சனி, 15 பிப்ரவரி, 2020

குண்டு துளைக்காத ஹெல்மெட்டும்,  கிராபெனின்   மாஸ்க்கும் 


1)  உறுதி தொடரட்டும்.  உழைப்பு உள்நாட்டிலேயே மலரட்டும்...  நாசாவுக்கு நோ சார் சொல்லிய கோபால்ஜி.
2) ராணுவ வீரர்களுக்காக ஸ்னைப்பர் தோட்டாக்கள் தாக்காத வகையிலான புல்லட் புரூப் ஜாக்கெட்டை உருவாக்கிய இவர், தற்போது குண்டுகள் துளைக்காத ஹெல்மெட்டை வடிவமைத்துள்ளார். இந்த ஹெல்மெட், 10 மீட்டர் தொலைவில் இருந்து ஏகே 47 துப்பாக்கியால் சுட்டாலும் குண்டுகள் துளைக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  அந்த இவர் இந்திய ராணுவத்தை சேர்ந்த மேஜர் அனூப் மிஸ்ரா.
3) காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம் குறும்பிரை கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை மகன் கருணாகரன்உத்திரமேரூர் அருகே, விவசாயி ஒருவர், சொந்த செலவில், அப்பகுதி பொதுக்குளத்தை சீரமைத்து வருகிறார்.
4)  'கொரோனா' வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க, சத்தியமங்கலம் இன்ஜினியர் கண்டுபிடித்த 'மாஸ்க்' குக்கு, அங்கீகாரம் கிடைத்துள்ளது.


===================================================================================================வாழ்க்கைப் போராட்டங்கள் வாழ்க்கைப் பாடங்களாக மாறும் நேரம்
ரமா ஸ்ரீநிவாசன் 


“வாழ்க்கை என்பது 10% நமக்கு என்ன நடக்கிறது என்பதாக இருந்தாலும் 90% நாம் அதை எவ்வாறு எதிர் கொள்கிறோம் என்பதில் இருக்கிறது” என்கிறது ஒரு முதுபெரும் பழமொழி. எவ்வளவு அழகாக நம் வாழ்க்கை தத்துவத்தை படம் பிடிக்கிறது இந்த பொன்மொழி.

நாம் பூமியில் ஜனித்த நிமிடம் முதல் நாம் நம் தாய் வழி, தந்தை வழி, சகோதரர்கள் வழி என்று பல வழிகளை பின் பற்றி நடக்க முற்படுகின்றோம். நம்மை சுற்றியுள்ள ஒவ்வொருவரும் அவர்களுடைய ஏதாவது ஒரு பண்பை நம்மிடம் ஒட்ட வைத்து நம்மை நாம் என்று கூறும் ஒரு உருவத்தை உருவாக்க ஏதுவாக இருக்கின்றார்கள்.


ஆனால், கடைசியாக நாம் என்ன நினைக்கின்றோமோ நாம் அதுவாகத்தான் அமைவோம். இதை கேட்க சிறிது புதிராக இருந்தாலும், நாம் என்று வாழ வேண்டும் என்று முடிவு எடுக்கின்றோமோ அன்றே வாழ ஆரம்பித்து விட்டோம். ஒவ்வொரு அடியும் நம் வாழ்க்கை ஏணியில் நாம் வைக்கும் மேல் நோக்கும் தடமாகும்.

என் சுய வாழ்க்கையில், எண்ணிலடங்கா துக்கங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள் மற்றும் போராட்டங்கள்.  ஆனால், நான் இவ்வளவு மைல் கற்களை கடந்து வந்திருக்கின்றேன் என்றால், அதற்கு முக்கிய காரணம் நானேதான். என் விடாப்பிடியான வைராக்கியமும் முயற்சியும்தான் என்று கூறுவதில் கர்வம் கொள்கின்றேன்.

இங்கே, நான் டாக்டர் மேரி வெர்கீஸ் என்பவரிம் வாழ்க்கையைப் பற்றி கூற விரும்புகின்றேன். அவருடைய மீளா கனவே ஒரு டாக்டராகி மற்றவர்களுக்கு சேவை செய்வதேயாகும். ஆனால், நண்பர்களே, விதி வலியது.

அந்த துரதிஷ்ட வசமான நாளில் அவர் தன் நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்காக ஒரு பேருந்தியில் ஏற, அது அசம்பாவிதமாக ஒரு கிடுகிடு பள்ளத்தில் உருண்டு விழுந்தது. அனைத்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தெரிந்த உண்மை என்னவென்றால், மேரி வெர்கீஸ் அவரது இடுப்புக்கு கீழே செயலிழந்து விட்டார் என்பதுதான்.  ஆனால் டாக்டர் மேரி வெர்கீஸ் ஒரு தன்னம்பிக்கை நிறைந்தவர்.  அழுது புரளாமல், நிறைய அறுவை சிகிச்சைககளுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டு, ஒரு சக்கர நாற்காலியின் துணையுடன்
எண்ணிலடங்கா அறுவை சிகிச்சைகள் செய்தார். தொழு நோயாளிகளின்
கைகளிலும், மூக்குகளிலும், புருவங்களிளும் எண்ணற்ற அறுவை சிகிச்சைகள் செய்து, தன் வாழ்க்கையையே அவர்களுக்கு அற்பணித்து ஓர் சரித்திரம் படைத்தார்.

தன்னிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகள் தன்னம்பிக்கையுடனும் சுயமரியாதையுடனும் இந்த சமூகத்திற்கு சேவை செய்வதைப் பார்க்கும்போது, அவர் வெற்றிக் களிப்பில் திளைத்தார்.

டாக்டர் ஐடா ஸ்கடர் என்பவர் 1918லேயே தனிப் பெண்ணாக நின்று வேலூர் மருத்துவமனையை துவங்கி நடத்தியவர்.  அவருக்கு அடுத்துசரித்திரத்தில் இடம் பிடிப்பவர் டாக்டர் மேரி வெர்கீஸ்தான்.

வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் அல்ல.  அது ஒரு ரசனை மிக்க நடனம் ஆகும். அந்த நடனத்திற்கு உங்கள் நன்னடத்தையால் நீங்கள் மெருகூட்ட மெருகூட்ட, வாழ்க்கை தன் அழகையும் ஸ்வாரஸ்யத்தையும் உங்களுக்குத் திறந்து காட்டும்.  ஏனெனில், வாழ்க்கை என்பது ஒர் சிறந்த விலை மதிப்பற்ற திறந்த புத்தகமாகும்.
நாம்தான் வாழ்க்கையை எப்படி அணுகுவது என்பதை முடிவு செய்ய வேண்டும்.  நாம் வாழ்க்கையை “வாழ்ந்து பார்க்கலாம்” அல்லது “செத்து மடியலாம்”. நம்முடைய எல்லா திட்டங்களும் நிறைவேறுவதில்லை.

அதை பற்றிய கவலையை விடுங்கள். ஏனெனில், வாழ்க்கை நமக்கு வேறுஜோலி வைத்திருக்கின்றது.

இப்பொழுது, திரும்பிப் பார்க்கும்போது, என்னுடைய பல கடந்த கால துக்கங்களும் துயரங்களும் என்னை ஒரு உரமேறிய தன்னம்பிக்கை கொண்ட மனுஷியாக உருவாக்கியிருக்கிறது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. ஆகவே, நண்பர்களே, உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் உங்கள் பிற்காலத்து வாழ்க்கைக்கு ஒரு
உட்கருத்தோடுதான் நிகழ்கின்றது.  


ஆகவே, வீழ்ச்சிகளையும் ஏமாற்றங்களையும் பொருட்படுத்தாதீர்கள்.  அவை யாவும் உங்களை மேலும் மெருகேற்றவும், மேலும் நிதானிக்க வைக்கவும், மேலும் முழுமையடையவும்தான் என்பதை நன்கு புறிந்து கொள்ளுங்கள்.உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டன.  அவைகளின் தாக்கமும்,  ஆழமும் சிறு மனிதர்களான நமக்கு புரிபட வாய்ப்பில்லை.

அது அப்படி இருக்க, நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு காட்சியும் நமக்கு மேல் இருக்கும் ஒரு பெருங்கையினால் நடத்தப் படுகின்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  மற்றும், நாம் யாவரும் அந்த பெருங்கை ஆட்டுவிக்கும் வெறும் பொம்மைகள் என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, நண்பர்களே, எல்லா சங்கிலிகளையும் உடைத்து வெளியே வாருங்கள்.  நடப்பவை அனைத்திற்கும் ஒரு உறுதியான காரணம் உண்டு.

அந்த காரணம் உங்கள் சந்தோஷத்திற்கும் நல்வாழ்விற்கும் மிக இன்றியமையாதது என்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.

எனவே, என் வாழ்க்கை என் கையில் என்னும் மூட நம்பிக்கையை மறந்து, என்னதான் நடக்கிறது என்பதை ஒரு வேடிக்கையாக கவனிக்க முற்படுங்கள்.  அப்போது தெரியும். நம் வாழ்க்கை எப்படி ஏற்கனவே வரையறுக்கப்பட்ட ஒரு நேர் கோடான பாதையில் தங்கு தடையின்றி மிக்க மகிழ்ச்சியுடனும் ஆர்பாட்டமின்றியும் செல்கின்றது என்பது.  இவை யாவையும் நடப்பது நம் உதவியற்ற உபயோகமில்லாத திட்டமிடுதலுக்கு நடுவே என்பதுதான் மகுடத்தின் மேல் பதித்த கல்லாகும்.
என் ஆழ் நம்பிக்கை என்னவென்றால், நம் வாழ்க்கை முன்னேறுவது நம்மைத் தாண்டி இயங்கும் ஒரு மிக பெரிய சக்தியினால். கால் நீட்டி அசைக்க முடியாத ஒரு நம்பிக்கையுடன் உட்கார்ந்து பாருங்கள்.  உங்கள் கண்ணெதிரே பரவும் வாழ்க்கையின் சுவையை ரசியுங்கள், அனுபவியுங்கள், பாதுகாத்துக் கொள்ளுங்கள்,

ஏனெனில், நம் யாவருக்கும் ஒரே ஆரம்பம், ஒரே வாழ்க்கை, ஒரே முடிவுதான்.  இந்த மூன்றையுமே நாம் நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவருக்கும் சிறப்பாகவும், இனிப்பாகவும், சுவையாகவும் வரையக் கற்று கொள்வதே நாம் இந்த உலகில் ஜனித்ததின் அர்த்தம் என்று நம்புகின்றேன்.


41 கருத்துகள்:

 1. அனைவருக்கும் காலை வணக்கம்.

  இன்றைய நல்ல செய்திகள் அருமை. குண்டு துளைக்காத ஹெல்மெட், மேம்படுத்தப்பட்ட மாஸ்க் என்னைக் கவர்ந்தன.

  பதிலளிநீக்கு
 2. ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
  ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா

  பாடலை நினைவுபடுத்தியது ரமா ஶ்ரீநிவாசன் அவர்களது கட்டுரை.

  இரண்டாம் பகுதி முதலிலும் முதற்பகுதி இரண்டாவதாகவும் வந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

  வாழ்க்கை என்பது பெரும் கை நம்மை ஆட்டி வைப்பது. அதிலும் நம் முனைப்பு ஆட்டிடியூடால் நல் வாழ்க்கை வாழ முடியும். இப்படி இவர்கள் வாழ்ந்து பெருமை பெற்றார்கள் என்று இருந்திருக்கலாம்.

  எழுத்து நடை நன்றாக இருந்தது. மொழி பெயர்ப்பு (அப்படி மொழிபெயர்த்திருந்தால்) சரியாக இருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ...    மெல்லத் திறந்ததது கதவு என்று ஒரு படம் வந்ததே, நினைவிருக்கிறதா?  அதை முதல்பாகம் இரண்டாம் பாகம் மாற்றித் திரையிட்டார்கள் என்று நினைவு!  அது நினைவுக்கு வந்தது. 

   இது அவரே தமிழில் அனுப்பியதுதான்.

   நீக்கு
  2. சார், நன்றாக தமிழில் எழுத கற்று கொண்டு விட்டேன். உங்கள் ஆலோசனையை ஏற்று மறு முறை செயல் படுத்துகின்றேன். மிக்க நன்றி.

   நீக்கு
  3. ஒரு சில எழுத்துப் பிழைகளைத் தவிர்த்தால் சிறப்பாக இருக்கும். உதாரணமாக "புறிந்து கொண்டு" என்பது "புரிந்து கொண்டு" என வர வேண்டும். இப்படிச் சின்னச் சின்ன எழுத்துப் பிழைகள்.

   நீக்கு
 3. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்..

  பதிலளிநீக்கு
 4. இன்றைய செய்தித் தொகுப்பின் தகவல்களை மீண்டும் வாசிப்பதில் மக்கள்....

  பதிலளிநீக்கு
 5. செய்திகள் அனைத்தும் அருமை...

  வாழ்க்கை கட்டுரை : வாழ்ந்து பார்க்க வேண்டும் எனும் பாடல் முழுவதும் ஞாபகம் வந்தது...

  பதிலளிநீக்கு
 6. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

  இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.

  நாலு செய்தியும் நல்ல செய்தியாக அமைந்துள்ளது. உபயோகமான கண்டு பிடிப்புகளுக்கு பாராட்டுடன் வாழ்த்துக்கள். தாயின் நினைவாக நல்லதொரு செயல் செய்பவருக்கும் பாராட்டுக்கள்.

  வாழ்க்கை பாடம் கட்டுரை அருமை. அழகாக, சுவையாக எழுதிய சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...   காலை வணக்கம்.  பாராட்டுகளுக்கும், இனிய பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

   நீக்கு
  2. //வாழ்க்கை பாடம் கட்டுரை அருமை. அழகாக, சுவையாக எழுதிய சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.// இவை யாவுமே சுய அனுபவங்கள் என்பதினாலேயே அத்தனை அழகு, அத்தனை சுவை கமலா அவர்களே. நன்றி.

   நீக்கு
 7. அனைத்து தொகுப்பும் அருமை. வாசிப்புக்கு நல்ல விருந்து. மனதார உண்டேன் - ரசித்தேன்.

  நமது வலைத்தளம் : சிகரம்
  இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

  https://newsigaram.blogspot.com/

  பதிலளிநீக்கு
 8. நான் இந்த வலைத்தளத்தை இதுவரை பார்த்ததில்லை. அவசியம் பார்க்கிறேன். நிறைய கற்று கொள்ள வேண்டி இருக்கின்றது.

  பதிலளிநீக்கு
 9. இளம் விஞ்ஞானி பாலாஜிக்கு வாழ்த்துகள். குண்டு துளைக்காத ஹெல்மெட்டும். நல்ல உபயோகமான கண்டுபிடிப்பு. தாயின் நினைவில் குளத்தை தூர்வார முன் வந்திருக்கும் கருணாகரனின் செயல் ஒரு நல்ல முன்னுதாரணம். கொரோனா வைரஸ் பாதுகாப்புக்கான மாஸ்க் கண்டுபித்திருப்பவருக்கும் பாராட்டுக்கள். 

  பதிலளிநீக்கு
 10. இன்றைய பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் சிறப்பு.

  ரமா ஸ்ரீனிவாசன் அவர்கள் மிகச் சிறப்பாக எழுதி இருக்கிறார். தன்னம்பிக்கை கொண்டு வாழ்க்கையில் வரும் எல்லாப் பிரச்சனைகளையும் எதிர்கொள்வோம். சிறப்பான கட்டுரை தந்த அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  தொடரட்டும் பாசிட்டிவ் செய்திகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட் நாகராஜ் சார், என்னுடைய சிறப்பம்சமே என் தன்னம்பிக்கைதான் என்று கூறிக்கொள்வதில் நான் பெருமை அடைகின்றேன். இல்லத்திலும் சரி, வாழ்க்கையிலும் சரி மிகப் பெரிய போரட்டங்களை எதிர்கொண்டிருக்கின்றேன். ஆயினும், அசரவில்லை. அதற்கு முதல் காரணம் என் அம்மா என்னை வளர்த்த விதம். அவருடைய கஷ்டங்களையும் வருத்தங்களையும் பார்த்து வளர்ந்தவள் நான். தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். உலகத்தையே வில்லாய் வளைக்களாம். நன்றி.

   நீக்கு
 11. வாழ்க்கை நம் எண்ணம் போல் அமைவது இல்லை. இருப்பினும் நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில்...

  பதிலளிநீக்கு
 12. அருமையான செய்திகளைப் படிக்கப் படிக்க ஆனந்தம்.
  அதுவும் நாசாவை மறுத்த இளம் விஞ்ஞானி கோபால் ஜி க்குப் பாராட்டுகள்.
  உற்சாகத்தைக் கொடுக்கும் வாழ்வு அவரதாகட்டும்.

  அம்மாவின் நினைவைப் போற்றக் கருணாகரன் மேற்கொண்டுள்ள பணி
  மகத்தானது.
  வளம் பெறப் போவது அந்த வட்டாரம் முழுவதும் என்னும் போது,
  அவர் பணி இடையூறில்லாமல் வெற்றி பெற பிரார்த்தனைகள்.

  மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு அந்த மாஸ்க். அதற்கு அப்ரூவலும்
  கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி கொடுக்கிறது.

  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 13. அன்பு ரமாவின்,
  பாசிட்டிவ் எண்ணங்கள் அருமை.நன்றாக வழி நடத்தும் .
  பில்லியண்ட் நடை. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. வல்லி மாமி, உங்கள் பாராட்டே தலையில் வைத்த கிரீடமாகும். பிரில்லியண்ட் நடை என்னும் வாழ்த்து இன்னும் ஒரு படி மேல். ஏனெனில் அகத்தியர் வாயால் ப்ரம்ம ரிஷி பாராட்டு இதுவாகும். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 15. எனக்கு ஏனோ ஒரு நினைப்பு வந்தது அதுதான் சொல்வது எளிது அதன்படி நடப்பது கடினம் அனுபவங்களை கடந்து வந்தால் பின்னோக்கிப்பார்க்கும் போது மலைப்பாய் தெரியும்

  பதிலளிநீக்கு
 16. வஷிஷ்டர் வாயால் ப்ர்ம்ம ரிஷி பட்டம் என்பதை தவறாக கூறி விட்டேன். மன்னிக்கவும் அனைவரும்.

  பதிலளிநீக்கு
 17. பொதுக்குளம் தூர் வாரப்படும் செய்தி புதுசு. மற்றவை ஏற்கெனவே அறிந்தவை. திருமதி ரமா ஸ்ரீநிவாசனின் சுய ஆய்வுக் கட்டுரை (?) சொந்தமாகவே சொந்த அனுபவங்களின் அடிப்படையிலேயே எழுதப் பட்டுள்ளது என நினைக்கிறேன். எண்ணங்களைக் கிரமமாகத் தொடுக்க வந்துவிட்டால் எழுத்து கைகட்டி மண்டி போட்டுச் சேவை செய்யும். அந்த நிலைக்கு இவர் வர வெகு நாட்கள் இல்லை. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 18. இளைஞர் கோபால்ஜியின் மன உறுதிக்கும் அவரின் திறமைக்கும் ஒரு சல்யூட்!
  மேஜர் அனுப் மிஸ்ராவிற்கும் ஒரு சல்யூட்!
  //நம் யாவருக்கும் ஒரே ஆரம்பம், ஒரே வாழ்க்கை, ஒரே முடிவுதான். இந்த மூன்றையுமே நாம் நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவருக்கும் சிறப்பாகவும், இனிப்பாகவும், சுவையாகவும் வரையக் கற்று கொள்வதே நாம் இந்த உலகில் ஜனித்ததின் அர்த்தம்//
  ரமா ஸ்ரீனிவாசனின் அருமையான எழுத்துக்கு தலை வணங்குகிறேன். உண்மையான வாழ்க்கையின் சிறப்பை மிகவும் அழகாக எழுதியிருக்கிறார்! இவரின் தன்னம்பிக்கைக்கும் ஒரு சல்யூட்!

  பதிலளிநீக்கு
 19. கோபால்ஜியின் நாட்டுப்பற்றுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
  மேஜர் அனுப் மிஸ்ராவிற்கு வாழ்த்துக்கள்.
  துார்ந்துள்ள ஊர் பொதுக்குளத்தை, துார் வாரி சீரமைக்க தீர்மானித்த கருண்கரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர் தாய்க்கு வணக்கங்கள்.

  சத்தியமங்கலம் இன்ஜினியர் கண்டுபிடித்த 'மாஸ்க்' குக்கு, அங்கீகாரம் கிடைத்துள்ளது//

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 20. //உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டன. அவைகளின் தாக்கமும், ஆழமும் சிறு மனிதர்களான நமக்கு புரிபட வாய்ப்பில்லை.

  அது அப்படி இருக்க, நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு காட்சியும் நமக்கு மேல் இருக்கும் ஒரு பெருங்கையினால் நடத்தப் படுகின்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மற்றும், நாம் யாவரும் அந்த பெருங்கை ஆட்டுவிக்கும் வெறும் பொம்மைகள் என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.//

  நீங்கள் சொல்வது சரியே.
  ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதரோ கண்ணா பாடல் நினைவுக்கு வருது.
  நூல் அவன் கையில் நாம் ஆடும் பொம்மைகள்.

  நாளும் வாழ்க்கை நமக்கு பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

  அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!