலா அக்கா.

   இதுவே நிறைய வந்து விட்டது மாதிரி ஒரு ஃபீலிங்! எனவே வேறு எதுவும் சேர்க்கவில்லை!

   நன்றி கமலா அக்கா.

   நீக்கு
  5. கீதா அக்கா... கதம்பத்தை மிஸ் செய்வதாய்ச் சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
  6. வாங்க நெல்லை... அப்புறம் பதிவைப் படிச்சுட்டு வேறு ஏதாவது கமெண்ட் போட்டிருக்கிறீர்களான்னு பார்க்கணும்.

   நீக்கு
 15. படங்களோடு நிறைய செய்திகள்.
  அலைபேசியில் எடுத்த படங்களோ...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கில்லர்ஜி.

   அனைத்தும் கலப்படமில்லாமல் சுத்தமான அலைபேசியில் எடுக்கப்பட்ட படங்களே!!!!

   நீக்கு
 16. ரேபரேலி - கேள்விப்படாத பெயராக இருக்கிறதே என்று தேடிப் பார்த்தேன். உத்தரப்பிரதேசமா! போய்ப் பார்க்கக் கிடைக்குமோ தெரியவில்லை. ஆனால் குறித்து வைக்கிறேன். உங்கள் படங்கள் என்னைத் தூண்டிவிட்டிருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 17. சைக்கிள் ரிக் ஷா மதுரை, மாயவரம், டெல்லியில் இன்னும் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... சென்னையில் இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் அது கோலோச்சிய காலங்களை நினைத்துப் பார்க்கிறேன்.

   நீக்கு

 18. நீங்கள் காரின் டயரைப் பார்த்தால் நான் அந்த செல்லத்தின் எலும்பு தெரியும் வயிற்றைப் பார்த்தேன். பரிதாபம்!

  குப்பையும் கூளமுமாய் இங்கே அலங்கார பொம்மைகளுக்கு என்ன தேவை இருக்கிறது?

  புகழ் பெற்றவர்களைத் தேர்ந்தெடுத்த ரேபரேலியின் லட்சணம் இது தானா?..

  இதையெல்லாம் பார்த்தால் நம் தமிழகம் எவ்வளவோ தேவலை.
  சொந்த வயிற்றெரிச்சலில் தான் எதையாவது கிளப்பிக் கொண்டு எல்ளோர் நிம்மதியையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜீவி ஸார்..

   நான் பார்த்திருப்பது தாண்டிச் சென்ற ஊரின் ஓரப்பகுதியாக இருக்கலாம். உள்ளே எப்படியோ...

   செல்லத்தின் பரிதாபப்பார்வை எனக்கும் அப்படிதான் தோடன்றியது. ஆனால் காலை நான்கு மணிக்கு என்ன செய்ய?

   நீக்கு
 19. நைமிசரண்யம் என்று நிறையவே பதிவுகளில் பார்க்கிறேன் பார்த்ததில்லை என்னவென்று யாரும் எழுதுவதுமில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. http://sivamgss.blogspot.com/2014/02/blog-post_4.html நாங்க 2013 ஆம் ஆண்டில் போயிட்டு வந்து எழுதி இருக்கேன். இது ஒரு பதிவின் சுட்டி. சுமார் நாலைந்து பதிவுகள் எழுதி இருப்பேன். இனிமேல் தான் ஶ்ரீராம் என்ன எழுதப் போறார்னு பார்க்கணும்.

   நீக்கு
  2. வாங்க ஜி எம் பி ஸார்... கீதா அக்கா சுட்டி கொடுத்திருக்கிறார்கள். பாருங்கள்.

   நீக்கு
  3. சுட்டி does not exist என்று வருகிறது என்னை ஓட விடாமல் நீங்களே கூறி யிருக்கலாம்ஸ்ரீ

   நீக்கு
  4. http://sivamgss.blogspot.com/2014/02/blog-post_4.html இங்கே இருந்து தான் முந்திய சுட்டியில் இருந்து முயன்றேன். நன்றாய்ப் போகிறது.

   நீக்கு
 20. தமிழகத்தில் அரசியல் தலைவர்களின் சிலைகள் இங்கோ கடவுளரின் சிலைகளோ ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ்நாடு தாண்டினாலே கட்சிக்கொடிகளை அதிகம்காண முடியாது! ஆந்திராவில் சிற்சில இடங்களில் என்டிஆரின் சிலைகள், உருவப்படங்கள் இருந்தாலும் அவை தமிழ்நாட்டைப் பார்க்கையில் மிகக் குறைவு! இன்னும் கர்நாடகா, மஹாராஷ்ட்ரா,குஜராத் எல்லாம் போனால் கட்சிக்கொடிகள், தலைவர்கள் சிலைகள் எனப் பார்க்க முடியாது. கல்விக்கூடங்களில் சரஸ்வதி கையில் வீணையுடன்ன் காட்சி அளிப்பாள்!

   நீக்கு
  2. அங்கிருந்த நிறையபேர் தமிழ்நாட்டின் நிலையைச் சொன்னார்கள். அதை இங்கு சொல்ல முடியாது!

   நீக்கு
  3. ஆமாம், எங்களுக்கும் தெரியும். சமீபத்திய கோலாப்பூர், பந்தர்ப்பூர் பயணத்தின்போது கூடப் பார்த்தோம்/கேட்டோம்.

   நீக்கு
 21. ரிக்ஷாக்கள் மிக சமீபம் வரை மயிலாப்பூரில் இருந்தன.

  பதிலளிநீக்கு
 22. ஆனந்த பவன் திங்கள் அன்று விடுமுறையா? குறித்து வைத்துக் கொள்கிறேன், செப்டம்பரில் காசிக்கு போகலாம் என்று ஒரு எண்ணம் இருக்கிறது. பாய்ண்டை குறித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போயிட்டு வாங்க பானுமதி! சங்கரமடத்தையும் அணுகலாம், ஸ்வாமிமலை கனபாடிகளையும் அணுகலாம். தங்குமிடம் மட்டும் நல்லா இருக்கும்படி பார்த்துக்குங்க!

   நீக்கு
  2. ஆம்.. டிராவல்ஸ் யாரையும் நம்பவேண்டாம் என்பதே என் யோசனை.

   நீக்கு
  3. பானுமதிக்கும், மிஸ்டர் பானுமதிக்கும் ஹிந்தி சரளமாகத் தெரியும்னு நினைக்கிறேன். ஆகவே தனியாகவே போகலாம். அங்கே செய்ய வேண்டியவற்றை முறைப்படி செய்ய நீங்க தங்கும் இடத்திலேயே புரோகிதர்களை ஏற்பாடு செய்து கொடுப்பாங்க. ஆனாலும் முன்கூட்டிப் பேசி முன்பணமும் கொடுத்து வைத்தால் நல்லது.

   நீக்கு
 23. சிலைகளுக்கும் வீதிகளுக்கும் சம்பந்தமே இல்லை. குப்பைகள் தான் கண்ணில் படுகிறது.

  ஆமாம் நம் சென்னை எவ்வளவோ தேவலை.நல்ல வேளை,நீங்கள் சென்ற போது அவ்வளவாக
  வெய்யில் ஏறி இருந்திருக்காது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ​நான் சென்றபோதே நாற்பதைத் தாண்டிக்கொண்டிருந்தது அம்மா. நல்ல வெயில், அனல்! குப்பையும் சுத்தமும் சரிசமமாக இருந்திருக்கலாம். மேலும் அங்கே ஃப்ளோட்டிங் பாபுலேஷன்தானே அம்மா அதிகம்.. அதுவே காரணமாயிருக்கும்.

   நீக்கு
 24. ஏன் அந்தச் செல்லத்தின் கண்ணில் இத்தனை சோகம். ரொம்பப் பாவமா இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாரும் அன்பு காட்டுவதில்லை போல... உணவும் சரியாய்க் கிடைக்காதோ என்னவோ.. நாயைக் கண்டால் கல்லை எடுக்கும் உலகம் இது.​

   நீக்கு
 25. வித்தியாசமான கோணங்களில், பயணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
 26. ஸ்வாரஸ்யம். வட இந்திய பயண அனுபவம் நன்று. :) உங்களுக்கு பல விஷயங்கள் புதிதாக தெரிந்து இருக்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வெங்கட்.

   பயணமே எனக்கு புது அனுபவம்தான்! ஆனால் நீங்கள் குறிப்பாக எதைச்ச்சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை! நன்றி.

   நீக்கு
 27. படித்தேன் ரசித்தேன். சப்பாத்தி புடலை கூட்டு - ஏதேனும் இந்த ஜென்மா கர்மாவா இருக்குமா? (பாஸ் செய்த காம்பினேஷன் பிடிக்கலைனு அன்றைய சாப்பாட்டைத் துறந்து...)?

  ப்ரயாகைல லஸ்ஸி, மைதாவை மடித்து பொரித்து ஜீனி பாகுல ஊறவைக்கற பையளவு முக்கோண ஸ்வீட்... இதெல்லாம் சாப்பிடாம... இறைவா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கமல் படம் ஒன்றில் கலைஞன் என்று ஞாபகம்... ஒரு போலீஸ் அதிகாரி கர்மா... கர்மா எந்த கர்மா என்று அடிக்கடி சொல்வார்... அது நினைவுக்கு வருகிறது! உண்மையில் சாப்பிடும் பொருள் ஆசை அங்கு அதிகம் வரவில்லை நெல்லை... என் கவனம் கங்கையில் இருந்தது! மிஸ் செய்துவிட்டேன்,

   நீக்கு
 28. காய்ந்த இட்லி மிளகாய்பொடி - நிச்சயம் கர்மாதான். படித்தால் பாஸ் கிண்டல் செய்வார்களோ?

  பதிலளிநீக்கு
 29. வியாழன் ஃபார்மட் மாத்தாதீங்க. பத்திரிகைச் செய்தி, நான் படிக்காத கவிதை அப்புறம் இன்னும் ஏதோவும் வரும். அதெல்லாம் எங்கே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எக்ஸாட்லி. ஸ்ரீராம் கவிதை போடவில்லை. இன்னும் இரண்டு அம்சங்கள் இல்லை.
   முதன்முதலாகப் புடல்ங்காய் கூட்டு+சப்பாத்தி. ரொம்ப சோகம் மா.

   நீக்கு
  2. வல்லிம்மா, நெல்லைத்தமிழன்...

   இதுவே நிறைய இருந்தால் படிக்க சிரமமாகுமோ என்று தோன்றியதால் வெட்டினேன். மேலும் இபிகோன்ஜா நாட்களாய் டல்லடிக்கிறதோ என்கிற சந்தேகமும் இருந்தது. விடுமுறை, பயணங்கள், பணிகள்...

   நீக்கு
 30. வீர சிவாஜி சிலை...நல்லா இருக்கு ..

  தொடர்கிறேன் ..

  பதிலளிநீக்கு
 31. வாகனத்துள் இருந்தபடியே எடுத்துப் பகிர்ந்த பயணக் காட்சிகளும் தகவல்களும், பயண அனுபவங்களும் சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
 32. ஸ்ரீராம்ஜி பயணித்துக் கொண்டே நிறையப் படங்கள் எடுத்துருக்கிறீர்கள் போல! எல்லாமே நன்றாக இருக்கின்றன.

  கட்டிடங்கள் எல்லாமே மிகவும் பழைமையாக இருக்கின்றனவே. சில உடைந்தும் இருக்கின்றன. ஆங்காங்கே சிலைகள்.

  உணவகம் நல்ல பெரிதாக இருக்கிறது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 33. என் கண்ணில் ஒருவர் கூட படவில்லை!

  அட! ஆச்சரியமாக இருக்கிறதே ஸ்ரீராம். போலீஸ் இல்லவே இல்லையா?!! அப்ப எந்தக் குற்றமும் நடக்காத ஊரோ? புண்ணிய ஷேத்திரம் என்பதால்!

  ஒரு வீட்டின்முன் பசுவை நிறுத்தி பால் கறந்து கொண்டிருந்தார் பால்காரர். வீட்டு வாசலில் ஒரு பெண்மணி பால் வாங்கத் தயாராய் கையில் ஒரு பாத்திரத்துடன் நின்றிருந்த காட்சியும்...//

  இது பற்றி தெரியும் என்றாலும் பொறாமையாகத்தான் இருக்கிறது. இப்படி இங்கும் கறந்து தரமாட்டார்களா என்று. பொதுவாக வட இந்தியாவில் கால்நடைகள், குறிப்பாக மாடுகள் அதிகம் தான். நம்மூரில் தான் பால் அரசியலும் உண்டே...

  ரேபரேலி என்றதும் எனது மாமா தாத்தா நினைவுவுக்க வந்தார். அம்மாவின் மாமா. அங்குதான் இருந்தார் அப்புறம் பங்களூர் வந்து செட்டில் ஆனார். இப்போது இல்லை. மாமிப்பாட்டி இங்குதான் இருக்கிறார்.

  படங்கள் எல்லாமே ரொம்ப நல்லாருக்கு ஸ்ரீராம் அந்த நதியின் படம் செமையா இருக்கு.

  செல்லம் படம் க்யூட் கண்களின் என்ன ஒரு ஏக்கம்...ஏதோ ஒரு வருத்தம் இருப்பது போல் ஏக்கத்துடன் பார்ப்பது போல் இருக்கிறது..பாவம்...ஒல்ல்யாக உடம்பே ஏதோ எக்ஸ்ரே படம் போல இருக்கு!! பாவம்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போலீஸ் இல்லாமலிருக்குமா?

   எனக்கு ரேபரேலி என்றால் இந்திரா சோனியா ராகுல்தான் நினைவுக்கு வருவார்கள்!

   நீக்கு
 34. ஜட்கா வண்டி போல இருக்கு அந்தக் குதிரை இழுத்துச் செல்வது......விதம் விதமாக வண்டிகள் அங்கு.

  கீதா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!