வியாழன், 6 பிப்ரவரி, 2020

சர்க்கரைல காபி பத்தாது! - ஒற்றைக்குடை 


பிலஹரி கதைகளை அவ்வப்போது கொடுக்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.  அந்த வரிசையில், இதோ இரண்டாவது...  "டேய், மணி என்ன ஆச்சு பார்த்தியாடா?"

"ஏன்?...."

"பதினொன்றுக்கு மேலாச்சு!...  அந்த 'வாட்டர் மேன்' வந்தானா?...  பார்!"

"அந்த அசடு தானே?...  எங்கே ஒழிஞ்சு போனானோ, யார் கண்டது?  ... நா வறண்டு போற சமயத்துலே இவன் தண்ணீர் கொண்டு வராம, எப்போக் கொண்டு வரப்போறான்?..."

"டேய்!...  அதோ வர்றது!"

"அவன் வர்ற அழகைத்தான் பாரேன்!...  தோளிலே அழுக்குத் துண்டு; அழுக்கு பனியன்; தராசு ஆடற மாதிரி, ரெண்டு கையிலும் வாளியை எடுத்துண்டு, இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அவன் அலைஞ்சுண்டு வர்ற கோலத்தைப் பார்த்தா, அவன் கொடுக்கற நீர் தொண்டையிலேயே இறங்காது போலிருக்கே !..."

பேச்சு நிற்கிறது.  பெருமூச்செறிந்தவாறே பூதாகரமான இரண்டு வாளிகளையும் எடுத்துக்கொண்டு, அருகில் வந்து விடுகிறான் மன்னார்.  

வாளிகளைக் கீழே வைத்து விட்டு, தோளில் கிடந்த துண்டை எடுத்துச் சாவதானமாக அவன் முகத்தைத் துடைத்துக் கொள்வதைக் கண்ட குமாஸ்தா ஒருவருக்கு கோபம் பிறக்கிறது.

"ஏண்டா?... வந்ததே லேட்.  இதிலே சிரமபரிகாரம் வேறே நடக்கணுமா?" என்று சீறுகிறார் அவர்.

மன்னார் சிரிக்கிறான்.

"ஏது?... சாருக்கு இன்னிக்கு வீட்டில் உள் நாட்டு யுத்தம் நடந்திருக்கு போலிருக்கு!...  அதுதான் 'மூடு' சரியில்லாமே...."

"சீச்சீ!..  வாயை மூடுடா!...  அழகாய்தான் பேசறே?...  தண்ணி குடு முதல்லே!..." என்று அவர் ஆத்திரத்துடன் கூறவே, மன்னாரின் உடம்பில் சுறுசுறுப்பு பிறக்கிறது.  தன் பணியைத் தொடங்குகிறான் அவன்.

அரை மணி நேரத்தில் எழுபது பேருக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும்.  ஒருவர் வெந்நீர் கேட்பார்; மற்றவருக்குக் குளிர்ந்த நீர் தேவைப்படும்.  ஒரு வாளியில் சூடான தண்ணீரும், மற்றொன்றில் குளிர்ந்த நீரும் எடுத்து வந்தால், முப்பது பேருக்கு சமாளித்து விடலாம். மீதி உள்ளவர்களுக்கு  மறுபடியும் தன்னறைக்குச் சென்று, எடுத்து வரவேண்டும்.

"டேய் வாடா!..."

அழைப்பவன் அருகே செல்கிறான் மன்னார்.

"இதைப் பாருடா!"

"தம்ளரைக் காட்டுகிறார் அவர்...  குனிந்து பார்க்கிறான் அவன்.

"என்னடா அப்படி யிருக்கு?"

"எப்படியிருக்கு?" 

"என்னையே திருப்பிக் கேட்கறியா?  தண்ணீர் கலங்கி இருக்கிறது தெரியல்லே?"

உண்மையில் அவனுக்குத் தெரியவில்லை.

"உன்னைத் சொல்லிக் குற்றமில்லை! அரையணா, ஓரணா கொடுக்கறான்னு எல்லோருக்கும் காப்பி வாங்கிண்டு வந்து கொடுத்துட்டு, அந்தத் தம்ளரைக் கூடக் கழுவாமல் அதிலே தண்ணீர் எடுத்துக்கிட்டு வந்தால் எப்படி இருக்கும்..?  வாங்கற சம்பளத்துக்கு வஞ்சனை யில்லாம உழைக்க வேண்டாம்?..."

மன்னார் சிரிக்கிறான். எட்டு மணி நேர வேலை நேரத்தில் நாலு மணி நேரத்தை அவன் அறைக்கு எதிரே டிபன் அறையில் அரட்டை அடித்துக் கழிக்கும் அந்த மகானுபாவன் 'வஞ்சனை யில்லாமல் உழைக்க வேண்டும்' என்கிறார்.

"சிரிக்கவா சிரிக்கிறே!  உன் தண்ணீரை நீயே எடுத்துக்கிட்டு போ!"

கோபமாக அவர் அந்தத் தம்ளரை அவன் கையில் கொடுத்த பொது, தண்ணீர் தடுமாறுகிறது.  பாதி நீர் அவன் ஆடைகளில் சிந்துகிறது.

அவனுக்கு கோபம் வரவில்லை.  அவனுடைய பதினைந்து வருஷ சர்வீஸில் இதெல்லாம் வெகு சகஜம்.

"மன்னார் இங்கே வாப்பா!"

வயதான குமாஸ்தா ஒருவரிடமிருந்து அழைப்பு வருகிறது.

"இது என்ன தண்ணீர் அப்பா?"

"வெந்நீர் சார்"

"வெந்நீரா?...  அப்படீன்னா ஒரு காகிதத்திலே எழுதி, தம்ளரில் ஒட்டு!  அப்போ தான் தெரியும்!"

"சரியாகச் சொன்னீர்கள் சார்!.... நானும் அதையேதான் கேட்கணும்னு நினைச்சேன்!... இவன் கொடுக்கற பச்சைத் தண்ணீருக்கும் வெந்நீருக்கும் வித்தியாசமே தெரியறது கிடையாது " என்று ஒத்துப் பாடுகிறார் டைப்பிஸ்ட்.

"நான் என்ன சார் பண்றது?...  வெந்நீர் போட்டு, இங்கே எடுத்துண்டு வந்து சப்ளை செயயறதுக்கு அரைமணி நேரம் ஆயிடறது!...  ஆறிப் போகாமல் இருக்க முடியுமா, சொல்லுங்கள் சார்!" என்று அவன் சமாதானம் கூறவும், .

"அது வாஸ்தவம்தான்.  ஆமாம்!  அடுப்பில் நிறைய கரி போட்டுத் தண்ணியை வையேன்!..." என்று அவர் யோசனை கூறியதும், சிரிப்பு வருகிறது அவனுக்கு.

"கரி போடாம அடுப்பு பற்றுமா சார்?"

அது தான் நானும் சொல்றேன்!...  போடற கரியை நிறைய போடணும், ஆமாம்!...  கரி மூட்டை ஆபீஸ் சப்ளை தானே?"

தலையசைக்கிறான் மன்னார்.

"பின்னே என்ன?...  தாராளமாக அள்ளிப் போடேன்...!  பாவம், உன் நிலைமை எனக்குத் தெரியறது!  தேனை எடுக்கறவன் ருசி பார்க்காமல் இருக்க முடியாதுதான்!  அதுக்காக ஒரேயடியா கபளீகரம் பண்ணினால், எப்படி?..."  என்று அந்தப் பெரிய மனிதர் கூறியதும், அவனுக்கு அவர் குறிப்பிடுவது தெரிந்து விடுகிறது.

"என்ன ஸார் அப்படிச் சொல்கிறீர்கள்?...  போயும் போயும் கரியை தான் நான் வீட்டுக்கு எடுத்துண்டு போகணுமா? " வேதனையுடன் அவன் கேட்கிறான். 

"சரிதாம்ப்பா!  கரிமூட்டை தான் ஏக விலை விக்கறதே!...  ஒரு பேச்சுக்கு சொன்னேன்....! இனிமேல் கொஞ்சம் சூடா கொண்டு வா!"

பதில் பேசாமல் அவரிடமிருந்து தம்ளரைப் பெற்றுக்கொண்டு திரும்புகிறான் மன்னார்.

கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன மொழிகள்; சாபங்கள்.


டுப்பகல் மணி பன்னிரண்டரை.

தன்னறையில் கொட்டாவி விட்ட வண்ணம் அமர்ந்திருக்கிறான் மன்னார்.  இன்னும் அரைமணி நேரத்திற்கு அவனுக்கும் கொஞ்சம் ஓய்வுதான்.

ஓர் ஓரத்திலே இரும்பு அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது.  அதன்மேல் கரியேறிய பாத்திரம்.  மற்றொரு மூலையிலே இரண்டு பெரிய பானைகள், அருகே வாளிகள், ஐந்தாறு தம்ளர்கள்.  கதவுக்குப்பின் கரி மூட்டை.

ஆயிற்று;  அரை மணிக்கெல்லாம் ஒருவர் பின் ஒருவராக சிற்றுண்டி சாப்பிட, எதிரேயுள்ள அறைக்கு வந்து விடுவார்கள்.  வருபவர் தண்ணீர் மாத்திரம் கேட்டால் கொடுத்து விடலாம்;  அது அவன் கடமை.

"மன்னார்!... ஹோட்டல்லே போய் ஒரு வடை வாங்கிண்டு வா.  நிறையச் சட்னி வைக்கச் சொல்! ...  வெறும் சோறு கொடுத்து அனுப்பி இருக்காங்க வீட்டிலே!..."

"வாட்டர் மேன்!...  கிளாஸ் எடுத்துண்டு போய், கேண்டீன்லே டீ வாங்கிண்டு வா!... உம்....  ஜல்தி..."

'மாட்டேன்!' என்று சொல்லலாமா?  சொல்லத்தான் முடியுமா?

'சே!  என்ன உத்தியோகம் இது?  கொஞ்சம் கூட கௌரவமோ, மதிப்போ இல்லாத ஊழியம் செய்வதற்கு பதிலாக பேசாமல் பட்டினி கிடந்து சாகலாம்..   அந்த நாளிலே அப்பா முட்டிக் கொண்டாரே!  ஒழுங்கா பள்ளிக்கூடம் போய் நாலெழுத்துப் படிச்சிருந்தா, ஒரு குமாஸ்தா வேலை கிடைச்சிருக்காது?  இப்படி கண்ட கண்ட ஆசாமிகளிடம் பல்லைக் காட்டிக்கொண்டும்,  தலையைச் சொரிந்து கொண்டும் நிற்பது ஒரு வேலையா?  ஒரு தொழிலா?  எனக்கு என்ன மதிப்பு இருக்கு?   ஆபீஸிலே மாத்திரம் இல்லை, சமூகத்திலும் எனக்கு என்ன மதிப்பு இருக்கு?  எவன் லட்சியம் பண்றான்?  ஏதோ பெயருக்கு மனிதன்னு உலாவி வரேனே தவிர, வேறு என்ன யோக்கியதை எனக்கு இருக்கு?  படிப்பு இல்லே, பணம் இல்லே, அழகும் கிடையாது.சமூகத்துக்கு நான் ஒரு சாபக்கேடு!'

எண்ணி எண்ணிப் பொருமுகிறான் மன்னார்.  இதயம் வேதனைச் சுமை சுரங்கமாக இருக்கிறது.


"யாரப்பா!  நம்ப மன்னார் மாதிரி இருக்கே!"

திரும்பிப் பார்க்கிறான் மன்னார்.  அலுவலகத்தில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அவனுடன் பேசிய பெரிய மனிதர் இரண்டு கைகளிலும் இரண்டு பெரிய பைகளுடன் வந்துகொண்டிருந்தார்.

"இப்போதான் வீட்டுக்குப் போறியாடா?  கொடுத்து வைச்சவனப்பா நீ!  சித்தன் போக்கு சிவன் போக்குன்னு அலையறே!....  உம்!...இந்தப் பையைக் கொஞ்சம் பிடியேன்!....  சம்பளத் தேதி.   மளிகைச்சாமான்கள் வாங்கிண்டு போறேன்! ...   ஒரு பையை வீடு மட்டும் கொஞ்சம் எடுத்துகிட்டு வாயேன்!..."

அவர் சொல்லி முடிக்கவில்லை.  பரபரப்புடன் கனமான பையாகப் பார்த்து தான் வாங்கி கொள்ளுகிறான் மன்னார்.  தன்னை ஒரு நண்பனாக நினைத்து உரிமையுடன் அந்த மனிதர் பேசியது தான், அவனுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது!

"வேலை வாங்கறேன்னு எண்ணாதே அப்பா!  காப்பிக்குச் சில்லறை கொடுத்திடறேன்!" என்று முன்னால் போய்க்கொண்டிருந்த அவர் கூறவும், ஓரிரு வினாடிகள் அவனுக்கு ஏற்பட்ட ஒரு ஆத்ம திருப்தியும், அற்ப சந்தோஷமும் மறைந்து விடுகின்றன.

'சே!... இவ்வளவுதானா இந்த உலகம்?  கேவலம் ஒரு டீக்கு வேண்டிய துட்டைக் கொடுத்துத்தானா,  ஒருவர் தன்னிடம் வேலை வாங்க வேண்டும்?  தன்னையும் ஒரு பிறவியாக நினைத்து, அந்த நினைப்பின் அடிப்படையிலே தன்னை உபயோகித்துக்கொள்ளும் மனித இதயம் படைத்தவர் எவருமே கிடையாதா?...'

[ மீதி அடுத்த வாரம்.... ]


=================================================================================================

சிவாஜி பகிர்வு :


ஒய்.ஜி. மகேந்திரன் :

இசைஞானி இளையராஜா என் நெருங்கிய நண்பர். அவரது, 'பாவலர் பிரதர்ஸ்' ஆர்கெஸ்ட்ராவில் பலமுறை, ட்ரம்ஸ் வாசித்திருக்கிறேன். அதனால், இளையராஜா என்னை, 'டிரம்மர்' என்று தான் கூப்பிடுவார். இளையராஜா என்னிடம் பகிர்ந்து கொண்ட சுவையான நிகழ்ச்சி இது:


கவரிமான் படத்தில், கச்சேரி பாணியில் அமைக்கப்பட்ட, 'ப்ரோவ பாரமா' என்ற பாடல் காட்சியில், சிவாஜி எப்படி நடிக்கிறார் என்று பார்க்க எனக்கு ஆசை. ரீ- ரிகார்டிங் செய்யும்போது, அந்த காட்சியை பார்த்தேன். ஸ்வரம், தாளம் ஒரு இடத்தில் கூட தப்பாமல், அனுபவம் வாய்ந்த சங்கீத வித்துவான் மாதிரி, பிரமாதமாக சிவாஜி நடித்திருந்தார், என்று,  ஆச்சரியமாக கூறினார் இளையராஜா.கவரிமான் படத்தில், நெருடலான ஒரு காட்சி இடம் பெறும். சிவாஜி வீட்டிற்கு வருகிறார், அவர் மனைவி பிரமிளா, சிவாஜியின் நண்பரான ரவிச்சந்திரனுடன் படுக்கையில் இருக்கையில், சிவாஜி பார்த்துவிடுவார். 'இது தான் அண்ணே சீன், நீங்க பண்ணுங்க...' என்று, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கூலாக கூறினார்.

'ஏய், முத்து, இங்கே வா...இதற்கு, என்ன ரியாக்ஷன் கொடுக்கச் சொல்றே... வாழ்க்கையில் எல்லா விதமான சூழ்நிலைகளையும் அனுபவச் சிருப்போம். அதையெல்லாம் நடிப்பாக கொண்டு வரமுடியும். இப்போ நீ சொல்கிற சீன் யாருக்கும் வரக்கூடாத சூழ்நிலை. இதற்கு என்ன ரியாக்ஷன் கொடுக்க முடியும்ன்னு நினைக்கறே...' என்று கேட்டார்.

எஸ்.பி.முத்துராமன் சிரித்துக் கொண்டே, 'அதுக்குத்தாண்ணே சிவாஜி! நீங்க செஞ்சிடுவீங்க...' என்று சமாதானம் சொன்னார்.
'சரி... என் கற்பனையில் வருவதை செய்யறேன், சரியாக இருந்தால், வைச்சுக்கோ...' என்று கூறி, நடிக்க ஆரம்பித்தார். உணர்ச்சிகளை அப்படியே கொட்டியிருப்பார்.

செட்டில் இருந்த அனைவரும், சிவாஜியின் நடிப்பில், மெய்மறந்து போயினர். டைரக்டர்எஸ்.பி.முத்துராமன், 'கட்' சொல்ல, மறந்து விட்டார்; கேமராமேன் பாபு அந்தக் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார். கேமரா பொருத்தப் பட்டிருந்த டிராலியை, தள்ளிக் கொண்டு வரும் கேமரா உதவியாளர், சிவாஜியை மெய் மறந்து பார்த்துக் கொண்டே, டிராலியை அதிகமாக தள்ளி விட, தடம் புரண்டு, கேமரா கீழே விழ இருந்தது. சிவாஜி, அதைப்பார்த்து, உஷார்ப் படுத்த, கேமரா காப்பாற்றப்பட்டதாக ஒளிப்பதிவாளர் பாபு என்னிடம் கூறினார்.


======================================================================================

பொக்கிஷம்  :

நான் காபிக்கு மிக மிகக் கம்மியாக சர்க்கரை போட்டுக்கொள்வேன் .  என் பாஸ் மிக மிக அதிகமாக சர்க்கரை போட்டுக்கொள்வார்.  அதைப்பார்க்கும்போது அவ்வப்போது நான் 'சர்க்கரைல காபி பத்தாது' என்று நான் சொல்வேன்.   இது 60 களில் வந்திருக்கும் துணுக்கு!
பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும் பாஸ்!


=============================================================================================


ஒருமுறை குடை பற்றி ரிஷபன் ஸார் ஒரு கவிதை எழுதி இருந்தார்.  அது வேறு ரகம்.  அந்த இன்ஸ்பிரேஷனில் அப்போது எழுதியது இது. முன்னரேயும் பகிர்ந்திருப்பேன்.

அதற்கு வந்த கமெண்ட் ரிஷபன் ஸாரே எழுதியிருந்தார்.


83 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அடடே... வாங்க ஏஞ்சல்...    ஆச்சர்யம்!

   நீக்கு
  2. எதிர்பாராததை எதிர்பாருங்கள் :)))))))))))))))))

   நீக்கு
  3. //Angel6 பிப்ரவரி, 2020 ’அன்று’ முற்பகல் 5:31
   AAAAAAAAAAAAAAAAAAAAAAAAWWWW

   FIRST :))))))))))))))))))))))))))))))//
   ஆஆஆஆஆஆஆஆஆ இதென்ன கொடுமை ஜாமீஈஈஈஈஈஈ இதைத்தட்டிக் கேய்க்க ஆருமே இல்லையோ:)).. அதாவது ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சக்கரையாமே:)) அப்பூடி இருக்குதே.. போட்டியே இல்லாமல் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ:)) ஹா ஹா ஹா எனக்கொன்றும் புகையேல்லையாக்கும் இதுக்காகவே நேற்றும் மோர் குடிச்சேனே:))..

   என்னால சிரிப்பதை நிறுத்த முடியுதில்லை:)) அந்த மேன்மை தங்கிய, மதிப்பிற்குரிய, கெளரவமான, அடக்கொடுக்கமான... திருவாளர் பேய் அவர்களைக் கொஞ்சம் இங்கின வந்து சிரிக்கச் சொல்லுங்கோ ஸ்ரீராம்:)).. அப்போதான் என் ஆன்மா.. ஆத்மா.. உயிர்... ஜாந்தியை அடையுமாக்கும்:)) ஹா ஹா ஹா.

   நீக்கு
 2. கவிதை ..குடைக்காக மழை :)கார் ஜோக்கும் காபி ஜோக்கும் நல்லா இருக்கு நான்லாம் சர்க்கரை சேர்ப்பதில்லை :) பிளாக் காபிக்கே இப்போல்லாம் சர்க்கரை இல்லாம பழகறேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் காபிலஒரு சிட்டிகை சர்க்கரை சேர்ப்பேன்.   ஜோக்ஸ் ரசித்த்தற்கு நன்றி.  தேம்ஸ் நதியோரத்துக்காரர் இந்த ஜோக்ஸ் புரியவில்லை என்பார் பாருங்கள்!

   நீக்கு
  2. காபியுடன் கொஞ்சம் உப்பில்லா வெண்ணை சேர்த்து பாருங்க :)

   நீக்கு
 3. விசுவரூபம் :) மன்னார் இப்பவரைக்கும் பொன்னார் போலி ருக்கார் அடுத்த பதிவில் என்னவாரோ தொடர்கிறேன் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்...   தொடருங்கள்.  ஜீவி சார் கதை படித்தீர்களா?    இல்லை என்றால்  தவற விடாமல் படியுங்கள்.

   நீக்கு
 4. சிவாஜி பற்றிய பகிர்வு புதுசு .ஆனா கவரிமானில் மயில் டெடி /DEDI  னு சொல்வது என்னமோ இரிடேட்டிங்கா இருக்கும் எனக்கு :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேத்திக்கே இது என்னனு புரியலை. கேட்க நினைச்சு விட்டுப்போயிருக்கு. இதுக்கு என்ன அர்த்தம்னு புரியலையே!

   நீக்கு
  2. Daddy யை அப்படி உச்சரிப்பாராம் ஸ்ரீதேவி!!

   நீக்கு
 5. கவரி மான் படத்தைப் பற்றி...

  இங்கே சொல்லப்பட்டிருக்கும் அந்தக் காட்சியை ரசிகர்கள் ஒத்துக் கொள்ளவே இல்லை..

  படம் அதனாலேயே தோற்றுப் போனது...

  திரிசூலம் படத்துக்கு அடுத்தது இது...

  இதில் TMS பாடல் எதுவும் இல்லை என்று நினைக்கிறேன்....

  அந்தக் கச்சேரி பாடல் கூட படத்தில் இல்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் கச்சேரி காட்சி பார்த்தேனே... தஞ்சாவூர் ஹௌஸிங் யூனிட்டில் மாதாந்திர திரைப்பட வரிசையில் பார்த்த படம்.

   நீக்கு
 6. வியாழன்ல உங்க எழுத்து 40%ஆவது இருக்கணும். மற்றவர்கள் கதை போட்டு நிரப்பக்கூடாது.

  கதம்பம் ரசித்தேன். ஜோக்குகள் இரண்டும் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 40% ஆ? இன்று 39% இருக்கோ...? வீடு மாற்றும் வைபவத்தால் வெகு முன்னரே சேமித்தது!

   நீக்கு
  2. //வியாழன்ல உங்க எழுத்து 40%ஆவது இருக்கணும். மற்றவர்கள் கதை போட்டு நிரப்பக்கூடாது.//

   ஹா ஹா ஹா இது பொயிண்ட்டூ.. என்னைக் கேட்டால் 75% இருக்கோணும் என்பேன்:)).

   //40% ஆ? இன்று 39% இருக்கோ...?//
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)) கவிதை மட்டும்தானே இன்று உங்கள் பங்கு:)).. அதுவும் பழசூஊஊஊஊ..

   நீக்கு
 7. சர்க்கரை என்று சொன்னதும் சிறிய வயதிலிருந்தே எனக்கு இருக்கும் பழக்கம் நினைவுக்கு வந்தது.

  வெல்லப் பாயசத்துக்கு பால் விடுவது எனக்குப் பிடிக்காது. இனிப்பு குறைந்துவிடும் என்பதால். என் அம்மா, எனக்கு பால் விடாத்து எடுத்து வைத்துவிடுவார். நான் இனிப்பின் ரசிகன்.

  பதின்ம வயதில் தேங்காய் சாத்த்துக்கு ஏகப்பட்ட ஜீனி போட்ட பாலை அவ்வப்போது ஓரிரு ஸ்பூன் குடித்துக்கொண்டே சாப்பிடுவேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெல்லப்பாயசத்தில் பால் விட வேண்டாம், ஆனால் தேங்காய்ப்பால் சேர்த்துப் பாருங்கள். ருசி அள்ளும். அருமையாக இருக்கும். முதலில் இரண்டாம் பாலை விட்டுக் கொஞ்சம் பாயசம் கொதிக்க ஆரம்பித்ததும் முதல் பாலை விட்டுவிட்டு அடுப்பை அணைச்சுடணும். திருப்பிச் சூடு பண்ணக் கூடாது. நெய் மிதக்கும் தேங்காய்ப் பால்ப் பாயசம் சாப்பிட்டால் வேறே சாப்பிடணும் போல் இருக்காது.

   நீக்கு
  2. மிக்க நன்றி கீசா மேடம். என்னைக்கு நான் திருவரங்கத்துக்கு பஸ் புக் பண்ணிட்டு வர? கன்ஃபர்ம் ப்ளீஸ்

   நீக்கு
  3. எனக்கு பொங்கல் போன்ற இனிப்புகளிலும் கொஞ்சம் கம்மியாகவே இனிப்பு இருக்க வேண்டும். திகட்டத் திகட்ட இனிப்பு இருந்தால் பிடிக்காது.

   நீக்கு
  4. ///நெல்லைத்தமிழன்6 பிப்ரவரி, 2020 ’அன்று’ முற்பகல் 9:05
   மிக்க நன்றி கீசா மேடம். என்னைக்கு நான் திருவரங்கத்துக்கு பஸ் புக் பண்ணிட்டு வர? கன்ஃபர்ம் ப்ளீஸ்///

   ஹா ஹா ஹா இதைத்தான் பொல்லுக்குடுத்து அடி வாங்குவதென்பதோ?:) கீசாக்கா இப்போ கட்டிலுக்குக் கீழே:))

   நீக்கு
  5. //
   ஸ்ரீராம்.6 பிப்ரவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 12:18
   எனக்கு பொங்கல் போன்ற இனிப்புகளிலும் கொஞ்சம் கம்மியாகவே இனிப்பு இருக்க வேண்டும். திகட்டத் திகட்ட இனிப்பு இருந்தால் பிடிக்காது.//

   ஸ்ரீராம் நீங்கள் என் கட்சி:))..

   இப்படி இனிப்பானவையை நான் சாப்பிடுவதெனில் நல்ல காரக்குழம்பு, இடிச்ச சம்பல், பொரிச்ச மிளகாய் இப்படி சேர்த்தே இனிப்புப் பொங்கல் சாப்பிடுவேன்.. இல்லை எனில் ஒன்றிரண்டு ஸ்பூனுக்கு மேல் சாப்பிடவே முடியாது என்னால.

   நீக்கு
  6. அதிரா - அப்படி இல்லை கீசா மேடம். நான் முதல் முதல்ல திருவரங்கம் போனபோது (இணையம் மூலம் கீசா மேடம் தெரிந்தவராக ஆனபின்), வீட்டுக்கு உணவுக்கு வரச் சொன்னார். அவரும் அவங்க ஹஸ்பென்டும் பழக இனியவர்கள், முதல் முறையிலேயே நெடுநாள் உறவினர்கள் போலப் பழகுவாங்க. அம்பேரிக்காவில் பனிச் சிலைகள்லாம் பார்த்து முடிச்சுட்டு எப்போ திருவரங்கம் வரப் போறீங்க என்ற அர்த்தத்தில் எழுதினேன்.

   நீக்கு
  7. எங்கே! அதிரடி, இரண்டு பேரும் சாப்பிட மாட்டோம்னு சொல்லிட்டு நாங்களும் அதை அப்படியே எடுத்துக்கொண்டு விட்டோம். அன்னிக்கு நெ.த. பிறந்தநாள் வேறே. வந்ததும் ரொம்பக் கேட்டுக் கொண்டதில் இலுப்பச்சட்டி தோசை சாப்பிடறதாச் சொன்னாங்க. செய்து கொடுத்தேன். முன்னேயே சொல்லி இருந்தால் ஸ்வீட் ஏதானும் பண்ணிட்டு மசால்தோசை பண்ணலாம்னு நினைச்சோம். ஆனால் அவங்க மடத்துக்கு வந்திருப்பதால் வெங்காயம் எல்லாம் சாப்பிடுவாங்களோனு ஒரு யோசனை வேறே! நாங்க இரண்டு பேரும் அப்புறமாக் கொஞ்ச நாட்களுக்கு இப்படிச் சரியா உபசரிக்க முடியலையேனு பேசிட்டு இருந்தோம்.

   நீக்கு
 8. மன்னார் என்னாவாரோ அடுத்தவாரம் வரை காத்திருக்கணும் போல. ஜோக்ஸ் எல்லாம் படிச்சது. உங்க கவிதையும் ரிஷபன் பதிலும் புத்தம்புதுசு. உங்க பாஸ் எப்படியோ என் மாமியார் கரண்டியால் தான் காஃபிக்குச் சர்க்கரை போட்டுக் கொள்வார். சமயத்தில் அதுவே கசக்குது என்றும் சொல்லிப்பார். ஆனால் கடைசி வரை நீரிழிவாவாது ஒண்ணாவது? உயிர் பிரிவதற்கு ஒரு மாசம் முன்னால் வரை கொழுக்கட்டைச் சொப்புப் பண்ணிக் கொடுத்திருக்கார். கொழுக்கட்டையும் சாப்பிட்டிருக்கார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதெல்லாம் கொஞ்ச பேருக்குதான் சாத்தியம். அதுக்கு புண்ணியம் பண்ணியிருக்கணுமா இல்லை நல்ல லைஃப் ஸ்டைலும் வெளியில் கண்டதைச் சாப்பிடாத தன்மை வேணுமான்னு தெரியலை

   நீக்கு
  2. அசத்திய மாமியார்... மன்னார் என்றால் ச்சே... என்ன ஆனார் என்று அடுத்த வாரம் பார்க்கலாம். கவிதை பழசு. நீங்கள் படித்ததில்லை என்பது ஆச்சர்யம்.

   நீக்கு
  3. உண்மை நெல்லை, அவர் வெளியில் சாப்பிட மாட்டார்.ஆனால் வீட்டில் பண்ணும் பக்ஷணங்களை நினைத்த நேரம் சாப்பிடுவார். இது என்னால் முடியாத ஒன்று. கொஞ்சம் போல் எடுத்துக்கொண்டாலே வயிறு கடபுடா!

   நீக்கு
 9. சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்...
  நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்...

  சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்...
  உனது தோளில் நான் பிள்ளை போலே உறங்க வேண்டும் கண்ணா வா...

  மழை வருது மழை வருது குடை கொண்டு வா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கே மழை தனபாலன். ஓஹோ
   குடைக் கவிதைக்கா.
   கவிதையும் படங்களும் ஜோர் ஸ்ரீராம்.
   பிலஹரி கதை அருமை.
   மனித மனங்களை அளக்கும்.மன்னாருக்கு அதிர்ஷ்டம்
   வந்தால் நன்றாக இருக்கும்.
   அப்படியே ஒரு அலுவலகத்தைப் பார்ப்பது போல
   இருக்கிறது.
   இதற்கு ஸாரதி படம் வரைந்திருப்பாரோ.
   விகடன் ஜோக்குகள் வீட்டிலேயே உலாவிய காலம்
   அது.
   கீதாம்மாவின் மாமியார் கொடுத்து வைத்திருக்கிறார். அதிகம்
   மனதால் பாதிக்கப் படாமல் இருந்திருப்பாராக இருக்கும் பாதி வியாதிகள்
   கவலையே காரணம்.

   நீக்கு
  2. வாங்க வல்லிம்மா... இன்னும் பாதி கதை இருக்கிறதே பிலஹரி கதை... படம் ஸாரதி இல்லை என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 10. ஏஞ்சல்:)
  அது டேடி. சிவாஜியின் பாடல் நான் கேட்டதே
  இல்லை.
  அவரைத் தவிர வேறு யார் அது போல நடிக்க முடியும்.
  எனக்கென்னவோ பிரமீளா ஒத்துப் போவதில்லை.
  நல்ல நடிகை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ப்ரோவ பாரமா கேட்டேன் மிக இனிமை.
   கவரிமான் படத்தில் கதா நாயகன் படும் பாடு
   பார்க்கவே கஷ்டமாக இருக்கும்.
   ஆமாம் பாதிக்கதை ஆகி இருக்கிறது.
   அங்கங்கே கதை படித்து என் கதையை விட்டு விட்டேன்.:)


   எத்தனை தடவை வந்து கார் மோதியது!!!! சூப்பர்.

   நீக்கு
  2. யூ ட்யூப் போய் கேட்டீர்களோ? தமிழ் இந்துவில் எஸ் பி எம் எழுதிய கட்டுரை ஒன்றில் இந்தப் பாடல் வரியை என்னவோ குழப்பி இருப்பார். அதையும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன். அதிலும் ரிஷபன் ஸார் கமெண்ட்டி இருந்தார்.

   நீக்கு
 11. எனக்கு பிரமீளா என்னும் என் தோழியைத்தான் பிடிக்கும், நடிகையை... நோ!

  பதிலளிநீக்கு
 12. https://manakottai.blogspot.com என்பது என் சொந்த blog ஆகும். அதில் நான் இன்று பட்ஜட் 2020 பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளேன். அனைவரும் படித்து கருத்து தெரிவிக்கவும். முக்கியமாக ஏகாந்தன் சார், நெல்லை தமிழன் சார், துரை செல்வராஜ் சார், மற்றும் என் இனிய நண்பர் ஸ்‌ரீராம் சார். "COMMENTS" காலத்தில் கருத்து தெரிவிக்கவும். நன்றி.

  பதிலளிநீக்கு
 13. கவரி மான் படம் நான் பார்த்ததில்லை. அதெல்லாம் சிவாஜி படங்கள் என்றால் ரிவர்ஸில் ஓடிய காலங்கள். பிரகாஷ் ராஜ் தயாரித்து அவர் நண்பர் இயக்கிய வெள்ளித்திரை படத்தில் பிரகாஷ் ராஜிடம் ப்ரித்விராஜ்,"அதென்னடா உன் மனைவியை, நண்பனோடு படுக்கையில் பார்த்ததும், ஊ ஊனு இழுத்துப்ப, அது என்ன நடிப்பு?" என்று கேட்பார். எனக்கு இந்தப் படத்தைதான் சொல்கிறாரோ என்று தோன்றியது. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் வெள்ளித்திரை பார்த்திருக்கிறேன். ஆனால் இது ஞாபகமில்லை.

   நீக்கு
 14. ஸ்ரீராம், இந்த குடைக் கவிதையை ஏற்கனவே நீங்கள் இங்கு போட்டு விட்டதுபோலவே எனக்கொரு ஃபீலிங்காக இருக்குது, நான் இதைப் படித்திருக்கிறேன் இங்கு... ஏனெனில் அந்த வசனங்கள் என் மனதில் எப்பவோ பதிந்துவிட்டதைப்போலவே இருகெனக்கு.. ஏதும் பிரமையாக இருக்குமோ..

  இன்று கீழிருந்து மேலே:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படித்திருக்கலாம். ஏற்கெனவேயும் பகிர்ந்திருப்பேன்.

   நீக்கு
 15. பொக்கிசம் ஓகே...

  ரீக்கு சீனி.. எனக்கு சீனி, இனிப்பு பிடிக்காது ஆனா ரீ எனில் மட்டும் நல்ல ஸ்ரோங்காக சாமுட்த்ஹிரிகா லட்சணப்படி இருந்தாலே குடிப்பேன்:)).. நல்ல ஒரு பிரவுண் கலராக, நல்ல சாயம், ஸ்ரோங் மில்க், அதுக்கேற்ப சீனி இருக்கோணும்.. ருசிச்சு ருசிச்சுக் குடிப்பேன்...

  சொன்னால் நம்ப மாட்டீங்கள்.. எங்கட வீட்டுக்கு வந்து போனோரில் என் ரீ, கோப்பியைப் புகழாதோர் குறைவு:)).. கார்டின் வேலைக்கு வந்த ஸ்கொட்டிஸ் ஒருவர், என் கோப்பியைக் குடிச்சுப்போட்டு கணவரிடம் சொன்னாராம்ம்.. ஆஹா இப்படி ஒரு கோப்பி இதுவரை நான் குடிச்சதில்லை என்று.. ஹா ஹா ஹா இப்பூடி நிறையப் பெருமை இருக்குது பாருங்கோ ஆனா மீ ரொம்ப அடக்க ஒடுக்கமான பொண்ணு:)).. அதாவது அச்சம் மேடம்:) நாணம் பயிர்ர்ப்பூஊஊஊஊஊஊஊஊ:)) ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப தூரத்தில் இருப்பதில் இது ஒரு சௌகர்யம். யாரும் வந்து சரியா என்று பார்க்க முடியாது பாருங்கள்...!

   நீக்கு
 16. சிவாஜி பாடல் காட்சிகளில் தத்ரூபமாக நடிப்பார் என்பது உண்மை. அவர் பாய்ஸ் கம்பெனியில் நடித்துக் கொண்டிருந்த பொழுது முறையாக இசை பயின்றிருக்கிறாராம். அதனால்தான் பாடகர் எந்த ஸ்தாயியில் பாடியிருக்கிறாரோ அதற்கேற்றாற்போல் வாயசைப்பது எளிதாக இருந்தது என்று அவரே கூறியிருக்கிறார். 

  பதிலளிநீக்கு
 17. கார் விபத்து ஜோக் கொஞ்சம் லேட்டாக வந்து விட்டதோ? குடை கவிதை முன்பே படித்திருக்கிறேன். நல்ல விஷயங்களை எத்தனை முறை படித்தால் என்ன? பிலஹரியின் மன்னார் எப்படி விஸ்வரூபம் எடுக்கப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குடைக்கவிதை குட்டி, தட்டிக் கொடுக்கிறீர்களோ... கார் விபத்து ஜோக் ஏன் லேட் என்கிறீர்கள் என்பது அபுரி! மன்னார் பாவம்...

   நீக்கு
  2. //குடைக்கவிதை குட்டி, தட்டிக் கொடுக்கிறீர்களோ...// ஏற்கனவே படித்திருக்கிறேன் என்றுதானே சொன்னேன். அது குட்டா? கடவுளே..!

   நீக்கு
  3. //கார் விபத்து ஜோக் ஏன் லேட் என்கிறீர்கள் என்பது அபுரி!// வெளியே செல்லும் பொழுது பார்த்ததில்லையா வீதியில் எத்தனை பெண்கள் ஸ்கூட்டர், பைக், ஆட்டோ, கார்,என்று அனாயசமாக ஓட்டிச்செல்கிறார்கள் என்று. ஏன் விமானமே ஓட்டுகிறார்கள். இப்போது போய் அரதப் பழசான ஜோக்கை போட்டால் என்ன சொல்வது? இந்த அபுரி எனக்கு அபுரி, விளக்கவும்(புதன் கிழமையிலாவது). 

   நீக்கு
  4. சுஜாதா கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு என்று சில கதைகள் எழுதினார். அதில் ஒன்றில் வெளி க்ரகத்திலிருந்து இருவர் வந்து தமிழ் பயில்வார்கள். ஆத்மா, நித்யா! அவர்கள் புரியவில்லை என்பதை அபுரி என்று சொல்வார்கள். தமிழ் ஆசான் திருத்துவார்.

   நீக்கு
  5. குட்டி, தட்டி... சும்மா வார்த்தை ஜாலம். மறக்கவும்! கார் ஜோக் லேட் - புரிந்தது!

   நீக்கு
 18. //தன்னை ஒரு நண்பனாக நினைத்து உரிமையுடன் அந்த மனிதர் பேசியது தான், அவனுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது!// அடிப்படை தேவைகளுக்கு பிறகு மனித மனம் எதிர்பார்ப்பது சமூக அங்கீகாரம்தான். மன்னாரின் மனநிலை அதைத்தான் பிரதிபலிக்கிறது.

  ஒற்றை குடை கவிதை அருமை. நெருங்கிவரும் காதலர் தினத்தின் தாக்கத்தால் குடை கவிதை நினைவுக்கு வந்ததோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி இணைய திண்ணை. நல்வரவு. காதலர் தின ஸ்பெஷலா என்று கேட்கிறீர்களா? இருக்கலாமோ...

   நீக்கு
 19. கதையை இப்போதான் படிக்க முடிந்தது, கதை அழகு ஆனா போனதடவை பகிர்ந்த அந்த பிச்சைக்காரன் சிறுவனின் கதையின் விறுவிறுப்பைவிடக் குறைவான மார்க்ஸ் தான் இதுக்குப் போடுவேன்.. தொடரட்டும் பார்ப்போம் அடுத்த கிழமை என்ன ஆகுதென..

  //"ஏண்டா?... வந்ததே லேட். இதிலே சிரமபரிகாரம் வேறே நடக்கணுமா?" என்று சீறுகிறார் அவர்.

  மன்னார் சிரிக்கிறான்.

  "ஏது?... சாருக்கு இன்னிக்கு வீட்டில் உள் நாட்டு யுத்தம் நடந்திருக்கு போலிருக்கு!... அதுதான் 'மூடு' சரியில்லாமே..//

  கிட்டத்தட்ட கமல் அங்கிளின் பாபநாசக் கதையை நினைவுபடுத்துகிறது...

  சிவாஜி அங்கிளின் நடிப்புக் கதை அருமை...

  பதிலளிநீக்கு
 20. ஒரு கதையோடு இன்னொரு கதையை ஒப்பிடக் கூடாதாக்கும்! ஒருவேளை இதன் தொடர்ச்சி இன்னும் நன்றாக இருக்கலாம்!

  பதிலளிநீக்கு
 21. குடைக்கவிதையுமின்னுமொரு கவிதையும் கூட்டுக்கவிதை? யும் நன்று

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் சகோதரரே

  கதம்பம் நன்றாக உள்ளது. பிலஹரி அவர்களின் கதை அருமையாக செல்கிறது. அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.

  சிறந்த நடிகர் சிவாஜி பற்றி சுவாரஸ்யமான தகவல்கள். படித்து ரசித்தேன்.

  ஜோக்குகள் அருமை. நானும் காபிக்கு நிறைய ஜீனி சேர்த்து விடுவேன். குடைக் கவிதையும், அதற்கு தங்கள் பதிலும் மிகவும் நன்றாக உள்ளது. இன்று அனைத்துமே பிரமாதமாக உள்ளது. ரசித்தேன். ஆனால் தாமதமாக கருத்துக்கள் தந்தமைக்கு வருந்துகிறேன். மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...   தாமதமானால் தப்பில்லை.   கவலைப்படாதீர்கள்.  அனைத்தயும் ரசித்ததற்கு நன்றி.

   நீக்கு
  2. பானும்மாவுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கு. பாராட்டுகள்.
   அபுரி தெரியாமலயே கடந்து வந்திருக்கிறேன் இத்தனை நாட்களாய்.!

   பிலஹரி கதைகளில் சோகம் நிறைய இருக்கும்.
   இந்தக் கதை மறந்து போய்விட்டது.
   பிரகாஷ் ராஜ் அவர்களை மதிக்கிறேன்.
   சிவாஜி நடித்த காலத்தில் இது போல பிறன் மனை
   நாடகக் கதைகள் மக்களுக்குத் தெரிய வருவது மிகவும் அபூர்வம்.

   அவர் நடித்துக் காட்டி இருப்பது ஒரு மிகையாக இருந்தாலும் அதைப்
   போல நடிக்க யாராலும் முடியாது.
   பிறகு எப்படித்தான் அந்த உணர்ச்சியை வெளிப்படுத்துவது?

   ஆமாம் ஸ்ரீராம் , யூடியூபில் தான் பார்த்தேன்.
   ரொம்ப நன்றி மா.

   நீக்கு
 23. பிலஹரி அவர்கள் கதி நன்றாக இருக்கிறது . மன்னாரை மனிதனாக மதித்து பரிவு காட்டினால் (ஒரு இதமான புன்னகை போதும்) ஆயிரம் வேலையை மகிழ்ச்சியோடு செய்து முடிப்பார்கள்.

  சிவாஜி நடித்த கவரிமான் பார்க்கவில்லை.. பாடல் கேட்ட நினைவு இல்லை.
  பொக்கிஷம் நன்றாக இருக்கிறது.

  ''''சர்க்கரைல காபி பத்தாது' //

  நல்ல சிரிப்பு.

  பதிலளிநீக்கு
 24. சுவையான கதம்பம்.

  பிலஹரி அவர்களின் கதை - மன்னார் நிலை கடினம் தான். சக மனிதனை மனிதனாக நினைக்காதவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள் என்பது தான் சோகம்...

  கவிதை - நன்று!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!