திங்கள், 9 மார்ச், 2020

"திங்க"க்கிழமை  :  மெக்ஸிகன் ரைஸ்  - மதுரைத்தமிழன் ரெஸிப்பி 

மெக்ஸிகன் ரைஸ்........... Classic Mexican Rice With Tomatoes and Peppers
சமைப்பதைக் கஷ்டமாக நினைத்துச் சமைக்க ஆரம்பித்தால் அந்த உணவு ருசியாக வாராது என்பது என் கருத்து. கொஞ்சம் சமைத்தாலும் நிறையச் சமைத்தாலும் அதைச் சாப்பிடுபவர்கள் சந்தோஷமாக ருசித்துச் சாப்பிட வேண்டுமென்று நினைத்துச் சமைக்க ஆரம்பித்தால் அந்த சாப்பாட்டின் ருசியே தனி...   நான் 12 வயதிலே சமைக்க ஆரம்பித்து அடுத்தவர்களைச் சந்தோஷப்படுத்த ஆரம்பித்தேன்.. அது இன்று  வரை தொடர்கிறது.

எனக்கு வயது 12 இருக்கும் அந்த சமயத்தில் அம்மாவிற்கு உடம்புக்கு முடியாமல் ஹாஸ்பிடலில் 2 வாரம் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.. அந்த சமயத்தில் வீட்டில் 5 பேர்கள் அப்பாவையும் சேர்த்து எல்லோருக்கும் மூன்று வேளையும் உணவகத்தில் வாங்கி சாப்பிட்டு கட்டுபடியாக வில்லை என்பதால் இரண்டாவது நாள் நான் சமைக்க ஆரம்பித்தேன். 


அதற்கு முன் நான் சமைத்தது இல்லை ஆனால் அம்மா சமைக்கும் போது அவர்களுக்கு உதவியாக அநேக நாட்கள் இருந்ததால் அதை ஞாபகம் வைத்துச் சமைக்க ஆரம்பித்தேன். என் நல்ல நேரம் நான் சமைத்து எல்லாம் சாப்பிடும்படியாக இருந்தது..அம்மா ஹாஸ்பிடலில் இருந்த சமயம் பாட்டி ஊரிலிருந்து பார்க்க வந்த போது அவர்களுக்கு மட்டன் கறி சமைத்துக் கொடுத்தேன் அதைச் சாப்பிட்டுவிட்டு மிகவும் நன்றாக வந்திருப்பதாக உண்மையிலே பாராட்டினார்கள்... 

அதுமட்டுமல்ல அம்மா ஹாஸ்பிடலில் இருந்தது கீழ்வீட்டு ஐயர் ஆத்து மாமிக்குத் தெரியாது நான் அம்மியில் மாசாலக்கள் அரைக்கும் போது அம்மாதான் அரைப்பதாக நினைத்துக் கொண்டார்களாம்..... ஆனால் என் அம்மா ஏன் சில நாட்களாகப் பேச வரவில்லை என்று நினைத்துக் கொண்டார்கள் அதன் பிறகுதான் அம்மா ஹாஸ்பிடலில் இருந்ததே அந்த மாமிக்குத் தெரியும். 

இப்படித்தான் என் சமையல் அனுபவம் ஆரம்பித்தது.. அது இன்று வரை தொடர்கிறது..... தினமும் வீட்டில் நான் சமைத்தாலும் அதுவும் கடந்து மூன்று மாதங்கள் அதில்  ஒரு சில வார இறுதி நாட்களைத் தவிர்த்து பார்ட்டி அது இது என்று ஒடி விட்டது அதில்  4 பெரிய பார்ட்டிகள் என் வீட்டிலும் மற்றவைகள் எனது நண்பர்கள் வீட்டிலும் கொண்டாடினாலும் அதில் என்  உணவுகள் கண்டிப்பாகப் பேசும் பொருளாகவே இருந்தது, எனது  உணவு உண்ணும் வாய்ப்பு கிடைத்த பதிவர்கள் 2 பேர்தான் அவர்கள் நண்பர் ரமணி,விசு, ஆல்பிரட்..... இதில் நண்பர் ஆல்பிரட் வந்து போது உணவு மட்டுமல்ல என் உணவோடு அவரும் அவரது மனைவியின்  கள்ளம் கபடமில்லாத பேச்சை என் மற்ற நண்பர்களும் ரசித்து மகிழ்ந்தனர். அன்று வந்த என் நண்பர்கள் இன்றும் ஆல்பிரட் மீண்டும் எப்போது வருகிறார் அவர் வந்தால் எங்களையும் கண்டிப்பாகக் கூப்பிடுங்கள் என்று சொல்லுகின்றனர்...


என்னடா மெக்ஸிகன் ரைஸ் என்று சொந்த கதையைச் சொல்கிறான் இந்த மதுர என்று நினைக்க வேண்டாம் கிடைச்ச சந்தடி சாக்கில் நம்ம புராணத்தையும் எடுத்துவிடவேண்டுமோ இல்லியோ அதனால்தான். ஹீஹீ

இனிமேல்  நண்பர் ஸ்ரீராம் திங்கள் கிழமைக்கு என்னிடம் பதிவு எழுதச் சொல்லிக் கேட்கமாட்டார் என நினைக்கிறேன் ஹீஹீஹீஹீஹீஹீஹீஹீ
 

தேவையான பொருட்கள் :



மிக்ஸர் - கேரளா அம்மா ஹாட் மிக்ஸ்ர் 1  கப்


பெரிய வெங்காயம் - 2

கொடமிளகாய் : பச்சை - 1 , சிவப்பு- 1 , மஞ்சள் - 1

கேரட் -2

சோளம் - 2 கப்

ராஜ்மா - 2 கப்

டொமொட்டோ சாஷ் - 1 கப் அல்லது  4 பழுத்த தக்காளியை அரைத்து எடுத்துக் கொள்ளவும்

சிவப்பு மிளகாய் - 5 அல்லது 6 (நீரில் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும் )

பூண்டு - 2

ஆயில் --- ஒரு கரண்டி

அரிசி - 1 கப்

உப்பு தேவையான அளவு





ஸ்டெப் 1 - குளிர்ந்த நீர் பாட்டிலை ஒப்பன செய்து வைத்துக் கொள்ளவும் அதன் பின் மிக்ஸரில் வெங்காயம் பச்சைமிளகாயை மிக பொடிப்பொடியாக நறுக்கி  மிக்ஸ் செய்து கொள்ளவும்..

அதன் பின் நீரை ஒரு மடக்கு குடித்து விட்டு சில நொடிகள் கழித்து ஒரு ஸ்பூன் மிக்ஸரை வாயில் போட்டுக் கொள்ளவும். நீருக்கு பதிலாக காபி அல்லது தேநீர் பயன்படுத்தலாம்... இந்த மெக்ஸிகன் ரைஸ் மிகவும் டேஸ்டாக பண்ணுவதற்கு இந்த ஸ்டெப் மிக அவசியம்..



ஸ்டெப் 2





காய்கறிகளைப் படத்தில்  உள்ளது போல நீளமாகவும் கட் செய்து வைத்துக் கொள்ளவும்... ராஜ்மா மற்றும் கார்னை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.. இங்கு இவை இரண்டும் கேன்களில் கிடைக்கும் அதனால் அதைத் தனியாக வேக வைக்கத் தேவையில்லை..





முதலில் பெரிய வடை சட்டியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும் அதன் பின்  பூண்டை நன்றாக நசுக்கி அதில் போட்டு வதக்கவும்  பின் நறுக்கி வைத்த வெங்காயத்தைப்   போட்டு சற்று வதக்கவும் . இப்போது நறுக்கி வைத்த காய்களை அதில் போட்டு வதக்கவும் சில நிமிடங்கள் கழித்தது  ராஜ்மா, சோளம் ,தக்காளி சாஷ் அல்லது அரைத்து வைத்த தக்காளி, சிவப்பு மிளகாயை அதில் போட்டு மிக்ஸ் செய்யவும் இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும் இறுதியாக ஒரு கப் அரிசியில் வடித்த சாதத்தை இதில் போட்டு மிக்ஸ் செய்து கொள்ளவும் (சாதத்தைக் குழையாமல் வடித்துக் கொள்ளுங்கள்). இதில் முக்கியம்  ராஜ்மாவும் கார்ன்னும்தான் ராஜ்மாவிற்கு பதிலாக ப்ளாக் பீன்ஸ் உபயோகிக்கலாம்...





இந்த ரைஸ் குழந்தைகளுக்கும் வித்தியாசமாகச் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்குப் பிடிக்கும்....






இது வரை செய்யும் முறையை பார்த்தோம் இனிமேல் நாம் பார்க்கப் போவது ஸ்டெப் 3 சாப்பிடும் முறை. ஒவ்வொரு கல்ச்சருக்கும் சாப்பிடும் முறை வேறு படும்.... அது அவர்களின் உணவுப் பழக்க வழக்கத்தைப் பொறுத்தது. நம் பழக்கப்படி கையால் சாப்பிடுவதுதான் சிறந்தது. உதாரணமாக இட்டிலி தோசை சாப்பிடும் போது கையால் பிய்த்து சாம்பாரிலோ சட்னியிலோ தோய்த்துச் சாப்பிட வேண்டும்  அது போலச் சாம்பார் சாதத்தில் நெய்விட்டு நன்றாகப் பிசைந்து  வத்தகுழம்பு சாதத்தில்  அப்பளத்தை அப்படியே நொறுக்கிப் போட்டுப் பிசைந்து கவளம் கவளமாகச் சாப்பிட்டு இறுதியில் அப்படியே கையை நக்கி நக்கி சாப்பிட வேண்டும், அப்போதுதான் அதனை முழுமையாக ரசித்துச் சாப்பிட்ட ஒரு உணர்வு வரும்..


அது போல இந்த மெக்ஸிகன் உணவைச் சாப்பிடும் போது சில முறைகளைக் கடைப் பிடிக்க வேண்டும்.... முதலி டைனிங்க் ரூமில் டைனிங் டேபிளை தவிர்த்து வேறு ஏதும் இருக்கக் கூடாது அடுத்தாக டைனிங் டேபிளில் ஊறுகாய் ஜார் அந்த ஜார் இந்த ஜார் என்று ஏதும் இருக்கக் கூடாது. வேண்டுமானால் ஃப்லவர் வாஷ் இருக்கலாம்... அடுத்தாக டைனிங்க் ருமில் எந்த காரணத்தைக் கொண்டு  ட்டியூப் லைட் இருக்கக் கூடாது.... மஞ்சள் நிற விளக்குகள்தான் இருக்க வேண்டும் அதுவும் மிகப் பிரகாசமாக இருக்கக் கூடாது... மேலும் நறுமணம் மிகுந்த மெழுகு வர்த்திகளை டைனிங்க் டேபிளில் வைக்கலாம் அதற்காக ஊதுபற்றி ஏற்றி சாமிக்கு வைக்கிற மாதிரி வைக்கக் கூடாது... அடுத்தாக இந்த மெக்ஸிகன் ரைஸை சில்வர் தட்டில் போட்டு கையால் சாப்பிடக் கூடாது அதை அழகான பீங்கான்  தட்டில் போட்டு ஸ்பூன் கொண்டு அல்ல ஃபோர்க் கொண்டு சாப்பிட வேண்டும். மேலும் சாப்பிடும் போது மெக்ஸிகன் பாடலை ஒலிக்க விட வேண்டும்...  கர்நாடக சங்கீதம் கண்டிப்பாகக் கூடாது...

ஆஆஆ முக்கியமான விஷயம் ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன் பெண்கள் இந்த உணவைச் சாப்பிடும் போது புடைவை  அணிந்து இருக்க வேண்டும் ஆண்கள் அந்த கால பள்ளி மாணவன் போல அரை டவுசர் போட்டுக் கொள்ளலாம்... இப்படி புடைவை என்று சொன்னவுடன் உங்கள் மனதில் அதிரா புடவையில் தோன்றி உங்களைப் பயமுறுத்தினால் அதற்கு நான் பொறுப்பு அல்ல அதனால்  உங்கள் இதயத்திற்கு டேமேஜ் ஏற்பாட்டாலும் அதற்கும் நான் பொறுப்பல்ல


Have a Rice Day !

அன்புடன்
மதுரைத்தமிழன்

86 கருத்துகள்:

  1. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று...

    வாழ்க நலம்..ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அனைவருக்கும் வணக்கம்.. ஆமாம் துரை செல்வராஜு சார் என்னமோ சொல்லி இருக்கிறார்....பள்ளியில் படிக்கும் போது இதுக்கு கோனார் நோட்ஸ் விளக்கவுரை மூலம் அர்த்தம் தெரிந்து கொள்வேன்... இப்ப நான் என்ன செய்ய??

      நீக்கு
    2. நண்பர் ஸ்ரீராம் நலமே விளைக என்று சொல்லி இருப்பதை பார்த்ததும் என் ரிசிப்பையை கண்டு ஏதோ பயந்து பதில் அளித்திருப்பதாக யாரும் என்னை போல நினைத்து கொள்ள வேண்டாம்.. நலமே விளைக என்று துரை செல்லுராஜு சார் அவர்களுக்கு சொல்லி இருக்கிறார் என நினைக்கிறேன்

      நீக்கு
    3. நா ஒன்னுஞ் சொல்லலை..
      எல்லாம் வள்ளுவர் சாமி சொன்னதுங்கோ!..

      நீக்கு
    4. என்ன துரை செல்வராஜு சார்... 'வள்ளுவர் சாமி' எண்டு சொல்லிப்போட்டீங்கோ. நிறையபேர் பொயிங்கிடுவாங்களே.. சரி சரி எனக்கெதுக்கு வம்ப்ஸ்.

      நீக்கு
  2. சமையலுக்கு முன்பாக நிகழ்த்திய பூர்வீக புராணம் மனதை நெகிழ்த்தியது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதில் இருப்பதை சொல்லும் போது சிலரின் மனம் நெகிழசெய்யும் அதுவும் இளகிய மனது உள்ளவர்களுக்கு அதனால் சுயபுராணம் படித்த உங்களுக்கு மனம் நெகிழ்ந்து இருக்கிறது.

      நீக்கு
  3. மெக்ஸிகன் ரைஸ் எத்தனை சுவையோ
    அத்தனை சுவை - சமையலுக்குப் பிந்தைய மங்களம்...

    பதிலளிநீக்கு
  4. யாரந்த மங்களம்?...
    என்று யாரும் வந்து விடுவார்களோ!?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் யாரந்த மங்களம்

      நீக்கு
    2. ஆகா... இந்தா வந்துட்டாங்க..ள்ல!...

      நீக்கு
    3. இதென்ன புதுவரவு மங்களம்?:) கலா அண்ணி எங்கே போயிட்டாஆஆஆஅ:)

      நீக்கு
    4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    5. ஹா ஹா ஹா இப்போ துரை அண்ணன் மங்களம் மாமியைத் தேடிப் போயிட்டார்ர்ர்ர்ர்ர்:)...

      நீக்கு
  5. எப்படியோ பூஸாரை வம்புக்கு இழுத்தாயிற்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ஓ பூஸாரின் ஒரிஜனல் பெயர் மங்களமா? ஆ எனக்கு தெரியவே தெரியாதே....

      நீக்கு
    2. இன்று தஞ்சையம்பதி தளத்தில் துரை அண்ணனையும் கலா அண்ணியையும் பார்க்கலாம்..

      நீக்கு
    3. ஓஒ வருகிறேன்ன் அடுத்த பிரேக்கில்:)

      நீக்கு
  6. மிக அருமையான. சமையல். படங்களும். அதன் பின்னர் வரும் தகவல்களுm.அற்புதம். கூடவே வரும் கொசுறு சம்பவங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது பாராட்டுக்கு மிகவும் நன்றிம்மா....

      நீக்கு
  7. பூஜை நன்றாக் நடை பெற வேண்டும் என்றால்
    பூனையைப் பிடித்துக் கட்டிப் போடவேண்டும் என்று ஒரு பழமொழி உண்டு...

    அது மாதிரி இந்த செய்முறைக்கு
    அவ்வப்போது மிக்ஸர் தின்பது அவசியமாகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமைக்கும் பொது இப்படி மிக்ஸர் சாப்பிடவில்லை என்றால் சமைக்க எடுத்து வைத்திருக்கும் பொருட்களை டேஸ்ட் பார்க்கிறேன் என்ற பெயரில் காலி செய்துவிடக் கூடும் அல்லவா அதனால்தான் இப்படி மிக்ஸர் சாப்பிடனும்

      நீக்கு
  8. 12வயதிலே சமைக்க வந்தவர்!ஆஹா.! நல்ல முறைப்படி கற்று இருக்கிறீர்கள்.! நீங்கள் ஏன் எங்கள் ப்ளாகுக்கு
    கதை எழுதக் கூடாது.
    இத்தனை சம்பவங்களுக்கு கோர்வையாகக் கொடுத்து இருக்கிறீர்கள். கட்டாயம் எழுதுங்கள். வண்ண வண்ண அரிசிச் சாதம். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை எழுத மிக திறமை வேண்டும் ஆனால் அந்த திறமை என்னிடம் இல்லை கதை எழுதுவது என்பது சிலை செதுக்குவது மாதிரி அதற்கு நேரமும் அதிகம் வேண்டும் பொறுமையும் அதிகம் வேண்டும் அப்பத்தான் பார்த்து பார்த்து செதுக்க முடியும். நானெல்லாம் மனசுல அந்த நிமிஷத்தில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதி சென்றுவிடுவேன்... அது நல்லதோ கெட்டதோ....

      நீக்கு
    2. இப்படிச் சொல்லித் தப்பிக்காம ஒரு கதை எழுதுங்களேன் மதுரை...

      நீக்கு
    3. ட்றுத்
      அப்போ இன்று ரெசிப்பிக்கு மேலேயும் கீழேயும் எழுதியிருப்பது கதை இல்லையோ ஶ்ரீராம்:).. ஹா ஹா ஹா

      நீக்கு
    4. ஹலோ ஸ்ரீராம் எல்லோரும் என்னை காறித்துப்பனும் என்று முடிவுக்கு வந்துட்டீங்க போல இருக்கு..... சரி சரி உங்க ஆசையை நிறைவேற்றுகிறேன் ஆனால் உடன்ற் இல்லை நேரம் கிடைக்கும் போது

      நீக்கு
    5. அதிரா ரிசிப்பிக்கு மேலேயும் கிழேயும் இருப்பது கதைன்னா நான் செய்தது டூ இன் ஒன் கதையும் எழுதிட்டேன் ரிசிப்பியும் போட்ட்டுட்டேன் அதனால் என் வேலை முடிஞ்சுது

      நீக்கு
  9. சுயபுராணம் ரசிக்கும்படி இருந்தது செய்முறையும் சுலபம்தான். படங்களும் ரசனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக மிக எளிதாகவும் சீக்கிரமாகவும் தயார் செய்ய கூடிய ஒரு உணவு... நாம் தினமும் செய்யும் உணவு சிறிது போரடடித்தால் ஹோட்டலில் போய் சாப்பிடுவதற்கு பதிலாக இப்படி செய்து சாப்பிட்டால் உடலுக்கும் நல்லது வாய்க்கும் நல்லது கில்லர்ஜி

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. //சமைப்பதைக் கஷ்டமாக நினைத்துச் சமைக்க ஆரம்பித்தால் அந்த உணவு ருசியாக வாராது என்பது என் கருத்து. கொஞ்சம் சமைத்தாலும் நிறையச் சமைத்தாலும் அதைச் சாப்பிடுபவர்கள் சந்தோஷமாக ருசித்துச் சாப்பிட வேண்டுமென்று நினைத்துச் சமைக்க ஆரம்பித்தால் அந்த சாப்பாட்டின் ருசியே தனி...//


    சமையல் குறிப்புக்கு முன் சொன்னது மிக அருமை.

    12 வயதில் சமைக்க ஆரம்பித்த காரணம் நெகிழ்வு.


    சமையல் செய்முறை படங்கள் அழகு. செய்முறை விளக்கம் அருமை.

    பின் குறிப்பும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிம்மா, சமையல் குறிப்பு மட்டும் போட்டால் நன்றாக இருக்காது என்பதால் நிகழ்ந்த அனுபவத்தை சொல்லி இருக்கிறேன் அது உங்களுக்கும் பிடித்திருக்கிறது போல

      நீக்கு
  12. மதுரைத் தமிழன் மதுரைப் பக்க சமையலை மறந்து மெக்சிகன் ரைஸ் செய்முறை தந்திருக்கிறார்.

    செய்முறை சுலபமாகத்தான் இருக்கிறது. மெக்சிகன் டேஸ்ட்டை வரவழைப்பது அந்த தக்காளி சாஸும் ராஜ்மாவுமா?

    தினமும் குருகுலத்தில் பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கும்போது ஆசிரமத்துப் பூனை குறுக்கே சென்றதால் அதனை குரு கட்டிப்போட்டு பாடம் நடத்த ஆரம்பித்தாராம். அவர் காலத்துக்குப் பிறகு வந்த புதிய குரு, பூனையைக் கட்டிய பிறகு பாடம் நடத்துவதுதான் குருவின் நடைமுறை என்பதால் ஆசிரமத்தில் அப்போது பூனை இல்லை என்பதால் புதிதாக ஒரு பூனையைத் தேடிப்பிடித்துக் கொணர்ந்து, அதைக்கட்டி வைத்து பிறகு பாடத்தைத் தொடங்கினாராம்.

    அதைப்போல மிக்சர் சாப்பிட்டுக்கொண்டு மெக்சிகன் ரைஸ் செய்ய வேண்டுமாம். அதிலும் கேரளா அம்மா மிக்சராம். மதுரைத் தமிழன் குரு (மெக்சிகன் ரைஸ் செய்யச் சொல்லித்தந்த) குரு யாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. மதுரையில் வசித்தாலும் அம்மாவின் கைபக்குவம் நெல்லை மற்றுக் கேரளா வகையை சார்ந்தாகவே இருக்கும்... ஆனால் காலப் போக்கில் என் சமையலில் பல மாறுதல்களை செய்து சமைப்பதால் இந்த பகுதியை சார்ந்த சமையல் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது..

      இந்த சமையலுக்கு டேஸ்டுக்கு நீங்க சொன்ன இரண்டு பொருட்களும்தான் காரணம்.. இந்த சாதம் மிகவும் சத்தூணவு சாதம் என கூட சொல்லாம நெல்லை தமிழரே

      ஆஹா பூனைகதையை என்னுடைய பேவரைட் மிக்ஸருடன் கொற்த்துவிட்டுடுங்கலே நெல்லை தமிழரே


      இங்கு இந்தியாவில் இருந்து வரும் பல மாநில மிக்ஸர் கிடைத்தாலும் அதிலும் கேரளாவில் இருந்து வரும் பல பிராண்ட்கள் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது என் பெண்ணிற்கும் பிடித்தது இந்த அம்மா பிராண்ட் ஹாட் மிக்சர்தான்..

      இந்த ரைஸை பற்றி சொன்னது என்னுடன் வேலை பார்க்கும் ஒரு மெக்சிகன் பெண்மனி சொன்னது அதன் பின்னால் யூட்யூப்பில் பார்து அதில் எனக்கு பிடித்த ஒரு செய்முறையை பார்த்து செய்தது... இதை முதன் முறையாக அதுவும் ஸ்ரீராம் கேட்டு கொண்டதற்கு இணங்க செய்தது. அதுவும் இங்கு வெஜ் பதிவுகள் என்பதால் இதை செலக்ட் செய்து செய்து பார்த்தேன் இதை என் பெண் மட்டுமல்ல அவள் கூட படிக்கும் அவளது தோழிகள் பலரும் சுவைத்து மகிழ்ந்தார்கள்

      நீக்கு
  13. ஆல்ஃ்பீ தியாகராஜனை நினைவுகூர்ந்தது சிறப்பு. சமையல் கரண்டி கைகளுக்கு வந்த விதம் நெகிழ்ச்சி.

    ஸ்டெப் 3 - ரசித்தேன். ஒவ்வொரு கல்சரும் உணவு உண்ணும் தன்மையும் மதிக்கப்பட வேண்டியவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ஆல்பிரட் ஹீ இஸ் எ கிரேட் மேன் அவரது மனைவி மிகவும் வெகுளிதனமான மிக நல்ல பெண்மணி அவர்களை சந்தித்த தருணம் மிக மகிழ்வான தருணம்.....

      அது போலத்தான் விசு மற்றும் நம்ம ரமணி சார்... ரமணி சாரின் மனைவியும் மிக மிக நன்றாக பழக கூடவர்... அவர்களுது வருகையும் எங்களுக்கு மிகவும் மகிழ்வை தந்தது

      நீக்கு
  14. இந்தச் செய்முறையை ஶ்ரீராம் கம்பைல் பண்ணி வெளியிடலைனு நினைக்கிறேன். அப்படி இருந்திருந்தால் உங்கள் படத்தையும் (உங்கள் செல்லத்துடன் சோபா மேல் படுத்த நிலையில்) வெளியிட்டிருப்பார் (ஒருவேளை கே வா போவில்தான் அந்த முறையோ?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைதமிழரே உங்களுக்கு ஞாபக சக்தி மிகவும் அதிகம் போலிருக்கிறது..... என் படத்தை இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்.....

      நீக்கு
  15. எனது சமையல் குறிப்பை பார்த்து ரசித்து பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள் இப்போது இங்கு இரவு 12 மணியாகிறது.. நான் காலை 4 மணிக்கு எழுந்திருந்து 6 மணிக்குள் வொர்ர்கிற்கு செல்ல வேண்டும். அதனால் நாளை லஞ்ச்( 1 - 2 ) டைமின் போது நேரம் கிடைத்தால் மீண்டும் வருகிறேன் அப்படி வரமுடியவில்லை என்றால் நீங்கள் தூங்க சென்ற பிறகுதான் வர முடியும்.. அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது பூரிக்கட்டை புகழ் மதுரைத்தமிழன் நன்றி வாழ்க் வளமுடன்

    பதிலளிநீக்கு
  16. அடடா...! என்னவொரு ரசனை, தித்திப்பு, லாவகம்...! நான் சொல்வது ஸ்டெப் 3...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. ஹும்ம்ம் ஸ்டெப் ஒன்னை என்னை தவிர யாருக்கும் பிடிக்கலை போல இருக்கே.....

      நீக்கு
  17. இனிய நம் நண்பர் ஆல்பிரட் R.தியாகராஜன் எங்கள் வீட்டுக்கு வந்துள்ளார்...

    தல...! நீங்க எப்போ நம்ம வீட்டுக்கு வரப்போறீங்க...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியாவிற்கு வரும் போது கண்டிப்பாக உங்கள் வீட்டு கதை நிச்சய்ம தட்டுவேன்

      நீக்கு
  18. நான் இவரின் நளபாகத்தை ருசித்து மகிழும் பாக்கியம். பெற்றவன் என்பதைப் பதிவு செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. எண்ணி 2 ஸ்பூன் சாப்பிட்டுவிட்டு பாக்கியம் பெற்றவன் என்று சொல்லுவது அநியாயமாக இருக்கு சார்

      நீக்கு
  19. ஆஆஆஆஎனக்குத் தலை சுற்றுகிறது கண் இருட்டுகிறது.... சமையல் குறிப்பை அனுப்பியவரின் பெயர் பார்த்து:)...
    ட்றுத் வாழ்க வளமுடன்.....

    மேலேயும் கதை கீழேயும் கதை நடுவில ரெசிப்பி போலும்:)... போஸ்ட்டைப் பார்த்துச் சொல்லிட்டேன்ன்ன்... படிச்சிட்டு பின்பு தான் வருவேன்ன்ன்ன்:)..
    படங்கள் கலக்குது...

    பதிலளிநீக்கு
  20. அட....டா....மெக்சிகன் ரைஸ் உடன் கல...கல....கதைகள் பேசி சமையல் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  21. சுவையான சமையல் குறிப்பு.

    பாராட்டுகளும் வாழ்த்துகளும் மதுரைத் தமிழன். உங்கள் சுயபுராணமும் நன்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வெங்க்ட்ஜியிடம் இருந்து பாராட்டு கிடைப்பது உயரிய விருது பெற்றது போல இருக்கிறது நன்றி ஜி

      நீக்கு
  22. மெக்ஸிகன் ரைஸ் சூப்பரா இருக்கு.... இதைச் சாப்பிடும்போது என்ன பாஷை பேசவேண்டுமெனச் சொல்லவில்லையே கர்ர்ர்ர்ர்ர்:)...

    ////இப்படி புடைவை என்று சொன்னவுடன் உங்கள் மனதில் அதிரா புடவையில் தோன்றி உங்களைப் பயமுறுத்தினால் அதற்கு நான் பொறுப்பு அல்ல////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இன்று எல்லோர் கனவிலும் சாறியுடன் கையில கறண்டியுடனும் வந்து பயமுறுத்துவேன்ன்ன்ன் இது ட்றுத்தின் மெ மெ றைஸ் மீது ஜத்தியம்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. றைஸ்-ரைஸ், சாறி-சாரி, கறண்டி-கரண்டி

      நீக்கு
    2. ஹா ஹா ஹா நோஓ நான் இதை எல்லாம் பேச்சுவழக்குப்போலத்தான் எழுதுவேனாக்கும்:)...

      நீக்கு
    3. யாரு வேண்டுமானாலும் என்ன பாஷை வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் நீங்க மட்டும் கண்டிப்பாக தமிழ் பேசக் கூடாது

      எல்லோரையும் கடவுள் நிச்சயம் காப்பாற்றுவார்

      நீக்கு
    4. நெல்லைத்தமிழன் அதிரா தேம்ஸ் நதிக்கரையோர திமுக மகளிர் அணி செயலாளாராக இருப்பார் என நினைக்கிறேன் அதனால்தான் இப்படி மிக சரியாக தமிழை எழுதி தமிழை வளர்க்கிறார் போல...

      நீக்கு
  23. //கொடமிளகாய் : பச்சை - 1 , சிவப்பு- 1 , மஞ்சள் - 1// - ஓ... மதுரைத் தமிழன் 'அந்தக்' கட்சியைச் சேர்ந்தவரோ... அதான் பார்த்தேன் ஏன் வயலட் மற்ற நிறத்திலுள்ள குடைமிளகாயைச் சேர்க்கக்கூடாதுன்னு சொல்றார்னு. இதை எப்படி ஆசிரியர் கவனிக்க மறந்தார்? ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானெல்லாம் எங்காத்து மாமி கட்சியாக்கும் அதை தவிர வேறு எந்த கட்சியிலும் நான் உறுப்பினராக இல்லை

      நீக்கு
  24. இந்த மெக்சிகன் ரைஸை சைனீஸ் பிரைட் ரைஸ் என்னும் பெயரில் பண்ணி இருக்கேன். சாப்பிட்டும் இருக்கோம். அதில் குடமிளகாய், சோளம், ராஜ்மா போன்றவற்றுடன் ஷாலட்ஸும் சேர்ப்பார்கள். தக்காளி சாஸ், மிளகாயை ஊறவைப்பதற்குப் பதிலாகச் சில்லி சாஸ். எப்படி இருந்தால் என்ன, ரோஜாப்பூ, ரோஜாப்பூ தான். மதுரைத் தமிழர் தான் சமையலிலும் வல்லவர் எனக் காட்டி விட்டார். வாழ்த்துகள். அம்மாவின் சிரமம் அறிந்து வேலைகளைப் பகிர்ந்திருக்கிறார். அது போல் மனைவிக்கும் உதவிக் கொண்டிருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாம்மா நீங்கள் செய்வதும் சரிதான்..... சைனிஸ் ரைசில் ராஜ்மா கார்ன் சேர்க்கமாட்டார்கள் மேலும் சைனிஸ் ரையில் சோயா சாஸ் சிறிது சேர்ப்பார்கள்....... உங்களது பாராட்டுக்கு நன்றியம்மா

      நீக்கு
  25. எழுதி இருக்கும் பாணி ரசனையுடன் அமைந்துள்ளது. சாப்பிடும் முறை அமர்க்களம். இந்த உணவுக்கு உடைக்கட்டுப்பாடும் சொல்லி இருக்கார். எல்லோரும் கடைப்பிடிப்பார்களா? :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போ கட்டுபாடு என்று சொல்லிவிட்டோமோ அப்பவே பலர் கடை பிடிக்கமாட்டார்களம்மா

      நீக்கு
  26. //Have a Rice Day !// இந்த உங்களுடைய last comment உங்களுடைய மொத்த ரெசிபியையும் பிச்சி உதரிவிட்டது. நான் தமிழக சமையலைத் தவிற எதையும் வீட்டில் செய்து பார்த்ததில்லை. அவசியம் செய்து நீங்கள் சொன்ன படியே சாப்பிட்டு பார்த்து விட்டு மீண்டும் வந்து என் கருத்தை சொல்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. எங்கோ எப்போவோ படித்த ஞாபகம்..... இந்த பதிவு எழுதும் போது ஞாபகத்திற்கு வந்ததால் அதை இறுதியில் சேர்த்துவிட்டேன்

      நீக்கு
  27. மிக்ஸர் தான்புரியவில்லை கடைகளில் விற்கும் மிக்ஸ்சரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார் கடைகளில் விற்கும் மிக்ஸர்தான் இந்த அம்மா மிக்ஸ்ர் கேரளாவில் இருந்து இங்கு வருகிறது எனக்கு மிகவும் பிடித்த மிக்ஸர் இது

      நீக்கு
  28. மெக்சிகன் ரைஸ் நல்லா இருக்கு அதைவிட சமைக்க ஆரம்பிச்ச ஸ்டோரி   மனதை நெகிழச்செய்தது .நான்லாம் ஒரு துரும்பை கூட அசைக்கல்லை ஸ்கூல் கல்லூரி நாட்களில் :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கதான் தேவதை ஆச்சே அன்றுமட்டுமல்ல இன்றும்தான்.. இப்ப கூட நீங்க துரும்பை கூட அசைக்கமாட்டீங்க அதற்குதானே வூட்டுகாரர் இருக்கிறார்

      நீக்கு
  29. வலைத் திரட்டி உலகில் புதிய புரட்சி, வந்தது : வலை ஓலை எனும் புதிய செய்தி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது “திங்க”க்கிழமை : மெக்ஸிகன் ரைஸ் – மதுரைத்தமிழன் ரெஸிப்பி பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், விரைவில், அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
  30. நன்றாக சமைப்பதே சிறப்பு. இதில் அம்மாவின் கைப்பக்குவத்துடன் சமைப்பது இன்னும் சிறப்பு. ஆனால் சமைக்க கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் தான் ..... அவ்வ்வ்.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள் சிகரம் பாரதி

      நீக்கு
  31. ஒரு முறை ஒரு நண்பர் வீட்டில் மெக்ஸிகன் நூடுல்ஸ் என்று ஒன்று செய்திருந்தார்கள். என்ன காரணமோ அது போணியாகவில்லை. அதனால் கொஞ்சம் பயந்தபடிதான் படித்தேன். ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் மெக்ஸிகன் ரைஸ் எளிமையாகவும், நன்றாகவும் இருக்கிறது.சொல்லியிருக்கும் விதம் அதேவிட அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகளுக்கு நூடுல்ஸ் பிடிக்கலாம் நமக்கும் ஒரு மாறுதலுக்கு சாப்பிடலாம் என்று நினைத்தால்தான் சாப்பிட முடியும்மா... ஆனால் இதற்கு முன்னால் வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும் இருந்தால் அல்லது நம் தமிழ் சமையல் இருந்தால் கண்டிப்பாக போணியாகதும்மா. பாராட்டிற்கு மிகவும் நன்றி பானுமதியம்மா

      நீக்கு
  32. வணக்கம் சகோதரரே

    தங்களின் கைவண்ணமான மெக்சிகன் ரைஸ் செய்முறை படங்களுடன் நன்றாக உள்ளது. படங்கள் மிகத் தெளிவு. தங்களின் சமையலைப் பற்றிய வார்த்தைக் கோர்வைகளும் அதே தெளிவு.

    12 வயதிலிருந்து சமையலின் நெளிவு சுளிவுகளை கற்று தேர்ந்ததால் இன்றும் அருமையாக தங்களுக்கு கைப்பக்குவம் கூடி வரப்பெற்று இருக்கிறது. வாழ்த்துகள்.

    சமைத்த பின் சாப்பிடும் முறைப்பற்றி விளக்கியது ரசனையாக இருந்தது. படித்து ரசித்தேன்.

    நேற்று முழுவதும் இணைய பிரச்சனை காரணமாக என்னால் வலைத்தளம் வர இயலவில்லை. அதனால் தாமதமாக இங்குதான் முதல் வருகை. பதிவு மிகவும் அருமையாய் இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  33. உங்களின் கருத்திற்கு மிகவும் நன்றிம்மா

    பதிலளிநீக்கு
  34. மெக்ஸிகன் ரைஸ்.........ரொம்ப நல்லா இருக்கு ..





    அதிலும் முதல் ஸ்டேப்



    அதன் பின் நீரை ஒரு மடக்கு குடித்து விட்டு சில நொடிகள் கழித்து ஒரு ஸ்பூன் மிக்ஸரை வாயில் போட்டுக் கொள்ளவும். நீருக்கு பதிலாக காபி அல்லது தேநீர் பயன்படுத்தலாம்... இந்த மெக்ஸிகன் ரைஸ் மிகவும் டேஸ்டாக பண்ணுவதற்கு இந்த ஸ்டெப் மிக அவசியம்..



    .....ஆஹா மிக அருமை ...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!