சென்ற வாரப் பின்னூட்டங்களில் பேய்தான் பிரதானமாகக் காணப்பட்டது. ஆபத்து இல்லாத அஹிம்சை பேய்தான் போலிருக்கு. நன்றி பேயே! என்று சொல்லி, மறக்கலாம் என்று பார்த்தால்,
ஆ இது என்ன பேய் எல்லா நாட்களிலும் வந்து கருத்து சொல்லி இருக்கு! அது மட்டுமா ? சனிக்கிழமைப் பதிவில் நமக்கு ஒரு எச்சரிக்கை வேறு விடுத்திருக்கிறது!
'பேய்க்கு இடம் கொடேல்' என்று இருந்துவிடலாமா என்று ஒரு பக்கம் யோசனை வந்தாலும், நிம்மதியான தூக்கம் ஆசிரியர்களுக்கும் வாசகர்களுக்கும் வேண்டும் என்பதால்,
இதோ பேயைப் பற்றி .....
'பேயும் காலும் ' --- சில பேய்க் கவிதைகள்!
வந்திருப்பது பேயோ?
வந்தது ஐயம்.
பானுமதி வெங்கடேஸ்வரன் :
தந்திரமாக அறிய,
கேட்டேன் கேள்வியை
தேனில் குழைத்து
'உன் பாத அணி
அளவு என்ன கூறு'.
அது கிசு கிசுவென
காது அருகே 'சீரோ!'
எனக் கூறிச் சிரித்தது,
"""""""""
நேராகவே கேட்கலாமே சகோ!
பேயே உனக்குக் காலுண்டா?
'பேய்'க்குக் காலிருந்தால் அது
'போய்' இருக்கும் அன்றோ !
*******
ஏய் எனக்கு ஒரு சந்தேகம்
பேய் எப்படிப் பிறக்கிறது?
சிவம் _ இதன் கொம்பு
சிதைந்தால் அது சவம்
அந்தக் கொம்புக்கு இல்லை
நாமமும் ரூபமும்.
பேய்களுக்கும் இல்லை
பெயரும் உருவமும்.
""''"'''"""""""""
பேயே உனக்குப் பிடித்த
பி சுசிலா பாடல் எது?
நானே வருவேன்
இங்கும் அங்கும்
(பே)யாரென்று (பே)யாரறிவா ஆ ஆ ஆ ர்!
”""""""”"""""""
பேயே உனக்குப் பொங்கல்
பிடிக்குமா எனக் கேட்டேன்.
"பிடிக்காது, கால் உள்ளதால்.
பொங்கலில் கால் நீக்கினால்
பெங்கல். அதனால்தான்
பெண்களைப் பிடிக்கிறேன்."
^^^^^^^^^^^
பேயே உன் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டோம்
இனி இந்தப் பக்கம் வந்தால்
உன் காலை (அது இருந்தால் )
ஒடித்துவிடுவோம்!
👺👺👺👺👺😈
கேள்வி பதில்கள் :
பேய்க்காற்று, பேய் மழை என்கிறோம் ஆனால் பேய் வெய்யில் என்று ஏன் சொல்வதில்லை?
# வெயில் "அமைதி"யாகக் கொளுத்துகிறது. காற்று பேய்போல் ஊளையிடுகிறது - மழை 'பேய்'கிறது.
& வெயில் நேரத்தில் பேய்கள் உறங்கச் சென்றுவிடுவதால் அவைகளை வெயிலோடு சேர்த்துப் பார்ப்பதில்லை!
# கிட்டத்தட்ட எல்லாமேதான். 50 ரூ இன்விடேஷன் கார்டு, போட்டோ &
விடியோ (வீட்டவர்களே எடுத்து விடலாம்.)
வச்சுக் கொடுக்கிற ஜவுளி, ரிட்டர்ன் கிஃப்ட் குப்பை, தாம்பூலப்பை, கடனே என அளிக்கப்படும் லட்டு, முறுக்கு, அநாவசியமாக ஐம்பது ஐட்டம் டின்னர், ஆடம்பரத்துக்காக கூட்டப்படும் கூட்டம், அதிக விலை பட்டு, ஒருநாள் கூத்து ஸூட் கோட், எதைச் சொல்ல எதை விட ? பெரிய அளவில் மனமாற்றம் தேவை. வருமா ?
========================================
விடியோ (வீட்டவர்களே எடுத்து விடலாம்.)
வச்சுக் கொடுக்கிற ஜவுளி, ரிட்டர்ன் கிஃப்ட் குப்பை, தாம்பூலப்பை, கடனே என அளிக்கப்படும் லட்டு, முறுக்கு, அநாவசியமாக ஐம்பது ஐட்டம் டின்னர், ஆடம்பரத்துக்காக கூட்டப்படும் கூட்டம், அதிக விலை பட்டு, ஒருநாள் கூத்து ஸூட் கோட், எதைச் சொல்ல எதை விட ? பெரிய அளவில் மனமாற்றம் தேவை. வருமா ?
கல்யாணம், காது குத்து, கிரக ப்ரவேசம் என்று எந்த விசேஷமாக இருந்தாலும் உ.கி.கறி., அவியல், பருப்பு உசிலி, பால் பாயசம் என்று ஒரே மெனு. இதை மாற்ற வேறு ஏதாவது ஐடியா கொடுங்களேன்.
# வத்தக் குழம்பு, சுட்ட அப்பளம், மிளகுரசம், பானகம் என்று மாற்றிவிடலாமா ? ஆனால் மொய் அஞ்சு ரூபா தாண்டாது பரவாயில்லையா ?
========================================
Y Y பகுப்பாய்வு பற்றி சொல்ல வந்தேன் அல்லவா?
இந்த பகுப்பாய்வுக்கு முக்கிய அம்சம் ஒன்று உள்ளது.
அது, பகுப்பாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் நிகழ்வு, யார் பகுப்பாய்வு
செய்கிறார்களோ அவர்கள் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.
அலுவலக நிகழ்வு என்றால், அந்த நிகழ்வு பற்றி நன்கு தெரிந்த, பொறுப்புள்ள ஒரு குழு + குழுத் தலைவர் இதை நடத்த வேண்டும்.
இல்லை என்றால் இந்தப் பகுப்பாய்வால் பயன் இல்லை.
பகுப்பாய்வு செய்ய சில நிகழ்வுகள். (உதாரணங்கள் )
a) உங்கள் கார், வழியில் நின்றுபோய்விட்டது.
b) உங்கள் மனைவி அல்லது கணவர் உங்கள் மீது கோபம் கொண்டுள்ளார்.
c) நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன்.
d) நான் மிகவும் வருத்தமாக உள்ளேன்.
e) நான் மிகவும் கோபமாக உள்ளேன்.
---------------------------------------
a) உங்கள் கார், வழியில் நின்றுபோய்விட்டது.
ஏன்?
பெட்ரோல் இல்லை.
ஏன்?
போடவில்லை.
ஏன்?
கவனிக்கவில்லை.
ஏன்?
பாட்டு கேட்டுக்கொண்டு ஓட்டியதால்.
என்ன செய்யலாம்?
இனி எப்பொழுதும் ஆடியோ ஆன் செய்வதற்கு முன்பாக 'எரிபொருள் மானி' யை கவனித்து, எரிபொருள் தேவையான அளவு இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
b) உங்கள் மனைவி அல்லது கணவர் உங்கள் மீது கோபம் கொண்டுள்ளார்.
இது எனக்கு கடந்த பத்து ஆண்டுகளாக நிகழ்வதில்லை. அதற்கு முன்பும் நிகழ்ந்ததாக நினைவு இல்லை. உங்கள் யாருக்காவது இது அவ்வப்போது நிகழும் நிகழ்வு என்றால், ஏன் ஏன் பகுப்பாய்வு செய்து பாருங்கள். பகிர இயலும் என்றால் எங்களுக்கும் சொல்லுங்கள்.
c) நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன்.
ஏன்?
பங்கு சந்தையில் இன்றைய தினம் நானூறு ரூபாய்கள் லாபம் வந்தது.
ஏன்?
பங்குகள் சிலவற்றை விற்றதால்.
ஏன்?
அவற்றை குறைந்த விலையில் வாங்கியதால்.
என்ன செய்யலாம்?
ஒவ்வொரு நாளும் சந்தையில் எந்தப் பங்குகள் விலை குறைகின்றன, ஏன், அதன் ஒரு வருட ஏற்ற இறக்கங்கள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொண்டு திட்டமிட்டால் தொடர்ந்து சந்தோஷமாக இருக்கலாம்.
d) நான் மிகவும் வருத்தமாக உள்ளேன்.
ஏன்?
என்னுடைய பதிவுகளுக்கு கருத்துரைகள் அதிகம் வருவதில்லை.
ஏன்?
பதிவுகள் வாசகர்களுக்குப் புரியும் வகையில் அல்லது அவர்களின் சுவாரஸ்யத்தைத் தூண்டும் அளவில் இல்லை.
ஏன்?
நான் என்னுடைய கோணத்தில் மட்டும் சிந்திக்கிறேன்.
என்ன செய்யலாம்?
வாசகர்கள் எதை விரும்புகிறார்கள், எதை இரசிக்கிறார்கள் என்று தெரிந்து, அந்த விஷயங்களை எழுதவேண்டும், எளிய நடையில்.
e) நான் மிகவும் கோபமாக உள்ளேன்.
இது எனக்கு சரிப்படாத நிலை. நான் எப்பவுமே கிர்ர்ர்ரர்ர்ர்ர் எல்லாம் சொல்வதில்லை/ செய்வதில்லை. கோபமே வராது. உங்கள் யாருக்காவது இப்போ கோப நிலை இருந்தால் ஏன் ஏன் பகுப்பாய்வு செய்து பாருங்கள்.
பின் குறிப்பு :
கேட்கப்படும் எந்த ஏன் கேள்விக்கும் பொய்யான பதில்கள் கூடாது. 'ஏன் ஏன் பகுப்பாய்வு' உங்களுக்கு நீங்களே செய்துகொள்ளும் சுய பரிசோதனை. ஆகவே உங்களை நீங்களே கேள்வி கேட்டு, உண்மையான பதில்கள் கூறி, நிகழ்வின் மூல காரணத்தை அறிந்துகொள்ளுங்கள்.
சந்தேகம் எதுவும் இருந்தால், பின்னூட்டங்களில் கேளுங்கள்.
=========================================
அடுத்த வாரம் : P A C analysis பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
நன்றி! மீண்டும் சந்திப்போம்.
=========================================
வாழ்க நலம்...
பதிலளிநீக்குவாங்க... வாங்க...
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவாழ்க, வாழ்க! வாங்க, வாங்க!
நீக்குஇனிய காலை வணக்கம் கௌ அண்ணா/ அதாவது பேய் நட்பேய்!!! ஸ்ரீராம் துரை அண்ணா எல்லோருக்கும்...
பதிலளிநீக்குநட்பேயுடன் கா விட்டவங்க இன்னிக்குப் பயந்து போய் வரலை பாருங்க!!
ணான் சொன்னேன் அண்ணா இந்தப் பேய் நகைச்சுவைப் பேய்தான் பயமில்லைனு!!!!!
ஆஹா பேய்க்கவிதைகள் வாசிக்க வரேன்...கொஞ்ச நேரத்துல விடிஞ்சுருச்சுதான்...ஹிஹிஹி
கீதா
மீண்டும் மீண்டும் வருக!
நீக்குஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
நீக்குபேயோடு "காய்"தானே விட்டேன்! பேயை நானோ, என்னைப் பேயோ பயமுறுத்தலையே! அதுக்கு ஏன் பயந்துண்டு வராமல் இருக்கணும்? என்னோட காலை நேர வேலைகளின் அடிப்படையில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மாதிரி வருகிறாப்போல் ஆகிறது! அம்புடுதேன்! இப்போப் போயிடுவேன், சே, "பேயி"டுவேன்.
நீக்குஅன்பின் KGG, ஸ்ரீராம்..
பதிலளிநீக்குகீதாக்கா/ கீதா மற்றும் சபையின் நிரந்தர உறுப்பினர் ஆகிவிட்ட பேயார் அனைவருக்கும் அன்பின் நல்வரவு...
நல்வரவு. காலங்காத்தால பேயை இங்கே கூப்பிடாதீங்க.
நீக்குஉங்களுக்கும் இனி வரவிருக்கும் நட்புறவுகள் அனைவருக்கும் காலை வணக்கம், மற்றும் நல்வரவு துரை செல்வராஜூ ஸார்.
நீக்குஹா ஹா ஹா //சபையின் நிரந்தர உறுப்பினர் ஆகிவிட்ட பேயார்//
நீக்குதுரை அண்ணா நீங்க செமையா சிரிக்க வைக்கறீங்க
கீதா
வரவேற்ற துரை, ஸ்ரீராம், மற்றும் வந்திருக்கும் நண்பர்கள், வரவிருக்கும் நண்பர்கள், ஒளிந்து கொண்டு பார்க்கும் நட்"பேய்" ஆகியவர்களுக்கு நல்வரவும் வணக்கமும் வாழ்த்துகளும் பிரார்த்தனையுடன்!
நீக்குஎன்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலைதானே?
நீக்குNo No, you are my best friend! :) Like you very much.
நீக்குYES Welcome PEY ji. you have made the show interesting.😉😉😉😉😉😉😉
நீக்குயேய் யேய் ....... ஜிலிக்ருதா ஜிந்தி ஜலி பிலி நியோஷ்டுக் .....
நீக்குஇப்படி சொன்னால் எங்களுக்கு என்ன புரியும்? எங்க பாஷையில சொன்னாத்தான் எங்களுக்குப் புரியும். பேயே உன் மொழிபெயர்ப்பு அகராதி எங்கே?
நீக்குஹா ஹா ஹா ஹா ஹா....
நீக்குகௌ அண்ணா பேய் சொல்லுது என்னான்னா....ஹையோ என் மேல அன்பை காட்ட இப்படி ஐசை ஊத்தறீங்களே! நான் ஏற்கனவே ஜில்லிப்பு!! என்னைய பிலி நியோஷ்டுக் பண்ணலாமா?!!! நான் ஒன்னும் சென்னைல இல்ல உங்க ஐசை தாங்கிக்க என்று
அதான் ஓடிப் போயிடுச்சு போல...!!! நேக்குத் தெரியாது என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ ரெண்டு பேரும் பேய இங்க மீண்டும் கொண்டு வரணும்!! ஹிஹிஹி (கேட்டேளா!! நேக்கு பேய் பாஷை தெரியுமாக்கும்!!!)
பிலி நியோஷ்டுக் ஜிலி ஜிலி....பகிக்ருதா எகிக்ருதா? பதுக்கு கெதுக்கு ஜல்லி காலி...தப்பிதிப்பி..பில்லி வீலி...!!!!!!!!!!!!!!!!!
கீதா
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
நீக்குஅட! பரவாயில்லையே! பேய் பாஷையை நல்லாவே முழி சாரி மொழி பெயர்த்திருக்கிறீர்கள் போலிருக்கு. அதனால்தான் அதை இந்தப் பக்கம் காணோம்!
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
நீக்குபானுக்கா காலை வணக்கம்...
நீக்குகீதா
காலை வணக்கம்.
நீக்குகாலை வணக்கம் அனைவருக்கும். பேயாருக்கும் சேர்த்து. சார் நீங்க
நீக்குஸ்டவ்வில் வருவீங்களா. நீங்க சாரா லேடியா.
அது தெரியவில்லை. இப்போதைக்கு பேயார் பதிவில் மட்டும்தான் வந்துகொண்டு இருக்கிறார்!
நீக்குவல்லிம்மா பேய் பெயரை மாத்திருச்சு பழய ரூபத்துக்கு...காணாம போயிடுச்சு. இப்படிக் சொல்லிக்காம போகலாமோ?!!
நீக்குநாங்கலாம் பிரியா விடை கொடுத்து அனுப்பிருப்போமே!!! பேயோடு ஒரு கும்மி அடிச்சு பாட்டுப் பாடி, டான்ஸ் அல்லாம் ஆடி..ஒரு சின்ன விருந்து நாங்க எல்லாரும் செஞ்சு பாட்லக் வைச்சு..எஸ்பெஷலி கௌலாப்ஜாமூன்!!!!!!!!! படைத்து...சென்ட் ஆஃப் கொடுத்துருப்போம்ல...ஹூம்...இப்படிச் சொல்லாம கொள்ளாம போய்விட்டதே!!!!!!!!!!!
கீதா
OHO. GAULABJAMOONAA.HIHIHIHI
நீக்குஆஹா! பேய்க்கவிதைகள் ஹா ஹா ஹாஹ் ஆ....அதுவும் கால் சைஸ் ஜீரோ சிரித்துவிட்டேன்...
பதிலளிநீக்குபேயண்ணே எப்பூடி இப்பூடி யோசித்து செம..செம...
இன்று எங்க பேயண்ணன் பற்றி நிறைய எழுதிடறேன்...ஆனா என்னை எல்லாம் பயமுறுத்தக் கூடாதாக்கும்..சிரிக்கத்தான் வைக்கணுமாக்கும் கனவிலும் வந்து...சொல்லிப்புட்டேன் இல்லைனா பேயண்ணனை ஓட்டிப் பயமுறுத்துவேனாக்கும்!!!
கீதா
நன்றி.
நீக்குதிருமணச் செலவு பற்றிய கேள்விக்கான பதில் அட்டகாசம்..ஹைஃபைவ்!!!!! என் கருத்தும் அதே அதே...எனவே தொடக்கம் வரும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குகீதா
நன்றி, நன்றி.
நீக்கு# வத்தக் குழம்பு, சுட்ட அப்பளம், மிளகுரசம், பானகம் என்று மாற்றிவிடலாமா ? ஆனால் மொய் அஞ்சு ரூபா தாண்டாது பரவாயில்லையா ?//
பதிலளிநீக்குசெம ரெசிப்பி...ஆனால் மொய் எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது பானுக்கா சொல்லியிருக்கும் மெனுவே போட்டாலும் கூட...இதுதான் என் தனிப்பட்டக் கருத்து. கல்யாணம் என்பது எல்லோரும் நட்புகளும், உறவுகளும் கூடிக் களிக்கும் நிகழ்வாக அமைய வேண்டும் அது பண ரீதியாக இருக்கக் கூடாது..எனக்கு என் மாமா மகளுக்கு எங்கள் கிராமத்தில் வீட்டின் வீதியில் பந்தல் போட்டு நடந்த கல்யாணம், வீட்டுப் பசங்களுக்குப் போட்ட பூணூல் நிகழ்வுகள், பெயரிடும் வைபவம், சீமந்தம்...எல்லாம் நினைவுக்கு வருகிறது. அப்போது இருந்த அந்த அன்யோன்யம் இப்போது இல்லை என்பதை அடித்துச் சொல்ல முடியும்..பாட்டி இறந்ததும் எல்லாமே மாறியது...பசங்களும் வேலை என்று சென்னைக்கு மாறினாங்க...அமெரிக்கா போனாங்க....அதன் பின் எல்லாமே சென்னைலதான்...மிக மிக மிக நெருங்கிய உறவினர் மட்டுமே ஓடி ஆடி வரவேற்றல் எல்லாம் அடுத்தக்கட்ட நெருங்கிய உறவினர் எல்லாம் கரெக்டாக சாப்பாடு டைமுக்கு அல்லது முகூர்த்த நேரத்திற்கு வந்து ஹை பை யுடன் சென்று விடுவதையும் பார்க்கிறேன்...சமீபத்தில் நடந்த திருமணத்திலும் கூட. எல்லோரும் ஏனோ காலில் கஞ்சி கொட்டி வந்தது போல ஓடுகிறார்கள். ஞாயிறு என்றால் கூட...
கீதா
சிக்கனம் தேவை இக்கணம்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குவணக்கம். வாங்க!
நீக்குபேய் கவிதை நன்றாக இருக்கிறது .
பதிலளிநீக்குபேய்க்கு பிடித்த் பேய் பாட்டு எனக்கும் பிடிக்குமே !
பேயை ஓட ஓட விரட்டி விட்டீர்கள் கவிதை பாடி, காலை ஒடிப்பேன் என பயமுறுத்தி.
இனி வராது என்று ந்மபுவோம்.
நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் மீண்டும் வந்திருக்குதே! கால் இல்லை என்னும் தைரியம் போலும்!
நீக்குகேள்வி, பதில்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு//அதிக விலை பட்டு, ஒருநாள் கூத்து ஸூட் கோட், எதைச் சொல்ல எதை விட ? பெரிய அளவில் மனமாற்றம் தேவை. வருமா ?//
மனமாற்றம் வந்தால் நல்லது.
ஆம்.
நீக்குபேய்க்குப் பிடித்த பாடல் நமக்கும் பிடித்ததுதான்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு//பகுப்பாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் நிகழ்வு, யார் பகுப்பாய்வு
பதிலளிநீக்குசெய்கிறார்களோ அவர்கள் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். //
நம்மை நாமே சுயபரிசோதனை (தற்சோதனை)
செய்து கொள்வதுதான் நல்லது.
குறை சொல்லாமல் இருந்தாலே கணவன் மனைவியிடம் சண்டை வராது.
எப்போதும் பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும். (அது முடிகிற காரியமா)
கணவர் முற்றல் வெண்டைக்காய் வாங்கி வந்தாலும் ஏன் இப்படி வாங்கி வந்தீர்கள் ? என்று கேள்வி கேட்காமல் ஆஹா! வெண்டை வத்தல் போட வேண்டும் என்று நினைத்தேன் அதற்கு வாங்கி வந்தீர்களா? என்றால் சண்டை வராது.
இப்படி முற்றல் வெண்டைக்காய் வாங்கி வந்தால் என்ன செய்வது என்று கேட்டால் சண்டை. நல்லதை எடுத்துக் கொண்டு மீதியை தலையை சுற்றி தூரப்போடு என்று பதில் வரும்.
முற்றல் வெண்டைக்காயில் வற்றல் போட்டால் நார் நாராக இருக்கும். சாப்பிட முடியாது கோமதி! :(
நீக்கு// கணவர் முற்றல் வெண்டைக்காய் வாங்கி வந்தாலும் ஏன் இப்படி வாங்கி வந்தீர்கள் ? என்று கேள்வி கேட்காமல் ஆஹா! வெண்டை வத்தல் போட வேண்டும் என்று நினைத்தேன் அதற்கு வாங்கி வந்தீர்களா? என்றால் சண்டை வராது.// ஒருவகையில் இது அடுத்த வாரத்தின் PAC subject.
நீக்குமுற்றல் வெண்டைக்காயில் வற்றல் நல்லா இருக்காது தான் கீதா.
நீக்குபேச்சுக்கு சொன்னேன். நீங்கள் சொன்னது போல் நமக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது கீரை வகைகள் (அதிகம் வேலை கொடுப்பதை வாங்கி வந்தால் கோபம் வரும் தான். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்காமல் தேடி கொடுக்க வேண்டும் அப்போதும் கோபம் வருகிறது. நம்மை புரிந்து கொள்ளாமல் உறவினர் பேசும் போதும் கோபம் வரும் தான்.
அவர்களிடம் நம் கோபத்தை காட்ட முடியாதே!
கணவனிடம், மனைவியும், மனைவியிடம் கணவனும் கோபபட்டுக் கொள்ள வேண்டும். அதையும் எவ்வளவோ குறைத்துக் கொண்டுதான் வருகிறோம்.
வெண்டைக்காய் வாடி விட்டால் வற்றல் போட்டு விடுவார்கள்.
நீக்குநான் வற்றலுக்கு என்றே வெண்டைக்காய் வாங்குவேன். பாகற்காயும் அப்படித் தான். இப்போத் தான் உடம்பு சரியானதும் போன வாரம் வாங்கிய கொத்தவரையை வற்றல் போட்டு வைத்தேன். :) இன்னிக்கு அதில் தான் குழம்பு!
நீக்கு# கிட்டத்தட்ட எல்லாமேதான். 50 ரூ இன்விடேஷன் கார்டு, போட்டோ &
பதிலளிநீக்குவிடியோ (வீட்டவர்களே எடுத்து விடலாம்.)
//வச்சுக் கொடுக்கிற ஜவுளி, ரிட்டர்ன் கிஃப்ட் குப்பை, தாம்பூலப்பை, கடனே என அளிக்கப்படும் லட்டு, முறுக்கு, அநாவசியமாக ஐம்பது ஐட்டம் டின்னர், ஆடம்பரத்துக்காக கூட்டப்படும் கூட்டம், அதிக விலை பட்டு, ஒருநாள் கூத்து ஸூட் கோட், எதைச் சொல்ல எதை விட ? பெரிய அளவில் மனமாற்றம் தேவை. வருமா ?//
திருமணத்தில் அனேகமா எல்லாமே அநாவசியம் என்பது என எண்ணம். இன்விடேஷன் ஓரளவு நல்லா இருக்கணும்னா 100 ரூ + டிரெடிஷனல் மஞ்சள் இன்விடேஷன் + நட்புகளுக்கான இன்விடேஷன், ஆடம்பர மண்டபம், யார் வருவார் யார் வரமாட்டார் என்றறியாத திட்டம், சடங்குகள் என்ற பெயரில் செய்யும் பண வீண்டிப்பு, சரவணபவன் ஸ்பெஷல் சாப்பாடு 200 ரூபாய்க்கு கிடைக்கும்போது (அதுவே தரமற்றதாயிடுச்சு) அதைவிட சுமாரான சாப்பாடு ஒரு இலைக்கு 450-500, ரிசப்ஷனில் மெஹெந்தி, பலூன், பான், சாட் கவுன்டர் என்று ஒண்ணுத்துக்கும் உதவாத பண விரயம், ஒவ்வொரு லிஸ்டையும் பொறுமையா எடுத்தால் பணத்தை எப்படி நமக்கு அல்லது சம்பந்தப்பட்டவர்களுக்கு உபயோகம் இல்லாமல் வீண்டிக்கிறோம் என்று தெரியும். இதில், எப்போதும் லாக்கரில் வைக்கப்போகும் தங்கம்,
வெள்ளி....
மத ரீதியான சடங்குகள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஒரு ரிசப்ஷன் (பரிசு வாங்க அல்ல.. ஒன்லி உணவு, நினைவுக்கான போட்டோ). இதற்குமேல் செலவழிப்பது பைத்தியக்காரத்தனம். திருமணத்துக்கு 25 லட்சம் வீணாக்குவதை, பெண்ணுக்கு பத்து லட்சம் டிராஃப்ட், அனாதை விடுதிகளுக்கு பத்து லட்சம் அவர்கள் பெயரில் என்று செலவழிக்கலாம். இந்த மோய் பிஸினெசும் நிறுத்தப்பட வேண்டும் என்பது என் எண்ணம்.
நல்ல சிறப்பான யோசனை. என் பையன் கல்யாணத்தில் மொய் வேண்டாம், பரிசுப் பொருட்களை அனாதை விடுதிகளுக்குக் கொடுத்திடலாம் என்றுதான் நான் யோசனை செய்து வைத்திருந்தேன். மருமகள் வீட்டு சொந்த பந்தங்கள் இதற்கு உடன்படவில்லை.
நீக்குஆமாம், தெரிஞ்சவங்க பிள்ளை கல்யாணத்தில் சீரெல்லாம் வைக்க வேண்டாம்னு சொன்னது பெரிய தப்பாகி அந்த மருமகளே மாமியாரிடம் சண்டை போட்டாள். எங்க அப்பா, அம்மா எனக்குக் கொடுப்பதை வேண்டாம்னு சொல்ல நீங்க யார்னு கேட்டார்!
நீக்குகௌ அண்ணா ஹைஃஃபைவ்! எங்கள் வீட்டிலும் அதே கருத்து...நோ மொய் நோ கிஃப்ட்ஸ்....அப்படிக் கொடுக்கனும்னு பிடிவாதம்னா எல்லாமே ஆதரவற்றோர் இல்லத்திற்குத்தான்
நீக்குகீதா
நெல்லை கை கொடுங்க!!! ஹைஃபைவ்!!! உங்கள் கருத்துகள் அத்தனையும் டிட்டோ...
நீக்குகீதா
பேய்க்கவிதைகள் எழுதியது யார்? பேயே எழுதிக் கொண்டிருக்காது. நல்லா பேயோடு பழகியவங்க யாராவது எழுதி இருக்கணும். நல்லா இருக்கு எல்லாமும்!
பதிலளிநீக்குநன்றி!
நீக்குபானுமதி வெங்கடேச்வரன் மேடம்... ஏதோ காத்தாடி ராம்மூர்த்தியின் நாடக வசனம் எழுதியிருக்கீங்களே. அக்காரவடிசல், மோர்க்குழம்பு, பச்சிடி, இப்போல்லாம் கீர் என்று வெரைட்டி இருந்தாலும், பல திருமண விசேஷங்களில் கேடரிங் காரங்க நல்லாவே பண்ணுவதில்லை, சர்வீஸ் மிக மோசமா இருக்கே... அதைக் குறிப்பிட வில்லையே.
பதிலளிநீக்குரிசப்ஷன்னா இந்த மெனு, டிபன்னா இது என்பதுகளே மாறியாச்சே
என் பெண்ணுக்கு கல்யாணம் ஆகி பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. இப்போதைய மெனு நீதிகள் என்ன என்று தெரியாது.
நீக்குபானுமதி சொன்னது எதுவும் என் கண்ணுக்குத் தெரியாமல் பேயார் மறைச்சுட்டாரோ?
நீக்குகல்யாணங்கள் குறித்துச் சொல்வதானால் பதிவே எழுதணும். இங்கே பதில் சொல்லி மாளாது!
பதிலளிநீக்குஆம்.
நீக்குஎனக்குத் தெரிந்தவரை என் மனைவி கோப்ப்படுவதற்கு ஒரே காரணம்தான் இருக்கும். அவள் சொல்வதை கவனிக்க மாட்டேன், ஏதோ நினைவில் இருந்துடுவேன் இல்லைனா சொல்வதை முழுமையாக சொல்வதற்குள் பதில் சொல்ல ஆரம்பித்துவிடுவேன். எனக்கே இது தெரியும்போது எதற்கு ஒய் பகுப்பாய்வு? ஹா ஹா ஹா
பதிலளிநீக்குசரி.. நான் கோப்ப்படுவதற்கு அவளாகவே ஒய் புப்பாய்வு செய்யலாம்னா, எதற்குத்தான் கோப்ப்படுவதில்லை என்பது எனக்கே தெரியாதே
உண்மைதான். என் மனைவியும் அவள் சொல்வதை நான் காது கொடுத்துக் கேட்பதில்லை என்று கல்யாணம் ஆன புதிதில் மிகவும் கோபப்பட்டது உண்டு. குழந்தைகள் பிறந்த பின், அவள் சொல்வதை கேட்டு ரசிக்க இருவர் கிடைத்துவிட்டனர்.
நீக்கு//e) நான் மிகவும் கோபமாக உள்ளேன்.
பதிலளிநீக்குஇது எனக்கு சரிப்படாத நிலை. நான் எப்பவுமே கிர்ர்ர்ரர்ர்ர்ர் எல்லாம் சொல்வதில்லை/ செய்வதில்லை. கோபமே வராது. உங்கள் யாருக்காவது இப்போ கோப நிலை இருந்தால் ஏன் ஏன் பகுப்பாய்வு செய்து பாருங்கள். // கோபமே வராமல் இருப்பது என்பது எல்லோருக்கும் லபிக்காது. கொஞ்சம் மனம் என்னடா இது என்றாவது நினைக்கும் என்றே நினைக்கிறேன். அப்படியும் கோபம் வரவில்லை எனில் அவர்கள் உண்மையிலேயே ஞானிகள் தான். ஆனால் இந்த "கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" சொல்லுவதை எல்லாம் ரொம்பவே ஆழமான அர்த்தத்தில் எடுத்துக்கக் கூடாது. அதுவும் இணைய உலகில்! :)))) இது சும்ம்ம்மாஆ, உள உளாக்கட்டிக்கு என்பது என்னோடு பழகிய/பழகும் அனைவரும் நன்கு அறிவார்கள்! ஆகவே இது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை! நீங்க சரின்னு சொன்னா, இதுக்கும் "க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" சொல்லிட்டுப் போயிண்டே இருக்கேன்! :))))))))) Do not take it serious! :)
ஹா ஹா நானும் சும்மாதான் சொன்னேன்!
நீக்குஎன்னாதூ... கீசா மேடத்துக்குக் கோபமே வராதா? அவங்க நான் என்ன எழுதினாலும் கோப்ப்பட்டு கர்ர்ர்ர்ர்ர் என்று பதில் போடுவார். எனக்கும் பயத்துல ப்ரெஷர்லாம் எகிறும். அப்புறம் இரண்டு நாளுக்கு இணையம் பக்கமே வரமாட்டேனே...
நீக்குஎல்லாம் பொய்க்கோபமா? ச்சொல்லவே இல்ல..
நெல்லை, தெரிஞ்சுண்டு சொல்றீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் (கௌதமன் சார், இது என்னோட ட்ரேட் மார்க்! கோபம்னு வைச்சுக்காதீங்க! கண்டுக்காதீங்க!) :))))))))))
நீக்குஹா ஹா ஹா !! )))))))
நீக்குமற்றபடி பல விஷயங்களை/செய்திகளை/தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கையில் கேட்கையில் வீட்டில் சில மனிதர்களின் நடத்தையில் அவர்கள் சொல்லும் பொய்யான குற்றச்சாட்டுக்களில் கோபம்/அறச்சீற்றம் வரத்தான் செய்கிறது. வரத்தான் செய்யும்.
பதிலளிநீக்குசமீபத்தில் வந்த உறவினர்கள் நடந்து கொண்ட விதம் கோபத்தைத் தான் வரவழைத்தது. ஆனாலும் அவங்களிடம் காட்டிக்க முடியலை! கோபம் வெளிப்படவில்லை எனில் மனம் புழுங்கும். அதுவும் பிரச்னை தானே! வெளிப்படுவதே நல்லது என என் தனிப்பட்ட கருத்து!
ஆனால் நம் கோபத்தைப் புரிஞ்சுக்கறவங்க கிட்டே மட்டும் காட்டலாம். நம்ம ரங்க்ஸ் போன வாரம் எனக்கு உடம்பு சரியில்லாத சமயம் பார்த்து ஒரே நாளில் வாழைத்தண்டு, வெந்தயக்கீரை, முடக்கித்தான் கீரை, முருங்கைக்கீரைனு வாங்கித் தள்ளிட்டார். நானோ நாலு நாள் படுத்துட்டேன். அதைச் செலவு செய்யப் பட்ட கஷ்டம்! அப்போ அவரிடம் கோபம் தான் வந்தது. கேட்டுட்டு வாங்கக் கூடாதா என்று கோபத்துடன் சொல்லத் தான் செய்தேன். இதை வெளியே இருந்து பார்க்கிறவங்க சண்டைனு நினைக்கலாம். ஆனால் ஆற்றாமை என்பதை நேரில் பார்த்தவர்களே புரிந்து கொள்வார்கள். ஆகவே கோபம் என்பதும் மனிதர்களுக்கு வேண்டும் என்பது என் கட்சி/கருத்து! இல்லைனா உடம்புக்கு வந்துடாதோ! :)))))))
கோபம் என்பது இயலாமையின் ரூபம். இதை யோசித்துப் பாருங்கள். நம்மால் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க இயலும் என்னும் தன்னம்பிக்கை இருந்தால் எதற்கும் கோபம் வராது.
நீக்குமாமா, சமயம் பார்த்து பழி வாங்கிட்டாரோ? நல்ல தெக்கினிக்கா இருக்கே... நானும் ஃபாலோ பண்ண வேண்டியதுதான,
நீக்குஓரிரண்டு வாழைப்பூவும், தூதுவளைக் கீரையும் வாங்க மறந்துவிட்டாரே.. அடுத்த முறை நினைவுபடுத்திடறேன். அப்படியே வெறும் மல்லிகைப்பூ 200 கிராமும் வாங்கிக் கொடுத்திருக்கலாம், தொடுக்க
நீக்குஹா ஹா ஹா !
நீக்கு//அப்படியே வெறும் மல்லிகைப்பூ 200 கிராமும் வாங்கிக் கொடுத்திருக்கலாம், தொடுக்க// அதை விட்டுட்டேனா? அன்னிக்குப் பூத்தொடுக்க முல்லைப்பூ நூறுகிராம் வாங்கி இருந்தார். முடியலைனதும் அப்படியே உதிரியாப் போட்டுக்கறேன் என்று எடுத்து வைத்தார். நான் படுத்துட்டுப் படுத்துட்டு எழுந்து வந்து அன்று மாலை ஐந்து மணி வரை அதைத் தொடுத்து முடிச்சேன்! :(
நீக்குவாழைப்பூ வாங்குவார். நினைவா அப்போப் பார்த்துப் பூஷணிக்காயும் அல்லது வாழைத்தண்டும் வாங்கிடுவார். இரண்டையுமே உடனே பயன்படுத்தணும். இரண்டுமே இரண்டு, மூன்று நாட்களுக்கு வரும்! ஒரு வாழைப்பூ எங்களுக்கூ 3 நாட்கள் வரும். வாழைத்தண்டு 2 நாள் வந்துடும். பூஷணிக்காய் 20 ரூ கீற்று எனில் 3 நாள் வந்துடும். மிச்சம் காயை எப்படிச் செலவு செய்யலாம்னு மூளையைக் கசக்கிக்கொள்வேன்! :) இப்போ இன்னிக்குத் தான் அந்த முடக்கித்தான் கீரையை சூப் செய்து தீர்த்தேன். நேற்றோடு முருங்கைக்கீரை முடிஞ்சது! :)))))
நீக்கு//கோபம் என்பது இயலாமையின் ரூபம். இதை யோசித்துப் பாருங்கள். நம்மால் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க இயலும் என்னும் தன்னம்பிக்கை இருந்தால் எதற்கும் கோபம் வராது.// நான் "ஆற்றாமை" என்பதை நீங்கள் "இயலாமை" எனச் சொல்லுகிறீர்கள். கோபம் வந்தாலும் அப்புறம் அந்த வேலையை நாம் தான் குறிப்பாக நான் தான் செய்து முடிக்கிறேன்.வேறே வழி இல்லை. ஆனால் அந்த நேரம் கோபம் வரத்தான் செய்கிறது! ஆனால் தன்னம்பிக்கை என்பது வேறே, கோபப்படுவது வேறே என நினைக்கிறேன். ஏனெனில் தன்னம்பிக்கை இருப்பதால் தான் முடியலைனாலும் சமாளிக்கிறோம்! கோபம் என்பது பிறர் செய்யும் தவறினால் ஏற்படுவது என்பது என் கருத்து. இந்தப் பதிவே கோபம்னா என்ன என்னும் விளக்கங்கள் கொண்டதாக மாறிடப் போகிறது.என்னைப் பொறுத்தவரை சிரமங்கள்/கஷ்டங்கள் எல்லாம் எல்லோருக்கும் இருக்கும். ஆகவே ரொம்ப சீரியஸா எழுதறதுனும் வைச்சுக்க மாட்டேன். ஆகவே இது கொஞ்சம் தீவிர வெளிப்பாடா ஆயிடும்/ ஆகவே நிறுத்திக்கறேன். :))))))))
நீக்குநாம்தான் செய்யவேண்டும், நாம்தான் செய்யப்போகிறோம் என்றால், அதை சிரித்தமுகத்துடன், மனம் ஒன்றி செய்துவிடுவோமே! ஏன் கோபமாக இறுகிய முகத்துடன் செய்யவேண்டும்?
நீக்குமிச்சத்துக்கு நேரம் இல்லை. முடிஞ்சால் அப்புறமா வரேன்.
பதிலளிநீக்குமீண்டும் வருக!
நீக்குகவிதைகள் ரசிக்க வைத்தன...
பதிலளிநீக்குதிருமணச்செலவுகள் சொல்லிய வகைகள் அருமை.
இந்தப்பேய் யார் ?
எந்த?
நீக்குதேவகோட்டைஜி, பேயான பின் தெரிந்தென்ன லாபம். அது மாட்டுக்கு வந்துட்டுப் போகட்டும்.
நீக்குபேய்க்கவிதைகள் அருமை. பெண்களைப் பிடிக்குமாமே.
பேய் பிடித்த பெண்கள் இங்கு வந்து பின்னூட்டம் இடுவார்களோ.
கணவரோடு சண்டை போட்டு ஆறு வருடங்கள் ஆச்சு.
நான் போகும் இடத்துக்கு அவர் வரமாட்டார். அவர் செல்லும் இடங்களுக்கு
எ கா ஜிம் இங்கு நான் போக மாட்டேன்.
இப்ப அவர் திரும்பை வந்தால் சண்டை போட மாட்டேன் என்று நினைக்கிறேன் ஹாஹா.
உண்மைதான். சரிதான்.
நீக்குஐயோ...!
பதிலளிநீக்குஏன்?
நீக்குபேய்க்கவிதைகள் இப்படித் தொடருமானால்
பதிலளிநீக்குஏய்க்காமல் நான் வருவேன் பிரதி புதனும்
மேய்வதற்குக் கொஞ்சமாவது கிடைக்குமன்றோ !
நன்றி!
நீக்குபேய் சூப்பர். :)
பதிலளிநீக்குகேள்வி பதில் அருமை.
நன்றி.
நீக்குகீழிருந்து மேலாக d. நான் மிகவும் வருத்தமாக உள்ளேன்.
பதிலளிநீக்குஇதுக்குச் சொல்லி இருக்கும் காரணங்கள் எதுவும் எனக்குப் பொருந்தவில்லை. ஏனெனில் பல பதிவுகள் யாரும் படிக்காமல்/அல்லது படித்துக் கருத்திடாமல் போயிருக்கு! நான் அதெல்லாம் கண்டுக்கறதே இல்லை. இப்போத் தான் எ.பி.ரசிகர்கள் அனைவரோடும் நெருங்கிப் பழகிய பின்னர் யாரானும் வரலைன்னா கவலை வரும்! என்னவோ ஏதோ, காணலையேனு தோணும். மற்றபடி சொந்த வருத்தங்களை எல்லாம் நாம் தான் கடந்து வரணும். யாரும் அதற்கு ஆறுதல் சொல்ல முடியாது. உதவவும் முடியாது. நம் வருத்தத்தின் உண்மையான காரணம் நமக்கு மட்டுமே தெரியும்! நாம் தான் அதைச் சரி பண்ணிக்கணும்.
அது உதாரணம் மட்டுமே! ஏன் ஏன் பகுப்பாய்வு எப்படி செய்யலாம் என்பதற்கு வெவ்வேறு உதாரணம். அவ்வளவே!
நீக்குc. சந்தோஷமாக உள்ளேன். நெருங்கியவங்க வந்தால் சந்தோஷம் வரும். அவங்க கிட்டே இருந்து நல்ல செய்தி வந்தால் சந்தோஷம் வரும். என்ன தான் வெளியே சாப்பிட்டாலும் உள்ளூர ரங்க்ஸுக்கு என் சமையல் போல இல்லைனு தோணும்போது சந்தோஷம் வரும். மத்தபடி பங்காவது, சந்தையாவது! அதெல்லாம் போறதே இல்லை! பிடிக்கவும் பிடிக்காது! பணம் வந்தால் சந்தோஷமெல்லாம் வருமா என்ன? மனம் நிறைந்தாலே வருவது சந்தோஷம்!
பதிலளிநீக்குநெருங்கியவங்க வந்தால் சந்தோஷமாக இருக்கும் ஏன்?
நீக்குநல்ல செய்தி வந்தால் சந்தோஷமாக இருக்கும். ஏன்?
என் கணவருக்கு என் சமையல் பிடிக்கிறது என்று தெரியவந்தால் சந்தோஷமாக இருக்கும். ஏன்?
மீண்டும் சொல்கிறேன். நான் சொல்லியிருப்பது எனக்கான உதாரணம். அது மற்றவர்களுக்குப் பொருந்தாது. எனக்கு சந்தோஷம் அளிப்பது மற்றவர்களுக்கும் சந்தோஷத்தை அளிக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு.
b. உங்கள் கணவன் அல்லது மனைவிக்கு உங்கள் மேல் கோபம்
பதிலளிநீக்குகட்டாயமாய் இருக்கணும்! இல்லைனா ஒருத்தர் செய்யும் தப்பு இன்னொருத்தருக்குப் புரியாமலே போயிடும். அதோடு ரொம்பவே அடக்கிக் கொண்டு இருந்தாலும் பின்னால் அது பெரிதாக வெடிக்கலாம். அடக்கிக் கொள்பவர் கோபத்தின் உண்மையான காரணத்தைப் புரிந்து கொண்டிருக்கணும். இல்லைனா கஷ்டம் தான்! அதோடு இம்மாதிரிச் சின்னச் சின்னச் சண்டைகள், கோப தாபங்கள், குறைகள், நிறைகள் எல்லாம் இருந்தால் தான் வாழ்க்கை! பின்னால் நினைத்துப் பார்த்தால் இந்த அல்ப காரணத்துக்கா சண்டை போட்டோம்னு தோணும்! ஆனால் அதை வைச்சு மறுபடி சண்டை வராமல் இருக்கணும்! இஃகி, இஃகி,இஃகி,இஃகி!
கோபம் இருக்கவேண்டுமா அல்லது கூடாதா என்பது அல்ல ஆராயப்படும் விஷயம். அது நல்லதா அல்லது கெட்டதா என்பதும் அல்ல. ஏன் வந்தது என்று தெரிந்துகொள்ள அல்லது உணர்ந்துகொள்ள தொடர்ச்சியாக பல ஏன் கேள்விகள் கேட்டுக்கொண்டோம் என்றால், மூல காரணத்தைக் கண்டறியலாம் என்பதுதான் நான் சொல்ல வந்தது. இது நமக்கு நாமே செய்துகொள்ளும் சுய பரிசோதனை. எந்த நிகழ்வுக்கும் அல்லது மனநிலைக்கும் மூல காரணத்தை நாம் அறிந்துகொள்ள ஐந்து ஏன் போதும்.
நீக்குa.கார் நின்னு போச்சு! ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் காரெல்லாம் வைத்துக் கொண்டால் பராமரிப்பு சொந்தமாக இருக்கணும். அன்றாடம் துடைத்து ஒரு முறை வண்டியைக் கிளப்பிப் பார்த்து, வாரம் ஒரு முறையாவது 5 கிலோமீட்டர் தூரமாவது ஓட்டிப் பார்த்து, பெட்ரோல் சரியா வருதா, லீக் இல்லையே என்றெல்லாம் பார்ப்பதோடு முக்கியமா இப்போதுள்ள கார்களில் ஏசியும் சரியா இருக்கானு பார்க்கணும். பெரும்பாலும் நாங்கள் பயணிக்கும் ஃபாஸ்ட் ட்ராக் வண்டிகளில் ஏசி பராமரிப்பு மிக மோசம். இப்போல்லாம் ஃபாஸ்ட் ட்ராக் வண்டி எடுக்கவே யோசிக்கிறோம். சொந்தக் கார் இல்லாததால் மேற்சொன்ன பிரச்னைக்கான காரணிகள் குறைவு. ஆனால் கார் இருந்தால் பராமரிப்பும் சரியா இருக்கணும்.
பதிலளிநீக்குபகுப்பாய்வுக்கு ஓர் உதாரணம் மட்டுமே, நான் சொல்லியிருப்பது. ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அவற்றை ஒவ்வொன்றாகக் கூறி அல்லது எழுதி, ஒவ்வொன்றுக்கும் ஏன் கேள்விகள் தொடர்ச்சியாகக் கேட்டுக் கேட்டு, மூலக் காரணத்தை அறியலாம். நான் சொல்லியிருப்பது மட்டுமே கார் நின்றுபோகக் காரணம் என்று நான் சொல்ல வரவில்லை.
நீக்குபேயார் கவுஜ எல்லாம் எழுதறாரா?
பதிலளிநீக்குஅப்டீன்னா இது பேயார் வாரம்னே ஒரு வாரம் முழுக்க ஞாயிறு பேயார் படங்கள் திங்கற கிழமைல சமையல் ரெசிப்பி செவ்வாய் கே வா போ கதை புதன் கேள்விபதில் விசாலக்கிழமைக்கு பேயார் ஆன்மிகம் வெள்ளிக்கிழமை வீடியோ சனிக்கிழமை சுயவிமரிசனம்னு ஜமாய்ச்சுடலாம் போல இருக்கே கௌதமன் சார்!
இதை பேயார் படிக்கட்டும். நான் என்ன சொல்வது!
நீக்குதற்போதய திருமணங்களில் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியது மணமகள் ரவிக்கைக்காக செலவிடும் பணம். இவர்களோ புடவையே கட்டிக் கொள்வதில்லை. கட்டிக்கொள்ளாத புடவைக்கு போட்டுக்கொள்ள ப்ளவுசுக்கு ஐயாயிரம் தையல் கூலி.
பதிலளிநீக்குமற்றொரு அபத்தம் கேண்டிட் ஃபோட்டோக்ராஃபி.
என் சினேகிதி அவளுடைய அமெரிக்காவில் வசிக்கும் மகள் எத்தனை சொல்லியும் கேட்காமல் கேண்டிட்ஃபோட்டோக்ராஃபிக்காக மட்டும் ரூ.இரண்டு லட்சம் செலவழித்தாள் என்றும், அதே போல சங்கீத் வைத்துதான் தீர வேண்டும் என்றும் கூறி விட்டாள். அதற்கு ஒரு இரண்டு லட்சம்" என்று மகளின் திருமணத்தைப்பற்றி கூறி வருத்தப் பட்டுக் கொண்டாள்.
சங்கீத், மெகந்தி இதெல்லாம் புதிதாக சேர்ந்திருக்கும் அனாவசியங்கள்.
திருமணத்தில் எல்லாமே அனாவசியங்கள்தாம். அவங்க அவங்க வழில வரும் 'தாலி கட்டும்' நிகழ்ச்சி மட்டும் ஓகே. அதன் பிறகு விருந்தினர்களுக்கு சாப்பாடு. இன்விடேஷன்லயே எழுதிடணும், மேடையில் நடக்கும் நிகழ்ச்சியை அவங்க அவங்க இடத்துலேர்ந்தே முடிஞ்சா பாருங்க, இல்லைனா சாப்பிட பந்திக்குப் போங்க. ஏதோ நீங்களே தாலி கட்டப்போறதுபோல பலாப்பழத்துல ஈ மொய்ப்பதுபோல் மேடையை மொய்த்து எல்லோருக்கும் இடைஞ்சல் பண்ணாதீங்கன்னு. இந்தப் பிரச்சனையைப் பார்த்திருக்கீங்களா பா.வெ. மேடம்?
நீக்குரிசப்ஷன், கலாச்சார திருமணத்துக்கு அழைக்க முடியாத ஆபீஸ் நண்பர்களுக்காக, மற்றும் மற்றவர்களுக்காக ஏற்பட்டது. சங்கீத், மெகந்தி மட்டுமல்ல, எல்லாமே அனாவசியம்தான்.
Sangeeth ,mEhandhi all for glamour.
நீக்குசமீபத்தில் பார்லிமெண்ட் உரை நிகழ்த்த ஜனாதிபதி வரும்போதும் போகும்போதும் நூற்றுக் கணக்கான குதிரை வீரர்கள் ஜனாதிபதியின் காரோடு சென்று வந்ததைப் பார்க்கும்பொழுதும் எனக்கு எதற்கு இந்த அனாவசிய குதிரை show என்றுதான் தோன்றியது. சுதந்திரதின / குடியரசு தின ஊர்வலங்கள் என்றால் கூட இந்தியாவின் prestige show என்று ஒப்புக்கொள்ளலாம். ஆனால் நம் நாடாளுமன்றத்தில், நம் ஜனாதிபதி, நம் உறுப்பினர்களுக்கு உரை நிகழ்த்த வரும்போது எதற்கு இந்த வேண்டாத பகட்டுகள் என்று தோன்றியது. ஜனாதிபதி பயணிப்பது ஒரு காரில். அவருக்கு முன்னும் பின்னும் எதற்கு இந்த பந்தா? பிரிட்டிஷ் அரசாங்கம் தொடங்கி வைத்த ஒரு வழக்கத்தை எதற்கு நாம் கண்மூடித்தனமாக பின்பற்றவேண்டும்?
நீக்குபானுக்கா இந்த சங்கீத் யெஸ்யெஸ் டிஜே எல்லாம் வைத்து செய்கிறார்கள் ....அதே அதே 2.5 லட்சம்...நான் மயங்கிவிட்டேன்.
நீக்குநான் பார்த்த வரை சங்கீத் எல்லாம் டிஜே, அலங்காரம் எதுவும் அத்தனை இல்லாமல் உறவினர் நட்புகள் ஆடிப் பாடி களிப்பது தான் செலவே இல்லாமல்...ஒரு வடக்கத்தி கல்யாணத்தில் இங்கும் பார்த்தேன் சென்னையிலும் பார்த்தேன். அழகாகச் செய்தார்கள். செலவு எதுவும் இல்லை. இதற்கு எதற்கு டிஜே என்று தெரியவில்லை..வேஸ்ட்...அது போல மெஹந்தி...இதுவும் நாம் மருதாணி அரைத்து வைத்துக் கொள்ளலாம் கையில் முழங்கை வரை போடுவது ஃபோட்டோவில் வரப் போகிறதா என்ன? எதற்கோ இப்படியானச் செலவுகள்....என்னவோ போங்க...
கீதா
நண்பர் பத்திரிகை கொடுத்திருந்தார். ஆறரை மணிக்கு வரவேற்பு என்று போட்டிருந்தார்கள்.நாங்கள் ஏழுமணிக்கு ஆஜர்.கொஞ்சம் உட்கார்ந்திருந்து, மொய் எழுதி, சாப்பிட்டுத் திரும்பி வர நேரம் சரியாய் இருக்கும் என்று கணக்குப் போட்டோம். மணமகள் அலங்காரம் முடிந்து (வெளியிலிருந்து) வரும்போதே மணி எட்டேகால்...
பதிலளிநீக்குஹையோ ஸ்ரீராம் அது இன்னொரு கூத்து......
நீக்குகீதா
கடவுளும் பேயும் ஒன்று இரண்டுமே ஏதோ பயம்சார்ந்த நம்பிக்கையின் விளைவு இருந்தாலும் பேய்க் கவிதை நன்று காலைப் பிரதனமாக நினைத்து எழுதியது போல் இருக்கிறது திருமணம் வாழ்வில் ஒரு முறை வருவது நன்குகொண்டாடினால் நினைவுகளில் மிதக்கும் காஞ்சி பெரியவரின் அட்வைசை கேட்காதவர்கள் நாம் திருமணத்துக்கு பட்டு உபயோகம் கூடாது என்றாராமே அதையே பெரியவரின் பக்தர்கள் காதில் வாங்கிக் கொள்வதில்லையே பட்டு இல்லாத திருமணமா நல்ல விருந்து இல்லாதகல்யாணமா
பதிலளிநீக்குஉண்மைதான் நீங்கள் சொல்வது. கதர்ப் பட்டு, அஹிம்சா பட்டு என்றெல்லாம் கூட உள்ளன என்று சொல்கிறார்கள். ஆனாலும் ப(க)ட்டு மோகம் குறையவில்லை!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அருமை. பேய் கவிதைகள் அதைவிட அருமை. கவிதை கிடை(படி)த்த திருப்தியில் நாளையிலிருந்து எ.பியில் பேய் நடமாட கொஞ்சம் யோசிக்கும் என நினைக்கிறேன்.
திருமணங்களுக்கு கொஞ்சம் செலவு செய்வதென்பது அந்த காலத்திலிருந்தே முறையாக வருவதுதான். ஆனால் இப்போதுள்ள கால நாகரீகங்களுக்கு (அந்தஸ்து என்றும் வைத்துக்கொள்ளலாம்) தகுந்த மாதிரி செலவீனங்கள் சற்று மிகைப்பட்டது மாதிரி தெரிகிறது. அந்த காலத்தில் திருமணம், போன்ற பிற விஷேடங்களுக்கு வருகிறவர்களின் பரிசளிப்பு என்பது வெறும் இரண்டு ரூபாயிலிருந்து கூட ஆரம்பிக்கும். (இதே சமையல் சாப்பாடு, சீர் பட்சணங்கள் உறவுகளை ஒருவாரம் முன்பே வரவழைத்து கவனிப்பது, இத்யாதிகள் இருந்தும் கூட..) இப்போது பரிசளிப்பு இரண்டாயிரம் ரூபாய் ஆரம்ப கட்டமாக இருக்கும் போது, அதற்கு தகுந்த ஆடம்பரங்களும் தேவையான ஒன்றாகி விட்டது. அதுபோக அப்போதைய பழக்க வழக்கங்களை எப்போதும் போலவே காட்டிக் கொள்ளவும், இப்போதுள்ள அனைவரும் விரும்புவதில்லை. சம்பிரதாயங்கள் சிலவற்றை குறைக்கிறேன் என்பது போல காட்டி விட்டு, புகுத்தி விடும் வேறு பாணிகளில், நிறைய விரயங்களை தருவித்துக் கொள்கிறார்கள். (சாப்பாடு, ஆடை அணிகலன் நாகரீகச்செலவுகள் போன்றவைதான்) மொத்தத்தில் இப்போதுள்ள காலகட்டத்தில், யாரலும் தவிர்க்க முடியாததுமாகவும் ஆகிவிட்டது. "ஊரோடு ஒத்து வாழ்" என்பது மாறி, இப்போது "காலத்தோடு ஒத்துப் போகிறார்கள்."
இன்றைய பதிவில் அனைத்துமே நல்ல அலசலாக உள்ளது.( பேயையும், அதற்கென்றே "படை(யலிட்ட)த்த" கவிதையையும் சேர்த்து.) பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அலசலுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி!
நீக்குநல்ல விருந்து வேண்டியதுதான்.ஆனால் எல்லாம் ஒரே டெம்ப்ளேட் ஆக இருப்பதுதான் அலுப்பூட்டுகிறது.
பதிலளிநீக்குஉண்மைதான்.
நீக்குஎங்கள் நட்பேயிடம் சில கேள்விகள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நட்பேய் என்று பெயர் சூட்டிய நம் தானைத் தலைவி, கைக்குழந்தையாகவே இருக்கும் எங்கள் கீதாக்காவுக்கு க்ரெடிட்ஸ்!!! நான் நேற்று பேயுடன் ஒரு பேட்டி என்று இங்கு கேள்விகள் கேட்க நினைத்து முடியாமல் போய்விட....இன்று வெங்கட்ஜியின் தளத்தில் பழைய பதிவுகளை வாசித்த போது அங்கு பேயுடன் பேட்டி என்று ஒரு கட்டுரையின் சுட்டி வந்துவிட நான் ஆஹா காப்பி ஆகிடுமே என்று பயந்து அந்தத் தலைப்பை விட்டேன். அந்தக் கட்டுரியயை நான் இன்னும் வாசிக்கவில்லை. நான் கேட்டிருக்கும் கேள்விகளும் அந்தக் கேள்விகளும் ஒரே போன்று இருக்கா என்று பார்த்துவிட்டு வருகிறேன்...அப்புறம் காப்பி என்று வந்துவிடக் கூடாதே என்ற கவலைதான்...
பதிலளிநீக்குகீதா
அந்தப் பேய் பேட்டி ரொம்ப அருமையாக எழுதியிருக்கிறார் மருதன் அவர்கள். நல்ல காலம் நான் கேட்க நினைத்து எழுதி வைத்திருக்கும் கேள்விகளை விட நல்ல அழகான கேள்விகளை மருதன் கேட்டிருக்கிறார்..ஸ்வாரஸியமான பேட்டி அது.
பதிலளிநீக்கு.சரி இப்ப கேள்விகள்...(எங்கள் நட்பேயார் பதில் சொல்வார் என்று நம்புகிறேன்!!!!!)
எங்களின் நட்பேயார் அவர்களே! நீங்கள் வணக்கம் எப்படிச் சொல்வீர்கள்?
இங்கு எந்த ரூபத்தில் உலவுகிறீர்கள் எங்களின் யார் கண்ணிலும் படவில்லையே!! ஹிஹிஹி.
இங்கு செம ஃப்ரீயாக உலவுகிறீர்களே.....உங்கள் வாகனம் என்னவோ? ட்ராஃபிக் ஜாம் எதுவும் இல்லையோ? சிக்னல் எல்லாம் உண்டோ?
உங்களுக்கு குழுமம் எல்லாம் உண்டா? அதில் உங்கள் டிபி என்னவாக இருக்கும்?
பேயார் குளியல் எல்லாம் உண்டா? பல் உண்டா இல்லை பல்கொட்டிப் பேயாரா?!!!!!!
உங்கள் குடியிருப்பு எது? எபிதானா இல்லை ஆங்காங்கே அவ்வப்போது ட்ராவலிங்கா!!? வேப்பமரம் இல்லா இருப்பிடமோ?!!!!!!!!!!!!!!!!
பேயாரிடமிருந்து ஒரு சமையல் குறிப்பு எதிர்பார்க்கலாமா?! ஹிஹிஹி ப்யூர் வெஜிட்டேரியனாத்தான் இருக்கணுமாக்கும்...லேடீஸ் ஃபிங்கர்னு எல்லாம் போடப்ப்டாதாக்கும்..
எங்கள் நட்பேயார் ஜாலி என்பதால் தான் இப்படியான சும்மா கலாய்த்தல் கேள்விகள்...ஜாலியான சிரிக்க வைக்கும் பதில்களே வரும் என்பதால்....ஜாலிக்குத்தான் கௌ அண்ணா...
ஜக்கு ஜிக்கு ஜமைக்கா. ஜிம்மு கம்மு குமைக்கா...(ஹிஹிஹிஹி)
கீதா
பேய் பதில்கள் சொல்லுமா என்று பொறுத்துப் பார்ப்போம்!
நீக்குபேய் கவிதைகளை ரசித்தேன்.
பதிலளிநீக்கு