புதன், 19 பிப்ரவரி, 2020

புதன் 200219 : பசங்களை பெத்து ஆளாக்குவதன் பர்பஸ் என்ன?நெல்லைத்தமிழன் : 

பசங்களை பெத்து ஆளாக்குவதன் பர்பஸ் என்ன?
$ வம்சாவிருத்தி.  முதுமை காப்பீடு.

 # ஆதி காலத்தில் "வம்ச விருத்தி" முக்கிய காரணம்.  "புத்" என்னும் நரகம் தவிர்த்தல், சிரார்த்தம் செய்ய அச்சாரம் இப்படியான காரணங்கள் இருந்தன. விவசாயக் குடும்பங்களில் முதுமைக்குக் காப்பீடு பிரசித்தியானது. 
அன்பு, பாசம் காரணமாக அவையத்து முந்தியிருக்கச் செய்து, மகிழ்ச்சி அடைதல் எக்காலத்திலும்.
               
தமிழ் நிலத்துக்குச் சம்பந்தமில்லாத கோதுமை, கடுகு போன்றவை நம் உணவை எப்படி ஆக்கிரமித்திருக்கும்?

$ பரங்கி, மிளகாய் மற்றும் கேரட், பீன்ஸ் இப்படி எல்லாமே வந்து சேர்ந்தவை தானே. கடுகும் கோதுமையும் அப்படியே.

# கடுகு எப்போது வந்ததோ தெரியவில்லை, கோதுமை 1948 பக்கம் இங்கு வந்ததைக் கண்டிருக்கிறேன். 
சப்பாத்தி பூரி முதலியன எப்படிச் செய்ய வேண்டும் என்று இலவச புத்தகம் வழங்கப் பட்டது. 
இடம் பெயர்கின்ற மக்களுடன் அவர்கள் உணவும் உடையும் மொழியும் பயணிப்பது இயல்புதானே.


உங்களை பெர்மனென்டா ஒரு நாட்டுக்கு அல்லது பகுதிக்கு புலம் பெயர்க என்று சொன்னால் எது உங்கள் சாய்ஸ், எது தண்டனைனு நினைப்பீங்க?

$ காய்கனிகள், தானியங்கள் கிடைக்கும்,  தட்ப வெப்ப நிலை மிதமாக இருந்து, மற்ற மக்களும் மகிழ்ச்சியுடன் இருக்கும் எந்நாடும்.

 # நான் பார்த்த வேற்று நாடுகள் வெகு சொற்பம். அமெரிக்கா தண்டனையாகத் தோன்றலாம்.  பிடித்தமான நாடு வேறேதுமில்லை. 

& நித்தியின் கைலாஷ் நாடு ஓ கே. சைனா தண்டனை. 


சின்ன வயதில் எந்த உணவுக்கு ஆசைப்பட்டு அது கிடைக்காமல் ஏங்கியிருக்கிறீர்கள்?

 # சின்ன வயசில் அடையும் அரிசிமாவு உப்புமாவும் கொழுக்கட்டையும் அபூர்வ வஸ்துக்கள்.  

& எனக்கும் அடை, அரிசிமாவு உப்புமாதான் ஞாபகம் இருக்கிறது. 
               
(உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது .... கண்ணதாசன் ) மோசமான உள்ளங்கள்தாம் உறங்குமா? 
க.தா தவறா எழுதியிருக்கிறாரே! 

# நல்ல உள்ளம் நல்லது செய்ய எந்நேரமும் துடிப்பாக இருக்கும் என்று சொல்கிறாரோ ? நல்லதல்லாத உள்ளம் சரக்கு சாப்பிட்டு உறங்கிப் போய்விடுமோ ??

& 'விதுர நீதி' என்ற தலைப்பில், சில வருடங்களுக்கு முன்பு, டிசம்பர் சீசனில், டாக்டர் சுதா சேஷையன்,  சிவகாமி பெத்தாச்சி அரங்கில் உரையாற்றினார். அப்பொழுது அவர் சொன்ன ஒரு ஜோக்: 

"கர்ணன் நல்லவன் இல்லை. கர்ணனை  நல்லவனாக நாம் எல்லோரும் நினைக்கக் காரணமானவர்கள் மூன்று பேர். முறையே பி ஆர் பந்துலு, சிவாஜி கணேசன் மற்றும் கண்ணதாசன்" என்றார்.  அவர் சொன்னபடிப் பார்த்தால், கர்ணன் கெட்ட உள்ளம்தான்! 


வல்லிசிம்ஹன் :  

1, நினைவுகள்,கனவுகள், நனவுகளுக்குள் வாழ்க்கை நகருகிறது. இந்த மூன்றில் எது உயர்ந்தது? Practically.

$ நிகழ்காலத்துக்கு ஈடு இணை உண்டோ?

# நினைவு வேறு,  நனவு வேறா ?
எண்ணங்கள் ஆசைகளின் இடையே உயர்வு தாழ்வு என்று ஏதும் இல்லை. கனவுகள் என்பவை இயலாது எனக் கருதப்படும் ஆசைகள் என்பதால் நிறைவேறும் கனவுகள் அதிக மகிழ்ச்சி தரக் கூடும்.

                 
2, இந்த வயதில் படிப்பு,இந்த வயதில் திருமணம்,
இந்த வயதில் ஆன்மீகம், என்று வரையிறுப்பது எதனால்.?

$ கற்பது இளமையில் சுலபம்
மணவாழ்க்கை குடும்பத்தை நிர்வகிக்கும் திறனிருக்கும் வரை. முதுமையில் ஆன்மீகம் தவிர வேறு துறையில் நாட்டமிருந்தால் அதுவும் தான்.

 # அந்த வயதைக் கடந்தும் அது இல்லை என்றால் மரியாதை இராது என்பதால்தான்.

3, இந்த வரையப்பட்ட வளையத்திற்கு வெளியே
இருப்பவர்களுக்கு மரியாதை மறுக்கப் படுகிறதா?

 # மரியாதை இதைக் கொண்டு மட்டும் தரப்படுவதில்லை. அதற்கு வேறுபல காரணங்கள் உண்டு.

கீதா சாம்பசிவம் :

1.தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராட்டி, ஹிந்தி என அனைத்து மொழிகளும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ப மாறுவது ஏன்? உதாரணமாகச் சென்னைத் தமிழ் என முன்னெல்லாம் தனியே இருந்தது. இப்போது அதிகம் இல்லை வெளிமாநிலத்தவரின் வரவால். அதே போல் மதுரைத்தமிழ், திருநெல்வேலித்தமிழ், நாகர்கோயில் தமிழ், பாலக்காட்டுத் தமிழ், ஆற்காடு தமிழ் என்றெல்லாம் இருப்பது போல் மற்ற மொழிகளிலும் உண்டு. அதற்கு என்ன காரணம்?

$ அண்டை மாவட்ட வார்த்தைகள் ஊடுருவதும் சம்பிரதாயங்கள் கலப்பதும் சகஜம்.

# சுற்றுப்புறத்தில் பேசப்படும் ஸ்டைல் அதிகம் புழங்கும் சொல்லாட்சி எல்லாராலும் அனுசரிக்கப் படுகிறது.
மக்களிடையே போக்குவரத்து மலிந்தால் எல்லாம் சேர்ந்து ஒரு புதுக் கதம்பம் உருவாகிறது.

2. நீங்கள் பார்த்தவரைக்கும் நல்ல சுத்தமான செந்தமிழ் எங்கே பேசுகிறார்கள்? செந்தமிழில் பேசினால் புரிந்து கொள்பவர்கள் உண்டா?

$ (மைலாப்பூர் டாங்க் / புரசைவாக்கம் டாங்க் அருகே) சென்னை போக்குவரத்து வண்டிகளில் போய்க்கொண்டிருக்கும்போது, நடத்துனர் 'குளத்திலிறங்குபவர்கள் இறங்குங்கள்' என்று  செந்தமிழில் சொன்னால் .... ! 

 # இலங்கைத் தமிழ் மிகத் தூய்மையானது. அடுத்ததாக நெல்லைத் தமிழர். மற்றபடி யாரும் இலர்.

& நல்ல சுத்தமான தமிழ், அந்தக்கால கதாநாயகி, கதாநாயகர்கள் க்ளைமேக்ஸ் காட்சிகளில் மட்டும் பேசுவார்கள். 

                    
3. எல்லா சமையல் நிகழ்ச்சிகளிலும், "இப்போ, வந்து, பார்த்தீங்கன்னா!" மிளகாய்க்கு அதிகக் காரம் இருந்தா கொஞ்சமா எடுங்க, வந்து பார்த்தீங்கன்னா இதுக்குத் தக்காளி கொஞ்சமாச் சேர்க்கணும். வந்து, பார்த்தீங்கன்னா! என்றே சொல்லுவது ஏன்?

 $ எல்லா மொழிகளிலும் இந்த மாதிரி சொற்கள் உண்டு.

 # பேசுபவர் கோர்வையாகப் பேசத் தடுமாறும்போது இது சகஜம். தோனி யூ நோ மாதிரி.

& வகுப்பில், என்னுடைய தமிழாசிரியர் ஒருவர் சொன்னார், "தமிழில் மூன்று  வார்த்தைகள் இல்லாமல் இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். அவை சும்மா, வந்து, பண்ணி." 

அப்போ ஒரு பையன் எழுந்து, " சார், (பக்கத்துப் பையனைக் காட்டி) இவன் சும்மா வந்து என்கிட்டே பேசிக்கிட்டே இருக்கான் சார். தயவு பண்ணி இவனை வேறு இடத்தில் உட்காரச்சொல்லுங்கள்." 
              
4. ஊடகப் பேச்சாளர்கள் பேசும்போது தடுமாறுவது ஏன்? ஒரு நிகழ்ச்சியைப் படம் பிடிக்கச் சென்றால் அவர்களால் தடுமாறாமல் பேசவே முடியவில்லை. ஒரே பதட்டமும், கை, கால் ஆட்டங்களும் அதிகம் இருக்கும். வந்து, வந்து, என்றே சொல்லுவார்கள். இதுக்கெல்லாம் பயிற்சி கொடுத்த பின்னர் அனுப்ப மாட்டாங்களா? ஹிஹி, யாருங்க அங்கே ஊடகங்களில் கேட்கணும்,இங்கே ஏன் கேட்கிறேனு சொல்றது? நம்ம எ.பி. ஆ"சிரி"யர்களுக்குத் தெரியாததே இல்லையாக்கும்.

$ எல்லா நிகழ்வுகளுக்கும் பயிற்சி பெற்று வந்து பேசவேண்டும் என்றால் பொதிகை மாதிரி தீபாவளி நிகழ்ச்சிகளை பொங்கலுக்கும்  பொங்கல் நிகழ்ச்சிகளை தமிழ் புத்தாண்டுக்கும் போடுவது போல இருக்கும்.

 # பப்ளிக் டாக் என்றால் பெரும்பாலும் எவரானாலும் சிறு தடங்கல்கள் இருக்கும். பயிற்சி கொடுத்துச் செய்தால் இயல்பாக இராது. 


5. இந்தக் காலத்தில் நடக்கும், முறை கெட்ட காதல், பழி வாங்குதல் போன்றவற்றைப் பார்த்தால் அந்தக் காலத்தில் பதினைந்து வயதுக்குள் பெண்ணுக்கும், இருபது வயதுக்குள் ஆணுக்கும் திருமணம் செய்தது நல்ல விஷயம் எனத் தோன்றுகிறது. உங்கள் கருத்து?

 $ இந்த சம்பவங்கள் எல்லாக் காலத்திலும் குடத்திலிட்ட விளக்காக இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

 # ஒரு பிரச்சனை தீர்ந்து புதிதாகச் சில உருவாகும். இந்தத் தலைமுறையில் எதிர்பார்ப்புகள் விரைவாக மாறி விடுகின்றன. 
                    
6. வட மாநிலங்களில் இப்போதும் அநேகமாகப் பெண் +2 முடித்ததும் திருமணம் நடத்திவிடுகிறார்கள். அதற்குப் பின்னர் கல்லூரியில் சேர்ந்து படிப்பார்கள். நான் சொல்லுவது மத்தியதர, கீழ் மத்தியதரக் குடும்பங்களில்! இதனால் ஆண், பெண் மனதளவில் நெருங்கித் தங்கள் அகங்காரத்தைக் குறைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் அனுசரித்து வளைந்து கொடுத்து வாழ முடியும் என்பது என் தனிப்பட்ட கருத்து! இதைக் குறித்த உங்கள் கருத்து என்ன?

$ அனுபவமின்மை காரணமாக எதுவும் சொல்லாத தோன்றவில்லை.

# மேலே காண்க.


ஏஞ்சல் : 

1, உங்கள் வாழ்க்கையில்   மிக  முக்கியமான நபர் யார் ??கட்டாயம் ஒருவரை மட்டுமே சொல்லணும் :)

 $ நான் தான்.

 # என் பதினொன்றாம் வகுப்பாசிரியர். 

& :  "$" தான்.  


2, உங்களை சுற்றி நிறையபேர் இருந்தா பிடிக்குமா ? அல்லது ஓரிரண்டு பேர் மட்டும் இருந்தால் பிடிக்குமா ?    இந்த இரண்டில் எது உங்களுக்கு அதிக சந்தோஷத்தை தரும் ?

 $ நிறையப்பேர் என்று சொன்ன பின்..இரண்டாவது பாகம் தேவையா?

# அதிகப் பேர்.

& உங்களைச் சுற்றி நிறைய பேர் இருந்தா பிடிக்குமா? - எனக்குப் (பைத்தியம்) பிடித்தால்தான் சுற்றி நிறையப் பேர் இருப்பார்கள். பைத்தியக்காரனைச் சுற்றிப் பத்து பேர்!  


3, நம்மால் நம்மையே நேசிக்க இயலுமா ?  

 $ முடியும். 

.# எல்லாருக்கும் சாத்தியமாக இருக்கிறது.


4, பெர்சனல் ஸ்பேஸ் என்பது மனிதர்களுக்கு மிக முக்கியம் என்பது எனது கருத்து .இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கறீங்க ?

$ அப்படீன்னா?

 # ஆமோதிக்கிறேன்.


5, ஒரு மனிதனை சமுதாயம் எந்த அளவுக்கு பண்பாளனாக / பண்பாளியாக  உருவாக்க இயலும் ?

$ சமுதாயத்துடன் இருக்கும் தொடர்பைப் பொறுத்தது.

 # அது தருவோர் பெறுவோரின் தகைமை சார்ந்தது. 


6, சமுதாய கட்டமைப்பு எந்த அளவில் இப்போ இருக்கு ? வளர்கிறதா ? அல்லது தேய்கிறதா ?

$ தேவையற்ற விஷயங்களால் நீர்த்துப் போகிறது.

# பலவீனமாக இருக்கிறது. சுயநல வெறி காரணமாக. 


7, நம் மக்கள் அடக்கடவுளே என்று சொல்றதைபோல் கடவுள் பேச்சுவாக்கில் என்ன சொல்வார் :))  ? 

$ "அடப்பாவி"  (மனிதா என மாட்டார்..சகல ஜீவ ராசிகளுக்கும்) பொதுவாக! 

# அதிருப்தி அல்லது ஏமாற்றம் இன்மையால், கடவுளுக்கு அப்படி ஒரு  சந்தர்ப்பம் அமையாது. 


8, மோதிரக்கையால் குட்டு வாங்கினா நல்லா வலிக்கும் ஆனா வாங்கினாலும் மோதிரக்கையால் குட்டு என்பது பொருந்தவில்லையே எப்படின்னு விளக்கவும் ?

# ஒரு மரியாதைக்குரிய நபர் நம்மைக் கண்டிக்க சிரத்தை காண்பிக்கும் அளவுக்கு நம் தரம் இருக்க வேண்டும். 

& சில திருமணங்களில், பெண்ணுக்கு மோதிரம் போடுவதற்கு,  இதுதான் காரணம் என்று நினைக்கிறேன். 


9, இலையுதிர் காலம் ரோட்டோரம் காய்ந்த இலை  சருகுகளை பார்த்ததும் கூட்டி அள்ள  தோணும் எனக்கு ..இது என்ன மாதிரி மனநிலை ? இப்படி உங்களுக்கும் தோன்றியிருக்கா ?

 $ இப்போதே சரி செய்து விடவேண்டும் என்று துடிப்பவர்கள் பிற்காலத்தில் பார்க்கின்சன் நோய்க்கு ஆளாவர் என்கிறார்கள்.

 # நறுவிசை நாடும் நிலை. எனக்கு இல்லை. 

& ஒரு ஜென் கதையில், ஜென் குரு சொல்வது நினைவுக்கு வருகிறது. 

தன் வருகைக்காக, சருகுகள், பழுத்த இலைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட ஒரு தோட்டத்தைப் பார்க்கும் ஜென் குரு சொன்னார், 
" நாள் என்பது பகல் மட்டும் அல்ல. இரவும் சேர்ந்ததுதான். 
மரணம் வாழ்க்கைக்கு எதிரி இல்லை. அதுவும் வாழ்வின் ஓர் அங்கம்தான். அதுபோலவே தோட்டத்தில் இருக்கும் சருகுகளும், பழுத்த இலைகளும். எல்லாமே இயற்கையின் அங்கங்கள்." 

அடுத்த தடவை, ரோட்டோரம் காய்ந்த இலை, சருகுகளைக் கண்டால், அவைகளை அகற்றும் எண்ணத்தை விட்டு, அப்படியே இயற்கையை இரசியுங்கள். மனம் லேசாகி, டென்சன் குறையும். 


10, மெய் ,மெய்மை இரண்டும் ஒன்றா ? 

$ truth and truthfull ess?

# மெய் அகத்தில் இருப்பது.  மெய்மை - ஒரு பொருளை மட்டுமே சாராத நிலைப்பாடு.


பானுமதி வெங்கடேஸ்வரன்: 

உங்கள் பள்ளி,கல்லூரி நாட்களில் உங்கள் அபிமான ஹீரோவின் நடை,உடை பாவனைகளை காப்பியடித்ததுண்டா? அதையே உங்கள் குழந்தைகள் செய்த பொழுது எப்படி ரியாக்ட் செய்தீர்கள்?


# இரண்டுமே நடக்கவில்லை. ஆனால் கையெழுத்து படிவதில் பலரிடமிருந்து நிறைய காப்பி வந்தது.  கையெழுத்து என்றால் நாம் எழுதும் ஸ்டைலும் ஆவணங்களுக்கான கையெழுத்தும் அதில் அடக்கம்.

& அபிமான நடிகர்களை நான் காப்பியடித்ததில்லை. ஆனால், காப்பியடித்த நண்பர்களை இரசித்ததுண்டு. என் குழந்தைகள் யாரையும் காப்பியடித்தது இல்லை. 
                 
இனிமேல் திரும்பி  வர முடியாத தூரத்திற்கு போய் விட்டோம் என்று நீங்கள் கருதும் விஷயங்கள் எவை?
                   

$ கூட்டுக்குடும்பம்
திறமைக்கு ஏற்ற வேலை
உணவுப்பழக்கங்கள்
கோவில் வழிபாடு

# பெரும் பிரச்சினை:
அரசியல் ஊழல்-அநாகரிகம்

போலீஸ் ஆசிரியர்கள் டாக்டர்கள் வக்கீல்கள் இவர்களிடம் திறமை மற்றும் நேர்மைக் குறைபாடு.

காணாமல் போனது: 

தக்கவர்களிடம் மரியாதை - படிமானம் - பொறுப்பணர்ச்சி - சிக்கனம் .

தீராத நோயாய்த் தொடர்வது: 

ஆடம்பரம், காலவிரயம் - அற்ப சந்தோஷங்களில் அதீத நாட்டம்.

திசை திரும்பிப் போனது :

இறை வழிபாடு, கர்மானுஷ்டானங்கள்.

==============================================

1, 10, 19, 28 ஆம் தேதியில் பிறந்தவர்களைப் பற்றி, பொதுவாகக் 
கூறப்படுவது என்ன? 

படைப்பாற்றல் மிக்கவர்கள். தன்னந்தனியாக நின்று எதையும் சாதித்துக்காட்டத் தயங்காதவர்கள். எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும், அந்தத் தொழிலின் நுணுக்கங்களை அலசி ஆராய்ந்து அதில் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக்கொள்வார்கள். வாக்கு சாதுரியம் கொண்டவர்கள். நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள். அழகு எங்கே இருந்தாலும், அதை இரசிப்பவர்கள். வயதில் மூத்தவர்களுக்கு மதிப்புக் கொடுப்பார்கள். (இன்னும் நிறைய சொல்லலாம் என்றாலும் ..... தன்னடக்கம் தடுப்பதால் ..... இதோடு நிறுத்துகிறேன்!) 

 ஒன்றாம் எண் கூட்டுத்தொகை உள்ள தேதிகளில் பிறந்தவர்களை தோல்வி அடையச் செய்வது, சில விஷயங்களில் அவர்கள் காட்டும் தயக்கம். 

ஒன்றாம் எண்காரர்கள் 2, 4, 7 என்ற எண் கூட்டுத்தொகை வருகின்ற தேதிகளில் பிறந்தவர்களுடன் நட்பாக இருப்பார்கள். 
 
மாமன்னர் அலெக்சாண்டர் முதல், ஜெர்மனியின் இரும்பு மனிதர் பிஸ்மார்க், அலெக்சாண்டர் டூமாஸ் (எழுத்தாளர்), காப்டன் குக், சிவாஜி கணேசன் என்று பல மனிதர்கள் ஒன்றாம் எண்காரர்கள்.  

பெப்ரவரி பத்தொன்பதாம் தேதியில் பிறந்தவர் மராத்திய மன்னன் சிவாஜி. 
         
வாசகர்கள் அனுப்பிய கருத்து : 

வல்லிசிம்ஹன்  : 

ஒன்றாம் நம்பர் வலுவானது. Aggressiveness இருக்கும். அடங்கியும் போவார்கள். (பேரன் 1 ஆம் தேதி பிறந்தவன்) Brilliant personality. 10 ஆம் தேதி பிறந்த பெரிய தம்பியும் நினைத்ததை முடிப்பவன்.
Against all odds he came up to the CEO position of his company. At the same  time very humble towards elders. 28 th born Younger brother became the best person at his Central excise job. If he was alive he would have got the Presidential award. What I am trying to say is they are very tenacious about their goal. Born helpers. Soft-spoken.

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

ஒன்றாம் எண்காரர்கள் ஆளுமையும், ஆதிக்க மனப்பான்மையும் கொண்டவர்கள். பத்து பேருக்கு மேலே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். தாங்கள் முதன்மையாக மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். சுருக்கமாக சொன்னால் கல்யாண வீடென்றால் தாங்கள்தான் மணமகன்/மணமகள், இழவு வீடென்றால் பிணம் என்னும் மனப்பாங்கு. 
இதில் 10 எண்காரர்கள் மிதவாதிகள். 19 எண்காரர்கள் மகிழ்ச்சியாக இருப்பது துர்லபம் காரணம் எத்தனை வளர்ந்தாலும் உடனே அடுத்த இலக்கை நிர்ணயித்து விடுவார்கள். அதிர்ஷ்டகாரர்கள்தான். 

28ம் எண்காரர்கள் கொஞ்சம் அதிர்ஷ்டகட்டை. திறமைக்கேற்ற வெற்றி கிட்டாது. மேடு பள்ளமான வாழ்க்கை.

======================================

மீண்டும் சந்திப்போம்.


======================================

175 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. //
   Angel19 பிப்ரவரி, 2020 ’அன்று’ முற்பகல் 5:34
   firstttttttttttt//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர் * 3452675123879

   நைட் தலையிடிக்குது என்றேன், ஆஆஆஆஆ அதிரா ஃபோன் பார்க்காதீங்கோ, கொம்பியூட்டர் பார்க்காதீங்கோ கண்ணை மூடிக்கொண்டு தூங்கிடுங்கோ என எனக்குச் சொன்னது இதுக்குத்தானா????:).. விட மாட்டேன்ன் இது ரெண்டாவது தடவையாக என்னை நித்திரையாக்கிப்போட்டுக் களம் குதிச்சிருக்கிறா.. விடமாட்ட்டேன்ன்.. தேம்ஸ்ல தள்ளியே தீருவேன்.... ரகு கிடைச்சாலும் தள்ளுவேன் அஞ்சு கிடைச்சாலும் தள்ளுவேன்ன்.. இது அந்தக் கெண்டி மேல ஜத்தியம்ம்ம்:)).. பூஸோ கொக்கோ:))

   நீக்கு
 2. //இப்போதே சரி செய்து விடவேண்டும் என்று துடிப்பவர்கள் பிற்காலத்தில் பார்க்கின்சன் நோய்க்கு ஆளாவர் என்கிறார்கள்.//

  அவ்வ் வேணாம் இனிமே வீட்ல கூட குப்பைய அள்ள மாட்டேன் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டிமென்ஷியா ட்ரெயினிங்கில் ஒரு பார்கின்சன்ஸ்  பாதித்த பெண்மணியை சந்தித்தேன். மனம் வலித்தது அவரின் நிலைக்கண்டு .அவர் ஒரு நர்ஸாம் 

   நீக்கு
  2. வீட்டுல குப்பையை அள்ளுவது நாம் மன அழுத்தம் இல்லாமல் செய்யும் வேலை. அதில் தவறு இல்லை. ரோட்டில் கிடக்கும் காய்ந்த இலைகளையும், சருகுகளையும் கண்டு சுத்தம் செய்யவேண்டும் என்று மனது பரபரத்து, ஆனால் தன்னால் சுத்தம் செய்ய இயலவில்லையே என்ற மன உளைச்சல்தான் நோய்களுக்குக் காரணம். Certain things are in our control. Those things will not affect our mental health, if we manage those things properly. Certain things are not in our control. If we start worrying about them, it will affect our mental health.

   நீக்கு
  3. எனக்கு, சில சமயம் வானத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக திப்பி திப்பியாய் சிதறிக் கிடக்கும் மேகத்துணுக்குகளை சுத்தமாக பெருக்கி ஒரு இடத்தில் குவிக்கலாமா என்று தோன்றும். நிமிடத்திற்கு நிமிடம் உருவம் மாறும் மேகங்கள் இதில் வராது. அதை ரசிக்க முடியும்.

   நீக்கு
  4. புதிய சிந்தனையாக இருக்கே!

   நீக்கு
  5. இந்தக் குப்பையை அள்ளும் விஷயம். நேத்தே பதில் சொல்ல நினைச்சு மறந்துவிட்டது. எங்க அம்பத்தூர் வீட்டில் இலையுதிர்காலம் என்றால் வாசலில் உள்ள பெரிய இரும்புக் கதவிலிருந்து ஆரம்பித்துக் கொல்லைக்கிணற்றடி வரை வேப்பிலைகளும், மாவிலைகளுமாக நிறைந்திருக்கும். தினம் காலை அதைப் பார்க்கையிலேயே இனம் தெரியாத உணர்வு வந்து மனதில் பொங்கும். அதில் காலை வைத்துச் சிறிது நேரம் நடப்பதற்கு மனம் பரபரக்கும். அந்தச் சருகுகளில் காலை வைத்து நடக்கையில் பரவசமாக இருக்கும். பெருக்கித் தள்ளவே மனம் வராது. ஆனாலும் பெருக்கித் தள்ளுவோம். தினம் காலை அரைமணி நேரம், மாலை அரைமணி நேரம் இதே வேலையாக இருக்கும். இப்போ அந்த வேலையெல்லாம் இல்லை. :(

   நீக்கு
  6. ஆக, பொன்னிற இலைகளில் பொற்பாதம் பதித்து நடந்திருக்கிறீர்கள். ஆஹா.

   நீக்கு
 3. / ரோட்டோரம் காய்ந்த இலை, சருகுகளைக் கண்டால், அவைகளை அகற்றும் எண்ணத்தை விட்டு, அப்படியே இயற்கையை இரசியுங்கள். மனம் லேசாகி, டென்சன் குறையும். //

  அது நீரில் ஊறி கால் வழுக்குனா பரவால்லையா :)))))))) 

  பதிலளிநீக்கு
 4. @எங்கள் ப்ளாக் அட்மின்ஸ் ..பிளாக்கில்  ஒவ்வொரு கமெண்ட் போட்டு refresh ஆகும்போதும் வைரஸ் த்ரெட் வருது ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அச்சச்சோ.....    கணினியில் எதுவும் காட்டவில்லையே...   மொபைலில் அப்படி வருகிறதோ?

   நீக்கு
  2. எனக்கு அப்படி எல்லாம் ஒன்றும் வரவில்லை. I have Norton antivirus in my computer.

   நீக்கு
 5. //உங்கள் வாழ்க்கையில்   மிக  முக்கியமான நபர் யார் ??கட்டாயம் ஒருவரை மட்டுமே சொல்லணும் :)

   $ நான் தான்.//
  ஆஹா :) ரசித்தேன் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க்கையில் நாம் மிக மிக நேசிப்பது, முதன்மையா நினைப்பது நம்மைத்தான். இதற்கு விதிவிலக்குகள் அனேகமாக்க் கிடையாது.

   வாழ்க்கையில் முக்கியமான நபர் நாம் மிக மிக மதிப்பவராக, அவரில்லாமல் கிடையாது என நினைக்கும்படியானவராக இருக்கணும். அது நாம் கிடையாது. தன்னைக் கைதூக்கி விட்டவரோ, அன்னையோ, தந்தையோ அல்லது ஆசானோ, நண்பனோ யாரேனும் ஒருவர்தான் இருக்க முடியும்.

   நீக்கு
  2. Angel Madam, நானும் அப்படிதான். இதை வெட்க்கமோ கூச்சமோ இல்லை. ஏனெனில், நான் என்னை அவ்வளவு நேசிக்கின்றேன். நான் என்னை நேசிக்கும்போது நிமிர்ந்து நிற்கின்றேன். அந்த நிமிர்ந்து நிற்பதில் ஒரு கர்வம் இருக்கின்றது. அது கர்வம் என்பதை விட தன்னம்பிக்கை என்று கூறலாம். நம் தன்னம்பிக்கை மற்றவ்ருக்கும் ஒட்டிக் கொள்ளும்.

   நீக்கு
  3. நன்றாகச் சொன்னீர்கள்! நன்றி.

   நீக்கு
  4. ரமாக்கா :) என்னை மேடம்னுலாம் அழைக்க வேணாம் :))  ஏஞ்சல் ன்னே சொல்லுங்க ..
   நம்மை நாம் நேசிக்கும்போது தன்னம்பிக்கை மலையென உயரும் ..மிக சரியா சொன்னிங்க  

   நீக்கு


  5. Angel19 பிப்ரவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 5:28
   ரமாக்கா :) என்னை மேடம்னுலாம் அழைக்க வேணாம் :////

   ஒம்மோம் மேடம் வாணாம் ஏஞ்சல் அக்கா அப்பூடிக் கூப்பிடுங்கோ அது போதும்:)... சேசே முறை ஜொள்ளிக்குடுத்தே மூன்று கிலோக் குறைஞ்சிடுவன்போல இருக்கே வைரவா:)...

   நீக்கு
  6. சரியாக சொன்னீர்கள் அதிரா அக்கா !

   நீக்கு
  7. ///கௌதமன் 19 பிப்ரவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 6:16
   சரியாக சொன்னீர்கள் அதிரா அக்கா !///

   ஆஆஆஆஆஆஆஆ விடுங்கோ விடுங்கோ என் கையை விடுங்கோ என்னை ஆரும் தடுக்க வாணாம்ம்ம் மீ காசிக்குப் புறப்பட்டு விட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:))..

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதாரது அங்கின பலமாச் சிரிக்கிறது:))

   நீக்கு
 6. செல்லிடத்துக் காக்க சினம் காக்க..அல்லிடத்துக் காக்கின் என் காவாக்கால் என்..

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // செல்லிடத்துக் காக்க சினம் காக்க.// உண்மைதான். பதினேழு வருடங்களுக்கு முன்பு என்னுடைய பெண் அவளுடைய செல்ஃபோனில் பேசும்போது அது சரியாக வேலை செய்யவில்லை என்று அதை வீசி எறிந்து உடைத்துவிட்டாள். சினம் காத்திருந்தால் - செல்லைக் காத்திருக்கலாம்!

   நீக்கு
  2. இதற்குத்தான் சின்னப்பெண்களின் பக்கத்தில் அப்பாக்கள் இருப்பது நல்லது என்கிறார்கள்.
   கேட்ச் பிடித்திருந்தாலும் காத்திருக்கலாம் செல்லை..

   நீக்கு
  3. அப்போ என் பெண், காரில் சென்றவாறே செல்லில் தொடர்புகொள்ள முயற்சித்த நபர் நானேதான். எனக்கு அப்போது என்ன நடந்தது என்று தெரியாது. பிறகு என்னுடைய கார் டிரைவர்தான் என்னிடம் கூறினார். " சார் - அவங்களுக்கு பயங்கர கோபம் வந்து, செல்லைத் தூக்கிப்போட்டு ஒடச்சிட்டாங்க ! "

   நீக்கு
  4. ஓ.. ஆயுசு முடிஞ்சா போயிறவேண்டியதுதான்.. செல்லானாலும்!

   நீக்கு
 7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அத்தனை கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொல்லி இருக்கும் எங்கள் ப்ளாக் ஆ"சிரி"யர்களுக்கு மனமார்ந்த நன்றி. 28 ஆம் தேதிக்கு உரியவர்களைப் பற்றிச் சொல்லி இருப்பதில் பானுமதி சொல்லி இருப்பதில் ஒரு பகுதி மட்டுமே பொருந்துகிறது. மற்றவை எதுவும் துளிக்கூடப் பொருந்தவில்லை! :( "மேடு, பள்ளமான வாழ்க்கை" என்பது நூற்றுக்கு நூறு பொருந்துகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா...   வணக்கம்.  நன்றி.  நல்வரவு.

   நீக்கு
  2. //"மேடு, பள்ளமான வாழ்க்கை" என்பது நூற்றுக்கு நூறு பொருந்துகிறது// நானும் நினைத்தேன்.

   நீக்கு
  3. // ஒன்றாம் நம்பர் வலுவானது. Aggressiveness இருக்கும். அடங்கியும் போவார்கள்.// ஒன்றாம் நம்பர் வலுவானது. மிக உண்மை. Aggressiveness இருக்கும். கொஞ்ச நஞ்சம் இல்லை. எல்லையை தாண்டி ஓடும். "அடங்கியும் போவார்கள்". Chanceயே இல்லை. அடங்க மறுப்பவர்கள். மற்றவர்களின் கஷ்டத்தையும் வருத்தத்தையும் பார்த்தும் அதற்கு தாந்தான் காரணம் என்று தெரிந்தும் அடங்க மறுப்பவர்கள். என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை இது.

   நீக்கு
  4. //பசங்களை பெத்து ஆளாக்குவதன் பர்பஸ் என்ன?// - கீசா மேடம்... இதுக்கு பதில் சொன்னா என்னவாம்?

   நீக்கு
  5. //மேடு, பள்ளமான வாழ்க்கை"// - இது இல்லாத ஒரு உயிரினம் சொல்லுங்க பார்க்கலாம். எல்லோருக்கும் அனேகமா வாழ்க்கை என்பது குறைவான சோலைகளையும் பெரும்பாலான பாலைவனங்களையும் கொண்டதுதான். இதில் ராசிக்கோ நட்சத்திரத்துக்கோ வேலை இல்லை.

   நீக்கு
  6. எல்லோருக்கும் அவரவர் தகுதிக்கு ஏற்ப ஏற்ற இறக்கங்கள் இருக்கும் நெல்லை, ஆனால் அதன் அளவு, அவர்களின் போராட்டங்கள், அதற்கு அவர்கள் கொடுத்த விலை, அதனால் அடைந்த பலன் இவைகள்தான் எப்படிப்பட்ட ஏற்ற இறக்கங்கள் என்பதை நிர்ணயிக்கும். கமலஹாசனையும், ரஜினிகாந்தையும் ஒப்பிடுங்கள். கருணாநிதியையும், ஸ்டாலினையும் ஒப்பிடுங்கள். , படேலையும்,நேருவையும் ஒப்பிடுங்கள்.   

   நீக்கு
 8. //கர்ணன் நல்லவன் இல்லை. கர்ணனை நல்லவனாக நாம் எல்லோரும் நினைக்கக் காரணமானவர்கள் மூன்று பேர். முறையே பி ஆர் பந்துலு, சிவாஜி கணேசன் மற்றும் கண்ணதாசன்" என்றார். அவர் சொன்னபடிப் பார்த்தால், கர்ணன் கெட்ட உள்ளம்தான்! //

  பதிலளிநீக்கு
 9. ஆமாம், வீரபாண்டியக் கட்டபொம்மனை சுதந்திரப் போராட்ட வீரனாக்கியதற்குச் சமம் இதுவும். நூற்றுக்கு நூறு சரியான கருத்து. ஆனால் இதற்கு அடிப்படை பி.எஸ்.ராமையா (மணிக்கொடி எழுத்தாளர்) எழுதிய "தேரோட்டி மகன்" என்னும் நாடகம் தான் என்பார்கள்.

  பதிலளிநீக்கு
 10. குழந்தைகள் பெற்றுக்கொள்வதன் காரணமே தங்கள் வம்சம் வ்ருத்தியாக வேண்டும் என்னும் எண்ணம் தான் முதலில். மற்றவை எல்லாம் பின்னர். திரும்பி வரமுடியாத தூரத்துக்குப் போயிருக்கும் விஷயங்களை அப்படியே வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. இந்த வாரம் பதில் சொல்லி இருப்பவர்களில் $ காரரும், # பெரியவரும் தான் அதிகம். & கேஜிஜி குறைவாகப் பதில் சொல்லி இருக்கார். *ஸ்ரீராம் ஆளையே காணோம். புது வீட்டுக்குப் போனதும் பயணத்திலேயே நேரம் செலவாகி விடுகிறது போலும்! இஃகி,இஃகி, இப்போத் தான் எனக்கு பதில் சொல்லி இருப்பதும் கண்களில் பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா அக்கா...  ஆமாம்..   முன் அளவு நேரம் கிடைப்பதில்லை.   பயணத்தில் நேரம் செலவழிகிறது.   அவதி.  நேற்றைய கே வா போவில் உங்களைக் காணோமே...

   நீக்கு
  2. ஓ, கே.வா.போ. கதையில் நேற்றுக் கமலாவின் கதையா? இப்போத் தான் தெரியும். எப்படியோ மறந்து விட்டு இருக்கேன். இன்னிக்குப் போய்ப் பார்த்துடலாம்.

   நீக்கு
 12. திரும்பி வர முடியாத தூரத்துக்கு....

  இந்தக் கேள்விக்கான விடைகள்
  மனதை அழுத்துகின்றன....

  பதிலளிநீக்கு
 13. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

  தலைப்பு நன்றாக உள்ளது. சில காரணத்திற்காக பெற்று ஆளாக்க முடியுமா? இரண்டாவதாக கீதையின் சாரப்படி பிரதிபலன் நாடாத அன்புதான் சிறந்தது அல்லவா? மற்றபடி அது சயநல எண்ணமில்லையா ?

  ஏனைய கேள்வி பதில்கள் நன்றாக இருக்குமென நினைக்கறேன்.என் கைப்பேசியை போட்டு நேற்று படுத்தியதில் இன்று காலையே அதற்கு பசி விட்டதாம். எனர்ஜி தந்து விட்டு பின் வருகிறேன். நன்றி.
  நேற்று கே. வா. போ வில் வந்தவர்களுக்கு நண்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 14. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 15. அனைத்தும் கேள்விகளும், பதில்களும் மிக அருமை.
  ஜென் கதை மிகவும் அருமை.

  //சில திருமணங்களில், பெண்ணுக்கு மோதிரம் போடுவதற்கு, இதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.//

  பயங்கர குறும்பு.


  பதிலளிநீக்கு
 16. நீங்கள் பார்த்தவரைக்கும் நல்ல சுத்தமான செந்தமிழ் எங்கே பேசுகிறார்கள் ?

  தேவகோட்டை


  சிறப்பான பதில்கள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி. யாமறிந்த ஊர்களிலே, தேவகோட்டை போல இனிதாவது எங்கும் காணேன் - கில்லர்ஜி

   நீக்கு
  2. என்ன கெளதமன் சார்.. இப்படிச் சொல்லிட்டீங்க. கில்லர்ஜியானா தேவகோட்டையைத் தவிர்த்து மற்ற இடங்களில் வீடு கட்டிக்கொள்கிறார். ரொம்ப பாசமான ஊரைவிட்டு 20 வருடங்கள் வெளியில் சென்றுவிட்டார்.....

   நீக்கு
  3. செந்தமிழ் என்று சொல்ல முடியாவிட்டாலும், எந்த வித ஸ்லாங்கும், கலப்படமும் இல்லாத தமிழ் திருச்சி தமிழ். திருச்சிகாரர்களே திரண்டு வாருங்கள். ஒரு காலத்தில் மதுரையில் வசித்தவர்களை கூட்டத்தில் சேர்க்கலாமா என்று தெரியவில்லை.  

   நீக்கு
  4. இங்கேயும் ஒரு போராட்டமா!

   நீக்கு
  5. சூரியன் உதிப்பது கிழக்கு என்றாலும், இல்லை இல்லை வடகிழக்கு என்று கொடி பிடிக்கக் கிளம்பிடறாங்க இந்த பானுமதி மேடம். எதுக்கு இந்த வேண்டாத வேலை.

   நல்ல தமிழ் யாழ்ப்பாணத் தமிழ். இரண்டாவது திருநெல்வேலி.

   சம்பந்தமே இல்லாம திருச்சி என்று சொல்றாங்களே. கண்கொத்திப் பாம்பா கவனிக்கலைனா அவ்வளவுதான் போலிருக்கு

   நீக்கு
  6. //நல்ல தமிழ் யாழ்ப்பாணத் தமிழ்.//  யாழ்ப்பாணத் தமிழ் நல்ல தமிழாக இருக்கலாம், புரிய வேண்டாமா? அது சரி என்ன உங்கள் ஊர்த் தமிழை பின்னல் தள்ளி விட்டு யாழ்ப்பாணத் தமிழுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்? அதிரா குழை சாதம் அனுப்பினாரா?

   நீக்கு
  7. எங்க ஊர்ககார்ர் என்று தன்ஷிகா ரசிகராவா நானும் ஶ்ரீராமும் இருக்கோம்?

   கடவுச்சீட்டு, உவள், உது, அவதானம், பரப்புரை - இதெல்லாம் தமிழக தமிழர்கள் அறிந்திருந்தார்களா?

   நீக்கு
  8. ஆஆஆஆஆஆஆஆ பானுமதி அக்காவுக்கு ஏன் புகையுதூஊஊஊஊ:), உண்மையில் இலங்கையில் சுத்தமான தமிழில்தான் பேசுவார்கள்... இப்போ வெளிநாட்டு வந்தபின்னர்தான் நம் தமிழ் .. இந்தியத்தமிழ்க் கலப்பு + ஆங்கிலக்கலப்பு வந்து விட்டது.. என்னைக்கூடப் பாருங்கோ.. நான் அதிகம் தமிழில் பேசுவது இங்கு புளொக்குகளில்தானே.. அப்படி இருந்தும் அதிரா மட்டும்தேன்ன் கொஞ்சம் இலங்கைத்தமிழைப் பிடிச்சு வைத்துப் பேசுகிறேன் என்பார்கள் சிலர், நம் இலங்கையர்கள் பலரின் எழுத்தைப் பாருங்கோ.. தமிழ்நாட்டுப் பாணியிலேயே இருக்கும்.

   ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசுவார்கள் ஊரில்.. பூஸோ கொக்கோ விடமாட்டேனெல்லோ:)) ஹா ஹா ஹா.. கெள அண்ணனுக்கு இன்று கம்பில குழை சாதம் செய்து அனுப்பப்போறேன்ன்:))

   நீக்கு
  9. ஹாஹா :) இங்கே எல்லாரும் ஒரு ஊர் மொழிதான் பேசறீங்க :) நான்லாம் மதுரை நாகர்கோவில் தருமபுரி சென்னை னு கலந்து அடிப்பேன் இந்த அருந்ததியால் முடியுமா முட்ட்டியும்மா :))))))))))))))))))))))))))))

   நீக்கு
  10. //சூரியன் உதிப்பது கிழக்கு என்றாலும், இல்லை இல்லை வடகிழக்கு என்று கொடி பிடிக்கக்// உண்மை. வடகிழக்கே தான் உத்தராயனம் ஆரம்பித்ததில் இருந்து சூரியன் உதிக்கும். தக்ஷிணாயனம் எனில் நேர் எதிர்த் திசை. இதை அரவங்காட்டில் எங்க குடியிருப்பின் வாசலில் நின்று பார்த்துப் பார்த்து ரசிப்பேன். துளித்துளியாகச் செக்கச்சிவந்த நிறத்தில் மெல்ல மெல்ல மேலே எழும்பி வந்து பின்னர் முழுவடிவாகக் காட்சி அளிக்கும் சூரியன்! பார்க்கக் கண் கோடி வேண்டும்.

   நீக்கு
  11. சூரியன் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை. அது அங்கேயேதான் பல யுகங்களாக இருந்துகிட்டிருக்கு!

   நீக்கு
  12. எந்த சூரியனை சொல்றீங்க சார் :)))))))))))))))))))))))))

   நீக்கு
 17. நம்மைப் பெற்றவர்கள் கண்ட அனுபவத்தை நாமும் காணவேண்டுமல்லவா?

  பதிலளிநீக்கு
 18. //28ம் எண்காரர்கள் கொஞ்சம் அதிர்ஷ்டகட்டை. திறமைக்கேற்ற வெற்றி கிட்டாது. மேடு பள்ளமான வாழ்க்கை.//
  என்னைப்பொறுத்த வரையில் மிகச்சரி.
  Jayakumar

  பதிலளிநீக்கு
 19. அனைவருக்கும் இனிய மதிய வணக்கம். கேள்விகளும் பதில்களும் சூப்பர் சிறப்பு. ஏஞ்சல் முதல் தரமான கேள்விகளைக் கேட்டு முதல் தரமான. பதில்களைப் பெற்றுவிட்டார் நல்ல சிந்தனை தூண்டும் புதன். பானு 28 ஆம் எண்ணுக்கு சொல்லி. இருப்பது என் சின்ன தம்பிக்குப் பொருந்தும் உழைத்த அளவுக்கு அதிர்ஷ்டம் இல்லை. காலை உணவுக்குப் பின் மீண்டும் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 20. @ பா.வெ - //கல்யாண வீடென்றால் தாங்கள்தான் மணமகன்/மணமகள், இழவு வீடென்றால் பிணம் என்னும் மனப்பாங்கு. // - அப்போ எல்லா அரசியல்வாதிகளும் 1ம் நம்பர் காரங்களா?

  ஏதோ ஆங்கிலப் புத்தகத்திலிருந்து தமிழ்ப்படுத்தியது போலத் தெரிகிறதே ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னை கேலி செய்யும் நோக்கத்தோடு சொல்லியிருந்தாலும், உங்களையும் அறியாமல் ஒரு உண்மையை சொல்லி விட்டீர்கள். பெரும்பாலான அரசியல்வாதிகள் ஒன்றாம் எண்காரர்களாக இருப்பார்கள். அந்த எண்ணுக்கு அதிபதி சூரியன் ஆச்சே.

   நீக்கு
  2. //ஏதோ ஆங்கிலப் புத்தகத்திலிருந்து தமிழ்ப்படுத்தியது போலத் தெரிகிறதே// இல்லை ஏதோ தமிழ்ப் புத்தகத்தில் பல வருடங்களுக்கு முன்பு படித்தது. நான் சொல்லும் குறிப்புக்கள் வெறும் புத்தக படிப்பு அல்ல, அனுபவம். பல பேரை கவனிப்பேன்.   அப்படி கவனித்த ஒரு விஷயம் முரளி என்னும் பெயர் கொண்டவர்கள் playful ஆக இருப்பார்கள். வார்த்தையை கவனியுங்கள் play boy என்று புரிந்து கொண்டு சண்டைக்கு வந்து விடாதீர்கள். 

   நீக்கு
  3. நான் பார்த்தவரை PB தான் PF னு சொல்லமுடியாது கொஞ்சம் ஜாலியான ஆட்கள்தாம்.

   நான் ஸ்கார்ப்பியன்ஸை மட்டும் வெகு காலம் அனலைஸ் செய்திருக்கிறேன்

   நீக்கு
  4. //கேலி செய்யும் நோக்கத்தோடு//- அப்படீல்லாம் இல்லை. நீங்கலாம் பெரியவங்க. கேலி செய்யும் எண்ணம்லாம் வராது. கலாய்ப்பது வேறு

   நீக்கு
 21. //வாசகர்கள் அனுப்பிய கருத்து :

  வல்லிசிம்ஹன் : // - இது எப்போ நடந்தது? எங்கயும் கேஜிஜி சார் கேட்ட மாதிரி தெரியலையே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேட்டிருந்தேன், வாட்ஸ் அப் குழுமத்தில். நீங்க பார்க்கவில்லையா?

   நீக்கு
 22. //இலையுதிர் காலம் ரோட்டோரம் காய்ந்த இலை சருகுகளை பார்த்ததும் கூட்டி அள்ள தோணும் எனக்கு ..// - எனக்கு ரொம்பத் தெரியாதவர்கள் வீட்டுக்கு (ஆபீஸ் பாஸின் நெருங்கிய உறவுக்காரர்கள்) 10 நாட்கள் பம்பாயில் தங்கினேன் (90ல்). அப்போ அங்கிருந்த திருமணமான பெண், என்னிடம், அவருடைய கணவரின் சகோதரி வெளிநாட்டிலிருந்து அப்பா/அம்மா வீட்டுக்கு (அதாவது அந்தப் பெண் அந்த வீட்டில்தான் கணவருடன் இருந்தார்) வரும்போது, டிவி மற்ற எல்லாவற்றையும் கொஞ்சம் கூட அழுக்கு இல்லாதவாறு துடைப்பாராம் (சுத்தமா வச்சிக்க வேண்டாமா, பளபளன்னு இருக்கணுமே என்றெல்லாம்). அந்தப் பெண் என்னிடம் குறைகூறிச் சொன்னார்.

  இப்படி சுத்தமா இருக்கணும் என்றெல்லாம் அதீதமாக எண்ணுவது, செய்வது ஒரு வியாதிதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வதில் தவறு இல்லை. ரோடு என்று வரும்போதுதான், அது நம்முடைய வேலை இல்லை எனும்போதுதான் பிரச்னை வருகிறது. மரங்கள் உதிர்க்கும் இலைகளுக்கும் சருகுகளுக்கும் நாம் எப்படி பொறுப்பாக முடியும்?

   நீக்கு
  2. நான் உடனடியா எப்படியாச்சும் ஏற்பாடு செய்து நெல்லைத்தமிழனையும் கௌதமன் சாரையும் ஜெர்மனி அனுப்பப்போறேன் .அங்கே நம் வீட்டின் முன் இலை/ ஸ்னோ எதுனாலும் நம் மரமே இல்லைனாலும் நாம்தான் க்ளீன் செய்யணும் 

   நீக்கு
  3. அடக்கடவுளே! அப்படியா விஷயம்!

   நீக்கு
  4. இங்கேயும் அப்படித்தான். இலைகள், சருகுகள், புற்கள்னு எல்லாத்தையும் அவ்வப்போது கவனித்துச் சரி செய்யலைனால் நகராட்சியில் இருந்து கடிதமும் அபராதமும் வரும்.

   நீக்கு
  5. அதானே அக்கா ..இருங்க அம்பேரிக்காவையும் லிஸ்டில் சேர்த்து இவங்களை அனுப்பி விடுவோம் கடும் குளிர் ஸ்னோ டைம் 

   நீக்கு
  6. பொண்ணு பாஸ்டனிலேயும், மெம்பிஸிலேயும் இருக்கையில் வாசலில் குவியும் பனிக்கட்டிகளைக் கையுறை போட்டுக்கொண்டு அவளும், மாப்பிள்ளையுமாக அகற்றுவார்கள். பார்த்தாலே பாவமாக இருக்கும். :( அம்பேரிக்க வாழ்க்கை சொகுசு என நினைப்பவர்கள் இங்கே வந்து பார்த்தால் தான் தெரியும்.

   நீக்கு
  7. ///அம்பேரிக்க வாழ்க்கை சொகுசு என நினைப்பவர்கள் இங்கே வந்து பார்த்தால் தான் தெரியும்.//

   உண்மைதான்க்கா :) மெயின் ரோடுகளில் லாரி உப்பு போடும் ஆனா நம் வீட்டு முன் நாம் தான் பொறுப்பு அதில் யாரவது வழுக்கினா நாமே பொறுப்பு .

   நீக்கு
 23. நம் நாடு விடுதலை அடைந்த பிறகு ஒரு முறை வினோபா பாவேயும், அம்பேத்கரும் மஹாத்மா காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்திற்கு சென்றிருந்தார்களாம். இரவு உணவு முடித்து எல்லோரும் உறங்கச் சென்று விட்டார்கள். நடு இரவில் இயற்கை உபாதைக்காக எழுந்து கொண்ட வினோபா பாவே அந்த நேரத்திலும் அம்பேத்கர் உறங்காமல் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஏதோ எழுதிக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு," இன்னும் தூங்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று வினவ அதற்கு அம்பேத்கார்," நீங்கள் எதிர்பார்த்த தேச விடுதலை கிடைத்து விட்டது அதனால் உங்களால் தூங்க முடியும், நான் ஆசைப்படும் சமூக விடுதலை இன்னும் கிடைக்கவில்லை. என் மக்கள் இன்னும் இருளில் இருக்கும் பொழுது நான் எப்படி உறங்க முடியும்?" என்றாராம். இதுதான் உள்ளத்தில் நள்ள உள்ளம் உறங்காதென்பது.
  தான் தன் சுகம் என்று இருப்பவர்களுக்கு என்ன கவலை? நிம்மதியாக தூங்குவார்கள். 
   

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட! புதிய தகவலுக்கு நன்றி.

   நீக்கு
  2. திருச்சிக் காரங்க தமிழ் சரியில்லை என்பதால் நெல்லை எழுதவேண்டியிருக்கிறது.

   உறங்காது - இறக்காது. அவர்கள் நினைக்கும்போதுதான் அல்லது முடிவு அவருக்கு முன்னமே தெரியும்படியாக மரணம் அமையும்.

   பானுமதி அவர்களின் லாஜிக்படி நேற்றைக்கு முந்திய நாள் எங்கள் வளாகத்தில் என்பையன் மட்டும்தான் நல்ல உள்ளம் கொண்டவன் போலிருக்கு. இரவு முழுக்க தூங்காமல் படித்தானாம். ஹா ஹா ஹா

   நீக்கு
  3. ஓ அப்படியா? உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போல் பிறப்பு என்கிறீர்கள். புரிந்தது. நன்றி.

   நீக்கு
 24. தமிழில் "போடு" என்ற சொல்லும் இல்லாமல் போயிருக்க வேண்டும், அப்பப்பா!

  பதிலளிநீக்கு
 25. @கீதா சாம்பசிவம் அவர்கள் - காதல், பழி வாங்குதல் — என்னவோ கேள்விலாம் கேட்கறீங்க, இதிகாசத்தைக் கரைத்துக் குடித்திருந்த போதும் - எது முறை தவறிய காதல்? யார் வாழப் போகிறவர்கள்? அவர்கள் எதிர்காலத்துக்கு எது நல்லது என்று கன்வின்ஸ் பண்ண முடியாத்து யார் தவறு?

  குழந்தைகளை மரப்பாச்சி பொம்மையாக் கருதி சின்ன வயசில் நம் விருப்பப்படி திருமணம் செய்துடணும் என்று சொல்றீங்களே.

  வெட்டிவேலைக்காரனும் வளர்ப்பு சரியில்லாதவனும்தான் முறை தவறிய காதல் கொள்வான்-ள். பழி வாங்குதல்-இவங்க குற்றம் செய்யும் குணம் இயல்பாக அமையப்பெற்றவர்கள். சிறை வாழ்வுக்குத் தகுதியானவர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ நெல்லை, நீங்க அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள், செய்திகள்னு எல்லாம் சரியாகப் பார்ப்பதும் இல்லை, கவனிப்பதும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.

   நீக்கு
 26. //நெல்லைத்தமிழன் :

  பசங்களை பெத்து ஆளாக்குவதன் பர்பஸ் என்ன?//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்ன இது ஒரு பிஸ்னஸ் மான் போல பேசுகிறார்ர்:)).. பலனை எதிர்பார்த்தெல்லாம் குழந்தை பெறக்கூடாதாக்கும்...

  எனக்கு குழந்தை பெற்றதன் ஒரே நோக்கம்.. தூக்கித் திரியோணும், விதம் விதமாக உடை மாற்றி அழகு பார்க்கோணும் என்பது மட்டுமே... ஹா ஹா ஹா.. குழந்தை எனில் அவ்ளோ பிடிக்கும் எனக்கு.

  என் ஆத்துக்காரர் சொல்வார்ர்... “என்ன அதிரா டோல் போல உருட்டி உருட்டி மேக்கப் போடுறீங்க?” என ஹா ஹா ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல வேளை இரண்டொடு அந்த டால் போல அவைகளுடன் விளையாடும் ஆசை போச்சு. அது இன்னும் தொடர்ந்து இருந்தால் வீட்டில் நர்சரி பள்ளிக்கூடம் ஆரம்பிக்க வேண்டியதுதான்

   நீக்கு
  2. ஹா ஹா ஹா என் கணவர் அடிக்கடி சொன்ன வசனம்[பிள்ளைகள் குழந்தைகளாக இருந்தபோது].. குழந்தை எப்பவும் குழந்தையாக இருக்காது அதிரா.. அது வளர்ந்துவிடும், பின்பும் குழந்தை வேண்டுமென்றால் என்ன பண்ணுவது” எனச் சொல்லிச் சிரிப்பார்.. ஆனா உண்மையில் எனக்கு குறைந்தது 4 குழந்தைகளாவது இருக்கோணும் என விருப்பம், ஆனா இருவரும் ஆண்குழந்தைகள் என்பதால, 3வது ஆண் குழந்தை எனில் குடும்பத்துக்கு நல்லதல்ல என ஊரில் சொல்வார்கள்..[மூட நம்பிக்கையோ என்னமோ ஆனா] எதுக்கு ரிஸ்க் என விட்டாச்சு...:)

   நீக்கு
  3. அன்பு அதிரா, என் அம்மாவுக்கு அப்புறம் நாலு ஆண் குழந்தைகள்.
   அத்தனை பேரும் அந்தக் குடும்பத்தை உயர்த்தினார்கள்.
   அந்தக் காலத்தில் விவசாயத்தை ஒருத்தர், படிப்பை,ஒருவர்,உத்தியோகம் சென்று பணம் ஈட்ட ஒருவர் என்று உழைத்தனர்.
   அனைவரும் பெரியவர்கள் ஆனவுடன்
   வெவ்வேறு ஊர்களுக்க்ச் சென்றாலும்
   80,85 என்று இருந்தே மறைந்தனர்.
   எங்கள் வீட்டுக்காரரும்,மினிமம் பத்துக் குழந்தையாவது வேண்டும்
   எம்பார். என் மாமியார் தடுத்து ஆட்கொண்டார்:)

   நீக்கு
  4. வல்லிம்மா, நீங்கள் சொல்வது சரியே.. ஆனா நான் சொல்ல வந்தது, எனக்கு விரிவாக சொல்ல விருப்பமில்லை, ஏனெனில் இதைப்படிச்சு ஆரும் வருத்தப்பட்டால் எனும் பயம், ஆனா ஆரும் சீரியசாக எடுத்திட வேண்டாம் அனைத்தும் நம் விதிப்படியேதான் நடக்கும்.

   நான் அறிஞ்சது ஊரில் பேசுவார்கள், குடும்பத்தில் 3 ஆண்குழந்தைகள் இருப்பின் அது நல்லதல்ல என, அதாவது 4 அல்லது அதுக்கு மேல எத்தனையும் இருக்கலாம், 3 என்பது ஆகாது என்பினம், 3 ஆண்குழந்தைகளும் பின்னர் பெண்குழந்தைகள் இப்படி எனினும்- அது மூன்று எண்ணிக்கை வந்தால் பிரச்சனை இருக்கும் என்பார்கள்.

   நீக்கு
  5. //4 அல்லது அதுக்கு மேல எத்தனையும் இருக்கலாம், //
   என் கணவர் வழியில் 6 பிரதர்ஸ் :)

   நீக்கு
 27. //சின்ன வயதில் எந்த உணவுக்கு ஆசைப்பட்டு அது கிடைக்காமல் ஏங்கியிருக்கிறீர்கள்?//
  அப்போ கூகிள், யூ ரியூப் இல்லை, அதனால தெரியாத உணவு என்பது தெரியாததாகவே இருந்தது.. தெரிஞ்ச உணவையே ஆசைப்பட்டேன்ன்.. அது கிடைக்கும் எப்பவும் ஹா ஹா ஹா..

  ஆனாப் பாருங்கோ.. இந்த பொல்லாத நாட்டுப் பிரச்சனையால கொஞ்சக் காலம் இறக்குமதி இலை.. அந்நேரம் கண்டோஸ், சீஸ் சாப்பிட ஆசைப்பட்டுக்கொண்டே இருந்தேன்.. அப்பா ஊருக்கு வரும்போதுதான் வாங்கி வந்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் பரோட்டா, ஹோட்டல் உணவு கிடைக்காமல் ஏங்கியிருக்கிறேன். நீங்களும் ஓசிங்க. நினைவுக்கு வரும்

   நீக்கு
 28. & - கைலாஷ் சொர்க்மாம் - மிலியன் டாலர் அல்லது சொத்து எழுதிவைத்தால் இரண்டுவேளை சோறு, இலவச அறிவுரைகள், ஏகப்பட்ட போலீஸ் வேலை உத்தரவாதம். அதற்கா ஆசைப்படுகிறீர்கள்?

  சைனா தண்டனையாம் - இது என்ன புதுக் கதை? நாம் பழகி இருக்கும் சோற்றுக் குளம், ரசக் குளம், தயிர் சாதம் ஊறுகாய் என கலந்துகட்டி சாப்பிடுவதைப் பார்த்து இது என்ன சமச்சீரில்லாத தோந்தி வளர்க்கும் உணவு என மேலை நாட்டவர் மலைக்கின்றனர். உணவுப் பழக்கம் என்பது வளர்ப்பில் வருவது. எனக்கு நான் வெஜ் சாப்பிடுபவர்கள் அந்நியமாகத் தெரிகின்றனர். அவங்களுக்கு பூச்சி, தேள், பாம்பு சாப்பிடும் சைனாக்காரன் உவ்வேயாகத் தெரியும். ஆனால் சீனாவின் (என் அனுபவம் தாய்வான்) வாழ்க்கை முறை, சௌகரியங்கள்-அரசு அமைத்தவை.. இவையெல்லாம் அந்நாடு சொர்க்கம் எனச் சொல்லும் எண்ணம் வரும். கண்ட இடத்தில், யார் நடக்கிறார்கள் எது வருகிறது என்பதையெல்லாம் கவனிக்காமல் பைப் திறப்பது, துப்புவது, அடுத்தவரைப் பற்றிக் கவலைப்படாத அலட்சியத் தன்மை, வரிசையை மதிக்காத குணம், பொது இடத்தில் எப்படி நடந்துகொள்ளணும் எனத் தெரியாத தன்மை, ஏமாற்றும் குணம், கொள்ளை அடிப்பதும் மக்களைப் பிரித்தாள்வதுமே கொள்கை எனச் செயல்படும் அரசியல்வாதிகள்... இந்தியா சொர்க்கமா? ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யோசித்துப் பார்த்ததில், நான் எந்த வெளிநாட்டிற்கும் சென்றது இல்லை என்று தெரிகிறது. சைனா இன்றளவில் கொ. வை. பிடியில் சிக்கியிருப்பதால் அப்படிச் சொன்னேன்.

   நீக்கு
 29. //2. நீங்கள் பார்த்தவரைக்கும் நல்ல சுத்தமான செந்தமிழ் எங்கே பேசுகிறார்கள்? செந்தமிழில் பேசினால் புரிந்து கொள்பவர்கள் உண்டா?//

  சே.சே. அதிரா பேசும்தமிழ்தான் எனச் சொல்ல ஆருக்கும் மனம் வரல்லயாக்கும் கர்:)) ஹா ஹா ஹா கடவுளே இதை நெ தமிழன் பார்க்காமலிருக்கக்கடவது:))

  பதிலளிநீக்கு
 30. //& : "$" தான். //

  இந்த எஸ்ஸூ ஆரெனக் கண்டுபிடிக்கோணும் அஞ்சூஊஊஊஊஉ:))

  பதிலளிநீக்கு
 31. //
  9, இலையுதிர் காலம் ரோட்டோரம் காய்ந்த இலை சருகுகளை பார்த்ததும் கூட்டி அள்ள தோணும் எனக்கு ..இது என்ன மாதிரி மனநிலை ? இப்படி உங்களுக்கும் தோன்றியிருக்கா ?///

  ஆவ்வ்வ்வ்வ் இது எனக்குள்ளும் உதிப்பதுதான், சூப்பர்மார்கட்டில் ஏதும் கொட்டிக்கிடந்தால் அதை சரி செய்து அடுக்க முயற்சிப்பேன், ஆனா நம்மவர்/கள் விடமாட்டினம் விடுங்கோ வேண்டாம் எதுக்கு வேண்டாத வேலை என்பினம் ஹா ஹா ஹா..

  இதெல்லாம் உதவி செய்யும் மனப்பான்மை என்று தப்பாக எடுத்திடாதீங்கோ ஹா ஹா ஹா .. புல்வெளி பார்த்தால் உருண்டு பிரளத் தோணுவதைப்போல இப்பூடி சருகைக் கண்டால் கூட்டி அள்ளத் தோணுது.. இதுவும் ஒரு ஆசை/விருப்பத்தின் வெளிப்பாடுதான் ஹா ஹா ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே அதிரா :) நான் ஜெர்மனியில் வந்த புதுசில் வால்மார்ட்டில் மேகசின்ஸ் கீழே  சரிந்திருந்ததை ஒழுங்கா அடுக்கினேன் .என் கூட இருந்த சிஸ்டரின்லா சொன்னார் இதுக்கு வேலைக்கு ஆள் இருக்கு எதுக்கு நீங்க செயிரீன்ன்கன்னு ..ஆனா எனக்கு ஒழுங்கா வைக்க ஆசை ரோட்டில் வாழைத்தோல் இருந்தா ஓரமா தள்ளி விடுவேன் காலால் ..யாராச்சும் வழுக்க கூடாது என்ற நல்லெண்ணம்தான் 

   நீக்கு
  2. அது எனக்கும் இருக்குது அஞ்சு, ரோட்டில் ஏதும் இருந்தால், காரை நிறுத்திக்கூட எடுத்து ஓரம் போட்டிருக்கிறேன், மனசு கேட்காது அப்படிச் செய்யாமல் கடந்து போக...

   நீக்கு
  3. //ரோட்டில் வாழைத்தோல் இருந்தா ஓரமா தள்ளி விடுவேன் காலால் ..யாராச்சும் வழுக்க கூடாது என்ற நல்லெண்ணம்தான்//  எனக்கும் அந்த நல்லெண்ணம் உண்டு ஏஞ்சல். 

   நீக்கு
  4. பானுக்கா என் ஹாண்ட் ப்பாகில் எப்பவும் பிளாஸ்டிக் கவர்கள் ஒன்றிரண்டு வச்சிருப்பேன்.அதோடு ஹேண்ட் சானிடைசரும் உண்டு . வாழைத்தோல் பிளாஸ்டிக் ஷீட்ஸ் (பொம்மை பேக்கேஜில் வருமே ) இவை ரோட்டில் இருந்தா கவரை கையில் மாட்டி எடுத்து  அருகிலுள்ள பின்னில் போடுவேன் பின் இல்லாத பட்சம் ஒரு மூலையில் தள்ளி விடுவேன் . ஹேண்ட் பாகில் ஒரு எக்ஸ்ட்ரா பையுm இருக்கும் .சமீபத்தில் அரிசி  பையை நடு  ரோட்டில் போட்டு அது பிரிந்து கொட்டி பரிதவித்த ஒருவருக்கு கொடுத்தேன்.  மிக்க சந்தோஷம்க்கா நம்மை போல இன்னும் நிறையபேர் இருப்பாங்க :)

   நீக்கு
 32. //இனிமேல் திரும்பி வர முடியாத தூரத்திற்கு போய் விட்டோம் என்று நீங்கள் கருதும் விஷயங்கள் எவை?//

  அடிக்கடி நினைச்சு ஏங்குவது சின்ன வயசுப் பருவம்.. அப்படி ஓடி ஆட ஆசையிருந்தும் வயதாகிவிட்டது திருமணமாகிப் பிள்ளைகளும் வந்தாச்சு சிலதை அடக்கத்தான் வேணும் என, என்னை நானே அடக்கி இருப்பது ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐந்து வயது வரை நாமே குழந்தையாக வலம் வருவோம். முப்பது வயதில் நாம் பெற்றக் குழந்தைகளின் குறும்புகளை, மழலையை ரசிப்போம். அறுபது வயதில் பேரன் பேத்திகளின் குறும்பு + மழலை ரசிப்போம். தொண்ணூறு வயதில், கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி குறும்பு + மழலை ரசிப்போம். ரசிப்பு இருந்தால்போதும், ஆசைகளை அடக்கவேண்டாம்!

   நீக்கு
  2. ஆசைகளை அடக்கிடக்கூடாது என்றுதான் நான் இப்பவும் ஊஞ்சலை எங்கு கண்டாஅலும் ஏறி ஆடாமல் வர மாட்டேன்ன்.. இது என் வீட்டில் எல்லோருக்கும் பழகி விட்டது ஹா ஹா ஹா..

   நீக்கு
 33. பல கேள்விகள்.. அதுக்குப் பொறுமையாகப் பல பதில்கள்.. இன்று தலையிடி காரணமாக வெளி அலுவல்கள் அனைத்தையும் ரத்துச் செய்து விட்ட காரணத்தால் இப்போ உங்களோடு பேச முடிந்தது. நன்றி வணக்கம்.. அப்போ நான் போட்டு வரட்டே....?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படித்ததற்கு, ரசித்ததற்கு, கருத்துரைகளுக்கு நன்றி.

   நீக்கு
 34. ஆஆஆஆவ்வ் மீதான் 100 ஊஊஉ 101 ஊஊஊஊஊஊஊஊஊ இப்போ 102 ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ:))

  பதிலளிநீக்கு
 35. மிகச் சிறப்பான அரட்டை அரங்கம் இங்கு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.
  எத்தனை கேள்விகள். ஆச்சர்யமான பதில்கள்.
  எங்கள் ப்ளாகில் நானும் ஒரு உறுப்பினர் என்பதில் மிகவும் மகிழ்ச்சி.

  இந்த நட்புகள் என் தனி உலகின்
  இருப்பை சுகமாக்குகின்றன.
  நன்றி
  @ அருந்ததி அதிராஎனக்கும் $ ,# அப்புறம் & யாரென்று தெரியாது.:)
  அப்பாடி ...அறியாமையை ஒத்துக் கொள்வதில் தான் எத்தனை சுகம்.!!!!!!!!

  பதிலளிநீக்கு
 36. ஸ்ரீப்ரியா என் அபிமான நடிகை கிடையாது இருந்தாலும் அவர் இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் உடல் பகுதி பிளைன் ஆகவும், கையில் பூ போட்ட டிசைனிலும் ரவிக்கை அணிந்து கொண்டிருப்பார். அதைப் பார்த்து விட்டு அதைப் போல் பிளவுஸ் தைத்துக் கொள்ள ஆசைப்பட்டேன். என் அம்மா அனுமதிக்க  மறுத்து விட்டார். சித்தி(1) சீரியல் ஒளிபரப்பான பொழுது என்னிடம் இருப்பது போன்ற புடவைகளை ராதிகா அணிந்து கொண்டு வரும் பொழுது,"அட! என் போலவே ராதிகா புடவை உடுத்திக் கொண்டிருக்கிறாளே என்று சந்தோஷப்பட்டிருக்கிறேன்(இது எப்படி இருக்கு?) 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // உடல் பகுதி பிளைன் ஆகவும், கையில் பூ போட்ட டிசைனிலும் ரவிக்கை அணிந்து கொண்டிருப்பார்// அந்த வகை உடைகளைப் பார்த்தபோது, பாவம் இவர்களுக்கு நவராத்திரி கொலு சமயம் அல்லது தை வெள்ளிக்கிழமையில் யாரோ வைத்துக்கொடுத்த பிளவுஸ் பிட்டுகள் சிறியதாக இருந்திருக்கும் போலிருக்கு - அதனால்தான் துணி ஒட்டுக்கொடுத்து தைத்து போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன்!

   நீக்கு
  2. ஹாஹா :) கௌதமன் சார் அப்போ இந்த லோ மென் ஜீன்ஸ் அப்புறம் ரிப்ப்ட் ஜீன்ஸலாம் பார்த்தா என்ன நினைப்பீங்க :))))))

   நீக்கு
  3. ' கண்றாவி ' என்று நினைப்பேன்!

   நீக்கு
  4. மகளுடன் ஷாப்பிங் போகும்போது வேணும்னே அந்த செக்க்ஷன் பக்கம் நடந்து எனக்கு பிபி எகிற வைப்பா :)  இங்கே பெற்றோர் பிள்ளைகள் உடை விஷயத்தில் குறுக்கிட முடியாதே . ஆனா அவளுக்கு அப்படி உடைகளில் விருப்பம் இல்லை :) மனசுக்கு நிம்மதியா இருக்கும் :) 

   நீக்கு
 37. இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஒரு பிரபலம் எழுத்தாளர் இந்துமதி. ஜெயலலிதாவும் இவரும் ஒரே வருடம், ஒரே மாதத்தில் பிறந்தவர்கள். ஐந்து நாட்கள் வித்தியாசம்.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா! இந்துமதி முகத்தில் எப்பவுமே ஒரு சோகம் இருப்பதுபோல் எனக்குத் தோன்றும்.

   நீக்கு
  2. நேரில் மிகவும் உற்சாகமான பெண்மணி. ரமா ஶ்ரீனிவாசனுக்கு அக்கா எனலாம்.

   நீக்கு
  3. அப்படியா! தகவலுக்கு நன்றி.

   நீக்கு
 38. புதன் கேள்வி பதில் படிப்பதில்நேரம் போவதே தெரியவில்லை

  பதிலளிநீக்கு
 39. 1, விகடன் புத்தக  லோகோவில் ஒரு ஸ்மைலி தாத்தா இருக்காரே அதன்  பின்னணி வரலாறு என்ன ?
  2, நாமெல்லாம் உணர்வுகளின் கலவை .நீங்கள்  ஒரு நாளில் அதிகம் வெளிப்படுத்துவது என்ன உணர்வு ?
  3, ஸ்ட்ரெஸ்லருந்து விடுபட நீங்கள் என்ன செய்வீர்கள் ?
  4, ஒப்பீடு செய்வது சரியா தவறா ? சரியென்றால் காரணத்தை கூறவும் ? தவறென்றாலும் காரணத்தை கூறவும் ?
  5, ஒருவர் எல்லாவற்றிலும் வெற்றி பெற என்னென்ன குணங்கள் பண்புகள் வேண்டும் ?
  6, எனக்கு செடியில் இருந்து மலர்களை பறிப்பது பிடிக்காத ஒன்று .இப்படி உங்களுக்கு அறவே பிடிக்காத ஒன்று என்ன ? ஏன் ?
  7, உங்களுக்கு  எதிலாவது சந்தேகம் வந்தா யாரை முதலில் கேட்பீர்கள் ?
  8, மனுஷங்க பறவைகளுக்கும் அணில்களுக்கும் உணவிடுவதன் காரணம் என்ன ? அன்பா பாசமா கருணையா இல்லை குற்ற உணர்வா ?
  9, சமீபத்தில் பூரண மனத்திருப்தி தந்த விஷயம் எது ?
  10, செடி ,கொடி ,மலர்கள் ,காக்கை குருவிகளிடம் பேசியிருக்கிறீர்களா ? அப்படி பேசும்போது அவை உங்களுக்கு பதில் தந்திருக்கா ? எதுக்கு கேட்கிறேன்னா ஒரு  தாத்தாவுக்கு தோட்டம் செடி ஆசையாம் வேலை விஷயமா 3/4 நாட்கள் வெளியே சென்று திரும்பி வந்ததும்  தோட்டத்துக்கு சென்று கிரேஸ் நீர் ஊற்றினாளா என்று கேட்பாராம் அவை இலையை அசைக்குமாம் .    

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிரேஸ் நீர் ஊற்றினாளா என்று கேட்பாராம்.. இலைகள் அசையுமாம் - ஒரு கேள்வியில் உணர்ச்சியைக் கொண்டுவந்துவிட்டீர்கள். நான் மரங்களை பூங்காக்களில் பார்க்கும்போது அவை எத்தனை மனிதர்களைப் பார்த்திருக்கும்...காலத்தின் சாட்சியாக நிற்கிறதே என்று நினைத்துக்கொள்வேன்.

   நீக்கு
  2. உண்மைதான் பல காட்சிகளுக்கு அவை சாட்சிகள் .மனிதன் கை /கண் அவற்றின் மீது படலேன்னா அவையும் பேசும் காலம் வரலாம் .இந்த சம்பவம் உண்மை சம்பவம் .எனக்கும் தோட்டத்தில்  செடிகளுக்கு நீர் ஊற்றும்போது இப்படி அவை சிரிக்கிறாப்போல் தோணும் :) 

   நீக்கு
  3. 11,சின்ன சின்ன ஆசைகளில் ஒன்றை சொல்லுங்க ?
        மேலே பூஸார் ஊஞ்சலை கண்டா ஏறி ஆடுவார் :) நான் டைல்ஸ் ஸ்லாப்ஸ் பார்த்தா ஒவ்வொன்றின் மீதும் கால் வைத்து நடப்பேன் :) இப்படி உங்களுடைய ஆசைகள் என்ன ??

   நீக்கு
 40. //ஒன்றாம் எண்காரர்கள் 2, 4, 7 என்ற எண் கூட்டுத்தொகை வருகின்ற தேதிகளில் பிறந்தவர்களுடன் நட்பாக இருப்பார்கள்// நமக்கு மாத்திரம் மாறி நடக்குதா என்ன? கேள்வி பதிலகள் அருமை. படித்தேன், ரசித்தேன் - சிரித்தேன்!

  பதிலளிநீக்கு
 41. தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
  இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது பசங்களை பெத்து ஆளாக்குவதன் பர்பஸ் என்ன? பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 42. @Angel,
  so true. My husband used to talk to all the leaves. and the plants. wipe the leaves.After a rain will go see them and will come tell me,they are smiling with gratitude.He loved them and they responded. Have heard of plants shrink within themselves if some one wants to hurt or pluck their leaves. Even grass will react in that way.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Indeed .i agree .i would never pluck flowers or cut a branch .i read that an ultrasonic scream is emitted when stems are cut or if they are not watered enough.thanks for sharing such lovely beautiful memories with us vallima .

   நீக்கு
 43. கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம்.

  இந்த முறை வந்திருக்கும் கருத்துகள் எண்ணிக்கை பிரமிக்க வைக்கிறது! :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!