திங்கள், 1 ஜூலை, 2019

"திங்க"க்கிழமை : தேங்காய் மைசூர்பாக் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

  

தேங்காய் பர்பி சாப்பிடணும்னு எனக்கு அப்போ அப்போ (உடம்புல ஜீனி- சர்க்கரை இல்லை  குறையும்போது) தோணும். அதிலும் டிரெடிஷனல் தேங்காய் பர்பி எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுல மாடர்னா பண்ணறேன்னு பொல பொலவென உதிர்வதுபோலச் செய்வது (உதாரணமா எழும்பூர் சாந்தி விலாஸ்/நெல்லை அல்வா கடை) எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது. ஒரு நாள், தேங்காய் பர்பிலயே கடலைமாவும் போட்டுச் செய்தால், அதாவது இரண்டையும் மிக்ஸ் செய்து பர்பி செய்தால் எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையாக இருந்தது. அப்போ என் மனைவி, (தீபாவளி?) பெங்களூரில் இருக்கும் அவங்க பெற்றோருக்காக சில இனிப்புகள் செய்தாள். நான் இதனைச் செய்யப்போறேன்னு சொல்லி அப்போ செய்தது.

நான் பொதுவா, படங்கள் எடுத்துச் செய்ததும், உடனே எழுதி அனுப்பமாட்டேன். சில சமயம் ஸ்ரீராம், அனுப்பறீங்களான்னு கேட்டால் உடனே அனுப்ப ரெடியா வச்சிருப்பேன். அப்படி வச்சிருப்பதுல என்ன பிரச்சனைனா, மத்தவங்க அதனையே செஞ்சு எ.பிக்கு அனுப்பினா, நான் அனுப்பமுடியாமப் போயிடும். இன்றைக்கு அந்த கலெக்‌ஷனில் இதனைப் பார்த்து, செய்முறையை எ.பிக்கு அனுப்பியிருக்கேன்.

எப்படிச் செய்வது?

கடலை மாவு 1 கப்
துருவின தேங்காய் 1 கப்
ஜீனி 2  கப்  
நெய் 1 கப்
முந்திரிப் பருப்பு – 12

முதல்ல முந்திரியை உடைத்து சிறிது நெய் விட்டு நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும்.   கடலை மாவை சிறிது வறுத்து எடுத்துக்கோங்க. நிறம் மாறக்கூடாது.





ஒரு டிரேயில் பட்டர் பேப்பர் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.

கடாய்ல ஜீனியும் அது மூழ்கும்படி நீரை விட்டு கரையவிடவும். ஒரு நூல் பாகு பதத்துக்கு வரட்டும்.



அதனோட  வறுத்த கடலை மாவும் தேங்காய் துருவலும் போட்டுக் கிளறவும். கொஞ்சம் நேரம் கழித்து நெய்யையும் சிறிது சிறிதாக விட்டு கிளறவும்.



தட்டில் ஒட்டாத பதத்துக்கு வரும்போது வறுத்துவைத்த முந்திரியையும் சேர்த்து கிளறி தட்டுல கொட்டிவிடவேண்டும்.




கொஞ்சம் ஆறின பிறகு, அழகான துண்டங்களாக வரும்படி கட் பண்ணுங்க. பட்டர் பேப்பர் என்பதால் சிறிது நேரத்திலேயே தனித் தனிக் கட்டியா பிரிந்துவிடும்.



ரொம்ப சுலபமான வேலைதான்.  கடைல கிலோ 300-400 ரூபாய் கொடுத்து எதையோ வாங்கறதைவிட நாமே சுலபமா பண்ணிடலாம்.


நான் அந்த ஊர்ல இருக்கும்போது, என் பெண் பட்டர் பேப்பர் ரோல் வாங்கினா, அவள் கேக் பண்ணுவதற்காக(ன்னு நினைக்கிறேன்).  எனக்கு எதுக்கு வேஸ்டா இதை வாங்கியிருக்கான்னு நினைத்தேன். அவங்கள்லாம் அந்த ஊரைவிட்டு வந்தப்பறமும் பெரிய ரோல் பட்டர் பேப்பர் இருந்தது. நான் உபயோகப்படுத்தாமலேயே தூரப்போட்டேன். சென்னைலதான் இந்த மாதிரி இனிப்பு செய்ய, டிரேயில் பரத்திய பட்டர் பேப்பர் மேல கிளறியதை விட்டுவிட்டு, சிறிது ஆறினபிறகு துண்டு துண்டா கட் பண்ணினால், ஈசியா எடுக்க வரும்னு தெரிந்தது. இது அங்க இருக்கும்போதே தெரிந்திருந்தால், நிறைய இனிப்புகளை சரியாவும் ஈஸியாவும் கட் பண்ணியிருக்கலாமேன்னு தோன்றியது (என் பையனுக்கு நான் செய்த பாதாம் கேக், முந்திரி கேக்லாம் எனக்கு சரியா கட் பண்ண வரலை. ஒரு தடவை செய்த மைசூர்பாக்கும், தேங்காய் பர்பியும் தட்டில் ஒட்டிக்கொண்டு கட் பண்ண முடியாமல் கஷ்டப்பட்டேன்).

படம் அழகா வந்திருப்பதுபோலவே இந்த ஸ்வீட்டும் ரொம்ப நல்லா வந்தது, பிடித்திருந்தது. நீங்களும் செய்துபாருங்கள்.

இது எந்தவிதத்துல தேங்காய் பர்பியைவிட நல்லா இருக்கும்னு சொல்லத் தெரியலை. ஆனா எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.




அன்புடன்

நெல்லைத்தமிழன் 

108 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் எல்லோருக்கும்

    தேங்காய் மைசூர்பாகு ஆஹா எங்க வீட்டுல உடனே போணியாகிடும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் தித்திக்கும் வணக்கம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் (தித்திக்கும்) துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம்...
    கீதாக்கா / கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார்... நீங்க என்னை வாங்கன்னு சொல்லாததுனாலயே தினமும் வருவதற்கு தாமதமாகிடுதுன்னு நினைக்கிறேன்.

      விரைவில் 'விருந்தினர் பக்கம்' உங்கள் தளத்துல வரப்போகுது.

      நீக்கு
    2. என்ன...இன்னும் கீதா சாம்பசிவம் மேடத்தைக் காணலையே.... ஏதேனும் பிரயாணமா? நாளைதானே அமாவாசை? இன்றைக்கே வீடை மெழுக ஆரம்பித்துவிட்டார்களா?

      நீக்கு
    3. அத்திவரதரை பார்க்க போய் இருப்பார்கள் என்று நினைத்தேன்

      நீக்கு
    4. அவங்க லீவு லெட்டர் கொடுக்காம, காரணம் சொல்லாம பங்க் அடிச்சதைனால நாளைக்கு கீசா மேடத்தை பெஞ்சுல் நிற்கச் சொல்லலாமா இல்லை முட்டி போடச் சொல்லறதா? ஸ்கூல் ஹெட்மாஸ்டரட கேட்கணும்

      Jokes apart, உடல் நலம் சரியில்லையா பயணமா தெரியலை. விரைவில் நலமுடன் வரட்டும்

      நீக்கு
    5. இணைய புரட்சித் தலைவியை இன்னும் காணோமே....

      நீக்கு
    6. அத்தி வரதரைக் காலம்பர தொலைக்காட்சியில் காட்டினப்போவே பார்க்க முடியலை! :( இந்தக் கூட்டத்தில் நான் அத்தி வரதரைப் பார்க்கப் போனால் அங்கேயே அவரோடு அந்தக் குளத்தில் நானும் மூழ்க வேண்டியது தான்! எனக்கெல்லாம் இவ்வளவு கூட்டத்தில் போய்ப் பார்ப்பது என்பது இயலாத ஒன்று. சும்மா ஒரு நாள் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாமேனு எடுத்தேன்! :)

      நீக்கு
    7. நன்றி துரை. கோமதி அரசு, நெல்லைத் தமிழர் ஆகியோருக்கு!

      நீக்கு
    8. இது அடிக்கடி எங்க வீட்டில் பண்ணுவது தான். படங்களோடு பதிவு போட்டிருக்கேன். தேடினால் கிடைக்கலை. நான் ஏலக்காயும் பொடி செய்து சேர்ப்பேன். மற்றபடி எளிதாகச் செய்யக் கூடிய ஒன்று.

      நீக்கு
    9. //அந்தக் குளத்தில் நானும் மூழ்க வேண்டியது தான்! // - இந்த மாதிரி தவறிக்கூட அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, குளத்தில் நீரில்லாமல் வைத்திருக்கிறார்கள்.

      ஆனா, கூட்டம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கும்போது, எல்லோராலும் கியூவில் ரொம்ப நேரம் வெயிலில் நின்று தரிசனம் செய்வது கடினம். முதல் நாள் காலையிலேயே 10,000 பேர் வந்திருந்தார்கள் என்று காஞ்சி ஆட்சியர் தொலைக்காட்சியில் சொன்னார்.

      நீக்கு
    10. //ஏலக்காயும் பொடி செய்து சேர்ப்பேன்// - கீசா மேடம்... என் திருப்பதி பயணத்தில் நிறைய லட்டுகள் கிடைத்தன (டிக்கெட்டுக்கு மற்றும் நான் அதிகப்படியா வாங்கினேன்). அதுல ஒரு லட்டுல 5 ஏலக்காய் தோலுடன் அகப்படுகிறது. அது ஓவர்பவரிங் ஆக இருக்கு. ஏலக்காய் போட்டால் ஒரிஜினல் வாசனையை அது டாமினேட் செய்துவிடும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    11. //ஏலக்காயும் பொடி செய்து சேர்ப்பேன்// - கீசா மேடம்... என் திருப்பதி பயணத்தில் நிறைய லட்டுகள் கிடைத்தன (டிக்கெட்டுக்கு மற்றும் நான் அதிகப்படியா வாங்கினேன்). அதுல ஒரு லட்டுல 5 ஏலக்காய் தோலுடன் அகப்படுகிறது. அது ஓவர்பவரிங் ஆக இருக்கு. ஏலக்காய் போட்டால் ஒரிஜினல் வாசனையை அது டாமினேட் செய்துவிடும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    12. //இன்றைக்கே வீடை மெழுக ஆரம்பித்துவிட்டார்களா?// இப்போத் தான் கவனித்தேன். தினம் தினம் வீடு பெருக்கி மெழுகுதல் உண்டு. அமாவாசைனு சிறப்பெல்லாம் இல்லை. இதிலே தினம் தினம் இரண்டு பேருக்கும் ஒரு யுத்தம் வரும். அவருக்கு தினம் தினம் நான் வீட்டைத் துடைத்து வைப்பது பிடிக்காது! செவ்வாய், வெள்ளி போதும் என்பார். நாமதான் எல்லாத்துக்கும் நேர்மாறா இருப்போமே! எனக்கு அதைச் செய்யலைன்னா அன்னிக்குச் சாப்பாடு இறங்காது! புலம்புவேன்!

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் பானு அக்கா.

      நீக்கு
    2. வாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம்.... நீங்க குறிப்பிட்டிருந்தீர்களே என்று இன்றைக்கு விஜய் சூப்பர் சேனல் பார்த்தால் அதில் தொடர்ந்து 4 படங்கள் வருது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி நேரம் கிடைக்கும்?

      நீக்கு
    3. //அதில் தொடர்ந்து 4 படங்கள் வருது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி நேரம் கிடைக்கும்? //
      அப்படியா? அதெல்லாம் யாருக்குத் தெரியும்? சில சமயம் ப்ரவுஸ் பண்ணும் பொழுது ஏதாவது பிடித்த படம்;வந்தால் கொஞ்சம் பார்ப்பேன், கொஞ்சம் கேட்பேன்.

      நீக்கு
  5. தமிழ் ததும்பும் மனம் போல
    சுவை ததும்பும் தேங்காய் பர்பி!..

    சுவை நிரம்பி நிற்கின்ற
    அவை போல வாழட்டும் நல்லமனம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் ததும்பும் மனம் - எனக்கு தமிழ் மீது அவ்வளவு பற்று. மரபுக் கவிதை, யாப்புச் செய்யுள்கள், பக்தி இலக்கியங்களில் உள்ள பாக்கள் என்று அனைத்தையும் ரசிப்பேன். பெரும்பாலும் தமிழில்தான் வாட்சப் தகவல்கள் அனுப்புவேன்.

      என் உறவினர் ஒருவர் என்னிடம் கேட்டார், (நான் பல வருடங்கள் வெளிநாட்டில் இருந்தவன் என்று தெரியும்) ஏன் ஆங்கிலத்தில் எழுதாமல் தமிழில் எழுதறீங்கன்னு (அந்தப் பையன் தமிழகத்தில் பொறியியல் படித்து இங்கேயே வேலை பார்க்கிறார்). நான் 'என்ன காரணம், எனக்கு தமிழ் மீதான பற்று.அதனால் தமிழ் தெரிந்தவர்களுக்கு தமிழ்ல்தான் நான் மெசேஜ் அனுப்புவேன்' என்றேன். அவர், 'அப்படியா.. எனக்கு அது படிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு. தமிழ் எழுதப் படிக்க மிகக் குறைவாகத்தான் தெரியும்' என்றார். தமிழக நிலைமை அப்படி இருக்கு.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. தற்செயலாகத் தான் தமிழ் ததும்பும் மனம் போல என்று குறிப்பிட்டேன்..

      உண்மையிலேயே இப்படித்தானா!..
      ஆச்சர்யம்...

      நீக்கு
    4. நான் அலைபேசியில் தமிழில் அடிப்பது இல்லை. பெரும்பாலும் ஆங்கிலம் தான். அதிலும் குழந்தைகளுக்குச் செய்தி அனுப்பும்படி இருக்கும். தமிழில் மாறினால் திரும்ப ஆங்கிலத்துக்கு வர மறந்துடும்! ஆகவே "செல்லினம்" தரவிறக்கவே இல்லை. முகநூலுக்கு மட்டும் தமிழ் வரும். அதையும் பயன்படுத்துவது இல்லை!

      நீக்கு
    5. அதோடு எனக்குத் தமிழிலே பற்று இருக்கும் அளவுக்கு இலக்கணம் எல்லாம் தெரியாது! :(

      நீக்கு
    6. //தமிழிலே பற்று இருக்கும் அளவுக்கு இலக்கணம்// - கீசா மேடம்... பலருக்கும் இலக்கணம் தெரியாதுதான். எனக்கும்கூட. ஆனால் சந்தம் புரியும். (தளை). அதனால் தவறிருந்தால் தெரிந்துவிடும்.

      நீக்கு
    7. எனக்குச் சுத்தமாக எதுவும் தெரியாது! தமிழே தடவல் தான்! :(

      நீக்கு
  6. நெல்லை நீங்க அசத்தறீங்க போங்க!!! ரொம்ப நல்லா செஞ்சுருக்கீங்க நெல்லை... அழகா வந்திருக்கு. நான் ஒண்ணே ஒண்ணு எடுத்துட்டுப் போறேன்...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    எங்க அம்மா இப்படிச் செய்திருக்காங்க. அம்மா வழிப் பாட்டி செய்ததில் என் அம்மா கற்றுக் கொண்டு நானும் கற்றுக் கொண்டு...நானும் ஏதோ ஒரு தீபாவளிக்கு முதல் முதலாகச் செய்து அப்புறம் இங்கு போணியாகிட அப்புறம் என்ன?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    தேங்காய் மைசூர்ப்பா நினைச்சதும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். நீங்க எப்போது முதல் இனிப்பு குறைவாகச் சாப்பிடுவது என்று ஆரம்பித்தீர்கள்? இப்போதும் தீபாவளிக்கு 4-5 இனிப்புகள் செய்கிறீர்களா? அகத்தில் ஆவலுடன் சாப்பிட ஆட்கள் இருக்கா? (ரசிப்பவர்கள் இருந்தால்தான் நிறைய வித்தியாச வித்தியாசமாகச் செய்ய முடியும்.அதனால் கேட்டேன்)

      இப்போவும் டிரெடிஷனல் தேங்காய் பர்பி கிராண்ட் ஸ்னாக்ஸ்ல கிடைக்கும். ஆனா அவங்க ஜீனியை அளவுக்கு அதிகமா போடறாங்க.

      நீக்கு
    2. நாங்க எந்த இனிப்பும் கடைகளில் வாங்குவதில்லை. யாரேனும் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பது தான்!ஆவின் திரட்டுப்பால், கலாகந்த், குலாப்ஜாமூன் ஆகியவை வாங்குவோம் தரத்துக்காக! இந்தத் தேங்காய் பர்பியை கடலைமாவு சேர்க்காமல் ரவை சேர்த்தும் பண்ணலாம். வெள்ளை வெளேர்னு இருக்கும். ரவை வெந்துவிடாமல் பார்த்துக்கணும்! :)

      நீக்கு
    3. முன்னரே ரவையைப் பற்றி எழுதியிருந்தீங்க. நினைவில் வைத்துக்கொள்கிறேன்.

      அங்கே அஸ்வின்ஸ், பிஜி நாயுடு இனிப்பு கடைகள்லாம் இருக்கே.... அதில்கூட நீங்கள் வாங்குவதில்லையா?

      நீக்கு
    4. பிஜி நாயுடு பக்கம் போனது கூட இல்லை. அஸ்வின்ஸில் எப்போவானும் முறுக்கு, தட்டை வாங்குவார். தெற்கு வாசலில் காஃபி டே கடைக்கு முன்னால் முன்னெல்லாம் ஓர் ஐயங்கார் மாமா கோதுமை அல்வா பண்ணி ஒரு அண்டாவில் போட்டு எடுத்து வந்து சூடாக விற்பனை செய்துட்டு இருந்தார். இப்போ அவர் தெப்பக்குளம் பக்கம் போயிட்டாராம். ஸ்வீட் வாங்குவதில்லை. எப்போதேனும் கடலை மிட்டாய்!

      நீக்கு
    5. நான் அஸ்வின்ஸ்லதான் புளியோதரையும், தயிர் சாதமும் (திருச்சி பஸ் ஸ்டாண்ட்) வாங்கினேன். ரொம்ப நல்லா இருந்தது. பிஜி நாயுடுவின் குஞ்சாலாடு ஓகே ரகம். எனக்கு நல்ல குஞ்சாலாடு சாப்பிட ஆசை... சிறிய வயதில் சாப்பிட்டதைத் தவிர, நன்றாகப் பண்ணிய குஞ்சாலாடு இன்னும் சாப்பிடலை. கும்பகோணம் முராரி ஸ்வீட்ஸ் குஞ்சாலாடு ஆவரேஜ் (நெய் பிசுபிசுப்பு ஜாஸ்தி).

      நீக்கு
    6. இங்கே ரெங்காபவன் ஐயங்காரிடம் அல்வா, லட்டு மாஸ்டர் ஒருத்தர் இருந்தார். இரண்டு வகை லட்டு போடுவார். ஒன்று சாதாரணமான லட்டு. இன்னொன்று அப்படியே அச்சு, அசல் திருப்பதி லட்டுவின் சுவை! இரண்டும் வாங்கி இருக்கோம். இப்போ அந்த மாஸ்டர் ஊரை விட்டுப் போனதால் ஸ்வீட் கடையை மூடிவிட்டு முழுக்க முழுக்க ஓட்டல் தொழிலில் முனைந்து விட்டார். சாயங்காலம் ஆறுமணி ஆனால் போதும்! ஜனங்கள் வரிசை கட்டி நிற்பார்கள். அடை, அவியல், சேவை, பருத்திப்பால், உளுந்தம்பால் என விதம் விதமாக வாங்கிப் போக! அதிலும் உளுந்தம்பூரணத்தில் செய்யும் பொடி சேவை பண்ணி ஒரு மணி நேரத்தில் தீர்ந்துவிடும். நாங்க வாங்கினதில்லை. ஆனால் பல்லவனில் சென்னையில் இருந்து இரவு எட்டரைக்கு வீட்டுக்கு வரும்போது திறந்து இருக்கும் ஒரே கடை அதுதான் என்பதால் சில சமயங்களில் இரவு உணவுக்குப் போவோம். அங்கேயே சாப்பிட்டுவிட்டு நடந்தே வீட்டுக்கு வந்துடலாம்.

      நீக்கு
    7. //லட்டு மாஸ்டர் ஒருத்தர் இருந்தார்.// - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... நல்ல லீட் கொடுத்திருக்கீங்களேன்னு ஆசையா வாசிச்சா, அந்த லட்டு மாஸ்டர் இப்போ இல்லையாமே... எந்த இடத்திலும், ஏதேனும் ஸ்வீட், உணவு ரொம்ப நல்லா இருக்கும்னா, பகிர மறக்காதீங்க (விஷயத்தைப் பகிர).

      இப்போவும் அந்த ஓட்டல் இருக்கா? //உளுந்தம்பூரணத்தில் செய்யும் பொடி சேவை பண்ணி // - விசாரிச்சுச் சொல்லுங்க. அடுத்த முறை அந்தக் கடையில்தான் உணவு..ஹாஹா

      நீக்கு
    8. ஹாஹா, அது பரம்பரை ஓட்டல். இன்னமும் இருக்கு. துளசி/கோபாலைக் கூடப் போகச் சொன்னேன். அவங்க போயிட்டு வந்து படங்கள் எல்லாமும் எடுத்துப் போட்டிருக்காங்களே, பார்க்கலையா? அவங்க போன அன்னிக்கு எலுமிச்சை சேவை! தினம் ஒரு சேவை போடுவாங்க. இங்கே சிருங்கேரி மடத்துக்கு எதிரே இருக்கு அது! எனக்குத் தெரிஞ்சு ஶ்ரீரங்கத்தில் ருசி மாறாமல் இருக்கும் பரம்பரை ஓட்டல் அது ஒண்ணு தான்!

      நீக்கு
    9. படித்த ஞாபகம் லேசாகத்தான் இருக்கு. திரும்பவும் தேடறேன்.

      ரொம்ப ஆர்வமாக் கேட்கறேன் என்பதற்காக, உங்க வீட்டில் நுழைந்த உடனே, இந்த ஹோட்டலுக்கு, இதுதான் வழி, பிடிங்க மேப்பை, இடத்தைக் காலி பண்ணுங்க என்று சொல்லிவிடாதீர்கள்.

      அரங்கனின் அரவணைப் பாயசம் பிரசாதம் கிடைக்கவும் நான் ஏதாவது ஏற்பாடு செய்துகொண்டுதான் வருவேன்.

      நீக்கு
  7. அது என்ன ... நிவேதனத்தின் போது திருவிளக்கு ஏற்றி வைக்கவில்லையா?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீபம் ஏற்றி வைத்த போது படமெடுக்க வில்லை.

      படம் எடுத்தபோது தீபம் ஒளிராதது நினைவுக்கு வந்தது.

      நீக்கு
  8. நான் பொதுவா, படங்கள் எடுத்துச் செய்ததும், உடனே எழுதி அனுப்பமாட்டேன்.//

    நெல்லை அதே அதே...நான் பதிவு எழுதி செட் செய்யாமல் அப்படியே இருக்கும். ஸ்ரீராம் கேட்கும் போத பார்த்துக்கலாம் என்று இருந்துவிடுவேன் நீங்க சொல்லிருக்காப்ல நாம் தாமதிக்கும் போதும் இங்கு அந்த ரெசிப்பி வந்துவிடும்! ஹா ஹா ஹா ஹாஹ் ஆ.

    இன்னமும் என்னிடம் சில உள்ளன. அடுத்த வாரத்திற்குப் பிறகு எல்லாம் செட் செய்து ஸ்ரீராமுக்கு அனுப்பணும் என்று நினைத்துள்ளேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நாம் தாமதிக்கும் போதும் இங்கு அந்த ரெசிப்பி வந்துவிடும்! // - உண்மைதான் கீதா ரங்கன்.

      அதுசரி..நீங்க என்ன என்ன ரெசிப்பி ரெடிபண்ணி வச்சிருக்கீங்க? நான் அடுத்து மைதா கேக் பண்ணி எ.பிக்கு அனுப்பலாம்னு நினைத்திருக்கிறேன்.

      நீக்கு
    2. என்னிடமும் 2,3 செய்முறை படங்களுடன் காத்திருக்கு! ஆனால் அனுப்பலை!

      நீக்கு
    3. //செய்முறை படங்களுடன்// - ஆ...இது என்ன புதுச் செய்தி? என்ன ஐட்டங்கள் என்றாவது சொல்லக்கூடாதா? சிலர் தளத்திலிருந்து நான் செய்முறையைப் படித்து, அதில் சிறிதளவு மாற்றம் செய்து 'என்னுடையதுதான்' என்று சொல்லி என் பெயரில் நிறைய வெளியிடலாம் என நினைத்தேன். அதில் ஒன்றாக இருந்துவிடப்போகிறது கீசா மேடம்..

      நீக்கு
    4. :) ஹாஹாஹா, காப்பி காட்! copy cat

      நீக்கு
    5. //copy cat// - சின்ன வயசுல என் பையன், அவன் அக்கா செய்வதை அப்படியே செய்வான். அவ ஏதேனும் கேட்டால், அதையே கேட்பான். அதுக்க அவ, அவனை 'போடா காப்பி கேட்' என்பா. அப்போதான் இந்த வார்த்தையே எனக்குத் தெரியும்.

      நீக்கு
    6. copy cat!!!!!!!!!!!!!!!!!!!! ஆச்சரியம் தான்! நாங்கல்லாம் ஸ்கூல் படிக்கும்போதே ஒருத்தரை ஒருத்தர் இப்படிச் சொல்லிக் கொள்வோம்! :)))))

      நீக்கு
    7. எனக்கு பசங்க குழந்தையா இருக்கும்போது நிறைய படங்கள் எடுப்பேன், வீடியோவும் மூவி கிளிப்பும் நிறைய எடுத்துள்ளேன் (அதிலும் அவங்க பண்ணற குறும்பு, வித்தியாசமான பேச்சு, சண்டை வந்தால் நான் செய்யும் பஞ்சாயத்து, கோபப்படுவது, கலாட்டா இவைகளை காணொளியாக எடுத்துவைப்பேன்). அவைகளை அவ்வப்போது பார்ப்பதால், அவங்க சின்ன வயசுல பேசினது, சண்டை போட்டது எல்லாம் I will re-live. சில சமயம், நான் பையனிடம் கொஞ்சம் அதிகமாகவே சப்போர்டிவ் ஆக இருந்துவிட்டேன் என்ற குற்ற உணர்வுதான் வரும்.

      நீக்கு
    8. எங்களிடம் அப்போல்லாம் காமிரா இல்லை. ஃபில்ம் மாற்றும் சின்னக் காமிரா (கையடக்கம்) இருந்தது. அதில் அதிகமெல்லாம் எடுக்க முடியாது! ஆனால் ஒரு விஷயம். எங்க வீட்டிலும் பிள்ளைக்குழந்தைகளுக்கே ஆதரவு அதிகம்! அதிலும் என் மாமனார், மாமியார் எல்லாம் ஏதானும் கொடுக்கும் விஷயத்தில் கூட எங்க பெண்ணுக்குக் குறைவாகவும், பிள்ளைக்கு அதிகமாகவும் கொடுப்பார்கள். இது எனக்குக் கொஞ்சம் உறுத்தும். கோபம் வரும்!

      நீக்கு
    9. கீசா மேடம்... நான் நிறைய வீடியோக்களும் எடுத்திருப்பதனால், அதனைக் காணும்போது, நான் செய்த தவறுகள் பளிச்சுனு தெரியும். பெண்ணை கொஞ்சம் இக்னோர் பண்ணினதுபோலவும் தோன்றும். பையனுக்கு அதிகமான முக்கியத்துவம் (3 வயசு சின்னவன் என்று எந்த justification கொடுத்துக்கொண்டாலும்) நான் கொடுத்தது தவறுதான். (பெண்ணிடமும் நேரம் செலவழித்திருந்தாலும், பையன் பிறந்தப்பறம், ஒப்பீட்டளவில் குறைவுதான்) ஆனால் இந்த மனநிலை பின்னால் நிறைய மாறிவிட்டது. எங்க வீட்டில் நான் எப்போதும் சொல்வது, என் பெண், எங்கள் எல்லோரையும் இணைக்கும் ஃபெவிகால்.

      நீக்கு
    10. எங்க வீட்டிலும் பெண்ணுக்கும், பையருக்கும் 4 வயசு வித்தியாசம். ஆனால் நான் வேறுபாடு காட்டியதில்லை. சொல்லப் போனால் எங்க பையருக்கு எனக்குப் பெண் தான் செல்லம் என்றொரு எண்ணம் இன்று வரை உண்டு. பெண்ணைக் கேட்டால் உனக்குப் பிள்ளைதான் உசத்தி என்பாள்! இருவரும் ஒன்றுபோல நான் நடத்துவேன் என்பதை என் புக்ககத்தினர் அறிவார்கள். ஆனால் அவங்க வரை பிள்ளை தான் உயர்த்தி! :(

      நீக்கு
  9. பதில்கள்
    1. வாங்க கரந்தை ஜெயக்குமார் சார்... தொடர் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  10. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    நெல்லைத்தமிழன் ரெசிபி.
    பார்க்கவே மிக அருமை.
    எனக்கும் இது போலப் புதிதாகச் செய்ய மிகவும் பிடிக்கும்.
    அளவுகள் சரியாகக் கொடுத்து
    படங்கள் பொருத்தமாகக் கச்சிதமாக இருக்கின்றன.
    இந்த பர்ஃபி பாகு எந்தக் கலர்னு என் கணினி
    காட்ட மாட்டேன் என்கிறது.
    சந்தன வண்ணமாக இருக்குமோ .
    அப்போ சூப்பராக இருக்கும்,
    கரகரவென்று இருந்து வாயில் கரையும் என்று நினைக்கிறேன்.
    மனம் நிறை வாழ்த்துகள் முரளிமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா.... ஃப்ளாஷ் போட்டு படம் எடுத்தால் ஒரு நிறம், வெறும்ன படம் எடுத்தால் ஒரு நிறம், வெளிச்சத்தில் எடுத்தால் ஒரு நிறம் என்று வெவ்வேறு நிறங்களில் படங்கள் வந்தன. ஹா ஹா... ஆனால் உண்மையில் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தது தேங்காய் மைசூர்பாக்.

      'சந்தன வண்ணம்' - நீங்க சந்தன மரம் பார்த்திருக்கீங்களா? நான் தாளவாடி (சத்திய மங்கலம் அருகே மலையில்) ஊரில் படித்துக்கொண்டிருந்த போது, வார இறுதியில் எங்க வீட்டு அருகிலிருந்த தலைமை ஆசிரியர், என்னையும், அவர் பசங்களையும் அருகில் இருக்கும் காடுகளுக்குக் கூட்டிச் சென்றார். அப்போ நிறைய சந்தன மரங்களைப் பார்த்திருக்கிறேன். வயதான சந்தன மரங்கள், முறிந்து கிடக்கும்போது வாசனை ரொம்ப நல்லாவே வரும்.

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  12. இன்று காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்து கொண்டேன் (நேரலை புதிய தலைமுறை) பார்த்துக் கொண்டு இருக்கிறேன். பக்தர்கள் ஆவலுடன் ஓடி வருவது கண் நிறைகிறது.
    தேங்காய் மைசூர்பாகை இறைவனுக்கு (பெருமாளுக்கு) காட்டி விட்டதையும் பார்த்து பெருமாளையும் தரிசனம் செய்து விட்டேன்.
    படங்களுடன் செய்முறை மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்...காலையில் தரிசனம் செய்யலை. பிறகு ஜெ. தொலைக்காட்சியில் காட்டினார்கள். விரைவில் நேரடியான தரிசனம் வாய்க்கணும்.

      நீக்கு
  13. நெல்லை ஹைஃபைவ்....கேக் செய்யத் தொடங்கியதிலிருந்து நானும் இந்த பட்டர் பேப்பர் போட்டு ஸ்வீட்டை அதில் கொட்டி பீஸ் போடுவது வழக்கமாகிவிட்டது.

    அம்மா முந்திரியை தேங்காயோடு அரைத்துவிடுவார். அல்லது முந்திரி போடாமல் செய்வார்.

    முந்திரி வறுத்துப் போடுவதை நோட் செய்து கொண்டேன் நெல்லை. இதன் மீது என் ஒன்றுவிட்ட நாத்தனார் முந்திரி, பாதாம் எல்லாம் சீவலாகச் செய்து ஸ்வீட்டைக் கொட்டியதும் அதன் மீது தூவி அழுத்திவிடுவாள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன்... பட்டர் பேப்பர் போட்டு வெட்டினால், எவ்வளவு சுலபமாக இருக்கு. நான் ரொம்ப வியந்து போய்விட்டேன்.

      முந்திரியை அரைத்தால் இன்னும் நன்றாக இருக்கும். நீங்கள் சொல்லும் முறையும் (ஸ்வீட்டை பரத்தியதும் அதன் மேல் தூவி அழுத்துவது) சரியான முறைதான்.

      இதைச் சொல்லும்போது உ.பி. வாலா இனிப்புக் கடைகளில் செய்வது ஞாபகம் வந்தது. அவங்க பிஸ்தா என நாம் எண்ணும்படியாக பச்சைக் கலரில் பவுடர் வைத்திருப்பாங்க. பாதாமுக்கும் அதன் தூள் மாதிரி வைத்திருப்பாங்க. அதனைத் தூவுவார்கள். எனக்கு இவையெல்லாம் ஒரிஜனல் பொடி இல்லை என்றுதான் தோன்றும்.

      அவங்க இன்னொன்றும் செய்வாங்க. மைதா கேக் பண்ணி, 8 நாளாகியும் செலவாகலைனா, பூசாணம் பிடித்த அதன் மேற்பகுதியைச் சீவிவிட்டு, புதிய ஸ்வீட் செய்யும்போது அதில் கலந்துடுவாங்க. இதுபோலத்தான் எல்லா ஸ்வீட்களின் கதியும். ஏற்கனவே சொன்னதுபோல, மெட்ராஸ் ஜிலேபியின் கூட்டை முதலில் பொரித்து மூட்டை மூட்டையாகக் கட்டி வச்சுடுவாங்க. அன்னன்னைக்கு ஜீரா செய்து, அந்த ஜிலேபியை மீண்டும் பொரித்து ஜீராவில் போட்டுடுவாங்க. அவையெல்லாவற்றையும் பார்த்ததனால், வெளிக்கடைகளில் ஸ்வீட் வாங்குவதே எனக்குக் கொஞ்சம் அலர்ஜி.

      நீக்கு
  14. படம் அழகா வந்திருப்பதுபோலவே இந்த ஸ்வீட்டும் ரொம்ப நல்லா வந்தது//
    சிரத்தையுடன் மனபூர்வமாக செய்யும் போது அது நன்றாக அமைந்து விடும்.
    அது உங்களிடம் இருக்கிறது நெல்லைத்தமிழன்.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்... வாழ்க வளமுடன்.

      என்னதான் சிரத்தையோடு செய்தாலும் ஏதோ ஒன்று சொதப்பிவிடுகிறது. பாருங்க..இன்னைக்கு என் பெண்ணுக்கு, தக்காளி அவியல், பீட்ரூட் கரேமது, பருப்புப் பொடி செய்திருந்தேன். சாதம், கொஞ்சம் குழைந்துவிட்டது (குக்கரிலேயே ரொம்ப நேரம் வைத்திருக்கிறேன்). என் பெண் சொன்னபோதுதான் தெரிந்தது. இருந்தாலும் கம்ப்ளெயிண்ட் செய்யாமல் அவள் சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் சென்றுவிட்டாள்.

      நீக்கு
    2. பருப்புப் பொடி போட்டு சாப்பிட சாதம் குழையாமல் பதமாய் இருந்தால்தான் நன்றாக இருக்கும்.

      நீக்கு
    3. ஆமாம் கோமதி அரசு மேடம்... உடனே திரும்பவும் பருப்புப் பொடி சாதம் அவளுக்குக் கொடுக்க முடியாது. 5-6 நாட்கள் கழித்து திரும்பவும் செய்வேன். அப்போ சாதம் விரைவிரையாக இருக்கும்படி பார்த்துக்கணும். நன்றி

      நீக்கு
  15. தேங்காயை அரைத்து , கடலை மாவை நெய்யில் வறுத்து செய்யும்' கோலபர்பி' என்று மங்கையர்மலரில் வந்த செய்முறை குறிப்பைப் பார்த்து ஒரு தீபாவளிக்கு செய்தேன். அந்த குறிப்பில் பாலில் சர்க்கரையை சேர்க்க சொல்லி இருந்தார்கள். பாலும் சீனீயும் சேர்ந்து கட்டியாக கோலா பதத்தில் வரும் போது தேங்காய் விழுது, கடலைமாவை கலந்து கலவை நன்கு சேர்ந்து ஒட்டாமல் இருக்கும் போது தட்டில் கொட்டி துண்டு போட வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா இந்த ஸ்வீட்டும் என் பிறந்த வீட்டில் செய்வாங்க பெயர் எல்லாம் வைத்ததில்லை. பால்கோவா தேங்காய், கடலைமாவு பர்ஃபி என்று சொல்லுவாங்க. இதேதான் கோவா போல வரும் போது இரண்டையும் போட்டு செய்வாங்க அதுவும் என் மகனுக்குப் பால் சேர்த்தது பிடிக்கிறது என்று தெரிந்ததும் அம்மா வீட்டிற்குப் போகும் போது செய்து கொடுப்பாங்க.

      இதிலேயே சாக்கோ பவுடர் சேர்த்தும் செய்வதுண்டு. எல்லாம் மகனுக்காக.

      பாட்டி அளவெல்லாம் இல்லாமல் சும்மா கையில் கிடைப்பதை, கண்ணளவில் போட்டு என்னென்னவோ ஸ்வீட் எல்லாம் செய்வாங்க. நான் பல கற்றுக் கொள்ளாமல் போய்விட்டேனே என்று நினைபப்துண்டு. என்னுடன் தான் இருந்தாங்க ஆனால் வயதாகிய போது சில குறிப்புகள் சொல்ல முடியாமல் போனது.

      கீதா

      நீக்கு
    2. @கோமதி அரசு மேடம் - அது சாஃப்டா இருந்ததா? கொஞ்சம் அதிகமா கிளறினா மைசூர்பாக் கெட்டியாவது போல கல்லாகிவிடாதா? நான் ஒரு முறை செய்துபார்க்கிறேன். (அதை பெங்களூரில் செய்வேன். கட்டியாக ஆகிவிட்டால் நானும் என் பையனும்தான் சாப்பிடணும். வயதானவர்கள் சாப்பிடமுடியாமல் போய்விடும்)

      நன்றி உங்கள் புது ரெசிப்பிக்கு.

      நீக்கு
    3. @கீதா ரங்கன் - நாம பெரும்பாலும் செய்யும் தவறு, வயதானவர்களிடம் ரெசிப்பி கேட்டு எழுதி வைத்துக்கொள்ளாததுதான். என் அம்மாவிடம் அவ்வப்போது சில ரெசிப்பி கேட்பேன். இப்போல்லாம் அவங்களுக்கு அவ்வளவாக நினைவு வருவதில்லை.

      சாக்கோ பவுடர் - அல்லது கோகோ பவுடர் - என் பையனுக்கும் இந்தக் கலவை மிகவும் பிடிக்கும். எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது. இது இல்லாமல் நீங்கள் சொல்லியபடி தீபாவளிக்குச் செய்யுங்கள். (எங்களுக்கு இனிப்பு அவ்வளவு பிடிக்காது..அதுனால ரெண்டு பீஸ்தான் செய்தேன் என்றெல்லாம் சொல்லாமல், ஒரு தட்டு நிறைய செய்யுங்கள். நான் ஆஜராகிடறேன்)

      நீக்கு
    4. நெய் நிறைய் விடுகிறோம் அல்லவா, கவனமாய் முறுகாமல் பக்குவமாய் இறக்கி தூன்டுகள் போட்டு விட்டால் வாயில் கரையும்.
      நன்றாக இருந்தது. மாமா, அத்தையிடம் நல்ல பேர் கிடைத்தது ருசியாக இருக்கிறது என்று.

      நீக்கு
  16. தேங்காயும் சுகரும் சேர்ந்தால் கேட்கவா வேண்டும் சுவைக்கு அதோடு கடலைமாவும் சேர்ந்தால் சொல்லவே வேண்டாம் நிச்சயம் மிக சுவையாக இருக்கும்.... நான் சென்னைக்கு வந்தால் கவலை இல்லை ஹோட்டலுக்கு தேடிப் போய் சாபிடுவதை விட இங்கு ரிசிப்பி போடுபவர்களின் வீட்டிற்கு சென்றுவிடலாம் என்ற யோசனை வருகிறது ஆனால் என்ன நான் மோடி எதிர்ப்பாளனாக இருப்பதால் வீட்டிற்கு வர அழைப்போ கிடைக்குமோ என்று சந்தேகம் கொஞ்சம் எட்டி பார்க்கிறது..... நெல்லைதமிழன் அழைப்பு வருமா???????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழன் துரை. நிச்சயம் ரெசிப்பி போடுபவர்களின் வீட்டுக்குப் போனீங்கன்னா, படத்துல இருக்கற மாதிரிதான், அவங்க எழுதற மாதிரி சுவையா இருக்கான்னு செக் பண்ணிடலாம். (அப்புறம் ஏமாற்றமாய் இருந்தால் நான் ஜவாப்தாரி இல்லை)

      //மோடி எதிர்ப்பாளனாய்// - இந்தச் சந்தேகம்தானே வேண்டாங்கறது. நீங்க சொல்றதைப் பார்த்தால் குமரி அனந்தன், தமிழிசை பையன் இவர்களுக்கு வீட்டில் சாப்பாடே கிடைக்காதோ? செளந்திரராஜன் அவர்கள்தான் எந்தக் கட்சியிலும் சேர்ந்த மாதிரி தெரியலையே.

      உங்களை அழைக்கணும்னு ஆசைதான். ஆனா நீங்க உங்க டூப்பை அனுப்பிடறீங்கன்னு கீதா ரங்கன் கம்ப்ளெயிண்ட் செய்திருக்கிறார். அதுனால அழைப்பு உங்களுக்கு மட்டும்தான்.

      நீக்கு
  17. கடைசி படம் ஆசையை தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி... நான் இன்னும் உங்கள் மகன் திருமண ஸ்வீட்டுகளுக்காக கொரியர்காரர் வருகிறாரா என்று பார்ப்பதை நிறுத்தவில்லை.

      ஆமாம் இந்த மாதிரியான அட்டஹாசமான இனிப்புகள் உங்கள் தேவகோட்டை நாட்டில் உண்டோ?

      நீக்கு
  18. பார்க்கவே அழகா இருக்கு... எச்சில் ஊறுது.
    அப்படியே செஞ்சு பார்சல் பண்ணி விடுங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பரிவை குமார். அழகாத்தான் இருக்கு. செய்து பல வாரங்கள் ஆகிவிட்டது. அப்போவே காலியாகிவிட்டது. படங்களை வாட்சப்பில் அனுப்பத் தடையேதும் இல்லை. ஹா ஹா

      நீக்கு
  19. ஏழுமலையானே... இது கட்டம் கட்டமாக உன் லட்டின் வேறு வடிவம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தி.தனபாலன். லட்டுக்கும் இதுக்கும் குறைந்த பட்சம் 8 வித்தியாசம் உண்டு. போன வாரம்தான் திருப்பதியில் லட்டும் சாப்பிட்டேன்.

      நீங்க சொன்னப்பறம் எனக்குத் தோன்றுவது...ஒருவேளை லட்டை, உருண்டையாகப் பிடிக்காமல், இதுபோல கட்டம் கட்டமாகச் செய்ய ஆரம்பித்தால் (அதனை நாம் ஏற்றுக்கொண்டால்), திருப்பதியிலும் முழுமையாக இதனை ஆட்டமேட் செய்துவிடலாம். ஒவ்வொரு லட்டும் 160 கிராம் இருக்கணும் என்றெல்லாம் சந்தேகப்படவேண்டாம். டிரேல பூந்தி கொட்டினபிறகு சிறிது நேரத்தில், சதுரம் சதுரமா கட் பண்ணிடலாம்.

      நீக்கு
    2. நேத்திக்கு எங்களுக்கும் திருப்பதி லட்டு கிடைத்தது.

      நீக்கு
    3. மிக்க மகிழ்ச்சி கீசா மேடம்... அந்த மாதிரி கோவில் பிரசாதம் கிடைக்கும்போது, அந்த அந்தத் தலத்தின் இறை அருளே கிடைத்துவிட்டதாக மனதில் மகிழ்ச்சி பொங்குகிறதல்லவா?

      நீக்கு
    4. நேற்று வரும் என ஏற்கெனவே தெரியும்! :)

      நீக்கு
  20. நிச்சயம் ருசியாகவே இருக்கும். பொதுவாகவே தேங்காய் பர்பி செய்யும் போது அதைக் கெட்டியாக்க இறக்கும் சற்று முன் திரித்த பொட்டுக்கடலை அல்லது கடலை மாவு 1 தேக்கரண்டி சேர்க்கும் வழக்கம் உண்டு. இந்த அளவில் செய்து பார்க்கிறேன். பட்டர் பேப்பர் உபயோகித்து பர்பிகளை அழகாக வெட்டி எடுக்கலாம் என்பதையும் குறித்துக் கொண்டேன்:). நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ராமலக்‌ஷ்மி மேடம்.. விரைவில் வெறும் தேங்காய் பர்பி செய்து நீங்கள் சொல்வதுபோலச் செய்கிறேன். (ஆனா பாருங்க...தினம் தினம், இன்றிலிருந்து ஸ்வீட்ஸ் சாப்பிடுவதை முழுவதும் விட்டுடணும்னு நினைக்கிறேன். ஆனா முடியறதில்லை. உடல் எடை அதிகமாயிட்டே போகுது.காலைல கூட நினைத்தேன்..இன்று 1ம் தேதி..இனி ஸ்வீட் சாப்பிடக்கூடாதுன்னு..ஆனால் திருப்பதி லட்டு சாப்பிட்டுவிட்டேன்).

      ஒரு சில தினங்களில் செய்துபார்க்கிறேன்.

      நீக்கு
  21. மைசூர்பாகு செய்திருக்கிறோம் தேங்காய் பர்ஃபி செய்ததுண்டு கலவை செய்ததில்லைமைசூர்பாக் செய்யும்போது சரியான பதம் காண்பது சிரமம் கெட்டியாகி விடும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க ஜி.எம்.பி சார்... சனிக்கிழமைதான் விமர்சனம் செய்தீங்க. அதுக்குள்ள உங்களுக்குத் தெரியாத ஒரு ஸ்வீட் எ.பி. திங்கக்கிழமை பதிவுல வந்துடுச்சு.

      நீங்க சொல்றது சரி.. ஆனா எனக்கு (இப்போதைக்கு) கல்லாக இருந்தாலும் மைசூர்பாக் பிடிக்கும், ரொம்ப பொருபொருவென இருப்பதைவிட. பொருபொருவென இருந்தால் எண்ணெய் நிறைய குடித்துவிட்டதோ என்று தோன்றும்.

      நீக்கு
  22. நன்றாக வந்திருக்கிறது. ஸ்வீட் செய்யும் பொழுது பட்டர் பேப்பர் பயன் படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் யதேச்சையாகத் தெரிந்துகொண்டேன் பானுமதி வெங்கடேச்வரன் மேடம். வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. அப்படிச் சொல்லும்போதே, முன்பெல்லாம் (5+ வருடங்களுக்கு முன்பு), நெல்லை லாலா கடைகளில் அல்வாவை பட்டர் பேப்பரில்தான் சுற்றிக்கொடுப்பார்கள். அதற்கு முன்பு இயற்கை பட்டர் பேப்பர், அதாவது வாழை இலையில் கொடுப்பார்கள். சாப்பிட எளிது. எதிலும் ஒட்டாது. இப்போல்லாம் நியூஸ் பேப்பரில் (சதக் சதக் என்று குத்தினார், பயத்தில் வீரிட்டார்கள், போலீசார் வலைவீசித் தேடினர் பத்திரிகையில்தான்) கொடுப்பதால், எண்ணெய் உறிஞ்சி, பேப்பரிலும் அல்வா ஒட்டி... கஷ்டமா இருக்கு பார்க்கவே

      நீக்கு
    3. அன்பு முரளி மா, நாங்கள் வீட்டிலியே சந்தன மரம் வைத்திருந்தோம்.
      பத்தாண்டுகளுக்கு முன். சட்டப்படி வைக்கக் கூடாதாம் .
      அதனால் வெட்டி விட்டோம்.
      இப்போது அந்த இடத்தில் தேக்கு இருக்கிறது.

      நீக்கு
    4. நாங்களும், சந்தனமும், பாக்கும் வைத்தோம். பாக்குக் குலைகள் கூடத்தள்ளியது. ஆனால் அப்போதிருந்த முனிசிபாலிடியில் வந்து பார்த்துவிட்டு வெட்டச் சொல்லி வெட்டினோம். மனது கலங்கிப் போனது!

      நீக்கு
    5. என்னவோ இந்த 'வீட்டில் சந்தன மரம் வைக்கக்கூடாது' என்ற அர்த்தமில்லாத சட்டம் இருக்கிறது. சந்தன மரத்தை வெட்டுபவர்களும், கடத்துபவர்களும் இது வீட்டில் விளைந்த சந்தன மரம் என்று சொல்லி சட்டத்தினின்று தப்பித்துவிடக் கூடாது என்பதற்காக இந்தச் சட்டம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

      விவசாயிகளுக்கு வரிவிலக்கு உண்டு என்பதால், அமிதாப்பச்சன், சரத்பவார் என்று பெரும் பணக்காரர்களெல்லாம், நாங்கள் விவசாயம் செய்து அதில் கிடைத்தது ஆண்டு வருமானம் 100 கோடி என்று கணக்கு காண்பித்துவிடுகிறார்கள். நம் நாட்டின் நிலைமை அப்படி இருக்கிறது.

      நீக்கு
  23. என்னால் எதுவும் செய்ய. எழுத முடியலை. வாழ்த்துகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிக்க மிகவும் கலக்கமாக இருக்கிறது காமாட்சி அம்மா. உங்கள் நலத்திற்காக நாங்கள் எல்லோரும் ப்ரார்த்திக்கின்றோம்.

      நீக்கு
  24. மெயில் ஸரி ஆக போஸ்ட் ஆகவே. ஸாரி. ஆசிகளும் அன்பும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் அம்மா! வருத்தமாக இருக்கிறது!

      நீக்கு
    2. எல்லோருக்கும் ஆசிகள். அன்புடன் காமாட்சி மஹாலிங்கம்

      நீக்கு
    3. நீங்கள் நன்றாக இருக்கணும் காமாட்சி மா.
      உடல் நலம் பெற என் பிரார்த்தனைகள்.

      நீக்கு
    4. உங்கள் ஆசிகளுக்கு நன்றி காமாட்சி அம்மா.

      நீக்கு
  25. எல்லோருக்கும் ஆசி வழங்கி அன்புடன் வந்து போனதே எங்களுக்கு ஊக்கம் தருகிறது.
    உங்கள் உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் நெல்லை தமிழன் சகோதரரே

    அருமையான செய்முறையுடன் தேங்காய் பர்பி அழகாக செய்து காட்டியுள்ளீர்கள். நானும் இதே முறையில்தான் செய்வேன். எனக்கும் இனிப்பு ரொம்பவே பிடிக்கும். சாப்பிடலாமா எனத் தெரியவில்லை. தெரிந்து கொள்ளவும், இன்னமும் முறைப்படி வைத்தியரிடம் செல்லவில்லை. படங்களையும், செய்முறையையும் பார்த்தவுடன் செய்து சாப்பிடும் ஆவலைத் தூண்டியது மிகவும் அழகாக பொறுமையாக செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    எனக்கு இரண்டு நாட்களாக உடம்பு கொஞ்சம் சரியில்லை. (தடுமன், ஜுரம் என படுத்தல். ) இப்போதுதான் சற்று பரவாயில்லை.எனவே ஜுரத்திலும் தேங்காய் பர்பியை பார்த்தவுடன் சாப்பிடும் ஆவலில் இங்கு வந்தேன். தாமதமாக வந்ததற்கு வருந்துகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    என் பதிவுக்கு வந்து கருத்துகள் தந்த சகோக்கள் துளசிதரன் அவர்களுக்கும், கீதாரெங்கன் அவர்களுக்கும் மிக்க நன்றி.உடல்நலமில்லாததால் இரண்டு தினங்கள் பதிவுலகம் வர இயலவில்லை. நாளை பதில் தருகிறேன். இங்கு சொன்னால் அவர்கள் கவனிப்பார்களேயென இங்கு நன்றி கூறுகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... நேற்று மாலையே நீங்கள் கருத்துரையிட வருவீர்கள் என்று நினைத்தேன். உடல் நலமில்லை என அறிந்தேன். 'தடுமன் - இந்த வார்த்தை கேட்டு எவ்வளவு வருஷங்களாகிவிட்டது.

      நம் உடலே நமக்கு ஷுகர் இருக்கான்னு சொல்லும்னு நினைக்கிறேன். நான் 3 மாதங்களுக்கு ஒரு முறை செக் செய்துகொள்வேன் (ஷுகர் மட்டுமாவது). இன்னும் இரு வாரத்தில் மீண்டும் செக் பண்ணிக்கணும் (நான் இனிப்புகள் சாப்பிடும் அளவு அப்படி..ஹாஹா).

      வருகைக்கு நன்றி

      நீக்கு
  27. ரொம்ப சுவையான பதார்த்தம் ......


    படங்களும் , செய்முறையும் ரொம்ப தெளிவு ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அனுராதா ப்ரேம்குமார்... நன்றி. ஏன் தாமதமான வருகை?

      நீக்கு
    2. பசங்களுக்கு தேர்வு ..அத்துடன் வாசிப்பு கொஞ்சம் அதிகம் அதான் இங்கு தாமதம்

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!