வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

வெள்ளி வீடியோ : இதற்குமேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல

​1967 இல் வெளியான பேசும் தெய்வம் படத்துக்கு இயக்கம் இயக்குனர் திலகம் கே எஸ் கோபாலகிருஷ்ணன்​.  வாலியின் பாடல்களுக்கு இசை திரை இசைத் திலகம் கே வி மகாதேவன். கதாநாயகன் நடிகர்த் திலகம்.​ஆக மூன்று திலகங்கள் இணைந்த இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமே ஸூப்பர் ஹிட்.  எஸ் ஜானகி பாடியிருக்கும் "பிள்ளைச் செல்வமே...  பேசும் தெய்வமே,  டி எம் எஸ் சுசீலா குரலில்  "பத்து மாதம் சுமக்கவில்லை ரங்கையா"   அப்புறம் "நூறாண்டுகாலம் வாழ்க" போன்ற பாடல்களுடன் எனக்கு மிகவும் பிடித்த இந்த இரண்டு பாடல்கள்.  எந்த இரண்டு பாடல்கள்?   கீழே வருபவை!

ஒன்று டி எம் எஸ் சுசீலா குரலிலும், ஒன்று டி எம் எஸ் குரலிலும்.  இரண்டு பாடல்களிலும் வாலியின் அற்புதமான வரிகள்.சிவாஜி கணேசன், பத்மினி, எஸ்விஎஸ், வி எஸ் ரா , எஸ் வி ஆர் சௌகார் ஜானகி ஆகியோர் நடித்த படம்.

நான் அனுப்புவது கடிதம் அல்ல...   உள்ளம்...
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல...  எண்ணம்..
உன் உள்ளம் அதைக் கொள்ளை கொள்ள 

நிலவுக்கு வான் எழுதும் கடிதம் 
நீருக்கு மீன் எழுதும் கடிதம் 
மலருக்கு தேன் எழுதும் கடிதம் 
மங்கைக்கு​ ​நான் எழுதும் கடிதம்  
 
எழுதி அனுப்புவது கடிதம் அல்ல  உள்ளம்...

எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம் 
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம் 
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம் 
உன் மனமோ நான் துயிலும் மஞ்சம் 

நான் அனுப்புவது கடிதம் அல்ல...   உள்ளம்...
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல...  எண்ணம்..
உன் உள்ளம் அதைக் கொள்ளை கொள்ள1962, 63, 64 ஆகிய வருடங்களில் தொடர்ந்து மூன்று (சாரதா, கற்பகம், கைகொடுத்த தெய்வம்) தேசிய விருது பெற்ற இயக்குநர்.  இவரது என்னதான் முடிவு பெரிதும் பேசப்பட்ட படம்.  கே ஆர் விஜயா, ஜெயசித்ரா, பிரமீளா, விஜய நிர்மலா போன்ற நடிகைகளை அறிமுகப்படுத்தியவர்.இவரது இனிஷியலுடன் இதே பெயரில் 1940 களில் ஒரு இயக்குனர் இருந்தாலும் இவரளவு அவர் புகழ் பெறவில்லை.  1968 இல் இவரது பணமா பாசமா படத்தை ரஷ்யா தாஷ்கென்ட் திரைப்பட விழாவில் கௌரவித்தது.  நீளநீளமான, உணர்ச்சிகரமான வசனங்களுக்குச் சொந்தக்காரர்.நவாப் ராஜமாணிக்கம்பிள்ளை பாசறையில் பயின்ற இவர், இயக்குனர் ஸ்ரீதரிடம் பணியாற்றி இருக்கிறார்.   இவரது முதல் தமிழ்ப்படம் தெய்வப்பிறவி.  சிவாஜியுடன் இணைந்து படிக்காத மேதை, செல்வம், குலமா குணமா உள்ளிட்ட ஏகப்பட்ட சூப்பர்ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறார்.

இந்தப் பாடலில் பாடும் டி எம் எஸ் குரலுடன் இழையும் சுசீலாம்மாவின் குரலையும் ஸ்பெஷலாகச் சொல்ல வேண்டும்.ஆழியிலே பிறவாத அலைமகளோ 
ஏழிசையைப் பயிலாத கலைமகளோ 
ஊழிநடம் புரியாத மலைமகளோ 
உலகத் தாய் பெற்றெடுத்த தலை மகளோ...

அழகு தெய்வம் மெல்ல மெல்ல 
அடியெடுத்து வைத்ததோ...
நான் அன்புக் கவிதை சொல்லச் சொல்ல 
அடியெடுத்துக் கொடுத்ததோ 

இளநீரைச் சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல 
மழைமேகம் குடைபிடிக்கும் குளிர்நிலவும் அல்ல 
இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல 
இதற்குமேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல 

தத்தி வரும் தளர்நடையில் பிறந்ததுதான் தாளமோ 
தாவி வரும் கை அசைவில் பிறந்ததுதான் பாவமோ 
தெய்வமகள் வாய் மலர்ந்து மொழிந்ததுதான் ராகமோ 
இத்தனையும் சேர்ந்ததுதான் இயல் இசை நாடகமோ 
56 கருத்துகள்:

 1. இரண்டு லட்டுப் பாடல்கள். இரண்டாவதி சிவாஜியை மிகவும் கவர்ந்த பாடல்

  அருமையான தேர்வு

  காலை வணக்கம். காலையிலேயே மனதைத் தாலாட்டலாமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா...    நெல்லையே ரசிக்கும் பாடல்கள்...காலை வணக்கம் நெல்லை...   நன்றி.

   நீக்கு
 2. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் மனப்பூர்வமாக இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  இன்றைய வெள்ளி பாடல்கள் இரண்டும் இனிமையானவை. விபரங்கள் படித்தேன். பாடல்கள் பிறகு கேட்டு விட்டு வருகிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...    காலை வணக்கம்.   நன்றி, நல்வரவு.

   நீக்கு
 3. கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல..

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 4. இன்று மிகவும் தாமதம்...

  இன்றைய பாடல்கள் பற்றி என்ன சொல்ல!..

  அருமை... அருமை....

  பதிலளிநீக்கு
 5. இன்றைய பாடல்களைப் பற்றி
  அன்றைய இளங்காதலர்களைக் கேட்டால் செல்வார்க்கள்..

  அப்படி யாரும் இங்கு உளரோ!..

  பதிலளிநீக்கு
 6. இன்றுதான் பதிவைப் படித்து விட்டு
  குறளைச் சொன்னேன்...

  பழைய நெனப்புடா பேராண்டி..
  பழைய நெனப்புடா!..

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 8. பாடல்கள் இரண்டும் நல்ல பாடல்கள்.
  கேட்டு ரசித்தேன்.

  //நீளநீளமான, உணர்ச்சிகரமான வசனங்களுக்குச் சொந்தக்காரர்.//

  அத்தனை நீள நீளமான உணர்ச்சிகரமான வசனங்களை பேச நடிகர், நடிகைகள் இருந்தார்கள். ரசிக்கவும் ஆட்கள் இருந்தார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், உண்மை.  அப்போதைய ரசனை வேறுபட்டது!

   நீக்கு
  2. //அத்தனை நீள நீளமான உணர்ச்சிகரமான வசனங்களை பேச நடிகர், நடிகைகள் இருந்தார்கள். ரசிக்கவும் ஆட்கள் இருந்தார்கள்.// உண்மைதான். வாழையடி வாழை படத்தில் வி.எஸ்.ராகவன் பேசும் வசனங்களை அப்போதே கேலி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

   நீக்கு
  3. இப்போதெல்லாம் அப்படி நீளமான வனங்களைப் பேச ஆளில்லை.   கொஞ்ச வருஷங்களுக்கு முன்னால் கிளைமேக்சில் கதாநாயகன் ஒரு லெக்சர் அடிப்பார்...    பூவே உனக்காக, உன்னைநினைத்து, சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற படங்களில்கூட அது தொடர்ந்தது!

   நீக்கு
  4. இப்போதெல்லாம் வசனங்களைப் பேச வேண்டிய தொந்தரவே இல்லையே, ஸ்ரீராம்?.. வெறும் உதட்டசைப்பு தானே?

   அந்தக் காலத்திலேயே ஒற்றை வரி வசனத்திற்கு பெயர் பெற்றவர் ஸ்ரீதர். ஆனால் அவரின் பல்கலைக் கழகத்தில் பயின்ற கேஎஸ்ஜியோ?.. இதற்குக் காரணம் ஆரம்ப கால நாடகப் பயிற்சி மேடை தான்.

   நீக்கு
  5. ஒன்றிலிருந்து இன்னொன்று மாறும்போது அது கவனிக்கப்படுகிறது இல்லையா ஜீவி ஸார்...    அது போணியானால் அதுவே பாணியாகிவிடுகிறது!

   நீக்கு
 9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டுமே இனிமையான பாடல்கள்...

   ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...

   1. முதல் பாடல், வலைப்பூவை பலரும் விரும்பிய காலத்தில், காதற்சிறப்புரைத்தல் அதிகாரத்தின் குறளின் குரல் பதிவில் முழுப்பாடலும் கேட்பொலியாக உண்டு... (2013 ஆண்டு...!)

   2. இரண்டாவது பாடல், 2017 ஆம் ஆண்டு எழுதிய தகையணங்குறுத்தல் குறளின் குரல் பதிவில், குறள் எண் 1087க்கு...(?!) ஆனால், பாடலின் சில வரிகள் மட்டும் கேட்பொலியாக உண்டு...

   நீக்கு
  2. உங்களுக்கு அபார ஞாபகசக்தி DD...    நன்றி.

   நீக்கு
 10. வாலி, டிஎம்எஸ், கேவிஎம்.. ஆஹா, டெர்ரிஃபிக் காம்பினேஷன். ‘அழகு தெய்வம் மெல்ல மெல்ல.. அடி எடுத்து வைத்ததோ...’ பதின்ம வயதின் பரவசத்தில், எத்தனை தடவை பாடிப் பார்த்திருக்கிறேன்! வாலியின் லிரிக்ஸ்! சும்மா விளையாடியிருக்கிறார் மனுஷன்..

  காலத்திற்கேற்ப ஜனரஞ்சகப் படங்களை சுவாரஸ்யமாக இயக்கிய கேஎஸ்ஜி ! அப்போது எல்லாம் சேர்ந்திருந்ததே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஏகாந்தன் ஸார்...    வாலியின் வரிகள் ரொம்ப ரொம்ப ரசிக்க வைத்த பாடல்கள்.

   நீக்கு
 11. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
  மிக அருமையான ரசிக்க வைக்கும் பாடல்கள்.
  துடிப்புடன் சிவாஜி.
  கேஎஸ்ஜி சாரின் அற்புத இயக்கம். பத்மினி,ரங்காராவின்
  சீரிய நடிப்பு. நேற்று பார்த்தது போல இருக்கிறது. நல்ல சாய்ஸ் ஸ்ரீராம்.

  வாலியின் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் டிஎமெஸ்.,இசையின் மென்மைக்கு கேவி மஹாதேவன்.
  ஒரு குழந்தைக்காக குடும்பமே சுற்றும் குணம் படைத்த இயக்கம்.
  பத்துமாதம் சுமக்கவில்லை சின்னையா ''
  எழுதியவர்க்கு என்ன கொடுத்தால் தகும்.!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா...    உண்மைதான்.  பத்மினியின் நாட்டியத்தைவிட, சிவாஜியின் நடிப்பு நன்றாயிருக்கும் இந்தக் காட்சிகளில்.  மறக்க முடியாத படங்கள், மறக்க முடியாத பாடல்கள்.  "பத்து மாதம் சுமக்கவில்லை சின்னையா...   நான் பத்தியமும் இருக்கவில்லை சின்னையா"  பாடலும் நன்றாய் இருக்கும்.

   நீக்கு
 12. மாமாக்களும்,தாத்தாக்களும் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். நானெல்லாம் அப்போது சிறுமி. ஹி ஹி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா...ஹா...ஹா...   இருக்கலாம்.   நான் பிறப்பதற்குப் பல வருடங்களுக்கு முன் வந்த இந்தப் பாடல்களை யு டியூபில் கேட்டு மகிழ்ந்து இங்கு பகிர்ந்தேன்.

   நீக்கு
 13. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
  மிக அருமையான ரசிக்க வைக்கும் பாடல்கள்.
  துடிப்புடன் சிவாஜி.
  கேஎஸ்ஜி சாரின் அற்புத இயக்கம். பத்மினி,ரங்காராவின்
  சீரிய நடிப்பு. நேற்று பார்த்தது போல இருக்கிறது. நல்ல சாய்ஸ் ஸ்ரீராம்.

  வாலியின் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் டிஎமெஸ்.,இசையின் மென்மைக்கு கேவி மஹாதேவன்.
  ஒரு குழந்தைக்காக குடும்பமே சுற்றும் குணம் படைத்த இயக்கம்.
  பத்துமாதம் சுமக்கவில்லை சின்னையா ''
  எழுதியவர்க்கு என்ன கொடுத்தால் தகும்.!!!!

  பதிலளிநீக்கு
 14. ஜோக்ஸ் அபார்ட் இந்தப் படத்தில் எஸ்.வி. ரங்கா ராவ் பெருமாளிடம் மாச செலவு உட்பட வீட்டில் நடப்பதையெல்லாம் கூறும் காட்சி நன்றாக இருக்கும். இதை படித்தவுடன், சிறுமியாம்,இந்த காட்சி மட்டும் நினைவில் இருக்கிறதாம் என்று ஒரு சின்னப் பையன் கட்சி கட்டுவாரே.. தொலைகாட்சியிலும் படங்கள் போடுவார்கள் என்று அவருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பத்மினி- சிவாஜியை கல்லூரி காதலர்களாகப் பார்ப்பது மட்டும்தான் கொடுமை.  மற்றபடி சிறப்பான படம்...    இந்தப்படத்தின் இன்னொரு ஸ்பெஷல் பாடல் எஸ் ஜானகியம்மா பாடிய "பிள்ளைச் செல்வமே...   பேசும் தெய்வமே..."

   நீக்கு
 15. இரண்டாவது பாடலில் பத்மினியின் ஆடலைவிட சிவாஜியின்
  முக பாவங்களும் அங்க அசைவுகளுமே பாடலின் மென்மையை வெளிப்படுத்தும்.

  இனிய நினைவுகளை மீட்டுத்தந்த
  பதிவுக்கு நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 16. கே.எஸ்.ஜி.யின் படங்களில் சித்தி, கற்பகம் இரண்டும் மிகவும் பிடிக்கும். குறிப்பாக கற்பகம், படம் மிகவும் கட்டுக்கோப்பாக இருக்கும். ஒரு காட்சி கூட அனாவசியமாக இருக்காது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கற்பகம்...    அம்மாடி...   சுசீலாம்மாவின் இனிய, மிக இனிய பாடல்களைக் கொண்ட படம்.

   நீக்கு
  2. கற்பகம் படத்திலும் கத்திரிக்கோல் போட வேண்டிய காட்சிகள் நிறைய உண்டு. தான் எழுதிய வசனங்களில் எதையும் எடிட் பண்ண மன்மில்லாதவர் கே.எஸ்.ஜி.

   அந்தப் படம் வெளிவந்த நேரத்தில் புதுவையில் ஆர்யபவன் என்ற ஹோட்டலில் எளிமையாக கூட்டத்தில் ஒருவராக கே.ஆர்.வி. மதியச் சாப்பாடு சாப்பிட வந்திருந்தார். இதில் ஒன்றும் விசேஷமில்லை.

   எதேச்சையாக அவருக்கு பக்கத்து டேபிளில் நான். அவருடன் பேசிக் கொண்டே சாப்பிட்டது தான் விசேஷம். அவரது நடிப்பைப் பாராட்டி 'இன்னும் பல படங்களில் பிரமாதமாக நடிக்கப் போகிறீர்கள், பாருங்கள்..' என்று நான் சொன்ன போது சாப்பிட்டப்படியே நிமிர்ந்து பார்த்தவரின் கண்களில் மின்னிய ஒளி இன்னும் நினைவில் தேங்கியிருக்கிறது.

   நீக்கு
  3. அவசரத்தில் கே எஸ் ஜி என்று படித்துவிட்டு குழம்பி பின்னர்தான் கே ஆர் வி என்று படித்தேன்.   அவ்வளவு எளிமையாக இருந்த காலமா அது?

   நீக்கு
  4. எளிமையான காலம் என்றில்லை. அது தான் கே.ஆர்.விஜயாவின் முதல் படம். படம் வெளிவந்த முதல் வாரம் என்று கூட நினைக்கிறேன். இவர் தான் அந்தப் படத்தின் நாயகி என்று பரவலாக அறிமுகமாகாத சூழ்நிலை. ஆனால் அவர் சாப்பிட்டு வெளியே வருவதற்குள் விஷயம் பரவி லேசான கும்பல் சேர்ந்து விட்டதையும் சொல்ல வேண்டும்.

   இன்னொரு பெண், அவரின் கணவர் போலவான இன்னொருவர் என்று மூன்று பேராக வந்திருந்தனர்.

   இன்னொரு விஷயத்தையும் சொல்ல மறந்தேன்.

   ஹோட்டல் முதலாளி ஐயர். வீபூதிக் கோடுகள் நெற்றியில் பளிச்சிட பூணூல் பூண்ட திறந்த மார்புடன் தான் எப்போதும் இருப்பார். அப்போது தான் குளித்து விட்டு வந்த மாதிரி எப்போதும் பளிச்சென்று இருப்பார். அவரிடம், கே.ஆர்.வி-யைச் சுட்டிக்காட்டி, "இவருடன் புகைப்படம் இப்பவே எடுத்துக் கொள்ளுங்கள். சட்டம் போட்டு அதை ஹோட்டலில் மாட்டினால் உபயோகமாக இருக்கும்.." என்று சொன்னதும், கே.ஆர்.வி. தன் வரிசைப் பல் தெரிய குலுங்கிச் சிரித்தார்.

   மனசில் தோன்றியதை மறைக்காமல் வெளிப்படுத்தும் குணம் எனக்கு இளம் வயதிலிருந்தே கூடப் பிறந்த சொத்தாக தொடர்ந்து வருகிறது. கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்தால், அதனால் பல நன்மைகள் விளைந்திருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும்.

   நீக்கு
  5. சுவாரஸ்யமான விவரங்கள் ஜீவி ஸார்.     

   நீக்கு
 17. இரண்டாவது பாடலில் பத்மினியின் ஆடலைவிட சிவாஜியின்
  முக பாவங்களும் அங்க அசைவுகளுமே பாடலின் மென்மையை வெளிப்படுத்தும்.

  இனிய நினைவுகளை மீட்டுத்தந்த
  பதிவுக்கு நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 18. கற்பகம் சினிமா..எத்தனை தடவை பார்த்திருப்பேனோ தெரியாது.
  ஒரு ஒரு ஃப்ரேமும் செதுக்கி இருப்பார்.
  ரங்கராவ், சாவித்ரி, ஜெமினி,விஜயா,வி கே ராமசாமி
  எல்லோருமே வாழ்ந்திருப்பார்கள்.
  அந்தக் குட்டிப் பெண் ஷகிலா..ஸ்மார்ட்.
  நான்கு பாடல்களும், சுசீலாம்மா. வாலி,..விஸ்வனாதன்
  ப்யூர் மாஜிக். நன்றி பானுமா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிஹிஹி...   நான் ஒருதரம் கூட பார்த்தது இல்லை வல்லிம்மா...!

   நீக்கு
 19. ஆஹ இம்முறை இரண்டுமே அருமையான அழகிய பாட்டுக்கள்.

  //நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
  நீருக்கு மீன் எழுதும் கடிதம்
  மலருக்கு தேன் எழுதும் கடிதம்
  மங்கைக்கு​ ​நான் எழுதும் கடிதம் ///

  பாட்டுக் கேட்கும்போது அதிகம் ரசிக்கும் வரிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி பி எ அதிரா...    இந்தப்படத்தின் அத்தனைப் பாடல்களுமே நன்றாய் இருக்கும் இல்லையா?

   நீக்கு
  2. ஓஓ... அப்படியோ... நான் இன்னும் படம் பார்க்கவில்லை ஶ்ரீராம்... பார்த்திடோணும்.

   நீக்கு
 20. இரண்டு பாடல்களுமே இனிமையான பாடல்கள். கேட்டு ரசித்தேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!