வெள்ளி, 21 ஜூன், 2019

வெள்ளி வீடியோ : மோகவீணை என்று உன்னை நானும் மீட்டிப் பாடிடவா பாரிஜாத மாலைபோல மார்பில் உன்னைச் சூடிடவா

அர்த்தங்கள் ஆயிரம் என்று ஒரு படம்.  

1981 இல் வெளிவந்திருந்திருக்கிறது!  ஒரு இடத்தில கார்த்திக் அம்பிகா நடித்த படம் என்று தகவல்.  இன்னொரு இடத்தில பார்த்திபன் புவனேஸ்வரி நடித்த படம் என்று தகவல்.



யார் நடித்திருந்தால் என்ன?  நான் படம் பார்க்கவில்லை.  நீங்களும் பார்க்கப் போவதில்லை.  பாடலே கேட்பீர்களோ என்னவோ...!!!

அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு எஸ் பி பாலசுப்ரமணியம் பாடல்.



கடலோடு நதிக்கென்ன கோபம்..   காதல் கவிபாட விழிக்கென்ன நாணம்?  

இந்தப் பாடலும் மகரந்தம் திரைப்படப் பாடலான "கடலில் அலைகள் பொங்கும்..   ஆனால் கரையைத் தாண்டுமோ... " என்கிற பாடலும் எனது லிஸ்ட்டில் ஜோடிப் பாடல்கள்.  இந்தப் பாடலை (கடலில் அலைகள் பொங்கும்..   ஆனால் கரையைத் தாண்டுமோ...) நான் சென்ற ஜூலையில் பகிர்ந்திருக்கிறேன்.  அப்போதே இதோ, இப்போது பகிரும் இந்தப் பாடல் பற்றியும் துரை செல்வராஜூ ஸாருக்குச் சொன்ன பதிலில் குறிப்பிட்டுள்ளேன்!



அழகான வரிகளோடு இனிமையான பாடல்.  சங்கர் கணேஷ் இசை. 

 

பாடலை எழுதியவர் வாலியாக இருக்கலாம்.  கண்டுபிடிக்க முடியாத விவரங்கள்!  பாடலைப் பகிரும்போது எழுதியவர் விவரங்கள் சொல்லவில்லை என்றால் எழுதியவருக்கு இழைக்கப்படும் அநீதி.



இரண்டாவது சரணத்தில் எஸ் பி பி யின் சிரிப்பு!  பாடல் முழுவதுமே எஸ் பி பி யின் ராஜாங்கம்.  இசை அமைப்பாளர் இப்படியெல்லாம் பாடலில் ஜாலம் செய்யுங்கள் சென்று சொல்வாரா, இல்லை இதெல்லாம் எஸ் பி பியின் திறமையா...   தெரியவில்லை.  ஆனால் ர..ச....னை.

நான் பகிர்ந்திருப்பது காட்சி இல்லா கானம்.  ஒன்று, எனவே பயப்படத் தேவை இல்லை.  தைரியமாக கவனம் சிதறாமல் பாடல் கேட்கலாம், எஸ் பி பி யின் ஜாலத்தை ரசிக்கலாம்.    இரண்டாவது அதனாலேயே யார் நடிக-நடிகை என்றும் தெரியவில்லை!

பாடலுக்கான ஆரம்ப இசை, பின்னணி இசை உயர்ந்த ரகம்.  இழையோடும் குழலிசை, சிதார், கொலுசு சத்தப் பின்னணி, தாளம்...  எல்லாவற்றையும் ரசிக்கலாம்.



கடலோடு நதிக்கென்ன கோபம்..  
காதல் கவிபாட விழிக்கென்ன நாணம் 
இளங்காற்று தீண்டாத சோலை 
இளங்காற்று தீண்டாத சோலை   
மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ என் தோட்டப் பூவே..


நீலவான மேகம்போல காதல் வானில் தவழுகிறேன் 
நீரில் ஆடும் பூவைப்போல ஆசை நெஞ்சம் மயங்குகிறேன் 
ஓடை மீனே ஜாடை பேசு 
நீலவான மேகம்போல காதல் வானில் தவழுகிறேன் 
நீரில் ஆடும் பூவைப்போல ஆசை நெஞ்சம் மயங்குகிறேன் 
ஓடை மீனே ஜாடை பேசு 
வனமோகினி வனிதாமணி புதுமாங்கனி சுவையே தனி 
புதுவெள்ளம் போலே வாராய்...


குலுங்கக் குலுங்க இடையும் கெஞ்ச ஆடு 
சலங்கை முழங்க நடையில் தாளம் போடு ஹா...
குலுங்கக் குலுங்க இடையும் கெஞ்ச ஆடு 
சலங்கை முழங்க நடையில் தாளம் போடு 
தழுவிட வா அலையெனவே 
தழுவிட வா அலையெனவே   
அமுத மழையில் நனைந்து இனிமை காணவே 


மோகவீணை என்று உன்னை நானும் மீட்டிப் பாடிடவா 
பாரிஜாத மாலைபோல  மார்பில் உன்னைச் சூடிடவா 
தோகை நீயே மேடை நானே 
மதன் வீசிடும் கணைபாயுது மலர்மேனியும் கொதிப்பாகுது 
குளிர் ஓடை நீயே வா வா...


83 கருத்துகள்:

  1. இதுவரை அறிந்திராத பாடலைப் பற்றி இப்போது அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.

    பதிலளிநீக்கு
  3. வந்திருக்கும் முனைவருக்கும், இனி வரப்போகும் நண்பர்களுக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் இனி வரப்போகும் மற்றும் நம் நட்புறவுகள் அனைவருக்கும் நல்வரவும் வணக்கமும் கீதா அக்கா...

      நீக்கு
  4. இந்த வாரம் புதன்கிழமை பேயார் வந்தாலும் வந்தார், காலங்கார்த்தாலே எ.பி. காத்தாடுது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ! அது!

      நீக்கு
    2. ஆ.....

      பேயில்லாத பதிவினிலே
      சுவாரஸ்யமில்லை...
      அதன் கமெண்ட்டில்லாத பதிவினிலே
      நிறைவுமில்லை!

      ("நீயில்லாத உலகத்திலே நிம்மதி இல்லை" ராகத்தில் பாடவும்!)

      நீக்கு
    3. பேய் புதன்கிழமைகளில் மட்டும்தான் வரும் என்று நினைத்தேன். வெள்ளிக்கிழமையிலும் வருகிறதா! சனி ஞாயிறு கிழமைகளிலாவது லீவு எடுத்துக்குமா?

      நீக்கு
    4. பேய்க்கு லீவெல்லாம் இல்லை. தினம் வரட்டும். அதான் நல்லா இருக்கு. இல்லைனா போரடிக்கும்!

      நீக்கு
    5. அகில உலக பேய் ரசிகர் மன்றத் தலைவி ஆகிவிடுவீங்க போலிருக்கு!

      நீக்கு
    6. அட! ஏற்கெனவே நான் "தலைவி" தானே! அது தெரியாதா உங்களுக்கு? :))))))

      நீக்கு
    7. பேயில்லாத பதிவினிலே
      இன்னபமு மில்லை (அல்லது ஆர்வமு மில்லை)
      அதன் எழுத்தில்லாத பதிவினிலே
      முழுமையு மில்லை

      இது பெட்டர் இல்லையோ ஶ்ரீராம் (தளை தட்டாத்து)

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  6. பாட்டோ, படமோ எதுவும் கேட்டதில்லை/பார்த்ததில்லை. நானும் பாட்டுக் கேட்பேன் தான்! ஆனால் இப்படி எல்லாம் தேடித் தேடிக் கேட்டதில்லை. ஸ்ரீராம் கிட்டே நேயர் விருப்பம் கேட்கலாமானு யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா அக்கா... நான் பாடல்களின் மிகப்பெரிய ரசிகன். கேசெட் காலத்திலிருந்து மிகப்பெரிய கலெக்ஷன் வைத்திருந்தேன். விதம் விதமாக... ஜோடி ஜோடியாக தனித்தனியாக என்றெல்லாம் கேசெட் வைத்திருப்பேன்!

      நேயர் விருப்பமா? ஹா.. ஹா.. ஹா...

      நீக்கு
    2. ஸ்ரீராம் தேடி தேடி கேட்டகாலம், இப்போது நம்மிடம் பகிர தேடும் காலம் எல்லாம் இருக்கிறது.
      இனி நேயர் விருப்பத்திற்கு தேடும் காலமா !
      நன்றாக இருக்கிறது யோசனை கீதா.

      நீக்கு
    3. நேயர் விருப்பம் என்றால் கேட்ட பாடலே திரும்ப வரும்! லிங்க் கொடுத்து விட வேண்டியதுதான் என்கிறீர்களா?

      நீக்கு
    4. உங்கள் விருப்பம் ஒன்று, நேயர் விருப்பம் ஒன்று என்று கேட்கலாம் பாடலை.
      கீதா அப்படித்தானே கேட்கிறார்.

      நீக்கு
    5. வாரத்துக்கு இரண்டு பாடல்கள் போடலாமே.//

      வல்லி அக்காவும் கேட்டு விட்டார்.

      நீக்கு
    6. நல்ல யோசனைதான் கோமதி அக்கா. செய்யலாம். ஆனால் உங்கள் விருப்பங்களை எனக்குத் தனி மெயிலில் அனுப்பினால் படிப்பவர்களுக்கு சஸ்பென்ஸாக இருக்கும்.

      நீக்கு
    7. இதுவும் நல்ல யோசனைதான்.

      நீக்கு
    8. இது சரியா வராது. வாசகர் ரசனைனு வந்ந்ததுட்டா, முழுவதும் வெற்றி பெற்ற பாடலாயிடும். அதில் ரசிக்க, சிலாகிக்க என்ன இருக்கு? இந்தப பகுதியே ஶ்ரீராமின் ரசனையா இருக்கு. (அனேகமா கேட்காத பாடலாத்தான் இருக்கு).

      இந்தப் பகுதில இன்னும் ஆர்வம் வர, இதனை ஒட்டிய ராகப் பாடலோ சிட்டுவேஷன் பாடலோ கூடச் சேர்க்கலாம், இல்லைனா வெளியிடும் பாடல் அரட்டைக் கானதாவும் இருக்கணும்னு நினைக்கிறேன்.

      நீக்கு
    9. நெல்லைத்தமிழன்... முன்னர் அப்படிச் சேர்த்திருக்கிறேன். அப்புறம் அது கவனிக்கப் படாமல் போக பாடல் மட்டும் வெளியிடுகிறேன். ராகம் ஒன்று பாடல் பல என்றெல்லாம் போட்டிருக்கிறேன்!

      நீக்கு
    10. அது எப்படி வாசகர் ரசனை என்பது வெற்றி பெற்ற பாடல்களாகவே வருமா என்ன? பலருக்கும் பல பாடல்கள் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை! ஆகவே இதுக்காகத் தேடித் தேடிக் கேட்கலாமே! ஶ்ரீராமின் ரசனைக்கு உரிய பாடலோடு வாசகர் ரசனைக்கு உரிய பாடல் ஒத்துப் போகிறதா என்றும் பார்க்கலாம். ஆனால் ஶ்ரீராம் மாதிரி புதை பொருள் ஆராய்ச்சி எல்லாம் எல்லோரும் செய்வாங்களா என்பதும் கேள்விக்கு உரியது!

      நீக்கு
    11. //ராகம் ஒன்று பாடல் பல என்றெல்லாம் போட்டிருக்கிறேன்!// எனக்கும் நினைவில் இருக்கு. ஆனால் என்போன்ற ஞானசூனியங்களுக்கு ராகம் பற்றியோ அதன் அடிப்படை பற்றியோ தெரியாது; புரியாது! ஆகவே அதைக் குறித்துக் கருத்துச் சொல்ல இயலாது! சங்கீதத்தின் அடிப்படையாவது தெரிந்திருக்கணும் இதைக் குறித்துப் பேச!

      நீக்கு
    12. //ஶ்ரீராமின் ரசனைக்கு உரிய பாடலோடு வாசகர் ரசனைக்கு உரிய பாடல் ஒத்துப் போகிறதா என்றும் பார்க்கலாம்//

      ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை உண்டு கீதா அக்கா. எல்லாம் எல்லோரோடும் ஒத்துப்போகும் என்று சொல்ல முடியாது. அதே சமயம் இரண்டு பாடல்களாய் வெளியிடுவதில் கஷ்டம் இல்லையே!

      //ஆனால் ஶ்ரீராம் மாதிரி புதை பொருள் ஆராய்ச்சி எல்லாம் எல்லோரும் செய்வாங்களா என்பதும் கேள்விக்கு உரியது!//

      ஹா... ஹா.. ஹா...

      அப்போதெல்லாம் என் போன்ற பாடல் ரசிகர்களுக்கு இலங்கை வானொலி ஒரு வரம். வெளிவந்த படங்கள் முதல், வெளிவராத படப்பாடல்கள் வரை எல்லாம் ஒலிபரப்புவார்கள். இளையராஜாவின் ரசிகை என்றொரு படம் வெளிவரவேயில்லை. ஆனால் அதில் பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அதேபோல மணிப்பூர் மாமியார். இலங்கை வானொலி உபயம்.

      நீக்கு
    13. //ராகம் பற்றியோ அதன் அடிப்படை பற்றியோ தெரியாது; புரியாது!//

      எனக்கும்!

      நான் ராகம் பற்றி பெரிய அளவில் பேசமாட்டேன். ஹிந்தியிலிருந்து தமிழா, தமிழிலிருந்து இந்தியா என்றெல்லாம் வெளியிட்டேன். நேற்று கூட எழுத்தாளர் அமுதவன் ஒரு பேஸ்புக் பதிவு போட்டிருக்கிறார்.

      "ஒரு பிரபல இசையமைப்பாளர் காப்பியடித்துப் பாடல்கள் போட்டிருக்கிறார் என்று முகநூலில் ஐந்து பாடல்களைச் சுட்டியிருந்தார்கள்.
      முதலில் முன்பாக வந்திருந்த ஆங்கில, இந்திப் பாடல்களையும் அதற்கடுத்து 'இவர்' அந்தப் பாடலின் மெட்டை எப்படிக் 'காப்பியடித்து' தமிழில் கொண்டு வந்திருக்கிறார் என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.

      ராஜ்கபூரின் ஆரம்பகாலப் படமொன்றில் மன்னாடே ஒரு பாடல் பாடியிருக்கிறார். என்ன ஆச்சரியம்......? அந்த டியூன் அப்படியே 'காப்பியடிக்கப்பட்டு' ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் 'வெத்தல வெத்தல வெத்தலயோ'வாக ஒலிக்கிறது.

      இது ஒரு புறமிருக்க - முகநூலில் ஐந்து பாடல்கள் போட்டிருக்கிறார்கள் இல்லையா? அதில் ஒரு பாடல் ஆர்.டி.பர்மன் இசையமைத்த 'தம்மாரோ தம்ம்' பாடல். 'தம்மாரோ தம்ம்' என்று அவ்வளவு புகழ்பெற்ற பாடலைக்கூட ஒருவரால் காப்பியடிக்க முடியுமா? என்ற கேள்வி வருகிறது. 'எம் புருஷன்தான்.... எனக்கு மட்டும்தான்' என்ற பாடலை முணுமுணுத்துப் பார்க்கும்போதுதான் நம்ம ஆள் எத்தனைப் பெரிய 'கில்லி' என்பது தெரிகிறது......​"

      என்பதே அது. இது போல நானும் சொல்லியிருக்கிறேன். திரு அமுதவனின் இந்தப் பதிவும் சுவாரஸ்யம் இல்லையா?!!

      நீக்கு
    14. //'தம்மாரோ தம்ம்' பாடல். 'தம்மாரோ தம்ம்' என்று அவ்வளவு புகழ்பெற்ற பாடலைக்கூட ஒருவரால் காப்பியடிக்க முடியுமா? என்ற கேள்வி வருகிறது. 'எம் புருஷன்தான்.... எனக்கு மட்டும்தான்' என்ற பாடலை முணுமுணுத்துப் பார்க்கும்போதுதான் நம்ம ஆள் எத்தனைப் பெரிய 'கில்லி' என்பது தெரிகிறது......​//
      அட ஆமாம்!

      நீக்கு
    15. நண்பர் ஸ்ரீ ராம் ,

      உங்களுக்கு இப்போதுதான் இந்த உண்மை தெரிகிறது போல. இதைத்தான் திரு அமுதவனும் நானும் அப்போதிலிருந்தே சொல்லி வருகிறோம். இசையில் எவருமே ஞானி என்றில்லை. அந்தப் பெயர் ஒரு வேஷம்.

      நீக்கு
    16. ராகம் என்னவென்றே கண்டுபிடிக்கத் தெரியாத என் போன்றவர்களே இந்தக் காப்பியைக் கண்டு பிடித்திருக்கோம். சொன்னால் பொல்லாப்பு வரும்! ஆகவே ஒரு சில பாடல்களின் மூலம் தெரிந்திருந்தாலும் சொல்லிக்கொள்வதில்லை. என்றாலும் ராகங்களின் அடிப்படை என்னமோ மாறப்போவதில்லை. அந்த ராகம் எல்லோருக்குமே பொது தானே!விஷயம் புரிந்து விட்டால் அவற்றை வைத்து எப்படி வேண்டுமானாலும் வித்தை காட்டலாம். நம் பாராட்டுகள் அதற்குத் தான்!

      நீக்கு
    17. நன்றி காரிகன் ஸார். கங்கை அமரன் சில மேடைகளில் தாங்கள் இந்தப் பாடல்களை எப்படி எல்லாம் மாற்றி இசை அமைத்தார்கள் என்று சொல்லி இருக்கிறார். உதாரணமாக "நான் பார்த்தத்திலே அவள் ஒருதியைதான்" பாடலை "புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா" எந்தப் பாடல் எந்தப் பாடலிலிருந்து உருவியது என்று அறிவதில்தான் சுவாரஸ்யம்.

      நீக்கு
  7. பாடல் இனிமை. கேட்ட நினைவு இல்லை.
    நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று.

      நீக்கு
  8. "காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி!" இது அடிக்கடி பயணங்களில் கேட்கும் ஓர் பாடல். எந்தப்படம்? யார் நடிச்சது? படம் ஓடினதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்ன மாப்பிளே படப்பாடல். பிரபு சுகன்யா. விசுவும் நடித்திருப்பார். பாடல் சுமாராய் இருக்கும். மனோ பாடிய பாடல். இளையராஜா! படம் கிரேஸி மோகன் வசனத்தில் கொஞ்சம் ஓடியதாய் நினைவு!

      நீக்கு
    2. ஆமாம் கிரேசியின் பேட்டி ஒன்றில் கேட்டேன்.
      விசு சொல்லி இருந்தார்.

      நீக்கு
    3. சின்ன மாப்ளே அட்டஹாசமான படம். நான் பலமுறை பார்த்திருக்கிறேன்

      கீசா மேடம் சொன்ன பாடல் சுமாரா? நான் கேட்டு ரசித்த பாடல்.

      நீக்கு
    4. அது என்னமோ நாங்க எப்போ பயணம் போனாலும் எங்க வண்டி ஓட்டுநர்கள் இந்தப்பாடலைப் போட்டுடுவாங்க! ஆகவே இதை நிறையக் கேட்டிருக்கேன். இன்னொன்றும் இருக்கு! நினைவில் வந்ததும் சொல்றேன்.

      நீக்கு
    5. நான் கூட நிறைய பாடல்கள் மதுரை ஜெயவிலாஸ் பஸ்ஸில் அலுவலகம் செல்லும்போது கேட்டு ரசித்திருக்கிறேன். நிறைய ராமராஜன் பாடல்கள் எனக்கு அப்படிதான் அறிமுகம். நான் எப்போதும் அவற்றை ராமராஜன் பாடல்களாகப் பார்க்காமல் இளையராஜா, மனோ, எஸ்பிஐ பி பாடல்களாகப் பார்க்கிறேன்.

      நீக்கு
  9. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  10. இந்தப் பாடலைப் பலமுறை கேட்டிருக்கிறேன். பிடித்த பாடல்களுள் ஒன்று. படத்தின் பெயரை இப்போதுதான் அறிகிறேன். பாடலாசிரியர் பெயர் குறிப்பிடப்படாமை பாடலாசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பது மிகச்சரியே. ஒரே படத்துக்கு இரண்டு மூன்று பாடலாசிரியர்கள் பாடல்கள் எழுதியிருந்தால் அவர்கள் பெயர்களை மட்டுமே திரைப்பட ஸ்லைடுகளில் குறிப்பிடுகிறார்கள். யார் யார் எந்தப் பாடலை எழுதினார்கள் என்பதைக் குறிப்பிடுவதில்லை. பாடுபவர்களையாவது குரலைக் கொண்டு அறிந்துகொள்ளமுடியும். பாடலாசிரியர்களை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதமஞ்சரி... உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.

      ஆம். இரண்டு மூன்று பாடலாசிரியர்களில்நாம் விரும்பும் பாடலை எழுதியவர் யார் என்று குறிப்பிடுவதில்லை என்பது வருத்தமே...

      நீங்களும் இந்தப் பாடலைப் பலமுறை கேட்டு ரசித்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

      நீக்கு
  11. பிரமாதம் பாடலைத்தான் சொல்கிறேன்.

    அன்பின் நண்பர்கள் அனைவருக்கும் இனிய
    காலை வணக்கம்.
    காட்சி இல்லாததால் இசை இன்பம் காதை நிறைத்தது. கேட்ட மாதிரியும் இருக்கிறது. கேட்காதது போலவும் இருக்கிறது.
    ஆகக் கூடி மிக இனிமை. பாலுவுக்கு என்ன சார் தூள் கிளப்புகிறார் ஒவ்வொரு பாடலிலும்..
    . நாம் ரசிப்போம். வாரத்துக்கு இரண்டு பாடல்கள் போடலாமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...

      காலை வணக்கம். முதல் வார்த்தையிலே பிரமாதம் என்று ரசனையை வெளிப்படுத்தியதற்கு நன்றி - கண்டேன் சீதையை என்பது போல! வாரம் இரண்டு பாடல்கள், உங்கள் விருப்பம், எங்கள் விருப்பம்... நல்ல யோசனை!

      நீக்கு
  12. அன்பின் வணக்கம் அனைவருக்கும்....

    பதிலளிநீக்கு
  13. இந்தப் பாடல் வாலி அவர்களுடையதாக இருப்பதற்கு வாய்ப்பில்லை...

    ஆனாலும்
    இசையும் குரலும் அருமை!...

    பதிலளிநீக்கு
  14. தண்ணீர் இல்லாத வாய்க்கால் ஓரமாக நின்று கொண்டு இதை வசனமாகப் படித்தால் எப்படி இருக்கும்!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாத்யாரே...
      முதுகில் டின் கட்டி விடுவார்கள்!...

      நீக்கு
    2. என்ன ஒரு கற்பனை! மதுரைப்பக்கம் எல்லாம் ஒருபாட்டுப் பாடேனென்றோ, பாடு பாடினேன் என்றோ சொல்ல மாட்டார்கள். ஒரு பாட்டுப் படியேன் என்றோ, பாட்டுப் படித்தேன் என்றோதான் சொல்வார்கள்!

      அதுசரி, கேள்வியும் நீங்களே, பதிலும் நீங்களேவா? நமக்கு நாமே!!!

      நீக்கு
  15. அதுசரி..
    போன வாரம் ஒரு பாடலைக் கேட்டிருந்தேன்....

    அவ்வளவு தானா!?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாருங்க அது!..

      குறுக்கால நுழையறது?...
      வரிசையில போய் நில்லுங்க!...

      நீக்கு
    2. அதுதான் அபுரி ஆயிடுச்சே.. நான் என்ன செய்ய? பாடல் விருப்பம் எங்கே இருந்தது? புதிர்தான் இருந்தது!

      இங்கேயும் நீங்கள் இரட்டை வேடமா!!!

      நீக்கு
    3. ஒற்றை வேடத்துக்கே ஒப்பனை தகராறு..

      இதில் இரட்டை வேடமா!?...

      நீக்கு
  16. பலமுறை கேட்டு ரசித்த பாடல் ஜி எனது பேஃவரிட் பாடலும்கூட.
    இது கார்த்திக் நடித்த படமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...படம் பார்த்திருக்கிறீர்களா ஜி?எனக்குத் தெரியவில்லை.

      நீங்களும் ரசிக்கும் பாடல் என்பதில் மகிழ்ச்சி.

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
    2. ஜீ!..அப்போ அந்தப் பாட்டை கீச்சுனது யாருங்க?....

      நான் இல்லீங்க.. ந்னு மட்டும் ஜொல்லிடாதீங்க!...

      நீக்கு
  17. அன்னைக்கு புதன் கிழமை ..
    பேய்க்கு..ந்னு ஒரு கவிதை எழுதினேன்..

    KGG அவர்கள் ஆகா... என்றிருந்தார்..

    அதற்குள் இந்த சேதி மற்ற பேய்களுக்குத் தெரிஞ்சு போச்சு...

    ரெண்டு நாளா...
    பக்கத்திலேயே நிக்குதுங்க....

    இன்னொரு பாட்டு படியேன்....ந்னு சொல்லிக்கிட்டு!...

    ஒரு பதிவே போட்டுடுறேன்.
    அமாவாசை அன்னிக்கு..ந்னு சொல்லி வெச்சிருக்கேன்....

    பதிலளிநீக்கு
  18. மிக இனிமையான பாடல். முதல் முறையாக கேட்கிறேன். எஸ்.பி.பி. ஒரு ராட்சஸன்!👍

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பானு அக்கா.... இபப்டி ரசிக்கும்போது உற்சாகம் வருகிறது.

      //எஸ்.பி.பி. ஒரு ராட்சஸன்!//

      ஆம்... எனக்கு முன்னரே தெரியும்!

      நீக்கு
    2. //எஸ்.பி.பி. ஒரு ராட்சஸன்!//

      எஸ்.பி.பி இசையின்(அமிழ்தை விட இனிமையான குரல் வளத்தின்) ரட்சகனும் ஆவார்.

      நீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    இவ்வார வெள்ளி பாடல் ஏற்கனவே கேட்டு ரசித்திருக்கிறேன். எஸ்.பி பியின் குரல் ரசனைக்காகவே அப்போதெல்லாம் அவரின் பாடல்களை நிறைய கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த படத்தின் பெயரை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். படத்தின் ஹீரோ கார்த்திக்காகத்தான் இருக்கும். பார்த்திபனுக்கு இந்த பாடல் ஒத்து வராது. மிகவும் இனிமையான குரலுடைய பாடல். இப்போதும் கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.

      இந்த பாடல் நீங்களும் ஏற்கெனவே கேட்டு ரசிக்கும் பாடல்தான் என்பதை அறிய மகிழ்ச்சி.

      நீக்கு
  20. கடலோடு நதிக்கென்ன பாட்டுக்கு அடுத்து நல்ல சாய்ஸ் ஸ்ரீராம்! இதில் இன்னொரு பாட்டு தூத்துக்குடி சந்தையிலே அக்மார்க் வாலி சேட்டையில்! கில்லர் ஜி சொன்னதுபோல இது கார்த்திக் படம் தான்! பார்த்திபன் புதியபாதை ஹீரோவானது 1989 இல்தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கிருஷ் ஸார். நீங்கள் சொல்லும் பாட்டு கேட்டதில்லை! ஆனால் அப்போ இந்தப் பாடல் வாலியாகத்தான் இருக்க வாய்ப்பு?

      நீக்கு
    2. எல்லாப்பாடல்களுமே வாலிதான்!

      http://friendstamilmp3.net/Album/A-ZMovieSongs/Arthangal%20Aayiram

      நீக்கு
  21. இந்தப் படம் பார்த்த நினைவு. ஆனால் டக்கென்று இப்போது நினைவில் இல்லை. அப்போது மதுரையில்தானே இருந்தேன்.

    இது அருமையான பாடல். பல வருடங்களுக்குப் பிறகு கேட்கிறேன் மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி
    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  22. ஸ்ரீராம் இந்தப் படாலும் சரி பதிவுல சொல்லியிருக்கற மற்றொரு பாடலும் சரி இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் நிறைய கேட்டிருக்கிறேன். இலங்கை வானொலி உபயம். ஆனால் படம் எல்லாம் தெரியாது.

    இதில் எஸ்பிபி ராஜாங்கம் தான் என்ன இளம் குரல்...யெஸ் அந்தச் சிரிப்பு...அருமை இஅல்லியா....

    அருமையான இசை...சங்கர் கணேஷ்...செமயான ஆபோகி ராகம்...நான் ரசிக்கும் பாடல் ஸ்ரீராம்...ஆனால் மறந்து போன பாடலை மீண்டும் நினைவுபடுத்திட்டீங்க...மிக்க நன்றி

    கீதா

    பதிலளிநீக்கு
  23. கடலில் அலைகள் பொங்கும் பாடலும் எனக்கு மிக மிக ப்டித்த பாடல் தேஷ் ராகம்...செமையான பாடல் அதன் ஆரம்ப ட்யூனும் ரொம்ப அழகா தேஷ் ரசம் சொட்டும்...எஸ்பிபி ஆஹா அப்படியே கண்ணை மூடிக் கொண்டு கேட்கலாம்...என்ன வாய்ஸ் இல்லையா...

    கீதா

    பதிலளிநீக்கு
  24. கடலில் அலைகள் பொங்கும் பாடலும் எனக்கு மிக மிக ப்டித்த பாடல் தேஷ் ராகம்...செமையான பாடல் அதன் ஆரம்ப ட்யூனும் ரொம்ப அழகா தேஷ் ரசம் சொட்டும்...எஸ்பிபி ஆஹா அப்படியே கண்ணை மூடிக் கொண்டு கேட்கலாம்...என்ன வாய்ஸ் இல்லையா...

    கீதா

    பதிலளிநீக்கு
  25. கடலில் அலைகள் பொங்கும் பாடலும் எனக்கு மிக மிக ப்டித்த பாடல் தேஷ் ராகம்...செமையான பாடல் அதன் ஆரம்ப ட்யூனும் ரொம்ப அழகா தேஷ் ரசம் சொட்டும்...எஸ்பிபி ஆஹா அப்படியே கண்ணை மூடிக் கொண்டு கேட்கலாம்...என்ன வாய்ஸ் இல்லையா...

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!