வெள்ளி, 20 மார்ச், 2020

வெள்ளி வீடியோ : வந்ததே கனவோ என்று... வாடினேன் தனியே நின்று....எஸ் எஸ் வாசன் தயாரிப்பில், வேப்பத்தூர் கிட்டு எழுதி, சி ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'வாழ்க்கைப்படகு'.கண்ணதாசன் பாடல்களுக்கு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை.  பி பி ஸ்ரீனிவாஸ் பாடிய "நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ.."   பாடல்.இதே படத்திலிருந்து சில நாட்களுக்கு முன் 'சின்னச்சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ' பாடலைப் பகிர்ந்திருக்கிறேன்.

இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே நன்றாய் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம்!  குறிப்பாய் சுசீலாம்மா பாடிய பாடல்கள்...

ஜெமினி ஹீரோவாகவும், தேவிகா ஹீரோயினாகவும் நடித்துள்ள இந்தப் படத்தில் ஜெமினியின் முதல் மனைவி புஷ்பவல்லி நடித்திருக்கிறார்!  புஷ்பவல்லி முதலில் ரங்காச்சாரி என்பவரை மணந்து, பின்னர் ஜெமினியை மணந்திருக்கிறார் என்கிறது விக்கி.ஜெமினிக்கும் புஷ்பவல்லிக்கும் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளில் மூத்த பெண் ஹிந்தி நடிகை ரேகா.  ஜெமினி ரொம்பநாள் அவரை தன் பெண் என்று ஒத்துக்கொள்ளவில்லை என்பதும் தெரிந்த விஷயம்.

இதெல்லாம் இந்தப் பாடலுக்கு தேவையில்லை என்பதால் (!) வம்பை நிறுத்தி விட்டு பாடலுக்கு வருகிறேன்.இந்தப்பாடலின் சரணத்தில்தான் கவியரசர் "யான் நோக்குங்கால் நிலம் நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும் குறளை உபயோகப்படுத்தி இருப்பார்.

இரண்டு சரணத்திலும் முதல் இரண்டு வரிகளை இரண்டு இரண்டு முறை பாடவேண்டும்!!!

நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ 
இன்றுமுதல் நீ வேறோ நான் வேறோ...
காணும்வரை நீ எங்கே நான் எங்கே 
கண்டவுடன் நீ எங்கே நான் அங்கே 

உன்னை நான் பார்க்கும்போது 
மண்ணை நீ பார்க்கின்றாயே 
விண்ணை நான் பார்க்கும்போது 
என்னை நீ பார்க்கின்றாயே 
நேரிலே பார்த்தாலென்ன 
நிலவென்ன தேய்ந்தா போகும்?
புன்னகை புரிந்தால் என்ன 
பூமுகம் சிவந்தா போகும்?

பாவை உன் முகத்தைக் கண்டேன் 
தாமரை மலரைக் கண்டேன் 
கோவைபோல் இதழைக் கண்டேன் 
குங்குமச் சிமிழைக் கண்டேன் 
வந்ததே கனவோ என்று 
வாடினேன் தனியே நின்று
வண்டுபோல் வந்தாய் இன்று 
மயங்கினேன் உன்னைக்கண்டு 

77 கருத்துகள்:

 1. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்...

  வாழ்க நீதி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிர்பயா வழக்கில் வெற்றி நீதி நிலைத்தது
   வாழ்க நீதி

   நீக்கு
  2. காலை வணக்கம் அனைவருக்கும்.

   நீதி நிலைத்தது என்பதைவிட, கையும் களவுமாகப் பிடித்தாலும் கொலையே செய்திருந்தாலும் நம் சட்டங்களின் இத்தனை ஓட்டைகள் இருக்கின்றன என்றும், கொஞ்சம் ப்ப்ளிக் குரல் ஆக்ரோஷமாக ஒலிக்கவில்லை என்றால் 80 வருடங்கள்கூட எத்தகைய குற்றவாளிகளும் தப்பித்துவிடலாம் என்பதையும், சட் என நிகழும் என்கவுன்டர்கள் மக்கள் மனதுக்கு இன்னும் ஆறுதல் அளிக்கும் என்பதையும் நாம் அறிந்துகொள்கிறோம்.

   நீக்கு
  3. ஜனநாயகத்தில் இது தவிர்க்க முடியாத அம்சம்!

   நீக்கு
 2. அந்தப் படத்தில் தான்
  இந்தப் பாடலும்....

  மன்னவனே ஆனாலும்
  பொன்னளந்து கொடுத்தாலும்
  பெண் மனதை நீ அடைய முடியாது...

  வாள்முனையில் கேட்டாலும்
  வெஞ்சிறையில் போட்டாலும்
  உடல் அன்றி உள்ளம் உன்னைச் சேராது...

  பதிலளிநீக்கு
 3. பாவை உன் முகத்தைக் கண்டேன்..
  தாமரை மலரைக் கண்டேன்..
  கோவை போல் இதழைக் கண்டேன்..
  குங்குமச் சிமிழைக் கண்டேன்...

  அழகு.. அழகு...
  இன்னொருவன் இல்லை
  இப்படியெல்லாம் எழுதுதற்கு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரிகளைப் படிக்கையிலேயே மனம் பாடுகிறது. எம் எஸ் வி...

   நீக்கு
 4. இன்று சூரியனும்
  சந்தோஷத்தோடு உதிப்பான்...

  பதிலளிநீக்கு
 5. தான் தோன்றித் தனமாய்த் திரிவோர் தங்களைத் திருத்திக் கொள்ளவேண்டிய நாள்..

  பதிலளிநீக்கு
 6. அன்பின் துரை, ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும்
  இனிய காலை வணக்கம்.

  மிக மிக அருமையான பாடல்.
  பி பி.ஸ்ரீனிவாசின் குரலும், கண்ணதாசன் வரிகளும்
  எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்குமா.

  என்ன அழகு. என்ன காதல்.. இந்த உணர்ச்சிகளை
  எப்படித்தான் வடித்தாரோ.
  அப்படியே லட்டு போல இசை அமைத்த மெல்லிசை மன்னரை
  என்ன சொல்லிப் பாராட்டுவது.
  எங்களின் பொற்காலங்கள் இந்தப் படங்கள்.

  ஜெமினி ,தேவிகாவின் நடிப்பும் எளிமை, இனிமை.
  புஷ்பவல்லி நடித்திருக்கிறாரா. அட நான் இந்தப் படம் பார்த்ததில்லை.
  பாடல்கள் மனப்பாடம்.
  உன்னைத்தான் நான் அறிவேன் ,மன்னவனை யார் அறிவார்
  பாடல் மிகப் பிரபலம்.
  பியார் கியா தோ டர்னா க்யா பாடலின் பிரதி என்று அப்போது
  விகடனில் ரெவ்யூ வந்தபோது படித்த நினைவு.
  நன்றி மா ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //புஷ்பவல்லி நடித்திருக்கிறாரா. அட நான் இந்தப் படம் பார்த்ததில்லை.//
   அக்கா, டி.எஸ் . பாலையாவின் மனைவியாக வருகிறார் என நினைக்கிறேன்.
   இஸ்லாமிய பெண்ணாக நடிப்பார்.

   நீக்கு
  2. வணக்கம் வல்லிம்மா... புஷ்பவல்லி பற்றி இணையத்தில் படித்துதான் எழுதினேன்!

   உன்னைத்தான் நான்றிவேன்.... என்ன ஒரு பாடல்.. ஆம், நீங்கள் சொன்னதும் அந்த ஹிந்திப் பாடலின் சாயல் தெரிகிறது மா...

   நீக்கு
  3. தகவலுக்கு நன்றி கோமதி அக்கா.

   நீக்கு
  4. புஷ்பவல்லியின் புகைப்படம் கூட நான் பார்த்ததில்லை. ஹி ஹி!

   நீக்கு
 7. அருமையான பாடல் ஜி

  ஜெமினியின் வாழ்க்கையை கிளறினால் நாறும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி..்். அவர் மேல் தப்பில்லை என்பார்கள். என்ன, நெருப்பாக இல்லாமல் குளிர்ப் போர்வையாய் இருந்திருக்கிறார்.

   நீக்கு
 8. ஸ்ரீராம், கௌ அண்ணா, நட்புகள் எல்லாருக்கும் இனிய காலை வணக்கம். இன்று கொஞ்சம் நேரம் அவ்வப்போது கணவரின் கணினி கர்ஃப்யூ போல!!!!! கிடைக்கும் சந்தோஷத்தில் குதித்துவிட்டேன். பாடலில் நீந்திட்டுருக்கேன். ஒவ்வொரு நாளும் கொஞ்சனேரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவ்வப்போது தலையை மட்டுமேனும் காட்டிப் போறேன்...பார்ப்போம்..

  நீந்த குதிச்சா என்ன பின்னாடிதள்ளி2ன்னு ஒரு ஆள் வந்துட்டாங்க!!!!!!!!!!!!!!!!!

  பாட்டு செம பாட்டு ஸ்ரீராம்...மிகவும் பிடித்த பாட்ட்டு...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா வாழ்க வளமுடன்
   வாங்க வாங்க நேரம் கிடைக்கும் போது (கணினி கிடைக்கும் போது)

   நீக்கு
  2. இவுஹ யாரு? எங்கனயோ பார்த்த மாதிரி, கேள்விப்பட்ட மாதிரி இருக்கே. கீதா ரங்கன் அக்காவா?

   நீக்கு
  3. தமிழ் வருடப் பிறப்பன்றுதான் தலைகாட்டுவீர்களோ எனத் தோன்றியது.

   நீக்கு
  4. அடடே கீதா... வாங்க... வாங்க... சந்தோஷமான, உற்சாகமான நல்வரவு.

   நீக்கு
  5. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்..

   நீக்கு
  6. நெல்லை ஹா ஹா ஹா ஹா ஹா...சத்தமா சொல்லிறாதீங்க...கண்திருஷ்டி பிள்ளையாருக்கு வேண்டித்தான் வந்திருக்கேன்... ஹா ஹா ஹா... எப்பப்ப கைல கணினி கிடைக்கும்னு தெரியல...காலைல ஒரு அஞ்சு நிமிஷம் இதோ இப்ப ஒரு அஞ்சு நிமிஷம்..ஓடிடுவேன்...

   வெள்ளிப்பாடலுக்கு கீதா வந்துட்டு ராகம் சொல்லாமப் போனா அது முறையோ?!!!! ஸ்ரீராமுக்கு உங்களுக்கு பானுக்காவுக்கு ஏஞ்சலுக்கு எல்லாம் சந்தேகம் வந்துவிடுமே . இது கீதாதானோன்னு..ஹிஹிஹி ஸோ ராகம் சொல்ல வந்தா (நெல்லைக்கு ஒரு பிட் கிடைச்சுருச்சு!!!!!) இங்க கமென்ட்ஸ் கண்ணுல பட்டுருச்சு...

   ராகம் ஹிந்துஸ்தானில கமாஜ்...நம்ம ஊர்ல ஹரிகாம்போஜி..அப்படின்னு மனசுல படுது...

   மத்த பதிவு எல்லாம் மொபைல்ல படிச்சுட்டு அப்புறம் கணினி ல கமென்ட்...இன்னிக்கு மொபைல்ல க்ரோம் வருது...நேத்து எல்லாம் படுத்திச்சு..

   கீதா

   நீக்கு
  7. ஏகாந்தன் அண்ணா ஹா ஹா ஹா ஹா நீங்க வேற நான் கொரோனா எல்லாம் போனப்புறம்தன வருவேன்னு நினைச்சேன்..ஹிஹிஹி..வேற ஒன்னுமில்ல என் கம்ப்யூட்டர் சரி பண்ணும் கம்ப்யூட்டர் டாக்டர் என் மைத்துனர் அமெரிக்காவுல மாட்டிக்கிட்டாரு...31 அன்று வரணும் ஆனா இப்ப ஃப்ளைட் எல்லாம் கான்சல்ட்...ஸோ தெரிலே...

   ஸ்ரீராம் வந்துவிட்டேன்...எனக்கும் சந்தோஷம் ஆனா என்ன தொடர்ந்து வர முடியுமா அப்பப்ப லீவு சொல்லணுமோ....நம்ம நட்புகள் பதிவுக்கும் தினம் வர முடியுமான்னு தெரில..கும்மி எல்லாம்.... முடிஞ்ச வரை....பார்த்துருவோம்..

   இன்று நல்ல நீதி அரங்கேறியது இன்று காலை...

   கீதா

   நீக்கு
 9. எக்காலத்திற்கும் பொருந்தும் பாடல்களில் ஒன்று நேற்றுவரை நீ யாரோ......

  பதிலளிநீக்கு
 10. என்றும் ரசிக்க வைக்கும் பாடல்... இந்தக் குறளின் குரல் எழுதும் போது, சிந்திப்பதற்குள் மனம் பாடிய இனிமையான பாடல்...

  பதிலளிநீக்கு
 11. பாடல் மிக அருமை
  பிடித்த பாடல். இனிமை
  கேட்டேன்.

  பதிலளிநீக்கு
 12. கொரோனா உயர்நிலை கண்காணிப்பு கமிட்டி அமைப்பு, வெளிநாட்டு விமானங்கள் வருகை ரத்து, குடிமக்களுக்காக பிரதமரின் உருக்கம், விண்ணப்பம், ஞாயிறன்று ’ஜனதா கர்ஃபியூ’, டெல்லியில் குற்றவாளிகளுக்காக ஆனந்தக் கோயில் கட்டமுனைந்த கூத்தாடி வக்கீல், இரவெல்லாம் இங்குமங்கும் இழுத்தடிக்கப்பட்ட நீதிதேவதை.. கலவரக் கலப்பு சிந்தனையில், சரியான தூக்கமில்லை. காலையில் டிவி, நெட் பார்க்கும் மனநிலை அறவே இல்லை. வெறிச்சோடிக்கிடந்த, நாய்கள் கம்பீரமாக உலவும் காலைச் சாலையில் கொஞ்சம் நடந்து, தீருவதற்கு முன் பால், தயிர் வாங்கி வந்தாயிற்று. பேப்பர் கிடைக்கவில்லை. காப்பியை மனம் சீண்டவில்லை.

  அப்புறம்தான் செய்தி கசிந்தது. ஏழுவருடத் தொடர்கதையை அதிகாலை, திரையை இழுத்து மூடியது. தலையை ஒருகையால் கோதிக்கொண்ட நீதிதேவதை, பாக்கியிருக்கும் வேலையைக் கவனிப்பதில் மும்முரமாக இருப்பதாக சேதி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உணர்ச்சிபூர்வமான கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
  2. உண்மை ஏகாந்தன் ஸார். கலவையான உணர்வுகளை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

   நீக்கு
 13. நேற்றுவரை நீ யாரோ.. அருமையான பாடல். என்றும் இளமையாக வலம் வருவது.

  பதிலளிநீக்கு
 14. இன்றைய பாடல் மிக அருமை.

  //புஷ்பவல்லி முதலில் ரங்காச்சாரி என்பவரை மணந்து, பின்னர் ஜெமினியை மணந்திருக்கிறார் என்கிறது// - தயவுசெய்து சினிமா கிசு கிசு எழுத்தாளர் பானுமதி வெங்கடேச்வரன் மேடத்தின் வேலையை நீங்கள் எடுத்துக்கொள்ளாதீர்கள். அப்புறம் அவங்க பொயிங்கிடுவாங்க.

  பதிலளிநீக்கு
 15. எனக்கும் இந்த பாட்டு பிடிக்கும்

  பதிலளிநீக்கு
 16. இனிய பாடல் ....

  இந்த வாரம் நடிகையர் திலகம் படம் பார்த்து ...மனம் கனத்து இருக்கிறது .....ம்ம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அனு... இப்பதான் அந்தப் படம் பார்க்கறீங்களா?

   நீக்கு
  2. நான் இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை...

   (அதைப் பற்றி யாரும் கேட்டார்களா?..)

   நீக்கு
 17. பாடல் கேட்டிருக்கிறேன். இனிமை.

  பதிலளிநீக்கு
 18. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 19. அழகான பாடலை மிகவும் அழகான பாடலாக்குவது பி.பி.எஸ்.ஸின் அழகான குரலும், மெல்லிசை மன்னரின் இனிய இசையும். பகிர்வுக்கு நன்றி. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் பிடித்த பாடல்..பிபிஎஸ் என்ன வாய்ஸ்!! இசை எல்லாம் கலந்து கட்டிய பாடல் ஸ்ரீராம்...

   பானுக்கா நெல்லையின் கமென்ட் உங்க கண்ணுல படலை போல...பட்டம் எல்லாம் கொடுத்திருக்கார் பாருங்க!!

   கீதா

   நீக்கு
  2. //பானுக்கா நெல்லையின் கமென்ட் உங்க கண்ணுல படலை போல...பட்டம் எல்லாம் கொடுத்திருக்கார் பாருங்க!!// பட்டது. ஆனால் என்னை பொங்க வைக்க அதில் ஈஸ்ட் குறைவு. 

   நீக்கு
 20. //இந்தப்பாடலின் சரணத்தில்தான் கவியரசர் "யான் நோக்குங்கால் நிலம் நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும் குறளை உபயோகப்படுத்தி இருப்பார்.//கந்தன் கருணை படத்தில் வரும் 'மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு பாடலிலும் 'பள்ளியறையில் நான் தனித்திருந்தேன், பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய், துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் .. தோழி தூக்கத்தின் கனவென்றுதான் உரைத்தாள்' என்பதும் குறளின் பாதிப்புதான். 'அத்திக்காய் காய் காய் .. பாடல் கூட சங்கப் பாடலின் பாதிப்பு. பாசுரங்களின் பாதிப்பும் உண்டு.  இன்னும் வேறு சிலவும் இருக்கலாம்.  இதைத் தவறு என்று கூற முடியாது. தன்னுடைய முந்தைய தலைமுறையினரின் பாதிப்பு இல்லாத கலைஞர்கள் கிடையாது.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //..சங்கப் பாடலின் பாதிப்பு. பாசுரங்களின் பாதிப்பும் உண்டு. இன்னும் வேறு சிலவும் இருக்கலாம்.//

   இப்படி நம்மைப்போல் பின்னூட்டம் போட்டுக்கொண்டிருக்காமல் (அப்போது இண்டெர்நெட்டும் இல்லை!), தனியாக ஒரு கட்டுரையைக் கல்கண்டில் கண்ணதாசனைப்பற்றி எழுதியதால், பெரிசாகக் கோபித்துக்கொண்டார் கண்ணதாசன்.. கண்ணதாசனுக்கும் தமிழ்வாணனுக்கும் டூ! பேச்சுவார்த்தை நின்றது.. எழுபதுகளில். அந்தக் கல்கண்டு என்னிடம் இருந்தது வெகுநாள். கூடவே கண்ணதாசனின் காரசாரமான பதில் கட்டுரையும்!

   நீக்கு
 21. நீதி கிடைத்து விட்ட்து என்று எழுதுகிறார்கள் யாருக்கு கொல்லப்பட்டவருக்கா புரியவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எளியவருக்கு ஒரு தவறை இழைத்துவிட்டால், இழைத்தவர்களுக்குத் தண்டனை கிடைத்தால்தான் பொது மக்கள் மனதில் நீதி கிடைத்துவிட்டது (பொயடிக் ஜஸ்டிஸ் அல்லது நியாயம் வெற்றி பெற்றது) என்று தோன்றும். இந்த 'நீதி' என்பது இறந்த பெண்ணுக்கல்ல. பொதுமக்களின் மனக் கலக்கத்திற்கு. அதாவது 'நீதி உனக்குக் கிடைச்சுரும்பா.. வா.. உன்னை வெட்டிக் கொல்கிறேன். பிறகு என்னைக் கைது செய்து, கடைசியில் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கும்' என்று சொன்னால், 'அப்படியா சரி.. எடுத்துக்கோ என் தலையை' என்று யாரும் சொல்லமாட்டார்கள்.

   இதே கேஸில், குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை அளிக்காமல் இன்னும் காலம் தாழ்த்திக்கொண்டே இருந்தால் பொது மக்களுக்கு என்ன மாதிரியான தாக்கத்தை அது விளைவிக்கும்? ஏற்கனவே குறைந்த வயது என்று சொல்லி ஒருவன் தப்பித்ததையே ஏற்க முடியவில்லை.

   நீக்கு
  2. //..ஒருவன் தப்பித்ததையே ஏற்க முடியவில்லை.//

   அந்த ஐந்தாவது நபர்பற்றி எழுதினால் அதிகமாகிவிடும். இருப்பினும் அந்த நபர் மீது நடிகை கஸ்தூரி விட்ட ட்விட்டர் சாபம் ஒன்றை சற்றுமுன் படித்துவிட்டு இங்கே வந்தேன். நிறுத்திக்கொள்கிறேன்!

   நீக்கு
 22. 2015 ல் விடுவிக்கப்பட்ட அந்த மைனர் குளுவாலுக்குக் கல்யாணம் ஆகியிருக்கலாம்.. குழந்தை குட்டிகளுடன் கும்மாளமாகக் கூட இருக்கலாம்...

  தனது வீரப் பராக்கிரமங்களை எதிர்கால சுப்புக் குட்டிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கும் எண்ணமும் இருக்கலாம்...

  இரும்புக் கம்பியால் அந்த அபலையைக் குடைந்தவன் இவன் தான் என்று அப்போது பேசிக் கொண்டார்கள்...

  எல்லாம்

  பதிலளிநீக்கு
 23. நள்ளிரவு 1:30 க்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது...

  தூக்கு தண்டனையை நிறைவேற்றும் அலுவலர் என்பதாக நினைப்பு...

  எபியின் பதிவு வெளியாகும் நேரம்...

  இன்றைய பதிவில்
  குங்குமச் சிமிழாகப் பாட்டு...

  குரூரர்களின் வாழ்வை முடிப்பதற்கு
  விதிக்கப்பட்ட நேரம்...

  கோரங்கொள் காளியின் நெற்றியில் குங்குமப் பொட்டு வைக்கப்பட்டு விட்டது...

  3:30 க்கான எனது பதிவை 3:15 க்கு வெளியிட்டு விட்டு தலையணையில் சாய்ந்த போது மணி 3:25.. இங்கே விடியற்காலம்...

  காலையில் குளித்து திருநீறு தரித்த பின் இன்றைக்குக் கல்யாண நாளாயிற்றே என்று வீட்டுக்கு போன் செய்தால் இணையம் ஒத்துழைக்க வில்லை..

  கூடு ஒரு பக்கம்
  கோழி ஒரு பக்கம் - என்றான வாழ்வில்
  இந்த மட்டுக்கு சந்தோஷம் போதும் என்ற நினைப்புடன் காஃபியைச் சுவைத்தேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை சார், திருமண நாள் நல்வாழ்த்துகள். நல்வாழ்விற்கு இறைவன் என்றும் அருள் புரிவானாக.

   நீக்கு
  2. அன்பின் ஏகாந்தன்..
   தங்களது வாழ்த்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றி.. மகிழ்ச்சி...

   நீக்கு
  3. அன்பின் துரை தங்களுக்கும் மனைவிக்கும் இனிய மண நாள்
   வாழ்த்துகள்.
   என்றும் மங்கலம் பொருந்தி இணைபிரியாமல் இருக்கணும்.

   நீக்கு
  4. தங்கள் அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியம்மா...

   நீக்கு
 24. திருமண நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நெஞ்சார்ந்த நன்றி....

   நீக்கு
 25. நல்ல பாடல். மீண்டும் ஒரு முறை கேட்டு ரசித்தேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!