திங்கள், 16 மார்ச், 2020

"திங்க"க்கிழமை :  அப்பம் -  அதிரா ரெஸிப்பி 


பால் அப்பம்/பால் பான்கேக்
இப்போ பெயரோ முக்கியம்?:), ஹா ஹா ஹா மட்டருக்கு வருவோம்:).

இது ஒரு வித்தியாசமான முயற்சி. அப்பம் எனில் அதுவும் உள்ளே பால் விட்டுச் சுடுவது வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும் என்பதால், எந்த வகையாயினும் பயப்பிடாமல் முயற்சி செய்வேன்.

இதற்கு, நல்ல வெள்ளையாக, குண்டாக இருக்கும் பச்சை அரிசியில் இரண்டு கப்பும், அதே கப்பால இரண்டு கப், உடன் திருவிய தேங்காய்ப்பூவும் எடுக்கோணும்.

முதலில் அரிசியை 7-8 மணி நேரம் ஊறவைக்கவும்.

ஊறிய பின்னர், தண்ணி பெரிதாக சேர்க்காமல் நன்கு அரைக்கவும், அரைக்கும்போது ஒரு கட்டத்தில் இப்படி குட்டிக் குருணல்போல வருமெல்லோ, அப்போ இரு மேசைக்கரண்டிகளை எடுத்து ஒரு பானில் வைத்துப் போட்டு, மிகுதிக்குள், அந்த தேங்காய்ப்பூவைப் போட்டு நன்கு மெத்தோ மெத்தென:) அரைச்செடுக்கவும்.

அந்த இரு மேசக்கரண்டிக்கும், அதே கப்பை எறிஞ்சிடாமல் தேடி எடுத்து, முக்கால் கப் தண்ணி சேர்த்து, மெல்லிய நெருப்பில் கஞ்சிபோல காய்ச்சவும்..

இப்படி பதம் வந்ததும், அடுப்பால் இறக்கி ஆறவிடவும், ஆகவும் கட்டிபோல ஆக்கிட வேண்டாம். ஆறியதும், அந்த அரிசி அரைச்ச பிளெண்டர் கப்பைக் கழுவி, இதனுள் ஊத்தி, நன்கு கரைச்சு கூழாக்கி, கட்டியில்லாமல் ஆனதும், இதனையும் அப்ப மாவில் ஊற்றி புளிக்க வைக்கவும். சோடா வகையோ, உப்போ எதுவும் தேவையில்லை.

உங்கள் ஊர் வெப்ப நிலைக்கேற்ப பொயிங்கி:) வந்ததும்[எங்களுக்கு ஓவர் நைட் அல்லது ஒரு நாள் தேவைப்படும் பொங்க].. உப்பைச் சேர்க்கவும்.

மாப் பொயிங்கிட்டுதோ, இப்போ ரெடியாகுங்கோ அப்பம் சுட:), அதுற்குள் ஒரு குறும்படம் பார்த்திட்டு வந்திடலாம்:)..

😸😸😸😸😸😸இதோ குறும்படம்:)😸😸😸😸😸😸
இது என்ன தெரியுதுதானே.. பிரசெல்ஸ் ஸ்பிறவுட்ஸ் Brussels Sprouts
{ எங்கே இதை ஸ்பீட்டாக றிப்பீட்டில சொல்லுங்கோ பார்ப்போம்:)) 
ஜத்தமாக ஹா ஹா ஹா}

இது இங்கு எப்பவும் கிடைக்கும், எங்களுக்கு நல்ல விருப்பம், வீட்டில் அனைவரும் சாப்பிடுவார்கள். ஆனா இதில் கறி வகைகள் செய்தால் பெரிதாக சுவை வருவதில்லை, அதனால இப்படித்தான் செய்வேன், சும்மாவே சாப்பிடலாம்.

கிறிஸ்மஸ் க்கு இங்கு ட்ரடிஷனலாக சமைப்பார்கள், ரேக்கியுடன், அதனால இப்போ நிறையக் குமிச்சு, பயங்கர மலிவும். இது என்ன விலைக்கு வாங்கினோம் தெரியுமோ.. அரைக் கிலோ பக்கட்- வெறும் 15 பென்ஸ்சுகளே, மனம் கேட்காமல் 4,5 பக்கட்டுக்கள் வாங்கி விட்டேன். அப்படித்தான் இப்போ கரட்டும் -ஒரு கிலோ- 15 பென்ஸ்கள்[கிறிஸ்மஸ் நியூ இயருக்காக].

நம்பரைப் பாருங்கோ.

1].கழுவிப்போட்டு, மூள் பகுதியை மட்டும் கட் பண்ணி எறிஞ்சுபோட்டு, பாதியாக மட்டும் வெட்டிக் கொள்ளோணும். கொஞ்சமாக தண்ணி சேர்த்து[அரைக் கப் போதும்] 2 மேசைக்கரண்டி எண்ணெயும் சேர்த்து உப்புப் போட்டு மூடி அவிய விடவும். கன நேரம் தேவையில்லை ஒரு கொதியில் அவிந்து விடும்.

2]. அவிந்ததும், அதனுள் கறிப்பவுடர் சேர்த்து[கொஞ்சம் அதிகமாக சேர்க்கவும்] ...

3]மூடாமல், ஸ்லோ ஃபயரில பிரட்டி பிரட்டி எடுக்கவும். தண்ணியில்லாமல் வற்றியதும் இறக்கி, கொஞ்சம் தேசிக்காய் சேர்த்து சும்மா சாப்பிடலாம்.
😸😸😸😸😸😸😸😸😸😸😸😸😸😸😸😸😸😸

என்ன அப்பம் இன்னும் ரெடியாகவில்லையோ?:))

இதற்கு இன்னொரு விளக்கமும் தரோணும், மாவைப் புளிக்க வைக்கும்போதே, அளவுக்கு தண்ணி சேர்த்திடுங்கோ, பின்னர் புளிச்சபின் தண்ணி சேர்க்கக்கூடாது, அப்படியே சூட் பண்ணிடோணும்:)).

அந்த மாவில், கொஞ்சம் சீனி [சுகர்] சேர்த்து.. இப்படி தோசைக் கல்லியோ அல்லது தட்டைப் பானிலோ.. ஒரு கரண்டி எடுத்து ஊத்தி விடவும், தடவக்கூடாது, அப்படியே பான்கேக் போல ஊத்திப்போட்டு கையை எடுத்திடோணும், இல்லை எனில் அழுந்துப்பட்டால், துவாரம் வராது.

இன்னொரு விதமாக, அப்பச் சட்டியில் ஊற்றி, இப்படி உள்ளே பால் ஊற்றி அதனுள் சீனியும் சேர்த்து மூடி, அப்பம் போல அவித்தெடுக்கலாம், விரும்புவோர், முட்டையும் ஊற்றி எடுக்கலாம், நான் ஒண்ணும் வாணாம் ஜொல்லலியே:).

தட்டை அப்பம் பஞ்சுபோல மென்மையாக வந்துது, நல்ல உறைப்பு சட்னி சூப்பர். சட்டியில் சுட்ட அப்பம், மொறுமொறுப்பாக வராமல், சோர்ந்து வந்தது. அதனால இந்த முறைப்படி என் வாக்குகள் தட்டை அப்பத்துக்கே:).

🙏🙏🙏🙏🙏🙏

112 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய திங்கள் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 2. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் மனப்பூர்வமாக இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 3. அப்பம் சுட்டுத் தந்திருக்கும் அதிரா வாழ்க. கொரோனா கத்தலிலிருந்து
  அப்பம் என்னை மீட்டது.
  அப்பாடி இத்தனை பொறுமையா அப்பம் செய்தீர்களா. அதிரா.

  நடுவில் ப்ரஸ்ஸில்ஸ் ஸ்ப்ரௌட் வேற. சூப்பர் ரெசிபி.
  அப்பமும் தேங்காய்ப் பாலும் மட்டுமே தெரியும்.
  இப்படி அரிசியும் அரைத்து,நடுவில் தேங்காய் சேர்த்து,
  சுத்துதே சுத்துதே பூமின்னு இருக்கு.
  தட்டை அப்பத்துக்கே என். வோட்.மெத்து மெத்துனு
  பார்க்கவே நன்றாக இருக்கிறது,

  மீண்டும் வருகிறேன். மனம் நிறை வாழ்த்துகள்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ வல்லிம்மா...
   சமைப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று வல்லிம்மா... அதனால பொறுமை எல்லாம் ஒன்றுமில்லை:)
   நன்றி வல்லிம்மா..
   மற்ற அப்பமும் நன்றே... நடுவில் பால் விட்டு சீனியும் சேர்த்திருக்கிறேன்...

   நீக்கு
 4. வடிவேலு சொல்றது சரிதான். வீட்டில இருக்கறவங்க தான்
  கேள்வி கேக்கறாங்க:)

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் அதிரா சகோதரி

  அப்பம் நன்றாக உள்ளது. தேங்காய் சேர்த்து வாசனையுடன் சுவையாக இருக்கிறது. படங்களும், செய்முறை விளக்கங்களும் அருமை. இடையில் குறும்படம் காய் (அது என்ன காய் என்று எனக்கு விளங்கவில்லை. பார்க்க மாவடுவை பாதியாக வெட்டிய தோற்றத்தில் தெரிகிறது.குட்டி பாகல் மாதிரியும் உள்ளது.) வதக்கலும் நன்றாக உள்ளது.

  சிறிது மாவை எடுத்து கிண்டி அப்ப மாவுடன் சேர்த்தது களி கிண்டி தோசையை நினைவுபடுத்தியது.
  தின்ன தின்ன ஆசை..
  திங்களில் வந்த தோசை... என்று பாட வைத்து விட்டது தங்கள் பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ கமலாக்கா..
   அது உங்கள் பாஷையில் கோஸ் வகையில் குட்டிக் கோஸ்... நாங்க குட்டிக் கோவா எனவும் சொல்வதுண்டு...
   அப்ப மாவில் தோசையும் செய்வீங்களோ... :)...
   எதுவாயினும் சுவை இருந்தால் சரிதானே நன்றி கமலாக்கா...
   பெல் அடிக்கப் போகுதே கர்ர்ர்ர்ர்ர்ர்:)...

   நீக்கு
 6. அனைவருக்கும் காலை வணக்கம். ஆப்பம் என்பதுதான் அப்பமாகியிருக்கிறதா? இன்னும் செய்முறை படிக்கவில்லை. பின்னர் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ பானு அக்கா... இது உங்களுக்குத் தெரிஞ்ச அப்பமாகத்தான் இருக்கும் நன்றி.

   நீக்கு
 7. அனைவருக்கும் காலை வணக்கங்கள்.

  தலைப்பைப் பார்த்து ஏமாந்துபோனேன். மனசெல்லாம் அப்பம் சாப்பிடும் ஆசை. வெல்லத்தைக் காணோமே.... ஏலக்காய்லாம் சொல்லலையே என்று டவுட் வந்தது. அப்புறம் பார்த்தால் கேரளா டைப் ஆப்பம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ நெ தமிழன்...
   முதலில் நீங்க ஏன் ஏமாந்தனீங்களெண்டு புரியவே இல்லை எனக்கு:)... இப்போ எல்லாமே பிரிஞ்ஞ்ஞ்சு போச்ச்ச்:)...
   அப்பம், அப்பிள்:)...

   வெல்லம் இடது பக்கம் இருக்கும் அப்பத் போட்டிருக்கிறேன்... பாலும் சீனியிம் உள்ளே போடுவோம் நாங்க... அந்த அப்ப ரெசிப்பி எல்லாம் என் பக்கம் இருக்கு.

   நீக்கு
  2. அப்பம் என்றால், அரிசி ஊறவைத்து அரைத்து, அதில் வெல்லப்பாகு ஏலக்காய்லாம் சேர்த்து, உருண்டை பிடித்து அப்பமாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுப்பது. அப்படி இல்லைனா, சோம்பேறிகளுக்காக உருவானது, மைதா மாவு, வாழைப்பழம் போன்றவை கலந்த இன்ஸ்டண்ட் அப்பம்.

   நீங்க ஜொல்லியிருப்பது ஆஆஆஅப்பம். அது தோசையல்லோ... தலைப்பைப் பார்த்து இனிப்பு என்ற ஆசையில் வந்தால்........

   நீக்கு
  3. மிடில் ஈஸ்டில், லுலு ஹைபர் மார்கெட்டில், இனிப்பு ஆப்பம் (அது கிட்டத்தட்ட 1/2 இஞ்சுக்கு மேல் தடிமன். வட்டமாகச் செய்து அதை நான்காக கட் பண்ணி ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக விற்பார்கள். நான் அதைப் பார்த்து ஆசைப்பட்டு வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்தால், பிடிக்கவே இல்லை. இத்தனைக்கும் இது மலையாளிகளின் ஃபேவரைட் உணவு.

   நீக்கு
  4. இல்லை அதிரா நாங்க அப்பம்னு சொல்வது வேறே ஆப்பம்னு சொல்வது இதை :) அதான் கண்பூஸ் ஆகிட்டாங்க :) இங்கே எனக்கு பழகி சீன்ஸ் 2010 :)

   நீக்கு
  5. @நெல்லைத்தமிழன் அது ஓரப்பம் :) நாகர்கோயில் மதுரைகாரங்க உரப்பம்னும் சொல்லுவாங்க 

   நீக்கு
  6. எங்க நாரோல் காரங்க ஈஸ்டர் காலை ஸ்பெஷல் ஸ்வீட் இது ஓரப்பம் .இன்னொன்னும் இருக்கு விவிக்கா .இதெல்லாம் செய்வாங்க MOSTLY ஒரே டைப் இரண்டாவது ஸ்வீட் இட்லி மாதிரியும்  வரும் 

   நீக்கு
  7. ஓ இப்படியும் இருக்கோ.. நான் நினைச்சேன் நாங்கள் அப்பம் என்பதை நீங்கள் ஆப்பம் என்கிறீங்களென, அப்பம் என்றும் ஒன்று அங்கிருப்பது தெரியாதெனக்கு...

   நாங்கள் எப்பவும் அப்பம் இனிப்பாகத்தான் செய்வோம் நெ.தமிழன், அதாவது அப்பம் ஊத்தி விட்டு நடுவில் கட்டியாக தேங்காய்ப்பால் விட்டு அதனுள் சீனி போட்டு மூடி போட்டு அவிய விட்டு இறக்குவோம்.

   நீக்கு
 8. ப்ரெசல்ஸ் ஸ்ப்ரௌட்ஸ்... நாங்கள் உபயோகிப்பதில்லை. என் மச்சின்ன் உபயோகிப்பான். வெறும்ன இரண்டா கட் பண்ணிசாம்பார்ல தான்களாகப் போட்டால் நல்லாவே இருந்தது

  பதிலளிநீக்கு
 9. ஆப்பம் செய்முறையோட தேங்காய் சட்னியையும் இணைத்திருந்தால் நல்ல காம்பினேஷன். சம்பந்தமில்லாமல் கரேமதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யேஸ் அந்தப் பிளேன் அப்பத்துக்கு தேங்காய் சட்னிதான் செய்தேன்.. , ஏன் படமெடுக்கவில்லை என எனக்கே மறந்துபோயிட்டுது.. ஏனெனில் இது செய்து இப்போ 4,5 மாதங்களாகுது ஹா ஹா ஹா... இலங்கையில் சிங்களப்பகுதியில் தேங்காய் சேர்க்காமல், தனி உப்பு மிளகாய் பிளியோடு மாசிக்கருவாடும் போட்டு
   “கட்டைச் சம்பல்” எனச் செய்வார்கள் சூப்பராக இருக்கும்.

   நீக்கு
 10. பஹ்ரைனில் இந்த மாவு பாக்கெட் எப்போதாவது வாங்குவேன். அவங்க இளநீர் சேர்ப்பதால் கொஞ்சம் இனிப்புச் சுவையுடன் இருக்கும். ஆப்பம் மாதிரி வார்க்காமல் ஊத்தாப்பம் மாதிரி வார்ப்போம். ரொம்ப மெத்து மெத்துனு அருமையாருக்கும். ஆனால் லைட் இனிப்புச் சுவையல்லோ. அடிக்கடி வாங்க மாட்டேன்.

  செய்முறை அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு எதுவுமே ரெடிமேட் மா வாங்கிச் செய்வது பிடிக்கவில்லை, தோசை, இட்லி, அப்பம், வடை, ரவ்வை எதுவும் நான் பக்கட் வாங்கி செய்ததில்லை.. அப்ப மா, தோசை மா எல்லாம் வாங்கிப் பார்த்தேன் பிடிக்கவில்லை, அதைவிட செய்து சாப்பிடுவதுதான் சூப்பர்.

   மிக்க நன்றி நெ தமிழன்.

   நீக்கு
 11. இதற்கு தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டால் ஸூப்பராக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ கில்லர்ஜி.. தேங்காய்ப்பாலை நாம் தொட்டுச் சாப்பிடுவதில்லை, சுடும்போது அப்பத்தின் நடுவில் ஊற்றி அவிய விட்டு இறக்குவோம்.

   நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 12. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 13. அதிரா செய்த அப்பம்(ஆப்பம்) அருமை.
  செய்முறை விளக்கமும், படங்களும் அழகு.

  குறும்படம் நன்றாக இருக்கிறது.

  வடிவேலு சொல்வதும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கோமதி அக்கா, என்னால இன்று வர முடியவில்லை கொமெண்ட்ஸ் போட, இப்ப கூட என்னை ஃபோஸ் பண்ணிப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.. நன்றி.

   நீக்கு
 14. நாங்கள் இதை ஆப்பம் என்போம். சமயங்களில் சட்டி ஆப்பம் சரிவராது போய்விடுவதுண்டு. தட்டை ஆப்பம் மெத்து மெத்தென பார்க்கவே அருமை. இது போல செய்து பார்க்கிறேன்.

  பிரசெல்ஸ் ஸ்பிறவுட்ஸ் குறிப்புக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ ரமா அக்கா.. சட்டி அப்பம் நொந்ஸ்ரிக் இல் தான் இப்போ சுடுகிறேன், சட்டியை சரிச்சால் தானே கீழே குதிக்குது ஹா ஹா ஹா.. மிக்க நன்றி.

   நீக்கு
  2. இஃகி,இஃகி,இஃகி, அது ரமா ஸ்ரீநிவாசன் இல்லை, அதிரடிப் பிஞ்சு. இவங்க ராமலக்ஷ்மி, பெண்களூரில் இருக்காங்க. கை தேர்ந்த தொழில் நுட்பப் புகைப்படக்காரர். என்னடா, ரமா ஸ்ரீநிவாசன் வரவே இல்லையேனு யோசிச்சிங்!

   நீக்கு
  3. ஆஆஆ அப்பூடியா கீசாக்கா நல்லவேளை சொல்லிட்டீங்க...
   ராமலக்ஸ்மி மிக்க நன்றி... மன்னிச்சுக்கொள்ளுங்கோ.

   நீக்கு
  4. ஹிஹிஹி, நமக்குத் தான் கையும், வாயும் சும்மாவே இருக்காதே! :)))))

   நீக்கு
  5. ஹையோ கீசாக்கா இப்போ கையையும் காலையும் யும்மாவே வச்சிருக்கட்டாம் இல்லாட்டில் கொரொனா அங்கிள் வந்திடுவாராம் ஹையோ ஹையோ... நாளுக்கு நாள் நடுங்குது... கடைகளெல்லாம் வெறிச்சுக்கொண்டு வருது...

   நீக்கு
 15. ஆப்பத்தை முறைப்படி செய்யாமல் ஏதோ செய்துவிட்டு அதற்கு அப்பம் என்று பெயர் சூட்டலாமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ ட்றுத்.. உங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்ன்.. ஒரு காண்ட் ஷேக் பண்ண:)).. ஹா ஹா ஹா ஏன் ஓடுறீங்க.. கொரொனாவுக்குப் பயமோ:))

   நீக்கு
 16. அமெரிக்காவி கடந்த ஒரு வாராமாக மக்கள் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி குவித்தும் காய்கறிகளை வாங்கி குவித்து வரும் நேரத்தில் எல்லா கடைகளிலும் Brussels Sprouts மட்டும் வாங்காமல் அது மட்டும் அனாதையாக கிடந்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதேதான் சுப்பமார்கட்டில் எதுவும் இல்லை.. நேற்றுப் பார்த்தது நிறைய இருக்கே என விட்டால், இன்று ஒன்றுமில்லை.. ஆனா இப்போ கொஞ்சம் பயமாகவே இருக்குது.. என்ன ஆகப்போகுதோ என.. இறக்குமதி எதுவும் இல்லை எனும்போது.. பஞ்சம் வரவும் வாய்ப்பிருக்கெல்லோ.. ஹையோ அதிரா இன்னும் 6 கிலோ மெலிஞ்சிடப்போறேனோ:))

   நீக்கு
  2. // ஹையோ அதிரா இன்னும் 6 கிலோ மெலிஞ்சிடப்போறேனோ:))//

   சாமீ சேவ் மீ ..இதெல்லாம் பார்த்து எனக்கு கண் இருட்டுது வெயிட் ரெட்யூஸ் ஆகுதே :)

   நீக்கு
  3. சில விசயங்களை மோர் குடிச்சு சகிச்டுத்தான் ஆகோணும் அஞ்சு வேறு வழி?:)...

   நீக்கு
 17. அப்பம் கடையில் சாப்பிடுவதோடு சரி..வீட்டில் செய்ய முயற்சித்ததில்லை.படங்களும் பதிவும் செய்து பார்க்கத் கொஞ்சம் தெம்பளிக்கிறது...

  பதிலளிநீக்கு
 18. அதிராவுக்கு நன்றி. கேரள காலை உணவுகள் அப்பம், புட்டு, இடியப்பம், பத்திரி, ஒட்டப்பம் என்று பச்சரிசி மாவில் செ ய்யும் பதார்த்தங்கள். இவையில் அப்பம் செய்முறை விளக்கம் தந்தது ஓகே. 
  எங்கள் வீட்டில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் அப்பம் தான். இங்கு பாக்கெட் மாவு (புளித்து) அண்ணாச்சி கடையில் கிடைக்கும். சில நேரங்களில் கள் சேர்த்து புளிக்க வைத்த மாவும் கிடைக்கும். இந்த வகையான இயற்கை ஈஸ்ட் மணமே தனி. 
  எனக்கு என்னுடைய அம்மா ஸ்பெஷல் முட்டை அப்பம் செய்து தருவார்கள்.சூரியகாந்தி பூ போல் ஓரம் பிரௌன் இதழ்களாக,  நடுவில் வெள்ளை, அதன் நடுவில் மஞ்சள் என்று பார்க்க அழகாக இருக்கும். பதிவு அம்மாவின் நினைவை தூண்டிவிட்டது. அப்பத்திற்கு தொட்டுக்கொள்ள stew, kurma , சீனி சேர்த்த தேங்காய் பால், முட்டை மசாலா, சொதி, கடலை மசாலா நன்றாக இருக்கும். 
  அப்ப மாவு நன்றாக புளித்து விட்டால் நீர்த்து விடும். அப்போது அதை நீர்தோசையாக வார்ப்பது உண்டு. 
  ப்ரஸ்ஸஸ் ஸ்ப்ரவுட் இங்கு கிடைக்காது. அது ஒருமாதிரி கடுக்கும். 
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ ஜேகே ஐயா.. நாங்களும் முட்டை அப்பம் செய்வோமே...:)).. ஓ அப்ப மாவில் நீர்த்தோசை செய்யலாமோ.. நல்ல ஐடியாவாக இருக்கே..

   நன்றி.

   நீக்கு
 19. அப்பம்...அப்பம்...அப்பம்....அதிரா சுட்ட அப்பம் . சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ மாதேவி..

   அப்பம்...அப்பம்...அப்பம்....அதிரா சுட்ட அப்பம் ..
   மாதேவிக்கு ஒன்று..
   அஞ்சுவுக்கு ஒன்று..
   அதிராவுக்கு ரெண்டூஊஊ:))..

   ஹா ஹா ஹா நன்றி.

   நீக்கு
 20. ஆஆஆ இன்று என் ரெசிப்பியோ.... நான் நினைச்சேன் ஶ்ரீராம் என் அப்பத்தை மறந்திட்டார் என:)....
  நன்றி ஶ்ரீராம்....
  வருகை தரும் அனைவருக்கும் நன்றி... லேட்டாத்தான் பதில்கள் தருவேன் அதுவரை மன்னிச்சுக்கோங்ங்ங்:)...

  இங்கு பெரும்பாலான யூனிவசிட்டிகளை மூடிவிட்டு வீட்டிலிருந்து ஓன்லைன் பாடம் நடக்குது.,
  நானும் நைட் வரை போராடினேன் ஸ்கூல்களையும் மூடினால் யூப்பராக இருக்குமே .. மீயும் ஜாலியோ ஜாலி என ம்ஹூம்ம்ம் திறந்தே வச்சிருக்கினம் கர்ர்ர்ர்ர்ர்:) அதனால வேறு வழி?:)... போயிட்டுவாறேன்ன்ன்ன்:(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்டியா ஹா ஹா :) நான்  வீட்ல இருக்கேன் எக்ஸ்டிரா ஷிப்ட் வர சொன்னாங்க :) நான் போகல்லியே 

   நீக்கு
  2. ஆஆஆ நீங்க வெளில போயிடக்கூடா அஞ்சு, பிக்கோஸ்ஸ்ஸ் ஊக்கே கவன்மெண்ட் அறிவிச்சிருக்குது 70 வயசுக்கு மேற்பட்டோர் எல்லோரையும் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி...


   இன்று மீட்டிங் வச்சு சொன்னார்கள் அநேகமாக இங்கு ஸ்கூல்கள் வரும் வியாழனிலிருந்து மூடப்படலாம் அல்லது அதற்கு முன்னரும்... ஹை ஜாலீஈஈ:)

   நீக்கு
  3. 70 வீட்ல இருக்கணும்னா உங்களை போன்ற 90 கட்டாயம் ரொம்ப கேர்புல்லா இருக்கணும் ஏதாச்சும் உதிவி வேணும்னா சொல்லுங்க உடனே வரேன் 

   நீக்கு
  4. //ஏதாச்சும் உதிவி வேணும்னா சொல்லுங்க உடனே வரேன் //

   நோஓஓஓஓஓஓ அஞ்சூஊஉ... 4 அடி தள்ளி நிண்டே பேசுங்கோ:).. அதுவும் மாஸ்க் கட்டிக்கொண்டுதான் என்னோடு பேசோணுமாக்கும்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அதிராவுக்குக் கொரொராவைக் குடுத்திடோணும் எனத் துடிக்கிறா கர்ர்ர்ர்:))

   நீக்கு
 21. அப்பம் என்று தந்தாரை குடலின்
  வெப்பம் குன்றத் தீர்த்தாரை செப்பம்
  கொண்டு கொண் டாடித் தமிழ்
  செண்டு தந்து வாழ்த்தாய் நெஞ்சே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ துரை அண்ணன்.. ஏன் இன்று ரொம்ம்ம்ம்ம்ம்ப லேட்டூஊஊ?:))

   ஓ அப்பம் சாப்பிட்டால் வெப்பம் குறையுமோ... நன்றி..

   நீக்கு
 22. >>> பால் அப்பம்/பால் பான்கேக்..<<<

  பூஸாரின் பதிவுக்குள் அமலா பால் (!) வந்தது எப்படி என்று திகைத்துப் போனேன்...

  அப்புறம் தான் தெரிந்தது அப்பம்/பால் என்று!...

  (கலா அண்ணியிடம் போட்டுக் கொடுத்து விட வேண்டாம்!..)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கலா அண்ணியிடம் அமலாபாலைச் சொன்னாலும் அவ நம்ப மாட்டா அதனால சொல்ல மாட்டேன்ன்.. ஆனா மங்களம் அக்காபற்றிச் சொல்லாமல் விடமாட்டேன் ஹா ஹா ஹா..

   நன்றி துரை அண்ணன்.

   நீக்கு
 23. //வெள்ளையாக, குண்டாக இருக்கும் பச்சை அரிசியில்// அதாவது உங்களை மாதிரி :)))))))))))))))
  அது சரி எந்த ஊரில் பச்சரிசி குண்டா இருக்கும் ???????????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா அஞ்சு என்ன இந்தப் பக்கம்?:)) வாங்கோ வாங்கோ அப்பம் சாப்பிடுங்கோ...

   //அதாவது உங்களை மாதிரி//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. மீ 4 மாதத்தில 6 கிலோக் குறைஞ்சிட்டேன் தெரியுமோ இப்போ ஓமக்குச்சி உடம்புக்காரி ஆயிட்டேன் ஹா ஹா ஹா... சரி சரி படிச்சதும் கிழிச்சு அந்த முஸ்தப்பா அங்கில் கடை மேசைக்குக் கீழ எறிஞ்சிடுங்கோ.. இல்லை எனில்.. ஸ்ரீராம் இதைப் படிச்சிட்டு.. நாளையில இருந்து ரோட்டால ஓடத் தொடங்குவார்..:))

   நீக்கு
 24. //கிறிஸ்மஸ் க்கு இங்கு ட்ரடிஷனலாக சமைப்பார்கள்,

  ரேக்கியுடன்,= turkey

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்:)) ஆங்கில வார்த்தை பாவிக்காமல் மீ டமில்:)) பாவிச்சேன் அது டப்பா அஞ்சு?:)

   நீக்கு
  2. அது நான் கோனார் நோட்ஸ் விளக்கம் தரணுமே :)

   நீக்கு
  3. இல்லை எனில் சலரி கட் பண்ணிடுவேனெல்லோ:)

   நீக்கு
 25. நான் சமைச்சி முடிச்சிட்டு வந்து கலாய்க்கிறேன் :)
  அப்பம் அழகா இருக்கு பார்க்க 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///அப்பம் அழகா இருக்கு பார்க்க //

   இதைச் சொல்லியிருக்காட்டில் ஓடிவந்து இறுக்கிக் கட்டிப்பிடிச்சிடுவேனாக்கும் ஜாக்ர்ர்ர்தை ஹா ஹா ஹா:)).. இப்போ ஆரைப் பார்த்தாலும் தூர நிற்கச் சொல்லுகினமே.. காலம் மாறிப்போச்சுப் பாருங்கோ.. எல்லாம் கொரனா மயம்:)) ஹா ஹா ஹா..

   நீக்கு
 26. ஹூம், கூழ் தோசையை அப்பம் என்னும் பெயரில் அதிரா போட்டிருக்கார். நானோ நன்றாக வெல்லப்பாகு வைத்துக் காய்ச்சி மாவில் ஊற்றிக் கனிந்த வாழைப்பழங்களைப் போட்டுப் பிசைந்த அப்பத்தை எதிர்பார்த்து வந்தால் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கூழ் தோசை. இதில் கஞ்சி காய்ச்சாமல் எல்லாவற்றையும் தேங்காய் சேர்த்து அரைத்து வார்த்தால் தேங்காய்ப் பால் ஆப்பம். ஆப்பச் சட்டி என்னிடம் இருக்கு. ஆனால் இப்போல்லாம் தூக்கி ஊற்ற முடியாது. இதையே நீர் தோசையாகவும் ஊற்றுவேன். தொட்டுக்கக் காரசாரமான சட்டினி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ கீசாக்கா..

   //கூழ் தோசையை//
   இதென்ன இது புதுசு புதுசாப் பெயர் சொல்றா கீசாக்கா.. கூழ் தோசையா ஆவ்வ்வ்வ்:))..

   //வெல்லப்பாகு வைத்துக் காய்ச்சி மாவில் ஊற்றிக் கனிந்த வாழைப்பழங்களைப் போட்டுப் பிசைந்த//

   ஆஆஆஆஆஆஅ இது எங்கள் வாழைப்பழ ரொட்டீஈஈஈஈஈஈஈஈஈஈ.. என் பக்கம் படத்தோடு ரெசிப்பி போட்டிட்டனே.. நவராத்திரி காலம் அதிகம் செய்வேன் .

   விடுமுறை காலங்களில்தான் நான் அப்பம் செய்வேன்ன்.. இப்பவும் விடுமுறைபோலத்தான் இருக்குது[கொரனாவால], பார்ப்போம் கடையில் பொருட்கள் கிடைச்சால்[முக்கியமாக பால்] செய்யலாம்.

   நன்றி கீசாக்கா.

   நீக்கு
 27. ஏஞ்சல்,சிறிது குண்டாக இருக்கும் பச்சரிசி தான் நான் சமைக்கிறேன். ஆந்திரா பொன்னி என்னும் பெயரில் வருது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா அக்கா இங்கே நான் ஒன்லி தஞ்சாவூர் பொன்னி அது மெலிசா இருக்கும் ஆந்திரா பொன்னி பார்த்ததில்லை .தேடிப்பாக்கிறேன் 

   நீக்கு
  2. இங்கே இப்போ வாங்கி இருக்கும் அரிசி சன்னமாக இருக்கு ஏஞ்சல். இன்னும் சமைச்சுப் பார்க்கலை! :)))) ஆனால் அந்த குண்டு அரிசியில் அம்பேரிக்காவில் இருந்து வந்ததும் பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை போட்டேன். பிரமாதமாக வந்தது.

   நீக்கு
  3. குண்டாக இருக்கும் பச்சை அரிசிதானாம் அப்பத்துக்கு நல்லதாம் ஆனா அது எதுவெனத் தெரியவில்லை..
   அஞ்சு சொன்னது போல தஞ்சாவூர்ப் பொன்னி அல்லது இலங்கைப் பச்சை அரிசிதான் இங்கும் கிடைக்குது..

   நீக்கு
 28. ஹூஸ்டனில் பெண் வீட்டில் ப்ரசல்ஸ் ஸ்ப்ரவுட்டை சாதாரணமா உருளைக்கிழங்கு வதக்கறாப்போல் வதக்கினேன். முள்ளங்கி சாம்பாருடன் நன்றாக இருந்தது. இங்கே ஊட்டியில் கிடைத்துக் கொண்டிருந்தது. வயலட் கலர் முட்டைக்கோஸ், ப்ராக்கோலி எல்லாமும் ஊட்டியில் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவை அதிகம் குளிர் ஏரியாவில்தானே வளரும்.. பேப்பிள் கோவா எங்களுக்குப் பிடிப்பதில்லை... அது பச்சையாக சலாட்டில் போட்டால் கொஞ்சம் பறவாயில்லாமல் இருக்கும்.. மற்றும்படி கறி வைச்சால் சுவை இல்லை.

   நீக்கு
 29. பாராட்டுகள் எல்லோரும் எதிர்ப்சார்து வரும் பொருளுக்கு ஏன் பதிவுகள்போடவேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ ஜி எம் பி ஐயா..

   என்ன சொல்றீங்கள் எனப் புரியவில்லையே... பதிவைப் பார்த்துப் பாராட்டினால் மகிழ்ச்சிதானே... இதிலென்ன சந்தேகம்.. அதுசரு உங்களுக்கு அப்பம் பிடிக்காதோ??.. நன்றி ஜி எம்பி ஐயா...

   நீக்கு
 30. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //Angel16 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 6:04
   இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.//

   அல்லோ மிஸ்டர்ர். ஒரு அப்பாவி[இது என்னைச் சொன்னேன்:)] ஸ்கூலில் படிப்பிக்கும் சமயம் பார்த்து இப்பூடித் திட்டிப்போட்டு பின்பு அழிக்கலாமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   நீக்கு
 31. http://1.bp.blogspot.com/-0bBYInsFk8U/TyrYPZapBJI/AAAAAAAABmQ/e8v3tkhTuVk/s400/IMAG0097.jpg

  இந்த படத்துக்கும் மேலே இன்னிக்கு பதிவில் இருக்கும் படத்துக்கும் குறைந்தது 10 வித்யாசம் கண்டுபிடிப்போருக்கு அதிராவின் கல் வைச்ச மோதிரம் பரிசாக அளிக்கப்படும் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //http://1.bp.blogspot.com/-0bBYInsFk8U/TyrYPZapBJI/AAAAAAAABmQ/e8v3tkhTuVk/s400/IMAG0097.jpg//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹையோ என் கன்னி அப்பத்தின் மேல் கையை வச்சிட்டா அஞ்சு:)).. அஞ்சூஉ கைக்கு கிளவுஸ் போட்டுக்கொண்டுதானே என் பக்கத்தில கை வச்சீங்க:))

   நீக்கு
  2. //அதிராவின் கல் வைச்ச மோதிரம் பரிசாக அளிக்கப்படும் :)//

   ம்ஹூம்ம்.. எல்லா மோதிரமும் கழண்டு கழண்டூஊஊஊஊ விழுதே கர்ர்ர்ர்:)) மீ இப்போ..ஓமக்குச்சி உடம்புக்காரி:)) ஹா ஹா ஹா...

   நீக்கு
  3. வரலாறு முக்கியம் அமைச்சியே :)))))))))) ஹாஹா 

   ஹலோ அந்த அப்பம் என் target இல்லை :) நீங்கதான் இதோ வரேன் உங்களை கட்டிபுடிக்க 

   நீக்கு
  4. //ஹலோ அந்த அப்பம் என் target இல்லை :) நீங்கதான் இதோ வரேன் உங்களை கட்டிபுடிக்க //

   https://tse1.mm.bing.net/th?id=OIP.hafzdiymw3Fan-iYmFZAUAHaE8&pid=Api&P=0&w=251&h=168

   நீக்கு
 32. மேடம் மியாவ் :) இதை நாங்க ஆப்பம் என்று சொல்வோம் இங்கிலீஷில் hoppers :)ஆப்பம் தேங்காய்ப்பால் ஆப்பம் வித் வெள்ளை குருமா எல்லாம் செம டேஸ்ட் .நாங்க சுருக்கி அப்பம்னு சொல்வது வெள்ளையப்பம் அரிசி ஊரவச்ச்சு அரைச்சி எண்ணெய்யில் பொரிப்பது :)எனக்கு இந்த மெத்தட் பிடிச்சிருக்கு எதுக்குன்னா இதில் ஈஸ்ட் சோடா எதுமே சேர்க்காதது ரொம்ப உடம்புக்கு நல்லது .ஆனாலும் இது நீங்க செஞ்சதுதானான்னு ஒரு ஐந்தேகம் எட்டி பாக்குது :))))))))))பிக்கோஸ் அப்படியே மைண்ட் அங்கே போச்சு :)எங்கென்னா அது இங்கே .

  ஆவ் 3 டைம்ஸ் ஒரே கமெண்ட் வந்திருக்குன்னு நினைச்சி தெரியாம டிலீட்டிட்டேன் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேங்காய்ப்பூச் சேர்ப்பதால் புளிச்சிடும் அஞ்சு.. வேறு எதுவும் தேவை இல்லை, இன்னும் சூடு காலத்தில் அதிகம் பொங்கும்.. இது எனக்குப் பொங்கியது குறைவெனச் சொல்லலாம்..

   ஸ்கொட்டிஸ் நண்பர் குடும்பத்துக்கும் கொடுத்தோம்ம்..

   நீக்கு
 33. குறும்படம்லாம் போடறீங்க ஹாஹாஆ :)இதை அப்படியே ஸ்தீம் செஞ்சு பட்டர் தடவி சாப்பிடலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பானுமதி அக்கா எனில்.. குறும்படத்தையே போஸ்ட் ஆக்கிடுவா கர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.. நன்றி அஞ்சு..

   நீக்கு
 34. அதிராவின் ஆப்பம் நன்றாகத்தான் இருக்கிறது. தமிழ்தான் கொஞ்சம் கடினமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஆரம்பம் எல்லாம் கடினமாகத்தான் இருக்கும் போகப்போகப் பழகிடும் பானு அக்கா..:))..

   நீக்கு
 35. அடடா ஆப்பம் தான் அப்பம் ஆயிடுச்சா ....
  நல்லா இருக்கு அதிரா ...எங்க வீட்டில் பெரியவருக்கு ரொம்ப இஷ்டம் ..அடிக்கடி செய்வது உண்டு ...


  ஆனா அந்த களி மாதிரி செஞ்சு சேர்க்கும் வேலை எல்லாம் இல்ல ..


  குட்டி கோஸ் ரொம்ப வித்தியாசம் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. vஆங்கோ அனு..

   //ஆனா அந்த களி மாதிரி செஞ்சு சேர்க்கும் வேலை எல்லாம் இல்ல//
   இது கஞ்சி காச்சி சேர்ப்பது என்போம்.. இப்படிச் செய்தால் அப்பம் நல்ல சொஃப்டாக ஓட்டை விழுந்து வரும்...

   நன்றி அனு.

   நீக்கு
 36. சுவையான குறிப்பு - நண்பர்கள் வீட்டில் இப்படியான ஆப்பம் சாப்பிட்டதுண்டு.

  பதிலளிநீக்கு
 37. ஹாஆவ் :) ப்ரசல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ் நடுவில் டெய்சியா :) காலையில் நீங்க சுட்ட ஆப்பம் பார்த்த அதிர்ச்சினு நினைக்கிறன் இதை கவனிக்கலை அதோட 4 மணிநேரம் டீப் ஸ்லீப்புக்கு போயிட்டு வந்தேன் 
  இதையொருவர் முந்தி   பகிர்ந்து நினைவு வருது அவரது பூனை ஜிஞ்சர்  அதற்க்கு இந்த ஸ்ப்ரவுட்ஸ் க்றிஸ்மஸ் டைமில் செய்து டேபிளில் வைப்பாராம் ஓனர் .ஒருவேளை உங்க உறவுக்காரங்களா  இருக்கும் :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //காலையில் நீங்க சுட்ட ஆப்பம் பார்த்த அதிர்ச்சினு நினைக்கிறன்//
   எதுக்கும் ஒருக்கால் ரெம்பரேச்சரை செக் பண்ணுங்கோ அஞ்சு?:)).. இருமல் இருக்குதோ?:)) ஹா ஹா ஹா..

   ஓ பூஸாருக்கு இது பிடிக்குதாமோ.. எங்கட டெய்ஷிப்பிள்ளைக்கு சீஸ், பட்டர் இவை பிடிக்குது.

   நீக்கு
 38. https://lh6.googleusercontent.com/proxy/b9Pk_T6_LqukDLywc4Tuys9VGG4HUU7nF0_81_cnDTuheclPB_unptBAWf0LN0jbG9_chppuv7kHqSLbbGxCJko-MR7dxq9M_KZ2Qq08xdFwHr0
  அப்பம் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. https://1.bp.blogspot.com/-sxmX15XdE04/WrtHKhoP9RI/AAAAAAAAtt8/VrGg9waJb_837wSrHrRCwnaOtqE0jOafwCLcBGAs/s640/00as.jpg
   அப்பம்

   நீக்கு
  2. ஓ இது ஏதோ பலகாரம்.. பணியாரம் போல இருக்குதே.. இதையோ அப்பம் என்பீங்க.. பெயர்குழப்பம் இருக்கிறது:)).. மோடி அங்கிளிடம் சொல்லி பெயரை மாற்றச் சொல்லப் போகிறேன்ன்..:))

   நீக்கு
  3. அங்கிள் பேர்லயே பல குயப்பம் இருக்கு கடவுளே னாரொடு சேர்ந்த பூவும் மாதிரி இபோலாம் நான் ஜந்தேகம் குயப்பம்னு எழுதறேன் ,சாமீ என் தமிழ் வாழட்டும் சரி மோதி அங்கிளா இல்லை மோடி அங்கிளானு குழப்பம் 

   நீக்கு
  4. ஹா ஹா ஹா அஞ்சூஊஊஊஊஉ நீங்க எப்போ கம்பி மேல ஏறினீங்க? நான் காணவே இல்லையே:)

   //னாரொடு சேர்ந்த//

   ஸ்ஸ்ஸ்ஸ் அது நா.. நா.. தான் வருமாக்கும்:)) நெ தமிழன் எங்கே போயிட்டார்ர்:)).. மீக்கு டமில்ல டி எல்லோ:)) அதனால எல்லாம் தெரியுதே:) ஹா ஹா ஹா...

   //சரி மோதி அங்கிளா இல்லை மோடி அங்கிளானு குழப்பம் //
   இந்தக் கொயப்பத்தைத் தீர்க்கக்கூடியவர் மோடி அங்கிளின் ஜொந்தக்காரரான கீசாக்கா அவர்கள்தான்.. ஹா ஹா ஹா..

   நீக்கு
  5. நீங்க தனியா இருக்கீங்களேன்னு துணைக்கு  கை கொடுக்க வந்தேன் :))))))))) கூகிள் டைப்பில் வேகமா நா /னா ஆகிடுச்சு :))

   நீக்கு
 39. https://media.webdunia.com/_media/ta/img/article/2017-02/16/full/1487243718-7373.jpg

  ஆப்பம் 
  ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா இது தான் இப்போ கண் பூஸ் இல்லைதானே 

  பதிலளிநீக்கு
 40. இதையும் பாருங்கள். இதான் நடுவில் முட்டை மஞ்சள் கரு இருந்தால் இன்னும் அழகாக இருக்கும். இல்லையா? 
  http://www.kurinjikathambam.com/2015/08/flower-shape-aappam.html


  Jayakumar

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!