21.9.19

மரங்களில் கட்டப்பட்டுள்ள பாட்டில்கள் 

1)  வெள்ளத்தில் அடித்து சென்றவரை மனிதசங்கிலி அமைத்து மீட்ட நிகழ்வு   ம.பி.,யில் நடந்தது.   வாழ்க மனிதம்.





2)  நல்ல ஆசிரியர்கள் அமைந்தால் நல்ல மாணவர்கள் உருவாவார்கள்.  

................குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை ஆசிரியர்கள், மாணவர்கள் சேகரித்து, பள்ளியை சுற்றியுள்ள மரங்களில் கட்டி வைத்துள்ளனர்.   அதில், பறவைகளுக்கு தண்ணீர், உணவு நிரப்பி வைக்கின்றனர்........

சேலம் மாவட்டத்தில் உள்ள, உமையாள்புரம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுடன் இணைந்து, கழிவு பொருட்கள் மேலாண்மை, நீர் சிக்கன முறையை கையாண்டு அசத்துகின்றனர்.






3)  குடும்ப வறுமையால் படிப்பை இழந்து, நான் பட்ட கஷ்டத்தைப் பிள்ளைகள் படக்கூடாதுனு தற்காலிகமாக பள்ளிக்கூடம் நடத்தறதுக்காக புதுசா கட்டிய வீட்டைத் தந்திருக்கிறேன்' என்கிறார் பூக்கடை நடத்தி வரும் தியாகராஜன்.  (நன்றி ஏகாந்தன் ஸார்)





4)  தனது சொந்தப் பணத்திலிருந்து 34 ஆபரேஷன்களுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துள்ள கவாஸ்கர் மேலும் ஏழைக் குழந்தைகளுக்கு இருதய ஆபரேஷன்செய்ய அமெரிக்கா சென்று நிதி திரட்டி 600 குழந்தைகளுக்கு உதவி உள்ளார். (நன்றி ஏகாந்தன் ஸார்)




32 கருத்துகள்:

Geetha Sambasivam சொன்னது…

எல்லாச் செய்திகளுமே அறியாதன. கவாஸ்கரிடம் பணமே இல்லையா என்ன? நிதி திரட்டிக் கொடுத்திருக்கார். போகட்டும் அப்படியானும் மனம் வந்ததே

Geetha Sambasivam சொன்னது…

இன்னும் யாரும் வரலை போல! வரவிருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள், வணக்கம், நல்வரவு, பிரார்த்தனைகள்.

நெல்லைத்தமிழன் சொன்னது…

காவஸ்கரிடம் பணமும் இருக்கு. பையனும் இருக்கிறான். தன் பிரபலத்தை உபயோகப்படுத்தி கூடுதல் பணம் திரட்டும் சக்தியும் இருக்கு.

ஸ்ரீராம். சொன்னது…

கவாஸ்கர் தன் சொந்தப்பணத்திலிருந்தும் கொடுத்திருக்கிறாரே...  

ஸ்ரீராம். சொன்னது…

ஆமாம் நெல்லை... பையன் கிரிக்கெட்டில் சோபிக்கவில்லை.  இன்னமும் இவர் வர்ணனை செய்து சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்.  பையன் என்ன செய்கிறானோ!

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க கீதா அக்கா...   நல்வரவும், வணக்கமும்,  நன்றியும்.

ஸ்ரீராம். சொன்னது…

கோமதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

கோமதி அரசு சொன்னது…

அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

ஆனைத்து செய்திகளும் நல்ல செய்திகள்.
பிறருக்கு உதவும் செய்திகள்.

பறவைகளுக்கு உணவு தண்ணீரை மரத்தில் வைக்கும் முறையை காட்டி இருக்கலாம் படத்தில்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

அனைவருக்கும் இனிய காலை வணக்கம். மூன்று நல்ல செய்திகளுக்கும்
நன்றி.

அன்பு கோமதிக்கு இனிய வாழ்த்துகள். உடல்,மன ஆரோக்கியத்துடன்
வாழ்வாங்கு வாழ ஆசிகள்.

மீண்டும் வருகிறேன்.

கோமதி அரசு சொன்னது…

முகநூல் பிறந்த நாளா? மகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்.

Kamala Hariharan சொன்னது…

காலை வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் வணக்கங்களுடன், இந்த நாள் இனியதாக அமையவும் பிராத்தனை செய்கிறேன்.

இந்த இனிய நாளில் பிறந்த நாள் காணும் சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த நன்னாளில், அனைத்து நலன்களும் அவருக்கு இறைவன் அருளவும் பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க வல்லிம்மா...    இனிய காலை வணக்கம்.

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க கோமதி அக்கா...அது முகநூலுக்காக தரப்பட்ட பிறந்த நாளா?!!

ஸ்ரீராம். சொன்னது…

வணக்கம் கோமதி அக்கா..   வாங்க...  வாங்க...

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க கமலா அக்கா.  இனிய காலை வணக்கம்.

இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்ல செய்திகள். பகிர்வுக்கு நன்றி.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி ராமலக்ஷ்மி.

டிபிஆர்.ஜோசப் சொன்னது…

அருமையான செய்திகளை சிரத்தையுடன் திரட்டி தருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி ஜோஸப் ஸார்.

நெல்லைத்தமிழன் சொன்னது…

பொருளாடார விதிப்படி, ஒருத்தர் சம்பாதித்தால் இன்னொருவர் செலவழிக்கணும்தானே... ரோஷனும் நிறைய சம்பாதித்திருப்பார். அப்பா எவ்வளவோ கோடிகள் சம்பாதித்திருப்பார். பின்ன யார் செலவு செய்வது? கவாஸ்கருக்கு இப்போ ஒரு வருடத்துக்கு 2 கோடிக்கு மேல் சம்பளம். இது தவிர வர்ணணை அது இது என்று...

KILLERGEE Devakottai சொன்னது…

எல்லாம் அருமையான செய்திகளே கவாஸ்கர் இந்த அளவு செய்வதே பெரிய விசயம்தான்.

KILLERGEE Devakottai சொன்னது…

அவரது பிரபலம் இதற்கு பயனாகிறதே... அவருடைய எல்லா பணத்தையும் செலவு செய்ய முடியாதே வாழ்க வளமுடன்...

துரை செல்வராஜூ சொன்னது…

அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

துரை செல்வராஜூ சொன்னது…

இன்றைய செய்தித் தொகுப்பு அருமை..
மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

கோமதி அரசு சொன்னது…

ஆவணி மாதம் பிறந்த நாள் முடிந்து விட்டது நடசத்திர பிறந்த நாள். இது தேதிப் படி , இதை நினைப்பதே இல்லை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துகள்...

கோமதி அரசு சொன்னது…

வணக்கம் வல்லி அக்கா, பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி.

கோமதி அரசு சொன்னது…

உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கும் பிராரத்தனைக்கும்,நன்றி கமலா ஹரிஹரன்

வல்லிசிம்ஹன் சொன்னது…

உயிரை மீட்ட உத்தமருகளுக்கு மிகப் பெரிய நன்றி. சிறப்பாக யோசனை செய்து பறவைகளுக்கு உணவும் தண்ணீரும் கொடுக்கும் மாணவர்களும் ஆசிரியரும் செய்யும் தொண்டு தொடரட்டும்.தன் வீட்டையும் கல்விக்காக தந்து உதவிய நல்ல மனிதருக்கும் எத்தனை பாராட்டினாலும் தங்கும்.

மாதேவி சொன்னது…

கோமதி அரசு அவர்களின் நட்சதுதிர பிறந்த நாளுக்கு வாழ்துகள் நலமுடன் இருங்கள்.

அனைத்து செய்திகளும் நன்று. பள்ளிக்கு புதிய வீட்டையே இடம் கொடுத்த நன்மனம்.

கோமதி அரசு சொன்னது…

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி மாதேவி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அனைத்தும் அருமையான செய்திகள்....

நல்ல மனம் கொண்ட இந்த மனிதர்களுக்கு வாழ்த்துகள்.