ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

இல்லம் திரும்பும் உவகை உள்ளங்கள்..


ஜாடி பார்த்துவிட்டு வருபவர்களுக்கு காத்திருந்த போது


என்னவோ சரியாக இல்லை மாதிரி தோன்றவில்லை?

இப்போ தெரிந்திருக்குமே?   போட்டோ எடுப்பவர் முன் சீட்டிலிருந்து பின் சீட்டுக்குப்  போய்விட்டார்


 அப்பா, ஒரு  வழியாக நகர ஆரம்பித்தோமே என்னும் மகிழ்ச்சி எல்லா முகங்களிலும்


திரும்பவும் முன் நோக்கி....

120 km வேகத்தில்....

அடுத்தடுத்துத் தடுப்புகளை எடுத்துத் தள்ளி விட்டோம்

எந்த ஊர் என்பவரே,

இந்த ஊரை சொல்லவா, கடந்த ஊரை சொல்லவா?

மாடி மட்டும் தெரிகிறது!


மர நிழலில் மாடி...    கொடுத்து வைத்தவர்கள்.மாடிகளுக்குப் பின்னே...  அடடே!  மலைக்குன்றுகள்...மர மனிதன் இந்த பக்கம் பார்க்கிறானா?  அந்தப் பக்கம் பார்க்கிறானா?


மரங்கள் இல்லா சாலை...    சீக்கிரம் வளர்ப்பார்கள் அந்த ஏரியா ஜனங்கள் என்று நம்புவோம்!நிமிர்ந்து நிற்கும் ஆல்ஃபாக்கள்!


கம்பங்களின் முடியில் முடிச்சு! முடி அவிழ்ந்தால்...?!!


ஒன்றும் ஆகாது...   விளக்குகள் எரியாது!   அவ்வளவுதான்!

43 கருத்துகள்:

 1. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்..

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 2. வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே...

  பதிபக்தி பாடல் நினைவுக்கு வருகிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிபக்திப் படப்பாடாலா அது. நன்றி. சின்ன வயசுல கல்யாண வீட்டு ஒலிபரப்பிகளில் கேட்ட பாடல். இந்தக் காலத்தில் பதிபக்தி யாருக்கும் இருக்குமா? பாதி பக்தி கூட இருக்காது!

   நீக்கு
  2. நான் கருத்துரை எழுதும் போதே இப்படித் தான் நினைத்தேன்...

   பதியாவது .. பாதியாவது... எல்லாம் சதி.. - என்று ஒரு கூட்டம் கிளம்பும்..

   நமக்கெதுக்கு ஊர் வம்பு...

   நீக்கு
  3. பக்தி இன்றும் உண்டுமா. பத்தினி பக்தி. இருக்கன்னு தேடணும்! தேடணும்:) கண்டிப்பாக இருக்கும் இரண்டு பக்கமும்.

   நீக்கு
  4. என்னது வல்லிம்மா... புதுசு புதுசா புரளி கிளப்பறீங்க.....பதிபக்தி கேள்விப்பட்டிருக்கோம். இந்த பத்தினி பக்தியா? ஒருவேளை பத்மினி (நடிகை) பக்தினு எழுத நினைச்சீங்களா? ஹா ஹா ஹா


   இந்த வள்ளுவர்,

   பெய்யெனப் பெய்யும் மழை னு ஆம்பிளைகளுக்குச் சொன்ன மாதிரி தெரியலையே.....

   ஏதோ நம்மாலான வம்பு

   நீக்கு
  5. :) முரளி மா. பத்தினி கிட்ட பக்தியா இருக்கிறவங்களும் வேண்டும் என்றேன். பிறன் மனம்நோ க்காப் பேராண்மை அதான் பத்தினி பக்தி!

   நீக்கு
  6. நான் அதுக்கு, “தம்பீ அடுத்தவங்க வீட்டைப் பார்த்து பொறாமைப்படாதே.. நீயும் சம்பாதி.. இன்னும் பெரிய வீடு கட்டுவாய்” என்றுதானே புரிந்துகொண்டேன்.. ஹா ஹா

   ஐயையோ.. அப்புறம் சினிமா இன்டஸ்டரி என்னாறது? ரசிகர் மன்றத்தை என்ன செய்யறது?

   நீக்கு
  7. // வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே...

   பதிபக்தி பாடல் நினைவுக்கு வருகிறது...//


   இந்தப் பாடலைதான் பிப்ரவரி இரண்டாம் தேதி ஞாயிறு தலைப்பாகக் கொடுத்திருந்தேன்!

   நீக்கு
 3. காலை வணக்கம் அனைவருக்கும்.

  நிமிர்ந்து நிற்கும் ஆல்ஃபா - ரசனையான தலைப்பு. பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை உளமாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

  படங்கள் அருமையாக உள்ளது. அதற்கு பொருத்தமாக வாசகங்களும் அமைந்துள்ளது.

  மரங்களின் பிண்ணனியில் இயற்கை வனப்பு அழகாக உள்ளது.

  மரமே ஒரு மாடியாகிய படம் நன்றாக உள்ளது. மரநிழல் வளர்த்த அவர்களுக்கு மட்டுமே தன் முழு உபயோகத்தையும் தருவேன் என எண்ணத்துடன் வளர்ந்துள்ளது.

  மர மனிதனும் ஒருவேளை மரங்களில்லா வெறிச்சோடிய சாலையை பார்த்து உங்கள் நம்பிக்கைக்கு துணையாக இறைவனை பிரார்த்திக்கிறானோ ?

  எந்த ஊர் என்பவரே இது இந்த ஊர் என்றால்தான் எனக்குத் தெரியும். அடுத்த வாரம் சொல்வார் என நம்புகிறேன்.

  வரிசை தவறாமல் நிமிர்ந்து நிற்கும் ஒளி கம்பங்களின் படம் அருமை.
  /கம்பங்களின் முடியில் முடிச்சு! முடி அவிழ்ந்தால்...?!!/

  அதற்கான பதில் சுலபமாக இருந்தது. மிகவும் ரசித்தேன்.

  அத்தனைப் படங்களுமே அழகாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரார்த்தனைகளுக்கு நன்றி. பாராட்டுகளுக்கும் நன்றி.

   நீக்கு
  2. நன்றி கமலா அக்கா... வணக்கம்.  ரசனைக்கும், இனிய பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

   நீக்கு
 5. சாலை படங்கள் அழகு ஜி
  வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 6. படங்கள் அருமை. தலைப்புக் கொடுத்தவரின் திறமைக்கும்
  வாழ்த்துகள். மர நிழலோடு மாடி. ஆஹா! எங்க மாமரம் பக்கத்து வீட்டுக்குத்தான்
  நிழல் கொடுக்கிறது. அந்த மாடி வீட்டுக்காரர். அந்தக் கிளையை வெட்டாமல் இருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.:}
  சாலையும் அருமை. விளக்குக் கம்பங்களும் அருமை. சீக்கிரமே மரங்கள் நடுவார்கள் என்று நம்பலாம். நன்றி.
  குழந்தைகள் முகத்தில் என்ன மகிழ்ச்சி.!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தக் கிளைல வரும் மாங்காய் உங்களுக்கு வருதா இல்லை பக்கத்து வீட்டுக்கார்ருக்கா?

   நீக்கு
  2. அது எடுத்தவங்களுக்கு! இமாம் பஸந்த். முரளி மா.நாங்க தான் அங்கே இல்லையே.

   நீக்கு
 7. படப்பதிவுகள் முடிவுக்குவருகிற்தா

  பதிலளிநீக்கு
 8. படங்கள் எல்லாம் அழகு.
  வீடு நோக்கி கிளம்பி விட்டவர்களின் மகிழ்ச்சி அருமை.

  மர மனிதன் படம் நன்றாக் இருக்கிறது.
  கம்பங்களில் முடிச்சு அழகு.

  பதிலளிநீக்கு
 9. 'வீடு நோக்கி ஓடி வரும் என்னையே..' என்ற பதிபக்தி பாடல் நினைவில் ஓடியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிப்ரவரி இரண்டாம் தேதிஞாயிறு பதிவுக்கு துதான் ஜீவி ஸார் தலைப்பு...!

   நீக்கு
 10. படங்கள் அழகு. விளக்குக் கம்பங்களுக்கான வரிகள் சிறப்பு.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!