ஹாய் ப்ரெண்ட்ஸ்!
முதல் தடவையா எங்க வீட்டு சமையலறைக்கு வந்திருக்கீங்க! வாங்க! வாங்க,!
இன்னைக்கு காலையில் மெது மெதுன்னு தோசையோட கோட்டைக்கார அலமேலு மாமி சாம்பார் வைச்சாச்சு. அது என்னன்னு கேட்கறீங்களா? சாம்பார்க்கு பேர பார்த்து என்னன்னு யோசிக்கறீங்களோ? ஹி! ஹி.!
சாம்பார் ரெசிபி சொல்லிக் கொடுத்தவங்க பேரை சாம்பாருக்கே வைச்சிட்டேன். எப்பூடி?
இப்போ ரெசிபி பார்க்கலாம்..
நல்லா பழுத்த நாலு தக்காளி எடுத்துக்கோங்க. இரு பெரிய வெங்காயத்தை நல்லா சன்னமா நீள வாக்குல வெட்டிக்கோங்க.
அப்புறம் நம்ம கிட்ட இருக்கற இரண்டு கேரட், மஞ்சள் பூசணி சின்னத் துண்டா , ஒரு பத்து துண்டு எடுத்துக்கோங்க.
எல்லாவற்றையும் நறுக்கிப் போட்டு கால் டம்ளர்க்கும் குறைவா துவரம் பருப்பு, அதே அளவு பயத்தப் பருப்பு சேர்த்துக்கோங்க.
குக்கரில் பருப்பு , காய்கறி , ஒரு பகுதி வெங்காயம் எல்லாம் போட்டு மூணு விசில் வைச்சு இறக்கி ஆற விடுங்க.
வாணலியில் கடுகு, வெந்தயம்,இரண்டு பட்டமிளகாய், இரண்டு பச்சை மிளகாய், மீதம் இருக்கற வெங்காயம் போட்டு வதக்கி, சாம்பார் பொடி மூன்று ஸ்பூன் சேர்த்து வதக்கி.. பின் புளி யா? வேண்டாங்க.... இது புளியில்லாச் சாம்பார். அதான் ஸ்பெஷலே!
சாம்பார் பொடி சேர்த்து வதக்கிய பின் குக்கரில் வெந்த கலவையை சேர்த்து மறக்காம உப்பு சேர்த்துடுங்க.
கெட்டியா இருந்தால் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்துக்கோங்க. பருப்பு இருக்குல்ல.. தண்ணீர் தாங்கும்.
ஒரு கொதி வந்ததும் உபசார வேலைகள்.. அதாங்க.. கருவேப்பிலை கிள்ளிப் போடறது, பெருங்காயம் போடறது.. இதெல்லாம் முடிச்சப்புறம் கொதிக்கறச்ச ஒரு வாசனை வரும் பாருங்க!
கமகமன்னு கச்சேரிக்கு பக்க வாத்தியமாய் தான் தோசையோ இட்லியோ இருக்கும். செஞ்சு பார்த்துட்டுச் சொல்லுங்க.
இன்னொரு ரெசிபியோட வரேன். அதுவரை ருசிங்க! ருசிங்க! ருசிச்சுக்கிட்டே இருங்க!
மாலா மாதவன்
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்
பதிலளிநீக்குஅட ! சாம்பார் பதிவுன் இன்று ஆரம்பமா!
கீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்...
நீக்கு//சாம்பார் பதிவுன் இன்று ஆரம்பமா///
அபுரி!
ஹா ஹா ஹா ஸ்ரீராம் என் கணினி, கீ போர்ட், மௌஸ் செய்யும் மாயம் அது!!!
நீக்குநேற்று ஃபுல்லும் கணினி ஒரே ஷாக்கோ ஷாக்கு.
கம கம அட! சாம்பார் பதிவுடன் இன்று "திங்க" ஆரம்பிக்குதே!!!!!
கீதா
ஆரம்பமே ரொம்ப அருமையா சொல்றாங்களே!!! மா மா!!!!!!!!
பதிலளிநீக்குகீதா
அனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க... வாங்க...
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். இதற்கு முன் இட்ட இரு பின்னூட்டங்களையும் காணோமே.
நீக்குமாலா மாதவன் சாம்பாரா. அதுவும் அலமேலு மாமி செய்முறை. பிரமாதமாக வந்திருக்கிறது. ஓப்போஸ்
சமையல் பாதி. தனி சாம்பார் கொதித்து மீதி.
புளியும் இல்லாமல் வாசனாதி அலங்காரங்களுடன்
பார்க்கவே ஜோர்..
வாழ்த்துகள் மாலா மா.
அனைவருக்கும் இந்த இனிய திங்கள் நன்னாளாக இருக்க வாழ்த்துகள்.
வாங்க வல்லிம்மா... இனிய காலை வணக்கம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிய நாளாக அமையவும் மனமாற இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலாக்கா.... இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி. காலை வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவும், வணக்கமும், வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும். இந்த மாதிரி சாம்பாரைத் தான் ஹோட்டல் சாம்பார்னு முன்னால் எல்லாம் பண்ணிக்கொண்டு இருந்தோம். இப்போ உங்களோட அதாவது ஸ்ரீராமோட சரவணபவன் சாம்பார் செய்முறை பார்த்தப்புறமா அதான்!
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... நல்வரவும், வணக்கமும், நன்றிகளும்!
நீக்குமதுரை வடக்காவணி மூலவீதியிலே ஸுமுகவிலாஸ்னு அந்தக் காலங்களில் ஒரு ஓட்டல் இருந்தது. அங்கே வைக்கும் சாம்பார் இப்படித்தான் இருக்கும். இதுக்கு நாங்க ஸுமுகவிலாஸ் சாம்பார்னே சொல்லுவோம். அம்மா வீட்டில் இல்லாதப்போ சமையல் செய்யும் சமயங்களில் சில நாட்கள் சாதம், ரசம் வைத்துவிட்டு இந்த சாம்பாரை வாங்கிட்டு வரச் சொல்லுவார் அப்பா. அப்பளம் பொரித்துக் கொண்டு சாதத்தோடும் சாப்பிடுவோம். இந்த மணமே தனியா இருக்கும். அதுவும் அம்மா பச்சை தனியாவைப் பொடி செய்து கடைசியில் மேலே தூவுவார்.
நீக்குரொம்பநாட்களாக/மாதங்களாக/வருடங்களாகச் சொல்ல நினைச்சு விட்டுப் போகிறது. நன்றி/வணக்கம் போதும். நன்றி"களோ"/வணக்கங்"களோ" தேவை இல்லை. பிரார்த்தனைகள் செய்யலாம். வேணும்னா இந்த வார சமையல் கலைஞர் கவிதாயினி மாலா மாதவனைக் கேளுங்க. இலக்கணம் தெரிஞ்ச அவங்க சொல்லுவாங்க. இஃகி,இஃகி, கவிதாயினியே தப்புனு அவங்க அதைச் சுட்டிக்காட்டிச் சொல்லாம இருந்தாச் சரி! :)))))))
நீக்குசின்னமனூரில் என் சித்தி வீட்டில் இருந்த சமையல் மாமி பத்மாசனி மாமியின் ரசம், சாம்பார்னு நானும் பண்ணுவேன். அன்னன்னிக்குப் பொடி இடிச்சுப் போடுவாங்க! பொதுவாகவே எங்க பக்கம் (மதுரை) நிறைய சாம்பார்ப் பொடி எல்லாம் திரிச்சு/அரைச்சு வைச்சுக்க மாட்டாங்க! ரசப்பொடினு கொஞ்சம் போல் 2 மாசத்துக்கு வராப்போல் பண்ணிப்பாங்க. அதுவும் சாமான்களை எல்லாம் வீட்டிலேயே வறுத்துடுவாங்க, வெறும் வாணலியில்
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய "திங்க"ப்பதிவாக சகோதரி மாலா மாதவன் அவர்களின் கைவண்ணமாகிய k A சாம்பார் மிகவும் அருமையாக உள்ளது. சொல்லிச்சென்ற விதமும், சாம்பரின் மணத்திற்கு ஈடாக பிரமாதமாக உள்ளது. இனிமேல் எங்கள் வீட்டிலும், கச்சேரிக்கு பக்க வாத்தியமாய் இதையும் செய்து விடலாம். அருமை சகோதரி மாலா. நல்ல பகிர்வுக்கு வாழ்த்துக்களுடன் நன்றிகளும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சாம்பாருக்கு சாரி சாம்பார் பதிவர் மாலன் மாதவனுக்கு வணக்கம் மணமணக்கும் சாம்பாருடன் அடி எடுத்து வைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாங்க மதுரை... ஆமாம்.. திங்கற கிழமைக்கு அவர் புதுசு!
நீக்குமதுரை... நீங்கள் கேவாபோவுக்கு கதை ஒன்றுதான் தந்திருக்கிறீர்கள் இதுவரை... திங்கற கிழமைக்கு ஒன்றுமே தந்ததில்லை... எப்போ தரப்போறீங்க ரெண்டும்?
நான் திங்கற கிழமைக்கு பதிவு எழுதி அது நான்வெஜ்கா இருக்கப் போக எல்லோரும் தலை தெரிச்சு ஒடிடப் போறாங்க
நீக்குநீங்கள் கேட்டு கொண்டுதற்கு இணங்க உங்கள் தளத்திற்கு ஏற்ற ஒரு வெஜ் ரிசிப்பியை நான் அனுப்பி வைக்க முயல்கிறேன்
நீக்கு@மதுரைத் தமிழன்... நீங்க, "நான், வெஜ் ரெசிப்பியை அனுப்பிவைக்க முயல்கிறேன்" என்று எழுதியதில் கமாவை கவனிக்காமல் திடுக்கிட்டேன். ஹா ஹா... விரைவில் எழுதுங்க.
நீக்குமுரைத் தமிழன் ரெசிப்பி வந்த வாரத்துலயே, ஶ்ரீராம்.... வெள்ளிக்கிழமைக்கு இந்தப் பாடலைப் போட்டுடுங்க...
நீக்குதுணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே... சோகம் கொள்ளாதே...
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... வணக்கம்.
நீக்கு//கமகமன்னு கச்சேரிக்கு பக்க வாத்தியமாய் தான் தோசையோ இட்லியோ இருக்கும். செஞ்சு பார்த்துட்டுச் சொல்லுங்க. //
பதிலளிநீக்குஇட்லி தோசைக்கு இந்த சாம்பார் நன்றாக இருக்கும்.
தேவகோட்டை நகரத்தார் இந்திராம்மா எனக்கு சொல்லி தந்து இருக்கிறார்கள்.
சொல்லியவிதம், படம் எல்லாம் சேர்ந்து மாலா மாதவனிடம் இன்னும் எதிர்ப்பார்ப்பு கூடி இருக்கிறது.
நிறைய சமையல் குறிப்புகள் கொடுங்கள் மாலா.
வெங்கட் நாகராஜ் தளத்தில் எழுதியவர் தானே!
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇதே சாம்பாரைத்தான் நேற்று சேவைக்குச் செய்தேன். ஆனால் பறங்கிக்காய் போடலை. சாம்பார்பொடி சேர்க்கலை. அதுக்கு பதிலா ஒரு டீஸ்பூன் பொட்டுக்கடலை, தனியா பொடி, மளிகாய்பொடி, மஞ்சள் பொடி, 1டீஸ்பூன் தேங்காய் அரைத்துச் சேர்த்தேன்.
என் பெண் சாப்பிடுவான்னு (சேவை அவள் விருப்பமில்லை) நினைக்கலை. மத்யானம் சேவையும் இந்த சாம்பாரும் சேர்த்து சாப்பிட்டுவிட்டு நல்லா இருந்தது என்றாள் (ரொம்ப ஆஹா ஓஹோன்னு சொல்லலை. சொன்னா அதுக்கும்மேலே நான் என்னை ஆஹா ஓஹோன்னு என்னைப் பத்திச் சொல்லிடுவேன்னு அவளுக்குத் தெரியும். ஹா ஹா)
நெல்லை பொ க பொடிக்குப் பதிலா கடலை மாவு சேர்த்து செஞ்சு பாருங்க அது ஒரு டேஸ்ட் கடலைமா சாம்பார்னு சொல்லிக்கலாம் ஹிஹி ஆனா சி வெ கட்டாயம் போடணுமாக்கும்!!
நீக்குகீதா
சேவைன்னா மோர்க்குழம்புதான் எங்களுக்கெல்லாம் பிடிக்கும். இந்தச் சென்னை காடரர் சேவையோடு கொத்சுனு இந்த மாதிரி சாம்பாரைப் போட்டு ருசியை மாத்திடறாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குசேவைக்கு நாங்க புளிசேரி (தேங்காய், ஜீரகம், மிளகாய் அரைத்து மோரில் கலக்கி பதைக்க வைப்பது) இல்லை புளி மோர்க்குழம்பு, சாதா மோர்க்குழம்பு ரொம்ப நல்லா இருக்கும். இந்த சாம்பாரும் நல்லா இருக்கும்.
நீக்குஉங்க வீட்டுக்கு வரும்போது மோர்க்குழம்போட சேவை கொடுத்தாலே நான் ஒன்றும் சொல்லாமல் சாப்பிடுவேன் கீசா மேடம்.. கவலை வேண்டாம்.
இந்த சாம்பார் செய்முறை தேவகோட்டை பாணியாக இருக்கிறதே...
பதிலளிநீக்குஇந்த KAS சர்வ சாதாரணமான ஒன்று...
பதிலளிநீக்குஎவ்வித கஷ்டமும் இல்லாமல் செய்யலாம்...
பறங்கிக்காய் சாம்பார்..ந்னும் சொல்லலாம்..
தக்காளி சாம்பார்..ந்னும் ஜொல்லலாம்...
சாம்பாருக்கு நான் புளி சேர்ப்பதேயில்லை...
சின்ன வெங்காயம் அதிகமாக சேர்த்துக் கொள்வேன்...
சாம்பார் என்றால் துவரம்பருப்பு அல்லது ஏதோ ஒரு வகை பருப்புதான்...
இல்லாவிட்டால் -
ஆ.வி . சொல்ற முப்பருப்பு நாற்பருப்பு ஐம்பருப்பு..ந்னு ஒன்னாங்கிளாஸ் வாய்ப்பாடு மாதிரி ஆகிடும்...
முதல் தடவையா எங்க தளத்துக்கு சாம்பாரோட வந்திருக்கீங்க...
பக்க வாத்தியங்களை
எங்க கிட்டயே விட்டீங்க பாருங்க
அதுதான் சாமர்த்தியம்...
வாழ்க வளமுடன்...
எல்லோரது கருத்துக்கும் மிக்க நன்றி..ஆம் தேவகோட்டை சாம்பாரே. சொன்ன அலமேலு மாமியும் சரி, செய்து பார்த்து எழுதின நானும் சரி தேவகோட்டை தான் பூர்வீகம். அனைவருக்கும் நன்றி
பதிலளிநீக்கு//அலமேலு மாமியும் சரி, செய்து பார்த்து எழுதின நானும் சரி தேவகோட்டை தான் பூர்வீகம்.// கில்லர்ஜி, கவனித்தீர்களா?
நீக்குஎங்கள் வீட்டில் பருப்புடன் பெருங்காயம் ஒரு துண்டு மட்டும் சேர்த்து குக்கரில் வைத்து இறக்கி பிறகு நீங்கள் கூறியபடி வாணலியில் மற்றவற்றை சேர்த்து கொதித்ததும் ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கி விடுவார்கள். காய், சாம்பார் வெங்காயம் அனைத்தும் அரை வேக்காட்டில் கையில் எடுத்து சாப்பிட்டு ஏதுவாக இருக்கும். குக்கரில் இடும்போது அனைத்தும் முழுவதுமாக வெந்துவிட வாய்ப்புள்ளதால் இந்த மெத்தட். அதுவும் ருசியாகத்தான் இருக்கும்.
பதிலளிநீக்குமாலா மாதவன், உங்க சாம்பார் அசத்தல். (என்னைவிட பெரியவங்களா இருப்பாங்கன்னு ஒரு அனுமானம்!!)
பதிலளிநீக்குஸ்ரீராம் ஓ இதுதான் அவங்க முதல் பதிவா திங்கவுக்கு இங்கே...முன்னாடி எழுதியிருப்பாங்கன்னு நினைச்சேன்...
இதுக்கு என் சைடுல ஒரு கதையே உண்டு. அம்மாவின் அம்மா இல்லாத நேரம். அம்மா என்னை சாம்பார் செய்து, உ கி வதக்கி வைக்கச் சொல்லிட்டு போய்ட்டாங்க கோயிலுக்கு. சரின்னு வீட்டுல இருந்த சி வெ (அம்மாகிட்ட பெர்மிஷன் வாங்கித்தான்...) தக்காளி, கேரட், முருங்கை, எல்லாம் போட்டு தனி தனியா செய்ய சோம்பேறித்தனம் அப்ப. பருப்பு எல்லாம் போட்டு தாளித்து, பொடி எல்லாம் போட்டு வதக்கி குக்கர்ல வைத்துவிட்டேன். எடுத்து கொத்தமல்லி தூவி உப்பு போட்டு எல்லாம் ஓகே.கடைசில புளி விட மறந்து போச்சு ஆனால் நன்றாகவே இருந்தது....மீதி பதிவில்!! ஹிஹிஹி இப்படி எழுதி வைத்ததே மறந்து போச்சு இன்று திங்க பதிவு பார்த்ததும் அட! என்று நினைவுக்கு வந்து தேடினேன் என் ஃபோல்டரில் கிடைத்தது முடிக்க வேண்டும்...
நன்றி மாலா மாதவன் (இப்படிச் சொல்ல கஷ்டமா இருக்கே..அக்கா?) உங்களின் திங்க பதிவுக்கும் என் பதிவை நினைவுபடுத்தியதற்கும் சேர்த்து..
கீதா
கீதா
மாலா என்றே அழையுங்கள். நான் சின்னவராகவும் இரூக்கக் கூடும்
நீக்குஇனைவா.... எனக்கு வீரா படம் நினைவில் வந்து தொலைக்கிறதே ஹா ஹா
நீக்குThi/Geetha, Mala Madhavan is very much younger than you! :))))))
நீக்குஅது திரைப்படம், இது நிஜம் நெல்லைத்தமிழரே, இருவரையும் நான் நேரில் பார்த்திருக்கேன். உண்மையில் நானே அவங்களை "நீங்க, வாங்க, போங்க" எனக் கூப்பிடுவது சரியல்ல. அவங்களும் சொல்லிப்பார்த்து அலுத்துப் போய் விட்டுட்டாங்க. எனக்குச் சட்ட்னு வரலை. வெங்கட் மனைவி ஆதியையே ஒரு இரண்டு வருடங்களாவது ஆனபின்னர் தான் அப்படிச் சொல்லப் பழகி வருகிறேன்.
நீக்குசுருக்கமான, சுவையான நடையில் செய்முறை. நன்று!
பதிலளிநீக்குசாம்பார் பார்ப்பதற்கே நன்றாக இருக்கிறது. சொல்லியிருக்கும் விதம் அதைவிட. இந்த புளியில்லா சாம்பார் பொங்கலுக்கும் நன்றாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஇந்த கமகமன்னு கச்சேரி நன்றாக இருக்கிறது...!
பதிலளிநீக்குஅனைவரது கருத்துக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குஆகா! அட்டகாசம்.
பதிலளிநீக்குஎங்க வீட்டில் இட்லிக்கு மட்டும்தான் சாம்பார்.
ஆஹா... சுவையாக இருக்கும் எனத் தெரிகிறது உங்கள் KA சாம்பார். முயற்சித்துப் பார்க்கலாம்!
பதிலளிநீக்குவாழ்த்துகளும் பாராட்டுகளும்.
சமையல் செய்ய துவங்குபவர் சாம்பார் செய்யக் கற்றுக் கொள்ளலாம்
பதிலளிநீக்குபுளி இல்லா விட்டல் அது சாம்பார் ஆகாது வேறு பெயர் கொடுக்கலாமே
பதிலளிநீக்குசாம்பார் ரெசிபி...வெகு சுவை ..
பதிலளிநீக்கு