வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

வெள்ளி வீடியோ : நீ மயங்கவும் கண் மலரவும் நான் தாலாட்டு சொல்வேன் ஆராராரோ

இன்றைய நேயர் விருப்பம் வல்லிம்மா கேட்ட பாடல் விருப்பம்.

1961 இல் வெளியான மணப்பந்தல் திரைப்படத்திலிருந்து "பார்த்துப் பார்த்து நின்றதிலே" என்கிற பாடல்.  கண்ணதாசன் பாடலுக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பி பி ஸ்ரீனிவாஸ் சுசீலா பாடிய பாடல்.  காட்சியில் எஸ் எஸ் ஆரும் சரோஜா தேவியும்.பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன் 
நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன் (2)

நேற்று வந்த நினைவினிலே நெஞ்சம் இழந்தேன் 
நீங்கள் நேரில் வந்து நின்ற உடன் என்னை மறந்தேன் (2)

காத்திருந்து காத்திருந்து பெருமை இழந்தேன் 
தென்றல் காற்று வைத்த நெருப்பினிலே ஆவி இழந்தேன் 

கண்ணருகே இமை இருந்தும் கனவு காண்பதேன் 
உங்கள் கையருகே மங்கை வந்தும் கதைகள் சொல்வதேன் 
வாய் மலர்ந்து சிரித்ததம்மா காதலன் கிளியே 
இங்கே காய்த்திருந்தும் கனிந்ததம்மா மாதுளம் கனியே 

இனி மயங்கும் இன்ப இரவினிலே வாலிபத் திருநாள் 
வடிவத்தோடு மனதும் சேரும் வாழ்வினில் ஒரு நாள் 
இனி மயங்கும் இன்ப இரவினிலே வாலிபத் திருநாள் 


============================================================================================

என் விருப்பப் பாடல் இனி...


பச்சையப்பா கல்லூரியில் பி ஏ டிகிரி முடித்தவர் ஏ எம் ராஜா.   கே வி மகாதேவனோடு தனி ஆல்பம் கொடுத்தவரின் திறமையை பார்த்து எஸ் எஸ் வாசன் ஸம்சாரம் படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க 1951 இல் வெளிவந்த சம்சாரம் சூப்பர் ஹிட்.  கர்னாடக இசை, மேற்கத்திய இசை ஆகியவற்றில் கில்லாடியாம் எம் எம் ராஜா.தேவதாஸ் உள்ளிட்ட ஓரிரு படங்களில் சிறு வேடங்களில் தலைகாட்டியிருக்கும் ஏ எம் ராஜா தெற்கிலிருந்து வடக்குக்குப் போன முதல் பாடகராம்.  அபப்டிக் சொல்லும் விக்கியே எம் எஸ் அம்மாவையும் டி ஏ மோதியையும் கூட அதேபோல குறிப்பிடுகிறது.  அவர்கள் முன்னரே அங்கு சென்று பாடி இருக்கிறார்கள்.

ராஜ் கபூருக்கு ஒரு முகேஷ் போல ஜெமினிக்கு ராஜா.   பி சுசீலா பெற்றதாய் படத்துக்காக முதல் பாடல் பாடினார்.  அது ஏ எம் ராஜாவுடன்தான்.

ஆனால் ஏ எம் ராஜாவுடன் பணிபுரிவது மிகவும் கஷ்டமான காரியமாக உணரப்பட்டபோது,  அவரை அறிமுகப்படுத்திய கே வி மகாதேவன் முதலாவதாக ராஜாவை விட்டு விலகினாராம்.  இசை அமைப்பில் எல்லாம் ராஜா தலையிடுவாராம்.  எப்படிப் பாடுவது, எப்படி இசை அமைப்பது என்றெல்லாம் குறுக்கிடுவாராம்.  குறிப்பாக 'மனமுள்ள மறுதாரம்' படத்துக்காக "காயிலே இனிப்பதென்ன" பாடல்பதிவின்போது சூடான வாக்குவாதம் நடந்ததாம்.

எம் எஸ் விஸ்வனாதன் ஜெனோவா படத்தில் ராஜாவை உபயோகித்தபின் இவர் பக்கமே திரும்பவில்லையாம்!   இதில் ஒரு நகைமுரண் என்னவென்றால் ஜெனோவா படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு ஏ எம் ராஜாவுக்குதான் வந்ததாம்.   அவர்தான் அதை எம் எஸ் விக்கு கொடுத்தாராம்.  ஆணவம் பிடித்த மனிதராகவே பெரும்பாலான இசை  அமைப்பாளர்கள் அவரைப் பார்த்தபோது, அவர் திறமையானவர், தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார் என்று மலையாள இசை அமைப்பாளர் ஜி தேவராஜன் மட்டும் அபிப்ராயப்பட்டாராம்.  இயக்குனர் ஸ்ரீதர் சில படங்களுக்கு இவரை இசை அமைக்க வைத்திருந்தாலும் அவர்களுக்குள்ளும் பிளவு ஏற்பட்டு பிரிந்து, சிறிய இடைவெளிக்குப் பின் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இணைந்து பணி செய்தார்களாம்.

இவரை அப்புறம் அவ்வப்போது திரும்ப அழைத்து வந்தவர்கள் வி குமாரும், சங்கர் கணேஷும்.

இன்று பகிரப்படும் பாடல் 1975 இல் வெளியான அன்புரோஜா  திரைப்படத்திலிருந்து ஏ எம் ராஜா பி சுசீலா பாடிய பாடல் 'ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்..   பாடல்.


கண்னதாசன் பாடல்.  முத்துராமன் - லதா காட்சியில்.  இயக்கம் தேவராஜ் மோகன்.  சங்கர் கணேஷ் இசை.

ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம் 
என்ன வேண்டும் சொல்லு
ஏன் இன்று இந்த வம்பு 

நீ மயங்கவும் கண் மலரவும் 
நான் தாலாட்டு சொல்வேன் ஆராராரோ 

நீ எனக்குப் பிள்ளை நான் சுமக்கவில்லை 
தாய் என்ற பேர் வந்தது 
நீயணைத்த முல்லை நான் விதைத்ததில்லை 
நமக்காக அவன் தந்தது 
என் வீட்டில் வந்தாடும் 
பொன்னூஞ்சல் நீயாகும் 

புள்ளிமானின் கன்று துள்ளியோடி இன்று 
விளையாடும் அழகென்னவோ 
சொந்தமான பின்பு எந்த நாளும் அன்பு 
குறையாத உறவல்லவோ 
தென்றல் போல் நீ வாழ்க திங்கள்போல் நிறைவாக 
55 கருத்துகள்:

 1. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் என் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...   காலை வணக்கம்.  இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

   நீக்கு
 2. முதல் பாடல் பலமுறை ரசித்ததுண்டு... இரண்டாவது பாடலும் இனிமை...

  பதிலளிநீக்கு
 3. இரு பாடல்களும் இனிமை. வேலன்டைன்ஸ் தினத்தைக் கொண்டாடுகிறீர்கள் போலிருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கே காதலர்தின ஸ்பெஷல் பாட்டு என்று கேட்டு விடுவீர்களோ என்று "கொண்டாடி" நிருக்கிறேன்!

   நீக்கு
 4. இரண்டு பாடல்களும் கேட்டு ரசித்த பாடல்களே...

  ஏ.எம்.ராஜா புராணமாக இருக்கிறதே... திறமைசாலிகளிடம் சற்றே ஆணவம் இருப்பது இறைவன் கொடுத்த பிறவிக்குணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி.. நீங்கள் சொல்லியிருப்பதும் உண்மைதான்.

   நீக்கு
 5. காதலர் தினத்தில் நல்ல பாடல் தெரிவுகள். நான் பழைய பாடல்களின் பரம ரசிகன். என்றாலும் இப்போது அடிக்கடி கேட்க நேரமில்லை. இப்படி எங்காவது காணக்கிடைத்தால்தான். நல்ல தொகுப்பு. வாழ்த்துகள்...

  நமது வலைத்தளம் : சிகரம்
  இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

  பதிலளிநீக்கு
 6. மிகவும் தாமதமாகி விட்டது...

  இனிய பாடல்களை வழங்கியுள்ள ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி துரை செல்வராஜு ஸார்.. குறள் கொடுக்க மறந்து விட்டீர்கள்!

   நீக்கு
  2. இல்லை.. மறக்கவில்லை...

   பதிவு வெளியாகும் வேளையில் தான் குறள்...

   தாமதமாகி விட்டது...

   நீக்கு
 7. பார்த்துப் பார்த்து நின்றதிலே...நான் ரசித்த பாடல்களில் ஒன்று.

  பதிலளிநீக்கு
 8. அன்பு நெஞ்சங்கள் அனைத்துக்கும் அன்பர் தின வாழ்ததுகள்,,!!. நான் இந்தப் பாடலே விரும்பிக் கேட்டதே மறந்து விட்டது. மிக மிக நன்றி ஶ்ரீராம். நீங்கள் நினைவில் வைத்து இன்று பதிவிட்டது அருமை. மணப்பந்தல் படத்தில் நல்ல கதை, நல்ல நடிப்பு,நல்ல பாடல்கள். எனக்கும் என் தோழிகளுக்கும் நிறைய வாக்குவாதங்கள் வந்தது இந்தப் படத்தினால் வந்தது.:) நாங்களே கதை மாற்றிப் பேசுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா... அப்பவே போட்டு வைச்சதுதான் நேயர் விருப்பம்.

   நீக்கு
 9. அன்பு ரோஜா படம் பாடல்கள் கேட்டிருக்கிறேன். நல்ல குரல் கொண்டவர் ஏ.எம்.ராஜா. இன்னும் அந்தக் குரலின் மென்மையைத் தேடவேண்டும். அஅத்தனை செய்திகள் சேகரித்திருக்கிறீர்களே. இவ்வளவு விவரம் எனக்குத் தெரியாது. இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருக்கலாம். ஜிக்கி அவர்கள் மேடையில் பாடிக் கேட்டிருக்கிறேன். நல்ல திடமான குரல். இருவரின் குரலில் செந்தாமரையே செந்தேன் மலரே. பாடல் அருமையாக இருக்கும். மிக மிக நன்றி ஶ்ரீராம். இந்த அன்பு என்றும் நிலைக்க வேண்டும். எபி அன்பர்களே அனைவருக்கும். அன்பும் நட்பும் நிலைத்திருக்க என் பிரார்ததனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //செந்தாமரையே செந்தேன் மலரே. பாடல் அருமையாக இருக்கும். //
   எனக்கு மிக மிகப் பிடித்த பாடல் வல்லிம்மா.. ரிப்பீட்டில் போட்டுவிட்டுக் கேட்டிருக்கிறேன்..

   நீக்கு
  2. அப்போ அது ரொம்ப ரொம்ப பேமஸ் பாட்டு அதிரா / வல்லிம்மா.

   நீக்கு
 10. மலரும் நினைவுகளாக அருமையான பாடல்கள்.
  பள்ளிக்கூட காலத்தில் வந்த படம்.
  குடியின் இழிவை விளக்கமாகச் சொல்லி ,குடிப்பவன் திருந்துவதாக
  வந்த சித்திரம். பி.பி ஸ்ரீனிவாசின் ''உடலுக்கு உயிர் காவல்''
  பாடல் இலங்கை வானொலியில் ஒலித்த வண்ணம் இருக்கும்/
  மீண்டும் நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் அந்த உடலுக்கு உயிர் காவல் பாடல் கேட்டிருக்கிறேன் வல்லிம்மா.

   நீக்கு
 11. பழைய பாடல்களை கேட்கும்போது என்றோ கேட்டமாதிரி தோன்றும் ஏ எம் ராஜா மூக்கில் பாடுவதாகத் தோன்றும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் ஏ எம் ராஜா பொய்க்குரலில் பாடுவதாகத்தான் தோன்றும் ஜி எம் பி ஸார்.

   நீக்கு
 12. ஆஆஆ எங்கள் புளொக்கில் இன்று காதல் தினம் கொடிகட்டிப் பறக்கிறதே ஹா ஹா ஹா. எல்லோருக்கும் அன்பான அன்பு வாழ்த்துக்கள்.

  முதல் பாடல் வல்லிம்மாவின், அழகான பாடல், கேட்டதாக இருக்கு ஆனா மனதில் பதியவில்லை..
  இப்படிப் பாடல்கள் இலங்கை வானொலியின் மாலை நேரங்களில் ஒலிபரப்பாகும் என் நினைக்கிறேன்ன்.. பிரச்சனை என்னவெனில், அந்நேரம் படிக்கோணும்:)).. ஒன்பது மணிவரை... நோ ரேடியோ:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அதிரா...    இலங்கை வானொலியில் மாலை வேலைதானழகிய பாடல்கள் போடுவார்கள்.  நினைவிருக்கிறது.  பொற்காலம்.

   நீக்கு
 13. ஏம் ஐ ராஜா அவர்களின் குரல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. பாடல்களும் எந்தக் காலத்திலும் ரசித்துக் கேட்கக்கூடியவை.. ஸ்ரீராமின் தேர்வுப் பாடல்.. பலதடவை கேட்ட பாடல், அருமையான பாட்டு.

  ஆனா ஏம் எம் ராஜா வில் எனக்கு கோபம், அவர் மனைவியைப் பாடக்கூடாதெனத் தடுத்திட்டாராமெல்லோ.. அவரின் இறப்புக்குப் பின்புதானே அவ பாடினாவாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சும்மா எதையாவது அடிச்சு விட வேண்டியது....

   A.M. ராஜா அவர்கள் இருந்தபோதே ஜிக்கி (G. கிருஷ்ணவேணி) குரலில் பிரபலமான பாடல்கள் நிறையவே உண்டு..

   நீக்கு
  2. அதிராமா, அவங்க ரெண்டு பேருமே சேர்ந்தே நிறைய ஹட்ஸ் கொடுத்து இருக்காங்க.மா.

   நீக்கு
  3. ஓ துரை அண்ணன், வல்லிம்மா ... அப்போ என் காதில் விழுந்த ரேடியோத் தகவல்கள் உண்மையில்லையோ...

   அவர்கள் பல பாடல்கள் சேர்ந்து பாடியிருக்கிறார்கள் ஆனா அது திருமணத்தின் முன்பு என்றெல்லோ சொன்னார்கள்....

   நீக்கு
  4. அதிரா சொல்லியிருக்கும் தகவல்கள் தவறு என்பதை வள்ளிம்மாவும், துரை செல்வராஜூ ஸாரும் சொல்லி விட்டார்கள்!

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  இன்றைய இரு பாடல்களும் அருமையாக உள்ளது. இரண்டுமே ரேடியோவில் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். இப்போது இங்கும் கேட்டு ரசித்தேன். இரு படங்களும் இதுவரை பார்த்ததில்லை.

  முதல் நேயர் விருப்ப பாடலில் சரோஜா தேவி அவ்வளவு அழகாக இருக்கிறார். இப்போதுதான் இந்த பாடலுக்கு ஏற்ற காட்சியை பார்க்கிறேன். இதை நேயர் விருப்பமாக கேட்ட சகோதரி வல்லி சிம்ஹன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்த படமும் நன்றாக இருக்கும் போலிருக்கிறது.சமயம் கிடைக்கும் போது பார்க்க வேண்டும்.

  ஏ. எம் ராஜா பற்றி அறிந்திராத நிறைய தகவல்களை தந்த தங்களுக்கும் மிக்க நன்றிகள். அந்த காலத்துப்பாடல்களில் ஏ. எம் ராஜா ஜிக்கி இணைந்து பாடிய பாடல்களும் நன்றாக இருக்கும். முத்துராமனுக்கும் அவர் குரல் பொருந்தி வந்துருக்கிறது. இன்று இரு பாடல்களும் அன்பை பகிர்வதாக அமைந்தது சிறப்பு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கமலா அக்கா.  ஏ எம் ராஜா பற்றிமுன்னரே படித்து எழுதி வைத்திருந்தேன்.   அவர் பாடல் ஒன்று வெளியிடும்போது சேர்த்து வெளியிட காத்திருந்தேன்.

   நீக்கு
 15. மணப்பந்தல்னு படம் வந்தது தெரியும். சரோஜா தேவியா அதிலே? பின்னணியில் போஸ்டரில் தேவிகா முகம் மாதிரியும் தெரியுதே? அன்பு ரோஜானு படம் வந்ததெல்லாம் தெரியாத்! ஏ.எம்.ராஜா - ஜிக்கி இருவரும் இணைந்து பாடிய பல பாடல்கள் ஹிட்! யாரது அங்கே அதிரடி, ஏ.எம்.ராஜாவை மனைவியைப் பாடக்கூடாதுனு தடுத்தார்னு சொல்லுவது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஏ.எம்.ராஜாவும், ஜிக்கியும் ஒரு கச்சேரிக்குப் போய்விட்டுத் திரும்புகையில் ரயிலில் வந்திருக்கிறார்கள். ஏதோ ஒரு ரயில் நிலையத்தில் ஏதோ வாங்க இறங்கிய ராஜா, அந்த ரயில் உடனே கிளம்பவும் ரயிலில் ஏற முயற்சிக்கும்போது உயிரிழந்ததையும் அவரைப் பிடித்து உள்ளே ஏற்ற ஜிக்கி தவித்ததையும் படித்ததில் இருந்து எனக்கு ஏ.எம்.ராஜான்னா இதான் நினைவில் வந்து வருத்தும். :(( அதன் பின்னரே ஜிக்கி பாடுவதில் இருந்து விலகினார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீசாக்கா .. என் பூஸ் ரேடியோவில் அப்பப்ப நியூஸ்களும் தருவார்கள்... அதில்தான் சொன்னார்கள்... ஜிக்கியைப் பாடக்கூடாதெனத் தடுத்து விட்டாராம் திருமணத்தின் பின்பு என...

   நீக்கு
  2. மணப்பந்தல் படம் கேள்விப்பட்டிருக்கிறேன் தவிர, பாடல்கள் இப்போதுதான் அறிகிறேன்.  சில பாடல்கள் முன்னரே கேட்டிருக்கிறேன் கீதா அக்கா.

   நீக்கு
 16. ஏ.எம்.ராஜா இசையமைப்பாளராகவும் பணி புரிந்தது தெரியும். ஆனால் இங்கே அவர் ஆணவம் பிடித்தவர் எனச் சொன்ன/சொல்லி இருக்கும் விபரங்கள் எல்லாம் புதியவை! ஆனால் ஏ.எம்.ராஜா திரைப்பட இசைத்துறையில் அதிகம் பரிமளிக்கவில்லை என்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் இத்தகவல்கள் புதிது, ஆச்சர்யம் கொடுத்தது கீதா அக்கா.  எனவேதான் பகிர்ந்தேன்.

   நீக்கு
 17. //ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம் //

  கண்ணா, கண்ணா என்று கண்ணதாசன் கண்ணபிரானுடன் கொஞ்ச,
  நாம் கதை நாயகனுடனான உறவு நிலை என்று மயங்க....

  வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா - அவள்
  வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
  குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில்
  கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ?

  -- காத்திருந்த கண்கள் பாடல் நிலைவில் வந்து அலைமோதியது!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஜீவி ஸார்.   நீங்கள் சொல்லியிருக்கும் பாடல் கூட முன்னர் பகிர்ந்திருக்கிறேன்.

   நீக்கு
 18. ஶ்ரீராம் புதிய பாடல்கள் பகிர மாட்டீங்களோ நேயர் விருப்பத்தில்??

  நான் ஏரிக்கரை மேலிருந்து ..... பாட்டை தேடிப் போடுவீங்களோ:)...
  அதிராவும் பாட்டுக் கேட்டேன் என சரித்திரத்தில் இடம்பெறட்டுமே:).. ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஞாபகம் வைத்திருந்து முயற்சிக்கிறேன் அதிரா...    பழைய நேவி எல்லாம் போச்!   இன்றிலிருந்து தொடங்க முயற்சிக்கிறேன்.

   நீக்கு
  2. இந்த, ஏரிக்கரை மேலிருந்து... பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. 93ல் துபாய்க்கு வேலைக்குச் சென்று முதல் மாத சம்பளத்தில் மிகப்பெரிய ஸோனி டூ இன் ஒன் வாங்கி இந்தப் பாடல் உள்ள கேசட் தயார் செய்து அடிக்கடி கேட்டேன். பழைய நினைவு அந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் வரும்.

   நீக்கு
  3. யேசுதாஸ் குரலில் பாடல் எனக்கும் பிடிக்கும். ஆனால் பாடல் ஏதோ முழுமை இல்லாதது போல தோன்றும்.

   நீக்கு
 19. முதல் பாட்டு கேட்ட நினைவு- இரண்டாம் பாட்டு கேட்ட மாதிரி இல்லை! காணொளியின் ஒலித்தரமும் அவ்வளவு நன்றாக இல்லை என நினைக்கிறேன்!

  தொடரட்டும் ரசித்த பாடல்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், காணொளி தரம் சரியில்லை.   ஆனால் பாடல் இனிமையாக இருக்கும். நன்றி வெங்கட்.

   நீக்கு
 20. ஸ்ரீதரின் கல்யான பரிசு படத்தின் பட்டுக்கோட்டையாரின் பாடல்களுக்கு புதுமையாக இசையமைத்து வெற்றிக்கொடி நாட்டியவர் ஏ.எம்.ராஜா.
  அந்நாட்களில் ஏ.எம்.ராஜா - ஜிக்கி என்று சேர்த்து உச்சரித்தே பழக்கப்பட்டிருந்த திரையுலக ரசிகர்கள்.

  //ஆணவம் பிடித்த மனிதராகவே பெரும்பாலான இசை அமைப்பாளர்கள் அவரைப் பார்த்தபோது, அவர் திறமையானவர், தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார் என்று மலையாள இசை அமைப்பாளர் ஜி தேவராஜன் மட்டும் அபிப்ராயப்பட்டாராம் //

  பொதுவாக திரையுலக பின்னணிச் செய்திகள் பலவற்றை நாம் அறியோம். பத்திரிகைகளில் பரவலாக உலா வரும் செய்திகளை உண்மை என்று நம்புவதற்கு பழக்கப்படுத்தப் பட்டவர்கள் நாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பத்திரிகைகளில் பரவலாக உலா வரும் செய்திகளை உண்மை என்று நம்புவதற்கு பழக்கப்படுத்தப் பட்டவர்கள் நாம்.//

   எல்லாம் பொய் என்றும் சொல்ல முடியாது இல்லையா?

   நீக்கு
 21. நேரிடையாக பொய் என்று இல்லாவிட்டாலும் உண்மை மாதிரியான என்று வேண்டுமானால் கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் ஏதோ காரனமிருக்கும் பொல்லாத காலம் இது.

  பதிலளிநீக்கு
 22. மண்பந்தல் பாட்டு அடிக்கடி கேட்டு இருக்கிறேன். வல்லி அக்காவின் விருப்பபாடல் அருமை.
  இரண்டாவது பாடல் அவ்வளவாக கேட்டது இல்லை.

  ஏ.எம் ராஜா பற்றிய செய்திகளை படித்து தெரிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!