ஜீவி :
1) உங்கள் தங்க நகையைக் கொண்டு வாருங்கள்.. இன்றைய தங்க விலைக்குப் பணமாகவே பெற்றுக் கொள்ளுங்கள். என்கிற மாதிரியான விளம்பரங்கள் டி.வி. சேனல்களில் தூள் கிளப்புகின்றன. இன்றைய பணமில்லா பரிவர்த்தனை காலத்தில் இவ்வளவு தான் கேஷாக பண மாற்று இருக்க வேண்டும் என்று வரையறை ஏதாவது இருக்கிறதா? அப்படியாயிருந்தால் அது எவ்வளவு?
# As per the new rules, accepting cash of Rs 2 lakh or more in aggregate from a single person in a day or for one or more transactions relating to one event or occasion is prohibited now. Besides, no one can receive or repay Rs 20,000 or more in cash for transfer of immovable property now. Aug 29, 2017
இணையதளம் சொல்வது.
விழாக்களில் மொய்யாக வரும் தொகை விதிவிலக்கு.
& தங்க நகை கம்பெனிகள், பணமாகத்தான் கொடுப்போம் என்று அடம் பிடிப்பதில்லை. பணமாகவோ அல்லது மற்ற வகையிலோ (cash service to customers through Cash/IMPS/NEFT/RTGS transactions ) கொடுப்போம் என்கிறார்கள். தங்க பொருட்கள் வாங்கிக்கொண்டு, பணம் கொடுப்பது, அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை மீட்டு, அவற்றை அவர்களே அன்றைய மார்க்கெட் ரேட்டுக்கு வாங்கிக்கொள்வது என்பது அவர்கள் செய்யும் பிரதான வியாபாரம். மொத்த வியாபார மதிப்பில் மூன்று சதவிகிதம் அவர்களுக்கு சர்வீஸ் சார்ஜ் என்று சொல்கிறார்கள். அனுபவப்பட்டவர்கள் சொன்னால்தான், இதில் உள்ள சாதக பாதகங்கள் நமக்குத் தெரியவரும்.
2) 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் ப்ரிமியம் தொகை இருக்கட்டும்.
ஆண்டுக்கு ஆண்டு ப்ரிமியம் தொகை புதுப்பிப்பதாக இருந்தாலும் சரி.
இதற்கு முன்னால் அனுபவித்த அல்லது அனுபவிக்கும் நோய்களுக்கு மருத்துவ உதவி கிடையாது என்று புறக்கணிக்காத -- நேர்மையான செட்டில்மெண்ட் பாரம்பரியம் கொண்ட Health Insurance Policy (Cashless) ஏதாவது இந்தியாவில் உண்டா?.. இருப்பின் தெரிவியுங்களேன். உபயோகமாக இருக்கும்.
(அமெரிக்க ஹெல்த் இன்ஷூரன்ஸ்கள் எல்லாம் இப்படித்தான். ப்ரிமியம் கட்டி விட்டால் போதும்.
எந்த நோய் வந்தாலும் ஹாயாக ஆசுபத்திரிகளை நாடலாம். பென்னி பேமண்ட் இல்லாமல் ட்ரீட்மெண்ட் நடக்கும். இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கும் மருத்துவ மனைக்கும் தான் தொடர்பே.. நம்மை எதற்கும் தொந்தரவு படுத்த மாட்டார்கள். Pre payment எதுவும் இருக்காது. அந்த மாதிரி ----- )
# மருத்துவக் காப்பீடு வசதி இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். இணையதளம் வழியே நல்ல நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.
& // (இதற்கு முன்னால் அனுபவித்த அல்லது அனுபவிக்கும் நோய்களுக்கு மருத்துவ உதவி கிடையாது என்று புறக்கணிக்காத -- நேர்மையான செட்டில்மெண்ட் பாரம்பரியம் கொண்ட Health Insurance Policy (Cashless) ஏதாவது இந்தியாவில் உண்டா?) // இல்லை என்று நினைக்கிறேன். ஒரு நோய்க்கு, ஒரே ஆண்டில், ஒருமுறைதான் மருத்துவ உதவி என்றுதான் நிபந்தனை, பெரும்பாலான காப்பீடு திட்டங்களில்.
ஏஞ்சல் :
1. திரைப்படங்களாகட்டும் விளம்பரங்களாகட்டும் போகிறபோக்கில் மக்கள் மனதில் விஷ விதையை வேண்டா சிந்தனைகளை தூவிச்செல்கின்றன என்பது உண்மையா ?
$ உண்மை.
& இப்போ சில சீரியல்களும், சில 'கோணல் பார்வை' talk show களும் கூட இந்த வரிசையில் சேர்ந்துள்ளன.
# உண்மை இல்லை. ஒரு செய்தி மனதில் தவறான எண்ணங்களை ஊக்குவிக்கும் என்பது உண்மையானால் நாட்டில் கோடிக்கணக்கான வில்லன் வில்லிகள் உருவாகி இருக்க வேண்டும்.
தீய விளைவுகளுக்கு காண்போர் மன நிலையே அடிப்படை.
தூவுவது உண்மையாக இருந்தால் கூட, விளை நிலம்தான் பெரும் பொறுப்பு.
2. காட்சியாய் பார்ப்பதும் செவிவழி கேட்பதும் அப்படியே உள்மனதில் பாதிக்கிறது பதிகிறது இது ஏன் ?? அப்படி சமீபத்தில் உங்க மனதில் பதிந்த விஷயம் எது ??
$ பாதிக்க வேண்டும் என்பது தானே குறிக்கோள்?
போராட்ட ஊர்வலங்கள் மேடைகளில் குழந்தைகள்.
& கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதே மெய்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
அண்மை விஷயம் வ.கி டெல்லியில் கண்மூடித் தனமாக கார்கள் நாசம் செய்யப் பட்ட காட்சிகள்.
3. நாம் நமக்காக வாழ்கிறோமா இல்லை பிறருக்காகவா ? இதன் சாதக பாதகங்கள் என்ன ?
$ நாம் அடுத்தவரை சார்ந்திராமல் வாழ்தல் அரிது.
& முதலில் நமக்காக வாழவேண்டும். நம்மைச் சார்ந்து இருப்பவர்களுக்காக வாழவேண்டும். நம்மைச் சார்ந்து யாரும் இல்லை என்றால், சமுதாய நன்மைக்காக வாழவேண்டும்.
# பெரும்பாலும் நமக்காக. கொஞ்சமே கொஞ்சம் எப்போதாவது பிறர்க்காக. இதில் பெரிய சாதக பாதகம் கிடையாது.
4. ஒரு கேள்வி கேட்டு அந்த கேள்விக்கு உங்க பதிலை பார்த்து சமூக போர் எலிகள் பொங்கினால் :))) என்னை திட்டுவீர்களா ??
$ என்ன கேட்டிங்க? சரியாகவே கேட்கலைங்க.
& போராளிகள் (என்று கருதிக்கொள்பவர்கள் ) பொங்குவதற்கு காரணம் ஏதாவது கிடைக்கவேண்டும் என்று காத்துக்கொண்டிருப்பார்களா என்ன!
# மாட்டோம்.சலசலப்புச் செய்வது சிலருக்குத் தொழில். ஏது கிடைக்கும் எனக் காத்திருப்பார்கள்.
5. நல்லது கெட்டது தெரிஞ்சிருக்கணும்னு சொல்றாங்களே அது ஏன் ? எதுக்கு இரண்டும் தெரியணும் ? நல்லது மட்டும் தெரிஞ்சிருந்தா போதாதா ?
$ எதுவும் நல்லதாக அல்லது கெட்டதாவது சந்தர்ப்ப சூழ்நிலையால் மட்டுமே.
& இரண்டும் தெரிந்திருந்தால்தான் நல்லது எது, கெட்டது எது என்று பகுத்தறிய முடியும். மார்க்கெட்டுல போய் தக்காளி வாங்கினால் கூட, கெட்டது எது என்று தெரிந்திருந்தால்தானே அதை ஒதுக்கி நல்லதை வாங்க முடியும்!
# இரண்டும் இருந்தால்தான் நல்லது அல்லது எனப் பிரிக்க முடியும்.
$ அவரவர் மன நிலை பொறுத்து மாறுபடலாம்.
& If we know the art of "delegating" then there won't be any stress.
Start by specifying the outcome you desire to the people you trust to deliver it. Establish controls, identify limits to the work and provide sufficient support, but resist upward delegation. Keep up to date with progress, and focus on results rather than procedures. Finally, when the work is completed, give recognition where it’s deserved.
# அதற்கான தகுதி இல்லாததாக இருக்குமோ ?
7. இப்போதெல்லாம் மனிதன் பிறரை பற்றி கொஞ்சமும் நினைத்துப்பார்ப்பதில்லையே ? எல்லாருக்கும் .Mindfulness கோர்ஸ் கட்டாயமாக்கினாலாவது திருந்துவார்களா ?
(இத்தாலிக்கு சென்று வந்ததை மறைத்த குடும்பம் பற்றி நியூஸில் படிச்சதும் தோணுச்சு )
$ திருக்குறள் கட்டாய பாடமாக .
& பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளை விட, பெற்றோர் மற்றும் கூட்டுக்குடும்பங்கள்தான் இதற்கு நல்ல தீர்வு. ஆனால் ....
# கோர்ஸ் எடுத்தவரெல்லாம் அப்ளை செய்வதில்லை.
8. நம்மை ஒருவர் அல்லது சிலர் மட்டும் வெறுக்க காரணம் என்னவா இருக்கும் ?
$ நாம் சராசரிக்கும் மேற்பட்ட நல்லவராகவோ கெட்டவராகவோ இருக்க வேண்டும்.
& ஒருவர் அல்லது சிலர்தானே வெறுக்கிறார்கள். பரவாயில்லை. பலர் நம்மை நேசிக்கிறார்களே என்று தெரிந்து சந்தோஷப்படுவோம். எல்லோரும் எல்லோருக்கும் எப்பொழுதும் விரும்பத்தக்கவர்களாக இருக்க முடியாது.
# அவர்களது விசேஷக் கண்ணோட்டம் ?
& நடிகர் : சாதாரண ரசிகன் இவர் நடிப்பைப் பார்த்து, வியப்பு அடைந்தால், நடிகர்.
மகா நடிகர் : நடிகர்களே இவர் நடிப்பைப் பார்த்து 'ஆஹா' என்று வியப்பு அடைந்தால் மகா நடிகர்.
மகா நடிகர்களே 'இவர்' நடிப்பைப் பார்த்து வியப்பு அடைந்தால், அவர் அரசியல்வாதி.
# சம்பாத்தியம் தான்.
நான் எந்த நடிகரையும் சந்தித்ததில்லை. வெகு சிலரை வெகு தூரத்திலிருந்து பார்த்ததுண்டு.
10. அதீத அறிவு புத்திசாலித்தனம் சந்தோஷத்தை தருமா ?
$ ஆக்கவழியில் செலுத்தப் பட்ட அறிவு கட்டாயம் சந்தோஷம் தரும்.
& யாருக்கு? அ அ + புத கொண்டவருக்கா - அல்லது மற்றவர்களுக்கா? எனக்குத் தெரிந்து அ அ + புத கொண்ட சிலர், சந்தோஷமாக இருப்பதுபோல் தெரியவில்லை.
# தரக் கூடாது என்று நியதி ஏதுமில்லை. "துரியத்தில் சச்சிதானந்தம்" என்று காதில் விழுந்ததாக நினைவு.
$ நம் தவறுகளுக்கு external கடவுளுக்கு பதில் உள்ளுறை கடவுளைப் பொறுப்பாக்கினால் இக்கேள்வி எழாது.
& எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே!
# அடுத்த முறை கடவுளை விசாரித்துச் சொல்கிறேன்.
மேதையும் பேதையும் சூழலின் விளைவு. விளைநிலத் தேர்வு முற்றிலும் தற்செயல்.
==========================================
2,11,20,29 தேதிகளில் பிறந்தவர்கள் குணாதிசயங்கள் பற்றி பார்ப்போம்.
உழைப்பாளிகள், படைப்பாற்றல் மிக்கவர்கள் என்ற போதிலும் ஆகாயக் கோட்டை கட்டுபவர்கள் என்ற பெயரும் இவர்களுக்கு உண்டு. கோபம் இவர்களுக்கு உடன் பிறந்த விஷயம். பிடிவாத குணமும் இருக்கும். ஒன்றாம் எண்காரர்களுடன் நட்பாக இருப்பார்கள்.
இதுவரை அமெரிக்க ஜனாதிபதியாக ஆனவர்களில் அதிகம் பேர் (எட்டு பேர்) இரண்டாம் எண்காரர்கள் என்பது ஆச்சரியமான தகவல்!
இரண்டாம் எண்காரர்கள் பக்கத்தில் ஏதாவது ஒரு catalyst person இருந்துகொண்டிருந்தால், அப்போது இரண்டாம் எண்காரர்கள் சூப்பர் சாதனையாளர்களாக பரிமளிக்க வாய்ப்புகள் அதிகம். தனித்து விடப்பட்டாலோ அல்லது தன்னம்பிக்கையை இழந்தாலோ, முடங்கிவிடுவார்கள்.
ஹெரால்ட் வில்சன், மொரார்ஜி தேசாய் உட்பட பல பிரபலங்களும் இரண்டாம் எண்காரர்கள்.
கூகிள் தேடலில், இரண்டாம் எண் கொண்ட பல அழகிய நடிகைகள் இருக்கிறார்கள் என்று தெரிகின்றது. (யாரும் நம்ம ஊரு இல்லீங்கோ!)
======================================
மீண்டும் சந்திப்போம்!
======================================
Firssssssssssssssssssssssssst
பதிலளிநீக்குஅ
நீக்குட
டே....!
க வி உ (Thumbs up)
நீக்குஅஆவ் :) என் கேள்விகள் இந்த வாரமே வந்துடுச்சே தாங்க்ஸ் :)
பதிலளிநீக்குமோஸ்ட் வெல்கம்!
நீக்குஅதே, அதே!
நீக்குஅனைவருக்கும் இனிய புதனுக்கான வணக்கம். இனிதே
பதிலளிநீக்குஇந்த நாள் இருக்க பிரார்த்தனைகள். Hi ANGEL.:)
வாங்க வல்லிம்மா... வணக்கம்...நன்றி.
நீக்குHi Vallimaa :))))
நீக்குHi, RN, Sri, Angel!
நீக்குHi Gauthaman ji, Sriram.!,
நீக்கு:))
நீக்குதக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்..
பதிலளிநீக்குநலமே வாழ்க...
நலமே விளைக
நீக்குவாழ்க!
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க...
நீக்குவணக்கம் துரை அண்ணா
நீக்குவணக்கம் எல்லோருக்கும்!
நீக்கு//நம்மை ஒருவர் அல்லது சிலர் மட்டும் வெறுக்க காரணம் என்னவா இருக்கும் ?
பதிலளிநீக்கு$ நாம் சராசரிக்கும் மேற்பட்ட நல்லவராகவோ//
ஹை தாங்ஸ் தாங்க்ஸ் இப்போ புரியுது விடைதெரியா கேள்வியா இருந்துச்சி
ஹா ஹா ! நன்றி!
நீக்கு//4. ஒரு கேள்வி கேட்டு அந்த கேள்விக்கு உங்க பதிலை பார்த்து சமூக போர் எலிகள் பொங்கினால் :))) என்னை திட்டுவீர்களா ??
பதிலளிநீக்கு$ என்ன கேட்டிங்க? சரியாகவே கேட்கலைங்க.//
ஹாஹா :)
:-) ))))))
நீக்குநல்ல சிறப்பான கேள்விகள். பொறுமையான பதில்கள்.
பதிலளிநீக்குமற்றவர்கள் கேள்விகளால் நாம் பயன் பெறுவதும் ஒரு சுகம் தான்.
2 ஆம் எண்காரர்கள், என் தம்பி மனைவி 2 ஆம் எண். நல்ல நிலைமையில் ரிடயராகி
நீக்குசிறப்பாக இருக்கிறார்.
நல்ல உழைப்பாளிகள்.
கணவரின் நண்பர், அவரை நாங்கள் சாண்டா என்றே அழைப்போம்.
ஆறரையடி உயரமும் ,அதற்கேற்ற பருமனுமாக
நல்ல தொழிலதிபர்.
வாழ்னாள் முழுவதும் சம்பாதித்து எல்லோருக்கும் கொடுத்தார்.
60 வயது கூடப் பார்க்கவில்லை.
அவர் மகளும் 2 ஆம் எண்தான். எல்லோரையும் கண்டே 20
வருடங்கள் ஆகிவிட்டது.
கருத்துரைக்கு நன்றி! எங்கள் ஆசிரியரில் ஒருவர் கூட, இரண்டாம் தேதி பிறந்தவர்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். சிறப்பான கேள்விகள், பொறுப்பான பதில்கள். குறிப்பாக $ பதில்களை மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்கு$ சார்பில் நன்றி.
நீக்குபயனுள்ள கேள்விகளும், பதில்களும் ஸூப்பர் ஜி
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஏஞ்சலும், நெ.த.வும், பா.வெ.வும் மட்டும் குத்தகைக்கு எடுத்திருந்த கேள்வி பதில் பகுதியில் மற்றவர்களும் பங்கு பெறுவது வரவேற்க தக்க மாறுதல்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஇரண்டாம் எண்காரர்கள் வசீகரமானவர்கள்.எதிர்பாலினத்தை ஈர்ப்பார்கள். காதல் கைகூடும். கொஞ்சம் சண்டைக்காரர்கள்தான். இப்படி சொல்வது யார் மனதையாவது கஷ்டப்படுத்தும் என்றால் argumentative என்று கூறலாம். குறிப்பாக 29ம் தேதி பிறந்தவர்கள். 2ஆம் எண்காரர்கள், 7ஆம் காரர்களை மணந்து கொள்வது நலம் and vice versa.
பதிலளிநீக்குபெட்டகத்தில் சேமித்துவைத்துக்கொள்கிறேன். நன்றி.
நீக்குஅன்பு பானு மா, நான் மேலே குறிப்பிட்ட 2 எண்கார்ரின் மனைவி 29 ஆம் தேதி பிறந்தவர்.நல்ல தம்பதி.
நீக்குபெரும்பாலும் அன்னியோ
நீக்குன்யமானவர்களாகத்தான் இருப்பார்கள்.
// repay Rs 20,000 or more in cash for transfer of immovable property now. Aug 29, 2017// I think this 2 lakhs, because 20,000 is nothing.
பதிலளிநீக்குஇஸ் இட்?
நீக்குwill read other questions and answers and will come again.
பதிலளிநீக்குநன்றி, மீண்டும் வருக!
நீக்கு//எதுக்கு இரண்டும் தெரியணும் ? நல்லது மட்டும் தெரிஞ்சிருந்தா போதாதா ?// பிரபஞ்சத் தத்துவமே இரட்டை தானே!
பதிலளிநீக்குஅப்போ அத்வைதம்?
நீக்குஅது வேறே! இது வேறே இல்லையோ? எல்லாம் இரண்டு என்று சொல்லிப் பின் அனைத்தும் ஒன்றே, அனைத்தும் பிரம்மமயம் என்பதல்லவோ அத்வைதம்!
நீக்குஎல்லாம் இரண்டு என்று சொல்லி, பிறகு ஏன் ஒன்று என்று சொல்லவேண்டும்? ஆரம்பத்திலேயே எல்லாம் ஒன்று என்று சொல்லிவிடுவோமே!
நீக்குஇதைத்தான் சொல்ல நினைத்தேன்.
நீக்குஆனால் உலகம் இயங்குவது இந்த இரட்டைத்தத்துவத்தில் தானே! நாம் மனதுக்குள்ளே அறிவது தான் ஒன்றே ஒன்று. எதுக்கும் எங்க குருநாதர் வந்துட்டார்னா அவரிடமும் கேட்டுடலாம்.
நீக்குஎல்லாக் கேள்விகளும், பதில்களும் அருமை.ஏஞ்சல் அவர்களின் எட்டாம் கேள்விக்கு விடை நம்முடைய திறமைகளில் ஏதோ ஒன்று அவர்களிடம் இல்லை என்பதால் வெறுக்கிறார்கள் என எனக்குத் தோன்றும். ஏனெனில் நான் ஆரம்பத்தில் இருந்து உதவி செய்து வந்த/செய்து கொண்டிருந்த/இன்னமும் செய்து கொண்டிருக்கும் ஓர் நெருங்கிய உறவினர் கூடியவரையில் என்னைப் பற்றிய இல்லாத/பொல்லாத குணங்களை என்மேல் ஏற்றிச் சொல்லுவார். கூடியவரை என்னைத் தனிமைப்படுத்த நினைப்பார். இது தொடர்கிறது. அதற்குக் காரணம் வாழ்க்கையில் என்னிடம் உள்ளவை அவரிடம் இல்லை என்பது தான் என நான் நினைக்கிறேன்.
பதிலளிநீக்குபொறாமை? அப்படியும் இருக்கலாம்.
நீக்கு’இருக்கலாம்’ என்கிற வகையில் சந்தேகத்திற்கிடமானதல்ல பொறாமை. இருக்கிறது- நிதர்சனம். எல்லோரிடமும் ஆரோக்யமாக இருக்கிறது ! எந்த வைரஸும் பொறாமையைத் தாக்குவதில்லை.
நீக்குபொறாமை = வைரஸ் தாக்காத வைர உணர்வு!
நீக்கு:))
நீக்கு@ஏகாந்தன், @கௌதமன், ஹாஹாஹா, இதுவும் நல்லா இருக்கு, வைரஸ் தாக்காத வைர உணர்வு!
நீக்குநன்றி.
நீக்கு@கீதாக்கா அதே தான் எனக்கும் :)
நீக்கு//கூடியவரை என்னைத் தனிமைப்படுத்த நினைப்பார். இது தொடர்கிறது.//
அதுவும் பெரிய குடும்பங்களில் மிக கடிநம்க்கா நன் சொல்லும் நபரி உறவினர்தான் எப்பவும் நக்கலும் ஒரு வித முகம் சுழிக்கும் வகையா இருப்பார் .ஆனால் நான் இவருக்கு செய்யாத உதவிகளேயில்லை எனலாம் என்ன செய்றது இப்படிப்பட்டவங்களோடும் வாழற நிலை நமக்கு .இவ்ளோ ஏன் சமீபத்தில் ஸ்கூல் தேர்வு ரிசல்டில் அவர் மகனை விட என் மகள் குறைவாக இருக்கும்னு நினைச்சி மார்க் எவ்ளோ என்று தோண்டி துருவி விசாரித்தார் ..இப்போல்லாம் கேடி ஆகி விட்டதால் நான் வேணும்னே குறைத்து சொன்னதும் அவருக்கு மகிழ்ச்சி உடனே அதேதான் தன மகனும் என்றார் .பிறகு சொன்னேன் இல்லை என் மகள் இவ்வளவு மார்க் என்றதும் முகத்தில் எள் கொள் எண்ணெய் எல்லாம் வெடித்தது ஹஆஹாஆ :)))))))))))
:)) ஏஞ்சல் இப்படி செய்வாரா! ஆச்சரியமா இருக்கு.
நீக்குசிலருக்கு இப்படித்தான் சார் நடந்து காட்ட வேண்டியிருக்கு .பல வருஷ பொறுமைக்குப்பின்தான் இப்படி செய்தேன்
நீக்குகடைசிக் கேள்விக்குக் கடவுளின் ஓரவஞ்சனை காரணம் இல்லை. நாங்க "கர்மா" என்று சொல்வோம். முன்வினைப்பயன் என்றும் சொல்லலாம். ஒரே நாளில் ஒரே நேரத்தில் பிறக்கும் குழந்தைகளிலேயே பற்பல வித்தியாசங்கள். அவர்கள் வாழ்க்கையிலும் மாறுபாடுகள். குறைந்த அளவு இடைவெளியில் பிறக்கும் இரட்டையரில் கூட ஒருவருக்கு இருக்கும் வாழ்க்கை அமைப்போ, படிப்பு விகிதமோ மற்றவருக்கு இருப்பதில்லை. உருவ ஒற்றுமை தவிர்த்து!
பதிலளிநீக்கு100% சரி.
நீக்குகேள்வி--பதில்கள் பகுதி எப்பொழுதுமே கேள்விகள், அதற்கான பதில்கள் என்பதோடு முடிந்து விடுவதில்லை;
பதிலளிநீக்குகேள்வி-- பதில் -- அவற்றை வாசித்ததால் விளையும் அடுத்த கட்ட ஐயங்களும் கேள்விகளாக ரூபமெடுத்தால்
இந்த கேள்வி-பதில் பகுதி அடுத்த கட்ட வளர்ச்சியை அடையும். இதுவே கேள்வி-பதில் பகுதி வாசிப்பால்
விளையும் பொதுப்பலன்.
உண்மையே. மிக சுவையான எண்ணங்களின் தொடராக இருக்கும் ஜீவி சார்.
நீக்குஆம். சரிதான்.
நீக்கு//மருத்துவக் காப்பீடு வசதி இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். இணையதளம் வழியே நல்ல நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.//
நீக்குஇந்தியாவில் 75 வயதுக்கு மேலானவர்கள் தனியார் Health Insurance Policy எடுப்பதற்கு இலாயக்கற்றவர்கள் என்பது ஒரு அவல நிலை. நீண்ட தேடுதலுக்குப் பிறகே இது தெரிய வந்தது. நீங்களாவது தெரிந்தால் சொல்லுங்களேண் என்பதற்காகத் தான் இந்தக் கேவ்ள்வியே. வயதுக்கு ஏற்ற மாதிரி தான் மருத்துவ காப்பீடுக்கான ப்ரிமியத் தொகையும். அதாவது வயது ஏற ஏற பிரிமியத் தொகையும் நேர் விகிதமாய் ஏறும். இருப்பினும் 75வயதுக்கு மேலான மூத்த குடிமக்களுக்கு எந்த தனியார் இன்ஷூரன்ஸ் நிருவனமும் மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமுல் படுத்த தயாரில்லை. இது ஏன் என்று புரிந்து கொள்வது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை.
ஆம். உண்மைதான்.
நீக்குhttps://www.policyx.com/tamil/health-insurance/star-health-insurance/
நீக்குமேலதிகத் தகவல்கள் வேண்டுவோருக்கு.
மேலே கண்ட தளத்தில் ஒரே கூரையின் கீழ் நிறைய மருத்துவ காப்பீடு திட்டங்களைப் பார்த்து பரிசீலிக்க வசதி இருக்கிறது.
நீக்குயாருக்கேனும் உதவலாம்.
நல்ல கேள்விகள்... சுவாரஸ்யமான பதில்கள்...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஆகா.. அருமை...
பதிலளிநீக்குஅறிவும் ஆளுமையும் தாண்டவமாடுகின்றன..
பற்பல நுணுக்கங்களைப் புரிந்து கொண்டேன்...
மெய்யாலுமா!
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம், வாங்க, வாங்க!
நீக்குகேள்வி பதில்கள் மிகவும் அருமை.
பதிலளிநீக்கு// ஒருவர் அல்லது சிலர்தானே வெறுக்கிறார்கள். பரவாயில்லை. பலர் நம்மை நேசிக்கிறார்களே என்று தெரிந்து சந்தோஷப்படுவோம். எல்லோரும் எல்லோருக்கும் எப்பொழுதும் விரும்பத்தக்கவர்களாக இருக்க முடியாது. //
உண்மை.
நன்றி.
நீக்குகேள்வி பதில்கள் நல்லா இருந்தது.
பதிலளிநீக்குமருத்துவக் காப்பீடு - நம்ம ஊர்ல மக்கள் ரொம்ப ஏமாத்தறாங்க. அதுனாலத்தான் இந்த இன்ஷ்யூரன்ஸ்காரங்களுக்கு கடினமா இருக்கு.
அப்படியா!
நீக்கு//& இப்போ சில சீரியல்களும், சில 'கோணல் பார்வை' talk show களும் கூட இந்த வரிசையில் சேர்ந்துள்ளன.// - தைரியமா பல டாக் ஷோக்களும் அனேகமா எல்லா சீரியல்களும் என்று சொல்லவேண்டியதுதானே
பதிலளிநீக்குநான் சீரியால்களும், talk show களும் பார்ப்பதில்லை. சில சானல்களில், நிகழ்ச்சிகளுக்கு இடையே போடும் விளம்பர clip மட்டும் பார்த்து எழுதினேன்.
நீக்கு@ நெல்லைத்தமிழன் எனக்கும் ஒரு தீரா ஆசை ஒரு டாக் ஷோவில் எங்கள் பிளாக் ஆசிரியர்கள் கீதாக்கா பானுக்கா கில்லர்ஜீ நீங்க ஒரு அணி எதிரே மேதகு லட்சுமி மேடம் அதான் சொல்வதெல்லாம் மேடம் .நினைச்சி பார்க்க ஜாலியா இருக்கு :)) அதுவும் ஸ்ரீராம் ரியாக்ஷன் எப்படி இருக்கும்:))
நீக்குநான் மியாவ் வல்லிம்மா கோமதிக்காலாம் ஒளிஞ்சிருந்து பாப்போம்
லஷ்மி ராமகிருஷ்ணன் பஞ்சாயத்து பண்ணுவதற்குதானே வருவார்? நாங்களெல்லாம் சேர்ந்து அவரோடு சண்டை போட வேண்டுமா?? வொய் திஸ் கொல வெறி?
நீக்குவொய் திஸ் கொல வெறி?
நீக்குதொலைக்காட்சி நிகழ்ச்சியிலா? நானா? கூப்பிட்டால் கூடப் போக மாட்டேன். நண்பர் ஒருத்தர் மகளிர் தினத்துக்காக ஒரு வீடியோ க்ளிப் கேட்டிருந்தார். ம்ஹூம், கொடுக்கவே இல்லையே! இப்போ சமையல் வீடியோ கேட்டுட்டு இருக்கார். மாட்டேன்னு சொல்லியாச்சு. விடமாட்டேங்கறார். யார் ஜெயிக்கப் போறாங்களோ?
நீக்கு//& நடிகர் : சாதாரண ரசிகன்// - நடிகர் மகா நடிகர் கேள்விக்கு அருமையான பதில் சொல்லியிருக்கீங்க. பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு//அதீத அறிவு புத்திசாலித்தனம் சந்தோஷத்தை தருமா ?// - அவர்கள் ஆராய்ச்சியாளர்களாக இருந்தால், சமூகத்துக்கு அது நன்மை பயக்கும். பொதுவா எதிலும் அதீதம், அவருக்கோ அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கோ சந்தோஷத்தைத் தராது. அவர்களது மனைவி/கணவர், குடும்பம் கஷ்டப்பட்டே ஆகணும். கம்பெனிகளில் அப்படிப்பட்டவர்கள் பொதுவாக ஃபெயிலியர் ஆவாங்க.
பதிலளிநீக்குஉண்மைதான்.
நீக்குநல்ல கேள்வி பதில்கள்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஇந்த மாதிரி அறிவு பூர்வமான கேள்வி கேட்பவர்களிடம் ஆக்க பூர்வமான பதில்களும் நிறைய இருக்கும்...
பதிலளிநீக்குவிட்டு விடாதீர்கள்..
துரத்திப் பிடியுங்கள்...
(!?..)
புரியலையே.
நீக்குபுரிந்ததும் புரியாததும்
நீக்குஅறிந்ததும் அறியாததும்...
ஆகா!..
கேள்வி பதில்களைப் படித்து ரசித்து சிரித்துக்கொண்டு போகிறேன் என கெள அண்ணனிடம் சொல்லிவிடுங்கோ பிளீஸ்....
பதிலளிநீக்குசொல்லிடறேன்! எங்கே போறீங்க?
நீக்குஆஆவ்வ்வ்வ் அப்போ இது டூப்பூ கெள அண்ணனோ?:)... ஒரிஜினல் கெள அண்ணன் ஓவ் போல:)...
நீக்கு2ம் நம்பர் பற்றி நானறிந்த சில விஷயங்கள்... இவர்கள் வெளி ஆட்களுக்கு அதிகம் உதவுவார்களாம், மிக நல்லவர் எனும் பெயர் இருக்குமாம் ஆனா அந்தளவுக்கு தன் குடும்பத்தைக் கவனிக்க மாட்டார்களாம்... புதனில் கும்மி போட முடியாமல் விதி சதி செய்கிறது ஹா ஹா ஹா:)
பதிலளிநீக்குஓ அப்படியா! நன்றி, மீண்டு வாருங்கள்.
நீக்குஉண்மைதான் அதிரா. இரண்டாம் எண்காரர்கள் தீர்க்கதரிசிகளும் கூட.
நீக்கு/
பதிலளிநீக்குஇதுவரை அமெரிக்க ஜனாதிபதியாக ஆனவர்களில் அதிகம் பேர் (எட்டு பேர்) இரண்டாம் எண்காரர்கள் என்பது ஆச்சரியமான தகவல் நானும்11 ம் தேதிபிறந்தவன்
ஆச்சர்யமாக இருக்கிறது. நீங்கள் இரண்டாம் எண்காரராகத்தான் இருப்பீர்கள் என்று தோன்றியது.
நீக்கு// நானும்11 ம் தேதிபிறந்தவன்// அப்படியா! வாழ்த்துகள்.
நீக்குஎனது கேள்விகளுக்கு பதிலளித்த ஆசிரியர்களுக்கு நன்றீஸ் :) கடைசி நிமிடத்தில் கேள்விகளை அனுப்பினேன் ஆனாலும் அனைத்து கேள்விகளுக்கும் உடனே நேரமெடுத்து பதில் கூறியது மிகவும் சிறப்பு .கேள்விகள் தொடரும் :))))))
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு///மகா நடிகர்களே 'இவர்' நடிப்பைப் பார்த்து வியப்பு அடைந்தால், அவர் அரசியல்வாதி. /
பதிலளிநீக்குsuperb :)))))))))
நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவழக்கம் போல் கேள்விகளும் பதில்களும் ஸ்வாரஸ்யமாக இருந்தது. மடக்கி மடக்கு கேள்விகள் கேட்கும் சகோதரி ஏஞ்சல் அவர்களின் திறமையை கண்டு வியக்கிறேன். அவற்றிக்கெல்லாம் சளைக்காமல் அதிநுட்பமாய் பதில் தருகிற எ. பி ஆசிரியர்களின் திறமைகளுக்கும் தலை வணங்குகிறேன்.
இரண்டாம் எண் பற்றி அறிந்து கொண்டேன். நடிகர் மகா நடிகர் கேள்வியும், பதில்களும் ஸ்வாரஸ்யமாக இருந்தது. கடவுள் ஓரவஞ்சனை உள்ளவரா என்ற கேள்விக்கு பதிலும் நன்றாக உள்ளது. ஆனால் சில, பல சமயங்களில் நம் தீர்க்க முடியாத பிரச்சனைகளில் இக்கேள்வி எழுந்து முளைத்து பின் வாடி விடும் தன்மை உடையது. அதையும் தவிர்க்க முடியாது. என்ன செய்வது... பகிர்வுக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி
நீக்கு1, குழப்பவாதிகளை நம்பலாமா ?
பதிலளிநீக்கு2, நம்பிக்கை என்பது எதன் அடிப்படையில் வரும் ?
3, நேரம் சரியில்லை என்கிறார்களே இதில் நேரம் என்றால் என்ன ?
4, தற்கால நாகரீக உலகில் எதற்கு இத்தனை ஏற்றத்தாழ்வு ?
5, குருட்டு நம்பிக்கை /நொண்டி சாக்கு /முடவன் கொம்புத்தேன் ..இப்படிப்பட்ட வாசகங்கள் என்னமோ செய்கிறதே மனதுக்கு ஆனால் இதெல்லாம் நம் தாத்தா முன்னோர்கள் உருவாக்கினவை எப்படி இவை அக்காலத்தில் யாராலும் கண்டிக்கப்படவில்லை ?
6, கனவுகள் பின்னால் வருவதை முன்னே அறிவிப்பவை என்பது உண்மையா ? அல்லது மனப்பிரம்மையா ?
7, ஒரு விஷயத்தை முழுமையா குறையின்றி செய்ய இயலுமா ?
8, ஒரு விஷயத்தை முயற்சிக்காம நமக்கு வராதுன்னு கைவிடுவது நல்லதா ? அல்லது முயன்று தோல்வியுறுவது நல்லதா ?
9, முடிவற்ற தன்மை /முடிவிலி என்றால் என்ன ? இந்த சந்தானம் அடிக்கடி infinity பற்றி கேட்கிறான் என்னை அதை உங்ககிட்ட கேட்டுட்டேன் :)
10, மனிதன் மாறிவிட்டான் என்பது உண்மையா ? அவனை மாற்றியது எது ?
11, பாட்டி வைத்தியம்னு சொல்றாங்களே ஏன் தாத்தா வைத்தியம்னு ஒன்று இல்லை ?தாத்தாக்களுக்கு வைத்தியம் தெரியாதா ?? இது தாத்தாக்கள் சார்பாக எழுப்பப்பட்ட வினா :)))))))
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நோஓஓஒ இது கொப்பி ரைட் கொஸ்ஸனாக்கும்:)... இப்பவே கூப்பிடுறேன் நெ தமிழனை:)
நீக்குஹா ஹா ஹா யார் கேட்கும் கேள்வியாக இருந்தாலும், பதில்கள் அளிப்போம்!
நீக்குHealth Insurance கேள்விகள் சிறப்பு.
பதிலளிநீக்குகேள்விகள் பதில்கள் வழமை போல ஸ்வாரஸ்யம்.
நன்றி.
நீக்கு