புதன், 26 பிப்ரவரி, 2020

புதன் 200226 : நீங்கள் ஒரு நாளில் அதிகம் வெளிப்படுத்துவது என்ன உணர்வு ?


ஏஞ்சல் :                               

1, விகடன் புத்தக  லோகோவில் ஒரு ஸ்மைலி தாத்தா இருக்காரே அதன்  பின்னணி வரலாறு என்ன ?
 # 1940 சமயம் பத்திரிகை களுக்கு லோகோ-கொள்கை வரி ஃபாஷனாக இருந்தது. எஸ்.எஸ்.வாசன் விகடனை வாங்கி நடத்தத் தொடங்கிய போது இந்த ஸ்மைலி தாத்தா பிறந்தார். கூடவே காந்திக் குல்லா அரை டிராயர் அரைக்கை சட்டையோடு குட்டிக் குரங்கு (அதுதான் விகடன்!) உதயமானது. உபயகுசலோபரி என்ற தலைப்பில் ஆசிரியர் வாசகருடன் தொடர்பு கொள்ளும் பகுதியில் 'விகடன் ஒரு கரணம் போட்டு வரவேற்கிறான்' என்பது போன்ற பிரயோகங்கள் வரும். கல்கிக்கு விநாயகர் கையில் கல்கியுடன் காட்சி தருவார்.

& இந்தக் கேள்வியை நீங்க பெப்ரவரி மாதத்தில் கேட்டதில் ஒரு ஆச்சரியம் உள்ளது. ஆனந்தவிகடன் தொடங்கப்பட்டதும் ஒரு பிப்ரவரி மாதத்தில்தான். 1926. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் வெளியானபின் நின்றுபோனது. பிறகு சுப்ரமணியம் ஸ்ரீனிவாசன் ( எஸ் எஸ் வாசன்) அந்த பத்திரிக்கையின் பெயர் காப்புரிமையை இருநூறு ரூபாய்களுக்கு வாங்கி, பெப்ரவரி  1928 முதல் அந்தப் பத்திரிக்கையை வெளியிடத் துவங்கினார். ஆனால் லோகோ (சிரிக்கும் தாத்தா ) வந்தது எப்போது என்று தெரியவில்லை. 

2, நாமெல்லாம் உணர்வுகளின் கலவை .நீங்கள்  ஒரு நாளில் அதிகம் வெளிப்படுத்துவது என்ன உணர்வு ?

 $  மகிழ்ச்சி. 

 # தூக்கம் என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். உட்கார்ந்தபடி தூங்குவதில் நான் எக்ஸ்பர்ட்.

& நான் ஒரு ரசிகன். காணும் காட்சிகள் எல்லாவற்றையும் ரசிப்பேன். 


3, ஸ்ட்ரெஸ்லருந்து விடுபட நீங்கள் என்ன செய்வீர்கள் ?

 $ என்னுடைய ஆண்ட்ராய்டு ஆப் 1% அல்லது 2 % மட்டுமே என்னுடைய ஸ்ட்ரெஸ் லெவல் என்கிறது. எப்போவாவது 20% காட்டினால், மூச்சுப்பயிற்சி செய்வதுண்டு.

# கர்நாடக  குரலிசை கேட்பேன். 

& தியானம். ஆனால் பாருங்க, சமீப காலங்களில் stress எதுவும் இல்லை! 

4, ஒப்பீடு செய்வது சரியா தவறா ? சரியென்றால் காரணத்தை கூறவும் ? தவறென்றாலும் காரணத்தை கூறவும் ?

$ ஒப்பீடு செய்வது தவறென்றால் பரீட்சைகள் இராதே.

 # ஒப்பீடு செய்யாமல் விரதம் காக்க இயலாது. அது சரியோ தவறோ அல்ல (தும்மல் மாதிரி). அதன் வெளிப்பாடு எப்படியானது, அது அடுத்தவரை எந்த வகையில் பாதிக்கிறது என்பதே கவனத்துக்குரியது.

& ஒப்பீடு என்றால் comparison என்று நினைக்கிறேன். மனிதர்களுக்குள் ஒப்பீடு செய்தல் தவறு. ஒருவரைப்பற்றி முழுமையாக அறியாமல் செய்யப்படும் ஒப்பீடுகள் சரியானதாக அமையாது. பொருட்களுக்குள் ஒப்பீடு செய்தால்தான், நமக்கு வேண்டிய தரத்தில், வேண்டிய பொருளைத் தேர்ந்தெடுக்கலாம். Cost, Quality, Worthiness comparison. 

5, ஒருவர் எல்லாவற்றிலும் வெற்றி பெற என்னென்ன குணங்கள் பண்புகள் வேண்டும் ?

 $ முதலில் எல்லாவற்றுக்கும் ஆசைப்படுவதை நிறுத்த வேண்டும். சத் குரு ஜக்கி வாசுதேவ் மன்னிப்பாராக.

 # ஆர்வம், விடாமுயற்சி. அத்துடன் அதிர்ஷ்டம் என்று சொல்லலாம் எனினும் எல்லாவற்றிலும் வெற்றி என்பது அசாத்தியம்தான்.

& அவரவர் தகுதி, திறமைக்கேற்ப குறிக்கோள் தேர்ந்தெடுக்கத் தெரிந்தால் போதும் என்று நினைக்கிறேன். அதன்பின் அந்தக் குறிக்கோளை அடைய வேண்டிய குணங்கள் உழைப்பும், விடாமுயற்சியும்தான். 

6, எனக்கு செடியில் இருந்து மலர்களை பறிப்பது பிடிக்காத ஒன்று .இப்படி உங்களுக்கு அறவே பிடிக்காத ஒன்று என்ன ? ஏன் ?

 $ செடியில் விட்டுவைத்தல் எனக்கும் பிடிக்கும்.  ஏனையோருக்கும் மகிழ்ச்சி கிட்டவேண்டும்.

.# யாரும் யாரோடும் சச்சரவு செய்வது. ஏன் என்று விளக்கத் தேவையில்லை !


7, உங்களுக்கு  எதிலாவது சந்தேகம் வந்தா யாரை முதலில் கேட்பீர்கள் ?

$ என்னைத்தான்.

# செல்ஃபோனை என்றாகிவிட்டது !

& கூகிள் ஆண்டவரைத்தான். 


8, மனுஷங்க பறவைகளுக்கும் அணில்களுக்கும் உணவிடுவதன் காரணம் என்ன ? அன்பா பாசமா கருணையா இல்லை குற்ற உணர்வா ?

 $ பிறர் சந்தோஷம், பிராணிகள், மனிதர், மரங்கள் செடி கொடிகள் என்றில்லாமல் நம்மிடமும் வந்து ஒட்டிக் கொள்கிறது.

# அன்பு-கடமை உணர்வு. நிச்சயமாக குற்ற உணர்வு அல்ல.

& போற வழிக்குப் புண்ணியம் சேர்த்துக்கொள்ளத்தான்! 

9, சமீபத்தில் பூரண மனத்திருப்தி தந்த விஷயம் எது ?

# கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இருக்க மேற்கொள்ளப் படும் சிறந்த முயற்சிகள்.

& Blue tooth Transmitter device ஒன்று வாங்கினேன். அது நன்றாக வேலை செய்கிறது என்று தெரிந்தவுடான், பூரண மனத்திருப்தி ஏற்பட்டது. 

10, செடி ,கொடி ,மலர்கள் ,காக்கை குருவிகளிடம் பேசியிருக்கிறீர்களா ? அப்படி பேசும்போது அவை உங்களுக்கு பதில் தந்திருக்கா ? எதுக்கு கேட்கிறேன்னா ஒரு  தாத்தாவுக்கு தோட்டம் செடி ஆசையாம் வேலை விஷயமா 3/4 நாட்கள் வெளியே சென்று திரும்பி வந்ததும்  தோட்டத்துக்கு சென்று கிரேஸ் நீர் ஊற்றினாளா என்று கேட்பாராம் அவை இலையை அசைக்குமாம் .

$ பேசுவதுண்டு..பதில் எதிர்பார்ப்பதில்லை. மேஜையில் இருக்கும் உப காரணங்களுடன் கூட பேசுவேன் சுற்றி இருப்பவர் வினோதமாகப் பார்த்தாலும்.

 # இல்லை. கொடி செடிகள் நம்மோடு பேசுவதாக எண்ணிக் கொள்வது ஒரு இனிய பிரமை. அல்லது அதீதக் கற்பனை. பிராணிகள் தம் சில உணர்வுகளை தமது செயல்வாயிலாக வெளிப்படுத்தும் திறன் கொண்டவை என்றாலும் அணில் கட்டெறும்பெல்லாம் அந்த வகையில் வாரா.

& பல வருடங்களுக்கு முன்பு வீட்டில் திருநீற்றுப் பச்சிலை செடி (Ocimum basilicum ) வளர்த்திருந்தேன். அதிகாலையில், அந்த இலைகளில் ஒன்றிரண்டைப் பறித்து, வாசனைக்காக சட்டைப்பையில் போட்டுக்கொள்வதுண்டு. ஒருநாள், இருள் விலகாத காலை நேரத்தில், இலையைப் பறிக்க, கையை அருகே கொண்டு சென்றபோது, நான் பறிக்க நினைத்த  இலைகள் மட்டும், அதிர்ந்து ஆடியதைப் பார்த்தேன். கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டால், இலைகளில் ஆட்டம் இல்லை. கையை அருகே கொண்டு சென்றால், ஆட்டம். டார்ச் லைட் அடித்துப் பார்த்தபோதுதான் உண்மை தெரிந்தது. ஒரு சிலந்தி இலைகளுக்கிடையே நூல்வேலி அமைத்திருந்தது. என் கை விரல்கள் அந்த மெல்லிய நூல்களில் பட்டபோதெல்லாம், நூல் வேலியில் இணைக்கப்பட்ட இலைகள் ஆடி, அச்சுறுத்தின! (என்னைத் திட்டாதீங்க - நான் பறித்தது மலர்களை அல்ல. இலைகளை மட்டுமே. ) 

11. சின்ன சின்ன ஆசைகளில் ஒன்றை சொல்லுங்க ?

# நாள்தோறும் அன்றலர்ந்த மலர்க் கூட்டம் காணக்கிடைக்க வேண்டும்.

& தோசை வார்க்கும்போது ஒரு நாளாவது, வட்ட வடிவமாக மெல்லிய, முறுகல் தோசையாக வார்க்கவேண்டும். 


(முதல் கேள்வியில் உள்ள ஆனந்தவிகடன் தாத்தா முகம் போல தோசை!)
     

=============================================

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களை சரியாகப் புரிந்துகொண்டவர்கள் நெருங்கிய சில சொந்த பந்தங்கள் மட்டும்தான். மற்றவர்களுக்கு இவர்கள் எப்பொழுதுமே ஒரு புரியாத புதிர். 


இவர்களின் பேச்சை, செயலை ரசிக்க ஒரு ரசிகர் கூட்டம் எப்போதுமே இருக்கும். 


ஒரு செயலை செய்யவேண்டும் என்று இவர்கள் நினைத்துவிட்டார்கள் என்றால், அதை எப்பாடு பட்டேனும் செய்துமுடித்துவிடுவார்கள். 


இவர்களில் சிலர்  வாழ்ந்தால் மகாராஜா போல வாழ்வார்கள். வேறு சில எட்டாம் எண் மனிதர்கள் வாய்ப்பு / அதிர்ஷ்டம் இல்லை என்றால், ஏழ்மையின் விளிம்பில் வாழ்வார்கள். நடுத்தர வாழ்க்கையே பெரும்பாலும் இவர்களுக்கு அமையாது. 


இவர்களின் வாழ்க்கையில், எட்டு மற்றும்  நான்கு  எண்கள்  பின்னிப்பிணைந்து விளையாடும். 


February 26 ல் பிறந்த பிரபலங்கள் என்று தேடினால் கிடைக்கும் பெயர்கள் எதுவும் நமக்குத் தெரிந்தவைகளாக இல்லை. 


ஆனால் எட்டாம் எண்காரர்கள் என்று தேடினால், ஜார்ஜ் பெர்னாட்ஷா, தடுப்பூசி கண்டுபிடித்த ஜென்னர், உலக பணக்காரர் ராக்ஃபெல்லர், இந்தியாவில் மோடி, எம்ஜியார் ஆகியோர் கிடைக்கிறார்கள். ஒரு வினோத விவரம் : அமெரிக்க ஜனாதிபதியாக இதுவரையிலும் நாற்பத்து நான்கு பேர் பதவி வகித்திருக்கிறார்கள். அதில் எட்டாம் எண்காரர் ஒரே ஒருவர்தான். ஹாரி ட்ருமன். அவர் பிறந்த தேதியும் எட்டு. இறந்த தேதியின் கூட்டுத் தொகையும் எட்டு. 


வாசகர்கள் அனுப்பிய விவரம்:


சுஜாதா : 


About a number 8 boy (whose birth number and fate number is 8)  : He is a great listener.  Interested in metaphysics and philosophy.  Great with math. 


பானுமதி வெங்கடேஸ்வரன் : 


எட்டாம் எண்ணில், பதினேழாம் எண் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மற்றவர்களால் செய்ய முடியாத பெரிய விஷயங்களை சாதிப்பார்கள். புரட்சியாளர்கள். பெரியார், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், திரைப்பட இயக்குனர் சங்கர், கிரிக்கெட் வீரர்கள் அணில் கும்ப்ளே, அஸ்வின் ரவிச்சந்திரன் போன்றவர்கள் பதினேழாம் தேதியில் பிறந்தவர்களே. (மோடியும் 17 ஆம் தேதி பிறந்தவர்.)

எட்டாம் எண்காரர்களுக்கு வாழ்க்கை போராட்டமாக இருக்கும் என்று சொல்ல ஆசை. துவாரகையிலிருந்து, "யாருக்குதான் போராட்டமில்லை" என்று ஒருவர் வந்துவிடுவாரே. அதற்காக சொல்லாமல் இருக்க முடியுமா? எட்டாம் எண்காரர்கள் போராளிகள். எமனோடு கூட போராடுவார்கள்.=============================================

மீண்டும் சந்திப்போம். 

=============================================
129 கருத்துகள்:

 1. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கள் விழுமம் துடைத்தவர் நட்பு..

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 2. ஆனந்த விகடனின் குரங்குக் குட்டி நிருபரையும் கண்ணாடித் தாத்தா கொம்பு முளைத்த ஆசிரியரையும் குறிப்பதாகக் கேள்விப் ப்ட்டிருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான். கொம்பு முளைத்த கண்ணாடித்தாத்தா உருவகமாக விகடன் என்று பெயர் வைத்து, ஆசிரியர்(கள்) எழுதி வந்ததுண்டு.

   நீக்கு
 3. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...    வணக்கம், நன்றி, நல்வரவு.

   நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

   நன்றி. நேற்றைய என் பதிவுக்கு தங்களுக்கு நேரம் இருக்கும் போது வந்து படித்து கருத்துரை இட்டால், மிகவும் மகிழ்வடைவேன்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. வாங்க, வணக்கம். வருகிறோம்.

   நீக்கு
  4. உடனே வந்து கருத்துக்கள் தந்ததற்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

   நீக்கு
 4. காலை வணக்கம் அனைவருக்கும்.

  12 மணி நேர பேருந்து பயணத்துக்குப்பின் (டாக்கூர் த்வாரகையிலிருந்து) இப்போதான் த்வாரகையை அடைந்திருக்கிறோம். இன்னும் பஸ்ஸைவிட்டு இறங்கவில்லை)

  இப்படி தேதியை வைத்து நாம ஜோசியம் சொல்வது கடினம். ஒரு தேதியில் குறைந்தது பல கோடிப்பேர் பிறக்கிறார்கள். நமக்குத் தெரிந்த சிலரின் பிறந்த நாளை வைத்து பெரியார், ஜெமினி, தமன்னா போல் வருவார்கள்னு சொல்லமுடியுமா? நமக்குத் தெரிந்தவர் எமனுடன் போராடினார் என்பதற்காக 17 மட்டும் எமனைடன் போராடுவாரகள், மற்றவர்கள் எமன் வந்தவுடன் வீட்டுப் பத்திரத்தை பையில் எடுத்துக்கொண்டு காபி சாப்பிட்டுவிட்டு கிளம்பிவிடுவார்கள் என்று சொல்லலாமா?

  சொல்ல வேண்டிய கீசா மேடம் ஒன்றும் சொல்வதில்லை என்பதால் நான் ச்சின்னப்பையன் சொல்ல வேண்டியிருக்கு  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொதுவான பலன்கள்தான் - சீரோ புத்தகத்திலும் எட்டாம் எண்காரர்களைப் பற்றி, பா வெ மேடம் சொல்லியிருப்பதுபோல்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரபாகரன் உள்பட, பல புரட்சித்தலைவர்கள், எட்டாம் எண்.

   நீக்கு
  2. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

   தங்கள் கருத்துக்களை படித்து ரசித்தேன். ஆனாலும் பிறந்த எண்களில் சொல்லப்படுகிற விஷயங்கள் அனைத்துமே ஒருவருக்கு கிடைக்காது என்றாலும், ஒரு விஷயமாவது, இல்லை அதன் சாயலாக, அதன் சார்பாக ஒரு சில செயல்கள் அவர்களுடனே ஒட்டி உறவாடுகிறது என நான் என் அனுபவத்தில் நினைக்கிறேன். தவறெனின் வருந்துகிறேன்.

   தங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள். துவாரகா கண்ணனுக்கு என் நமஸ்காரங்கள். எங்களுக்கும் துவாரகை கண்ணனிடத்தில் வேண்டிக் கொள்ளுங்கள். மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. // பிறந்த எண்களில் சொல்லப்படுகிற விஷயங்கள் அனைத்துமே ஒருவருக்கு கிடைக்காது என்றாலும், ஒரு விஷயமாவது, இல்லை அதன் சாயலாக, அதன் சார்பாக ஒரு சில செயல்கள் அவர்களுடனே ஒட்டி உறவாடுகிறது// ஆம், அதேதான் என்னுடைய கருத்தும்!

   நீக்கு
  4. நான் இந்த வாரம் எட்டாம் எண்ணுக்கு மாறிக் கொள்ளலாமா என்று பார்க்கிறேன்! ஹிஹிஹி...   

   நீக்கு
  5. பஸ்ஸால இறங்க முன்னமே எதுக்குக் கொழுத்திப் போடுறார் நெ தமிழன் ஜன்னலுக்குள்ளால:) ... நம்பரின் நிறைய விஷயம் இருக்குது தெரியுமோ... உண்மை இருக்குது..

   நீக்கு
  6. //நான் ச்சின்னப்பையன் சொல்ல வேண்டியிருக்கு// இந்த தவறுக்கு 10 தோப்புக்கரணம் போடச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். போனால் போகிறது அறுபதை நெருங்கி கொண்டிருக்கும் சின்னபையன்தானே அறுபது தோப்புக்கரணம் போதும். 

   நீக்கு
  7. தமன்னா எட்டாம் எண்ணா? பார்த்தால் அப்படித் தெரியவில்லை. அனுஷ்கா எட்டாம் எண் என்று சொல்லுங்கள் ஒப்புக் கொள்கிறோம். 

   நீக்கு
  8. நெல்லத்தமிழன் சார், என் கருத்தும் உங்கள் கருத்தும் ஒத்துப் போகின்றது. மேலோட்டமான கருத்துக்கள் ஜோசியத்தை வைத்து சொன்னாலும், எல்லாவற்றிற்கும் ஒரு விதிவிலக்கு இருக்கத்தான் செய்யும். நாம் அவர்களிடம் நல்லதை மட்டும் பார்த்துவிட்டு கெட்டதை விட்டு விடுவோம். இந்த கண்ணோட்டத்தில் யாவரும் நல்லவரே.

   நீக்கு
  9. // யாவரும் நல்லவரே.// ஆம். உண்மை.

   நீக்கு
  10. அனுஷ்கா, கமல் எல்லோரும் ஏழாம் எண்.

   நீக்கு
  11. //த்வாரகையை அடைந்திருக்கிறோம். //
   தரிசனம் சமயம் அனைவருக்கும் பிரார்த்தனை செய்து வாருங்கள்.

   நீக்கு
  12. எட்டாம் எண்காரர்கள் போராட்டக்காரர்கள் என்பது மட்டுமே பொருந்துகிறது.

   நீக்கு
  13. நெல்லைத்தமிழரே, உங்கள் பயணத்தில் "சோம்நாத்" உண்டா? அப்புறமா விராவலில் கிருஷ்ணர் அம்பு பட்டு மறைந்த இடம், பலராமர் மறைந்த குகை எல்லாமும் போக மறக்காதீங்க! ஒரே கஷ்டம் என்னன்னா விராவலில் இரால் ஏற்றுமதி செய்வதால் துர்நாற்றம் குடலைப் பிடுங்கும். காலை ஆகாரத்துக்கு பஜியா மேலே காரட், வெங்காயம் தூவித் தருவாங்க. சுடச் சுட ஜிலேபியுடன் சாப்பிட்டுவிட்டு ஒரு குஜராத் சிறப்புத் தேநீர் குடிச்சால் சொர்க்கம் பக்கத்திலேயே!

   நீக்கு
 5. இலை அசைவதற்கான பதில் திடுக்கிட வைத்து முடிவில் புன்னகை வரவழைத்தது. ரசித்த பதில். பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 6. மனிதர்களுக்குள் ஒப்பீடு கூடாது, வாங்கும் பொருட்களில் இருக்கலாம் - நல்ல பதில்

  பதிலளிநீக்கு
 7. அறவே பிடிக்காத்து

  கீதா ரங்கன் - பொது இடத்தில், பஸ்ஸில் குப்பையைப் போடுவது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ! எதிர்காலத்தில் இத்தகைய ஆரோக்கியக் கேடான சமாச்சாரங்களை சட்டம் போட்டுத் தடுக்கவேண்டும்.

   நீக்கு
  2. உங்களுக்கு அறவே பிடிக்காதது இருக்கட்டும்.
   கீதா ரெங்கன் ஏன் பொது இடத்தில், பஸ்ஸில் குப்பையைப் போடுகிறார்? நல்லவர், நாசூக்கானவர் என்றல்லவா நினைத்தோம்..!

   நீக்கு
  3. ஹா ஹா ! நானும் நினைத்தேன் - நீங்க சொல்லிட்டீங்க!

   நீக்கு
  4. ஒவ்வொருத்தரும் என்ன சொல்வாங்கன்னு எழுதணும்னு ஆரம்பித்தேன். அதற்குள் பஸ்ஸைவிட்டு இறங்க வேண்டிய நிலைமை. கொஞ்சம் அசந்தால் திரி கொளுத்த இத்தனை ஆட்கள் இருக்காங்களே

   ஶ்ரீராம் - சும்மா பொழுது போக மற்றும் நட்பை வளர்க்க இணையத்தில் உலாவினால் அங்கு சர்ச்சை சண்டை ஏற்படுத்துபவர்கள் பிடிக்காது (அப்படீன்னு எழுத மாட்டார் மனதில் நினைப்பார்னு நினைக்கறேன் ஹா ஹா)

   நீக்கு
  5. ஓ... ஒவ்வொருவரும் என்ன சொல்வார்கள் என்றா?!!

   ஏஞ்சல் சொல்வார் : "எறும்புகளை மிதிப்பவர்களையும், கொசுக்களை அடிப்பவர்களையும் பிடிக்கவே பிடிக்காது"!!!!

   நீக்கு
  6. எங்கள் ப்ளாகின் ஒரே ஏஞ்சல் !

   நீக்கு
  7. அறவே பிடிக்காதது - பொது இடத்தில் எச்சை துப்புவது. சமீப காலத்தில் (ஜனவரி 24-27) டெல்லிக்கு சென்றிருந்தேன். எங்கு பார்த்தாலும் மக்கள் இதை செய்கின்றார்கள். நான் முடிந்தவரை ஒரு 20 பேரிடம் நிறுத்தி எனக்கு தெரிந்த இந்தியில் இதை செய்யாதீர்கள் என்ரு ஒரு வகுப்பே எடுத்து வந்தேன். இதில் என் கணவரும் எனக்கு உறுதுணையாய் நின்றதுதான் எனக்கு பெருமையை தருகின்றது.

   நீக்கு
  8. பாராட்டுகள். பொது இடங்களில் எச்சில் துப்புவது எனக்கும் அறவே பிடிக்காத செயல்.

   நீக்கு
  9. தாங்க்ஸ் :) ஏகாந்தன் சார் .நன் மூன்று வருஷமா தோட்டத்தில் கீரை செடி போடறதில்ல .எங்க ஏரியாவில் நத்தை ஊர்வலம் இருக்கும் அதுங்களை அப்புறப்படுத்தவும் இஷ்டமில்லை அதனால் இம்முறை ஹாங்கிங் தோட்டம் ஐடியா இருக்கு :)

   நீக்கு
  10. அணில்களுக்கும் அன்னமிடுவார் ஏஞ்சல் என்று சொல்ல வந்தேன்.   அவரே .சொல்லி இருக்கிறார்!  வீட்டில் இருந்த எலிப்பிள்ளைகளை எடுத்து வெளியே விட்டதற்கே கண்டனங்களைச் சந்தித்தேன் நான் அப்போது!

   நீக்கு
  11. அதுங்களுக்கு கண்ணு திறக்குமுன்னே விட்டது தப்புதானே .மான்ஸ்டர் படத்தில் sj சூர்யா அம்மாவையும் பிள்ளைகளையும் சேர்த்து விடுவார் அப்படி செஞ்சிருந்தா :) நல்லா இருக்கும் 

   நீக்கு
 8. அனைவருக்கும் இனிய மதிய வணக்கம்.
  கேள்விகளும் பதில்களும்
  சுவை. சிலந்திவலை பின்னின செடி ஹாஹா.
  ஆனால் செடிகள் உணர்ச்சி உள்ளவையே.

  எட்டாம் நம்பர் பற்றிய செய்திகள் உண்மையே.
  என் மாமியார் 26 பிறந்து, எட்டாம் தேதி மணந்து
  13ஆம் தேதி மறைந்தவர்.
  பேத்தி 17 ஆம் தேதி. நல்ல சுகத்துடன் இருக்க பிரார்த்தனைகள்.

  நாலும் எட்டும் சேர்ந்து பிரிந்து வரும்.
  என் கணவரின் கூட்டு எண் 4. நாங்கள் மணந்தது ஒரு 4 ஆம் தேதி. அவர் மறைந்தது
  13 நவம்பர்.
  எட்டாம் நம்பரில் பிறந்தவர்களுக்கு சம்யோசித புத்தீருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
  அதிஷ்டம், கசப்பு அனுபவம் கலந்து இருக்கும் வாழ்க்கை.

  பதிலளிநீக்கு
 9. விகடன் லொகோ பார்த்தாலே சிரிப்பு வந்த காலம் உண்டு. பிறகு கல்கி வினாயகர் வந்து விட்டார்.
  @ நெல்லைத்தமிழன், நல்லபடியாகத் தரிசனங்கள்
  கிடைக்க பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 10. என் கேள்வியாக வருவது,
  1, கொரோனா வைரஸ் பற்றியது.

  நம் ஊரில் எந்த அளவில் நடவடிக்கைகளூம் பயங்களும்
  இருப்பதாக நினைக்கிறீர்கள்.?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஆவ்வ்வ் வல்லிம்மா சூப்பர்.... கெள அண்ணன் இதுக்கான பதிலை மைக் பிடிச்சு வீடியோக்கோலாகப் போடோணும் ஜொள்ளிட்டோம்ம்:) ஹா ஹா ஹா

   நீக்கு
  2. ஆ! இதென்ன அவ்வளவு கவர்ச்சியான கேள்வியா! // வீடியோக்கோலாகப் போடோணும் ஜொள்ளிட்டோம்//

   நீக்கு
  3. வல்லி மாமி, இன்று நான் என் ப்ளாகில் கொரோனா வைரஸ் பற்றி ஒரு ஆங்கில கட்டுரை வெளியிட்டிருக்கின்றேன். இது மொத்தமாக கொரோனா வைரஸ் பற்றியது. அனைவரும் படித்து கருத்து கூறுங்கள். நன்றி.

   நீக்கு
 11. ///
  6, எனக்கு செடியில் இருந்து மலர்களை பறிப்பது பிடிக்காத ஒன்று .இப்படி உங்களுக்கு அறவே பிடிக்காத ஒன்று என்ன ? ஏன் ?////

  ஆஆஆவ்வ்வ்வ் நேக்குப் புரிஞ்சுபோச்சூ:).. பூவைத் தொட்டால் அலர்ஜி வந்திடும் என்பதனை எவ்ளோ அழகாகப் பிள்ள சொல்லிட்டா ஹா ஹா ஹா அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ:)... ஹா ஹா ஹா

  தோட்டக்காரர் சொன்னார் பூக்கள் பறிப்பதற்கல்ல
  பூக்கள் சொன்னது, அப்போ நாம் செடியிலேயே கருகிட வேண்டியதுதானா?:)...
  பூக்களுக்கும் கோயிலில் திருமணத்தில் பங்கெடுக்க ஆசை இருக்குது தெரியுமோ?....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பூக்களுக்கும் கோயிலில் திருமணத்தில் பங்கெடுக்க ஆசை இருக்குது தெரியுமோ?....//

   ஹலோ மேடம் பூக்களுக்கு ஆசைன்னு தெரிஞ்சிதான் இப்போல்லாம் வெட்டிங்ஸ் கார்டனில் நடத்தறாங்க :)

   நீக்கு
 12. எனக்கு குழந்தையிலிருந்தே அறவே பிடிக்காத முதல் விசயம்
  1. ஒருவருக்கு நையாண்டி பண்ணிக் காட்டுவது, வாயால கையால இப்படி.
  2. உடல் பலவீனமானவரை, வறுமையில் ஓட்டை உடை போட்டிருப்பவரை, கை கால் முடியாதரைக் கேலி செய்வது
  3. மிருகங்கள் பறவைகளைத் துன்புறுத்துவது... அடித்தல், கல்லெறிதல்...
  4. அடுத்தவர் செய்யும் தவறுகளை, பெரிசாக்கிக் கதைப்பது...
  5.. புறம் பேசுதல், அடுத்தவர் பற்றியே பேசுதல்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி , ஜீவகாருண்ய அதிரா!

   நீக்கு
  2. இனிமே kfc பக்கம் பார்த்தேன் அவ்ளோதான் மியாவ் :)

   நீக்கு
  3. அப்படிப் பிடியுங்க ஒரே பிடியாய் !

   நீக்கு
  4. ////

   Angel26 பிப்ரவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 5:30
   இனிமே kfc பக்கம் பார்த்தேன் அவ்ளோதான் மியாவ் :)////
   அவ்வ்வ்வ்வ்வ்வ் :).... அது வேற இது வேற:)... ஹையோ விடுங்கோ நான் காசிக்குப் போகப்போறேன்ன்:)

   நீக்கு
  5. பிடிக்காதவற்றில் ஒருவர் உருவத்தைக் கேலி செய்வதையும் சொல்லவேண்டும். அதிலும் நிறம், உடல் பருமன் ஆகியவற்றைக் குறித்துக் கேலி செய்து அதை வைத்து நகைச்சுவைக்காட்சிகள் எனத் திரைப்படங்களில் வருவதைப் போன்ற கேவலம் வேறே இல்லை. எனக்குச் சுத்தமாக அப்படிப்பட்ட நகைச்சுவைக்காட்சிகள் பிடிக்கவே பிடிக்காது.

   நீக்கு
  6. நான் கீழே சொல்லினேன்க்கா.body shaming . கேவலமில்லையா சக மனுஷனை உருவம் வைத்து கேலி செய்வது .

   நீக்கு
 13. ஆனந்த விகடன் ஆரம்பித்த காலத்தில் அதன் லோகோ இப்படி இருக்கவில்லை என்றும் சில பரிணாம வளர்ச்சிகளுக்குப் பிறகு இப்போதைய வடிவத்தை அடைந்திருக்கிறது என்றும் படித்த நினைவு இருக்கிறது. ஆனால் முழுமையாக நினைவு இல்லை. 

  பதிலளிநீக்கு
 14. எட்டாம் எண் சனியின் ஆதிக்கத்தில் வருவதால்தான் போராட்டம். ஆனாலும் வெற்றி உண்டு. இவர்களுடைய பலம், பலவீனம் இரண்டுமே பிடிவாதம். பிடிவாதமாக இருப்பதால் மற்றவர்களுக்கு இவர்களை ஹாண்டில் செய்வது கடினமாக இருக்கும். ஆனால் அந்த பிடிவாதத்ததால்தான், தான் நினைப்பதை சாதிப்பார்கள். பெரும்பாலும் நீண்ட ஆயுள் கொண்டவர்கள். 26ம் எண் விபத்துகளோடு சம்பந்தப்பட்டது. வைணவ ஆச்சாரியரான ராமானுஜரின் ஜாதகத்தில் சனி வலுவாக இருந்ததால்தான் அவர் சமய புரட்சியாளராக விளங்கினார் என்று பல வருடங்கள் முன்பு பால ஜோதிடம் புத்தகத்தில் படித்தேன். 
   

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிடிவாதம் எனில் நல்ல விஷயங்களுக்காகத் தான் அந்தப் பிடிவாதம் இருக்கும். சரியானதைச் சரி என்று சொல்லுவதில் தான் பிடிவாதம் இருக்கும்னு நினைக்கிறேன். உண்மையை உண்மை என்று சொன்னால் எத்தனை பேருக்குப் பிடிக்கும்?

   நீக்கு
 15. கேள்விகளும் பதில்களும் அருமை.
  ஆனந்த விகடன் தாத்தா போல் தோசை அருமை.

  பதிலளிநீக்கு
 16. //பிரபாகரன் உள்பட, பல புரட்சித்தலைவர்கள், எட்டாம் எண்.// பிரபாகரனும் எட்டாம் எண்ணாகத்தான் இருப்பாரோ என்று எழுதும் பொழுது தோன்றியது.    

  பதிலளிநீக்கு
 17. ///இந்தக் கேள்வியை நீங்க பெப்ரவரி மாதத்தில் கேட்டதில் ஒரு ஆச்சரியம் உள்ளது. ஆனந்தவிகடன் தொடங்கப்பட்டதும் ஒரு பிப்ரவரி மாதத்தில்தான். 1926. //
  வாவ் :) எதேச்சையா அமைந்த கேள்விதான் அது ..அதோட அதே புன்னகை முகத்துடன் ஒரு தாத்தா எனக்கு தெரியும் வெரி ஹாப்பி முகம் அதனால் ஆரவமா இருந்தது ஆவியின் தாத்தா முகம் பற்றி அறிய 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஆஅ பெப்புரவரி:) யில எவ்ளோ நல்ல விஷயங்கள் நடந்திருக்குது பாருங்கோ அதிராவின் அவதாரம் உட்பட:)

   நீக்கு
  2. அதிரா தான் ஒவ்வொரு வாரத்துக்கும் ஓர் அவதாரம் எடுக்கிறாரே!

   நீக்கு
  3. இது அதிர அவதாரம்:) கெள அண்ணன்:)... நான் அன்றே உங்களோடு கா போட்டிட்டனே:).. மீ இப்போ உங்கள் நிழலோடுதான் பேசுறேனாக்கும்:)..

   நீக்கு
 18. /& தோசை வார்க்கும்போது ஒரு நாளாவது, வட்ட வடிவமாக மெல்லிய, முறுகல் தோசையாக வார்க்கவேண்டும். //

  ஹாஹா :) நான் அழகா ரவுண்டா சுடுவேனே :) இரும்பு கல் யூஸ் பண்ணுங்க .
  ஆனா இந்த தோசையும் அழகா இருக்கு சோட்டா பீம் தோசை கண்ணு வாய் காது முன் நெற்றி குட்டி சுருள் :)

  பதிலளிநீக்கு
 19. / $ செடியில் விட்டுவைத்தல் எனக்கும் பிடிக்கும்.  ஏனையோருக்கும் மகிழ்ச்சி கிட்டவேண்டும்.//

  எனக்குன் அதே :) என் மகள் எனைக்கொண்டே வந்திருக்கா அதில் ஜந்தொஷம் :)அதில் இருந்தா பறவைகளும் பூக்களை பார்க்கும் அவை சிரிக்கும் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எவை சிரிக்கும்? பூக்களா அல்லது பறவைகளா?

   நீக்கு
  2. பூக்கள்தான் :) விசிட்டர்ஸ் வந்தா இன்முகத்துடன் வரவேற்கும் :))
   இந்த கௌதமன் சாரால்  ஒரு சரோஜினி நாயுடு ஒரு சில்வியா பிளாத் ஒரு எமிலி டிக்கின்சன் எமிலி bronte தாமரை எல்லாம் உருவாகப்போறாங்க ஹாஆஅஹா 

   நீக்கு
  3. ஹா ஹா ! சரோஜினி நாயுடு யாரு? சந்திரபாபு நாயுடுவின் பாட்டியா?

   நீக்கு
  4. ஹாஹா :))))))))) இருங்க சபாஷ் நாயுடு கிட்டே கேட்டு சொல்றேன் 

   நீக்கு
  5. நாயுடு, எத்தனை நாயுடுவடா!

   நீக்கு
  6. வெங்கையா நாயுடுவை விட்டுட்டீங்களே....!

   நீக்கு
 20. /ஒரு இனிய பிரமை. அல்லது அதீதக் கற்பனை. பிராணிகள் தம் சில உணர்வுகளை தமது செயல்வாயிலாக வெளிப்படுத்தும் திறன் கொண்டவை என்றாலும் அணில் கட்டெறும்பெல்லாம் அந்த வகையில் வாரா.//
  நான் பேசியிருக்கேன் சுண்டெலியோடு :) அணில் கிட்டயும் பேசுவேன் ..என்ன ராஜா பசிக்குதான்னு கேட்டப்போ சுண்டெலி ரெண்டு ஸ்டேப் முன்னாடி வந்துச்சே அப்போ அதுக்கு தமிழ் புரியுது காது கேக்குது பசிக்குதுன்னு தெரியுதே :)ஸ்ஸ்ஸ் யாரும் என்னை தப்பா நினைச்சாலும் பரவால்லா ஹாஹாஆ 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு. இதை சொன்னால் எங்க வீட்ல இருக்கற பல்லி என்னைப் பார்த்துச் சிரிக்குது!

   நீக்கு
  2. அட பல்லி :) குழந்தைக்கு கொஞ்சம் வெள்ளை சாதம் வைங்க :) 

   நீக்கு
  3. வச்சிட்டு ஒரு போட்டோவும் எடுங்க அழகா போஸ் குடுக்கும் :) 

   நீக்கு
  4. என் திருமதிக்கு பல்லியைக் கண்டாலே பிடிக்காது. அதனால் ......

   நீக்கு
 21. நூல் வேலியில் இணைக்கப்பட்ட இலைகள் ஆடி, அச்சுறுத்தின! (என்னைத் திட்டாதீங்க - நான் பறித்தது மலர்களை அல்ல. இலைகளை மட்டுமே. ) //

  இந்த விடையை தந்தவர் ஸ்ரீராம் :)))))))))))))))))))))))))))
  ஹாஹா திகில் அனுபவம் தான் .சரி சிலந்தி வீடு ஒன்னும் ஆகளையே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இந்த விடையை தந்தவர் ஸ்ரீராம் :))))))))))))))))))))))))))) //

   //ஹாஹா திகில் அனுபவம் தான் .சரி சிலந்தி வீடு ஒண்ணும் ஆகலையே :)//

   அபுரியாக இருப்பதினால் ஆர்வம் அதிகரிக்கிறது!

   நீக்கு
  2. //அபுரியாக இருப்பதினால் ஆர்வம் அதிகரிக்கிறது!

   கடவுள்மீது ஏற்படும் ஆர்வமும் இதே வகைதான்..!

   நீக்கு
 22. /& நான் ஒரு ரசிகன். காணும் காட்சிகள் எல்லாவற்றையும் ரசிப்பேன். //
  எனக்கொரு யோசனை இப்படி ஒரு படத்தை போட்டு ஒவ்வொருவரின் கற்பனை மனதில்  தோன்றுவதை எழுத சொல்லலாம் .பதில்கள் மெயிலுக்கே அனுப்பப்படணும் :) பிறப்பிக்க மொத்தமா வெளியிடலாம் அல்லது மாடரேஷன் வைக்கலாம் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்ம ஏரியா
   (engal6.blogspot.com) பக்கம் வாங்க. அங்கே இந்த வகை பதிவுகள் ஏராளமாக வந்துகொண்டிருக்கின்றன. கொக்கி கதைகள்.

   நீக்கு
 23. //அறவே பிடிக்காத ஒன்று என்ன ? ஏன் ?//

  எனக்கு நிறைய இருக்கு சிலவற்றை சொல்றேன் கண்ட இடத்தில எச்சில் துப்புவது , மரத்தை வெட்டுவது வயதானோரை கிழவன் கிழவி பெரிசு என்று விளிப்பது ,body shaming ,நாம் தான் ஒழுங்கு பிறர் கேவலம் என்ற மனநிலை ,சூயிங்கம், மென்னுட்டே பேசுவது ,கெட்ட வார்த்தை பேசுவது நக்கல் அடிப்பது இப்படி நிறைய சொல்லலாம் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கர்ர்ர்ர்ர்ர்ர் இவ்ளோ கஸ்டப்பட்டு எழுதியிருக்க வாணாம்:) அதிராவை வழிமொழிஞ்சிருக்கலாம் யுவர் ஆனர்ர்ர்)...

   நீக்கு
  2. ஐயகோ - அதிரா எ து, ம வெ ..... எல்லாம் செய்பவரா!

   நீக்கு
  3. ஹாஹாஆ :) அய்யயோ ஹாயையோ :) மேடம்கும் பிடிக்காதாம் அதெல்லாம் 

   நீக்கு
  4. வாழ்த்துகள். கலகலப்புக்குப் பெயர் ஏ அண்ட் அ.
   பல்லிக்கு சாதம் வைக்கணுமா அன்பு ஏஞ்சல், வள்ளலார்
   அவதாரமே!!. நாங்கள் பல்லியைக் கண்டாலே ஓடுவோம்.
   அன்பு அதிரா இருவரும் ஒரே வேவ்லெந்த்.

   நீக்கு
  5. தாங்க்ஸ் வல்லிம்மா :) மெட்ராஸ் வீட்டில் ஒரு பல்லிக்குட்டி சரியா 6 மணிக்கு வயலும் வாழ்வும் டைமுக்கு டிவி மேல் வரும் .அரிசிச்சாதம் சாப்பிட்டு போகும் :) எனக்கு கம்பளிப்பூச்சி மட்டுமே பயம் :) 

   நீக்கு
  6. முல்லைக்குத் தேர்கொடுத்த பாரி கிடக்கட்டும்
   பல்லிக்கு சோறிட்ட செல்லியை..சே.. செல்வியைவிடவா அவன் மேல் ?

   நீக்கு
 24. கேள்வி பதில்கள் வழமை போல ஸ்வாரஸ்யம்.

  முதல் விகடன் பற்றிய தகவல்கள் நன்று.

  விகடன் தாத்தா போல தோசை! :)

  பதிலளிநீக்கு
 25. கேட்க வேண்டும், கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கும் கேள்வி:

  உங்கள் தங்க நகையைக் கொண்டு வாருங்கள்.. இன்றைய தங்க விலைக்குப் பணமாகவே பெற்றுக் கொள்ளுங்கள். என்கிற மாதிரியான விளம்பரங்கள் டி.வி. சேனல்களில் தூள் கிளப்புகின்றன. இன்றைய பண்மில்லா பரிவர்த்தனை காலத்தில் இவ்வளவு தான் கேஷாக பண மாற்று இருக்க வேண்டும் என்று வரையறை ஏதாவது இருக்கிறதா? அப்படியாயிருந்தால் அது எவ்வளவு?..

  பதிலளிநீக்கு
 26. வணக்கம் சகோதரரே

  கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை யென்றால் அதற்கு வந்த கருத்துக்களும் வழக்கம் போல் அருமையோ அருமை. அத்தனையையும் ஒருசேர படித்து ரசித்தேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 27. 1, நாம் நல்லவர் அனைத்திலும் சிறந்தவர் என்ற உணர்வு  உங்களுக்கு தோன்றியதுண்டா ? அது எப்ப உங்களுக்கு ஏற்பட்டது ?எனக்கு தோணினதே இல்லை அதான் கேட்டேன் :) ஒருவேளை யாருக்கும் அவங்களை பற்றி அபிப்பிராயம் இருக்காதோ ??

  2,  சொந்த கருத்தை வெளிப்படையா சொல்ல தயக்கம் வந்ததுண்டா ?
  3,நேசிப்பது அல்லது வெறுப்பது இதில்  எது  சுலபம் மற்றும் எளிதில் உடனடியா வருவது ?
  4, ஒருவர் ஒரு விஷயத்தையே அல்லது நபரையோ  அதிகமா வெறுக்கிறாங்கன்னா அதன் காரணம் என்னவா இருக்கும் ?   கசப்பான அனுபவமா ? 
  5, இதெல்லாம்  தேவையற்ற விஷயங்கள் என்று நீங்கள் கருதுபவை எவை ? 
  6, யாராலாவது ஏமாற்றப்பட்டு அவரை மீண்டும் சந்தித்த அனுபவம் உண்டா ?
  7, இதுவரைக்கும் எத்தனை புத்தகங்களை வாசித்து முடிச்சிருக்கீங்க ?     எந்த புத்தகத்தையாவது இரண்டுமுறைக்கும் மேலே வாசித்ததுண்டா ?
  8, எல்லா ஜீவராசிகளைவிடவும் நமக்கே 6 ஆம் அறிவான பகுத்தறியும் திறன் இருந்தும் வீணாய்ப்போன மனிதன் அதை பெரும்பாலும் பயன்படுத்தாமல் வீணாக்குறானே என்ற சிந்தனை அடிக்கடி எனக்கு தோணுது இப்படி நீங்களும் யோசிச்சதுண்டா ??
  9, சமூகத்தின் தலையாய பொறுப்பு குறிப்பா  நம் மக்களின்  சமூகக்கடமை எது ?
  10,  பல வெப்சைட்டுகளில் What is your reaction?ஹாப்பி ,லவ்,கோபம்,வருத்தம்..

  இதை பார்த்திருப்பீங்க நிச்சயம் . இது உண்மையில் அவசியமானதொன்றா ?? 

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!