சனி, 8 ஜூன், 2019

பாகிஸ்தானுக்கு உதவி செய்த ஜோஜிந்தசிங். - அவளே பலம்.. அவளே பலவீனம்!...


1)  கிராம மக்கள், குடிநீர் கிடைக்காமல், மயங்கி விழுந்ததைப் பார்த்த, இறைச்சிக் கடைக்காரர் பாபு,  தான் விவசாயத்துக்காக போட்ட, 'போர்வெல்'லில் இருந்து, மக்களின் தாகம் தீர்க்க, இலவசமாக தண்ணீர் வழங்கி வருகிறார். அவரை, 'தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கிய, மகராஜன்' என, சேலம் மாவட்டத்தின் கடைக்கோடி மக்கள் பாராட்டுகின்றனர்.


2)   "நன்கொடை அளித்த நல்ல உள்ளங்களால் தான், இவை சாத்தியமானது. இன்னும் மூன்று ஏரிகளுக்கு அனுமதி வாங்கியுள்ளேன். ஆனால், நிதிப் பற்றாக்குறையால் பணி துவங்கவில்லை.நிதி கொடுப்போர், பணமாக இல்லாமல், மண்வெட்டி, லாரி, டிராக்டர் போன்ற கருவிகளும், இயந்திரங் களும் கொடுத்தால் உதவியாக இருக்கும்.எங்களைப் போல், அவரவர்கள் ஊரில் ஒரு சிலர் சேர்ந்து ஏரி, குளங்களைச் சீரமைத்தால், நிச்சயம் நீர்வளமும் காக்கப்படும்; மக்களின் தாகமும் தீர்க்கப்படும்!...."

"...............அதற்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும்...' என, அமெரிக்காவில் உள்ள, என் மகள் கூறினாள்.முதற்கட்டமாக, மருமகனும், மகளும், ௨ லட்ச ரூபாய் அனுப்பினர். அவர்களின் ஆதர வால், எங்கள் கிராமத்தில் உள்ள ஏரியை துார் வார முடிவு செய்தேன்...........".

அரியலுார் மாவட்டம், விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற நல்லாசிரியர், தியாகராஜன்.
3)  ரயில்வேயில் கூலி வேலை செய்யும் K.  ஸ்ரீநாத் சுமைகள் தூக்கியபடியே அங்கு கிடைக்கும் இலவச வைஃபையை உபயோகித்து பாடங்கள் படித்து, காதில் ஹெட்போன் வைத்து பாடங்கள் கேட்டு பரீட்சைகளை பாஸ்  செய்த சம்பவம்...  (நன்றி பானு அக்கா)
4)  மனிதன் மனிதனுக்கு மட்டும் உதவி செய்தால் போதுமா?  மரங்களுக்கு யார் செய்வது?  கவலையில் சிந்தித்த சிலர் ஆரம்பித்து விட்டார்கள்.

சென்னையில் துணை ஜனாதிபதியால் துவங்கப்பட்ட 'ட்ரீ ஆம்புலன்ஸ்'சேவை பற்றி.  பெரும்புயலும், மழையும், வெள்ளமும் பெருமரங்களையும் வேரோடு சாய்த்து அழித்துவர, செய்வதறியாது விழிக்கும் மனிதர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.  ஏனைய கடலோர மாவட்டங்களிலும் இது வழங்கப்பட வேண்டும்.  கொஞ்சம் கொஞ்சமாக சேவை முன்னேற்றமடையும் என நம்புவோம். [ நன்றி ஏகாந்தன் ஸார்...   உங்கள் வரிகளை அப்படியே எடுத்துக்கொண்டேன் ]

5)  பாகிஸ்தானில் வறுமையிலும், வறட்சியிலும் வாடும் மக்கள் வசிக்கும் பகுதியில் 600க்கும் மேற்பட்ட அடி குழாய்களை அமைத்து, அப்பகுதி மக்களின் தண்ணீர் பஞ்சத்தை தீர்த்துள்ளார் இந்திய வம்சாவளி தொழிலதிபரான ஜோஜிந்தர் சிங் சலாரியா.  ==============================================================================================================கடந்த வார பதிவுகளின் விமர்சனம் 1/6 முதல் 7/6 வரை..  -  
துரை செல்வராஜூ 


 தேர்வு எழுதச் செல்லும் மாணவனைப் போலத் தவிக்கின்றது மனம்..

என்ன எழுதுவது?.. எப்படி எழுதுவது?...

ஆனாலும் எழுதித் தான் ஆக வேண்டும்...

இனி தப்பிக்க முடியாது...

அப்பனே பிள்ளையாரப்பா...
ஆகும் நலன் அனைத்தும் தந்து
எபி எனும் எம் தளத்தை வாழ்த்திடுக ஐயனே!...


******

அக்கா.... அக்கா...வ்!..

வாம்மா.. தாமரை... வா.. வா!.. - அன்புடன் வரவேற்றாள் தமிழ்ச்செல்வி..

வீட்ல... மாமா அத்தை எப்படி இருக்காங்க?...

எல்லாரும் நல்லா இருக்காங்க!... நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?..
என்னக்கா... இது?... கம்ப்யூட்டரைப் போட்டுக் குடைஞ்சிக்கிட்டு இருக்கீங்க?...

நம்ம எபியில வர்ற பதிவுகளுக்கு விமர்சனம் எழுதணுமாம்!..

யாரு?..

நாந்தான்!..

நீங்களா?... நல்லா கேட்டீங்களா?..

கேட்டேனே... நாந்தான் எழுதணுமாம்!..

எழுதச் சொன்னது யாரு?..

வேற யாரு... ஸ்ரீராம் தான்!...

ஓஹோ!.. இப்போ என்ன செய்யப் போறீங்க?..

வாசிக்கப் போறேன்...

என்னது?... வாசிக்கப் போறீங்களா!...

ஓ!... அது தில்லானா மோகனாம்பாள்...ல - ஆச்சி பேசுன வசனமில்லே!...
சரி.. சரி.. ஆளுக்கு ஒரு கப் காஃபி .. அதுக்கு அப்புறம் விமர்சனம்!..

ஓகே... அக்கா எப்படி ஆரம்பிக்கப் போறீங்க?...

எல்லாருக்கும் ஞாயிற்றுக்கிழமை தான் வாரம் ஆரம்பிக்கும்..  எபிக்கு மட்டும் சனிக்கிழமை... ஏன்..னா...

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு.. - இது முதுமொழி..
தன்னலம் கருதாம பொது நலம் செய்றவங்களப் பற்றிய சேதிகளோட ஆரம்பிக்கணும்...
அதான் சாஸ்த்ரம்... சம்பிரதாயம்!...

எபிக்கு இது வாரம்... நமக்கு அது வரம்!..
நல்லது செய்றவங்களைப் பற்றிப் படிப்பதும் நல்லது தானே...

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.. - அப்படின்னு வள்ளுவர் ஸ்வாமி சொல்லலையா!...

அந்த வகையில -

பொது நலம் ..ன்னு நிதி திரட்டி ஊர்க்குளங்களைத் தூர் வாரி
மீட்டெடுத்த மேல மாத்தூர் கிராமத்து இளைஞர்களைப் பற்றியும்,
முதியவர் ஒருவர் சாலையைக் கடப்பதற்கு உதவிய செய்த
காவலர்களைப் பற்றியும் சைக்கிளை மட்டுமே சொந்தமா வச்சிக்கிட்டு
பழங்குடி இனத்துப் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் நடத்துற
ஒடிசா மாநிலத்து MP திரு.பிரதாப் சந்திர சாரங்கி அவர்களைப் பற்றியும்
தகவல் சொல்லிட்டு -

தெர்மகோலில் வீடு கட்டுறதப் பற்றியும் சொல்லியிருக்காங்க!...

என்னது?... தெர்மகோல்... ல வீடா?...

ஆமாம்.. அது நல்லதா.. கெட்டதா.. ந்னு சர்ச்சையும் கிளம்பியிருக்கு.. அதோட போன வாரத்துப் பதிவுகளை விமர்சனம் செய்திருக்கிறவங்க ஏஞ்சல்...

ஓ!.. அவங்களா!...

அவங்களே தான்... அவங்க இப்போ மனநல ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட துறையில வேலை செய்றாங்க... அவங்க என்ன சொல்றாங்க..ன்னா..

பேச்சுத் துணைக்கு ஒருத்தரும் இல்லாம பலபேர் இருக்காங்களாம்..
இந்த மாதிரி தனிமை அதிகம் ஆகறதால மன நல குறைபாடும் அதிகமாகி வேற பல நோய்களும் வந்து சேர்ந்துடுதாம்...

நல்லாத்தான் சொல்லியிருக்காங்க...
அதனால சின்ன சின்ன பிரச்னைகளை ஊதிப் பெரிசாக்கி பைத்தியக்காரங்க மாதிரி ஆகாம - மனம் விட்டுப் பேசி
ஒற்றுமையா இருங்க....ன்னு அர்த்தம் ஆகுது!...

இதைத் தானே ஔவையாரும் அந்தக் காலத்திலேயே சொல்லியிருக்காங்க!..

ஔவையாரா?...

ஆமாம்...
கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதலே கோடியுறும்.. - அப்படின்னு!..

இதுக்கு என்னக்கா அர்த்தம்?...

கோடி கொடுத்தாவது குடும்பத்துல பிறந்த
அண்ணன் தம்பி, அக்கா தங்கை எல்லாம்
ஒன்னா கூடியிருக்கணும்..ன்னு ஒரு அர்த்தம்..

கோடி கொடுத்தாவது நல்ல குடும்பத்தில பிறந்த நல்லவங்களோட
கூடியிருக்கணும்..ன்னு இன்னொரு அர்த்தம்...

ஆனா.. அதைத் தான் ஜனங்க கேக்கலையே!..

அடுத்ததா ஞாயிற்றுக் கிழமை...

அடிச்சு விளையாடற நாள்...ல இதுவும் ஒண்ணு..  ஷில்லாங் போற வழியில உமியம் ஏரி..  அடடா... அந்தப் படங்கள் எல்லாம் அழகு...ன்னா அதுங்களுக்கு ஸ்ரீராம் எழுதுற சொற்சித்திரங்கள் எல்லாம் அழகோ அழகு...

அதையெல்லாம் பார்க்கணும்..ன்னு
அந்தச் சூரியனே சீக்கிரம் வர்றான்... னா
- வேற என்ன இருக்கு சொல்றதுக்கு!...

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே.. - ஷில்லாங்கு
அழகை எல்லாம் காண்பதற்கு வண்ணக்கிளியே!...

அப்படின்னு பாடிடலாம்...

அக்கா.. நீங்க வண்ணக் கிளியே.. அன்னக் கிளியே.. அப்படின்னு பாடுறீங்க...  இதுக்கெல்லாம் பொற்கிழி ஏதும் கொடுப்பாங்களா?...

பொற்கிழியா?.. நீ வேற!...  ஒரு குடம் தண்ணிக்கு தலைநகரே தடுமாறிக்கிட்டு இருக்கு...  இந்த நேரத்தில பொற்கிழியாவது!... பொன்னாடையாவது?...

ஆமா..ல்ல!... அதுவும் சரிதான்!..

அக்கா... நாமளும் ஒருதரம் ஷில்லாங் போய்ட்டு வருவோமா?..

கிழங்கட்டைகளுக்கு அங்கே என்ன வேலை?..  அதான் டார்லிங் ரெண்டு மாசத்துல துபாய்..ல இருந்து வர்றாரே..  போய் பட்டையக் கிளப்பிட்டு வாங்க!...

போங்க...க்கா!... - தாமரையை வெட்கம் சூழ்ந்தது..

சரி... நாம திங்கக் கிழமைக்குப் போவோமா!...

போகலாமே!... அது ஏங்க்கா திங்கக் கிழமை..ன்னு பேர் வந்தது?...

ஆரம்பத்துல திங்கட்கிழமை..ன்னு தான் இருந்ததாம்... இவங்க அன்னைக்குன்னு சாப்பாட்டு சங்கதி எல்லாம் போட்டதால திங்கக்கிழமை..ன்னு ஆகிப் போச்சு...

ம்ம்ம்.. இந்த வார அடுக்களை அரசி யாரு?...

நம்ம அக்கா ஸ்ரீமதி கீதாசாம்பசிவம் அவங்க தான்...
கரண்டியக் கையில எடுத்தாங்க..ன்னா!...

எடுத்தாங்க..ன்னா?...

ஏதாவது பண்ணிட்டுத்தான் உக்காருவாங்க!...

கத்தரிக்கா பொரிச்ச கூட்டுன்னு வெச்சிருக்காங்க பாரு...  அடடா... அதுக்காகவே ஸ்ரீரங்கத்துக்குப் போய் தின்னுட்டு வரலாம்...  பாரம்பர்ய சமையல் குறிப்புகள் ஏராளமா வெச்சிருக்கிற அடுக்களை அரிமா!...   சமையலறைச் சக்ரவர்த்தனி!...

கொஞ்சம் அரிசி மாவு கலந்து பொரிச்ச கூட்டு செஞ்சிருக்காங்க..
அதுக்குப் பதிலா கொஞ்சம் கட்டித் தயிர் சேர்த்து செஞ்சு பாரு...
ருசி துபாய் வரைக்கும் போகும்!...

பொரித் தெடுத்த வழுதுணங்காய் கூட்டு
பொன் மயிலேநீ பொறுப்புடனே கேட்டு
தலை வாழை இலைதனையே போட்டு
தங்காய் உன்வரிசை தனைக் காட்டு!...

அப்படின்னு பாட்டே பாடிக் கொடுக்கலாம்...

ஆகா... ஆகா!...

அடுத்தது செவ்வாய்க்கிழமை...
குடத்துக்குள்ளே இருக்கிற விளக்கை எடுத்து குன்று மேல வைக்கிற நாள்...
அண்ணன் மறுபடியும் கதை கவிதை எழுதறதுக்குக் காரணமே ஸ்ரீராம் தான்...

ஆமா.. அண்ணாச்சி கூட ஒருதரம் சொல்லியிருக்காங்க!...

இந்த வாரம் நல்லதொரு கதையை - இல்லையில்லை...
நல்லதொரு மனிதனை நமக்கு அடையாளம் காட்டியிருப்பவர்
திருமிகு ஜீவி ஐயா அவர்கள்...

ஐயா அவர்களின் கைவண்ணம் அற்புதம்... அற்புதம்...

இல்லறமே நல்லறம் என்பது ஆன்றோர் வாக்கு...
மணமகன் கைப்பற்றுவது மணமகளின் கரத்தினை மட்டுமா?..
அவளது உயிரையும் உள்ளத்தையும் அல்லவோ!..

அவற்றுக்கொரு ஊறு விளைந்தால்
அது அவனுக்கு விளைந்ததாக ஆகாதா!...

பாயும் ஒளி நீ எனக்கு..
பார்க்கும் விழி நான் உனக்கு!..  - இது தானே இல்லற தர்மம்...

இல்லறம்..ங்கறது முழுக்க முழுக்க சந்தோஷத்துல நிறைஞ்சதாச்சே...
அதுக்கு ஒரு கேடு வரலாமா?...

சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு.. - என்பார் கவியரசர்...

கோடு.. ங்கற வார்த்தைக்கு வேற அர்த்தங்களும் இருக்கு
கோடு..ன்னா கொம்பு ... கோடு...ன்னா மலை..

முரட்டு மாட்டோட கொம்பும் கரடு முரடான பெரும் பாறையும்
எவ்வளவு ஆபத்தானவை?..

இப்படியான ஒரு கேடு வந்து இல்லறத்துல விழுறப்போ
அதை உடைத்தெறிஞ்சு நிற்கிறவன் தான் உண்மையான புருஷன்!...

அப்படியான ஒருவனைத் தான் ஜீவி ஐயா காட்டுகிறார்...

தன்னை நம்பி வந்த பொண்ணை மதிக்கறவன் தாண்டா ஆம்பளை!..
- ன்னு ஹரிஹரன் சொல்லுவது பண்பின் சிகரம்..

இப்படிப்பட்ட புருசன் எல்லாப் பொண்ணுகளுக்கும் கிடைப்பானா அக்கா?...

கிடைக்கிறதுக்கு வேண்டிக்குவோம்!...

அண்ணன்..ன்னா யார்...ன்னு தெரியாத அயோக்கியர்களால நிறைஞ்சிருக்கு நம்ம ஊரும் நாடும்...

அதனால, இந்தக் காலப் பெண்கள் தன்னிலை தாழாமல் தன்னைத் தானே காத்துக்க வேணும்...

ஏன்னா... அவளே பலம்.. அவளே பலவீனம்!...

உண்மைதான் அக்கா!...

சரி... புதன் கிழமைக்குப் போகலாமா!...

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது..ன்னு சொல்வாங்க...
ஆனால் எபியில.... புதன் கிழமையில தான் முத்தும் மணியும் வயிரமும்
கொட்டிக் கிடக்கும்!..

இன்னைக்கு பானுமதி அக்காவோட கேள்விக் கணை...
அண்ணன் எழுதுன கதையில வர்ற ஆசிரியராக நீங்கள் இருந்தால்!..

அதுக்கு கௌதம் அண்ணாவோட பதில்கள் அருமை..

அந்தக் கதைக்கான கருத்துரையிலயும் அப்பவே பிரச்னை!...
அதெப்படி புருசனைக் கேட்காமல் கல்பனா முடிவெடுக்க முடியும்..ன்னு?..

ஏன் முடியாது?.. ஏன் கூடாது?..

காதலர் இருவர் கருத்தொருமித்து
ஆதரவு பட்ட இன்பம் அல்லவா வாழ்வு!...

நான் பேச நினைப்பதெல்லாம் நீபேச வேண்டும்..
நாளோடும் பொழுதோடும் உறவாக வேண்டும்..
அப்படி..ன்னு கவியரசர் சொல்லி வைக்கலையா?...

இவளுடைய எண்ணத்தை - விருப்பத்தை அவன் ஏத்துக்க மாட்டானா?...

கல்பனா கூப்பிட்டதும் -  டீச்சர் பெட்டி படுக்கையோட அவ வீட்டுக்கா போயிட்டாங்க!.. இல்லையே!...

கல்பனா கூப்பிட்டதுக்குப் பதிலா - அந்த டீச்சர் என்ன சொல்றாங்க?..

பத்துப் பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லித் தர்ற மாதிரி ஏற்பாடு செஞ்சு
கொடும்மா.. அதுல பொழச்சுக்கிறேன்... ந்னு தானே!...

துன்பத்துல துவண்டு நிக்கிறவங்களுக்கு தோள் கொடுக்கிற மாணவி...
படிப்பைத் தாண்டி அப்படியான மனோபாவத்தைப் பயிராக்கின டீச்சர்!..
அதுதானே இந்த படிப்புக்கும் அறிவுக்கும் அர்த்தம்?...

அதுவுமில்லாம - செம்பியன் மாதேவியும், குந்தவை நாச்சியரும் அரசியல் களத்துல நின்ற நாடு சோழ நாடு!...

சோழ நாட்டு அறிவார்ந்த பெண்கள் எப்பவுமே ஒருபடி மேல தான்!...

அப்புறம்  Goal Setting அல்லது Target Setting ...ன்னு ஒரு நல்ல விஷயம்
சொல்றாங்க...

நம்முடைய இலக்கு எண்ணிக்கையில் இருக்கணும்...ன்னு.. அர்த்தம்...

அந்தக் காலத்துல ராத்திரி படுக்கப் போகும்போது -
வெள்ளி எழ எந்திரிச்சுக்கணும்.... ந்னு சொல்லிட்டுத் தூங்குவாங்க..

வெள்ளி எழ!.. - அப்படின்னா - விடியற்காலை நாலரை மணி ..ன்னு அர்த்தம்...

அது அந்தக் கால வாழ்க்கைச் சூழ்நிலைக்கு பொருத்தமா இருந்தது....
நாம தான் அந்த வாழ்க்கையில இருந்து வெளிய வந்துட்டோமே...

வீங்குன விழியோட வேலைக்குப் போறதுதான் இன்னிக்கு நாகரிகம்!...

இன்னும் கூட சொல்லுவாங்க...
உனக்குன்னு நாலு காசு சேர்த்து வெச்சுக்க!..
நமக்கு..ன்னு நாலு பேரு வேணாமா!..
இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்..ன்னு
நீயே யோசிச்சுப் பார்த்துக்க தாமரை!...

அடுத்ததா வியாழக்கிழமை... கதம்பம் கட்டுற நாள்...  எல்லா ஊர்லயும் தான் பூ கட்டுறாங்க.. மாலை கட்டுறாங்க  அங்கே எல்லாம் கதம்பம் ...ன்னு பேர் கொண்டாடுறது இல்லை...  தஞ்சாவூர்...ல மட்டும் தான் கதம்பம்..ன்னு பேரு!...

தஞ்சாவூரு கதம்பம் கூட சிப்பாயி மவனே.. எனக்கு தனிமையில மணக்கலையே சிப்பாயி மவனே!...  அப்படின்னு வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில ஒரு பாட்டு வரும்...

ஆனா... இன்னைக்கு தஞ்சாவூர்....லய முறையா கதம்பம் கட்டுறதுக்கு ஆள் குறைஞ்சு போய்ட்டாங்க...

இப்போ இந்த பதிவில் திரிவேணி சங்கமத்துல சிரார்த்தம் செய்றது...
கயாவில முன்னோர்களுக்கு பிண்டம் வைப்பது பற்றி ஸ்ரீராம் சொல்லியிருக்கார்...

அக்கா... இதையெல்லாம் நீங்க?...

யம்மாடி... தென்புலத்தார்..ன்னு முன்னோர்களைச் சொல்லி அவங்களுக்குச் செய்ய வேண்டிய ஆத்ம சாந்தி சடங்குகளைச் செய்றது இல்லறத்தானின் கடமை..ன்னு வள்ளுவர் சொல்லியிருக்கார்...

இந்தக் குறளையெல்லாம் இடைச்செருகல்..ன்னு சிலர் சொல்றாங்களே...

அதெல்லாம் காட்டுக்கூச்சல்!..  இவங்களுக்கு வேணும்.... னா ஒட்டிக்குவாங்க!..  வேணாம்.... னா வெட்டிக்குவாங்க!..

தெய்வம் என்றால் அது தெய்வம்... வெறும் சிலை என்றால் வெறும் சிலை தான்!... - ந்னு கவியரசர் சொல்லுவார்..  ஆக, நம்பிக்கை தான் முக்கியம்...

நம்பிக்கை தானே வாழ்க்கை... என்ன புரியுதா?...

புரியுது அக்கா!...

அத்தோட பழைய கிசுகிசு, கார்ட்டூன்கள் இதெல்லாம் போட்டு இருக்கார்...
கூடவே எதிர்பாராதவிதமா நடந்த விபத்தைப் பற்றியும் சொல்லியிருக்கார்..  படிக்கிறப்பவே நடுக்கம்டா செல்லம்... தெய்வம் தான் காப்பாற்றி இருக்கு!...

ஜேஷ்டாதேவி வழிபாடு இந்த மாதிரி விபத்துகளைத் தடுக்கும்.. ந்னு
சொல்வாங்க... கடுப்பாகி யாரையும் திட்ற நேரம் போக மத்த நேரத்துல ஜேஷ்டா தேவியப் பற்றி யாரு நெனைக்கிறாங்க?...

ஜேஷ்டா தேவியப் பற்றி சொல்லுங்களேன் அக்கா!...

இன்னொரு நாளைக்கு சொல்றேன் தாமரை!...

அடுத்ததா வெள்ளிக் கிழமை.. மங்கலத்துக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய நாள்!...

அது யாருக்கா மங்கலம்!?...

ஊர்க்காட்டுல இருந்து மோர் கொண்டு வருவாங்களே... அவங்க!..
அந்த ஆத்தா பேர் தான் மங்கலம்!...  மங்கலம் ..ன்னா என்னான்னு ஒரு
பெண்ணுக்குத் தெரியாதா?...

சும்மா.. ஒரு லுலுலுவா!...

அதுசரி!.. பாட்டு ஒரே பாட்டு...ன்னு தூள் பறக்கிற நாள் வெள்ளிக்கிழமை!..

ராஜ்குமார் இசையில பழனி பாரதியோட பாட்டு...

காதலென்ன கண்ணாமூச்சி ஆட்டமா?..
தொட்டுச் செல்லும் பட்டாம் பூச்சிக் கூட்டமா?..
கண்ணுக்குள் பாரம்மா.. நீயின்றி யாரம்மா!..
கோபங்கள் இன்னும் இங்கு ஏனம்மா?..

நல்ல அழகான வரிகள்... ஆனாலும் -
அதுக்குள்ளே இருந்து எடுக்குறதுக்கு ஒன்னும் இல்லை..

உண்மையான காதல் ஒவ்வொரு பிறவியிலயும் தொடர்ந்தே வரும்...ன்னு சொல்லுவாங்க!.. அதனால தானே -

காலங்கள் தோறும் உன்மடி தேடி
கலங்கும் என் மனமே...
வரும் காற்றினிலும் பெரும் கனவிலும்
நான் காண்பது உன் முகமே...

அப்படி..ன்னு கவியரசர் எழுதுனார்...

அக்கா.. நான் ஒன்னு கேட்பேன்.. தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?..

கேளுடா.. தங்கம்!..

உங்களுக்கும் அத்தானுக்கும் பிடிச்ச பாடல் எதுன்னு சொல்ல முடியுமா!..
.
விடியக் காலைல நான் கோலம் போடறப்ப அத்தான் கன்னுகுட்டியைப் பிடிச்சுக்கிட்டு சாலையில போவாங்க...  அப்படியே ஓரக் கண்ணால பட்டும் படாம பார்ப்பேன்...  அப்படி வளர்ந்தது தான் அந்தக் காலத்துக் காதல்!...

 இப்பவும் தனிமையில காதோரமா பாடுற பாட்டு எது தெரியுமா!...

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல..
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல!..
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல..
நீ இல்லாமல் நானும் நானல்ல!..

ஆகா.. உயிரோட்டமான பாட்டு!... - தாமரை கைகளைத் தட்டினாள்...

அந்தக் காலப் பாட்டு உயிரோட்டமானது!..
இந்தக் காலப் பாட்டுல உயிர் ஓட்டமானது!...

அக்கா... அக்கா!... - தாமரை மறுபடியும் கைகளைத் தட்டினாள்...

அப்பாடா.. இதுவரைக்கும் நல்லபடியா எழுதியாச்சு..  என்ன தாமரை... எல்லாம் சரியா இருக்கா?...

என்ன அக்கா?... விமர்சனம் எழுதச் சொன்னா கதை எழுதி இருக்கீங்க!...

கதையா?.. சரியாப் போச்சு... பிள்ளையார் பிடிக்கக் குரங்கா முடிஞ்சிடுச்சே!..

இப்ப என்ன செய்றது தாமரை?...

ஒன்னும் செய்ய வேண்டாம்... அப்படியே அனுப்புங்க... எல்லாம் அந்த ஸ்ரீராம் பார்த்துக்குவார்!..

அதானே...
ஜெய் ஸ்ரீராம்!..
ஜெய் ஆஞ்சநேயா!..  

129 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம்..
  கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு.... அன்பின் வணக்கம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் இனி வரவிருக்கும் நட்புறவுகளுக்கும் நல்வரவு, காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

   நீக்கு
  2. வரவேற்ற துரைக்கும், வரவேற்க இருக்கும் மற்ற நண்பர்களுக்கும் வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நேற்றைய தினம் என்னையும் நினைவு கூர்ந்த அனைவருக்கும் நன்றி.

   நீக்கு
  3. கீதா அக்கா நல்வரவும், காலை வணக்கமும்

   நீக்கு
 2. இனிய காலை வண்க்கம் ஸ்ரீராம்..

  இன்றைய பாசிட்டிவ் செய்திகளுடன் துரை அண்ணா போல இருக்கே விமர்சனம்...வருகிறேன் பார்க்க

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

   YES!

   நீக்கு
  2. கரெக்ட்டா என் பக்கம் போய் வாசிக்கப் போனா கணினி சுணங்கி விட...அந்தப் பதிவிலிருந்து கம்ப்யூட்டரை ஆஃப் செய்து...மீண்டும் எபி க்கு வரவும் கணினி விளிம்பு நிலை போய் நல்ல காலம் மீண்டும் வந்துவிட்டது..ஹா ஹா

   கீதா

   கீதா

   நீக்கு
  3. >>> நல்ல காலம் மீண்டும் வந்து விட்டது.. <<<

   ஆகா... அருமை... நல்ல காலம் மீண்டும் வந்துவிட்டது..

   நீக்கு
  4. விளிம்பு நிலை க்கணினிகள்!

   நீக்கு
 3. துரையின் விமரிசனம் அவர் பாணியில் அமர்க்களம்! ஒவ்வொரு நாளையும் நன்றாக அலசி இருக்கிறார். குறிப்பாய் வியாழன் தஞ்சாவூர்க்கதம்பம். ஊர்ப்பாசமும் கதம்பத்தின் மணமும் ஒன்றோடு ஒன்று போட்டி போடுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அக்கா அவர்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  2. தங்களது கத்தரிக்கா பொரிச்ச கூட்டுக்காக பாட்டு ஒன்று கொடுத்திருக்கிறேனே...
   அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே அக்கா!....

   நீக்கு
  3. //பொரித் தெடுத்த வழுதுணங்காய் கூட்டு
   பொன் மயிலேநீ பொறுப்புடனே கேட்டு
   தலை வாழை இலைதனையே போட்டு
   தங்காய் உன்வரிசை தனைக் காட்டு!...// நேற்றே படிச்செனே, மத்தியானமா வந்து சொல்லலாம்னு போனேன். மத்தியானம் வரவே முடியலை. அப்புறமாக் கணினியையே திறக்க முடியலை! :( அருமையாக ரசித்துச் சொல்லி இருக்கீங்க! சாப்பிட்டால் கவிதை எப்படி வரும்னு யோசிக்கிறேன். கவிதைக்குக் கொடுத்து வைச்சிருக்கேன். கிடைச்சிருக்கு!

   நீக்கு
 4. சேலத்தின் திரு.பாபு, நல்லாசிரியர் திரு. தியாகராஜன், ஜோகீந்தர்சிங் ஆகிய நல்ல உள்ளங்களுக்கு வணக்கங்கள் பல...

  ஊக்க மது கை விடேல் - என்று இளையோர் பலர் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கையில்
  ஊக்கமது கை விடேல் என்று உழைத்து தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளும் திரு. ஸ்ரீநாத் -
  வாழ்வில் மேலும் மேலும் உயர்வதற்கு நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 5. பாகிஸ்தானுக்கு உதவிய ஜோஜிந்தர்சிங்கைத் தவிர்த்து மற்றச் செய்திகள் படித்தவை என்றாலும் இங்கேயும் படித்துக் கொண்டேன். அனைவருக்கும் வாழ்த்துகள். சென்னையில் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் நல்ல மழை பொழிந்து தண்ணீர்ப் பிரச்னை தீரப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 6. உலக சுற்றுச் சூழல் தினத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் Tree Ambulance பாராட்டத்தக்க முயற்சி..
  அவர்களின் சேவை வாழ்க... வளர்க...

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன் !

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 9. இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் நல்ல செய்திகள்.

  கலியுக வள்ளல் பாபு வாழ்க!

  ஆசிரியர் தியாகராஜன் அவர்கள் பணி மகத்தானது அரசு செய்யவேண்டிய வேலை என்று இருக்காமல் மக்கள் எல்லோரும் சேர்ந்து குளம் குடைகளை தூர்வாருவது மகிழ்ச்சி தருகிறது அனைவருக்கும் சாருக்கும் வாழ்த்துக்கள்.

  ஜோஜிந்தர் சிங் சலாரியா போல் ஊருக்கு ஒருவர் உதவி செய்தால் நாட்டில் தண்ணீர் கஷ்டம் இருக்காது.நல்லமனம் வாழ்க!

  இத்தனை நல்லவர்களுக்காக மழை இரங்கி வரட்டும்

  //K. ஸ்ரீநாத் சுமைகள் தூக்கியபடியே அங்கு கிடைக்கும் இலவச வைஃபையை உபயோகித்து பாடங்கள் படித்து, காதில் ஹெட்போன் வைத்து பாடங்கள் கேட்டு பரீட்சைகளை பாஸ் செய்த சம்பவம்...//

  ஸ்ரீநாத் வாழ்க வளர்க! இது போன்று வைஃபையை நல்லவிதமாக பயன்படுத்தி பரீட்சையில் வெற்றிபெற்றவர் மேலும் உயர்வார். வாழ்த்துக்கள்.
  நல்ல செய்திகளுக்கு நன்றி.  .
  பதிலளிநீக்கு
 10. சகோ துரைசெல்வராஜூ அவர்கள் இந்த வார விமர்சனம் மிக அருமை.
  தாமரையும், தமிழ்செல்வியும் உரையாடிய விதம் அருமை.
  அவர்கள் உரையாடலில் எத்தனை கருத்தான நல்ல செய்திகள் !
  அனைத்தும் மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி .. நன்றி...

   நீக்கு
 11. கதை வடிவில் வந்திருக்கும் துரை செல்வராஜ் அவர்களின் விமர்சனம் மிகவும் பாஸிட்டிவாக சிறப்பாக இருக்கிறது. வாழ்க வளமுடன்!👍👍

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 12. நல்ல அருமையான விமரிசனம் துரை செல்வராஜூ சார்! நன்றி!

  பதிலளிநீக்கு
 13. செய்திகள் அனைத்தும் அருமை...

  ஐயாவின் விமர்சனம் அசத்தல்...

  பதிலளிநீக்கு
 14. சனிக்கிழமை நல்ல செய்திகளைத் தரும் நல்ல நாள்.
  கூலி
  வேலை செய்து, இந்தியன் சர்வீஸ் தேர்வு எழுதிப் பாசும் செய்து விட்ட ஸ்ரீனாத் அவர்களுக்கு
  மனம் நிறை வாழ்த்துகள்.

  பாகீஸ்தான் நாட்டில் வறட்சியைப் போக்கி தண்ணீர் வரவழைத்துக் கொடுத்த
  ஜோஜெந்திர்,
  வள்ளல் பாலு அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றி ஸ்ரீராம்.
  அன்பு துரை செல்வராஜு மிக அழகாக்ப் பாடல்களுடனும், குறள்களுடனும்
  ஒரு வாரத்துக்கான அத்தனை பகுதிகளையும்
  ஒவ்வொரு நாளாகத் தொகுத்துக் கதை சொல்வது போலச் சொல்லிவிட்டார்.
  அவரது பரிவான பார்வை போன வாரத்தை மிகச் சிறப்பாக்கி இருக்கிறது.
  ஒவ்வொரு பதிவும் அக்ஷர லட்சம் பெறும்.
  மிகக் கூர்மையான கணிப்பு.
  என் அன்பு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகையும் அன்பின் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி .. நன்றி...

   நீக்கு
 15. அனைவருமே போற்றத்தக்கவர்கள். இவர்களில் ரயில்வே பணியாளர் இன்னும் முன்னிலையில் நம் மனதில் பதிகிறார்.

  பதிலளிநீக்கு
 16. போற்றுதலுக்கு உரியவர்கள்
  போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 17. ஆஆஆஆஆ நான் நேற்றே அஞ்சுவுக்குச் சொல்லிட்டேன் இன்று துரை அண்ணன் ரிவியூ என எப்பூடி? கடந்த 2,3 நாட்களாக அவரின் கொமெண்ட்ஸ் பார்த்தே கண்டு பிடிச்சேன்ன்ன் ஹா ஹா ஹா கொஞ்சம் லேட்டாகும் மீ வருவேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆ... அதெப்புடி?.. தேசிக்காய் உருட்டி கண்டு புடிச்சியளோ!...

   திரும்பி வாரப்போ தெட்சிணை எடுத்து வாருங்கோ!...

   நீக்கு
 18. திரு பாபுவின் சேவை வாவ் போட வைத்தது.

  அட அடுத்த செய்தியும் ஏரி தூர் வாரல். அருமையான செய்திகள்.

  கீதா

  பதிலளிநீக்கு
 19. 5 வது செய்தி டாப்!! சூப்பர் இல்லையா? பாகிஸ்தான் மக்களுக்கு உதவியது. இம்ரான் மற்றும் பாகிஸ்தான் மக்கள் இச் செய்தியைப் பார்த்துப் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும். இது நல்லிணக்கத்திற்கு வழி கோலும் என்று நம்புவோம்.

  ஸ்ரீநாத்திற்கு குடோஸ்! வாழ்த்துகள். வாழ்க்கையில் மேலும் உயர வேண்டும்.

  ட்ரீ ஆம்புலன்ஸ் சேவை வளர்ந்து தொடர வேண்டும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 20. துரை செல்வராஜு சார்... இப்போதான் எபி தளம் வர நேரம் அமைந்தது.

  முதலில் உங்க விமர்சனத்தைப் படித்தேன். மிக மிக ரசனையாக எழுதியிருக்கீங்க. அடுத்த வாய்ப்பு எனக்கு வரும்போது, நான் 'ஒரு வார இடுகைகளை' விமர்சிக்காம, அதனை விமர்சித்தவங்க எப்படி எப்படியெல்லாம் ரசனையா எழுதியிருக்காங்க என்பதை மட்டுமே விமர்சிக்கலாம் என்ற ஆவல் வருது.

  ஒரு தடவைதான் படித்திருக்கிறேன். இன்னும் ஆழ்ந்து படிக்கவேண்டும். நீங்க கொண்டுவரும் குறள், பாடல், நல்ல உரையாடல் - உண்மையாகவே மிகவும் ரசித்துப் படித்தேன். பாராட்டுகள் துரை செல்வராஜு சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வசிஷ்ட மகரிஷிகளைக் காண வில்லையே!.. என்று வருந்தியிருந்தேன்...

   இப்போது தான் நிம்மதியாயிற்று...

   நீக்கு
  2. துரை செல்வராஜு சார்... இயல்பான கிராமத்து உரையாடல்கள், கவிதை, சென்டிமென்ட் கதைத் தளம்லாம் ரொம்ப சிறப்பா உங்களுக்கு கைவரப்பெறுது. நிறைய கதைகளையும், உங்கள் பாணியில் உலகநடப்புகளையும் தொடர்ந்து எழுதுங்க.

   நீக்கு
  3. ஆமோதித்து வழிமொழிகிறேன்.

   நீக்கு
 21. சனிக்கிழமை - கோவில் சென்று வந்து, பிறகு உண்டபின்புதான் நேரம் கிடைக்கும். இன்றைக்கு பெங்களூரில் ஒன்றுக்கு இரண்டு கோவில்கள் தரிசனம், பிறகு பெரியவர்களைப் பார்த்துவிட்டு ரொம்ப நேரம் கழித்துத்தான் காலை உணவு உண்டேன் (அதிகாலையிலேயே செய்துவிட்டேன் என்றாலும்).

  வர வர, விமர்சனம் நன்றாக அமைந்துவிடுவதால், 'நல்ல செய்திகள்' படிப்பது 'குறைந்த முக்கியத்துவம்' என்ற நிலையில் வந்துவிடுகிறது ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வர வர, விமர்சனம் நன்றாக அமைந்துவிடுவதால், 'நல்ல செய்திகள்' படிப்பது 'குறைந்த முக்கியத்துவம்' என்ற நிலையில் வந்துவிடுகிறது ஸ்ரீராம்.//

   முன்னே வந்த செவியைப், பின்னே வந்த கொம்பு மறைக்கிறதோ ஹா ஹா ஹா... மாற்றம் ஒன்றுதானே மாறாதது...

   நீக்கு
  2. //முன்னே வந்த செவியை//- சில சமயங்களில் நீங்க உபயோகப்படுத்தும் சொற்றொடர்கள், பழமொழிகள் ரொம்ப நல்லா இருக்கு. கேள்விப்படாதவைகள். அதிலும் இலங்கையரிடமிருந்தான்னு கேட்கக்கூடாது, அங்கும் தமிழ் வளர்த்த பெருந்தகைகள் அதிகம்.

   பாராட்டுகள் அதிரா

   நீக்கு
  3. //முன்னே வந்த செவியைப், பின்னே வந்த கொம்பு மறைக்கிறதோ //

   நானும் ரசித்தேன்.

   நீக்கு
  4. எங்க பாட்டி கூட அடிக்கடி பழமொழியா சொல்வாங்க :) இதிலிருந்து என்ன தெரியுது அதிரா கிரான்மா

   நீக்கு
  5. ///அங்கும் தமிழ் வளர்த்த பெருந்தகைகள் அதிகம்.///
   இதில இருந்து என்ன தெரியுது... அதிராவாலதான் இன்னும் இலங்கைத்தமிழ் சாகாமல் இருக்குதாக்கும்:)... ஹையோ இதை ஆராவது படிச்சால் என்னைத்தூக்கிக் கூண்டில போட்டிடுவினம் மீ ரன்ன்னிங்:)....

   பாட்டி சொன்ன பழமொழியில ஒன்றுகூட அஞ்சு சொல்லி நான் கேட்டதில்லை:)... இதில இருந்து என்ன தெரியுதூஊஉ?:£....

   ஆஆஆ விசிட்டேர்ஸ் வந்திடப்போகினம் பாய் பாய்ய்ய்ய்ய்:)

   நீக்கு
  6. //இதை ஆராவது படிச்சால் என்னைத்தூக்கிக் கூண்டில போட்டிடுவினம் மீ ரன்ன்னிங்:)....//

   siri call the ambulance..........

   நீக்கு
  7. ///siri///
   செல்லமாக் கூப்பிட்டா ரெண்டெழுத்து:) அதுவோ இது?) ஹா ஹா ஹா அஞ்சு யூப்பர் மாட்டீஈஈஈஈ:)

   நீக்கு
 22. Tree ambulance:
  '... வேரோடு சாய்த்து அழித்துவர..' என இருக்கவேண்டும். ’அழைத்துவர’ எனத் தவறாக வந்துவிட்டது. Sorry!

  பதிலளிநீக்கு
 23. துரை அண்ணனுக்கு குரு தட்சனை எடுத்துவர கொஞ்சம் நேரமாகிட்டுது.. இந்தாங்கோ, மணிக்கூட்டை எடுத்துக் கட்டிக்கொண்டு அந்தக் கையால என்னை ஆஜீர்ர்வதியுங்கோ:)...

  https://image.shutterstock.com/image-photo/gold-cash-260nw-47033626.jpg

  பதிலளிநீக்கு
 24. //என்ன எழுதுவது?.. எப்படி எழுதுவது?...

  ஆனாலும் எழுதித் தான் ஆக வேண்டும்...//

  ஆமா ஆமா.. உரலுக்குள் தலையைக் குடுத்திட்டு இடிக்குப் பயந்தால் முடியுமோ?:)).. எழுதித்தான் ஆகோணும்:)).. அதுக்கு நாம் எழுதும் பதில்களை எல்லாம் சிரிச்சுக்கொண்டே கடந்துதன் ஆகோணும் வேறு வழி?:) ஹா ஹா ஹா..

  தன்ர போஸ்ட்டுக்கு, தானே முதலில் குதிச்சு.. மீ த 1ஸ்ட்டாக வந்த துரை அண்ணன் வாழ்க...!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தன்ர போஸ்ட்டுக்கு, தானே முதலில் குதிச்சு.. //

   ஹா.. ஹா.. ஹா... ஆனால் அவர் தன் போஸ்ட், பிறர் போஸ்ட் பாகுபாடெல்லாம் பார்ப்பதில்லை அதிரா.

   நீக்கு
  2. அதெல்லாம் அவர் பார்க்க மாட்டார்:).. இன்று அதிரா நித்திரையாகிட்டேன்ன் அதனால ஏதோ ஒரு லக்கில திரை அண்ணனுக்கு அடிச்சது யோகம்:)... ஜம்ப்பண்ணிட்டார்ர்ர்:)

   நீக்கு
  3. >>> தன்ர போஸ்ட்டுக்கு, தானே முதலில் குதிச்சு.. <<<

   என்னுடைய பதிவுகள் வெளிவரும் நாட்களில் தூக்கம் வருவதில்லை...
   எப்போது 3:30 ஆகும் என்று விழித்துக் கிடக்கும் மனம்..

   தங்களது அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி .. நன்றி...

   நீக்கு
 25. //வாம்மா.. தாமரை... வா.. வா!.. - அன்புடன் வரவேற்றாள் தமிழ்ச்செல்வி..//

  ஆஆஆ தமிழ்ச்செல்வி சனிக்கிழமையிலோ?:))..

  ஆஆஆஆஆஆ அப்போ ரிவியூ எழுதினது துரை அண்ணன் இல்லையோ தாமரை அக்காவோ?:)) அதுதானே பார்த்தேன் நம்பாலார் எழுதுவதுபோல ரொம்ப அழகா எழுதியிருக்கே என ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர். ஒரு பத்து தமிழ் சிறுகதை, நாவல் எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள் சொல்லுங்கோ... எந்தப் பாலார்னு பார்க்கலாம்...

   கண்ணதாசன், வையிரமுத்து, ஜெஃப்ரி ஆர்ச்சர்னு எழுத வேண்டியது... எம்பாலாராம் எம்பாலார் ஹ்க்கு

   நீக்கு
  2. கீசாக்கா பானுமதி அக்கா கீதா கோமதி அக்கா கமலாக்கா , அனு(ஒரு கதை எழுதினவ), வல்லிம்மா, அஞ்சு(2 கதை:) , அதிரா( கவிஞர் எழுத்தாளர் , பாடலாசிரியத்;)... ஒண்டு குறையுதே கடவுளே:).... ஆஆ இன்Tஐய எழுத்தாளர் டாமரை அக்காவ்வ்வ்வ்:)... கரெக்ட்டாப் பத்தூஊஊஊஊ:)
   பூஸோ கொக்கோ எங்கிட்டயேவா:) ஹா ஹா ஹா

   நீக்கு
  3. மாலா மாதவன், நெய்வேலி மாலாரஞ்சனி அக்கா...

   நீக்கு
  4. ராஜலக்ஷ்மி பரமசிவம் ,அப்பாவி தங்கமணி ,

   நீக்கு
  5. காமாட்ஷி அம்மா அப்புறம் முந்தி கொஞ்சம் நாள் பூவிழி னு ஒருவர் வந்தாங்க அவங்க ,முத்துச்சரம் ராமலக்ஷ்மிக்கா துளசிதளம் துளஸிக்கா ,ஸாதிகா ,அப்புறம் ஹுஸைனம்மா

   நீக்கு
  6. அதானே... நீளும் லிஸ்ட்...!

   நீக்கு
  7. ananya , மனோ அக்கா , ஆதி வெங்கட்

   அப்புறம் கீதா மதிவாணனும் அவங்க உறவினர் கலையரசியும் எழுதி இருக்காங்களான்னு 100 % தெரில

   நீக்கு
  8. யார்கிட்ட :) எங்க தலைவியா கொக்கா ..100 குட்டிரேவதி ஆயிரம் லீனா பத்தாயிரம் சல்மா இவர்களுக்கும் மேலேயாச்சே :)

   நீக்கு
  9. OMG... நினைவு வைத்திருப்பதில் உங்களை அடிக்க முடியுமா ஏஞ்சல்? wow...

   நீக்கு
  10. நம்ம தேனக்கா கூட எழுதினாங்க இல்லையா

   நீக்கு
  11. இங்கு கும்மி அடிப்போரை மட்டுமே இழுத்து விட்டேன்ன்... எனக்குப் பெரிசா பழக்கமில்லாதோரைப்பற்றிப் பேசப் பயம் எனக்கு...

   நீக்கு
  12. எனக்கு கதைகள் நினைவில் இருப்பதால் பெயர்கள் அப்படியே வந்தது

   பெண்கள் நிறையபேர் எழுதியிருக்காங்க அதை சொல்லணும் இல்லையா தலைவீ

   நீக்கு
  13. //பழக்கமில்லாதோரைப்பற்றிப் பேசப் பயம் எனக்கு...//

   https://media.tenor.com/images/cdb327ec053535ce6c41b1c0f8bc4a7d/tenor.gif

   நீக்கு
  14. ///குட்டிரேவதி ஆயிரம் லீனா பத்தாயிரம் சல்மா இவர்களுக்கும் மேலேயாச்சே :)///
   அச்சச்சோ இவர்களெல்லாம் ஆரூஊ?:) புரட்டிப் போராளிகளோ?:) கடவுளே என்னைக் கூண்டில் ஏத்தாமல் அஞ்சு ஓயமாட்டா போலிருக்கே:)... ஶ்ரீராம் அஞ்சுக்கு ஏதாவது வேலை குடுங்கோ பிளீஸ்... கதை கவிதை அனுப்பச் சொல்லி:)... இல்லாட்டில் என் வாலை விடவே மாட்டா போலிருக்கே வேளாங்கன்னி மாதாவே...

   நீக்கு
 26. ///தெய்வம் என்றால் அது தெய்வம்... வெறும் சிலை என்றால் வெறும் சிலை தான்!... - ந்னு கவியரசர் சொல்லுவார்.. ஆக, நம்பிக்கை தான் முக்கியம்...

  நம்பிக்கை தானே வாழ்க்கை... என்ன புரியுதா?...

  புரியுது அக்கா!...///

  எனக்கு மிக மிகப் பிடிச்ச வசனம்.. உண்மைதான் நம்பிக்கை இருப்பதாலதான் நாம் எல்லாம் உயிரோடிருக்கவே முடியுது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பாவி அதிராவின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 27. //உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல..
  உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல!..
  நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல..
  நீ இல்லாமல் நானும் நானல்ல!..//

  ஹா ஹா ஹா இது எங்கள் புளொக்குக்கு டெடிகேட் ஆ?:)) ஹா ஹா ஹா அருமை.

  வித்தியாசமாக உங்கள் பாணியில் தாமரை அக்காவையும் கலைச்செல்வியையும் உள்ளே இழுத்து.. அவர்களின் கையைப் பிடிச்சே ரிவியூ எழுதி முடிச்சிட்டீங்க.. அழகு.. சோட் அண்ட் சுவீட்.. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பாவி அதிராவின் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 28. //ஒன்னும் செய்ய வேண்டாம்... அப்படியே அனுப்புங்க... எல்லாம் அந்த ஸ்ரீராம் பார்த்துக்குவார்!..
  //

  ஹா ஹா ஹா அவர் எங்கின பார்க்கிறதாம்?:) அவர் கண்ணை மூடிட்டுப் பப்ளிஸ்தான் பண்ணுவார் ஹா ஹா ஹா.. அப்போ மீ போட்டு வரட்டே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அவர் எங்கின பார்க்கிறதாம்?:) அவர் கண்ணை மூடிட்டுப் பப்ளிஸ்தான் பண்ணுவார்//

   எதை விட, எதைக் குறைக்க?!!

   "குறைக்க மனம்கூடுதில்லையே.....யே.....யே...."

   நீக்கு
  2. >>> எதை விட, எதைக் குறைக்க?!!
   "குறைக்க மனம்கூடுதில்லையே...யே...யே... <<<

   அந்தப் பக்கம் அதை நறுக்கணும்...
   இந்தப் பக்கம் இதைக் குறைக்கணும்..
   அவங்களுக்கு புடிச்ச மாதிரி எழுதணும்...
   என்றெல்லாம் இல்லை...

   இந்த சுதந்தரம் தான் எபி...

   நீக்கு
 29. அனைவருக்கும் அன்பான சனிக்கிழமை வணக்கம் :)
  நேற்று பூனை ஜோசியம் பார்த்ததில் அது எடுத்து கொடுத்த அட்டைகளில் மாசில் வீணையும் ,பாருருவாய பாடல்கள் இருந்தது அப்போ சந்தேகம் இன்று confirmed :) துரை அண்ணனின் விமரிசனம் ..இருங்க பதிவை வாசிச்சிட்டு சனிக்கிழமை நற்செயலாளர்களை பார்த்திட்டு வரேன் முதலில்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏஞ்சல்.. சனிக்கிழமை வணக்கம்!!

   பூனைஜோசியம்? நான் நம்பவில்லை!!!

   நீக்கு
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உலகில எல்லோரையும் நம்புவாராம் :) உண்மை விழம்பி அதிராவை மட்டும் நம்பமாட்டாராம் 3ராம்ம்ம்ம்ம்ம் கர்ர்ர்:)

   நீக்கு
 30. ஆழ் துளை குழாய் கிணறு அமைத்து பொதுமக்கள் தாகம்/நீர் தேவை தீர்க்கும் பாபு ,பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உதவ ஏரிகளை புனரமைத்த ஓய்வுபெற்ற நல்லாசிரியர் குடும்பத்தினர் ,மல்ட்டி டாஸ்கிங் செய்து இலவச wifi யை பயன்படுத்தி பரீட்சை எழுதிய ஸ்ரீநாத் ,மரங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து பத்திரமா வேறிடத்தில் வைக்கும் ஸாசா நிறுவனம் ,நல்லெண்ணத்துடன் பாகிஸ்தான் மக்களுக்கு குடிநீர் வசதி செய்துதரும் ஜோஹிந்தர் என அனைவரும் பாராட்டுக்குறுரியவர்கள் .பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 31. //இவங்களுக்கு வேணும்.... னா ஒட்டிக்குவாங்க!.. வேணாம்.... னா வெட்டிக்குவாங்க!..

  தெய்வம் என்றால் அது தெய்வம்... வெறும் சிலை என்றால் வெறும் சிலை தான்!... - ந்னு கவியரசர் சொல்லுவார்.. ஆக, நம்பிக்கை தான் முக்கிய//
  ஆஹா அருமையா சொல்லியிருக்கீங்க .நம்பிக்கை நம்பிக்கை அதேதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஏஞ்சல்
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 32. //இந்தக் காலப் பெண்கள் தன்னிலை தாழாமல் தன்னைத் தானே காத்துக்க வேணும்...

  ஏன்னா... அவளே பலம்.. அவளே பலவீனம்!...//
  பொன்னில் பொறிக்க வேண்டிய வார்த்தைகள் பெண்கள் தன்னிலை உணர வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அவளே பலம்.. அவளே பலவீனம்!//

   நானும் அந்த வார்தையைப் பெரிதும் ரசித்ததால்தான் தலைப்பில் சேர்த்து விட்டேன்.

   நீக்கு
  2. ஹாஹா அறிவிற் சிறந்தோர் ஒரே மாதிரி சிந்திப்பார்கள்ன்னு யாரோ சொன்னாங்க

   நீக்கு
  3. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈ இதில. ஆரு அறிவில் சிறந்தவர்? அஞ்சுவாமோ:).... ஹையோ அம்பியூலன்ஸ்க்கு அடிங்கோ மீக்கு நெஞ்சுக்கு கீழ வலிக்குதூஊஊஉ:) முடியல்ல வைரவா.... ஹையோ விசிரேர்ஸ் ஒன் தெ வே ... மீ ரெம்ம்ம்ப பிஸி..

   நீக்கு
  4. அன்பின் ஏஞ்சல்
   தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 33. தாமரை கலைச்செல்வியின் உரையாடல் சேர்த்து மிக அருமையாக விமரிசனம் செய்திட்டீங்க துரை அண்ணா ..மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஏஞ்சல்
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 34. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது ஆருக்கு எழுதியதோ:))

   நீக்கு
  2. கொஞ்சம் மேலே பாருங்க உங்களை 3 இலக்கியவாதிகளுடன் கம்பேர் பண்ணிருக்கேன்

   நீக்கு
 35. துரை அண்ணா அட்டகாசமான விமர்சனம். மிகவும் ரசித்தேன். தாமரையும் அக்காவும் பேசிக் கொள்வ்து போன்ற அழகான உரையாடல் மூலம் அருமையான விமர்ச்சனம். உங்கள் அழகு தமிழில் பாடல்களுடன் ஆன...அம்சம்.

  வாழ்த்துகள் துரை அண்ணா.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கீதா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 36. செய்திகள்,விமர்சனம் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாதவி அவர்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 37. கல்பனா கூப்பிட்டதும் - டீச்சர் பெட்டி படுக்கையோட அவ வீட்டுக்கா போயிட்டாங்க!.. இல்லையே!...

  கல்பனா கூப்பிட்டதுக்குப் பதிலா - அந்த டீச்சர் என்ன சொல்றாங்க?..

  பத்துப் பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லித் தர்ற மாதிரி ஏற்பாடு செஞ்சு
  கொடும்மா.. அதுல பொழச்சுக்கிறேன்... ந்னு தானே!...//

  துரை அண்ணா!! செம இதை நான் அன்றும் அப்புறமும் கூடச் சொல்ல வந்து விட்டுப் போயிடுச்சு எப்படியோ....அதுவும் அப்பப்ப கரன்ட் போயி, கணினி படுத்தி மீண்டும் மீண்டும் ஆஃப் செய்து வரும் போது சொல்ல வரும் கருத்து விட்டுப் போயிடுது....இன்று உங்களின் இதைப் பார்த்ததும் தான் நினைவு வந்தது. அதுவும் குறிப்பாக இங்கு கோட் செய்திருக்கும் முதல் வரி.

  ஆனால் இரு உதாரணங்கள் சொல்லியிருந்த நினைவு...அப்படியே இதைச் சொல்ல நினைத்து விட்ட ஒன்று.

  அழகா எடுத்துச் சொல்லிட்டீங்க துரை அண்ணா...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கீதா..

   பற்பல இடையூறுகளைக் கடந்து -
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 38. பாஸிட்டிவ் செய்திகள் அருமை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சுரேஷ்..
   தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 39. ஏரி தூர் வாறுவதற்கு பணம் அனுப்பியது பெரிய பொது நலசெயல் வாழ்த்துவோம்.

  குவைத் ஜி அவர்களின் விமர்சனம் அழகிய கவிதை.

  (காலையிலேயே படித்து விட்டேன் பயணத்திலிருந்து...)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 40. அன்பின் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்....

  விடுமுறை முடிந்து இன்று ஸ்டோர் திறக்கப்பட்டுள்ளது... கொஞ்சம் வேலை அதிகம்...

  கருத்துரைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்...
  பதில் வழங்க இயலவில்லை....
  பிறகு வருகிறேன்..

  மகிழ்ச்சி... நன்றி..

  பதிலளிநீக்கு
 41. மேலே அன்பரின் பெயர் ஜொகீந்தர் சிங் சலாரியா (Joginder Singh Salaria) என இருக்கவேண்டும்.

  வித்தியாசமான வார ரிவ்யூ .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஏகாந்தன்..
   தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 42. சிறப்பான மனிதர்கள் பற்றிய தகவல்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிவுகள் பற்றிய ரெவ்யூ - சிறப்பு - துரை செல்வராஜூ ஐயாவின் சிறப்பான வார்த்தைகளில் மிளிர்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 43. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. எல்லாவிடத்திலும் மழை நன்றாக பெய்ய வேண்டும். தண்ணீர் பிரச்சினை தீர கடவுள் அனுகிரஹிக்க வேண்டும்.

  தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்கிய சேலம் மாவட்டத்தின் பாபுவுக்கும், பாகிஸ்தானில் தண்ணீர் கஸ்டத்தை போக்க பேருதவியாக இருந்த தொழிலதிபராகிய ஜோஜிந்தர் சிங் சலாரியா அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

  மரங்களை பற்றியும் கவலையுறும் மனிதர்களுக்கும் வாழ்த்துகள்.

  எல்லா செய்திகளும் அருமை.

  இங்கு நேற்று இரவு மறுபடியும் போன நெட் தொடர்பு வரவில்லை. இப்போதுதான் வந்தது. அதனால் இன்றும் தாமதம். இப்போதுதான் வர முடிந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 44. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

  தங்களின் இந்த வார விமர்சனம் மிகவும் அருமையாக உள்ளது. தாமரையும், தமிழ் செல்வியும் (ஆகா.. பெயரே மிக அழகாக அமிர்தமாக உள்ளது.) மிகவும் அழகாக உரையாடியபடியே ஒரு வார பதிவையும் விமர்சித்த அழகை மிகவும் ரசித்தேன். தங்களால் மட்டுமே இப்படி தர முடியும். வார்த்தைகள் ஒவ்வொன்றும் முத்துச்சரம் கோர்த்தது மாதிரி முத்து முத்தாக அமைத்திருக்கிறீர்கள்.

  ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு வார்த்தை.. அந்த வார்த்தைக்கு ஒரு அர்த்தம், அது சம்பந்தபட்ட ஒரு பாடல் என ஒவ்வொரு நாளையும் நன்கு சிறப்புற செய்து விமர்சித்து உள்ளீர்கள். உதாரணம்.. மங்கலம், அவளே பலம், அவளே பலவீனம்.. இரண்டு இடங்களையும் மிகவும் ரசித்தேன். பாடல்களும் பொருத்தமாக தொகுத்திருக்கிறீர்கள். எந்த இடத்தை அதிகமாக பாராட்டவென தெரியவில்லை.. எனவே அனைத்திற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களன்பின் வருகையும்
   பாராடுரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 45. பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!