ஞாயிறு, 8 மார்ச், 2020

ஞாயிறு 200308: ஊரைச் சுற்றிச் சுற்றிப் பார்த்து...


இங்கிருந்து கெங்கேரி ரயில் நிலையம் வரை ரிமோட் driving  instructions  babu  என்பவரிடமிருந்து ....


அப்படியே அதே சாலையில் தொடருங்க...mysore ரோடு ஏதுனுனு...
நைசா **நைஸ் ரோட்டுக்கு....வந்தீங்கன்னா..satellite டவுன் தெரியுதா?அவர் சொல்ற இடத்துக்கு ரொம்ப தூரம் போகணுமா?
வீட்டை சுற்றி படிக்கட்டா?  படிக்கட்டுக்குள் வீடா?
இந்த AR பற்றி எங்கோ படித்த நினைவு வந்தது.AR  தாண்டிட்டீங்களா?ஆஸ்பத்திரி?
ஓ நாளை தீபாவளி.....பேங்க்  வாசலில்  கூட்டம்! satellite town கு வந்துட்டீங்களா?
இங்கேதாங்க எங்களுக்கு சோதனை வந்தது! போய் வலதுபுறம்  திரும்பி..திரும்பித் திரும்பி அங்கேயே...பின்னர்  தான் தெ ரிந்தது ....வலது புறம் திரும்புமுன் இடது புறம் 100 அடி போகவேண்டும் என்பது . அங்கே ஒரு வண்டி நின்றதால் குழப்பம்.ஒரு வழியாக ரயில் நிலையம் செல்லும் வழி தெளிவானது. இங்கே வந்து..அப்பவே சொன்னபடி காரை விட்டு இறங்கிவிட்டோம்.

==============================================
==============================================

சிறு குறிப்பு : 
** நைஸ் ரோடு என்றால் என்ன? 

The Nandi Infrastructure Corridor Enterprises Road, என்பதன் சுருக்கம். 
ஹோசூர் - பெங்களூரு மார்கத்தில், எலக்ட்ரானிக் சிடி அருகிலிருந்து, மைசூருக்கு செல்கின்ற நான்கு / ஆறு வழிச்சாலை. 
நீளம் : 111 கிலோ மீட்டர்கள். 


       


32 கருத்துகள்:

 1. ஒருமையில் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 2. மகளிர் தின நல்வாழ்த்துகளுடன்
  அனைவருக்கும் அன்பின் வணக்கங்கள்...

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். எல்லாப் படங்களும் நன்றாக இருந்தாலும் கொஞ்சம் தெளிவாக் குழப்பமா இருக்கு. புரியலை! அப்புறமா வரேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவாசிரியரே சுற்றிச்சுற்றி வந்திருக்கிறார் ... நாம் என்ன செய்வது!

   நீக்கு
 4. நம்ம ஊரில் ஏதோ ஒரு பகுதியைப் பார்ப்பது போல் இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 5. இன்று மகளிர் தினம் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள். இன்று ஒருதினம் மட்டும் மகளிரை வாழ்த்திவிட்டு அன்றே பெண்குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்யும் ஆண்கள்! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி. பலாத்காரம் செய்யும் ஆண்கள் யாரும் வாழ்த்தமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 6. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் மனப்பூர்வமாக ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  அனைத்து மகளிர்களுக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துக்களை இன்று போல் என்றைக்கும் சமர்ப்பிக்கிறேன்.

  கணினி பிரச்சனை இங்கு எனக்கும் ஒரு வாரமாக உள்ளது. இப்போது படங்களை காண இயலவில்லை. வாக்கியங்களை வைத்து ஒரளவு பதிவை புரிந்து கொண்டேன். இணையம் நன்கு வந்ததும் படங்களை கண்டு மீண்டும் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 8. பயணத்தை தொடர்கிறோம் என்பதற்காக இப்படி வழி தெரியாமல் அழைத்து செல்லலாமா?
  வீட்டை சுற்றி படிக்கட்டா? படிக்கட்டுக்குள் வீடா? ரசித்தேன்.
  மகளிர்தின வாழ்த்துக்களுக்கு நன்றி.


  பதிலளிநீக்கு
 9. இனிய காலை வணக்கம். அனைத்து சகோதரிகளுக்கும் மகளிர் தின நல் வாழ்த்துகள். ரயில் பயணம் சிறக்கட்டும்.
  .

  பதிலளிநீக்கு
 10. சகோ அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

  படங்களோடு கூடிய வார்த்தைகள் நன்று.

  பதிலளிநீக்கு
 11. மகளிர்தின வாழ்த்துகள் அனைத்துப் பெண்டிர்க்கும்.

  காலை வணக்கம்

  பதிலளிநீக்கு
 12. படங்கள் நன்று.

  இந்த மாதிரி பயணங்களில் சாலை குழப்பம் வந்து விட்டால் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும்!

  இன்று மட்டுமல்ல எல்லா நாளும் பெண்மை போற்றுவோம். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. நல்ல படங்கள், நல்ல பதிவு.

  வலைத் திரட்டியின் புதிய புரட்சி: வலை ஓலை .
  நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது ஞாயிறு 200308: ஊரைச் சுற்றிச் சுற்றிப் பார்த்து… பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

  எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  பதிலளிநீக்கு
 14. ' சுற்றி சுற்றி வந்தேனே....

  அனைவருக்கும் மகளிர்தின வாழ்த்துகள் .

  பதிலளிநீக்கு

 15. //The Nandi Infrastructure Corridor Enterprises Road, //ய்

  நான் நிக்யி என்று படித்தால் நீங்கள் நைஸ் என்று திருத்துகிறீர்களே!

  பதிலளிநீக்கு
 16. பயணம் செல்கிறவர்களை விட ,தலைப்பு
  கொடுத்தவரின் கற்பனைத்திறன் நன்றாக
  இருக்கிறது.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!