ஞாயிறு, 5 ஜூலை, 2020

காபி, டீ குடை


ஒரு மழை பெய்ததும் செடிகள் மரங்கள் எல்லாம் துடைத்துவிட்ட மாதிரி பளபளப்பு .






மூங்கிலின் வகைகளில் ஒன்றோ?

ஆர்க்கிட் வளர்க்கத் தயார்



காப்பி பழுக்கத்  தயார்

செம்பழம்


அங்கே தூரத்தில்.....



தேயிலை வளர்ப்போர் தான் கொழுந்து இலையாகப் பறிப்பார்களாம்


மழை மிரட்டுகிறது  குடை தேடி ஓடுங்கள் என்று விரட்டவும்.....


அந்த மரத்தைப் பார்த்தே நடக்கிறோம் என்ன விசேஷம் ?





நிறைய உபயோகித்திருக்கிறோம் ....கண் எரிச்சல் தாளாமல் பாடியைக் கடிந்து கொண்டுமிருக்கிறோம்

சிகைக்காய் மரம்


செடி நாற்றுகள்


ஆர்க்கிட்

ஓட்டத்தில்

பட்ட மரம்


குடை தயாராகிறது

போட்டோ எடுக்காமல் நகர மனமில்லை



=======================

மின்நிலா 007 நாளை - திங்கட்கிழமையன்று வெளியாகும். 
சுட்டி நாளைய பதிவின் இறுதியில். 
மின்நிலா வெளியீடு இனி திங்கட்கிழமைகளில் ... 
புத்தகத்தின் பொருளடக்கப் பகுதியில் தலைப்பின் மீது சுட்டினால், அந்தப் பக்கத்திற்கு போகும் வகையில் அமைத்துள்ளோம். 
நாளை வெளியாகும். 
===============

============

113 கருத்துகள்:

  1. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றல்லதை அன்றன்றே இல்லாவிடினும் பிறகு காலக்கிரமத்தில் மறந்து விடும் நல்ல பழக்கம் வைத்திருக்கிறேன் என்று நம்புகிறேன்!

      வாழ்க நலம்.

      நீக்கு
    2. அதுதானே...
      உடனடியாக வெறுப்பதும் மறப்பதும் ஆகக் கூடிய காரியமா!?...

      நீக்கு
    3. உடனடியக வெறுப்பது - இது ஆகும் காரியம்தான். சிலரைப் பார்த்தாலே பிடிப்பதில்லை. இதற்குக் காரணமாக முன் ஜென்மத் தொடர்பு என்று சொல்றாங்க.

      நன்றல்லதை மறப்பது - நிஜமாகவே கடினம்தான். பாம்பிடம் ஒரு தடவை கடி வாங்கிவிட்டால் ஜாக்கிரதையாக இருப்பதைப்போல. துஷ்டனைக் கண்டாக் தூர விலகுவதைப்போல

      நீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்..

    பதிலளிநீக்கு
  3. கண்ணுக்கு இனிய படங்கள்..
    அதிலும் மழைமேகம் கண்டு குளுகுளு என்றிருக்கிற்து...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா...    நன்றி..  சென்னையும் இப்போது குளுகுளு என்றே இருக்கிறது!

      நீக்கு
  4. அறுபதாவது அகவையில் அடியெடுத்து வைக்கும் பானு அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா!..

      நாயகன் நல்லருளால்
      நலங் கொண்டு வாழ்க!...

      நீக்கு
    2. இந்த நாள் இனிய நாளாக விளங்க அனைவருக்கும் வாழ்த்துகள்.

      அன்பு பானுமாக்குப் பிறந்த நாளா இன்று.
      அதுவும் ஐந்தாம் நம்பர்.
      என்றென்றும் ஆரோக்கியம்,அமைதி ,குடும்ப இணக்கம் எல்லாம்
      கூடி இருக்க வாழ்த்துகள்.
      இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அன்பு பானு.

      நீக்கு
    3. அனைத்துப் படங்களும் பசுமைக்குக் கட்டியம்
      சொல்கின்றன. சிகைக்காய் மரம் நான் பார்த்ததே இல்லை.
      அதுவும் அழகாய்த்தான் இருக்கிறது.

      இந்த மலைகளில் வெளிச்சம் ,வெய்யில் வருமா
      என்ற சந்தேகம் வருமாறு மழைமேகம் சூழவே
      படங்கள் அணி வகிக்கின்றன.
      நல்ல தலைப்புகள் புகைப்படங்களை இன்னும்
      நன்றாகப்
      பார்க்க வைக்கின்றன.

      நீக்கு
    4. நன்றி துரை செல்வராஜு சார். வணக்கம்.

      நீக்கு
    5. நன்றி வல்லி அக்கா. வணக்கம்.

      நீக்கு
    6. வாங்க வல்லிம்மா...    இனிய வணக்கம்....  நாம் நேற்று பேசியலிஸ்ட்டில் ஜூலையில் இன்னும் இருவர்!

      நீக்கு
    7. வாழ்த்துகள் பா.வெ. அவர்களுக்கு

      நீக்கு
    8. இருவரில் ஒருத்தர் யாருனு தெரியும்! இன்னொருத்தர் யார்? )))))

      நீக்கு
    9. ஏகாந்தன் ஸாரும், பானு அக்காவும்தான்!

      நீக்கு
    10. வாழ்த்துகளுக்கு நன்றி நெல்லைத் தமிழன் 

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், வாழ்த்துகள், நல்வரவு, பிரார்த்தனைகள். பிரார்த்தனைகள், பிரார்த்தனைகள். இந்த மாதத்தோடு ஊரடங்கு முடியும்படிப் பிரார்த்திப்போம். (ரொம்பத்தான் பேராசைனு யார் சொல்வது?) அதிசயம் நடக்கும்/நடக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைத்த்தானே நாம் எல்லோரும் விரும்புகிறோம்?   வாங்கி கெத்தா அக்கா?  வணக்கம்.

      நீக்கு
  6. பானுமதிக்கு 60 முடிகிறது இல்லையோ? எப்படியோ 60+குழுவுக்கு வருவதற்கு வாழ்த்துகள்/ஆசிகள்/பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  7. சிகைக்காய் (சீயக்காய்னு எழுதினாத்தான் நிறைவா இருக்கு!) மரம் நாங்களும் பார்த்தோம். ஆனால் இங்கே இல்லை. அழகான படங்கள். மழை வருவதும் போவதுமாக இருப்பது எனக்கு ஊட்டியை நினைவூட்டும். அங்கே தான் மேகங்கள் கூடிக் கொண்டு மழையைப் பொழிவதும் பின்னர் யாரோ வந்து அதட்டினாற்போல் கலைவதுமாக இருக்கும். ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியே இப்படித்தான். அதிலும் பெங்களூரிலிருந்து கோவா செல்லும் வழியும், புனேயிலிருந்து மும்பை செல்லும் வழியும் இந்தப் பருவ காலத்தில் அழகு கொள்ளை கொள்ளும். மேகங்களைக் கையால் பிடிக்கலாம் போல் நம் தலைக்கு மேலே வந்து நம்மை ஊடுருவிக்கொண்டு செல்லும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவாசிரியர் சீயக்காய் என்றுதான் எழுதியிருந்தார். நான்தான் அதை சிகைக்காய் என்று மாற்றி, தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டேன். அதுதான் விடயம்!

      நீக்கு
    2. //நான்தான் அதை சிகைக்காய் என்று மாற்றி, தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டேன். //

      ஹா...  ஹா...  ஹா....

      நீக்கு
    3. அது சரி..இங்கு வருபவர்களில், புலி மார்க் சீயக்காய் தூள் உபயோகிக்காதவர்கள் யார் யார்? ஹா ஹா.

      நீக்கு
    4. நானெல்லாம் பல்லாண்டுகள், சுமார் பதினைந்து வருடங்கள் முன்னர் வரை சீயக்காய்த் தூள் கடையில் வாங்கிப் பயன்படுத்தியதே இல்லை. முழுச் சீயக்காய்கள் வாங்கி அதற்கு பச்சைப்பயறு, செம்பருத்திப்பூ, வெந்தயம், பூலாங்கிழங்கு, நெல்லிமுள்ளி, பூந்திக்கொட்டைனு போட்டுக் காய வைச்சு அரைச்சுத் தேய்த்து வளர்த்த கூந்தல்! நான்கு வருஷம் முன்னர் பதஞ்சலியின் கேஷ்கந்தி எண்ணெய் தேய்த்துக்கொள்ள ஆரம்பிச்சதும் வழுக்கை விழ ஆரம்பித்துவிட்டது. சீயக்காயை அதற்கு முன்னாலேயே நிறுத்தும்படி ஆகிவிட்டது. ஒரு தரம் மிஷினில் சீயக்காய் அரைக்கப் போனப்போ மின்சாரம் இல்லைனு வைச்சுட்டு வந்தேன். என்னோடதை யாரோ தூக்கிக்கொண்டு போயிட்டாங்க! அதிலே மனசு வெறுத்துச் சீயக்காய் வாங்குவதையே விட்டுவிட்டேன். :( கொஞ்ச நாட்கள் மீரா சீயக்காய் பயன்படுத்தி அது பிடிக்கலை! ஆனாலும் வேறு வழியில்லாமல் அதான். வடமாநிலத்தில் ஆயுர்வேதப் பொடி ஒண்ணு கிடைக்கும். பாண்ட்ஸ் பவுடர் டப்பா மாதிரி உயரமான டப்பாவில் வரும். இப்போவெல்லாம் லிஜ்ஜத் அப்பளம் காணாமல் போனாப்போல் அதுவும் காணாமல் போய்விட்டது!

      நீக்கு
    5. //முழுச் சீயக்காய்கள் வாங்கி அதற்கு பச்சைப்பயறு, செம்பருத்திப்பூ, வெந்தயம், பூலாங்கிழங்கு, நெல்லிமுள்ளி, பூந்திக்கொட்டைனு போட்டுக் காய வைச்சு அரைச்சுத் தேய்த்து வளர்த்த கூந்தல்!// அதே அதே கீதா அக்கா. வெந்தயம், பூந்திக்கொட்டை, செம்பருத்தி பூ கண்டிப்பாக உண்டு. பூந்திக் கொட்டை சில சமயங்களில் போடுவதுண்டு. பூலாங்கிழங்கு சேர்த்ததில்லை. 

      நீக்கு
  8. மின் நிலாவை எதிர்பார்த்து வந்தேன். நாளைக்குனு சொல்லிட்டாரே! போகட்டும். பட்டமரம் அடியில் பார்த்தால் ஏதோ குகை போல் தெரிகிறது. சீயக்காய் மரத்துக்கான விளக்க உரை மாறி வந்திருக்கோ?

    பதிலளிநீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா, சமீபத்துக் காவிரிப் படங்கள் பார்க்க வாங்க நேரம் இருக்கும்போது. நன்றி.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      கண்டிப்பாக வருகிறேன். நேற்றே பதிவை பார்த்தேன். உடனே ஆழ்ந்து படித்து எதற்கும் (எ. பிக்கும்) கருத்துரைக்க இயலவில்லை. காலையிலிருந்தே ஏதேதோ வேலைகள். இன்று இங்கும் அதை தெரிவித்திருக்கிறேன். இதோ அடுத்து உங்கள் பதிவை மறுபடி படிக்க வருகிறேன்.என்னை அன்புடன் அழைத்தமைக்கு நன்றி சகோதரி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வணக்கம் கமலா அக்கா...   வாங்க...

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    படங்கள் அனைத்தும் தெளிவுடன் மிக அழகு. பச்சைப் பசேல் என மரம். செடி, கொடிகளை பார்க்கும் போதுதான் பனதுக்கு எவ்வளவு மகிழ்ச்சி வருகிறது...! அத்தனையும் கண்ணுக்கு விருந்து.

    மழையாகிய போர்வை கொண்டு தன் மேனி முழுதும் போர்த்திக் கொண்டு மலைகள் படுத்துறங்கும் படம் நன்றாக உள்ளது.

    சீயக்காய் மரம் படங்கள் இப்போதுதான் பார்க்கிறேன். முன்பு சீயக்காய் வாங்கி அரைத்துப் பயன்படுத்திய காலங்கள் நினைவுக்கு வந்தன.

    பட்ட மரம்... அது துளிர்த்து வளரும் காலத்தில்,(இன்ப, துன்பம்) அனைத்தையும் பட்ட மரம் என்பதினால், அது இறுதியாக "என்னால் இனி எதையும் பொறுக்க முடியாது" என கீழே சாய்ந்ததும் பட்ட மரம் எனச் சொல்கிறோமோ?

    நேற்று சில வேலைச் சுமைகளில் என்னால் வர இயலவில்லை. நேற்றைய பகிர்வும் அருமை. அருமையான கட்டுரையை தந்த சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களுக்கு நன்றிகள். இன்றைய அத்தனைப் படங்களையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மழையாகிய போர்வை கொண்டு தன் மேனி முழுதும் //

      //பட்ட மரம்... அது துளிர்த்து வளரும் காலத்தில்,(இன்ப, துன்பம்) அனைத்தையும் பட்ட மரம் என்பதினால், //

      ஆஹா...   ரசிச்சு எழுதறீங்க கமலா அக்கா.



      நீக்கு
  11. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  12. திருமதி. பானுமதி வெங்கடேஸ்வரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    தெரியாத்தனமாக அடியேனும் இந்தத் தேதியில்தான் வந்து சேர்ந்தேன், இந்த மாபெரும் உலகுக்குள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறந்த நாள் வாழ்த்துகள் ஏகாந்தன். எத்தனாவது பிறந்த நாள்? :)))))

      நீக்கு
    2. அது டாப் ஸீக்ரெட் !
      ஆண்களின் வயதையும், பெண்களின் உத்தியோகம்பற்றியும் கேட்கலாகாது - புதுமொழி!

      நீக்கு
    3. ஆஹா....   இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஏகாந்தன் ஸார்...

      நீக்கு
    4. அன்பின் ஏகாந்தன் அவர்களுக்கு நல்வரவு...

      வெகு நாட்களுக்குப் பின் வந்திருக்கின்றீர்கள்... வாழ்க நலம்..

      நீக்கு
    5. பிறந்த நாள் வாழ்த்துகள் ஏகாந்தன் சார்.... ரொம்ப நாளா இங்க காணவே இல்லையே உங்களை? புது இடுகையும் எழுதலை.

      நீக்கு
    6. பிறந்த நாள் வாழ்த்துகள் ஏகாந்தன் சார்! வாழ்க பல்லாண்டுகள்!

      நீக்கு
    7. ஏகாந்தன் அண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! நீடுழி, பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துகள்!

      கீதா

      நீக்கு
    8. ஏகாந்தன் அண்ணா ஏன் உங்கள் வலையில் ரொம்ப நாளா காணும்? இங்கும் காணவில்லையே. நேற்று கேட்க நினைத்து விட்டுப் போயிடுச்சு.

      வாசிப்பு நடக்கிறதோ?

      நலம்தானே அண்ணா?

      கீதா

      நீக்கு
    9. //ஆண்களின் வயதையும், பெண்களின் உத்தியோகம்பற்றியும் கேட்கலாகாது - புதுமொழி!// ஹாஹாஹாஹா பணி ஓய்வு பெற்று விட்டதால் எப்படியும் 60+ தான் என வைச்சுக்கறேனே! :))))

      நீக்கு
    10. வணக்கம்

      இன்று பிறந்த நாள் காணும் திரு. ஏகாந்தன் சகோதரருக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துகளும். எல்லா நலன்களும் பெற்று இனி வரும் அனைத்து நாட்களும் சிறப்பாக அமைய,எல்லாம் வல்ல இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    11. பிறந்த நா வாழ்த்துகள் ஏகாந்தன் சார். நானும், நீங்களும் மட்டுமல்ல, ராம் விலாஸ் பஸ்வானும் கூட இன்றுதான் பிறந்திருக்கிறாராம். 

      நீக்கு
    12. ஏகாந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்.

      நீக்கு
    13. @கீதா சாம்பசிவம், @ஸ்ரீராம், @துரை செல்வராஜு, @நெல்லைத்தமிழன், @கௌதமன், @ கீதா, @ கமலா ஹரிஹரன், @பானுமதி வெங்கடேஸ்வரன், @கோமதி அரசு:

      வாழ்த்து சொன்ன மகானுபாவர்களுக்கு மனமார்ந்த நன்றி!

      நீக்கு
    14. @ நெல்லைத்தமிழன், @ கீதா :

      நிறைய வாசிப்பிலும், கொஞ்சம் எழுத்திலும் மூழ்கியிருக்க நேரிட்டது. நண்பர்கள் வலைப்பக்கமும்,என் பக்கமும்கூட திரும்பமுடியாத, நேரமில்லாத நேரம்! Complex reading demanded complete attention..

      நீக்கு
  13. இன்று நரேந்திர மோடியின் தாயாருக்கும் பிறந்த நாளாம்.நூறு வயதாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பக்கம் ஏதாவதொரு அரசியல் தலை வீட்டில் ஆத்தாவுக்கோ தாத்தாவுக்கோ வயது நூறு என்றால் என்ன களேபரம் ஆகி இருக்கும்!?..

      நல்லவேளை அந்த மட்டில் தப்பித்தோம்!..

      நீக்கு
    2. ஹையோ! இங்கேன்னா விழா எடுத்து மாநிலமே அமர்க்களப்பட்டிருக்கும். இப்படிச் சும்மா இருக்காங்களே!

      நீக்கு
  14. வந்தவர்கள் வாழ்க, மற்றவர்கள் வருக! பிறந்தநாள் காணும் சகோதரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கௌதமன் சார். வணக்கம். 

      நீக்கு
    2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பானுமதி வெங்கடேஷ்வரன்! வாழ்க வளமுடன்!

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    நம் சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களுக்கு என் இனிய, மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். என்றும் அவர்கள் ஆரோக்கியமாக வாழ இந்த நன்னாளில் ஆண்டவனை பிரார்த்தித்து கொள்கிறேன்.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. படங்கள் அருமை ஜி

    பானுமதி மேடத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் எமதும்கூடி...

    பதிலளிநீக்கு
  17. பச்சை நிறமே பச்சை நிறமே...

    படங்கள் அருமை...

    பானுமதி அம்மா அவர்களுக்கும், ஏகாந்தன் ஐயா அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  18. பானுக்கா இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! நீடுழி பல்லாண்டு வாழ்ந்திட வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. படங்கள் எல்லாம் இயற்கை சுழ் படங்கள்! பச் பச்சென்று மனதை நிறைக்கின்றது!

    அதுவும் காபி பழங்கள் எல்லாம் செம!

    இயற்கை ஆர்க்கிடெக்ட் உருவாக்கிய ஆர்க்கிட்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. சிகைக் காய்!!!// கேட்டு ரொம்ப நாளாச்சு. சீயக்காய்னு பேச்சு வழக்கில் சொல்லியே கேட்டு கேட்டு....இதுதான் சரியான சொல் என்று பள்ளியில் படித்த போது அறிந்தது! சிகைக்குப் பயன்படுத்துவதுதானே. ஆங்கிலத்தில் எழுதும் போது shikakai நு தான் சொல்றாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. பட்ட மரம் "பட்ட" மரம் அப்போ ரொம்ப வயதான அனுபவ மரம் பழுத்த மரம்!!!!! பட்ட மரத்தில் அழகான பொந்து பாருங்க. ரொம்ப அழகா இருக்கு! இது அடி பாகம் என்று தோன்றுகிறது. விரைவில் விழுந்துவிடும் போல இருக்கு.

    எல்லா படங்களும் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  22. அட! மின் நிலா திங்கள் அன்று உதிப்பது பொருத்தம்.

    அதுவும் திங்கவோடு சரிதானே பௌர்ணமி அன்று மொட்டைமாடியில் சாப்பாடு! நிலா சாப்பாடு. வயிற்றிற்கும், மூளைக்கும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசனையான கருத்துரைக்கு நன்றி!

      நீக்கு
    2. ஹாஸ்டலில் இருக்கும்போது, வருடத்தில் ஒரு நாள், பெளர்ணமி நிலவு மொட்டைமாடியில் உணவு என்று போடுவார்கள். அனேகமா கலந்த சாதம்தான் இருக்கும். (+2 ஹாஸ்டலில்). ஆனா பாருங்க, பெளர்ணமி இரவு உணவு என்று வைத்த அன்று நான், மறுநாள் அதிகாலையில் ஆவணி அவிட்டத்துக்காகச் செல்லவேண்டியதாகப்போயிற்று.

      நீங்கள் பெளர்ணமி அன்று மொட்டைமாடியில் சாப்பிடுகிறீர்களா?

      நீக்கு
    3. நெல்லை சென்னையில் இருந்த வரை நம் வீட்டில் எல்லோரும் சேரும் போது அப்படிச் செய்வதுண்டு. அல்லது திடீரென்று ஒரு கெட்டுகெதர் அரெஞ்ச் செய்வதுண்டு. சில சமயம் மூழ் நிலவின் ஒளி டிம்மாக இருந்தால் நம் எலக்ட்ரிக் பல்பு ஒன்றும் போட வேண்டி வந்துவிடும். ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  23. படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன. அதற்கானத் தலைப்புகளும் அருமை.

    மின் நிலா திங்கள் தோறும் இனி இனிதே உதிக்கட்டும். சென்ற மின் நிலாவில் புதிய தொடர்கள் தொடங்கியது சிறப்பாக இருந்தது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  24. சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கும்

    நண்பர் ஏகாந்தன் அவர்களுக்கும்

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். என்றேன்றும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்திட வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் பிரார்த்தனைகளுடன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  25. படங்கள் அனைத்தும் அழகு.

    பானும்மா அவர்களுக்கும் திரு ஏகாந்தன் அவர்களுக்கும் மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    மின்னூல் - வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  26. மின் நிலா - வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

    பதிலளிநீக்கு
  27. நன்றல்லதை மறக்க முடியாது , மிகவும் சிரமம் என்பதாலேயே அதனை மறக்கும்படி அறிவுரை தேவைப்படுகிறது. சாதாரணமாக மறக்கக்கூடியதற்கு இதுபோன்று வலியுறுத்தல்கள் தேவையில்லை.

    அதேபோலத்தான் செய்நன்றி கொல்லாமல் இருப்பதும் சிரமமே.

    பதிலளிநீக்கு
  28. திரு. சார் ஏகாந்தன் அவர்களுக்கு எமது பிறந்த நாள் நல்வாழ்த்துகளும் கூடி....

    பதிலளிநீக்கு
  29. ஃ போட்டோக்கள் சூப்பர். நான் கூட சீயக்காய் ஒரு ஆறு வருடம் முன்பு வரை அரைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் மிஷினில் அரைக்கப் போனால் வியாழக்கிழமை மட்டும் தான் அரைப்பார்கள். அதுவும் இரவு ௭ மணிக்குப் பிறகே . எனவே அடுத்த நாள் தான் பொய் வாங்கணும் ,இரண்டு முறை செல்ல சோம்பேறித்தனம் . கடலைமாவுதான் இப்போல்லாம் உபயோகிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  30. திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கும் திரு ஏகாந்தன் அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  31. பச்சை பசேல் என்று படங்கள் மிக அழகு.

    //போட்டோ எடுக்காமல் நகர மனமில்லை//

    எப்படி போட்டோ எடுக்காமல் வர மனம் வரும் அழகான காட்சி அல்லவா?
    அந்த காப்பி பழம் படம் அருமை.

    பதிலளிநீக்கு
  32. அனைவருக்கும் மாலை வணக்கங்கள். பானுவிற்கும் ஏகாந்தன் அவர்களுக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    "குடகு மலை உச்சியிலே புரப்படும் தென்றல்" என்ற பாட்டை புகைப்படம் எடுத்தார்போல் இருக்கிறது இன்றைய புகைப்படங்கள். மிக அழகான புகைப்படங்கள். சென்னையும் இப்போது சிறிது குளிர்ந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ரமா ஸ்ரீனிவாசன்: வாழ்த்துக்கு நன்றி

      நீக்கு
    2. நன்றி ரமா.
      அந்தப் பாடல்,"குடகு மலை உச்சியிலே..." அல்ல, "பொதிகை மலை உச்சியிலே.."

      நீக்கு
  33. மின் நிலா வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறது (அழகான மாற்றங்கள் )
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  34. கண்ணுக்கு இதமான படங்கள்
    பச்சை என்றொரு நிறம்
    இச்சை கொள்வதும் வரம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு ஏகாந்தன் ஜி இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். என்றும் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.
      அன்பு பானு மா மீண்டும் வாழ்த்துகள்.அறுபதுக்கு அறுபது நீடுழி வாழணும்.

      நீக்கு
    2. மிக்க நன்றி வல்லி அக்கா.

      நீக்கு
    3. அன்பு துளசிதரன்,
      கேட்கவே மனம் நடுங்குகிறது.
      எனக்குத் தெரிந்து இரு மதக் கலப்பில் திருமணம் நடந்த போது
      பெண்ணின் பெற்றோர்கள் தள்ளி வைத்துவிட்டார்கள்.
      பையனின் பெற்றோர்கள்
      அரவணைத்துக் கொண்டார்கள். இப்பவும் அந்தப் பெண்ணின் முகத்தில் தாயில்லா ஏக்கம் தெரியும்.
      எல்லோரும் ஓருயிர்க்காகத்தானே வாழ்கிறார்கள்.
      இவர்களுக்குப் புரியப் போவதில்லை.
      இறைவன் தான் வழிகாட்ட வேண்டும்.

      நீக்கு
    4. @ வல்லிசிம்ஹன்: வாழ்த்துக்கு நன்றி.

      நீக்கு
  35. மழையின் அரவணைப்பில் படங்கள் அழகு

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!