ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

ஞாயிறு :: கண்களின் காட்சிப்பிழை!மலையோரம் போகும் ரோடு...    அதில் காணும் சில கோடு!


மலையோரம் வீசும் காத்து... மனசோடு பாடும் பாட்டு...


மலையடிவார வீடு... அதற்கேதும் பாட்டுண்டா பாரு...!

தளுக்கு மினுக்காய் வீடு...   இதற்கும் ஒரு பாட்டு தேடு!

அது கடையா?  கழிவறையா?  இந்தக் கேள்வி முறையா?


"கம்முனு இருங்க...   அங்க ஒரு பார்ட்டி கேள்வியா கேட்டுக்கிட்டிருக்கு!"

தள்ளித் தெரியுது மலை..   கொடுக்க வேண்டும் சாலைக்கு விலை!

இருபுறமும் இருக்குது கடை...   நடுவிலே இருப்பது தடை!

வேகம் வேண்டாம்...   விவேகம் வேண்டும்!

செல்வோம் சாலையின் இடது ஓரம்...   முன்னால போகுது பாரம்!


முன்செல்பவரை பின்தள்ளி ஜாக்கிரதையாய் முன்னேறுவோம்...

அடுத்தடுத்து பார்த்தால்...

அழகிய மலையும்...

அலுத்தே போய்விடும்!


ஓட்டுனரின் தலையையும் பார்க்கலாம், பின்னே தெரியும் மலையையும் பார்க்கலாம்!


மலையைவிட மின் கோபுரம் உயரமாகத்தெரிவது கண்களின் காட்சிப்பிழை!


ஒரே மலை...  பலமுறை!


மலையே..   இந்த வாரத்தோடு சரியா?  இல்லை அடுத்த வாரமும் வரியா?

25 கருத்துகள்:

 1. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றயவை..

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 2. வார்த்தைகளை ரசித்தேன் ஜி ஸூப்பர்

  பதிலளிநீக்கு
 3. இன்று டி ராஜேந்தர் காற்று பலமாக அடித்துவிட்டதா?

  ஓரம் பாரம். கடை தடை.... வடை அடை தான் மிஸ்ஸிங்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நெல்லை...    அதையும் எங்காவது நுழைத்திருக்கலாமோ!

   நீக்கு
 4. ஏதோ படம் எடுத்தபின் கலைவாணர் நகைச்சுவை சேர்த்து வெற்றிப்படமாக்க முயல்வதுபோல கவரும் படத் தலைப்புகளை வைத்து சமாளிக்கறீங்க. இந்தப் பகுதி சுவாரசியம் இல்லாமல் செல்கிறது

  பதிலளிநீக்கு
 5. மொழி நடை பிரமாதம்.வீடு சேர்ந்ததற்கு வாழ்ததுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப அவசரம் எங்க வல்லிம்மாவுக்கு. இப்போதான் குன்றை பல ஆங்கிள்ல படம் எடுத்திருக்காங்க. இன்னும் ஏரி, மரம், ரோடு என்று பல படங்கள் வரவேண்டியிருக்கு. அதுதவிர அதே வஸ்துகள் காரின் முன்பக்கத்திலிருந்து எடுத்தவைகள் பிறகு பின்பக்க கண்ணாடி வழியாக, சைடு சன்னலிலிருந்து.... வரிசைகட்டி வரும். அவசரம் கொள்ளேல்

   நீக்கு
  2. ஓஹோ!சரி சரி. நோ அவசரம்:) நன்றி முரளிமா!

   நீக்கு
  3. இவை வீட்டிலிருந்து புதிய இடம் செல்லும் படங்கள்.   வீடு வரும் படங்கள் அல்ல.

   நீக்கு
 6. படங்கள் அருமை... கீழே இறங்கி எடுத்த படத்தை தான் காணாம்... ஹா...ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரும்...   வரும்...   வரும்வரை கொஞ்சம் பொறும் பொறும்...!!!   நன்றி  DD.

   நீக்கு
 7. தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
  இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஏழு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். உங்களைப் பற்றியும் உங்கள் வலைத்தளம் பற்றியும் ஒரு பதிவை நீங்களே விரிவாக எழுதி எமது valaioalai@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

  தங்கள் வலைத்தளம் எமது வலைப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது: வலைப் பட்டியல்

  பதிலளிநீக்கு
 8. பயணத்தில் எடுத்த படங்களும் அதற்கு கொடுக்க பட்ட வாசகங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
 9. படங்கள் எல்லாம் நன்றாக உள்ளன. யோசித்து யோசித்துத் தலைப்புக்களைக் கொடுத்திருக்கும் ஸ்ரீராமுக்கும் வாழ்த்துகள். எந்த ஊருக்குப் போகிறார்கள்?

  பதிலளிநீக்கு
 10. படங்கள் அழகு.

  ஓட்டுனரின் கையில் அலைபேசி - பேசியபடி ஓட்டினாரோ?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!