ஞாயிறு, 29 மார்ச், 2020

ஞாயிறு :  பைலே குப்பா

பைலே குப்பா புத்த மடம், புத்தர் கோவில் காட்சிகள் தொடர்கின்றன. 

மேலே உள்ள கலசங்களின் வடிவமைப்பில் ஏதும் குறியீடுகள் இருக்கின்றனவா?மழை நன்றாக சுத்தம் செய்வதின் காரணம் கட்டடங்களின் வடிவமைப்பு?ரொம்பத் தள்ளி நின்று எடுத்தால் விவரம் தெரியாது!
என்ன முயன்றும் முழுக்கட்டடத்தையும் கொண்டுவர இயலவில்லை. திரும்பத்  திரும்ப ஒரே சிலை மாதிரி இருந்தாலும்.....வித்யாசங்கள் உண்டு.
அந்த மகுடம்...    எதை நினைவூட்டுகிறது?


புத்தரின் கதையை விட புத்த மதத்தின் வரலாறு இங்கே...
பிரித்து பகுதிகளாய்...
வெளியிட்டால் சரியாக இருக்கலாம் என்று...
சில விவரங்கள்...


சிலையின் பீடம் ..  மிக நுணுக்கமான வேலைப்பாடு.


==============================================

இது எங்கள் 3500 ஆவது பதிவு. 

விடுமுறை தின பொழுதுபோக்கு : விடை கண்டுபிடியுங்கள். 68 கருத்துகள்:

 1. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு...

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.
   இதை ஏன் இன்று, இங்கே சொல்கிறேன் என்பதை, பிறகு சொல்கிறேன்.
   வாழ்க நலம்.

   நீக்கு
  2. கொரோனாவில் அடைந்துகிடக்கும் காலத்தில் இல்வாழ்வான் மட்டும்தான் மற்ற மூவரையும் (மட்டுமல்ல, விலங்கினங்களையும்) காக்க முடியும். நம்மால் முடிந்த அனைத்தையும் நாம் செய்வோம்.

   நீக்கு
  3. // துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.
   இதை ஏன் இன்று, இங்கே சொல்கிறேன் என்பதை, பிறகு சொல்கிறேன்.//
   இது குறள் எண் 42. பூட்டு கேள்வியின் விடை.

   நீக்கு
 2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் எல்லோருக்கும்

  ஆஹா புத்தர் அழகு..அந்த அமைதி தவழும் முகம்!!!..காலையில் மனதிற்கு இதம்!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா நான் வெகுனாட்களுக்குப் பிறகு 1 என்று பார்த்தால் 2...

   துரை அண்ணா விளக்கைப் பிடித்துக் கொண்டு முதலில் வந்துவிட்டார்!!!!!!!!!!!!!
   ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. காலை வணக்கம் கீதா..   வாங்க...

   //ஆஹா நான் வெகுனாட்களுக்குப் பிறகு 1 என்று பார்த்தால் 2...//

   ஹா...  ஹா...  ஹா...

   நீக்கு
  3. ஹா ஹா அதானே! சாதாரண விளக்கா? பொய்யா விளக்கு ஆயிற்றே!

   நீக்கு
 3. 3500!..

  ஆயிரம் ஆயிரமாய் பதிவுகள் தந்து
  தமிழ்போல தழைத்து வாழ்க...

  பதிலளிநீக்கு
 4. புத்தரும் ஆசைப்பட்டார் துறக்க வேணும்
  ஆசைகளை என்று...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாடல் எண் : 3
   ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
   ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
   ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
   ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.
   பொழிப்புரை :
   மேற்கூறிய உலக ஆசைகள் அனைத்தையும் நீவிர் கட்டாயமாக அறவே விட்டொழியுங்கள்; அவைகளை விட்டு நீவிர் சிவனை அடைந்தபின்பும் பழைய பழக்கத்தால் அந்த ஆசைகள் மீண்டும் உங்கள்பால் தோன்றுதல் கூடும். அப்பொழுதும் அதனை முளையிலேயே அறுத்தெறியுங்கள்; ஏனெனில் ஆசை மிகுந்து மிகுந்து வருவதால்தான் எந்நிலையிலும் துன்பங்கள் மிகுந்து மிகுந்து வருகின்றன. ஆசையை நீக்க நீக்க, இன்பங்களே மிகுந்து மிகுந்து வரும்.
   திருமூலர் - திருமந்திரம்.

   நீக்கு
 5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  எங்கள் ப்ளாகின் 3500 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.
  வருடத்துக்கு ஆயிரம் பதிவுகளாவது இட்டு
  ஜ்வலிக்க வாழ்த்துகள்.
  கீதா, துரைக்கு இனிய நாளுக்கான வாழ்த்துகள்.
  படங்கள் மிக அழகு.

  தலைப்புகள் இன்னும் அருமை. நம்பர் லாக் எண் 006 ஆ/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா...   காலை வணக்கம்.  நன்றி.  விடைகள் பின்னர் (கேஜிஜியால்) அறிவிக்கப்படும்.

   நீக்கு
  2. ஆ! அப்போ இந்தப் புதிரைப் போட்டது யாரு!
   (பார்ப்போம் - யாராவது இன்றைக்குள் இதற்கு சரியான விடை சொல்வார்கள். அப்போ சமாளித்துடலாம்!)

   நீக்கு
  3. கேள்வி மட்டும் கேட்பவர் கேட்டிருக்கிறாரோ என்னவோ!

   நீக்கு
 6. காலை வணக்கம் சகோதரரே
  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையவும் மனமாற இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பான பிரார்த்தனைகளுக்கு நன்றி கமலா அக்கா.    காலை வணக்கம்.  வாங்க...

   நீக்கு
  2. பிரார்த்தனைகளுக்கு நன்றி சகோதரி.

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  படங்கள் அத்தனையும் அழகு. அதற்கு தகுந்தாற்போல் வாசகங்களும் அருமை. புத்தரின் சாந்தமான முக தரிசனம் மனதிற்கு இதமாக இருக்கிறது. கட்டிடங்களின் வேலைப்பாடுகளும், சிலையின் பீடத்தின் நுணுக்கமான கலையம்யங்களும் நன்றாக உள்ளது.

  3500 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள். மென் மேலும் அதிகமாகவும் பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. 3500 ஆவது பதிவுக்கு எமது வாழ்த்துகள் ஜி.

  பதிலளிநீக்கு
 9. 062

  3500வது பதிவுக்கு வாழ்த்துகள்.

  காலை வணக்கம் அனைவருக்கும்

  பதிலளிநீக்கு
 10. பொதுவாக புத்தர் சிலைகள் கிரீடத்துடன் காணப்படுவதில்லை. புத்தரின் தலையில் ஞானத்தை உணர்த்துகின்றவகையில் உஷ்னிஷா எனப்படுகின்ற தீச்சுடர் காணப்படும். புத்தர் கதைகளில் பல புத்தர்களைக் கூறுவர், பல புத்தர்களைப் பற்றியும் கூறுவர். அவ்வாறான பல படங்களை இப்பதிவில் காணமுடிந்தது. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்...   இது பற்றிய தகவல்களை நீங்கள் சொல்வது சரியாகவும், பொருத்தமாகவும் இருக்கும்.

   நீக்கு
 11. 3500.. ஆயிரக்கணக்கில் எந்த நம்பரைப் பார்த்தாலும் இப்போதெல்லாம் பயமாக இருக்கிறது.
  இது பதிவின் நம்பரா.. வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நா ...நா... !

   நா.. நா.. கர்த்தே ப்யார் தும் ஸே கர் பைட்டே ! (இல்லை, இல்லை எனச் சொல்லிக்கொண்டே, உன்னைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டேனே!)
   -பாடகர்கள் முகமது ரஃபி, சுமன் கல்யாண்பூர், சஷி கபூர்-நந்தா ஜோடிக்காகப் பாடிய டூயட். படம் : ஜப் ஜப் ஃபூல் கிலே! (Jab Jab phool khile) (1965)

   நீக்கு
  2. லஹூ கா தோ ரங் படப் பாடலான, கிஷோர் பாடிய "நா நா கெஹத்தாஹுவா ப்யார் கர்த்தாஹுவா மேரா யார்.." பாடலும் நினைவுக்கு வருகிறது!

   நீக்கு
 12. படங்கள் அழகு! நான்காவது படத்தை மற்றொரு கோணத்திலும் வெளியிட்டிருக்கலாமோ? 3500 பதிவுக்கு வாழ்த்துகள். மேலும் சிறக்க விரும்பி, வாழ்த்தி, வேண்டுகிறேன். 

  பதிலளிநீக்கு
 13. 3500 பதிவு - மனம் நிறைந்த வாழ்த்துகள். மேலும் தொடரட்டும் உங்கள் பதிவுலகப் பயணம்.

  படங்கள் அனைத்தும் அழகு.

  பதிலளிநீக்கு
 14. எனக்கு புத்தர்படங்களுக்கும் தீர்த்தங்கரர்படங்களுக்கு வித்ட்க்ஹ்யாசம்தெரிவதில்லை
  எண்டபூட்டையும் திறக்கும் எண்ணமில்லை ஆதலால் க்ராக் தெ கோட் ஆட்டத்துக்குவரவில்லைக்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஆட்டத்துக்குவரவில்'லைக்'// ஓ! யு லைக் இட்? தாங்க் யு!

   நீக்கு
 15. 3500 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.

  படங்கள் எல்லாம் அழகு.

  பதிலளிநீக்கு
 16. 3500 பதிவுகள் - வாழ்த்துகள்.
  ஒவ்வொரு புத்தர் சிலையும் அழகு. அந்த பூட்டை எப்படி திறக்கிறது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி. பூட்டைத் திறக்க ரெண்டு மூணு பேர் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். பார்ப்போம்.

   நீக்கு
  2. பூட்டுகள் திறக்கப்படும்
   சாவிகள் தொலைக்கப்படும்!

   நீக்கு
 17. ரசித்து எடுத்த படங்கள் அனைத்தும் அருமை.

  பதிலளிநீக்கு
 18. விவரங்கள் தெரியவேண்டுமெனப் பல படங்கள் அருகாமையில் நின்று எடுத்திருக்கிறீர்கள். அதிலும் நான்காவது படம் பக்கவாட்டிலிருந்து எடுத்திருப்பீர்கள் போலும். /‘என்ன முயன்றும்..’/ நேர் கோணத்தில் சற்று பின் நகர்ந்து எடுத்திருந்தால் முழுக் கட்டிடம் கிடைத்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 19. அஹா ... உளியின் கலைநயமும், தூரிகையின் எழில் நயமும் நம்மை வியக்க செய்கின்றன!!!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!