வெள்ளி, 14 ஜூன், 2019

வெள்ளி வீடியோ : கண்ணை மெல்ல மூடி சாய்ந்து கொள்ளும்போது மடியாக வேண்டுமே..1998இல் வெளிவந்த ஒரு சுவாரஸ்யமான திரைப்படம் ஹரிச்சந்திரா.காணாமல்போன கனவுகள் ராஜியின் அபிமான நாயகன் கார்த்திக் - அழகி மீனா நடிப்பில், செய்யார் ரவி இயக்கத்தில் அகோஷ் இசையில்!  அது யார் அகோஷ்?  ஆனந்த், கோபால் ராவ், ஷாலின் ஷர்மா என்கிற மூவர்.  இதில் இந்தப் பாடலை எழுதியவர் யாரோ!  இவர்கள் இசையில் ஒருஅருமையான எஸ்  பி பாலசுப்ரமணியம் பாடல்.  ஐந்து பாடல்கள் படத்தில் இடம்பெற்றிருந்தாலும் எனக்குஇந்தப் பாடல் மட்டுமே பிடிக்கும்.  கேட்டுப்பார்த்தால் உங்களுக்கும் பிடிக்கும்.  அப்படி ஒரு குரல் எஸ் பி பிக்கு.  இந்தப் பாடலில் குழைந்து வித்தை காட்டியிருக்கிறார்.பொய்யாய் சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை.  பொய்சொல்வதே பிடிக்காத நாயகி.  இவர்கள் இணைவது சுவாரஸ்யமான படம்.  நாயகனின் நண்பர்களுக்கு (விவேக், சின்னி ஜெயந்த்) கார்த்திக்கின் பிராடு எல்லாம் தெரியும்.  ஆனாலும் அவர் மீனாவைக் கவர இந்தப்பாடல் பாடும்போது அவர்களால் தாங்க முடியாத எக்ஸ்பிரஷன்களைக் காட்டுவார்கள்!காதலை நான் பாடவா,  பூவிலே தேன்தேடவா என்கிற வரிகளுக்கு இடையே வரும் மெல்லிய இசை...விசிலடிப்பது போல ஆரம்ப இசை.  ஃப்ளூட்?    பாடலின் இடைப்பட்ட இசைகள் இனிமை.

நாடோடிப் பாட்டுப்பாட தந்தனத் தந்தனத் தாளம் 
நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம் 
இருபது வயதில் வருவதுதானா காதல்? 
அறுபது வரையில் தொடர்வதுதானே காதல் 
சிரிக்கிறபோது சிரிப்பதுதானா காதல்? 
அழுகிறபோது ஆறுதல்தானே காதல் ஹேய்...
காதலை நான் பாடவா..   பூவிலே தேன் தேடவா..

கண்ணை மெல்ல மூடி சாய்ந்துகொள்ளும்போது மடியாகவேண்டுமே..
தட்டுத்தடுமாறி சோர்ந்து விழும்போது பிடியாகவேண்டுமே 
உன் உள்ளம் நான் கண்டு என் உள்ளம் நீ கண்டு 
உனக்காக நான் உண்டு என்று வாழும் காதல்தானே காதல் 
மலர் விட்டு மலராய் தாவுவதா நல்ல காதல்? 
ஒருத்திக்கு ஒருவன் என்பதுதானே காதல்? 

கங்கை நதி என்ன காவேரி என்ன எல்லாமே பெண்மையே 
நம்மை இங்கு நாளும் தாங்குகிற பூமி அதுகூட பெண்மையே 
நாடாளும் ஆணுக்கும் வீடாள பெண் வேண்டும் 
கடல் போன்ற வாழ்வினில் கலங்கரை விளக்கம்தானே பெண்மை?
பெண்ணிடம் மனதைக் கொடுத்து விட்டாலே போதும் 
பௌர்ணமிதானே வாழ்வில் எந்த நாளும்..

இந்த வார மொக்கைப்புதிர் :  இந்தக் காட்சியில் வருபவர்களில் யார் யார் வாரிசு கலைஞர்கள்?

96 கருத்துகள்:

 1. அனைவருக்கும் நல்வரவும் வணக்கமும், வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.

  பதிலளிநீக்கு
 2. இப்படி ஒரு படம் வந்திருக்குன்னே தெரியாது. பாட்டெல்லாம் எங்கே கேட்டிருக்கப் போறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாட்டு அப்படி இப்படி காதில் விழுந்திருக்க வாய்ப்பிருக்கிறதே...

   நீக்கு
 3. இன்னுமா யாரும் வரலை? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதென்னமோ நான் முதலில் வந்தால் அன்னிக்குனு பார்த்துத் தனியா விட்டுடறீங்க! ஏற்கெனவே புதன்கிழமை பேயை எல்லாம் மறுபடி பார்த்துட்டு வந்திருக்கேன். இங்கே வந்து தனியா இருன்னா! எப்பூடி?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே... நீங்களும் யாரும் வராத நாளாய்ப் பார்த்து முதலில் வர்றீங்க!!!! நேற்றும் ரொம்ப நேரம் துரை ஸார் தவிர யாரையும் காணோம்!

   நீக்கு
 4. எல்லோருக்குமே இந்தப்பாடல் பிடிக்கும் பலமுறை கேட்டதுண்டு ஜி

  //காணாமல்போன கனவுகள் ராஜியின் அபிமான நாயகன் கார்த்திக்//

  இதைப்படிக்கும்போது 'காணாமல்போன கார்த்திக்' என்று படிப்பது போன்ற பிரம்மை.

  சகோ ராஜி படித்தால் சண்டைக்கு வரக்கூடும் இந்த வரிகளை மட்டும் யாரும் படிக்கவேண்டாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கில்லர்ஜி...

   நீங்கள் சொல்லியிருப்பதும் சரிதானே? அவர் பீரியட் முடிந்து விட்டது மட்டுமல்ல, நாயகனாக அன்றி வில்லனாக ஓரிரு படங்களும் செய்து விட்டார் போலவே....

   கவலைப்படாதீங்க ராஜி இந்தப் பக்கம்லாம் அதிகம் வருவதில்லை! வந்தாலும் மற்ற கமெண்ட்ஸ் படிப்பதில்லை!!!

   நீக்கு
 5. கீதா ,ஸ்ரீராம், தேவகோட்டைஜி. அனைவருக்கும் அன்பு வணக்கம்.

  இந்த நாள் எல்லோருக்கும் இனிய நாளாகட்டும்.
  பாட்டு கேட்டிருக்கேன் மா.வெகு இனிமை. அதைப் போலவே உங்கள் ரசனையும் மிக இனிமை.
  கார்த்திக் அந்த நாள் ஹீரோ ஆச்சே.
  ராஜியின் வயதொத்தவர்களுக்கு இனிய கனவு நாயகன் தான்.
  அக்னி நட்சத்திரம், மௌனராகம் எல்லாம் எங்கள் வீட்டிலும் அலறிக் கொண்டிருக்கும்.
  பூப்பூக்கும் மாசம் தை மாசம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா... காலை வணக்கம்.

   கார்த்திக்கை ரசிக்கும் அதே அளவு இந்த இனிமையான பாடலையும் ரசிக்க முடிந்தது அம்மா.

   நீக்கு
 6. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 7. எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்.

  முந்தா நாள் மதியம் தொடங்கிய நெட் பிரச்சனை நேற்றெல்லாம் நெட் படுத்தல் ராத்திரி கணினியில் சரி பண்ணி வரும் போது கரன்ட் போயிடுச்சு. தூங்கும் முன் வரலை ஸோ தூங்கிட்டேன். அது கரன்ட் அடிக்கடி போவதால் கணினியில் பல கரொப்ட் ஆகிறது.

  பணிகள் வேறு. வந்தாச்சு

  ஸ்ரீராம் இந்தப் படம் பார்க்கலை. பாட்டும் கேட்டதில்லை.

  இப்பத்தான் கேட்கிறேன் முழுவதும் கேட்டுவிட்டு வரேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

   உங்கள் நெட் பிரச்னை சீக்கிரம் சரியாகப் பிரார்த்தனைகள். உங்கள் பின்னூட்டங்கள் இல்லாமல் எங்களுக்கும் அல்லவா நஷ்டமாகிறது!

   நீக்கு
  2. //உங்கள் நெட் பிரச்னை சீக்கிரம் சரியாகப் பிரார்த்தனைகள்//

   இதற்கு கூகுளாண்டவரிடம் பிரார்த்திப்பீர்களோ ஸ்ரீராம்ஜி ?

   நீக்கு
  3. ஹா... ஹா.. ஹா...

   யாரிடமாவது பிரார்த்தித்து நடந்தால் சரிதான்.

   நீக்கு
  4. எல்லோரும் சேர்ந்து கூட்டு பிரார்த்தனை வேண்டுமானாலும் நடத்தலாம். ஹாஹா

   நீக்கு
  5. ஆஹா ஆஹா ஆஹா எல்லாரும் சேர்ந்து பிரார்த்தனையா...சூப்பர்!! கில்லர்ஜி நெட் பிரச்சனை ஏர்டெல், என் கணினியில்...இங்கு கரன்ட் அடிக்கடிப் போவது இப்படி..கூகுள்.ஆண்டவர் ஒழுங்காத்தான் காட்சி கொடுக்கிறார்....ஆண்டவனை ஒழுங்கா பார்க்க விடாம இடையில் இடைத்தரகர்!!!! ஹிஹிஹி....

   கீதா

   நீக்கு
 8. பாடல் இனிமை. கேட்டு ரசித்தேன். பாடலில் வரும்
  இயற்கை காட்சிகள் நன்றாக இருக்கிறது .
  பட்ம் பார்க்கவில்லை.
  கார்த்திக் மகன் நன்றாக நடிக்கிறார் இப்போது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கார்த்திக் மகன் நன்றாக நடிக்கிறாரா? இது எனக்கு செய்தி. ரசித்ததற்கு நன்று அக்கா.

   நீக்கு
  2. ஹா ஹா ஹா கோமதிக்கா உங்களுக்கு ரொம்பவே நல்ல மனசு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
 9. கடைசி பாராவில் கலக்கிவிட்ட கவிஞனை யாரென்று தெரியவில்லை என்கிறீர்களே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா... ஹா... ஹா...'

   வாங்க ஏகாந்தன் ஸார்.. நீங்கள் சொன்னதும் இயல்பாய் மறுபடி போய் இரண்டாவது சரணத்தைப் படித்து விட்டு வந்தேன். நன்றாய்த்தான் இருக்கிறது.

   நீக்கு
 10. கார்த்திக் பார்த்ததுமே ராஜி தான் நினைவுக்கு வந்தாங்க

  கீதா

  பதிலளிநீக்கு
 11. கதிர் மீண்டு வந்து அதிகாலையாக
  புது நாளும் பூத்ததே... - வறள்
  பாலை தன்னில் இசையோடு சேர்ந்து
  சிறு முல்லை பூத்ததே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... அசத்தறீங்களே...

   பாலையில் பூத்த முல்லை எதுவோ?

   நீக்கு
  2. பாலையில் பூத்த முல்லை!...

   தெரியலே!...

   .....?..

   நல்லா உத்துப் பாருங்க!..

   ....!?...

   இன்னுமா புரியலே!... எங்க பிளாக் தான்!.. இன்றைய பதிவுதான்!...

   ஹாஹா...ஹாஹா... சிரித்துக் கொண்டே சாமி மலையேறி விடுகின்றது...

   நீக்கு
  3. புரிகிற மாதிரியும் இருக்கிறது...

   நீக்கு
 12. இந்தப் பாடலை இப்போது தான் கேட்கிறேன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. //இந்தப் பாடலை இப்போது தான் கேட்கிறேன்...//

   சரி...

   எப்படி இருந்தது என்று சொல்லவில்லையே...

   நீக்கு
  2. இருபது வருசத்துக்கு முன்னால இந்தப் பாடலுக்கு
   எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்ததோ தெரியவில்லை!..

   இன்றைக்கு வந்து கொண்டிருக்கும் (ஒரு சிலவற்றைத் தவிர்த்து)
   கர்ண கடூரங்களுக்கு மத்தியில் - இன்றைய பாடல் நன்றாகத்தான் இருக்கின்றது...

   நீக்கு
  3. இந்தப்பாடல் வந்த நாள் முதல் நான் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஹிட்தான். இசை அமைப்பாளர்கள் புதுசு!

   நீக்கு
 13. ஆனாலும் மீனாவை மறந்து போனதற்காக ....

  அங்கொரு பட்சி சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறது!....

  பதிலளிநீக்கு
 14. மற்ற விவரங்களுக்கு அப்புறம் வரேன் ஸ்ரீராம்.... மாலை வருகிறென். பல பணிகள்...

  கீதா

  பதிலளிநீக்கு
 15. தலைப்பைப் பார்த்ததும் மடிமீது தலைவைத்து....பழைய பாடல் நினைவிற்கு வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தப் பாடலுக்கும் இதற்கும் ஏணி வைத்தாலும் எட்டுமா?...

   நீக்கு
  2. வாங்க முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.... டிடி இன்னும் நிறைய பாடல்கள் சொல்லியிருக்கிறார்.

   நீக்கு
  3. // அந்தப் பாடலுக்கும் இதற்கும் ஏணி வைத்தாலும் எட்டுமா?...//

   தனித்தனி ஏணியாய் வைச்சுக்கலாமா!!!

   நீக்கு
 16. இனிய காலை வணக்கம்....

  படம் பற்றி கேள்விப்பட்டது உண்டு. பாடல் கேட்ட நினைவில்லை.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் வெங்கட்.

   படமும் சுவாரஸ்யம். பாடலும் சுவாரஸ்யம்.

   நீக்கு
 17. நானா.. நானா.. நானா.. நானா!..
  நானா.. நானா.. நானா.. நானா!..

  நனனானா நானான.. நனனானா நானான..
  நனனானா நானான .. நானான நானா.. நானா.. நானா..

  இந்தப் பாடலை நேயர் விருப்பமாக ஒலி பரப்புங்களேன் ஸ்ரீராம்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பண்ணினாய் போச்சு... ஆமாம் என்ன பாட்டு அது?

   நீக்கு
  2. பூக்களைத் தேடித் தேடி தேன் எடுக்கும் தேனி போல
   திரைப்படங்களைத் தேடித் தேடி இனிய பாடல்களை எடுத்துத் தரும்
   தங்களுக்கா - அந்த ஒலிக்குறிப்பின் பாடல் தெரியவில்லை!?...

   எல்லாம் தெரிந்திருந்தும் ஏதும் அறியாதவர் போல் ஏனிந்த நாடகம்?..
   (திருவிளையாடல் படத்தில் வரும் வசனம் இது!..)

   நீக்கு
  3. இருக்கட்டும்..
   யாராவது சொல்றாங்களா...ன்னு பார்ப்போம்!...

   நீக்கு
  4. @இசையமைப்பாளர் துரை செல்வராஜு சார்..... - உங்க சந்தத்துக்கு இந்தக் கவிஞன் பாடல் எழுதியிருக்கிறேன். சரியா வந்திருக்கா?

   நீயும் நானும் ஒண்ணா ஒண்ணா (ஆண்)
   சேரும் காலம் வருமா வருமா

   எந்நாளும் உன்னோட எப்போதும் உன்னோட (ஆண்)
   என்மடியில் தாலாட்டும் காலங்கள் வருமே அன்பே அன்பே (பெண்)

   நீக்கு
  5. யாரங்கே... அந்தப் பொற்கிழியை எடுத்து வாருங்கள்!...

   அதெல்லாம் வேணாம் மன்னா!...

   வேறன்ன வேண்டும்!...

   ஒரு குடம் நல்ல தண்ணீர்!...

   தண்ணீர்?.. நல்ல தண்ணீர்!.. அதுவும் ஒரு குடம்!?..

   மன்னர் மயக்கமாகிக் கீழே விழுகின்றார்...

   நீக்கு
  6. இந்த சந்தத்துக்கு இப்படியான வார்த்தைகள் தோன்றும் போதே
   அந்தப் பாடல் நினைவுக்கு வந்திருக்க வேண்டுமே!...

   நீக்கு
  7. >>> உங்க சந்தத்துக்கு.. <<<

   அந்தச் சந்தம் இளையராஜா அவர்களோடது...

   நீக்கு
  8. சந்தத்துக்கு நெல்லை கோர்த்தவரிகளா அவை? அதை வைத்துத் தேடினால் பாம்பு சட்டை என்கிற படப்பாடல் தெரிகிறது. புரிய மாட்டேன் என்கிறது.

   நீக்கு
  9. ஹா ஹா ஹா துரை அண்ணா பரிசுத் தொகை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கூடுதல் இல்லையோ.!!!!!!!!..சந்தம் பற்றி கேள்வி வந்துள்ளது பாருங்க ஸ்ரீராம் சொல்லிருக்கார். எனவே அரைக் குடம் தண்ணிதான் !!!!!! ஹிஹிஹி

   கீதா

   நீக்கு
  10. கீதாரங்கன், ஸ்ரீராம் - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... உண்மையா சொந்தமா கோர்த்த வரிகள்....ஒருத்தர் என்னடான்னா 'பாம்புச் சட்டை' என்கிறார். இன்னொருத்தர் அதுக்கு 'ஆமாம்' போடறார்....

   நீக்கு
 18. கார்த்திக் எனக்கும் மிகவும் பிடித்த நல்ல நடிகர். சாதாரணமாக நடிப்பது போல தோன்றும்,சட்டென்று ஒரு ஆழத்திற்கு இழுத்துச்சென்று விடுவார் ஷாருக்கானைப் போல. இன்னும் அதிக உயரத்திற்கு சென்றிருக்க வேண்டியவர்.
  ஹரிசந்திரா சமீபத்தில் கூட தொலைகாட்சியில் போட்டார்கள். ரசிக்க கூடிய படம். காமெடியில் பின்னியிருப்பார்.மீனா வெகு அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பானு அக்கா...

   ஆமாம்... மீனா வெகு அழகு!

   நீக்கு
  2. >>> ஆமாம்... மீனா வெகு அழகு!..<<<

   நானும் வழி மொழிகின்றேன்...

   ஆனால் - முன்னமே சொல்வதற்கு கொஞ்சம் பயம்!..

   நல்லவேளை கூட ஒரு கருத்து கிடைத்து விட்டது...

   நீக்கு
  3. கார்த்திக் நடிப்பை பற்றி கூறியிருந்ததற்கு நோ கமெண்ட்ஸ்,மீனா அழகு என்றதற்கு உடனே ஆமோதிப்பா? கர்ர்ர்ர்...

   நீக்கு
  4. பெண்மையைப் போற்றாத வாழ்வும் ஒரு வாழ்வா!?...

   நீக்கு
  5. அதானே? இந்தப் பாடலிலேயே இரண்டாவது சரணம் அதைத்தானே சொல்கிறது.

   நீக்கு
 19. இன்னைக்கு நேரமில்லை. அனைவருக்கும் வணக்கம்.

  மீனா ஜொள் ஜாஸ்தியா இருக்கு.

  காலை சமையல் (என் மனைவி, பெண் வந்திருக்காங்க) அவங்களுக்காக ரெடிபண்ணிட்டு, ஒரு வேலையா எல்லாரும் வெளிய கிளம்பறோம்.

  ஸ்ரீராம் - எப்போதும்போல் கேட்காத பாடலைப் போட்டிருக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /ஸ்ரீராம் - எப்போதும்போல் கேட்காத பாடலைப் போட்டிருக்கிறார்.//

   இந்தப் பாடல் கேட்டதில்லையா? என்ன ஆச்சர்யம்!

   நீக்கு
 20. வணக்கம் சகோதரரே

  நல்ல பாடல். இந்த படம் கேள்விப் பட்டிருக்கிறேன். தொலைக்காட்சியில் எப்போதோ பார்த்துள்ளேன். படத்தின் தலைப்பு கதைக்கு அம்சமான பொருத்தம். அப்போதெல்லாம் பாடல் வரிகளுடன் கவரவில்லை.ஏனெனில் தொலைக் காட்சியில் படங்கள் பார்க்கும் போது கூட அந்த பாடல்களின் இடையில்தான் வீட்டு வேலைகள் வந்து குறுக்கிடும். கவனங்கள் சிதறுவதில் பாடல்கள் பறி போய் விடும். எஸ்.பி பின் குரலில் புது இசையோடு இப்போதுதான் இந்தப்பாட்டை ரசித்துக் கேட்டேன். நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா... பாடலைக் கேட்டு ரசித்திருக்கிறீர்களா? படமும் சுவாரஸ்யமாகவே இருக்கும்.

   நீக்கு
 21. நாடோடிப் பாட்டுப்பாட தந்தனத் தந்தனத் தாளம்...
  நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம்...

  பாட்டு வரும்… பாட்டு வரும்…

  உன்னை பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்...
  அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
  அதை கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்...
  அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்...

  யாரது மீனாவை நினைக்கிறது...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //யாரது மீனாவை நினைக்கிறது...?//

   எல்லோருமே!

   நீக்கு
  2. ஹோ... அழகு ஒரு மேஜிக் டச் !
   ஹோ… ஆசை ஒரு காதல் ஸ்விட்ச் !
   ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
   ஆனால் அவள் போல் பார்த்ததில்லை ?!
   வா வா என்பதை விழியில் சொன்னாள்
   மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள் !

   அவளுக்கென்ன அழகிய முகம்...
   DDக்கென்ன இளகிய மனம்...
   நிலவுக்கென்ன இரவினில் வரும்
   இரவுக்கென்ன உறவுகள் தரும்
   உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்

   நீக்கு
 22. இருபது வயதில் வருவதுதானா காதல்?
  அறுபது வரையில் தொடர்வதுதானே காதல்
  சிரிக்கிறபோது சிரிப்பதுதானா காதல்?
  அழுகிறபோது ஆறுதல்தானே காதல் ஹேய்...

  -----

  இளமையிலே காதல் வரும்
  எது வரையில் கூட வரும்?

  முழுமை பெற்ற காதல் எல்லாம்
  முதுமை வரை ஓடி வரும்

  என்னருகே நீ இருந்தால்
  இயற்கை எல்லாம் சுழலுவதேன் ?

  உன்னருகே நான் இருந்தால்
  உலகமெல்லாம் ஆடுவதேன் ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் கூட,

   ஐம்பதிலும் ஆசை வரும்... ஆசையுடன் பாசம் வரும்..

   வயதோடு வந்தாலும் காதல்... அது வயதாகி வந்தாலும் காதல்
   உறவுக்கு சிலநூறு கருத்து ஆனால் உறவுக்கு பலநூறு கருத்து

   நீக்கு
 23. கண்ணை மெல்ல மூடி சாய்ந்துகொள்ளும்போது மடியாகவேண்டுமே..
  தட்டுத்தடுமாறி சோர்ந்து விழும்போது பிடியாகவேண்டுமே
  உன் உள்ளம் நான் கண்டு என் உள்ளம் நீ கண்டு
  உனக்காக நான் உண்டு என்று வாழும் காதல்தானே காதல்...

  ----

  கால சுமைதாங்கி போலே
  மார்பில் எனை தாங்கி
  வீழும் கண்ணீர் துடைப்பாய்
  அதில் என் விம்மல் தணியுமடி
  ஆலம் விழுதுகள் போல்
  உறவு ஆயிரம் வந்தும் என்ன ?
  ஆலம் விழுதுகள் போல்
  உறவு ஆயிரம் வந்தும் என்ன ?
  வேர் என நீ இருந்தாய்
  அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்

  உன் கண்ணில் நீர் வழிந்தால்...
  என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாப்பாடல்களுக்கும் ஒத்த பாடல் இருக்கிறதில்லை? ஸூப்பர்.

   நீக்கு
 24. நம்மை இங்கு நாளும் தாங்குகிற பூமி அதுகூட பெண்மையே
  நாடாளும் ஆணுக்கும் வீடாள பெண் வேண்டும்
  கடல் போன்ற வாழ்வினில் கலங்கரை விளக்கம்தானே பெண்மை?

  -----

  முடிவாக அல்ல, முதலாக...

  மூங்கில் காடுகளே
  வண்டு முனகும் பாடல்களே...
  தூர சிகரங்களில் தண்ணீர்
  துவைக்கும் அருவிகளே...

  சேற்று தண்ணீரில்
  மலரும் சிவப்பு தாமரையில்
  சேறும் மணப்பதில்லை பூவின்
  ஜீவன் மணக்கிறது !

  வேரை அறுத்தாலும்
  மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை
  அறுத்த நதியின் மேல் மரங்கள்
  ஆனந்த பூசொறியும்...

  தாமரை பூவாய் மாறேனோ
  ஜென்ம சாபல் எங்கே காணேனோ
  மரமாய் நானும் மாறேனோ
  என் மனித பிறவியில்
  உய்யேனோ ஓ ஓ...

  வெயிலோ மழையோ
  பருகும் வண்ணம் வெள்ளை
  பனி துளி ஆவேனோ ?

  ஆவோமா...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டிடி அசத்துகிறார்.வாழ்த்துகள் தனபாலன்

   நீக்கு
  2. தனபாலன் பகிர்ந்த பாடல்கள் அனைத்தும் அருமை.
   கடைசி பாடல் மட்டும் கேட்ட நினைவு இல்லை.

   நீக்கு
 25. ஸ்ரீராம் பாட்டு கேட்க கேட்க நல்லாருக்கு. ஆரம்ப விசில் அப்புறம் இடையில் வரும் ஃப்ளூட் ரொம்ப நல்லாருக்கு....பேஷ் பேஷ் தேஷ் போல இருக்கு....இன்னும் கொஞ்சம் கேட்டுட்டு வந்து சொல்றேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 26. அழகான வரிகள் ஸ்ரீராம். ரசித்தேன். பழனிபாரதியா இருக்குமோ...

  இசையமைப்பாளர் (கள்) பற்றியும் இப்பத்தான் தெரிஞ்சுகிட்டேன் ஸ்ரீராம்.

  கீதா

  பதிலளிநீக்கு
 27. நல்ல பாட்டு! சாய்ஸ் நன்றாக இருக்கிறது ஸ்ரீராம்! அழகி மீனான்னு சொன்னதுல கண் நிறையவே வேர்த்துடுச்சு!

  பதிலளிநீக்கு
 28. மீனா.. மீனா.. என்று ஏற்றி ஏற்றி ஒருவர் இருவர் பலரும் புகழ்வர்
  ’கானா’வும் உண்டு இங்கு வாழ்நாளெல்லாம் உண்டு மகிழ்தற்கே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போனாப்போகுது விடுங்க ஏகாந்தன் ஸார்...
   மானாவாரியாய் எல்லோரும் பேசட்டும்
   மீனாவின் புகழை!

   நீக்கு
 29. பாடல் முதல் முறையாகக் கேட்கிறேன் ஸ்ரீராம்ஜி. படம் பற்றியும் இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன்

  பாடல் நன்றாக இருக்கிறது இனிமையாக ..

  துளசிதரன்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!