செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை :  கிருஷ்ணன் வந்தான் - பானுமதி வெங்கடேஸ்வரன் 



கிருஷ்ணன் வந்தான் 

- பானுமதி வெங்கடேஸ்வரன் -

சாதத்தில் நெய்யை ஊற்றி பிசைந்து இரண்டு வாய் சாப்பிட்ட அசோக்,"நெய் புதுசா? நல்ல வாசனையா இருக்கே?" என்றதும் 
தன்  தட்டில் சாம்பாரை ஊற்றி, சாதத்தில் கலந்து, வாயில் போடப் போன நிவிதா," அடப்பாவி! நீ சரியான நாக்கு மூக்கான்.. எப்படி கண்டு பிடிச்ச?"

"இதென்ன பெரிய விஷயம் தெரியாதா?  நம்ப வாங்கற நெய்யில் வாசனை இருக்காது, இது வீட்டில் காய்ச்சின நெய் போல் நல்ல வாசனையா இருக்கே?"

"கரெக்ட்! வீட்டில் காய்ச்சின நெய்தான்!, வீட்டில் வெண்ணை  எடுத்து காய்ச்சினேன்" 

"நீ பண்ணினாயா? உனக்கு அதெல்லாம் தெரியமா?"

"கத்துக்கொடுக்கத்தான் யூ, டியூப் இருக்கே.."

"பார்ரா.. யூ டியூபில் இதெல்லாம் கூட வருதா..?" 

"என்ன வரலை?, நீ அதில் வெப் சீரிஸ் மட்டும் பார்ப்ப., 
நாங்கெல்லாம் குக்கரியும் பாப்போம்.."

"ஸோ, யூ டியூபையும் கிச்சனுக்குள் இழுத்தாச்சா? சமைலறையை தாண்டி வெளியே வர மாட்டோம்னு கங்கணம் கட்டிக்கிட்டிருக்கீங்க"

அதை பார்த்து நான் சமைச்சு போட்றதைசப்பு கொட்டிண்டு சாப்பிடுவதில் ஒண்ணும் குறைச்சல் இல்ல, பேச்சு மட்டும்.." நிவிதா  முகத்தை நொடித்தாள்.

அதை ரசித்தபடியே சாப்பிடுவதை தொடர்ந்த அசோக், "தயிரை கடைய மத்து வேணுமே? நம்ம வீட்டுல இருக்க என்ன?" என்றான் 

"மத்தா? அப்படீன்னா?"

"சர்தான், மத்துன்னா என்னனு உனக்கு எப்படி சொல்றது?" என்று கொஞ்சம் யோசித்தவன், "ஆஞ்சநேயர் கையில் வைத்துக் கொண்டிருப்பாரே அது மாதிரி, கொஞ்சம் சின்னதா இருக்கும்.." என்றதும், 

"அதெல்லாம் என்கிட்ட கிடையாது, மிக்சியில்தான் கடைந்தேன்". 

"மத்து நீ பார்த்திருக்கியா?" 

"மத்து பார்த்திருக்கியாவா?  நான் எங்கம்மாவுக்கு மத்தில் தயிர் கடைஞ்சு வெண்ணை எடுத்து கொடுத்திருக்கேன்"

"சொல்லவே இல்ல... அப்போ நெக்ஸ்ட் டைம் நீதான் தயிர் கடையணும்."

"ஐயையோ! எனக்கு மிக்சியில் தயிர் கடைய தெரியாது." என்று அசோக் பின்வாங்கினாலும் அடுத்த முறை தயிர் கடையும் பொழுது நிவிதா விடவில்லை. தான் மிக்சியில் தயிர் கடையும் பொழுது அவனையும் அருகே நிறுத்திக் கொண்டாள். 

திரண்டு வந்த வெண்ணையை முழுவதையும் அவள் ஒரு டப்பாவில் எடுத்த வைத்த பொழுது,அவளிடம் ஒரு சிறு உருண்டை வெண்ணையை அந்த மோர் பாத்திரத்திலேயே போட்டு வைக்க வேண்டும் என்று அசோக் சொன்னதும், நிவிதா,"ஏன்?" என்று கேட்டாள் 

"தயிர் கடையும் சத்தம் கேட்டு கிருஷ்ணர் அந்த பாத்திரத்தில் வெண்ணை இருக்கும் என்று திறந்து பார்ப்பாராம்.  அவர் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு சிறு உருண்டை வெண்ணையை அதில் போட்டு வைக்க வேண்டும் என்று என் அம்மா சொல்லுவாள்"

அசோக்கின் இந்த விளக்கம் நிவிதாவுக்கு சிரிப்பை வரவழைத்தது. 
மத்தினால் கடைந்தால், அந்த சத்தம் கேட்டு வரலாம், இப்போது மிக்சியில் கடைகிறோம், மிக்சி சத்தத்திற்கெல்லாம் கிருஷ்ணர் வந்தால் தினமும் அவர் ஏமாந்து போக வேண்டியதுதான்"

"ஸீ!, இதெல்லாம் ஒரு பாவம்தான். கிருஷ்ணர் வருவார் என்று நினைத்தால் அவர் வருவார்".

"ஓ.கே. ஓ.கே. லேட் மீ ஸீ!" என்றபடியே எடுத்த வெண்ணையிலிருந்து ஒரு சிறு உருண்டையை எடுத்து மோர் பாத்திரத்தில் போட்டாள்.

அன்று மதியம் உணவு சாப்பிட்டு முடித்த பிறகு, அவள் பாத்திரங்களை ஒழித்து கூட போடவில்லை, யாரோ காலிங் பெல்லை அடித்தார்கள். 

கதவைத் திறந்தால், அவளை விட மூன்று அல்லது நான்கு வயது பெரியவளாக இருக்கும் என்று தோன்றிய பெண் கையில் நாலு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனை பிடித்தபடி நின்றிருந்தாள். 

"ஹாய்!, நாங்க பக்கத்து வீட்டுக்கு குடி வந்திருக்கிறோம். குடிக்க கொஞ்சம் தண்ணீர் வேணும், கிடைக்குமா..?" நிவிதா வெளியே எட்டி பார்த்த பொழுது, பக்கத்து வீட்டிற்கு சாமான்கள் இறக்கப்படுவது தெரிந்தது. 
"தாராளமா, உள்ள வாங்க"

நிவிதாவின் அழைப்பை ஏற்று அந்த பெண் உள்ளே வருவதற்குள் அவள் கையை உதறி விட்டு அந்த குழந்தை உள்ளே நுழைந்தது. 
சென்ட்ரல் டேபிளில் வைக்கப்பட்டிருந்த பேப்பர்,புத்தகம், இவைகளைத் தள்ளி, டி.வி.ரிமோட்டை கையில் எடுத்துக் கொண்டதும், "நோ,நோ! இதையெல்லாம் எடுக்கக் கூடாது, வை," என்று அம்மா அதட்டியதும், அதை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு, டைனிங் டேபிள் நோக்கி ஓடிய அந்த பொடியன். டேபிள் மீது இருந்த மோர் பாத்திரத்தை திறந்து பார்த்து, அதில் மிதந்து கொண்டிருந்த வெண்ணையை கையில் எடுத்து,"பட்டர்?" என்று கேட்டு விட்டு லபக்கென்று வாயில் போட்டுக் கொண்டான். 

"என்னடா இது கெட்ட பழக்கம்?" என்று அடிக்க கையை ஓங்க, 

"பரவாயில்ல, சின்ன குழந்தைதானே?" என்று அவனை தன் பக்கம் இழுத்துக் கொண்ட நிவிதா , "உன் பேர் என்ன?" என்று வினவ, அவன், வாயில் வெண்ணையோடு,"கிஷன்" என்று குழற, என்னது? என்று மீண்டும் கேட்டதும், அவன் தாய்,"கிஷன்னு கூப்பிடுவோம் கிருஷ்ணன் என்று பெயர், " என்றாள்.   

86 கருத்துகள்:

  1. நம்பாதவர்களுக்கு நம்பும்படி வந்தான் கிஷன் ஸாரி கிருஷ்ணன்.

    அழகான குட்டி கதை வாழ்த்துகள் மேடம்.

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்கள் எழுதிய கதை நன்றாக உள்ளது. அந்த வெண்ணையை சாப்பிட கிருஷ்ணன் வந்து விட்டான். அவனும் வர வேண்டிய நேரத்தில் எப்படியும் வருகிறவன்தானே.. அருமையான கதை. சகோதரிக்கு அன்புடன் பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  4. ரத்தினச் சுருக்கமாகக் கதை...

    பசு நெய்யின் வாசம் போல அருமை...

    பதிலளிநீக்கு
  5. அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்றான்
    கீதையிலே கண்ணன்..

    பார்ப்பவர் கண்ணுக்கு தெரிவேன் என்றான்
    பாரதத்தில் கண்ணன்...

    கவியரசரின் வரிகள் என்று நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள்,பிரார்த்தனைகள்.

    கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான், கேள்வியே பதிலாகக் கண்ணன் வந்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பாடல் அனாதை ஆனந்தன்...

      இந்த வரிகள் -
      கண்ணன் வந்தான்.. இங்கே
      கண்ணன் வந்தான்
      ஏழைக் கண்ணீரைக் கண்டதும்
      கண்ணன் வந்தான்..

      படம் - ராமு..

      நீக்கு
    2. வாங்க கீதா அக்கா...   வணக்கம், நல்வரவு, நன்றி.

      நீக்கு
  7. சிக்கெனச் சிக்கனமான வார்த்தைகளில் அருமையான கதை. பானுமதிக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. கண்ணன் வந்தான், மாயக் கண்ணன் வந்தான்.
    வெண்ணை தின்ன கண்ணன் வந்தான்.
    தேடுகின்ற கண்களுக்கு கண்ணன் வந்தான்.
    நம்பும் அன்பருக்கு நம்பி வந்தான்.

    மிக அருமை.
    கதையில் உரையாடலை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  10. //"தயிர் கடையும் சத்தம் கேட்டு கிருஷ்ணர் அந்த பாத்திரத்தில் வெண்ணை இருக்கும் என்று திறந்து பார்ப்பாராம். அவர் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு சிறு உருண்டை வெண்ணையை அதில் போட்டு வைக்க வேண்டும் என்று என் அம்மா சொல்லுவாள்"//

    நம்பிக்கை பொய்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடுப்பி கிருஷ்ணர் கையில் மத்து இருக்கும்.
      அருமையான கதைக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

      நீக்கு
    2. உங்களின் ரசனையான விமர்சனம் மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி. 

      நீக்கு
  11. ரசனையான கதை. வெண்ணையை மோரிலிருந்து கடைந்து எடுத்த பின், வெண்ணை உருண்டையை மோரில் மிதக்கவிடுவதை என் அம்மா கூட செய்வதைப் பார்த்திருக்கிறேன். அம்மா அங்கிருந்து அகன்றதும் அதை 'லபக்' செய்த ஞாபகமும் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...  எங்கள் வீட்டிலும் அந்தப் பழக்கம் இருந்தது.  என் அப்பா ரெகுலராக வெண்ணெய் சாப்பிட்ட காலம் உண்டு!

      நீக்கு
    2. வெண்டை எடுத்த மோர் (கடுத்த மோர்னு சொல்லுவோம்) குடிக்க அவ்வளவு அருமையா இருக்கும். அதை விட்டு அடைக்குத் தொட்டுக்க வெண்ணெய் உபயோகிக்காமல் வெறும் வெண்ணெயில் என்ன சுவை இருக்கும்?

      வெண்ணெயை ரசிக்க அடை, நோன்பு கொழுக்கட்டை (இனிப்பு) வேண்டும். இரண்டும் ரெடி என்றால் அந்த வீட்டுக்கு வந்துடவேண்டியதுதான்

      நீக்கு
    3. நெல்லை சொல்லை வழிமொழிகிறேன்!

      நீக்கு
    4. ஆனால்... எங்கள் வீட்டில் மோரிலிருந்து எல்லாம் கடைவதில்லை. கடையிலிருந்து வாங்கும் வெண்ணெய்தான். !!!

      நீக்கு
    5. எங்கள் வீட்டில் 1985 வரை மாடு இருந்தது. அதனால் வீட்டிலேயே வெண்ணெய் எடுப்போம். எடுக்கப்பட்ட வெண்ணை மோரிலேயே மிதந்து கொண்டிருக்கும். அதை அவ்வப்பொழுது எடுத்து விழுங்கியிருக்கிறேன். எனக்கு என்னவோ வாங்கும் வெண்ணையை சாப்பிடப் பிடிக்காது. நன்றி கௌதமனின் சார். 

      நீக்கு
    6. நன்றி கௌதமன் சார் என்று வந்திருக்க வேண்டியது கௌதமனின் சார் என்று வந்து விட்டது. மன்னிக்கவும். 

      நீக்கு
    7. நான் வெண்ணெய் வாங்கியும் காய்ச்சுவேன் அதிகமாகத் தேவைப்படுகையில். இல்லைனா வீட்டில் எடுக்கும் வெண்ணெய் தான். முன்னர் படம் போட்ட நினைவும் இருக்கு.

      நீக்கு
  12. காலிங் பெல் அடிக்கும்போதே கதை எப்படி நகரும், முடியும் என்பது தெரிந்துவிட்டது. நல்ல கதை.

    தமிழகத்தை விட்டுக் கிளம்பியதால் தமிழ்ப் பெயரான கண்ணன் மறந்து கிருஷ்ணன் வந்து மனதில் உட்கார்நதானா இல்லை கிஷன் பெயர் வருவதற்காக தலைப்பு மாறியதா?

    வதோதராவிலிருந்து நெல்லைத்தமிழன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // வதோதராவிலிருந்து நெல்லைத்தமிழன் // சார், எங்கள் யாவருக்கும் கண்ணனிடம் வேண்டி வாருங்கள்.

      நீக்கு
    2. கதையை எழுதத் துவங்கும் பொழுது 'ஷ்யாம்' என்று பெயர் கொடுக்கலாம் என்று நினைத்தேன். கைதியின் உரையாடலுக்கு ஏற்ப கிருஷ்ணன் என்று மாற்றி விட்டேன். துவாரகையில் கண்ணனை செவிக்கும் பொழுது எங்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள். நன்றி நெல்லை.

      நீக்கு
    3. வதோதராவிலிருந்து பக்கத்தில் இருக்கும் டகோர் துவாரகா போனீங்களா? ராஜஸ்தானில் உதய்பூர் - சிதோட்கட் வழியில் இருக்கும் நாத் த்வாரா கிருஷ்ணனும் பஞ்ச துவாரகையில் வருவார். அப்படியே சிதோட் கட் கோட்டையையும் பாருங்கள். இப்போ அங்கெல்லாம் சீதோஷ்ணம் அருமையாக இருக்கும். அதிகக்குளிரும் இருக்காது, வெயிலும் தெரியாது. பயணம் செய்ய ஏற்ற காலம்/பருவம். கட்டாயமாய் ராஜஸ்தானின் தால் பாட்டி, சூர்மாவும், ஸ்வீட் லஸ்ஸியும், புஷ்கர் போனால் மால்புவாவும், குஜராத்தின் டோக்ளா, கமன் டோக்ளா, தேப்லா, ஸ்ரீகண்ட் (அமுல் ஸ்ரீகண்ட் நல்லா இருக்கும்) எல்லாமும் சாப்பிடுங்க!

      நீக்கு
  13. இப்போது தான் நினைத்தேன் நெல்லை உங்களை.கண்ணன் வாழ்ந்த இடங்களை தரிசனம் செய்ய போவதாய் சொன்னீர்கள். பானு வீட்டு கண்ணன் வந்து விட்டான் என்று சொல்லலாம் என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அரசு மேடம். ஒத்தக்கல் நரசிம்மரைச் சேவித்தபோது உங்களையும் சாரையும் நினைத்துக்கொண்டேன்.

      இன்றிலிருந்து துவாரகை சேவிக்க ஆரம்பிப்போம். எல்லாம் நலமாக நடக்கணும்.

      நீக்கு

    2. கண்ணன் நலமாக நடத்தி வைப்பார்.

      நரசிம்மரை சேவிக்கும் போது எங்களை நினைத்து கொண்டது போல் இப்போதும்
      எங்களுக்கு சேர்த்து வேண்டி வாருங்கள்.

      நீக்கு
  14. வீட்டில் காய்ச்சின நெய் சூப்பர்.. உண்மை (நெய் காய்ச்ச ஆறு மாதம் முன்புதான் கத்துண்டேன்.... பயப்பட வேண்டாம்.. தி பதிவு எழுதலை ஹா ஹா ஹா)

    திருவல்லிக்கேணி டி பி கோயில் தெருவில் வடிவுடை அம்மன் கடையில் பசு, எலுமை நெய் செம வாசனை.. சூப்பர். முயற்சித்துப் பாருங்கள் (என் பசங்க அம்மா ஜால்ரா... அம்மா காய்ச்சும் நெய்தான் சூப்பர்னு சொல்றாங்க)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மைசூர் பாகு பதம் மாதிரி நெய் காய்ச்சறதுக்கும் ஒரு பதம் உண்டு. எப்போ அமைப்பை ஸிம்மில் வைக்கணும், எப்போ ஆஃப் பண்ணணும்னு தெரிஞ்சாதான் சரியான வாசனையுடன் மணல் மணலா நெய் வரும்! என்னைக் கேட்டா ஊத்துக்குளி வெண்ணெய் பெஸ்ட்.

      நீக்கு
    2. நெல்லைத்தமிழன் சார், //என் பசங்க அம்மா ஜால்ரா... அம்மா காய்ச்சும் நெய்தான் சூப்பர்னு சொல்றாங்க//. உங்கள் பசங்க சொல்வது 100/100 உண்மை சார். அம்மா கைப்பதம் அம்மா கைப்பதம்தான் சார். அனுபவித்து சொல்கின்றேன்.

      நீக்கு
    3. இது அநியாயமில்லையோ ரமா ஶ்ரீநிவாசன். அப்பா, கரெக்டா ரெசிப்பிப்படி நல்லா மிளகாய்பொடி அல்லது தேங்காய் தொகையல் பண்ணினா, இது சரியா வரலையே, இதுல ஒரு வாசனை வருதேன்னு புதுசு புதுசா கண்டுபிடிப்பாங்க. மனைவி செய்தது சில சமயம் சரியா வரலை, குறை இருக்குன்னு எனக்குத் தெரியும். ஆனா பசங்க ஆஹா ஓஹோம்பாங்க. எனக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு இருக்கும். உடனே, போங்கடா ஜால்ரா கோஷ்டிகளான்னு சொல்லிடுவேன்

      ஒருவேளை என் முன்னால விட்டுக்கொடுக்க மாட்டேங்கிறாங்களோ? யாருக்குத் தெரியும்

      நீக்கு
    4. //மைசூர் பாகு பதம் மாதிரி நெய் காய்ச்சறதுக்கும் ஒரு பதம் உண்டு.// வீட்டில் எப்படி வெண்ணை எடுப்பது?, அதை எப்படி காய்ச்சுவது? என்று எங்களுடைய யூ ட்யூப் சானலில் விரிவாக செய்து காட்டியிருக்கிறேன். அதை செயல் படுத்தும் பொழுது உதித்த கருதான் இந்தக் கதை..  https://youtu.be/UxagwenTtcU



      நீக்கு
    5. நெல்லைத்தமிழன் சார், அப்பா என்றும் irreplaceable சார். இவை யாவுமே ஒரு நாடகம்தான். எங்கள் வீட்டில் என் கணவர் சமைத்தால், ஒரு உருண்டை கூட உள்ளே செல்லும்.

      நீக்கு
  15. பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப்
    பிறங்கொளி வெண்ணெயும் சோதிக்கின்றான்…

    இன்றைக்கு பலருக்கும் யூ டியூபில் குக்கரி, ஒரு கிஷன்...!

    முடிவில் நிவிதா, கருத்துரையில் சொன்ன பாடல்களை பாடினார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க டி.டி. நன்றி.  யூ ட்யூப் லிங்க் இணைத்து விட்டேன். பாடல்களை யார் இணைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஹாஹா

      நீக்கு
  16. சுறுக்கமான் ஆனால் கருத்து நிறைந்த கதை. //"தயிர் கடையும் சத்தம் கேட்டு கிருஷ்ணர் அந்த பாத்திரத்தில் வெண்ணை இருக்கும் என்று திறந்து பார்ப்பாராம். அவர் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு சிறு உருண்டை வெண்ணையை அதில் போட்டு வைக்க வேண்டும் என்று என் அம்மா சொல்லுவாள்"// என்ன ஆச்சரியம். இதையேதன் சொல்லி எங்கள் அம்மாவும் எங்களை வளர்த்தாள். நாங்கள் இன்றும் கடையில் வெண்ணை வாங்கி உருக்கினாலும், சிறிய கின்னத்தில் தண்ணீரில் வெண்ணையை போட்டு வைக்கும் பழக்கத்தை விடவில்லை. நம்பிக்கை என்பது universal போலிருகின்றது.

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் இனிய மதிய வணக்கம். அருமையான கருத்துடன் அழகான சின்னக் கதை. தயிர் கடைந்து வெண்ணெய் எடுத்த காலங்கள் இனிமை. தம்பி மனைவி இன்னும் வெண்ணெய் எடுக்கும் வழக்கம் வைத்திருக்கிறாள். கதை உரையாடல்கள் மிக இனிமை பானுமா.சம்பவங்களின் இணைப்பு வெகு இயற்கையாக அமைந்திருக்கிறது.. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வல்லி அக்கா. //தம்பி மனைவி இன்னும் வெண்ணெய் எடுக்கும் வழக்கம் வைத்திருக்கிறாள். // நானும்.

      நீக்கு
  18. அன்பு, முரளிமா, உங்கள் பயணப் படங்களை ஞாயிறு வெளியிடலாமே. துவாரகையை நாங்களும் பார்த்த புண்ணியம் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வல்லிம்மா.. ஞாயிறு என்பது இப்போல்லாம் (ஓரிரு வருடங்களாக) ஆங்கிலப் படம் மட்டுமே வெளியாகும் தியேட்டர் மாதிரி. கன்னித் தீவும் சிந்துபாத்தும் மட்டும்தான் அன்று. கதைக்கு பார்டர் போடறது மட்டும் ஶ்ரீராம் வேலை. ஹா ஹா ஹா

      நீக்கு
    2. On a serious note, I am told most temples do mot allow anything to be carried. அதுனால போட்டோக்கு வாய்ப்பில்லைனு நினைக்கறேன். கண்ணால தரிசனம் செய்து நெட்ல படங்கள் தேட வேண்டியதுதான்

      நீக்கு
    3. Yes true. Our Venkat Nagarajan and Tulsi Gopal have described. As well as Geetha ma. All the best wishes for a memorable journey. Keep washing your hands.

      நீக்கு
    4. தோல் பொருட்கள் எல்லாம் வடக்கே நிறையக் கோயில்களில் தடை. அங்கேயே லாக்கர் கொடுப்பாங்க. அதில் வைச்சுட்டுப் பூட்டிச் சாவியை நாமே எடுத்துச் செல்லலாம். படங்கள் எல்லாம் எடுக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

      நீக்கு
  19. இவ்வளவு எல்லாம் சொல்லி விட்டார்கள்....

    கடைந்தெடுத்த வெண்ணெயுடன் வெல்லச் சர்க்கரையைச் சேர்த்து யாராவது தின்றிருக்கின்றீகளா!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை. கல்கண்டு சேர்த்து சாப்பிட்டிருக்கிறேன். 

      நீக்கு
    2. //..கடைந்தெடுத்த வெண்ணெயுடன் வெல்லச் சர்க்கரையைச் சேர்த்து யாராவது தின்றிருக்கின்றீகளா..//

      எங்கள் வீட்டில் இருக்கும் தவழும் க்ருஷ்ணன் விக்ரஹத்திற்கு வெல்லச்சர்க்கரை கலந்த வீட்டிலெடுத்த வெண்ணெயைத்தான் ஊட்டிவிட்டு (நிவேதனம் செய்து) எங்களுக்கும் காலையில் தருவாள் என் மனைவி. க்ருஷ்ண பக்தை. சனிக்கிழமைதோறும் நிகழ்வது இது.

      நீக்கு
    3. துவாரகையில் காலைப் பிரசாதத்தில் இதான் கொடுப்பார்கள். சர்க்கரை சேர்த்தும் கொடுப்பார்கள்.

      நீக்கு
  20. கண்ணனுக்கு மட்டுமல்ல, ஷீர்டி சாய் பாபாவுக்கும் வெண்ணை மிகவும் பிடிக்குமாம். 

    பதிலளிநீக்கு
  21. நவநீத க்ருஷ்ணன் கதை துருதுருவென்று இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  22. இப்படி ஒரு அனுபவம் எனக்கும் நடந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்கையுள்ள எல்லோருக்கும் நடக்கும். நன்றி அதிரா. 

      நீக்கு
  23. பாலைக் காய்ச்சும்போது வரும் பாலேடை சேமித்து அதிலிருந்து நெய் காய்ச்சுவோம் வாசனையாய் மணல் மணலாய் வரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டில் காய்ச்சும் நெய்யின் மணமும், சுவையும் தனிதான்.

      நீக்கு
  24. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  25. கதாசிரியர் சொல்கிற வாக்கிலேயே கதையை அனுபவித்து வாசித்து ரசிப்பது ஒரு வகை. இது பொதுவாக கதை சொல்ல வந்த விஷயம் இது தான் என்று தெரிந்து கொள்கிற அளவிலேயே நின்று விடும்.

    சில எமகாதக வாசகர்கள் அதோடு திருப்தி அடைந்து விடுவதில்லை. வாசித்த கதை அவர்களுக்கு மிகவும் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கதை வாசகங்களை மறுபடி மறுபடி மனசில் ஓட்டிப் பார்ப்பார்கள். மேம்போக்காக படித்து விட்டு எதையாவது ரசிக்காமல் விட்டு விட்டோமா என்று தேடிப் பார்ப்பார்கள். கதையின் இண்டு இடுக்கில் அப்படி ஏதாவது அவர்கள் ரசனைக்கு கிடைத்து விட்டதென்றால் 'அட!' என்று தனக்கு மட்டுமே புரிந்து போன அதை நினைத்து நினைத்து மகிழ்வார்கள்.

    அவர்கள் திருப்திக்காகவும் கதாசிரியர் எழுதும் கதையில் சில நகாசு வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது.

    இந்தக் கதையில் கூட அப்படியான ஒரு இடம் பாருங்கள்.


    "ஹாய்!, நாங்க பக்கத்து வீட்டுக்கு குடி வந்திருக்கிறோம். குடிக்க கொஞ்சம் தண்ணீர் வேணும், கிடைக்குமா..?" -- (இந்த இடம் தான்)

    "ஹாய்! நான் தேவகி.. பக்கத்து வீட்டுக்குப் புதுசா குடி வந்திருக்கிறோம்... குடிக்க கொஞ்சம் தண்ணீர் வேணும். கிடைக்குமா?"

    அவ்வளவு தான். புரிந்து ரசித்தவர்கள் ஜோராக ஒரு தடவை கை தட்டலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பேர் யசோதா. பையன் ஷ்யாம்.

      இது எப்படி இருக்கு?

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. ஆஹா ! சூப்பரா இருக்கே ஜி வி சார், நெ த !

      நீக்கு
    4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    5. //"ஹாய்! நான் தேவகி.. பக்கத்து வீட்டுக்குப் புதுசா குடி வந்திருக்கிறோம்... குடிக்க கொஞ்சம் தண்ணீர் வேணும். கிடைக்குமா?" //  அருமை சார். அனுபவம் பேசியிருக்கிறது. மாதிரி நகாசு வேலைகள் செய்ய வேண்டுமென்றால் கதைக்கருவை மனசுக்குள் கொஞ்சநாள் ஊறப்போட வேண்டும். மனதில் உதித்தவுடன் எழுதி விட்டேன். உடனே அனுப்பியும் விட்டேன். மிக்க நன்றி. 

      நீக்கு
  26. நல்ல கதை. சின்னக் கண்ணன் வந்து விட்டான்!

    நம்பிக்கை தானே எல்லாம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!