திங்கள், 23 மார்ச், 2020

"திங்க"க்கிழமை  :  சப்பாத்தி மாவில் செய்த அல்வா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி இரவு டிஃபனுக்காக பிசைந்த சப்பாத்தி மாவு கொஞ்சம்,மீந்து விட்டது. அதை குளிர்சாதன பெட்டிக்குள் வைக்க மறந்ததால் மறு நாள் காலை மாவு புளித்து புசு புசுவென்றாகி விட்டது. என் மருமகள் அதை களைந்து விடலாம் (எறிந்து விடலாம்) என்றாள்.  நான், "வேண்டாம் அதில் அல்வா கிண்டி விடலாம்" என்றேன்.  எப்படி என்று கேட்ட அவளுக்காகவும், கேட்காத உங்களுக்காகவும் செய்முறை...

  

புளித்த மாவில் முதலில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, (ஊற வைத்த புளியை சாம்பாருக்கு,கரைப்பது போல) கரைக்கவும். கோதுமைப்பால் கிடைக்கும். மீண்டும் கொஞ்சம் நீர் ஊற்றி பால் எடுத்தால் மாவு சக்கை போல வரும். அதை களைந்து விட்டு, கோதுமைப் பாலை ஒரு பாத்திரத்தில் அப்படியே ஒரு மணி நேரம் வைக்கவும். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கோதுமைப் பால் தெளிந்து மேல் பகுதி தண்ணீராகவும், அடியில் கெட்டி பாலாகவும், இருக்கும். மேலாக உள்ள தண்ணீரை கொட்டி விட்டு, கெட்டியான பாலை ஒரு கப்பில் அளந்து கொள்ளவும். அதைப்போல ஒன்றரை மடங்கு துருவிய வெல்லத்தை எடுத்துக் கொள்ளவும். வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்ததும் கோதுமைப் பாலை அதில் சேர்த்து கிளறவும். நடுவில் இரண்டு தடவைகள் கொதிக்கும் வென்னீரை விட்டு கிளறலாம். மாவு  குறைவான நெய்யில் சுலபமாக வேக இது உதவும். 
அவ்வப்பொழுது நெய்யை ஊற்றிக் கொள்ளவும். ஒரு டம்ளர் கோதுமைப் பாலுக்கு 100 அல்லது 150 கிராம் நெய் போதுமானது. பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது இறக்கி விடலாம். நெய் அதிகமாக இருந்தால் அல்வா பதமாக வரும் பொழுது நெய்யை வெளியேற்றும்(கக்கும்). ஒரு தட்டில் கொட்டி துண்டுகள் போடலாம், அல்லது, அப்படியே ஸ்பூனால் சாப்பிடலாம். ஏன் கையால் சாப்பிட்டால் ஆகாதா என்று எங்கிருந்தோ ஒரு குரல் வருகிறது. வெல்லம் போட்டு செய்வதால் நிறமி,தேவையில்லை. அல்வா கிளறத் தொடங்கும் பொழுதே ஒடித்த முந்திரிப் பருப்புகளை நெய்யில் வறுத்து வைத்துக் கொண்டு, அல்வா கெட்டியாகத் தொடங்கும் பொழுதே சேர்த்துக் கிளறி விடலாம். கடைசியில் ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.நான், நெய் திட்டமாக விட்டேன். 


84 கருத்துகள்:

 1. என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 2. அப்படியே கொரானாவையும் வெயில் காயட்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரபு நாடுகளில் காயாத வெயிலா? ஆனால் அங்கேயும் கடுமையான தாக்குதல் இருக்கே! அதான் கொஞ்சம் யோசனை! நம் நாடு எப்படித் தப்பிப் பிழைக்கப் போகிறதோ என்னும் கவலை வாட்டுகிறது. நல்லதே நடக்கப் பிரார்த்திப்போம்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க...

   நீக்கு
  2. //அரபு நாடுகளில் காயாத வெயிலா? ஆனால் அங்கேயும் கடுமையான தாக்குதல் இருக்கே// ஓமானில் அதிகம் பரவில்லை என்று கேள்விப்பட்டேன்.

   நீக்கு
 4. இது கூட நல்லாயிருக்கே...
  பாத்திரம் காலியாகி விடும்....

  பதிலளிநீக்கு
 5. அன்பு வணக்கம் அன்பு துரை. இந்த நாள் இனிய நாளாகட்டும்.
  இன்று இங்கு எல்லோரும் சேர்ந்து பிரார்த்தனை ஸ்கைப் வழியே செய்கிறோம். இறைவன் எங்கள் குரலைக் கேட்பான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா...   இனிய காலை வணக்கம்.  உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும்.

   நீக்கு
  2. அன்பு பானுமா. மிக அருமையாக வந்திருக்கிறது கோதுமை அல்வா.

   நல்ல செய்முறையை விளக்கமாகப் படங்கள் எடுத்துப் பதிவிட்டிருக்கிறீர்கள்.

   இது புதிதான முறை. மீந்து போன கோதுமை மாவு
   அல்வா இப்போதுதான் கேள்விப் படுகிறென்
   வெல்லம் போட்டுச் செய்வதால்
   நான் கூடச் சாப்பிடலாம். ரொம்ப நன்றி மா.

   நீக்கு
  3. என்ன வல்லிம்மா இப்படிச் சொல்லிட்டீங்க?

   நாம நினைக்கற மாதிரி வெல்லம் இப்போல்லாம் பெரும்பாலும் நல்லதாக வருவதில்லை. இங்கு ஒருவர் சொன்னார்... ஒரிஜினல் நிறத்தோடு நிறமி, கெமிக்கல் சேர்க்காமல் வரும் வெல்லம் விற்பனை ஆவதில்லை. ஏகப்பட்ட கெமிக்கல் சேர்த்து பளிச் என்ற மஞ்சள் கலரில் வரும் மண்டைவெல்லம்தான் வேகமாக விற்பனை ஆகிறது. உங்களுக்கு நல்ல் வெல்லம் வேணும்னா, ஆர்கானிக் வெல்லப் பொடி என்று வருவதை வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்.

   திருப்பத்தூரில் நான் வாங்கும் வெல்லம் நன்றாக இருக்கும் (பெரும்பாலும் கெமிக்கல் மிக மிகக் குறைவு). ஆனால் அதன் நிறத்தை எல்லோரும் விரும்புவதில்லை.

   அதுனால, வெல்லமோ ஜீனியோ..... எதுவும் உடலுக்கு நல்லதில்லை. ஹா ஹா ஹா

   நீக்கு
  4. உங்கள் பிரார்த்தனையில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.
   பாராட்டுக்கு நன்றி வல்லி அக்கா.

   நீக்கு
  5. வல்லி மாமி, நான் உங்கள் மகள் ஸுமித்ராவிற்கு whatsapp வழியாக ஒரு பிரார்த்தனை அனுப்பினேன். ஒரு சிறு கிண்ணத்தில் ஒரு பிடி உப்பை கரைத்து பெருமாள் சன்னதியில் வைத்து இதேபோல் கொரோனா மற்றும் இதர வியாதிகளும் கரைய வேண்டும் என்று தினம் வேண்டிக் கொள்ள சொல்லியிருக்கின்றார் அஹோபில மடத்து ஜீயர். நான் செய்கின்றேன். அதே போல், நம்பிக்கை உள்ளவர்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டி, லோக ஷேமத்திற்கு பிரார்த்திக்கலாம். இப்போது எம்மதமும் சம்மதமே என்ற ஒரு தத்துவம்தான் செயல் படும் கால கட்டம்.

   நீக்கு
  6. அன்பு முரளிமா, உண்மைதான் நீங்கள் சொல்வது. இங்கேயும் ஆர்கானிக் வெல்லம் கிடைக்கிறது.
   பேரன் ஏதோ வெல்ல மண்டி வீடியோ பார்த்துட்டு
   வெல்லம் வேண்டாம், சர்க்கரை வேண்டாம் ரூல்
   போடுகிறான்:)

   நீக்கு
  7. அன்பு ரமா, தாமத பதிலுக்கு மன்னிக்கணும். ஸ்னோ
   , குளிர் இரண்டும் அதிகமாகத் தளர வைக்கின்றன.
   பெண்ணிடம் கேட்கிறேன்.
   சென்னையில் நம் வீட்டுவாசலிலேயே
   உப்புக் கரைசல் வைப்பேன்.
   நெகடிவ் எனர்ஜியை விலக்கும். நினைவுக்குக் கொண்டு வந்ததற்கு
   மிக நன்றி மா.
   எல்லோரும் சக்தியோடு இருப்போம். நல்லதே
   நடக்கும்.

   நீக்கு
 6. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நேற்றைய மக்கள் ஊரடங்கும் திட்டம் வெற்றிகரமாக நடந்தது போதாது. இன்னும் வரும் நாட்களிலும் மக்கள் இதே ஒழுங்கைக் கடைப்பிடித்துத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு வாழ வேண்டும். இந்தக் கொரோனா வைரஸை நம் நாட்டுக்குள் இனியும் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மக்களுக்கு இன்னும் இதை பற்றிய சீரியஸ்னஸ் இல்லை என நினைக்கிறேன் அவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்வதை தவிர வேறு வழி ஏதுமில்லையம்மா

   நீக்கு
  2. கீசாக்கா ஊருக்கு திரும்பியாச்சோ.. நலம்தானே.

   நீக்கு
  3. வெள்ளியன்று திரும்பினோம். அதுக்கப்புறமா விமான சேவையும் ரத்து செய்து விட்டனர்.

   நீக்கு
 7. பொதுவாகவே எங்க வீட்டில் அல்வா கிளற கோதுமை ரவை ஊற வைக்கையில் இரண்டு நாட்கள் முன்னரே ஊற வைப்பார்கள். கொஞ்சம் புளிக்க வேண்டும் என்பார்கள். அப்படி ஊற வைக்காமல் பண்ணினால் கிளறும்போதே எலுமிச்சைச் சாறு சேர்ப்பதுண்டு. இம்மாதிரி மாவில் பண்ணிப் பார்க்கலை. ஆனால் எங்க வீட்டில் வெல்லம் சேர்த்த கோதுமை அல்வா அதிகம் பண்ணுவோம். இனி ஒரு முறை இம்மாதிரி மாவைப் பிசைந்து புளிக்க வைத்துவிட்டுப் பண்ணிப் பார்க்கணும். நன்றி பானுமதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நேற்றைய மக்கள் ஊரடங்கும் திட்டம் வெற்றிகரமாக நடந்தது போதாது. இன்னும் வரும் நாட்களிலும் மக்கள் இதே ஒழுங்கைக் கடைப்பிடித்துத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு வாழ வேண்டும்.// 100% உண்மை. மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

   நீக்கு
  2. //இன்னும் வரும் நாட்களிலும் மக்கள் இதே ஒழுங்கைக் கடைப்பிடித்துத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு வாழ வேண்டும். இந்தக் கொரோனா வைரஸை நம் நாட்டுக்குள் இனியும் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம்.// கீதா அவர்களே நீங்கள் கூறுவது 100/100 உண்மை. எங்கள் நுங்கம்பாக்கத்தில், மாலை 5 மணி முதல், மக்கள் தெருவிற்கு வந்து விட்டார்கள். அவர்கள் பாதுகாப்பாக தனித்து இருப்பது உலக பாதுகாப்பிற்கு என்பதை உணரும் வரை இது நடப்பது கஷ்டம்தான்.

   நீக்கு
 8. இனிய காலை வணக்கம் ஶ்ரீராம் கீதாமா. நலமாக இருக்க வேண்டும எல்லோரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இம்மாதிரி மாவில் பண்ணிப் பார்க்கலை.// எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்தேன். நன்றி.

   நீக்கு
 9. இனிய காலை வணக்கம். நலமே விளையட்டும்.

  மீந்து போன சப்பாத்தி மாவில் ஹல்வா... இது வரை கேள்விப்பட்டதில்லை. பொதுவாக சப்பாத்தி மாவு மீந்து போகும் அளவிற்கு பிசைவதே இல்லை. இதற்காகவே மீதம் வைத்து செய்து பார்க்க வேண்டும் எனத் தோன்றுகிறது. முடிந்தால் செய்து பார்க்கிறேன்.

  சுவையான குறிப்பு. நன்றி.

  பதிலளிநீக்கு
 10. காலை வணக்கம் அனைவருக்கும்.

  பானுமதி வெங்கடேச்வரன் மேடம் கொடுத்த அல்வா நன்றாகவே இருக்கிறது.

  சிறு வயதில், மைதா மாவு கொண்டு இதே போல் அல்வா கிண்டியிருக்கிறார்கள் வீட்டில் (கோதுமையை ஊறவைத்து அரைத்தும் அவ்வப்போது செய்வார்கள்). நன்றாக இருக்கும்.

  இப்போல்லாம் கடைகளிலேயே ஏராளமாகக் கிடைப்பதால், செய்து பார்க்கும் ஆசையே வருவதில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இப்போல்லாம் கடைகளிலேயே ஏராளமாகக் கிடைப்பதால், செய்து பார்க்கும் ஆசையே வருவதில்லை//

   இப்பொழுது எனில் எப்பொழுது நெ தமிழன்?:) நாம் கடையில கோதுமை பார்த்து 10 நாட்களுக்கு மேலாகி விட்டதே அவ்வ்வ்வ்வ்வ்:))

   நீக்கு
  2. இண்டைக்குத்தான் சாத்திரியார் உங்களுக்கு நல்ல நேரம் இன்னும் ஒரு மாசத்துக்கு என்றார். அதுக்கேத்தபடி சிலருக்கு கோதுமை கிடைக்கேல்ல போலிருக்கு. கிடைச்சிருந்தால், 'கோதுமை குழை சாதம்' என்று ஒன்று வந்திருக்குமோ?

   On a serious note, சின்ன வயசுல கைல காசு இருக்காது. அதுனால வீட்டுல செய்வதைத்தான் எதிர்பார்க்கணும். அப்புறம் கைல காசு வந்தப்பறம் எதை வேண்டுமானாலும் எப்போதும் வாங்கிக்கலாம் என்ற நிலைமை வந்தது. ஒரு சமயத்தில், ஆர்டர் செய்து கொரியரில் அனுப்பவும் சொல்லியிருக்கேன். கடந்த சில வருடங்களாக, எந்தக் கடைக்குப் போனாலும் 'இருட்டுக்கடை அல்வா', 'திருநெல்வேலி அல்வா' என்று டப்பா டப்பாவாகக் கொட்டிக் கிடக்கிறது. அல்வாவில் இருந்த ஆசையும் குறைந்துவிட்டது.

   நீக்கு
  3. நெ தமிழன்உங்களுக்கு ஒரு ரகசியம் ஜொள்ளட்டோ?:)) உங்கள் இராஜி தேன்ன் நாமிருவரும்:)) ஹா ஹா ஹா

   நீக்கு
 11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன் !

  பதிலளிநீக்கு
 12. நெல்லை சொன்னது போல் மைதாமாவு அல்வா இப்படித்தான் பிசைந்து வைத்து விட்டு பின் பால் எடுத்து செய்து இருக்கிறேன்.
  சம்பா கோதுமை வாங்கி அதை ஊறவைத்து அரைத்து பால் எடுத்து என்று செய்வோம்.
  நீங்கள் சொன்னது போல் செய்யலாம். கலர் மிக அழகாய் இருக்கிறது.
  செய்முறை படங்கள் எல்லாம் அருமை.

  பதிலளிநீக்கு
 13. காலை வணக்கம் சகோதரரே

  சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் பக்குவத்தில் செய்த அல்வா படங்களுடன் செய்முறை விளக்கங்களுடன் நன்றாக உள்ளது.

  நான் முன்பெல்லாம் அல்வா கோதுமையை கல்லுரலில், அப்புறம் கிரைண்டரில், என அரைத்து பால் எடுத்து புளிக்க வைத்து அல்வா செய்திருக்கிறேன்.

  அவசரத்துக்கு மைதா, கோதுமை மாவை கரைத்துப் செய்திருக்கிறேன். இந்த முறையும் நன்றாக உள்ளது. சப்பாத்தி மாவு பிசைந்தால் எல்லாவற்றையும் (சாப்பிடும் தேவைக்கு அதிகமானாலும்) கஸடபட்டாவது உடனே இட்டு வைத்து விடுவேன். இனி சப்பாத்தி மாவு மீந்தால் பிரச்சனையில்லை. ஆனாலும் நான் இது போல் வெல்லம் போட்டு இதுவரை செய்ததில்லை. இனி அற்காகவாவது இப்படி செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சப்பாத்திக்கு பிசைந்த மாவு மீந்தால் (ஐந்து சப்பாத்தி மாவுன்னு வச்சுக்கலாம்), அதைத் தூரப் போட்டால் நமக்கு நஷ்டம் 20 ரூபாய். முயற்சி எடுத்து அல்வா செய்து வேற வழியில்லாமல் சாப்பிட்டால் டயபடிக்ஸ் போன்ற பின்விளைவுகள். எது பெட்டர் கமலா ஹரிஹரன் மேடம்?

   நெல்லைக் காரங்க அங்க கடைகள்ல கிடைக்கும் புராதான (கடை பாரம்பர்யம் உள்ளதுன்னு அர்த்தம். அல்வா பழசுன்னு அர்த்தமில்லை ஹா ஹா) ஹல்வா வாங்கிச் சாப்பிடாமல், வீட்டில் பண்ணிக் கஷ்டப்படலாமோ?

   நீக்கு
  2. வணக்கம் நெ. தமிழர் சகோதரரே

   உங்கள் கூற்றும் உண்மைதான் சகோதரரே. ஆனால் ஏதோ ஒரு நாள்தானே இந்த மாதிரி வித்தியாசங்கள் செய்யப் போகிறோம். அதிலும் வெல்லம் சேர்த்த வித்தியாசத்தை முயற்சி செய்து பார்க்கலாம் எனச் சொன்னேன். இங்கு (எங்கள் வீட்டில்) சப்பாத்தி செய்வதே எப்போதோதான்:) அதுவும் முன்பு போல் என்னால் அடிக்கடிச் செய்ய முடிவதில்லை. (ஹரியும், சிவனும் ஒன்றுதான் என்று எப்போதும் அறிந்த உண்மை மாதிரி, கோதுமையும், அரிசியும் ஒன்றுதான் என இப்போது தெரிந்த பிறகு. ஹா ஹா ஹா.)

   /நெல்லைக் காரங்க அங்க கடைகள்ல கிடைக்கும் புராதான (கடை பாரம்பர்யம் உள்ளதுன்னு அர்த்தம். அல்வா பழசுன்னு அர்த்தமில்லை ஹா ஹா) ஹல்வா வாங்கிச் சாப்பிடாமல், வீட்டில் பண்ணிக் கஷ்டப்படலாமோ?/

   ஹா.ஹா.அல்வா ஆசைக்கெல்லாம் அடிக்கடி நெல்லை செல்ல முடியுமா? அதிலும், "நீங்க சாப்பிடாத அல்வாவா?" என்று உறவுகள் கூறும் போதும், அவசரமாக அங்கிருந்து ஊருக்கு திரும்பும் போதும் முக்கால்வாசி அந்த கடைப் பக்கமே திரும்பி பார்க்காமல் நெல்லையப்பரை தரிசித்த திருப்தியுடன் வந்து விடுவோம்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. அன்பு நெல்லை, அல்வா செய்வதில் இப்படியும் ஒரு முறை உண்டு என்று காட்டுவதுதான் நோக்கம். அல்வா செய்பவர்களே எல்லாவற்றையும் விழுங்க வேண்டும் என்பதில்லையே. வீட்டு வேலை செய்பவர்கள், அ்க்கம் பக்கத்தினரோடு பகிர்ந்து கொள்ளலாம்.
   பி.கு.: நெல்லை ஒரு இனிப்பு ச.கு. போடும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

   நீக்கு
  4. கமலா மேடம்... வீட்டில் அக்கடான்னு கவலையில் உட்கார்ந்திருப்பதால் மூடு மாற்ற இந்த கலாய்ப்பு.

   அரிசி, கோதுமை இரண்டும் அல்மோஸ்ட் ஒன்றுதான். பொதுவா நம்ம பழக்கம், சப்பாத்தினா 2-3 சாப்பிடுவோம். சாதம்னா கொஞ்சம் தம் கட்டி சாப்பிடுவோம். அதுலதான் வித்யாசம்.

   அல்வா இடுகை எனக்கும் பிடித்திருந்தது. எனக்கும் நிஜமா ரெண்டு நாட்களாக சாந்தி ஸ்வீட்ஸ் மிக்சர், அல்வா சாப்பிடணும்னு சொல்லிட்டிருக்கேன். அதுக்கேத்தபடி ஒரு இடுகை இன்று.

   எனக்கு அல்வா என்றால் பேஸ்ட் மாதிரி அதாவது இழுவை ஜாஸ்தியா இருக்கணும். இது எப்படி வந்தது என பாவெ மேடம் எழுதலை.

   நீக்கு
  5. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

   /கமலா மேடம்... வீட்டில் அக்கடான்னு கவலையில் உட்கார்ந்திருப்பதால் மூடு மாற்ற இந்த கலாய்ப்பு./

   ஹா.ஹா.ஹா. அது என்னவோ நூறு சதவிகிதம் வாஸ்தவந்தான். எப்போ பார்த்தாலும், படித்து. கேட்டு பயத்தில் மூழ்கியிருப்பதை தவிர்க்க இந்த மாதிரி கலாய்ப்புகள் உதவி செய்யும். கலாய்க்கும் அந்த நேரத்தில் கண்ணுக்குத் தெரியாத கொரோனாவே எதிரில் வந்து நின்றாலும், கண்டு கொள்ள மாட்டோம்.:)

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  6. //நெல்லைத்தமிழன்23 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 10:20
   கமலா மேடம்... வீட்டில் அக்கடான்னு கவலையில் உட்கார்ந்திருப்பதால் மூடு மாற்ற இந்த கலாய்ப்பு.//

   ஓ... இன்று ஊரடங்குச் சட்டம்
   நெ தமிழனுக்குப்
   பொழுதுபோகவில்லையாம்:)
   பொழுதைப் போக்க
   ஒருவரை அனுப்பட்டோ?:)
   பந்துபோல இருக்குமாம்..
   வெளியே,
   ஸ்ரீராமின் பழைய வீட்டில்
   படமெடுத்த நத்தையின்
   கொம்புகள்போல
   இருக்குமாம் குட்டியாக..
   விருப்பமெனில்
   ரோட்டுக்கு வாங்கோ
   வீட்டுக்குள் வேண்டாம்
   சிக்ஸர் அடிச்சு விளையாடலாம்:)
   பின்னர் 2 நிமிடம் சோப்
   போட்டுத் தோல்
   தேயுமளவுக்குக்
   கழுவிட்டால் போச்சு
   பொழுதும் போய் விடும்
   அனுப்பட்டோ வேண்டாமோ?:))

   நீக்கு
  7. ஓ இப்பத்தான் புரியுது பிஞ்சுக் கவிஞர் பெயர்க்காணம்!!!!!!!!!!!!! ஹா ஹா ஹா

   சூப்பர்!! நெல்லைக்கு செம பௌண்ட்ரி கொடுத்துருக்கீங்க!! ஹா ஹா ஹா

   நெல்லை பானுக்கா அழகா "பிஞ்சு" குழந்தைகளுக்குத் தெரியாது என்பதால் இப்படியும் செய்யலாம்னு கொடுத்திருக்காங்க. பிஞ்சுக்கவிஞர் இப்படி எல்லாம் செய்ததில்லைனு வேற சொல்லிருக்காங்க....புளித்த மாவுல சப்பாத்தி செய்யறதை விட இது சுவையா இருக்குமாக்கும்...வேஸ்ட்டும் ஆகாதே. வம்புக்கு இழுக்கறதுல பானுக்காவையும் லிஸ்ட்ல சேர்த்துட்டீங்க போல!!!!!!!!!

   ஓகே மை டைம் ஓவர்..

   கீதா

   நீக்கு
  8. என்னாது கீதா ரங்கன்.... கீ போர்டில், ரிட்டர்ன் கீ ப்ரெஸ் பண்ணிக்கிட்டே இருந்தால், நாம எழுதும் வசனம், கவிதை ஆகிவிடுமா? சொல்லவே இல்லை? அப்போ நானும் கவிப்பேரரசு கண்ணதாசனாகி ஒரு கவிதை எழுதறேன்.

   கீதா
   ரங்கன்
   நல்லா
   இன்று
   மிளகாய்
   பஜ்ஜி
   செய்தார்கள்

   நீக்கு
  9. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 நெ தமிழன்:)).. ஒரு பிஞ்சு வந்து ஒரு கன்னிக்கவிதை எழுதினால் அதைப் பாராட்டாமல் ஜி எம் பி ஐயாவைப்போலவே பேசுறாரே ஹா ஹா ஹா.. ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ:)).. பொல்லுக் குடுத்தே அடி வாங்குவது என் ராஜி:)).. அது ராசியைச் சொன்னேன்:))

   நீக்கு
 14. படமே அழகாக இருக்கிறது ஆசையை தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு
 15. எதையும் வேஸ்ட் ஆக்காமல் பயனுள்ளவையாக மாற்றும் திற்மை ஒரு சிலருக்கு மட்டும்தான் இருக்கிறது ஒரு வேளை அப்படி திற்மை இருந்தாலும் சோம்பேறித்தனத்தால் தூக்கி எறிபவர்கள் அனேகம்... ஆனால் பானுமதியம்மா சோம்பேறியாக இல்லாமல் எல்லோரும் விரும்பு ஒரு ஸ்வீட்டாக செய்து அசத்தி விட்டார்கள்... பாராட்டுக்களம்மா

  பதிலளிநீக்கு
 16. பதில்கள்
  1. //நன்றி ஐயா.//
   இது ட்றுத் க்கோ ஹா ஹா ஹா.. நன்றி பெரியவரே எனச் சொல்லோணும் ஹா ஹா ஹா:).

   நீக்கு
  2. ஆஹா பானுக்கா மதுரைய ஐயா!! சிரிச்சுட்டேன். நம்ம பிஞ்சுக் கவிஞரையும் விட பிஞ்சுதான்!!!!!!!! (பிஞ்சுக் கவிஞர் ஆ இது எப்பலருந்து!!!!)

   கீதா

   நீக்கு
  3. //நம்ம பிஞ்சுக் கவிஞரையும் விட பிஞ்சுதான்!!!!!!!! (//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   நீக்கு
  4. அதிரா உங்க இலங்கையில் எப்படி என்று தெரியவில்லை ஆனால் தென் தமிழகத்தில் சிறுவர்களை கூட மரியாதையாக அய்யா இங்க வாங்க பொங்க என்றுதான் அழைப்பார்கள்... அதுமாதிரிதான் என்றும் பதினாறு வயதுடைய என்னை அய்யா என்று அழைத்து இருக்கிறார்கள்

   நீக்கு
 17. மிக அருமையான குறிப்பு! சீனியில் செய்து தான் பழக்கம். வெல்லத்தில் செய்வது புதுசு.

  பதிலளிநீக்கு
 18. இப்படியெல்லாம் கிண்டி, அல்வா செய்யும் முறை இன்றைக்குத் தான் தெரியும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 19. ஆஹா மிக அழகாக வந்திருக்கிறது “திங்க” அல்வா.. எங்கள் நாட்டிலும் கோதுமைப்பால் எடுத்துத்தான் அல்வா செய்வினம், ஆனா அதுக்கு சீனி- [சுகர்]தான் சேர்ப்பார்கள் என நினைக்கிறேன், அது பார்க்க கண்ணாடிபோல பளபளக்கும்.. அதை நாங்கள் “மஸ்கட்” என்போம்.. அம்மாவிடம் கேட்டால் செய்முறை தெரியவரும், ஆனா எமக்கு தொதல்தான் விருப்பம், மஸ்கட்/அல்வா பெரிதாக பிடிக்காது என்பதால், முயற்சியில் இறங்காமல் இருக்கிறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா தூத்துக்குடி யில் மஸ்கோத்து ஃபேமஸ் தேங்காய்ப்பாலில் செய்வாங்க. திருனெல்வேலி, நாகர்கோவிலிலும் கிடைக்கும். அரிசிமாவு தேங்காய்ப்பால் சேர்த்து கேரளத்தில் செய்வதுண்டு. அதுவும் தனி டேஸ்ட்...

   கீதா

   நீக்கு
  2. //ஆஹா மிக அழகாக வந்திருக்கிறது “திங்க” அல்வா.. // இதை அல்லவோ முதலில் சொல்லியிருக்க வேண்டும்? எனக்கு புகழ்ச்சி பிடிக்காது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கிறது. நன்றி.  

   நீக்கு
 20. //களைந்து விடலாம் (எறிந்து விடலாம்) //
  ஆஆஆஆஆஆ களைதல் க்கு இப்படியும் ஒரு பொருள் இருக்கோ... களைவது என்றால் அரிசி களைவது .. கல் எடுத்து துப்பரவாக்குவது தண்ணி விட்டு, அப்படியானவற்றைத்தான் சொல்வோம்.
  இன்னொன்று களை நடுதல்/பிடுங்குதல்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா எங்க ஊர்ல நீங்க சொல்லிருக்காப்லதான் அரிசி களைதல் எட்ஸற்றா...

   ஆனால் எறிந்துவிடுதல் என்றும் அர்த்தம் உண்டு. மலையாளத்திலும் கள என்று சொல்வதுண்டு. எறிதலுக்கு.

   கீதா

   நீக்கு
  2. //ஆஆஆஆஆஆ களைதல் க்கு இப்படியும் ஒரு பொருள் இருக்கோ... // இது பாலக்காட்டு ஐயர் பாஷையாக்கம் கிட்டேளா?

   நீக்கு
  3. களைதல் - நீக்குதல். உடையைக் களைந்தாள். பக்கத்திலிருந்து ஒரு கண் மட்டும் அவளை நோக்கியது. அவள் அதை அறியவில்லை (சும்மா சிறுகதை ட்ரை பண்ணினேன்). பக்தி இலக்கியத்தில், 'களைவாய் துன்பம் களையாது ஒழிவாய்' - துன்பத்தை நீக்கினாலும் சரி, துன்பத்தை நீக்காவிட்டாலும் சரி (நீதான் என் புகலிடம் என்று பெருமாளைப் பார்த்துப் பாடுகிறார்).

   நீக்கு
 21. பானு, அருமையான அல்வா. முடிவில் எங்கள் யாவருக்கும் அல்வா கொடுத்து விட்டீர்கள். மீந்ததையும் வீணாக்காமல் உணவாக்குவது நான் பார்த்த் வரையில் தமிழன் பண்பு.(correct me if I am wrong.) அதற்கு நீங்கள் ஒரு எடுத்துகாட்டு.

  பதிலளிநீக்கு
 22. //சப்பாத்தி மாவில் செய்த அல்வா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி //

  நான் இதுவரை கோதுமையில் சப்பாத்தி செய்ததில்லை, எப்பவும் ஆட்டாமாவில்தான்/சப்பாத்தி மாவில்தான் செய்திருக்கிறேன்..

  பதிலளிநீக்கு
 23. பயனுள்ள தகவல்
  நன்றி

  கொரோனா தொற்றாது - மக்கள்
  தம்மைப் பாதுகாக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 24. ஹை பானுக்கா சூப்பர்!! பார்சல் ப்ளீஸ்! எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஆனால் கண்ணால் பார்த்துவிட்டு கொஞ்சமே கொஞ்சம் (அதுவும் இப்ப சுத்தமா ஸ்வீட்டே வீட்டில் செய்வதில்லை எல்லாம் இந்த இந்த...ஹூம் பெயரைச் சொல்ல மாட்டேன் அது செய்யும் ஆட்டத்தினால்...ஹா ஹா ஹா) கடுகளவு டேஸ்ட் செய்யிறேன். அட்டகாசமா இருக்கு பானுக்கா...நாக்குல நீர்!!!

  பானுக்கா ஒரு சில மாசம் முன் மீந்த ஒரு சிறு உருண்டை சப்பாத்தி மாவில் இப்படித்தான் செய்தேன்.(கீதாக்கா வார்த்தையை ராயல்டி கொடுக்காமல் ஹா ஹா ஹா சொல்லணும்னா திப்பிசம் செய்தேன்..) நானும் ப்ரௌன் சுகர் போட்டு செய்தேன். ஒரு சின்ன டிப்ஸ் கொடுக்கவா? வெள்ளைச் சர்க்கரையில் செய்தாலும், ப்ரௌன் சுகரில் செய்தாலும் அதை வெறும் வாணலியில் போட்டு கேரமலைஸ் செய்து அப்புறம் தண்ணீர் விட்டுக் கரைத்தோ அல்லது அப்படியேவோ சேர்த்தால் கோதுமை ஊறவைத்து அரைத்து என்று ப்ரொசீஜரலா செய்வோமே அந்த அல்வாவுக்குமெ கூட இப்படிச் செய்தால் அந்த அல்வா டேஸ்ட் ஒரிஜினல் டேஸ்ட் கிடைக்கிறது. நானும் நிறமி எப்படிச் செய்தாலும் சேர்ப்பதில்லை. வெள்ளைச் சர்க்கரையை கேரமலைஸ் செய்து சேர்க்கும் போது ஒரிஜினல் அல்வா கலர் கிடைத்துவிடும். ஸ்வீட்டும் திகட்டாத அளவிற்குச் சேர்த்தால் போதும். இந்த கேரமல் செய்யும் போது. நிறமி தேவையே இல்லை. (ஒரிஜினல் திருனெல்வேலி அல்வாவுக்கு நிறமி சேர்ப்பதில்லை.)

  வந்த விருந்தினர் திடீர்னு கேட்டாங்கனு சென்னைல இருந்தப்ப கோதுமை மாவிலும் செய்தேன் மாவை நன்றாக நீர்க்கக் கரைத்து அப்படியே ஊற்றி ப்ரௌன் சுகரை கேரமலைஸ் செய்து....செம டேஸ்ட்..கலர்...அதை ஃபோட்டோ எடுக்காமல் விட்டுவிட்டேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடனடியா மாவு நீர்க்கக் கரைத்து செய்யறதுனா எலுமிச்சை சேர்க்கனூம் சொல்ல விட்டுப் போச்சு...

   கீதா

   நீக்கு
 25. இதைச் செய்துபார்க்க சப்பாத்திமாவை அதிகம் செய்து மீதமாக்க வேண்டுமா

  பதிலளிநீக்கு
 26. அடடா....மிகுந்த மாவில் அல்வா சூப்பர் ஐடியா இக்கட்டான இத்தருணத்தில் வீண்போகாமல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 27. ஒருவேளை இதுவும் மீந்துபோனால் அதில் "ரசகுல்லா" செய்வது எப்படி என்று ஒரு பதிவு போட்டீங்கன்னா .... இப்படி மீந்து போனதையே சாப்பிட்டுக்கிட்டு "லாக்டவுன்" காலத்தை இப்படியே ஓட்டிடுவோம் ... கொஞ்சம் கருணை காட்டுங்களேன் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!