1) பரஸ்பர உதவி... மனிதம்.சிவகங்கை அடுத்த சக்கந்தி மில் கேட் பகுதியைச் சேர்ந்த சுபஜா (மாற்று திறனாளி பெண்) தேசிய கூடைப்பந்து போட்டியில் பங்கேற்க சமூக வலைதளம் மூலம் தஞ்சை வாலிபர் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த சேரன் நிதி திரட்டி வழங்கினார்.
2) ".............என் வீட்டருகே இருந்த பழைய கிணற்றில், மழைத் தண்ணீரைசேமிக்க திட்டமிட்டேன். பலரும் கேலி செய்தனர்.அதை நான் பொருட்டாக கருதவில்லை. கஜா புயலுக்கு முன், தொட்டி கட்டும் பணிகள்அனைத்தும் முடிந்தன.புயலின் போது, மழை நீரால், தொட்டி நிரம்பியது. அந்த நேரத்தில் மின்சாரம் இல்லாததால், ஆழ்குழாய் கிணறுகளும் இயங்கவில்லை.இதனால், சேகரிக்கப்பட்ட மழைநீர், எனக்கு மட்டுமின்றி, சுற்றியுள்ள, 30 குடும்பங்களுக்கும் பயன்பட்டது........."
புதுக்கோட்டை, ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்த வீரமணி.
3) மறுபடியும் தண்ணீர் செய்தி. ஆனால் இப்போது இதெல்லாம்தான் முக்கியத்துவம் வாய்ந்த செய்தி. தன்னார்வலர்கள், பொதுமக்கள் கரம் கோர்த்ததால், ஆண்டிபாளையம் குளம், வற்றாத நீர்நிலையாக மாறியிருக்கிறது. இதன்மூலம்,அப்பகுதியில் நிலத்தடி நீர் வற்றாமல் பாதுகாக்கப் படுகிறது.
4) சென்னை, பல்லாவரத்தில், தன் சொந்த செலவில், மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும், வெங்கடேசன் என்பவரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
புதுக்கோட்டை, ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்த வீரமணி.
3) மறுபடியும் தண்ணீர் செய்தி. ஆனால் இப்போது இதெல்லாம்தான் முக்கியத்துவம் வாய்ந்த செய்தி. தன்னார்வலர்கள், பொதுமக்கள் கரம் கோர்த்ததால், ஆண்டிபாளையம் குளம், வற்றாத நீர்நிலையாக மாறியிருக்கிறது. இதன்மூலம்,அப்பகுதியில் நிலத்தடி நீர் வற்றாமல் பாதுகாக்கப் படுகிறது.
4) சென்னை, பல்லாவரத்தில், தன் சொந்த செலவில், மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும், வெங்கடேசன் என்பவரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
======================================================================================================
கடந்த வார பதிவுகளின் விமர்சனம். இந்த வாரம் விமர்சனத்துக்குப் பொறுப்பேற்றிருப்பவர் திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள்.
******************************
வலையுலகில் எங்கள் புதிய பாணி என்று முழங்குவதற்கு ஏற்றாற்போல் ஒரு ப்ளாகை வாரப் பத்திரிகை போல் நடத்தி வரும் அதன் ஆசிரியர் குழுவிற்கு முதலில் என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். சமையல், கேள்வி பதில், யாத்திரை, கவிதை, கதை, புகைப்படம் என்று அத்தனையும் இடம் பெறுகின்றன. தலைங்கம்தான் மிஸ்ஸிங்.
சனிக்கிழமையன்று வருபவர்கள் எண்ணிக்கை கொஞ்சம் குறைவாக இருக்கும். அதை அதிகரிக்கவோ, அல்லது புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமோ, அல்லது அந்த இரண்டுமோ, ஒரு வார காலம் எங்கள் ப்ளாகில் வெளியான பதிவுகளை ரெகுலராக எ.பி.க்கு வருகை தரும் எழுத்தாளர்களைக் கொண்டே விமர்சனம் செய்யச் சொல்கிறார் ஸ்ரீராம்.
வருபவர்களும் வெளுத்துக் கட்டுகிறார்கள். இன்று என் முறை. நம் முறை வரும் பொழுது உரையாடல் போல் எழுதலாம் என்று நினைத்தேன். அதை துரை செல்வராஜ் சார் செய்து விட்டார். மதிப்பெண்கள் வழங்கலாம் என்றால், அதை கமலா ஹரிஹரன் வழங்கி விட்டார். அவர் வருகை தந்தவர்களின் எண்ணிக்கையையே மதிப்பெண்ணாக அளித்திருக்கிறார். நானும் மதிப்பெண்கள்தான் அளிக்கலாம் என்று நினைக்கிறன், பத்திற்கு எவ்வளவு என்று. "நீ பெரிய அப்பாடக்கரா?" என்று கேட்க மாட்டீர்கள் என்று ஒரு நம்பிக்கைதான். முன்னுரை நீண்டு விட்டது. மன்னிக்கவும்.
சனிக்கிழமை - ஜூன் 15, பாசிட்டிவ் செய்திகள்:
நாளை என்பது நன்றாக இருக்கும் என்று நம்புகிறவள் நான். அதனால் சனிக்கிழமை பாசிட்டிவ் செய்திகளை வாசிப்பது எப்போதுமே மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம். உலகம் நல்லவர்களால் நிரம்பியது என்பதை தெரிந்து கொள்ளும் பொழுது வாழ்க்கையில் நம்பிக்கை அதிகரிக்கிறது.
திறமை இருந்தும் கல்வியைத் தொடர முடியாத மாணவனுக்கு உதவ முன்வந்திருக்கும் திரு ராமலிங்கம் அவர்களை பற்றியும், தேளின் விஷத்திலிருந்து காச நோய்க்கான மருந்து கண்டு பிடிப்பதில் இந்திய விஞ்ஞானிகளின் பங்கு பற்றிய செய்தியும் இன்றைய பாசிட்டிவ் செய்திகளில் இடம் பிடித்திருக்கின்றன. முதலாவது சந்தோஷத்தையும், இரண்டாவது பெருமையையும் அளிக்கிறது.
இந்த வார படைப்புகளை விமர்சனம் செய்திருப்பவர் சகோதரி கமலா ஹரிஹரன். பின்னூட்டம் இடும் பொழுதே விரிவாக, அழகாக செய்யும் அவரை விமர்சனம் செய்யச் சொன்னால் கேட்க வேண்டுமா? பொருத்தமான படங்களோடு கலக்கி விட்டார்.
பாசிட்டிவ் செய்திகள், வாராந்திர விமர்சனம் இரண்டிற்குமாக நான் கொடுக்கும் மதிப்பெண் 9/10
ஞாயிறு - ஜூன் 16:
இந்த ஞாயிறன்று டான்பாஸ்கோ மியூசியத்தில் இருக்கும் கலைப்பொருட்களை புகைப்படமாக காண கொடுத்திருக்கிறார்கள். எல்லாமே துல்லியம்.
ஞாயிறு வார இறுதி என்பதால் அதிக விஷயங்கள் இல்லாமல் புகைப்படங்களோடு நிறுத்திக் கொள்கிறார்கள். வேறு ஏதாவது சேர்த்து அதாவது பழைய புகைப்படங்கள், புகைப்படங்களுக்கு பின்னால் இருக்கும் கதைகள், வாசகர்களால் மறக்க முடியாத புகைப்படங்கள் இப்படி ஏதாவது சேர்த்து இன்னும் கொஞ்சம் ஸ்வாரஸ்யமாக்கலாம்.
ஞாயிறு பதிப்பிற்கு என்னுடைய மதிப்பெண் 6/10.
திங்கள் - ஜூன் 17, திங்கற கிழமை:
திங்கள் கிழமையை திங்கற கிழமையாக்கிய பெருமை எ.பி.க்கு உண்டு. ஒவ்வொரு வாரமும் பெண்களோடு போட்டி போட்டுக் கொண்டு ஆண்களின் கை வண்ணமும் இருப்பது சிறப்பு. இதில் என்னைக் கவர்ந்த விஷயம் இதற்கு வரும் பின்னூட்டங்கள். வெளியாகியிருக்கும் சமையல் குறிப்பை படித்து விட்டு, அவரவர் தங்கள் தங்கள் வீட்டு பழக்கங்களை பகிர்ந்து கொள்வது ரசனைக்குரியது.
நான் விமர்சனம் எழுதும் வாரத்திலேயே என்னுடைய சமையல் குறிப்பு வெளியாவது அசந்தர்ப்பமானதுதான். இங்கு நான் எழுதும் சமையல் குறிப்புகளைப் பற்றி சில விஷயங்களை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நான் ப்ளாக் எழுதத் துவங்கிய ஆரம்பத்தில் சமையல் குறிப்புக்கள் எழுதக் கூடாது என்று நினைத்தேன். காரணம், எக்கசக்கமான ஃபுட் ப்ளாகுகள். இருந்தாலும் அது பெரும்பாலோருக்கு பிடிப்பதால் எழுதுவதில் தவறில்லை என்று எ.பி.யின் திங்கற கிழமையில் பங்கேற்க ஆரம்பித்தேன். நான் அனுப்பும் சமையல் குறிப்புக்கள் பெரும்பாலும் மிகவும் எளிமையாக இருக்கும். காரணம், சமையல் குறிப்புகளை பார்த்து சமைக்க தொடங்குபவர்களுக்கு, "ஈஸியாகத்தானே இருக்கு, முயற்சிக்கலாம்" என்று தோன்ற வேண்டும் என்னும் எண்ணம்தான்.
"அதற்காக பீட் ரூட் பச்சிடியா?" என்று கேட்டால், அது கூட சிலருக்கு புதிதாக இருக்கலாமே? வகுப்பில் ஒரு ஆசிரியர் பாடம் நடத்துவது முதல் பெஞ்ச் மாணவர்களுக்கு மட்டுமா? கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கும்தான்.
என் பங்களிப்புக்கு நானே மதிப்பெண் வழங்கி கொள்வது சரியாக இருக்காது. எனவே அதை வாசகர்களின் தீர்ப்புக்கு விட்டு விடுகிறேன்.
செவ்வாய், ஜூன் - 17 கேட்டு வாங்கி போட்ட கதை:
இன்றைய பங்களிப்பு திரு.துரை செல்வராஜ் அவர்களுடையது. கே.வா.போ.வுக்கு கதை அனுப்புகிறவர்களில் எத்தனை பேர் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள் என்பது தெரியாது. ஆனால் பெருன்பான்மையோரின் படைப்புகள் ப்ரோஃபொஷனலாக இருக்கின்றன. அதில் குறிப்பிட்டு சொல்லக் கூடியவர் திரு. துரை செல்வராஜ் அவர்கள். மண் வாசனை மிளிரும் எழுத்து அவருடையது. எளிய மக்களின் மாண்பையும், வெள்ளந்தியான குணத்தையும் மிக அழகாக வெளிக்கொணர்வார். 'மனசுக்குள்ளே மகிழம்பூ' விலும் அது மிக நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கிறது.
தஞ்சையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் திங்களூரில் சிறு பசியை ஆற்றிக்கொள்ள கை குழந்தையோடு வரும் இளம் தம்பதியினர், அவர்களுக்கு அந்த கிராமத்து தெருவோர டீக்கடையில் கிடைக்கும் அனுபவத்தை அழகான கதையாக்கியிருக்கிறார்.
பெயர் பொருத்தம் அபாரம். மகிழம்பூ பார்க்க கவர்ச்சியாக இருக்காது, ஆனால் மணம்?.. அதுவும் வாடாமல் எத்தனை நாட்களுக்கு மணம் வீசும்! அதே போலத்தான் கிராம மக்களின் குணமும் என்கிறாரோ? அருமை! அருமை!
துரை சாரின் கதா பாத்திரங்கள் பூமிக்கு ஒரு அடிக்கு மேல்தான் இருப்பார்கள். ஆனால் இதை ஒரு குறையாக சொல்ல முடியாது. உயர்ந்த முன் மாதிரியை காட்டுவதுதானே சான்றோர்களின் கடமை? மகிழம்பூவிற்கு நான் கொடுக்கும் மதிப்பெண்கள் 8.5/10
நகைச்சுவையாக எழுதுவது சுலபம் கிடையாதுதான் ஆனால் செவ்வாய் கதைகளில் நகைச்சுவை கதைகளும் இடம் பெற்றால் நன்றாக இருக்கும்.
புதன், ஜூன் - 19 கேள்வி பதில்:
ஆரம்பத்தில் புதிர்கள் இடம் பெற்ற நாள், இப்போது கேள்வி பதில்களாக மாறி விட்டது. புதன் கிழமை புதிரை ஒரேயடியாய் நிறுத்தி விட்டதில் கொஞ்சம் வருத்தம்தான் எனக்கு. மாதம் ஒரு முறையாவது போடலாமே.
கேள்வி பதில்கள் பகுதிக்கு பெரும்பாலும் பெண்கள்தான் கேள்விகள் அனுப்புகிறார்கள். நெல்லை தமிழன் ஆட் ஒன் அவுட்.
கேள்விகள் என்றாலே எல்லோருக்கும் ஏஞ்சலின் நினைவுதான் வரும். ஸ்ரீகாந்த் போல் அவர் விளாசும் போது, வெங்சர்க்கார் இரண்டிரண்டு ரன்களாக எடுப்பது போல நான் கேட்கும் இரண்டு கேள்விகள் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடும். இந்த வாரம் அவர் இடத்தை கீதா அக்கா பிடித்துக் கொண்டு விட்டார். எல்லாம் ஒரே அமானுஷ்யம். கே.ஜி.ஜி. சார் தன் நகைச்சுவை உணர்ச்சியால் பேய் அடி அடித்து விட்டார்.
சென்ற வாரம் நேர மேலாண்மை பற்றி விளக்கிய கே.ஜி.எஸ். சார் இந்த வாரம் ரூட் காஸ் அனாலிசிஸ் பற்றி சிறப்பாகவும், சுவாரஸ்யமாகவும் விளக்கியிருக்கிறார். இந்த பகுதியை ஞாயிறு பகுதிக்கு மாற்றலாம். ஞாயிறன்று விறுவிறுப்பு கூடும்.
புதன் பதிவிற்கு என் மதிப்பெண் 7/10
வியாழன், ஜுன் - 20:
வியாழக்கிழமைகள் ஸ்ரீராமினுடையவை. தற்சமயம் அவருடைய காசி யாத்திரை(கல்யாணத்தில் நண்பன் குடை பிடிக்க போன போங்கு காசி யாத்திரை அல்ல, நிஜ காசி யாத்திரை) அனுபவங்களை எழுதுகிறார். அதில் இன்னும் அலகாபாத்தை மன்னிக்கவும் ப்ரயாக் ராஜ் தாண்டவில்லை. நிறைய படங்கள். அவருடைய கவிதையும், முகநூல் பக்க பகிர்வும் மிஸ்ஸிங். புகைப்படங்கள் கூட அத்தனை துல்லியமாக இல்லை.
வழக்கமான தீர்த்த யாத்திரை தொடர் போல தல புராணம் போன்ற விஷயங்கள் இல்லாமல் ரயிலில் உடன் பயணித்த குண்டு பெண், ஹோட்டல் ரூமிற்கு செல்லும் வழியில் பார்த்த காட்சிகள், வேளா வேளைக்கு சாப்பிட்ட உணவு, படத்தோடு(படம் எதற்கு என்று விளங்கவில்லை) என்று வெளி விவகாரங்கள் அதிகம். பெரும்பான்மையாக வியாழன் பதிவுகள் சிக்கென்று,கச்சிதமாக இருக்கும். சில சமயங்களில் சற்று நீண்டு விடும். இந்த வாரம் படங்களால் பதிவின் நீளம் அதிகமாகி விட்டது.
இந்த வார வியாழன் பதிவுக்கு நான் அளிக்கும் மதிப்பெண்கள் 6/10
வெள்ளி, ஜூன் 21 - வெள்ளி வீடியோ:
ஒவ்வொரு வெள்ளியன்றும் நல்ல நல்ல பாடல்களை தேடித் தேடி நம்மை கேட்க வைக்கும், ஸ்ரீராமுக்கு ஒரு ஓ போடலாம். பாடல்போடுவதோடு நிற்காமல் அதன் வரிகள், பாடலாசிரியர், இசைமைப்பாளர், பாடியவர்கள், அந்த படத்தில் நடித்தவர்கள் என்று சகல விவரங்களையும் தருகிறார். இந்த பாடலை எழுதியிருப்பவர் யார் என்று தெரியவில்லை என்று லேசாக கோபப்பட்டிருக்கிறார். நியாயம்தான். அவர் தீவிர எஸ்.பி.பி.யின் ரசிகராக இருப்பதால் பெரும்பாலும் எஸ்.பி.பி.யின் பாடல்கள்தான் பகிரப்படுகின்றன. என்னைப் போன்ற ஜேசுதாஸ், கார்த்திக், சித் ஸ்ரீராம், பிரசன்னா,சித்ரா, ரசிகர்கள் விடும் ஏக்க பெருமூச்சின் ஓசை அவருக்கு கேட்குமா என்று தெரியவில்லை. பழைய பாடல்கள் என்றால் பி.பி.எஸ்.
இன்றைக்கு பகிர்ந்திருக்கும் பாடலில் எஸ்.பி.பி. நம்மை எங்கோ அழைத்துச் சென்று விட்டார். என்ன குழைவு! பாடலில் குலுங்க குலுங்க என்று ஒரு இடம் வருகிறது அந்த இடத்தில் அவர் குரல் லேசாக குலுங்குகிறது. அவர் சாதாரண ராஷசன் இல்லை, பிரம்ம ராக்ஷஸன்! இசை சங்கர் கணேஷா? நம்பவே முடியவில்லை.
பின்னூட்டத்தில் 'எம் புருஷன்தான், எனக்கு ,மட்டும்தான்' பாடலின் மூலம் 'தம்மரோ தம்..' பாடல் என்று கூறியிருக்கிறார். ஆச்சர்யம்! ஆனால் உண்மை!
வெள்ளி வீடியோவிற்கு நான் மதிப்பெண் அளிக்க வேண்டாம் என்று நினைத்தேன், காரணம் இது வெறும் பகிர்வு மட்டும்தானே? சொந்தமாக எதுவும் இல்லையே? ஆனாலும் ஸ்ரீராமின் மெனக்கெடல், அவர் கொடுத்திருக்கும் விவரங்கள், பின்னூட்டங்கள் இவைகளுக்காக 6.5/10 அளிக்கிறேன்.
பை அண்ட் லார்ஜ் இந்த வார பதிவுகள் சிறப்பாக இருந்தாலும், பின்னூட்டங்கள் ஆரவாரம் இல்லாமல் அமரிக்கையாக இருந்தன. காரணம் எல்லோரும் அறிந்ததுதான்.
நல்ல வாய்ப்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். வணக்கம்.
வாழ்க நலம்...
பதிலளிநீக்குவாங்க... வாங்க...
நீக்குஅன்பின் ஸ்ரீராம்...
பதிலளிநீக்குகீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....
உங்களுக்கும் இனி வரவிருக்கும் நட்புறவுகள் அனைவருக்கும் காலை வணக்கம், மற்றும் நல்வரவு துரை செல்வராஜூ ஸார்.
நீக்குநன்றி துரை.
நீக்குஇந்த வாரம் தண்ணீர் முன்னிலை வகிக்கிறது போலும்! வந்திருக்கும் துரை, ஶ்ரீராம் இருவருக்கும் இனி வரப்போகும் அனைவருக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஉங்களுக்கும் இனி வரவிருக்கும் நட்புறவுகள் அனைவருக்கும் காலை வணக்கம், மற்றும் நல்வரவும் கீதா அக்கா....
நீக்குபானுமதியின் இலை அடையையே இப்போத் தான் போய்ச் சாப்பிட்டேன். விமரிசனம் படிச்சுட்டு வரேன்.
பதிலளிநீக்குஆமாம்
நீக்குபார்த்தேன்!!!
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குகீதா அக்கா ஜாக்கிரதை. உடம்பு இப்போதுதான் தேறி வருகிறது. அதற்குள் இலை அடை வேண்டாமே.
நீக்கு//முன்னுரை நீண்டு விட்டது. மன்னிக்கவும்.// இதுக்கேவா? ஙே!!!!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குஆமாமாம்.. ரொம்ப ஃபீல் பண்ணி இருக்காங்க!!!!
நீக்குபுதிர் நாளாய்ப் புலர்கின்ற
பதிலளிநீக்குபுது நாளே வருக...
பொங்கி வரும் பூந்தமிழில்
நலம் எல்லாம் தருக...
தேனமுதாய் தித்திக்கும்
தீந்தமிழின் வண்ணம்
வானமதியாய் எத்திக்கும்
பானுமதி வாழ்க!...
ஆஹா ஆசுகவியே வருக..
நீக்கு//பெயர் பொருத்தம் அபாரம். மகிழம்பூ பார்க்க கவர்ச்சியாக இருக்காது, ஆனால் மணம்?.. அதுவும் வாடாமல் எத்தனை நாட்களுக்கு மணம் வீசும்! அதே போலத்தான் கிராம மக்களின் குணமும் என்கிறாரோ? அருமை! அருமை!// கதையின் கருவே இதானே! அருமையாகச் சொல்லி விட்டார் பானுமதி!
பதிலளிநீக்குநன்றி கீதா அக்கா.
நீக்குசென்ற வார சிறுகதைக்கு 8.5 மதிப்பெண்கள்..
பதிலளிநீக்குஆகா!..
இது நல்லா இருக்கே!..
அன்பும் மகிழ்ச்சியும்..
//என்னைப் போன்ற ஜேசுதாஸ், கார்த்திக், சித் ஸ்ரீராம், பிரசன்னா,சித்ரா, ரசிகர்கள் விடும் ஏக்க பெருமூச்சின் ஓசை அவருக்கு கேட்குமா என்று தெரியவில்லை. பழைய பாடல்கள் என்றால் பி.பி.எஸ். // டிஎம் எஸ்ஸை விட்டுட்டீங்க! திருச்சி லோகநாதன், எம்கேடி, ராஜா, ஜிக்கி, என் அபிமானப் பாடகர் சீர்காழி அப்புறமாப் பின்னாட்களில் வந்த மனோ, மலேசியா வாசுதேவன், எம்.எஸ்.வி, இஃகி,இஃகி !
பதிலளிநீக்குஅக்கா... பி ஏ பெரியநாயகி, பி யு சின்னப்பா, ஹொன்னப்பா பாகவதர் பெயரை எல்லாம் விட்டுட்டீங்க!!!!
நீக்குஆமா இல்ல! என்.சி.வசந்த கோகிலம், எம் எல்வி, எம்.எஸ். இன்னும் யாரு இருக்காங்கனு பார்த்துட்டு வரேன்.
நீக்குஅது ச.....ரி....
நீக்குகண்டசாலா அவர்களை நீங்கள் விட்டு விட்டாலும் நான் விடமாட்டேன்..ல்ல!...
நீக்குமுத்துக்கு முத்தாக...ந்னு மனசை உருக வைச்சவராச்சே!..
ஆஹா...ஆஹா... அவர் மறக்கபப்ட்ட வேண்டியவரே அல்ல!
நீக்குகீசா மேடம், பூவாகி காயாகி கனிந்த மனம் ஒன்று, பாடகியை விட்டுவிட்டீர்களே! ஜிக்கியும் பிடிக்காதா?
நீக்குஎன்ன ரசனையோ (மறக்கலைனா ஹாஹா)
//திருச்சி லோகநாதன், எம்கேடி, ராஜா, ஜிக்கி, என் அபிமானப் பாடகர் சீர்காழி //ஒழுங்காப் படிச்சுட்டுக் கருத்துச் சொல்லறதுனு ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக்கோங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குகீதா அக்கா, ஹாஹாஹா!
நீக்கு😂😂😂😂😂😂😂😂 CS JAYARAMAN, TK BAGHAVATHI.
நீக்குதண்ணீர் பகிர்வு குறித்துச் சொல்லி இருக்கும் அத்தனைச் செய்திகளும் பாராட்டத்தக்கவை. முதலில் வந்திருக்கும் மாற்றுத் திறனாளி குறித்து முகநூலில் பார்த்தேனோ? ம்ம்ம்ம்ம்? எங்கேனு தெரியலை!
பதிலளிநீக்குவெள்ளம் வந்த சமயத்தில் வெள்ளத்தில் உதவிய செய்திகளாய்க் கிடைத்தன. இப்போது தண்ணீர்ப்பஞ்ச காலத்தில் இப்படி... தண்ணீர்ப்பஞ்சம் எப்போது தீருமோ? தீருமா?
நீக்குதண்ணீர் பெருகி அனைவரின் தாகமும் தீரட்டும்.
நீக்குமுத்தான செய்திகள். மாற்றுத்திறனாளிக்கு உதவியவர் என்றும் வாழ்க.
தண்ணீர் பகிர்ந்து கொள்ளும் வெங்கடேசனுக்குத் தான் எத்தனை நல்ல மனசு.
அவர் வீட்டில் தண்ணீர் வற்றாமல் இருக்கட்டும்.
ஆறு குளங்களைத் தூர் வாறி நீர்வளம் கண்ட ஆண்டிகுளத்துக்கும் வாழ்த்துகள்.
பானு மாவின் விமர்சனம் கச்சிதம். வெகு நிதானமான பக்குவமாக எழுதி இருக்கிறார் இது போலப்
நீக்குபடிக்கவே ஆசையாக இருக்கிறது.
எங்கள் ப்ளாக் என்னும் எங்கள் பகுதி என்றும் நலமுடன் செய்திகளைப் பகிர வேண்டும்.
இன்றைய செய்தித் தொகுப்பு அருமை..
பதிலளிநீக்குநல்ல நெஞ்சங்கள் மண்ணிற்குப் பெருமை...
இன்றைய செய்தித் தொகுப்பு அருமை..
பதிலளிநீக்குநல்ல நெஞ்சங்கள் மண்ணிற்குப் பெருமை...
ஆம்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
நீக்கு// உலகம் நல்லவர்களால் நிரம்பியது என்பதை தெரிந்து கொள்ளும் பொழுது வாழ்க்கையில் நம்பிக்கை அதிகரிக்கிறது. // well said.
பதிலளிநீக்கு// வேறு ஏதாவது சேர்த்து அதாவது பழைய புகைப்படங்கள், புகைப்படங்களுக்கு பின்னால் இருக்கும் கதைகள், வாசகர்களால் மறக்க முடியாத புகைப்படங்கள் இப்படி ஏதாவது சேர்த்து இன்னும் கொஞ்சம் ஸ்வாரஸ்யமாக்கலாம். // நல்ல யோசனை. யோசிக்கிறோம்.
பதிலளிநீக்குநன்றி!
நீக்குவிமரிசனத்தில் என்னைப் பற்றி ஒன்றும் குறிப்பிடாததால், நான் வெளிநடப்பு ..... சாரி வெளி பறப்பு செய்கிறேன். அடுத்த புதன் பதிவில் என்னைப் பற்றி ஒன்றும் எழுதவில்லை என்றால், ஆசிரியர்கள், வாசகர்கள் எல்லோர் கனவிலும் வந்து பயமுறுத்துவேன். ஜாக்கிரதை!
பதிலளிநீக்குபேயே பேயே வருவாயே
நீக்குஆதரவு என்றும் தருவாயே..
நாந்தான் உனக்குப் பாட்டெல்லாம் போட்டேன்...
நீக்குநீ கண்டுக்கவே இல்லை!..
இருந்தாலும் அமாவாசை அன்னைக்கு ஸ்பெஷல் படையல்... போடறேன்..ந்னு சொல்லியிருக்கேன்....
அப்புறம் எதுக்குப் புளிய மரத்துல தொங்கிக்கிட்டு?...
காள் காள் கிரீச் கிரீச் ! (ஆனந்தக் கூச்சல் ) ஜில்மா, ஜில்மா (நன்றி, நன்றி)
நீக்குகாள்.. காள்!?...
நீக்குஇதுக்குத் தான் சொன்னாங்க!...
பேயாய்ப் போனாலும்
பெரிய எடத்துல போய் இருக்கணும்..ந்னு...
இப்போ பாரு....
குட்டிச் சுவர் பக்கம் போய்
சுத்திக்கிட்டு இருந்ததால
குரலே கெட்டுப் போச்சு!...
கரட்டுப்பேய் சத்தம் எல்லாம்
கர்த்தபத்தோட சத்தம் ஆச்சே!..
இதுக்கு எங்கே போயி
வேப்பிலை அடிக்கிறது?....
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஹா ஹா நானும் அதைத்தான் சொல்ல நினைத்தேன். நீங்க சொல்லிட்டீங்க துரை.
நீக்குபேயே - நீ மானமுள்ள பேய் என்றால், துரை செல்வராஜூ சார் கனவில் போய் கூத்தாடு.
நீக்குகௌதம் சார்....
நீக்கு//கனவில போய் கூத்தாடு!...//
அது இங்கே என் பக்கத்துல தானே இருக்கு...
நேர்லயே கடமுடா..ந்னு உருட்டிக்கிட்டு இருக்கு!....
கனவில வேறயா!...
நா மானமுள்ள பேயின்னு
நீக்குமதுரயில கேட்டாக.. அந்த
மாயவரத்துல கேட்டாக!..
நா நேசமுள்ள பேயின்னு
எபியில தான் கேட்டாக.. புதன்
பதிவிலயும் போட்டாக...
போட்டதும் போட்டாக போட்டோவும்
சேர்த்தே போட்டாக....
பாட்டாக பாட்டாக பல சேதி
சொல்லியும் போட்டாக!....
// அது இங்கே என் பக்கத்துல தானே இருக்கு...//
நீக்குஈஸ்வரோ ரக்ஷது! கையில் கரண்டி இருக்கா?
பேய்க் கவிதை சூப்பர்.
நீக்குகையில் கரண்டி?!...
நீக்குஅது வேற..
இது வேற.. சாமியோவ்!...
மெய்யாலுமே இங்க ஒன்னு இருக்குங்க...
ஆனா -
அதை பேய் ...ன்னு சொல்றது இல்லை...
ஆவி... ங்கற அளவுல மரியாதை..
யார்? யோசித்துக்கொண்டிருக்கிறேன். க்ளூ உண்டா?
நீக்குநானே நினைச்சேன், பானுமதி பேயைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையேனு! ஆனால் அன்னிக்கே அதாவது பேய்க்கிழமை அன்னிக்கே அவங்க காலங்கார்த்தாலே பேயானுட்டுப் போயிட்டாங்க! அதான் விமரிசனத்திலே சொல்லலை போலனு நினைச்சேன்.
நீக்குநீங்க வருந்தாதீங்க பேயாரே! யார் ஆதரிச்சாலும் ஆதரிக்காட்டியும் நான் உங்களை ஆதரிக்கிறேன். தினம் தினம் வந்து போயிட்டு இருங்க!
பேயே, பேயே, உங்கள் இனத்தின் குட்டிப் பேய் ஒன்றின் பேட்டி "தமிழ் தி இந்து" பத்திரிகையில் வந்திருக்காமே! வெங்கட்டின் பதிவில் படிச்சேன். அதில் உங்களோட அன்றாட வேலைகளைப் பார்த்தால் நாங்கல்லாம் சோம்பேறினு தான் சொல்லணும் பேயே!
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா. வாங்க..
நீக்குஇந்த வார பாஸிடிவ் செய்திகள் மனிதநேயம் மிக்க மனிதர்களின் உதவியை சொல்கிறது.
பதிலளிநீக்குஅனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இன்று பானுமதி சொன்னது போல் //உலகம் நல்லவர்களால் நிரம்பியது என்பதை தெரிந்து கொள்ளும் பொழுது வாழ்க்கையில் நம்பிக்கை அதிகரிக்கிறது.//
நம்பிக்கை அளிக்கிறது தண்ணீர் கஷ்டத்தை மக்கள் கடந்து விடுவார்கள். அன்பானவர்களை பாராட்ட மாரி மழை பொழிந்து வாழ்த்துவாள்.
ஆம்.
நீக்குபானுமதி அவர்கள் அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஒவ்வொரு நாள் பற்றியும் நிறை, குறைகளை, மற்றும் சில யோசனைகள் என்று கருத்து சொல்லி இருக்கிறார் அருமையாக
//உலகம் நல்லவர்களால் நிரம்பியது என்பதை தெரிந்து கொள்ளும் பொழுது வாழ்க்கையில் நம்பிக்கை அதிகரிக்கிறது. //
இது தான் வேண்டும் . மிக அருமையாக சொன்னீர்கள்.
"ஈஸியாகத்தானே இருக்கு, முயற்சிக்கலாம்" அதுதான் எல்லோரும் பாராட்டும் விஷயம் பானுவிடம்.
வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்.
ஆம்.
நீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்குபோற்றத்தக்க அரிய மனிதர்களைப் பற்றிய அரிய பதிவு. திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் மதிப்பீடு அருமை. முழுமையாக கவனித்து, உள்வாங்கி சிறப்பாக மதிப்பிட்டுள்ளார்.
பதிலளிநீக்குஆம்.
நீக்குநன்றி ஐயா. உங்கள் பாராட்டு மகிழ்ச் அளிக்கிறது
நீக்குதானத்திலே சிறந்தது தண்ணீர் தானம் என்பதை உணர்ந்தவர் சென்னை திரு. வெங்கடேஷ்வரன் வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குவிமர்சனம் அருமையாக இருந்தது ரசனையாக...
ஆம்.
நீக்குநன்றி கில்லர்ஜி
நீக்குசெய்திகளும் விமர்சனமும் அருமை...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குநன்றி டி.டி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த வார பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.
விளையாட்டில் ஆர்வமாக பங்கேற்றவருக்கு சமூக வலைத்தளங்களின் மூலமாக உதவிசெய்த சீனிவாசபுரத்தைச் சேர்ந்த சேரன் அவர்களை மனதாற பாராட்டுவோம்.
தண்ணீர் பிரச்சனைக்கு வழிகண்டு பிடித்தவர்களின் செயல்களும் அருமை.
பொதுவாக தானத்தில் சிறந்தது அன்னதானம் என்போம். அதிலும் இப்போதைய தேவையான தண்ணீரை தன் செலவில் தானமாக கொடுத்துக் கொண்டிருக்கும் திரு.வெங்கடேசனை மனதாற போற்றுவோம். அனைவருக்கும் பாராட்டும், வாழ்த்துகளும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குஇந்த வாரத்தை விமர்சித்த சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்கள் மிக அழகாக, அதை விட மிக விளக்கமாக ஒவ்வொரு வரிகளிலும் தன்னுடைய "சுருக்க முத்திரை" கொண்டு மிக அருமையாக விமர்சித்திருக்கிறார். பதிவுகளை குறித்த சுருக்கமான ஆனால் பயனுடைய கருத்துகளும் அபாரம். (இந்த அளவிற்கு என்னால் எப்போது வர முடியுமோ தெரியவில்லை) சகோதரிக்கு மனம் நிறைந்த பாராட்டுடன் வாழ்த்துக்களும்... இந்த வாரம் பானுமதி சகோதரியாகத்தான் இருக்குமென நானும் யூகித்தேன். என் யூகம் பலிதமானதிற்கு இறைவனுக்கு நன்றிகள்.
"நாளை என்பது நல்லதாகதான் இருக்கும்" என்ற சகோதரியின் தன்னம்பிக்கை வரிகளை மிகவும் ரசித்தேன். என் நீளமான விமர்சனத்தையும், மனமுவந்து பாராட்டிய அவருக்கு என் பணிவான நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி சகோதரி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம்.
பதிலளிநீக்குஇன்றைய பகுதியில் இடம் பெற்றுள்ள அனைத்து செய்திகளும் சிறப்பு. தண்ணீர் செய்திகள் மனதைக் கவர்ந்தன. சரியான வழியில் நீர் சேமிப்பு செய்வதை அனைவரும் தொடர்ந்தால் நல்லது. இல்லையெனில் தண்ணீருக்காகவே போர் வரும் என்று அனைவரும் பயமுறுத்துவது நடந்து விடும்....
பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் பார்வையில் சென்ற வார பதிவுகள் - நல்ல அலசல். தொடரட்டும் பதிவுகள்.
நன்றி வெங்கட்.
நீக்குபா.வெ. மேடம் விமர்சனம் fair. பாராட்டுகள்
பதிலளிநீக்குநன்றி நெ.த. சுருக்கமான விமர்சனத்திற்கு சுருக்கமான பாராட்டா?
நீக்குபானு மாவின் விமர்சனம் கச்சிதம். வெகு நிதானமான பக்குவமாக எழுதி இருக்கிறார் இது போலப்
நீக்குபடிக்கவே ஆசையாக இருக்கிறது.
எங்கள் ப்ளாக் என்னும் எங்கள் பகுதி என்றும் நலமுடன் செய்திகளைப் பகிர வேண்டும்.
நன்றி வல்லி அக்கா.
நீக்குபா.வெ. மேடம்... மெதுவாத்தான் எழுதணும்னு நினைத்தேன். இப்போதான் திருப்பதி 3 நாட்கள் பயணம் முடிந்து வந்துசேர்ந்தேன். வந்தவுடன் மனைவிக்கு ஓரிரு உதவிகள்.
நீக்குஇன்றைக்கு எழுதவிட்டுவிடக்கூடாதுன்னு ஒரு வரில விமர்சனமா எழுதினேன்.
என் பெர்சனல் எண்ணம், எ.பி. ஆசிரியர்கள், இந்த விமர்சனப் பணியைக் கொடுக்கும்போது, அந்த வாரம் அவருடைய படைப்பு வெளியாகக்கூடாது என்பதைக் கவனத்தில் வைக்கணும். இல்லைனா, வெளில இருந்து அதை விமர்சனம் செய்வது எல்லோருக்கும் வராது.
//ஒவ்வொரு வெள்ளியன்றும் நல்ல நல்ல பாடல்களை தேடித் தேடி// - காதுல ஜிங் சக் என்ற சப்தம் கேட்கிறது. அது ஒருவேளை வெளியிலிருந்து கேட்கிறது போலிருக்கு...ஹாஹா. இருந்தாலும் 'ரசனை' என்ற விதத்தில் ஸ்ரீராம் பாடல்களை பகிர்கிறார். எனக்கு நிறைய நாட்கள் ரொம்பவும் ரசிப்பதில்லை. அதுக்கு என் ரசனைக் குறைவுதான் காரணம்.
புதன் வியாழன் இரண்டையும், நான் நினைத்ததுபோலவே சரியா விமர்சித்திருக்கீங்க. ரொம்ப அதிசயமா, இந்த வார (விமர்சனம் செய்த) வியாழன் கொஞ்சம் அதன் லெவல்ல இல்லைனு எனக்குத் தோன்றியது. அப்புறம் நான் நினைத்தேன், ஒருவேளை என் எண்ணம்தான் அப்படி இருக்கும்னு. பொதுவா வியாழன் எப்போதும் அதிகம் படித்த லிஸ்டில் வரும்.
என் தனிப்பட்ட எண்ணம், விமர்சனத்தை 'விமர்சிக்கக்கூடாது'. ஏற்கனவே அந்த வார இடுகைலயே நம்ம கருத்தைத் தெரிவித்திருப்போம். அத்தோட விட்டுடணும்னு நினைக்கறேன். எனக்கு நீங்க கொடுத்திருக்கும் மதிப்பெண் (இந்த இடுகைல) எல்லாமே சரியாக இருக்குன்னு தோன்றுது.
//திருப்பதி 3 நாட்கள் பயணம் முடிந்து // - ஸ்ரீராம் காதில் புகை வரவைக்க - மூன்று நாளில் நான்கு முறை தரிசனம். அதில் மூன்று முறை, குலசேகரன் படிக்கு அடுத்த கட்டில், ஐந்து+ நிமிடங்கள் பெருமாள் முன்னிலையில்....... மனசுக்கு 'பூர்வ ஜென்ம புண்ணியம்' என்றுதான் தோன்றியது. இன்று சனிக்கிழமை, பெருமாள் பக்கலில் தரிசனம். சிலிர்க்கவைக்கும் அனுபவம்...ஆனாப் பாருங்க... 'வேண்டிக்கொள்ள ஞாபகமே இல்லாமல்' செய்துவிட்டான் அவன்...
நீக்குவிரிவான கருத்துக்கு நன்றி நெ.த.மற்ற எல்லோரும் பிஸியாக இருந்ததால்,இந்த வாரம் விமர்சனம் செய்யும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன்.
நீக்குமதிப்பெண்கள் வழங்க தயக்கமாகத்தான் இருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கொடுத்தேன்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது செய்திகள், 99% மக்களுக்கும் இந்த செயல்படுத்தும் எண்ணம் வரணும் எனத் தோன்றவைக்கிறது. பாராட்டுகள்.
பதிலளிநீக்குஜெ மழைத்தண்ணீர் சேகரிப்பு சொன்னபோது நாம்கிவாஸ்தே வேலை செய்துவிட்டு இப்போது பஞ்சக் காலத்தில் லபோ திபோன்னு அரசியல்வாதிகளை குறை சொல்றாங்க
//ஜெ மழைத்தண்ணீர் சேகரிப்பு சொன்னபோது நாம்கிவாஸ்தே வேலை செய்துவிட்டு இப்போது பஞ்சக் காலத்தில் லபோ திபோன்னு அரசியல்வாதிகளை குறை சொல்றாங்க//
நீக்குகரெக்ட்!. இந்த விஷயத்தில் கிராம மக்களுக்கு இருக்கும் விழிப்புணர்வு நகர மக்களுக்கு இல்லை. நான் தண்ணீர் பஞ்சம் ஆரம்பித்த சமயத்தில் சென்னை சென்றிருந்த பொழுது, அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் சிலரிடம் உங்கள் ஏரியாவில் தண்ணீர் பஞ்சம் இருக்கிறதா என்று வினவினேன், அதற்கு பலர், "ஏதோ லாரி தண்ணீர் வாங்கி ஊற்றுகிறார்கள், ஓடுகிறது" என்று அலட்சியமாக சொன்னார்கள்.
பெரிய பெரிய அபார்ட்மெண்டுகளில் மழை நீரை சேகரித்தால் நிலத்தடி நீர் கணிசமாக உயரும்.
பாசிட்டிவ் செய்திகள் அருமை. சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் மதிப்பீடும் தெளிவு. மிகவும் தெளிவாக எழுதியிருக்கிறார். ஆசிரியனான எனக்கும் டக் டக்கென்று பாயிண்டை டிக் அடித்து மார்க் போட எளிதாக இருக்கிறது!!!
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
துளசிதரன்
பாசிட்டிவ் செய்திகளில் தண்ணீர் செய்திகள் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் நிறைய சொல்லலாம் அதாவது நீர் மேலாண்மை பற்றி. அரசை நம்பாமல், மக்கள் தங்கள் தேவைகளைத் தாங்களே கவனித்துக் கொண்டு தங்கள் கிராமங்களையும் கவனிக்கத் தொடங்குவது மிக மிக பாராட்டிற்குரியது.
பதிலளிநீக்குகீதா
பானுக்கா ராக்ஸ்!!
பதிலளிநீக்குசூப்பரா கச்சிதமாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டாங்க. நான் நினைத்த சில கருத்துகளையும் சொல்லிருக்காங்க...
அக்கா அழகா சொல்லிட்டீங்க பாராட்டுகள். அன்றே வர முடிந்திருந்தால் என் கருத்துகள் ந்றைய இருந்திருக்கும்..இப்ப லேட்டு...நிறைய பதிவுகள் வெய்ட்டிங்க்..அதான் நானும் ஷார்ட்டா முடிச்சுட்டேன்!! ஹிஹிஹிஹி
கீதா