திங்கள், 24 பிப்ரவரி, 2020

"திங்க"க்கிழமை  :  பேபி உருளைக்கிழங்கு ரோஸ்ட்  - ரமா ஸ்ரீனிவாசன் ரெஸிப்பி 

பேபி உருளைக் கிழங்கு ரோஸ்ட்

தேவையான பொருட்கள் : (நான்கு பேருக்கு)
கடுகு      : 1 டேபிள் ஸ்பூன்
உ. பருப்பு :  1 டேபிள் ஸ்பூன்
உப்பு       : சுவைக்கேற்ப
எண்ணெய் : 6 சிறிய டேபிள் ஸ்பூன்
அரைத்த மிளகாய் பொடி : 2 டேபிள் ஸ்பூன்

     முதலில், தேவையான அளவு பேபி உருளை கிழங்கை (நான்கு பேருக்கு நான் ¼ கிலோ எடுத்துக் கொள்வேன்) நன்றாக நீரில் கழுவி துணியால் துடைத்து விடவும்.  ஈரம் இருக்க கூடாது.  இதை ஒரு அகலமான பாத்திரத்தில் வைத்து குக்கரில் 6 விசில் விட்டு இறக்கவும்.சூடு ஆறிய பின், வெளியே எடுத்து தோலை உரித்து விடவும். பின்னர், ஒரு “fork” ஐ வைத்து ஒவ்வொரு பேபி உருளை கிழங்கையும் 5 அல்லது 6 இடங்களில் குத்தி ஓட்டை போடவும்.  பின்னர், ஒவ்வொரு பேபி உருளை கிழங்கையும் பாதியாக வெட்டி கொள்ளவும்.


பின்னர், வாணலியில் 6 முட்டை எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை நன்கு வறுத்துக் கொள்ளவும்.


உ.பருப்பு சிவந்த பின், இந்த வெட்டி வைத்த பேபி உருளை கிழங்கு துண்டுகளை இவையுடன் சேர்க்கவும்  மேலும், 6 முட்டை எண்ணெய் சேர்த்து சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.  நன்கு கிழங்கு வதங்கிய பின்னர், 2 டேபிள் ஸ்பூன் அரைத்த மிளகாய் பொடியை சிறிது தண்ணீருடன் சேர்த்து வதக்கலில் விடவும். மேலும் 6 முட்டை எண்ணெய் சேர்த்து, சிறிது அடுப்பை பெரியதாக்கி கை விடாமல் கிளறவும். 5 அல்லது 7 நிமிடங்களுக்கு பின்னர், பொன் முருவலாக வரும்போது, ஒரு 5 நிமிடங்கள் சிறிய ப்லேமில் வைத்து கிளறாமல் வதங்க விடவும். இப்போது அருமையான பேபி உருளை கிழங்கு ரோஸ்ட் தயார்.


70 கருத்துகள்:

 1. செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 2. நல்லதொரு சமையற்குறிப்பு...

  கனத்த தயிர் சாதத்துக்கு சுவையான தோழன்...

  பதிலளிநீக்கு
 3. 6 முட்டை எண்ணெய் - அட திருநெவேலி பாஷை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 6 முட்டை எண்ணை என்பது அளவா ? நான் கோழி முட்டையா ? என்று அதிர்ச்சியாகி விட்டது.

   படங்கள் அழகாக வந்து இருக்கிறது.

   நீக்கு
  2. அது உருண்டையா அரைக்இ கோளமா ருக்கும் மர ஸ்பூன். இப்போ தட்டையா இருக்கும் எவர்சில்வர் ஸ்பூன் அல்ல. கில்லர்ஜிக்கு எப்படீல்லாம் சந்தேகம் வருது... நல்லவேளை சொல்லிட்டீங்க. உங்க வீட்டுக்கு சாப்பிட வந்து இந்த ரெசிப்பியை நீங்க புரிஞ்சிக்கிட்ட மாதிரி செய்திருந்தீர்கள் என்றால் என் நிலைமை என்ன?

   நீக்கு
  3. வீட்டில் சமயலை முடித்து விட்டு கிளம்பி அலுவலகத்திற்கு வந்து அவசர வேலைகளை முடித்து விட்டுதான் ப்ளாக் பார்க்க முடிகின்றது. எனவே தாமதம். 6 முட்டை என்பது ஸ்ரீராம் கூறியது போல் 2 டீஸ்பூன்.

   நீக்கு
  4. ஓ நானும் அதிர்ந்துவிட்டேன்ன்... முதல் தடவையாக அறிகிறேன்...
   6 முட்டை = 2 tea s? ஆஆஅ இது என்ன கணக்கு....

   நீக்கு
  5. 6 முட்டை எண்ணெய்...ரொம்ப புதுசு...

   நீக்கு
  6. முட்டை என்பது அப்போது ஸ்பூனுக்குப் பதிலாக இருந்த சின்னக் குழிக்கரண்டி. எங்க வீட்டிலும் முட்டை என்றே சொல்லுவோம். எண்ணெய் முட்டை, நெய் முட்டை என்றெல்லாம் சொல்லுவோம். ஸ்ரீரங்கம் போனதும் முட்டையைப் படம் எடுத்துப் போடுகிறேன். அலுமினியத்திலும் முட்டை உண்டு, எவர்சில்வரிலும் உண்டு. வெள்ளியிலும் உண்டு. தாமிரம், பித்தளையில் இருந்தால் உத்தரணி! ஒரு உத்தரணி தீர்த்தம் கொடு என்பார்கள்.

   நீக்கு
 4. பேபி பொடேடோ ரோஸ்ட் மிக நன்றாக வந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 5. "செய்யாமற் செய்த உதவி" இதை யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிலபேர் உதவி செய்யறேன்ங்கிற பேர்ல செய்யறது உபத்திரவமா இருக்கும்.   அவங்க சும்மா இருந்தாலே போதும்னு அர்த்தமோ!!!!

   நீக்கு
  2. ஆனாலும்

   தான் எந்த உதவியும் ஒருவருக்கு முன்பு செய்யாதிருக்க அவர் நமக்கு முன் வந்து செய்கின்ற உதவி...

   - என்று பொருள் கொள்ளப்படுகின்றது...

   நீக்கு
  3. நான் சும்மா நகைச்சுவைக்காக சொன்னேன்!

   நீக்கு
  4. நன்றி துரை செல்வராஜூ சார்.

   நீக்கு
 6. ஸ்ரீ பகளாமுகி அம்மனின் தரிசனம் அவ்வளவு எளிதாகக் கிட்டாது என்பார்கள்...

  அன்பின் ஸ்ரீராம் கூட நேற்று நமது பதிவின் பக்கம் வரவில்லையே!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வந்தேன்.  தரிசனம் செய்தேன்.  நன்றி.   நேற்றைய ஸோலார் வேலையில் கணினிப்பக்கம் வரும் வாய்ப்பு குறைவாயிருந்தது!

   நீக்கு
  2. ஸ்ரீ பகளாமுகி என்று உணரப்பட்ட தேவிக்கு சந்நிதி என்பது தஞ்சை மாநகரில் மட்டுமே உள்ளது...

   ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோயில் எனப்படும் கோயிலில் சிவ சந்நிதி ஸ்ரீ காளி சந்நிதி என்று ஏக ஆனந்தமாக இருக்கும்...

   பல ஆண்டுகளுக்கு முன் இக்கோயிலில் படங்கள் எடுத்திருக்கிறேன்...

   அவற்றை எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை..

   கூடிய விரைவில் கிடைக்கும் அவள் அருளால்...

   நீக்கு
 7. வேகவைத்த உருளை உருண்டைகள் பார்க்கவே அழகு.
  உருளைக்கிழங்கை ஆண்டவன் படைக்காதிருந்தால் உலகின் கதி என்னவாகியிருக்கும்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருணைக்கிழங்கின் கருணையில் சமாதானமாகியிருப்பார்கள்!

   நீக்கு
  2. நேற்றைய டி ராஜேந்தர் எஃபெக்ட் இன்னும் இருக்கு போலிருக்கு

   நல்லவேளை பாஸ் இந்தத் தளத்தைப் படிக்கலை. இல்லைனா இன்று ஶ்ரீராமுக்கு கருணைக்கிழங்கு ரோஸ்ட்தான் (க கிழங்கு மசியல் தவிர வேறு முறையில் சாப்பிட்டதே இல்லை)

   நீக்கு
  3. எனக்கு உருளைக்கிழங்கு உயிரல்ல... சும்மா ரெண்டு கிழங்கு எடுத்துப்பேன். அவ்வளவுதான். அதனால் பாதகமிருக்காது.

   நீக்கு
  4. //உருளைக்கிழங்கை ஆண்டவன் படைக்காதிருந்தால் உலகின் கதி என்னவாகியிருக்கும்..!
   இனிப்பாக இருந்தாலும் glycemia அளவு குறைவாக இருக்கும் சரிக்கரைவள்ளிக் கிழங்கிடம் சரணடைந்திருக்கலாம்..!

   நீக்கு
  5. நம்மில் பல பேர் இருக்க மாட்டோம் சார்.

   நீக்கு
 8. //. 6 முட்டை எண்ணெய் சேர்த்து..//

  குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் சிலருக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு முட்டை = 2 டேபிள் ஸ்பூன்!

   நீக்கு
  2. //..= tடேபிள்ஸ்பூன்..//

   எங்கள் அகத்தில் உபயோகப்படுத்தும் வார்த்தைதான் இது. மற்றவர்களுக்கு - இதைக் கேள்விப்படாதோருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடுமே எனச் சொன்னேன்!

   நீக்கு
  3. 6 முட்டை என்பது ஸ்ரீராம் கூறியது போல் 2 டீஸ்பூன்.

   நீக்கு
  4. 1 tea spoon (தேநீர்க்கரண்டி) = 5 ml. 1 table spoon (மேஜைக்கரண்டி ) = 15 ml. ஒரு முட்டைக்கரண்டியின் கொள்ளளவு = 30 மி லி.

   நீக்கு
  5. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் யாருக்கும் முட்டையின் அளவு, சொல்லப் போனால் முட்டை என்றால் என்னன்னே தெரியலை. குழம்பு, ரசத்துக்குப் பயன்படுத்தும் குழிக்கரண்டியின் சின்ன அளவே முட்டை. இதில் பெரிய,சின்ன முட்டைகள் எல்லாம் உண்டு. ஆகவே இரண்டு முட்டைக்கு எத்தனை டீஸ்பூன் அல்லது டேபிள் ஸ்பூன் என்பதை வரையறுக்க முடியாது. ஸ்ரீராம் டேபிள் ஸ்பூன் என விளக்கி இருக்கார். ரமா ஸ்ரீநிவாசன் டீ ஸ்பூன் எனச் சொல்லி இருக்கார். மொத்தத்தில் நெல்லை/ஏகாந்தன் தவிர்த்து யாருக்கும் புரியலைனு நினைக்கிறேன். கௌதமன் ஓரளவுக்கு விளக்கப் பார்த்திருக்கார். டீஸ்பூன்/டேபிள் ஸ்பூனுக்குச் சரி. முட்டை அளவைப் பொறுத்து 30 மில்லியா இல்லைனு சொல்ல வேண்டும். உத்தேசமாக ஆறு முட்டை (நடுத்தரமானது) 30 மில்லி கொள்ளலாம்.

   நீக்கு
 9. நேற்றைக்கு முந்தைய தினம் கிலோ 20 ரூபாய்க்கு பெங்களூரில் சிறு உருளை வாங்கிச் செய்தோம். நான் சாப்பிட ரொம்ப நேரமாகிவிட்டதால் சிறு தீயில் நெடு நேரம் வைத்திருந்ததால் காரம் இல்லாத மாதிரி தோன்றியது. இதற்கு உற்ற தோழனாக அன்று வெங்காய சாம்பார் செய்தேன் (75%.. அப்புறம் முடிக்கும் வேலை மனைவியோடது ஹா ஹா)

  பதிலளிநீக்கு
 10. எல்லோரும் தயிர் சாத்த்துக்கு உற்ற தோழன் என்பார்கள். ஓரிரண்டென்றால் ஓகே. இல்லைனா அதுவும் கார்போஹைட்ரேட், உருளையும் கார்ப். அவ்வளவு சுவைக்காது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் தயிர் / மோர் சாதத்துக்கு எந்தக் காயும் தொட்டுக்கொள்ள மாட்டேன். என் வழக்கம்!

   நீக்கு
  2. நான் தயிர் / மோர் சாதத்திற்கு மணத்தக்காளி வற்றல் கடையில் வாங்கியது - raw - பொறிக்காமல், வதக்காமல் அப்படியே தொட்டுக்கொள்வேன்.

   நீக்கு
  3. சேம் பின்ச் ஸ்ரீராம். எனக்கு மட்டுமல்ல எங்கள் வீட்டில் எங்கள் அப்பா உள்பட யாருக்கும் மோர் சாதத்திற்கு எதுவும் தேவையில்லை. மாகாளி கிழங்கு, ஆவக்காய் போன்றவை இருந்தால் கொஞ்சம் போட்டுக் கொள்வேன்.  

   நீக்கு
  4. @கெள அ
   மணத்தக்காளி வற்றல் கடையில் வாங்கியது - raw - பொறிக்காமல், வதக்காமல் அப்படியே தொட்டுக்கொள்வேன்.////
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர் கைக்குமே....

   நீக்கு
 11. முதலில் எண்ணெய் விட்ட வாணலியும் பிறகு உருளை ரோஸ்ட் செய்த வாணலியும் வேறு வேறு. சரியா ரமா ஶ்ரீநிவாசன்?

  (இப்படீல்லாம் கண்டுபிடித்து எழுதலைனா பா.வெ மேடம் இது நெல்லைதானான்னு சந்தேகப்படுவாங்க)

  இன்று நல்ல ரெசிப்பி. இதை, எண்ணெய் உப்பு காரப்பொடி கலந்து உரித்த உருளையில் கையால் கலந்து செய்தால் (கீதா சாம்பசிவம் அவர்கள் ஒரு தடவை சொன்ன மெத்தட்) இன்னும் நல்லா வருமோன்னு சந்தேகம். செய்து பார்த்துவிட்டு எழுதறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நெல்லைத்தமிழன் அவர்களே. ஏனினில் அந்த வானலி விரைவில் சூடாகி கிழங்கை கருக்கி விடும்.
   இந்த ரெசிப்பி நான் அடிக்கடி செல்லும் ஒரு சிற்றுண்டி உணவகத்தின் chefஇடம் கேட்டு அறிந்தது. இப்படி செய்தால் அந்த மிளகாய் பொடி திப்பி திப்பியாக இல்லாமல் நீருடன் கலந்து கோர்வையாக கிழங்கு நன்றாக வருபட உதவியாக இருக்கின்றது. அனுபவத்தில் அறிந்தது.

   நீக்கு
  2. /////செய்து பார்த்துவிட்டு எழுதறேன்///
   நான் இதை மறக்க மாட்டேன்ன்ன்ன்:).. எப்போ செய்யப்போகிறார் பார்ப்போம்:)

   நீக்கு
  3. உருளைக்கிழங்கைக் குக்கரில் வைப்பதில்லை. பொதுவாகக் குக்கரில் சமைப்பதே அரிது. அதிலும் கால் கிலோ உருளைக்கிழங்கை ஆறு விசில் கொடுத்தால் எனக்கெல்லாம் குழைந்து விடுகிறது. ரமா ஸ்ரீநிவாசனுக்குக் குழையவே இல்லை. அதோடு பேபி உருளைக்கிழங்கே சின்னது. அதையும் எதுக்கு இரண்டு துண்டாக வெட்டணும்? முழுசாக அப்படியே வதக்குவேன். என்னோட முறை தேவையான மிளகாய்ப் பொடி+உப்பு+பெருங்காயம் சேர்த்து வதக்கத் தேவையான எண்ணெயில் பாதி அளவை அதில் ஊற்றி நன்கு கலந்து கொண்டு வேக வைத்துத் தோலுரித்த உருளைக்கிழங்கைப் போட்டு நன்கு கலந்து விடுவேன். ஒரு அரை மணியாவது ஊறிய பின்னர் கடாயில் தாளிக்க மட்டும் எண்ணெய் ஊற்றிக் கடுகைப் போட்டுப் பொரிந்த பின்னர் ஊற வைத்த உருளைக்கிழங்கைப் போட்டு நன்கு வதக்குவேன் குறைந்த தீயில். தண்ணீரில் எல்லாம் கரைத்துவிடுவதில்லை. உதிர்ப்பதும் இல்லை. உளுத்தம்பருப்பை அநேகமாய்க் கத்திரிக்காய் தவிர்த்த மற்ற வதக்கல் கறிகளுக்குச் சேர்ப்பது இல்லை. திருமதி ரமா ஸ்ரீநிவாசனுக்கு தண்ணீரெல்லாம் சேர்த்துக் கரைத்துவிட்டும் நன்றாக வந்திருக்கிறது. அதோடு மிளகாய்ப் பொடியை நான் ஆரம்பத்திலேயே போட்டுவிடுவேன். இல்லைனா பொடி வாசனை வராப்போல் ஓர் எண்ணம்! :))))

   நீக்கு

 12. 6 முட்டை எண்ணெய்விட்டு என்று படித்ததும் என்னடா எங்கள் ப்ளாக்கில் நான் வெஜ் ரிசிப்பி எல்லாம் எப்ப இருந்து போட ஆரம்பிச்சாங்க என்று யோசிக்க வைத்துவிட்டார் பதிவை எழுதியவர்..


  ஆமாம் பேபி ரோஸ்ட் எழுதிய பேபி இங்கு மிக புதியவரா?

  பதிலளிநீக்கு
 13. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். பெபிள்ஸ். உரிக்கிற வழக்கம் கிடையாது.முட்டை எண்ணெயில் பல அளவு உண்டு. இங்கு ரமா சொல்லி இருப்பது என்ன அளவு என்று சொல்லணும். அழகா வந்திருக்கு. வாழ்ததுகள் மா. அப்படியே கிண்ணத்தில் வைத்துச் சாப்பிட்ட நாட்கள் உண்டு. இப்போ எல்லாம் பார்த்துட்டு நகருகிறேன். வாயு:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வல்லி மாமி, நன்றி. அதே கதைதான் இங்கும். மகள்கள் வரும்போது செய்வதோடு சரி. மற்றபடி சர்வ ஜாக்கிரதையாக நாங்கள் இருக்கின்றோம்.

   நீக்கு
 14. இம்முறையில் செய்தால், மிக நன்றாக வருகின்றது. ஆனால், பேபி உருளை மட்டுமே ஒத்துப் போகும். யாவரும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

  பதிலளிநீக்கு
 15. நல்ல சமையல் குறிப்பு. அப்படியே செஞ்சு அனுப்பினா நல்லா இருக்கும்.

  தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
  இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது “திங்க”க்கிழமை : பேபி உருளைக்கிழங்கு ரோஸ்ட் – ரமா ஸ்ரீனிவாசன் ரெஸிப்பி பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். உங்களைப் பற்றியும் உங்கள் வலைத்தளம் பற்றியும் ஒரு பதிவை நீங்களே விரிவாக எழுதி எமது valaioalai@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

  உங்கள் வலைத்தளம் எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிகரம் பாரதி அவர்களே, அவசியம் valaioalai@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு என் பதிவின் விர்வுகளை பற்றி எழுது அனுப்புகின்றேன். உங்கள் ஆதரவிற்கு நன்றி.

   நீக்கு
 16. பேபி பொடேடோ ரோஸ்ட் எனக்கும் பிடிக்கும்.
  நன்றாக இருக்கிறது செய்முறை படங்களுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேடம், படங்கள் Red mi Note Pro மொபைல் தொலைபேசியின் கைவண்ணம். நன்றி.

   நீக்கு
 17. பேபி பொடேடோ ரோஸ்ட் ....tasty..

  பார்க்கவே அட்டகாசமா இருக்கு.

  பதிலளிநீக்கு
 18. பேபி உருளை கிடைக்கும்பொது செய்வதுண்டு

  பதிலளிநீக்கு
 19. வல்லி மாமி. ஒவ்வொரு வெண்டைக்காயும், கத்தரிக்காயும், முறுங்கைக்காயும் ஒரு தனி கதை சொல்கின்றது. அவர்கள் சமைக்கும் விதம் நம்மை வெட்கத்தில் ஆழ்த்துகின்றது. நாம் எல்லாவற்றையும் அதிகப் படுத்துகின்றோமோ என்று எண்ண வைக்கின்றது. அவர்கள் பரிமாரும் நபர்களை பார்க்கும்போது கண் கலங்குகின்றது. நாச்சியார் ப்ளாகில் share செய்ததற்கு மிக்க நன்றி. எனக்கு அதில் எப்படி comment post பன்னுவது என்று தெரியவில்லை. எனவே இங்கு வெளியிட்டேன். ரமா ஸ்‌ரீனிவாசன்.

  பதிலளிநீக்கு
 20. எங்க இரண்டு பேருக்கே கால் கிலோ பத்தாது. இவங்க நாலு பேருக்குக் கால்கிலோனு சொல்றார். யாரேனும் இரண்டு பேர் சும்மாப் பார்த்துட்டுப் போயிடுவாங்களோ? இஃகி,இஃகி,இஃகி, அரைக்கிலோ உருளைக்கிழங்குக்கே அடிச்சுக்கற வகை நாங்கல்லாம். :))))))

  பதிலளிநீக்கு
 21. சுவையான குறிப்பு. இங்கே பேபி ஆலு கிடைப்பது அரிது. பெரிய உருளைக்கிழங்கு தான் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் சகோதரரே

  இன்றைய திங்கற பதிவில் சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் தயாரிப்பான பேபி உருளை கிழங்கு ரோஸ்ட் படங்கள் செய்முறையுடன் மிகவும் நன்றாக உள்ளது. இருதினங்கள் உறவினர் வருகையால் என்னால் வலைத்தளம் வர இயலவில்லை. எனவே தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!