திங்கள், 3 ஜூன், 2019

"திங்க"க்கிழமை : கத்திரிக்காய்ப் பொரிச்ச கூட்டு - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி

கத்திரிக்காய்ப் பொரிச்ச கூட்டு 

எல்லோரும் பச்சடி, மோர் ரசம்னு போடும்போதெல்லாம் அட, இதெல்லாம் கூடப் போடலாமானு நினைச்சுப்பேன். ஆனாலும் பல சமையல் குறிப்புக்கள் படங்கள் சரியில்லை என்பதால் பகிர்வதில்லை. எ.பி.யில் படம் எடுப்பதில் மன்னாதி மன்னிகள் / மன்னர்கள் இருக்காங்க! எழுதுவதில் கேட்கவே வேண்டாம். இதுக்கு நடுவில் நம்மளோட மொக்கை எடுபடணுமே! யோசனை தான். 

ஆனால் பாருங்க மார்ச் மாசம் வந்திருந்த என் தம்பி மனைவி என்னிடம், "அக்கா, அம்மா பண்ணுகிற மாதிரிப் பொரிச்ச கூட்டு எப்படிப் பண்ணணும்?" என்று கேட்டாள். பண்ணியே காட்டிடலாம் என நினைத்து முதல் நாள் கத்திரிக்காய்க் கறிக்கு நறுக்கிய கத்திரிக்காய்த் துண்டங்கள் சமைக்காமல் கிடந்ததை வைத்துச் செய்தேன். எல்லோரும் சாப்பிட்டாங்க தான்! ஆனால் அன்னிக்கு அது சரியா அமையலைனு என்னோட மனசாட்சி ஏகப்பட்ட கூவல்! அதுமட்டுமா? அன்னிக்குக் குழம்பும் சரியா அமையலை! ஆனாலும் யாரும் எதுவும் சொல்லலை, வழக்கம் போல் நம்ம நக்கீரரைத் தவிர்த்து! 

அவர் குழம்பைக் கரண்டியில் எடுக்கையிலேயே "சரியா வரலையே! ஏன் கல்சட்டியில் பண்ணலை!" என ஆட்சேபக் குரல் எழுப்பிட்டார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என மனசுக்குள் சொல்லிக் கொண்டேன். அதோடு அன்னிக்குத் தான் முதல் முதலாக தேஜஸ் எக்ஸ்பிரஸ் பயணம் வேறே இருந்ததால் ஒரே மன இறுக்கம். ரயிலில் ஏறும் வரை இருந்தது. அப்புறம் ஒரு நாள் பேச்சு வாக்கில் அன்னிக்குப் பொரிச்ச கூட்டே சரியா வரலை! பாவம்! எல்லோரும் வாயை மூடிக் கொண்டு சாப்பிட்டாங்க!" என்றேன்.

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இப்போ க்ர்ரினது அவர். அன்னிக்கே சொன்னேனே என்றார். என்ன செய்ய முடியும் இனிமே? திரும்ப வந்தால் நல்லாப் பண்ணிப் போட்டுக்கலாம். ஆனால் இந்தப் பொரிச்ச கூட்டு மட்டும் அவங்க இரண்டு பேருக்கும் அதாங்க என் மன்னி, என் தம்பி மனைவி இரண்டு பேருக்கும் சரியாவே வரதில்லையாம். அதுக்கப்புறமா 2,3 முறை பொரிச்ச கூட்டுப் பண்ணினப்போ எல்லாம் படம் எடுக்கவோ எழுதவோ மறந்துட்டேன்.முந்தாநாள் கத்திரிக்காய்ப் பொரிச்ச கூட்டு மறுபடி பண்ண நறுக்கும்போதே காய் நல்ல காய் எனத் தெரிந்தது. சரி, இன்னிக்கு எப்படியானும் படம் எடுத்து எ.பி.க்கு அனுப்பிடணும்னு முடிவு செய்தேன். அப்போவும் நறுக்கும்போதெல்லாம் படம் எடுக்கலை. 

நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்:

நல்ல கத்திரிக்காயாக அரைக்கிலோ/ நான் நாலு கத்திரிக்காயில் பண்ணினேன்.

தேங்காய் ஒரு  சின்ன மூடி/தேங்காய்த் துருவல் மட்டும் ஒரு டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு கொஞ்சம் அல்லது ஒரு டேபிள் ஸ்பூன் பச்சரிசியை ஊற வைக்கவும். அரிசி மாவு ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டேன். 

சாம்பார்ப்பொடி தேவையானால் ஒரு டீஸ்பூன்,மஞ்சள் பொடி தேவையானல் அரை டீஸ்பூன்.  சாம்பார்ப் பொடி சும்மா நிறத்துக்காகக் கொஞ்சம் போல் போட்டேன்.

உப்பு தேவையான அளவு

தாளிக்க தே.எண்ணெய் கடுகு, உளுத்தம்பருப்பு, சின்னதான் மி.வத்தல் கருகப்பிலை, பெருங்காயத் தூள்.

கத்திரிக்காய்களைச் சின்னத் துண்டங்களாக நறுக்கிக் கொண்டு கடாயில் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். பின்னர் தேவையான அளவுக்கு ஜலம் விட்டு வேக வைக்கவும். எந்தக் காயையும் வதக்கிய பின்னர் வேக வைத்தால் சீக்கிரம் வேகும். அம்மாவோட முறை!


கடாயில் வேகும் கத்திரிக்காய்கள். தேவையானால் மஞ்சள் பொடி அரை டீஸ்பூனும் சாம்பார்ப் பொடி அரை டீஸ்பூனும் சேர்க்கவும். அரைக்கிலோ கத்திரிக்காய்க்கு ஒரு டீஸ்பூன் சாம்பார்ப் பொடி தேவை. கத்திரிக்காய் வெந்ததும் உப்புச் சேர்க்கவும். அடுப்பைத் தணித்து வைத்து வேக வைக்கவும்/


கத்திரிக்காய் குழைய வெந்ததும் தேங்காய்த் துருவலோடு ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு (அரைக்கிலோ கத்திரிக்காய் எனில்) நான் இங்கே சேர்த்தது ஒரு டீஸ்பூன் தான். சேர்த்து அரைக்கவும். நன்கு நைசாக அரைக்கலாம். அல்லது அரிசி ஊற வைத்திருந்தால் தேங்காய்த் துருவலோடு சேர்த்து அரைக்கலாம். அரைத்த விழுதை வெந்து கொண்டிருக்கும் கத்திரிக்காயில் கலக்கவும்.அரைத்த விழுது.கொஞ்சம் தளரவே இருக்கலாம். பொரிச்ச கூட்டு வகைகளே கொஞ்சம் தளர இருந்தால்நன்றாக இருக்கும். ரொம்பக் கெட்டியாகச் சேர்ந்தாற்போல் இருந்தால் அவ்வளவு சுவை இருப்பதில்லை.


கூட்டில் அரைத்த விழுதைச் சேர்த்தாயிற்று. நான் நிறம் வேணும் என்பதற்காகக் கொஞ்சம் சாம்பார்ப் பொடியும், மஞ்சள் பொடி கால் டீஸ்பூனும் சேர்த்தேன். எதுவும் சேர்க்காமலும் பண்ணலாம். வெள்ளையாக வரும்.  அரைத்த விழுதைப் போட்டு ரொம்பக் கொதிக்க விட வேண்டாம். ஓர் கொதி வந்தால் போதும்.


கீழே இறக்கிப் பாத்திரத்தில் மாற்றித் தாளித்த பின்னர் கூட்டு. தாளிப்பில் கடுகு, உபருப்பு, பெருங்காயப் பொடி, கருகப்பிலை, சின்னத் துண்டு மி.வத்தல்.  பொரிச்ச கூட்டு என்றால் வெறும் தேங்காய் மட்டுமே போட வேண்டும். தேவையானால் தாளிதத்தில் மி.வத்தல் போட்டுக்கலாம். இம்மாதிரிப் பொரிச்ச கூட்டுகள் அவரைக்காய், கொத்தவரைக்காய், சௌசௌ, புடலை, பூஷணி, வாழைக்காய் போன்ற எல்லாவற்றிலும் பண்ணலாம். பீன்ஸிலும் நான் பண்ணுவேன். என்றாலும் கத்திரிக்காய், கொத்தவரைக்காய் போல் மற்றவற்றில் ருசி இருப்பது இல்லை. இதையே தேங்காய் அரைத்து விடாமல் கூட்டுக் கொதிக்கையில் மாவு மட்டும் கரைத்து விட்டு விட்டுத் தாளித்ததில் கடுகு, உபருப்புப் போட்டதும் கருகப்பிலை, பெருங்காயம் போட்டுப் பொரித்துக் கொண்டு தேங்காயைப் போட்டு வறுத்துச் சேர்க்கலாம். இதுவும் ஒரு வகை பொரித்த கூட்டு. பொரித்த குழம்பு வேறே, இது வேறே! 

126 கருத்துகள்:

 1. அனைவருக்கும் நல்வரவும் வணக்கமும் வாழ்த்துகளும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் இன்று யார் சாப்பாடுனு பார்த்து திங்க ஓடி வந்தா எனக்கு முன்னே கீதாக்கா....ஹாஅ ஹா ஹாஹ் ஆ

   கீதா

   நீக்கு
  2. வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள் கீதா அக்கா.

   நீக்கு
  3. அனைவருக்கும் காலை வணக்கம்.

   கீசா மேடம் - கத்தரி பொரிச்ச கூட்டு நல்லா வந்திருக்கு. இன்னைக்கு முயற்சிக்கறேன்.

   அமாவாசை... மெதுவாக வருகிறேன்.

   நீக்கு
  4. வாங்க தி/கீதா, வாட்சப்பிலே உங்களுக்குக் கொடுத்த பதில் வேறே யாருக்கோ போயிருக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)

   நீக்கு
  5. நெல்லைத் தமிழரே, கல்யாணத்துக்கு முன்னாடி அம்மா இந்தக் கூட்டு பண்ணும்போதெல்லாம் ரகளை பண்ணுவேன். புளிவிட்ட கூட்டுத் தான் பண்ணணும்னு! ஒரே அடம்! இப்போ இந்தக் கூட்டை அடிக்கடி பண்ணறேன். புளியில்லாமல், பருப்பில்லாமல் பண்ணுவோம் இந்தக் கூட்டை!

   நீக்கு
  6. கீதாக்கா மாமியார் வீட்டுல எதுக்கெடுத்தாலும் பாசிப் பருப்பு சேர்த்துத்தான் கூட்டு பண்ணுவாங்க....

   கீதா

   நீக்கு
  7. தஞ்சை, கும்பகோணம் பக்கம் பாசிப்பருப்பு விளைச்சல் அதிகம்.

   நீக்கு
  8. @கீதா சாம்பசிவம் மேடம் - //இப்போ இந்தக் கூட்டை அடிக்கடி பண்ணறேன்.// - மாமா ரொம்ப சாது, மிக நல்லவர் என்பதற்கு இதற்கு மேல் என்ன ப்ரூஃப் தேவை? (//ரகளை பண்ணுவேன்.//) ஹாஹா

   நீக்கு
 2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், மற்றும் எல்லோருக்கும்

  அட இன்று கீதாக்காவின் கை வண்ணமாஅ!!

  வரேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 3. இன்னிக்கு அமாவாசை என்பதால் அதிக நேரம் உட்கார முடியாது. ஆகவே இப்படி ஒரு பார்வை பார்த்துட்டுக் கிளம்ப வேண்டியது தான். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் சமையல் முடிச்சாச்சு!!!!

   கீதா

   நீக்கு
  2. good.ஆனால் நம்ம வீட்டிலே இப்படி முன்னாலேயே சமைச்சு வைக்க முடியாது.

   நீக்கு
  3. ஆமாம் அக்கா...இங்கு 7 லிருந்து 7.30க்குள்ளப் புறப்பட்டுவிடுவாரே அதனால்தான்...லஞ்ச் கட்டிக் கொடுக்கணும்....டிஃபனும்....அதனால் காலையில் 4. 4.30க்குள்ள எழுந்தா சரியா இருக்கும்..சிம்பிள் சமையலாத்தான் இருக்கும்...என்றாலும்...

   கீதா

   நீக்கு
  4. அதனால்தான் நானும் லேட்!

   நீக்கு
  5. சமைச்சுச் சாப்பிட்டுட்டுக் கொஞ்சம் நேரம் போய்ப் படுத்துட்டேன். அக்வா கார்ட் க்ளீனிங்கிற்கு ஆள் வந்திருக்கார். அது சுமார் பத்தரை மணியிலிருந்து நடக்குது! மாற்றி மாற்றி எதாவது ஒன்று.

   நீக்கு
 4. படங்கள் நன்றாக வந்துருக்கு தேங்காய்த் துறுவல் இவ்வளவு சேர்க்கணுமா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா கில்லர்ஜி, கொஞ்சம் தான். மிக்சியில் போட்டிருப்பதால் அதிகம் போல் தெரியுது. ஒரு டேபிள் ஸ்பூன் தான்.

   நீக்கு
  2. ஒரு தேங்காயை ஒரு வாரத்துக்கு வைச்சுக்கும் ரகம் நான்! :))))) என் மாமியாரெல்லாம் பார்த்துட்டுச் சிரிப்பாங்க!

   நீக்கு
  3. ஒரு தேங்காயை ஒரு வாரத்துக்கு வைச்சுக்கும் ரகம் நான்! :))))) என் மாமியாரெல்லாம் பார்த்துட்டு//

   ஹிஹிஹி இதுக்கு ஜஸ்ட் ஆப்போசிட் போட்டுக்கோங்க நான் தேங்காய் யூஸ் செய்வது பார்த்து.............................................!!!!!!!!!!!!!!!!!!

   பிறந்த வீட்டுல கேரளத்துப் பழக்கம். தேங்காய் இல்லாமல் சமையல் என்பது அபூர்வம். புகுந்த வீட்டில் புகுந்த போது ஒரு மாசம் கூட தேங்காயே இல்லாம சமைப்பதைப் பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது. அப்புறம் அதுவும் பழகிவிட்டது. சமாளிக்கவும் தெரிந்துகொண்டுவிட்டேன்...அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

   கீதா

   நீக்கு
  4. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

   தாங்களும், தங்கள் கணினியும் நலமா? ஹா ஹா ஹா. டிட்டோ.. என் கதையும் இப்படித்தான். தங்களுடையதும், எனனோடதும் ஒத்துப் போகிறது.

   அம்மா வீட்டில் எதிலும், எங்கும் நிறைய தேங்காய். புகுந்த வீட்டுக்கு வந்ததும், தேங்காய் பத்தைகள் வாங்கி ஒன்றிரண்டாக எண்ணிப் பார்த்து, சமயத்தில் அதுவுமில்லாமல், நானும் எப்படியோ சமாளிக்க கற்றுக் கொண்டேன். அப்படியும் இப்போது நான் தேங்காய் அதிகம் உபயோகிப்பதாய், என் வாரிசுகளிமிருந்து எனக்கு குற்றச்சாட்டு பத்திரிக்கைகள் வரும்.ஹா ஹா ஹா.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 5. கீதாக்கா இதே போலத்தான் செய்திருக்கேன். ஆனால் பொரிச்ச கூட்டு என்று சொல்லியதில்லை. ஹிஹிஹி..சும்மா கத்தரிக்காய் கூட்டு. தேங்காய் அரைத்து விட்டாலும் கொஞ்சம் கடைசியில் வறுத்துப் போடுவேன். அரைத்து விடலை என்றால் நீங்க சொல்லிருப்பது போல வறுத்துப் போட்டுவிடுவேன்.

  ஒரு முறை அரைக்க கரன்ட் இல்லாமல் போய் என்ன செய்ய தேங்காயை? கூட்டு வேறு எல்லாம் வெந்து ரெடியாக இருக்கு சாப்பிடணுமே எல்லாரும் என்று அப்புறம் வறுத்துப் போட்டுவிட்டேன். நல்லாருந்தது.

  ஸோ சில சமயம் அப்படியே கூடச் செய்வதுண்டு. சாம்பார் பொடி..அல்லது அதுக்கான பொருளை கொஞ்சம் வறுத்துப் பொடி செய்து போட்டுவிடுவேன்...ஆனால் இது பொரிச்ச கூட்டுனு சொன்னதில்லை ...

  கீதா

  பதிலளிநீக்கு
 6. பதில்கள்
  1. நன்றி.வாங்க துரை செல்வராஜூ ஸார்...

   நீக்கு
  2. நான் கொத்தவரைக்காய்க் கூட்டிற்கு அதிகம் அரைத்துவிடாமல் தேங்காய்த் துருவலைத் தாளிப்பில் வறுத்துச் சேர்ப்பேன். வறுத்த பொடி மட்டும் இல்லை, பொடியே இல்லாமல் கூடப் பண்ணிடுவேன். தாளிப்பில் இருக்கும் மி.வத்தல் தான் காரத்துக்கு!

   நீக்கு
  3. ஆமாம் அக்கா பொடி இல்லைனாலும் சரி, இருந்தலும் கூட பொடியில்லாமல் கொஞ்சமே கொஞ்சம் தேங்காய், பச்சரிசி ஒரு மி வ அரைத்துச் சேர்த்துட்டு தாளிப்பில் தேங்காய் வறுத்துச் சேர்ப்பதுண்டு. புடலங்காய், கொத்தவரை, பங்களூர் கத்தரிக்காயும் இப்படிச் செய்வதுண்டு. அப்புறம் இதனை தேங்காய் எண்ணெயில் செய்யறதுண்டு. கொஞ்சம் வாசனையாக இருக்கும் என்று.

   கீதா

   நீக்கு
  4. பொரிச்ச கூட்டுக்கு வறுத்து எல்லாம் அரைக்க மாட்டோம். வறுத்து அரைத்தால் அதன் பெயரே வேறே!

   நீக்கு
  5. நல்வரவு துரை, தாமதமாய்!

   நீக்கு
 7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

  பதிலளிநீக்கு
 8. பாட்டி புளியிட்ட, பிளியில்லா பொ கூ, பொ கு நு செய்வார்.

  கீதா

  பதிலளிநீக்கு
 9. ஆகா...
  கத்தரிக்காய் கூட்டு....

  இன்னைக்கு அமர்க்களமாக இருக்கும்..ந்னு நினைக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் ரொம்ப...................ப் பிடிக்கும்!​

   நீக்கு
  2. துரை அண்ணா அண்ட் ஸ்ரீராம் + 1

   கீதா

   நீக்கு
  3. அமர்க்களமோ இல்லையோ, போணியானால் சரி! :))))

   நீக்கு
  4. கீதாக்கா போணியாறதுக்கு என்ன குறைச்சல்?!!!! நன்றாகவே போணியாகுது பாருங்க!!

   இதிலேயே கொஞ்சம் புளியும் விட்டுச் செய்வேன்கா அதுவும் நல்லாருக்கும்

   கீதா

   நீக்கு
 10. கீதாக்கா என்னக்கா மொக்கை ந்றீங்க....உங்களை விடவா நாங்கல்லாம் சும்மா ஜூஜுபி!!

  நீங்க என்ன குறிப்பு வேணா போடுங்க இங்க!!

  மோர் ரசம், பச்சடி// ஹா ஹா ஹாஹ் ஆ ஹா ஆ...அக்கா ஸ்ரீராம் தான் சொல்லிருக்காரே தயிர் சாதம் கூடப் போடலாம் வித்தியாசமாக என்று....

  இன்னொன்னு பலருக்கும் இப்படியான ரெசிப்பிஸ் தெரிய வாய்ப்பே இல்லை கீதாக்கா...அதனால நீங்க போட்டு வைங்க இணையத்துல எப்ப வேணா யார் வேணா கத்துக்கலாமே. நீங்க போட்டுட்டும் இருக்கீங்களே! அது ரொம்பப் பயனுள்ளது கீதாக்கா.

  கீதாக்கா படங்கள் எல்லாம் நல்லாத்தான் வந்திருக்கு. நான் எடுக்கும் படங்களும் அப்படித்தான். அத்தனை சிறப்பாக இருக்காது அக்கா. அது நம் கவனம் சமையலில் இருப்பதால்...டக்குனு எடுக்க வராது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஸ்ரீராம் தான் சொல்லிருக்காரே தயிர் சாதம் கூடப் போடலாம் வித்தியாசமாக என்று....//

   ஆமாம்..... ஆமாம்...

   நீக்கு
  2. படங்களை இப்போல்லாம் டவுன்லோட் பண்ணிடறேன். அதிலே கொஞ்சம் பிரச்னை வரதில்லை. இல்லைனா நான் கணினியில் ஏத்திட்டு அதிலிருந்து போடும்போது கொஞ்சம் சரியா வரதில்லை.

   நீக்கு
 11. கீசா மேடம்... மோர்ரசம், பச்சடி என்றெல்லாம் ஈஸியாச் சொல்லிட்டீங்க? முதல் முதல்ல செய்தபோது பருப்பு குழம்பு நல்லாவே வரலை. ஆதி வெங்கட் செய்முறை பார்த்துப் பண்ணின கொத்தமல்லி சாதம் நல்லா வரலை. எதுவுமே பழகப் பழகதான் வருது, எவ்வளவு சிறிய ரெசிப்பி என்றாலும்.

  நான் ஊறுகாய் விளம்பரம் பார்த்து அதே மாதிரி தயிர் சாதம் என் மனைவியைப் பண்ணச் சொன்னேன்.

  அதிருக்கட்டும்.. இன்று இனிப்பு உண்டா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை என்ன இன்று இனிப்பு உண்டான்ன்னு? யாருக்குப் பிறந்த நாள்? என்ன டே இன்று?!!!!

   உங்களுக்கு இனிப்பு வேணும்னா சொல்லணும்...! ஹா ஹா ஹாஹ் ஆ

   கீதா

   நீக்கு
  2. அதானே நெல்லை எல்லாம் பழகப் பழகத்தானே வரும்...அது வேற ஒண்ணுமில்ல கீதாக்காவுக்கு அந்த ரெசிப்பிஸ் எல்லாம் சும்மா ஜுஜூபி! அதான்!! நமக்கெல்லாம் அதுவே ஹிஹிஹிஹி...

   கீதா

   நீக்கு
  3. அமாவாசைக்குத்தான் இனிப்பு உண்டான்னு கேட்டேன் கீதா ரங்கன்.

   வெளிநாட்டுல இருக்கும்போது சங்கீதா ஹோட்டல்ல, அமாவாசை அன்று பாயசமும் ஒரு வடையும் லஞ்சுல தருவாங்க.

   நீக்கு
  4. உங்க விஷயம் வேறே, என்னோட விஷயம் வேறே நெ.த.நான் சுமார் 12 வயதிலிருந்து சமைக்கிறேன்.அமாவாசைக்குப் பாயசம் வைப்போம் தான். இப்போல்லாம் பாயசம் வைப்பதில்லை.

   நீக்கு
  5. //அமாவாசைக்குப் பாயசம் வைப்போம் தான். இப்போல்லாம் பாயசம் வைப்பதில்லை.//

   இங்கு உண்டு!

   நீக்கு
  6. நெல்லை பாருங்க உங்களுக்கு ஸ்வீட்டு வந்தாச்சு!! ஸ்ரீராம் உபயம்! என்ன பாயாசம்னு எல்லாம் கேட்கக் கூடாது ஸ்வீட்டுனு கொடுத்தா வாங்கி அனுபவிக்கணும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அமாவாசைக்கு வெளிநாட்டுல சங்கீதாவுல ஸ்வீட் வடையா!! அங்க லஞ்சுல தினமுமே ஸ்வீட் உண்டெ நெல்லை பொதுவா எல்லா ஹோல்லட்டல்யும் வெந்த ரவை சக்கரை பால் கலந்து தருவாங்களே அதுதானே ஸ்வீட்டுன்றீங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
  7. தி/கீதா! பல ஓட்டல்களிலும் ஜவ்வரிசிக் கஞ்சியைப் பாயசம் என்னும் பெயரில் கொடுக்கிறாங்க! நீங்க என்னன்னா ரவைனு சொல்றீங்க!

   நீக்கு
  8. தி.கீதா ரங்கன் - சங்கீதாவுல அருமையான செஃப் இருந்தார். அவர் பண்ணறது, நாங்க பண்ணுவது போலவே இருக்கும். ரசம், குழம்புலாம் அட்டஹாசம். அப்புறம் அவருக்கு நம்ம அரசு வேலை தமிழகத்துல கிடைச்சு அங்கிருந்து வந்துட்டார். அதற்கு அப்புறம் வந்த செஃப்லாம், எனக்கு சுத்தமாப் பிடிக்கலை. பெரும்பாலும் பருப்பு பாயசம்தான். அபூர்வமா சேமியா பாயசம்.

   புது செஃப்கள் வர ஆரம்பித்தப்போ மேனேஜ்மெண்டும் மாறிவிட்டது. அதுனால அவங்க சில சமயங்கள்ல அமாவாசையை மறந்துடுவாங்க.

   இந்த சரவணபவன், மிச்சமிருக்கும் கேசரியைத் தள்ளிவிடுவாங்க. (இதைத்தான் நிறைய ஹோட்டல்கள் நம்ம ஊர்ல செய்யறாங்க). இல்லைனா, சேமியா பாயசம்(னு நினைத்து வேகவைத்த சேமியாவை மில்க் மெய்டில் கலக்கி நம்ம தலைல கட்டுவாங்க. இல்லை இருக்கவே இருக்கு ஜவ்வரிசி கஞ்சி)

   நீக்கு
  9. //ஸ்ரீராம் உபயம்!// @தில்லையகத்து கீதா ரங்கன் - அவர் நமக்குத் தருவதுபோல எழுதலை. அவங்க வீட்டுல இன்னைக்கு பாயசம் என்று செய்திதான் சொல்லியிருக்கிறார். தரணும்னு எண்ணம் இருந்தால், இன்ன பாயசம், நன்றாக இருந்தது இல்லை என்றெல்லாம் சொல்லியிருப்பாரே..

   நீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  ஆஹா.! இன்று சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவா? சுவையாகத்தான் இருக்கும். படித்து விட்டு வருகிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா! படிச்சுட்டுச் சொல்லுங்க!

   நீக்கு
  2. கமலா அக்கா...

   நீங்கள் தரவேண்டிய ரெசிப்பிக்கள் நிறைய சேர்ந்துகொண்டே போகின்றன. சீக்கிரம் அனுப்புங்கள்.

   அதற்கு முன் ஒரு கதை அனுப்புங்கள். ரொம்...........ப நாளாச்சு!

   நீக்கு
  3. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி.

   வந்தவர்களை வரவேற்ற தங்களது பாங்கிற்கு நன்றி. நானும் அமாவாசை பிஸியில்தான் எட்டிப்பார்க்க ஒருதரம், படித்துணர்ந்து சுவைக்க ஒருதரமென தனிதனியாக ஒடி ஒடி வந்தேன். சுவையான கத்திரிக்காய் ரெசிபியை தந்தமைக்கு நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

   /நீங்கள் தரவேண்டிய ரெசிப்பிக்கள் நிறைய சேர்ந்துகொண்டே போகின்றன. சீக்கிரம் அனுப்புங்கள்.

   அதற்கு முன் ஒரு கதை அனுப்புங்கள். ரொம்...........ப நாளாச்சு!/

   உண்மைதான்.! சமைக்கும் போது, நேரம் அமையும் பட்சத்தில் (சாதரணமான சமையல்தான். அதுவும் கைபேசியில்தான் படங்கள் எடுத்திருக்கிறேன்.) அவசரமாக சில ரெசிபிகளை படமெடுத்து வைப்பேன். வைத்திருக்கிறேன்.எ.பிக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் அப்போதெல்லாம் கண்டிப்பாக வரும். அதை கோர்வையாக அமைத்து எழுததான் நேரம் அமைய மாட்டேன் என்கிறது. கண்டிப்பாக படங்களை இணைத்து,எழுதி அமைத்து அனுப்புகிறேன்.

   என் மீது நம்பிக்கை வைத்து (ரெசிபி களையும், கதைகளையும்) தாங்கள் அனுப்பச் சொல்லி கூறுவதே எனக்குள் ஒரு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தருகிறது. மகிழ்வையும் அளிக்கிறது. அதற்கே நான் மிகவும் நன்றி செலுத்திக் கொள்கிறேன்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 13. என்னது நான்கு பேருக்கு தேவையான அளவு என்று சொல்லி செஞ்சது ஒருத்தருக்கே பத்தாது போல இருக்கே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா, தமிழரே, எங்க இரண்டு பேருக்குச் செய்தது தானே! () அடைப்புக்குறிக்குள் அளவு சொல்லும்போது சொல்லி இருக்கேனே பாருங்க! :)))))

   நீக்கு
  2. மதுரை...

   அது சாப்பிட அல்ல... பார்த்து ரசிக்க! வேண்டுமானால் அப்புறம் ஸ்பூனில் டேஸ்ட் பார்க்கலாம்!!

   நீக்கு
 14. வணக்கம் சகோதரி

  கத்திரிக்காய் கூட்டு படங்களுடன் நன்றாக வந்துள்ளது. செய்முறைகளும். விளக்கங்களும் தங்கள் பாணியில் சூப்பர்.

  நானும் இப்படித்தான் செய்வேன். சாம்பார் படிக்கு பதிலாக, வெந்த கத்திரிக்காயுடன் மி. வெத்தலை தேங்காயோடு சேர்த்து அரைத்து விடுவேன். பொ. கூட்டு என்றால், மி. வத்தலுடன் கொஞ்சம் கொத்தமல்லி விதை, ஜீரகம், உ. ப வறுத்து, தேங்காயையும் வறுத்து அரைத்துச் சேர்ப்பேன். அரிசி மாவு கடைசியில் நீர்த்துப் போகாமல் இருப்பதற்காக ஒரு டீஸ்பூன் சேர்ப்பேன். தங்கள் செய்முறை நன்றாக உள்ளது. அடுத்த தடவை தங்கள் பக்குவபடி செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிவத்தலைத் தேங்காயோடு அரைத்து விட்டாலோ, அல்லது நீங்க சொல்லி இருக்கிறாப்போல் சாமான்கள் வறுத்து அரைத்தாலோ அதைப் பொரிச்ச கூட்டுனு சொல்ல மாட்டோம். வறுத்து அரைத்தால் அது பிட்லை தான்! நான் எப்போவும் அரிசி மாவு சேர்ப்பதும் இல்லை. இம்மாதிரிக் கூட்டுகளில் எப்போதேனும்!

   நீக்கு
 15. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 16. கத்திரிக்காய் பொரிச்ச கூட்டு நன்றாக இருக்கிறது.
  படங்களுடன் செய்முறை நன்றாக் இருக்கிறது.
  அரிசி மாவு போட்டது இல்லை நான்.
  அடுத்த முறை அப்படி செய்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சேர்ந்து வந்து விட்டால் நானுமே அரிசிமாவு சேர்க்க மாட்டேன். மாவு வாசனை வராப்போல் இருக்கும். முந்தாநாள் வெள்ளரிக்காய்க் கூட்டிலும் மாவு சேர்க்கவில்லை.

   நீக்கு
  2. ஆமாம் நானும் அரிசி மாவு அல்லது பச்சரிசி கூட ரொம்ப அபூர்வம் சேர்ப்பது. சேர்ந்தார்ப்போல இருந்தால் சேர்ப்பதில்லை..

   கீதா

   நீக்கு
 17. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  கோவில் போய் வந்ததில் நேரமாகிவிட்டது.
  அன்பு கீதாவின் தளிகையா இன்று.
  அதுவும் கத்திரிக்காய்.

  என்ன ஒரு அருமையான காய்கறி அது. அதுவும் கீதாவின் கைமணத்தில் பொரித்த கூட்டு.
  படத்தைப் பார்த்தாலே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது.

  இது போல பொரித்த கூட்டு ரெசிபி கேள்விப்பட்டதில்லை. எனக்கு மீனாட்சி அம்மா முறைதான் தெரியும்.
  இதில் தேங்காய், அரிசி சேர்த்து அரைத்துவிட்டு
  தாளித்த விதம் வெகு அழகும் அருமையும்.
  பிழைத்துக் கிடந்து கண்ல கண்டு இது போல
  நாளைக் காலை செய்து விடுகிறேன். எங்க திங்க்கக் கிழமை நாளைக்கு தானே.
  பொரித்த கூட்டு என்றால் கத்திரிக்காய்,அவரை, கொத்தவரங்காய் தான் சரி.
  மிக மிக நன்றி கீதாமாவுக்கும், கீதாவை எழுதச் சொன்ன
  ஸ்ரீராம்க்கும் என் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது அம்மா அடிக்கடி பண்ணும் ஓர் உணவுக் குறிப்பு! அப்போல்லாம் பிடிக்காது! இப்போப் பிடிச்சுப் போச்சு! அதான் வித்தியாசம் வல்லி.

   நீக்கு
  2. உண்மைதான் கீதா,
   அம்மா செய்து தரும்போது,
   கத்திரிக்காயை வதக்கலியான்னு ஒரு வாதம் நடக்கும். இப்போ இதெல்லாம் பிடிக்கிறது.
   ஹாஹா.

   நீக்கு
 18. திங்கக் கிழமை...ரசித்தேன், ருசித்தேன்.

  பதிலளிநீக்கு
 19. சூப்பர்க்கா! ‘ரஸவாங்கி’ பண்றதையும் ஒருக்கா போடப்படாதோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தம்பி, மோகன் ஜி! ரஸவாங்கியும் போடணும்! போடறேன். வரவு அதிசயம்! கருத்துக்கு நன்றி.

   நீக்கு
  2. அடடே... மோகன்ஜி அண்ணா....

   இந்த சாக்கிலாவது சென்னையில் மழை வராதா? சிவனே... பெருமாளே...

   நீக்கு
  3. ஸ்ரீராம்... யாராவது ஒருத்தரைக் கூப்பிடுங்க. இல்லைனா டிசம்பர் 2015 மாதிரி ஆயிடும்.

   நீக்கு
 20. பொர்ச்சகூட்டு, சாதத்தோட சாப்பிடணுமா இல்லை சாம்பார்/ரசம் இவைகளோடு கூடிய கூட்டா என்ற சந்தேகம் வருதே...

  வெறும்ன சுட சாதம் + நெய் + இந்தக் கூட்டு சாப்பிட்டா நல்லா இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைத் தமிழரே, தொட்டுக்கத் தான் இந்தக் கூட்டே! இதோடு அம்மா ஏதேனும் வத்தக்குழம்பு பண்ணுவா! புளிவிட்ட கூட்டு என்றால் அன்னிக்கு மோர்க்குழம்பு! சில சமயம் கூட்டில் பருப்புச் சேர்த்தால் அன்னிக்கு ரசம் மட்டும் வைத்துவிட்ட்டுக் கூட்டு சாதம் சாப்பிடுவோம்.

   நீக்கு
 21. உங்க தளத்துல எழுதற சமையல் செய்முறை ரொம்ப நல்லாவே இருக்கு. பாரம்பர்யச் சமயலை நல்லாவே எழுதறீங்க (மீனாட்சி என்ற பெயர் உள்ளவங்க செய்முறையை நல்லாவே எழுதறாங்க ஹாஹா)

  அதிலிருந்து அப்போ அப்போ நீங்க ஒவ்வொன்று இங்க படங்களுடன் எழுதணும் (இல்லைனா, நான் எழுதி, என்னோட பேரைப் போட்டுக்குவேன் கபர்தார்.....)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைத் தமிழரே, என்னோட பெயர் மீனாக்ஷி இல்லை. என் பெண்ணோட பெயர் தான் மீனாக்ஷி! அதிலிருந்து தான் தவலை வடை, அரிசி உப்புமா எல்லாம் இங்கே கொடுத்தேன்.

   நீக்கு
 22. ஆஆஆ இன்று கீசாக்கா ரெசிப்பி.... அதனால்தான் ஏழியா முழிச்சிட்டேன்ன்போல:).. கறியை விட கதை வசனம் நீளமா இருக்கே ஹா ஹா பா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா, அதிரடி, அது! அப்படித்தான் சீக்கிரம் எழுந்திருக்கணுமாக்கும்!

   நீக்கு
 23. பொரிச்ச கூட்டு நல்லா வந்திருக்குது கீசாக்கா... ஒரு கரண்டி தேங்காய் எனச் சொல்லிப்போட்டுக் கொஞ்சம் கூடச் சேர்த்திட்டீங்களோ அதனாலதான் கலர் லைட்டாகிட்டுதோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரடி, அம்மா பண்ணினால் மஞ்சள் பொடியோ, சாம்பார்ப்பொடியோ சேர்க்க மாட்டார். ஆகவே நிறம் இன்னமும் வெள்ளையாகவே இருக்கும். :) தேங்காய் கொஞ்சம் தான்! நான் துருவியதைக் காட்டாமல் மிக்சி ஜாரில் போட்டதைக் காட்டி இருப்பதால் நிறைய மாதிரித் தெரியுது!

   நீக்கு
 24. மாமா சொன்னதுபோல கல்சட்டியில வச்சிருக்கலாமெல்லோ... ஹா ஹா ஹா. தேஜஸ் தென்சன்.. விசிரேஸ் வேறு அப்படி இருக்கையில்.. இப்படியும் சொன்னா எவ்ளோ கோபமா வரும் என்ன கீசாக்கா:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா அதிரடி, அதெல்லாம் அன்னிக்கு. இந்தக் கூட்டு பண்ணின அன்னிக்கு எவ்வித ரென்ஷனும் இல்லை! :)

   நீக்கு
  2. விசிரேஸ் யாரு? அந்நியமா? தம்பி குடும்பம் தானே!

   நீக்கு
 25. பொரித்த கூட்டு அமர்களம்.

  பதிலளிநீக்கு
 26. நீங்க புளி எதுவுமே சேர்க்கேல்லையே கீசாக்கா... புளி இல்லாமல் கத்தரிக்காய்... முதல் தடவை கேள்விப்படுறேன்ன்ன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரடி, இது புளியோ பருப்போ இல்லாமல் செய்யும் கூட்டு. புளி சேர்த்துப் பருப்பும் போட்டுக் கூட்டுச் செய்து ஒரு முறை படங்களோடு பகிர்கிறேன்.

   நீக்கு
 27. நான் இத்தனை நாளாக கூட்டு என்றால் பயித்தம் பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு போன்ற பருப்புகள் முக்கியம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இங்கே பருப்பே இல்லை. அதே போன்று பொரித்தல் என்பது அப்பளம் பொரித்தல் வடாம் பொரித்தல், போன்ற முறை. இங்கே எதையும் பொரிக்கவில்லை. வதக்கல் மட்டும் தான். எதையோ ஒன்று செய்து சம்பந்தம் இல்லாமல் ஒரு பெயர் வைப்பது. நல்ல திப்பிசம் தான்.
  நாங்கள் இதை வெள்ளை குழம்பு என்று கூறுவோம். புளி இல்லாதது. தேங்காய் அரைத்து சேர்ப்பது. சில சமயம் தக்காளி சேர்ப்பது உண்டு.

  ​​Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜேகே அண்ணா! பருப்புச் சேர்த்தால் அதுக்கு எங்க வீட்டிலே வேறே பெயர்/ பருப்பே இல்லாமல் தான் இதைச் செய்யணும். புளி இல்லாமல் செய்யும் எதையும் "பொரிச்ச" என்னும் அடைமொழியோடு சொல்வோம்.பொரிச்ச குழம்பு,பொரிச்ச ரசம், பொரிச்ச கூட்டு என! இதில் தக்காளியெல்லாம் சேர்த்தால் அந்த ருசி மாறுபடும்.

   நீக்கு
 28. பொரிச்ச கூட்டு செய்முறை பிரமாதம் கீதா மாமி.நான் நேற்று முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு செய்தேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஆதி! பாராட்டுக்கு நன்றி. இப்போல்லாம் இங்கேயும் மாமா முருங்கைக்காய்ப் பொரிச்ச குழம்பு சாப்பிடறார்.:)))) ஆனால் அதுக்குப் பருப்புப் போடணும். முக்கியமாய்ப் பாசிப்பருப்பு!

   நீக்கு
 29. அம்மாவிடம் சமையல் கற்றுக்கொண்ட ஆரம்ப காலங்களில் அரிசிமாவு அரைத்துவிடுவது வழக்கமாகி, அதை ஒரு சம்பிரதாயமாகவே ரொம்ப நாள் செய்ததுண்டு. ஆனால் அப்புறம் வீட்டுக்கு வந்த உறவில் ஒருசிலர் அதன் தாத்பர்யத்தை விளக்கிய பின் அரிசி மாவு கரைத்து விடுவதை நிறுத்தி விட்டேன்! சமயங்களில் தேங்காய் அரைக்கும்போது அதனுடன் இரண்டு அரிசி சேர்த்ததும் உண்டு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் பெரிய நாத்தனார் அரிசிமாவு ஒரு கரண்டியில் எடுத்து வைத்துக் கொண்டு கரைத்து விட்டுக் கொண்டே இருப்பார்! :))))))

   நீக்கு
  2. கீதாக்கா அரிசி மாவு நிறைய கரைத்துவிட்டால் டேஸ்ட் மாறிவிடுமே...

   கீதா

   நீக்கு
  3. ஆமாம், தி/கீதா, அதோடு புளி எவ்வளவோ அவ்வளவுக்கு வெல்லமும் சேர்ப்பார்! அதைப் புளிச்சட்னி என்றே நான் சொல்லுவேன். :)))))

   நீக்கு
 30. கூட்டு தளர இருக்க வேண்டுமாயின் காய் கம்மியாய் போடவேண்டும். நிறையப்போட்டால் அதுவே நிறைந்து வந்துவிடும்! கெட்டியாய் இருந்தால் கலந்து சாப்பிட ஆர்வம் வராது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஶ்ரீராம், ஆட்களுக்குத் தகுந்த காய்கள் போட்டாகணும். இல்லைனாலும் கூட்டு சரியாக வராது. அரைத்து விடுவதில் இருக்கு சூக்ஷ்மம்.

   நீக்கு
 31. நாங்கள் பொரிச்ச குழம்பு என்று சொல்லிக்கொள்வதில் பாசிப்பருப்பு சேர்த்து தேங்காய் அரைத்து விடுவோம். அதில் அவ்வப்போது சீரகமோ, மிளகோ சேர்த்து அரைத்ததுண்டு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்க வீட்டில் அதாவது மாமியார் வீடு/பிறந்த வீடுகளில் பொரிச்ச குழம்பு செய்முறை வித்தியாசப்படும். நானும் அம்மா செய்யும் விதத்திலும் செய்வேன். மாமியார் செய்யும் மாதிரியும் செய்வேன்.மாமியார் எது பண்ணினாலும் சாம்பார்ப் பொடி இல்லாமல் பண்ணமாட்டார். பொரிச்ச குழம்புக்கும் கூட சாம்பார்ப் பொடி கட்டாயம் இருக்கும். ஜீரக ரசம் எனில் நான்வெறும் மி.வத்தல், துபருப்பு, மிளகு, ஜீரகம் கருகப்பிலையோடு சேர்த்து அரைச்சு விடுவேன். மாமியார் பொடியும் போட்டு அரைச்சும் விடுவார். ஜீரக ரசம் நுரைத்து வரும்போது அதை நாங்க எடுத்துடுவோம். ரசம் தெளிவாக வரும் என! மாமியார் வீட்டில் ரசமேசாம்பார் போல கெட்டியாக இருக்கணும். இருக்கும்.

   நீக்கு
  2. இங்கும் ரசம் கெட்டியாக இருக்காது. ஆனால் நுரைத்து வருவதை எடுத்து விடும் வேலை எல்லாம் செய்வதில்லை. 98 சதவிகிதம் பொடி போட்டே ரசம்!

   நீக்கு
  3. ஜீரக ரசம் எனில் நான்வெறும் மி.வத்தல், துபருப்பு, மிளகு, ஜீரகம் கருகப்பிலையோடு சேர்த்து அரைச்சு விடுவேன். //

   இதில் நாம் செய்யும் போது ஜீரகம் கொஞ்சம் தூக்கலாக வைத்துச் செய்தால் ஜீரக ரசம். மிளகும் ஜீரகமும் ஒரே அளவாக கொஞ்சம் மிளகு காரத்துடன் செய்தால் ஜீரா மிளகு ரசம் என்றும். இதுக்குப் பொடி எதுவும் போடுவதில்லைதான்.

   எங்க மாமியார் வீட்டிலும் ரசம் பொதுவா கொஞ்சம் திக்காக இருக்கும் அதாவது அடிமண்டி நிறைய இருக்கும். அது ஆண்களுக்கு எல்லாம் தெளிவாக விட்டு விட்டு கடைசியில் பெண்கள் நாங்கள் சாப்பிடும் போது குழ்மபு போல மண்டிதான் நான் ரசமே சாப்பிட மாட்டேன்!!!!!!!!!!!!!!!!!!!!!! குழம்பு, மோர் போதும் என்று...பிறந்த வீட்டிலும் ஏதேனும் ஒன்றுதான் குழம்பு அல்லது ரசம் தான் செய்வாங்க ஸோ அப்படிப் பழகினதுனால மூன்று சாதம் சாப்பிடக் கஷ்டப்படுவேன்...

   கீதாக்கா நுறைத்து வரும் போது அதை ஏன் எடுக்க வெண்டும் . எடுக்காவிட்டாலும் தெளிவாஅத்தானே இருக்கும்?

   கீதா

   நீக்கு
  4. தெளிவாய்த் தான் இருக்கும் தி/கீதா! ஆனால் ரசம் அடியும் கீழும் ஒன்று போல வரணும்னா ஜீரக ரசத்தின் நுரையை ஒருதரம் எடுத்துட்டுச் சாப்பிட்டுப் பாருங்க! மிளகு ரசம் எனில் நான் வெறும் மிளகு, ஜீரகம் பச்சையாகப் பொடி பண்ணி ரசம் வைத்து விளாவினதும் நெய்யில் தாளிக்கையில் இந்தப் பொடியைப் போட்டு மேலே தாளிதத்தைப் போடுவேன்.ஜீராமிளகு ரசம் எனில் மி.வத்தல், மிளகு தூக்கலாக, துபருப்பு கொஞ்சமாக, ஜீரகம் கொஞ்சமாக வறுத்து அரைத்து விடுவோம். இந்த ரசம் அம்மா வீட்டில் இருக்கும்போது புதன், சனி இரண்டு நாட்களும் பண்ணுவார்கள்.

   நீக்கு
 32. கீதா அக்கா நான் வீடு மாற்றி புது வீடு செட் செய்யும் அமர்க்களத்திற்கிடையே கிடைத்த நேரத்தில் எட்டிப்பார்த்து விட்டு போகலாம் என்று வந்தால், நீங்கள் முன்னுரையை முடித்து மேட்டருக்கு வருவதற்குள்...உஸ் அப்பா அடுத்த வேலை வந்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா, பானுமதி, கொஞ்சம் வம்பு, தும்பு இருந்தால் தானே ருசி!

   நீக்கு
 33. இது மதுரை ஸ்பெஷலா? எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் மதுரையை சேர்ந்தவர்கள். அவர்கள் வீட்டில் ஒரு முறை சாப்பிட்டேன்.
  நிறைய தாளித்திருக்கிறீர்கள். சாப்பிடும் பொழுது நறுக் நறுக்கென்று கடிபடும், எனக்கு மிகவும் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பானுமதி, கிட்டத்தட்ட மதுரை சமையல் தான். எங்க புக்ககத்தில் பருப்பில்லாமல் பண்ணும் கூட்டு, புளி போட்டுச் செய்யும் பருப்புருண்டைக்குழம்பு, வாழைக்காய்,சேனை எரிசேரி இதை எல்லாம் மதுரை சமையல் என்பார்கள். அவங்க அவியலுக்குக் கூட ஜீரகம் வைத்து அரைத்து மாவு கரைத்து விடுவாங்க! தயிர் விட்டுப் பின் அது புளிக்குமோ என நினைத்துப் பாலும் சேர்ப்பாங்க! கிட்டத்தட்டக் கூட்டுத் தான். அவியல்னு பெயர்!

   நீக்கு
 34. கீதாக்கா ஃபைனல் செஞ்சு வைச்சுருக்கீங்க பாருங்க சூப்பரோ சூப்பரா இருக்கு. சரி நான் அப்படியே எடுத்துக் கொண்டுவிடுகிறேன்...(காலையில் அடித்த கமென்ட்இது இடையில் போய் வந்ததால் காப்பி பண்ணி இங்கு போட விட்டுப் போச்சு...காலைல அடித்ததில்...இன்று நான் எதுவும் சைட்ட்டிஷ் செய்யப் போவதில்லை இதை அப்படியே எடுத்துக் கொண்டுவிடுகிறேன் அப்படினு...!!!!!!!!!!!!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா, இப்போ எங்கே இருக்கும்! பண்ணினதே துளியூண்டு!

   நீக்கு
 35. கத்தரிக்காய் ரொம்பவும் வருத்தப்படும்...

  இந்த அளவுக்குப் போட்டு பொரிக்குறாங்களே.. ந்னு!...

  பதிலளிநீக்கு
 36. எபியில் சமையல் குறிப்பு என்றால் ப்டமிருக்க வேண்டும் இல்லாவிட்டால் வேறு யாராவது எழுதிஉரிமை கொண்டாடலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லோரும் படங்களோடு தான் போடுகின்றனர். அதோடு பெயரையும் ஶ்ரீராம் குறிப்பிடுகிறார்.

   நீக்கு
 37. முடிவில் உள்ள குறிப்பிற்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க டிடி. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 38. கீசாக்காவ்சி கடந்த 30 நிமிடமாகக் காணம்:).. எங்கே போயிட்டா:) ஹையோ நேக்கு காண்ட்ஸ்சும் ஓடல்ல லெக்ஸும் ஆடல்லே:).. அதிராவைத் தவிர ஆருக்கும் இங்கு அக்கறை இல்லையாக்கும் கர்ர்ர்ர்ர்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹையோ,ஹையோ, எங்கேயும் போகலை. நேத்திக்குச் சாயங்காலம் வேலை இருந்தது. அதோட இணைய இணைப்பு வேறே சரியா இல்லை. அதான் வர முடியலை. சாயங்காலம் ஏழு மணிக்கு அப்புறமாத் தேவை இருந்தால் தவிர கணினியில் உட்காருவதில்லை. :))))))

   நீக்கு
 39. ரொம்ப நல்லா இருக்கு மா...அரிசி மாவு சேர்த்து பண்ணது இல்ல ...

  அதே மாதரி வெங்காயம் , தக்காளி சேர்த்து பண்ணுவோம் ..தேங்காய் மட்டும் அரைத்துவிட்டு

  இந்த ரெசிபி பார்க்கவே நல்லா இருக்கு ...கண்டிப்பா செஞ்சு பார்க்கணும் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அனு, வெங்காயம், தக்காளி சேர்த்தால் தேங்காயெல்லாம் அரைச்சு விடாமல் கொஞ்சம் போல் சாம்பார்ப்பொடி மட்டும் போட்டு கடுகு, ஜீரகம் தாளித்துச் சப்பாத்திக்குப் பண்ணுவேன். சாப்பாட்டுக்குப் பண்ணியதில்லை.

   நீக்கு
 40. கீசா மேடம்.. என் மனைவி சொல்றா... அவங்க அம்மா இந்த கத்தரி பொரிச்ச கூட்டு பண்ணுவாளாம். அதுக்கு தேங்காய் திருவிப் போடுவாங்களாம். இதை சாத்துமதுக்குத் தொட்டுக்கலாம்னு எழுதியிருக்கா. நாந்தான் புதுசா எதையும் செய்யவிட மாட்டேனே..அதுனால எனக்கு இதுவரை பண்ணிப்போட்டிருக்க மாட்டா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைத்தமிழரே, சாத்தமுதுக்கு மட்டுமில்லை. வத்தல் குழம்புக்கும் இந்தக் கூட்டு நன்றாய் ஒத்துப் போகும். தேங்காயைத் துருவிப் போட்டும் பண்ணலாம். அரைத்தும் பண்ணலாம். அன்னிக்கு அரைத்தேன்.

   நீக்கு
 41. கீதாக்கா காலைல போனில் ரெசிப்பியை பார்த்து வேலைமுடிஞ்சு வரும்போது கத்திரிக்கா வாங்கியாச் .நாளைக்கே செய்வேன் ..ஈஸியா இருக்கு எனக்கு பருப்பு தாளிதம் சேர்க்காம இப்படி செயறதுதான் ரொம்ப பிடிக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏஞ்சல், புது வேலையிலே மும்முரமா இருக்கீங்க போல! செய்து பார்த்துட்டுச் சொல்லுங்க! நல்லா இருக்கும்.

   நீக்கு
  2. கீதாக்கா கத்திரிக்கா பொரிச்ச கூட்டு செஞ்சாச்சு :) வீட்டில் சீனியர் எலிக்கு ரொம்ப பிடிச்சிப்போய் இன்னிக்கு ஒரு கிலோ கத்திரிக்காயும் ரெண்டுதேங்காயும் சொல்லாமலே வாங்கி வந்தார் :))

   ரசம் தயிர் ரெண்டுத்துக்கும் நல்லா இருந்தது

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!