செவ்வாய், 7 ஜூலை, 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை :   அம்மா The Great   - துரை செல்வராஜூ 

அம்மா The Great

துரை செல்வராஜூ 

==============




சூரியன் மெல்ல மெல்ல உச்சி வானுக்கு நகர்ந்து கொண்டிருந்த நேரம்...


வெய்யிற்கதிர்கள் இன்னும் உக்ரமாகவில்லை...

மாசி மாதக் குளிர் முடிந்து வெளியிலும் வீடுகளுக்குள்ளும் வெதுவெதுப்பு பரவிக் கொண்டிருக்க -

காவேரி நகரில் மூன்றாவது குறுக்குத் தெருவின் முடுக்கு வீடு
பெரிதாக நிழல்பரப்பிக் கொண்டிருந்த வேப்ப மரத்தின் கீழ்
சிலுசிலு - என்றிருந்தது...

கிரஹப் பிரவேசம் ஆகி இன்னும் வருடம் நிறையவில்லை...

மூத்தவள் வெண்ணிலா.. ரொம்பவும் கூச்ச சுபாவம்...
ஆசிரியை பயிற்சி முடித்து விட்டு, வேலையோ கல்யாணமோ
எதுவானாலும் சரி!... காத்திருக்கிறாள்...

தற்போதைக்கு அடுத்த தெருவில் உள்ள சிறார் பள்ளியில் வேலை..
அவளது சேமிப்புக்கு ஆகின்றது..

அவளுக்கு அடுத்தவள் மலர்விழி... வெடித்தனமான பேச்சு... அக்கா பேசாததையும் சேர்த்து வைத்துப் பேசுவாள்..

மேல்நிலை இரண்டாம் வருடம்... டாக்டராக வேண்டும் என்று கனவு...

இரண்டு பேருக்கும் சீர் வரிசை கொடுக்கவென்று சிவப்ரசாத்...
மலர்விழிக்கு இரண்டு வயது இளையவன்...

கிரிக்கெட் மட்டையுடன் பிறக்கவில்லையே தவிர பள்ளி நேரம் போக மட்டையுடனேயே சுற்றிக் கொண்டிருப்பவன்...

இப்போது எந்தத் திடலில் ஆடிக் கொண்டிருக்கின்றானோ...

குடும்பத் தலைவனின் தற்போதைய இருப்பிடம் வளைகுடா நாடுகளில் ஒன்றான மஸ்கட்...

ஆகையால் கதைக் களத்துக்குள் தந்தையும் மகனும் வருவதற்கு வாய்ப்பே இல்லை...

சொந்த வீடு.. மகள்களின் கல்யாணத்துக்கு வேண்டிய நகைகள் ரகசியமானதொரு இடத்தில்... கூடுதல் செலவுக்கு என்று வங்கிக் கணக்கில்...

மற்றபடிக்கு பண்ட பாத்திரம் பீரோ கட்டில் வகையறாக்களுக்கு அண்ணாச்சி இருக்கவே இருக்கிறார்...

மற்றபடிக்கு எவ்வித பிரச்னயும் இல்லை...

இருப்பினும் நல்ல இடத்திலிருந்து மாப்பிள்ளை வரவேண்டுமே!.. என்ற கவலை மட்டும் கஸ்தூரிக்கு...

கஸ்தூரி - குடும்பத் தலைவி..

அவ்வப்போது சாயுங்காலம் விளக்கேற்றும் வேளையில் கூடத்தின் மேல்புறம் அதாவது மேற்குத் திசையில் கவுளி கிச்கிச்... என்று சத்தம் கொடுக்கும்...

கஸ்தூரிக்கு சந்தோஷமாக இருக்கும் -
திருச்சி பக்கத்தில இருந்து பொண்ணு கேட்டு வரப்போறாங்க!.. என்று...

ஆனால் பட்டுக்கோட்டையிலிருந்து இரண்டு ஜாதகம் வந்ததே தவிர
திருச்சி பக்கத்தில் இருந்து எதுவும் வரவில்லை...

'' வரும்... வரும்!.... '' - நம்பிக்கையுடன் நாட்கள் நகர்ந்த வேளையில்
அன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை...

'' மலர்... முருங்க மரத்துல இருந்து ரெண்டு இணுக்கு கீரை உடைச்சிக்கிட்டு வாம்மா.. இந்த வெண்ணெய்யை உருக்குவோம்!... ''

கஸ்தூரி சொன்னதும் -

'' போம்மா... உனக்கு வேற வேலையில்லை!... '' - என்றபடி
துரட்டியை எடுத்துக் கொண்டு முருங்கை மரத்தை நோக்கி நடந்தாள் மலர்விழி...

நீண்ட துரட்டியால் தழைத்து வளர்ந்திருந்த முருங்கையின் நுனியை இழுத்து வளைக்க - அது சடாரென நாலடி நீளத்துக்கு முறித்துக் கொண்டு விழுந்தது...

'' யம்மாடி... பார்த்து!...'' - என்று பதறியபடி கொல்லைப் புறத்துக்கு
ஓடினாள் கஸ்தூரி..

'' ஒன்னும் இல்லேம்மா!.. இதுக்கெல்லாமா பயப்படுவே?... சரியான பயந்தாங்கொள்ளி!...'' - சிரித்தாள் மலர்விழி..

'' பொண்ணாப் பொறந்துட்டியே... அடுத்தவன் கையில கொடுக்கிற வரைக்கும் பயப்பட வேணாமா!.. '' - பதற்றத்தைக் காட்டிக் கொண்டாள் கஸ்தூரி..

'' அப்போ அடுத்தவன் கையில கொடுத்ததுக்கு அப்புறம் கை கால்..ல அடிபட்டா பரவாயில்லையா?... ''

'' நல்லா இருக்குடா தங்கம் நீ பேசறது... பொண்ணாப் பொறந்ததுங்க ஒச்சம் இல்லாம இருக்கணும்.. ங்கறது தான் பெத்தவங்க எல்லாருக்கும் ஆசை!... ''

கஸ்தூரி பரிந்து கொண்டு நின்றாள்...

'' அப்போ பசங்களுக்கு!?.. '' - மலர் ஆவலுடன் கண்களை உருட்டினாள்...

'' ஏய்.. மலர்!... ரெண்டு இணுக்கு கீரை ஒடிக்கிறதுக்குள்ள இவ்ளோ பேச்சா?... '' - வெண்ணிலா அதட்டினாள்...

''ஏ!... புஸ்தகப் பூச்சி... துரட்டிய எடுத்துக்கிட்டு வந்தவ நானு... அம்மாவும் நானும் எல்லா விஷயத்தையும் பேசுவோம்... நீ புத்தகமே... ன்னு இரு!.. ''

அக்காவை அதட்டினாள் மலர்...

உண்மையில் வாயில்லா பூச்சி வெண்ணிலா...
பலசமயங்களில் அமைதியாகி விடுவாள்...
தங்கையிடம் கொள்ளைப் பிரியம்...

இருந்தாலும் அவ்வப்போது இவளது பர்சனல் ப்ராப்பர்டீஸ்
- கண்மை, சாந்து.. ஒட்டும் பொட்டுக்குத் தடை... அதனால் சாந்து தான்...
ஹேர்பின், அந்தக் கிரீம், இந்தக் கிரீம் - எல்லாம் அவளால் கொள்ளையடிக்கப்படும் போது கோபம் வரும் ...

ஆனாலும் ஒன்றும் சொல்ல மாட்டாள்...
அவளுக்கு வேதனையான சமயங்களில் தலையை வருடி விட்டு -
தோளில் சாய்த்துக் கொள்வாள்... இன்னொரு தாய் அல்லவா!..

அப்படியிருக்க இப்போது பிரச்னை வேறு கோணத்தில்..

'' நான் எவ்வளவு நேரம் காத்திருக்கிறது நெய்க் கீரை திங்கிறதுக்கு?...''

அவளுடைய அவசரம் அவளுக்கு...

இளஞ்சூட்டில் வெண்ணெய் உருகும்போது முருங்கைக் கொழுந்துகளைப் போட்டு அதை முறிப்பது வழக்கம்...

சூடான வெண்ணெயில் கருகிய முருங்கைக் கொழுந்துகள் முறுமுறு.. - என்று புத்துருக்கு நெய்யின் வாசத்துடன் தெருவெங்கும் மணக்கும்...

அது எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும்...
அதற்குத் தான் இப்போது ஆவல்.. காத்திருப்பு எல்லாம்..

சிவப்ரசாத் வீட்டில் இருந்தால் - 'நான் தான் இளைய பிள்ளை.. எல்லாமும் எனக்குத் தான்!... ' என்பான்...

வெண்ணிலாவும் மலரும் நெய்க் கீரையை தம்பிக்கே கொடுத்து விட்டு
அவனிடமிருந்து கொஞ்சம் வாங்கி வாயில் போட்டுக் கொள்வார்கள்...

கவிஞர் வாலி நடிகர் திலகத்தின் படம் ஒன்றுக்காக -

' இது ஆனந்தம் விளையாடும் வீடு..
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு!.. '

- என்று பாடல் எழுதியிருப்பார்... அது மாதிரி என்றைக்கும் இந்த வீடு..

'' சரி.. சரி... துரட்டியை எடுத்த எடத்தில வச்சிட்டு வீட்டுக்குள்ள வாங்க!...
மலர்... நீ இந்த மிச்ச மீதி கீரையெல்லாம் வாசல்ல போட்டுட்டு வா...
மணியன் வீட்டு ஆடு வந்தா தின்னுட்டுப் போகும்!... ''

மணியன்... ன்னா - அவன் தான் செல்லம்மா வீட்டு ஆடுகளை தினசரி வெளியில் விரட்டி மேய்த்துக் கொண்டு வருபவன்.. வாய் தான் பேசமுடியாதே தவிர ரொம்பவும் அறிவாளி...

'' ஏம்மா!... முருங்கைக் கீரையில வடை செய்யேன்.. நம்ம ப்ளாக்...ல
போட்டோவோட போட்டு விடுவோம்!.."

'' ஏன்?.. ஸ்ரீராம் கேட்டாரா!.. இருக்கட்டும்.. அடுத்த வாரம்
அனுப்புவோம்... நேத்து தானே மணத்தக்காளி கீரை சாம்பார்... இன்னிக்கும் கீரை வேணடாம்!...''

'' தினசரி கீரை திங்கணும்.. ன்னு சொல்றாங்களே!... ''

'' சொல்றவங்க சொல்லுவாங்க... அவங்களுக்கு என்ன!... தினசரி கீரை தின்னால் குடல் இளக்கமாகிப் போகும்... வாரத்தில ரெண்டு மூனு நாளு போதும்... சரி.. ரெண்டு பேரும் வாங்க... வெண்ணெய்யை உருக்குவோம்!.. ''

- கஸ்தூரி சமையலறைக்குள் நடந்தாள்...

'' அம்மா!... நீ வெண்ணெய உருக்குறதுக்குள்ளே நான் பொன்னியின் செல்வனை படிச்சி முடிச்சிடறேன்!... ''

- கேலியுடன் தொடர்ந்தாள் வெண்ணிலா...

அதற்குள் வாசலுக்குச் சென்ற மலர் சத்தம் போட்டாள்...

'' அம்மா.. இங்கே வாயேன்.. மணியன் வீட்டு ஆடு என்னமோ மாதிரி நடக்குது!..

'' ஸ்கூட்டர்காரனுங்க எவனும் அடிச்சுப் போட்டுட்டுப் போய்ட்டானுங்களா!... '' பதற்றத்துடன் வாசலுக்கு ஓடினாள் கஸ்தூரி..

வாசலில் அந்த வெள்ளாட்டைப் பார்த்ததும் நிலைமை விளங்கி விட்டது கஸ்தூரிக்கு...

'' வெண்ணிலா... அந்தப் பழைய சாக்கு கிடக்குதே அதை எடுத்துக்கிட்டு வாம்மா!... ''

அதற்குள் மலரிடமிருந்து கேள்வி -

'' ஆட்டுக்குட்டிக்கு என்னம்மா?... ஏன் இப்படி வயித்த தள்ளிக்கிட்டு நடக்குது? ''

''ஆட்டுக்குட்டி இல்லேடி... இது ஆடு!... சினையா இருக்கு.. குட்டி போடப் போகுது!.. ''

'' அது சரி... சினை.. ன்னா.. என்ன?... '' - அடுத்த அஸ்திரம் அவளிடமிருந்து...

''மகமாயீ!... இதெல்லாம் ஒரு கேள்வி... ன்னு கேக்கிறாளே!... சினை... ன்னா என்ன..ன்னு சொல்லுவேன்!... ம்ம்.... ப்ரக்னெண்ட்டா இருக்கிறது!... ''  ஒருவழியாய்ச் சொல்லி முடித்த கஸ்தூரிக்கு முகம் சிவந்தது போனது...

'' ஓ.. புள்ளத்தாச்சியா?.. அப்போ ஆட்டுக்கு பாப்பாக்குட்டி பொறக்கப்போவுது!... ''

கைகளைத் தட்டிக் கொண்டு வீட்டிற்குள் ஓடிய மலர்விழி கையில் செல்போனுடன் வந்தாள்...

'' நான் பாப்பாக் குட்டியை ஷூட் பண்ணப் போறேன்!... ''

- என்றபடி இப்படியும் அப்படியுமாக வளைய வந்தாள்...

'' சீ!... இதையெல்லாமா வீடியோ பண்ணுவாங்க?... '' - அதட்டினாள் கஸ்தூரி...

'' போம்மா!... நான் இத வச்சி புராஜக்ட் செய்யப் போறேன்!... ''

'' ம்க்கும்!... கூட இருந்து அம்மாவுக்கு ஒத்தாசை பண்ணாம ஆட்டுக் குட்டிய வச்சுக்கிட்டு புராஜக்ட் செய்யப் போறாளாம் புராஜக்ட்!... ''

" நாளைக்கு இந்த வீடியோவை எங்க சயின்ஸ் மேம் கிட்ட காட்டுவேன்...
ரொம்பவும் அப்ரிஷியேட் பண்னுவாங்க!... "

'' என்ன புள்ளைங்களோ... இந்தக் காலத்துப் புள்ளங்க!... ''

கஸ்தூரியின் முகத்தில் புன்னகை...

அதற்குள் கையில் பழைய சாக்குடன் ஓடி வந்தாள் வெண்ணிலா...

அந்த சினை ஆடும் அடைக்கலம்  விரும்பி கஸ்தூரியை நெருங்கி வந்தது...

'' வாடி... வா!... இந்தப் பக்கமா வா!.. '' - என்று வெள்ளாட்டை அழைத்தபடி, வேப்ப மரத்து நிழலில் சாக்கை விரித்துப் போட்டாள் கஸ்தூரி...

மெதுவாக வந்த ஆடு சின்னதாக வட்டமிட்டபடி அந்தச் சாக்கு விரிப்பில் தன்னைக் கிடத்திக் கொண்டது...

மலங்க மலங்க விழித்த ஆட்டின் அருகில் கையிலிருந்த முருங்கைக் கொத்தைப் போட்டாள் கஸ்தூரி...

அந்த முருங்கைக் கொத்தினை வாயினால் பற்றிக் கொண்டது வெள்ளாடு..

'' மலர்.. அப்புறமா வீடியோ எடுக்கலாம்... நீ உள்ளே போய் கொஞ்சம் தண்ணி சுட வச்சிட்டு அம்மாவோட பழைய சேலை ஒன்னு எடுத்துக்கிட்டு வாம்மா!... ''

'' நீ என்ன செய்யப் போறே!.. '' - மலரிடம் வியப்பு...

'' ஆட்டுக்குப் பிரசவம் பார்க்கப் போறேன்!... ''
- என்றபடி ஆட்டின் வயிற்றை இதமாகத் தடவிக் கொடுத்தாள்...

'' நான் வரலே!...  எனக்குப் பயமா இருக்கு!.. ''

- என்றபடி இரண்டடி பின்னுக்கு நகர்ந்தாள்...

அதற்குள் கையில் பழைய சேலையுடன் வந்தாள் வெண்ணிலா...

'' என்னமோ டாக்டருக்குப் படிக்கப் போறேன்..ன்னு சொன்னியே!... ''

'' அது படிக்கிறப்போ பார்த்துக்கலாம்!... '' - மலர் விழியின் கண்களில் கலவரம்...

'' நீ சொல்லும்மா நான் செய்றேன்!... '' - வெண்ணிலா பரபரத்தாள்...

'' அந்தத் துணிய ரெண்டு மூணா கிழிச்சுக் கொடும்மா!... ''

அந்த விநாடியில் - '' மே!... '' - என்றது ஆடு...

இறைவனின் பெருங்கருணையினால் அந்தச் சிற்றுயிர் தாங்கியிருந்த
கர்ப்பத்தின் பனிக்குடம் உடைய அங்கே புதிய உயிர் ஒன்று வெளிப்பட்டது...

முன்னங்கால்களில் முகம் பதித்து வாழைப் பூ மொட்டாக இளங்குட்டி..

கிழித்துக் கொடுக்கப்பட்ட துணியில் இளங்குட்டியைத் தாங்கிக் கொள்ள நொடிப் பொழுதில் சுகப்பிரசவம்...

'' வெண்ணிலா... உள்ளே போய் கொஞ்சம் மஞ்சத்தூளைக் குழைச்சிக்கிட்டு வாம்மா... சீக்கிரம்!... ''

வீட்டுக்குள் சென்ற வெண்ணிலா மறு நிமிடமே மஞ்சள் தூளைக் கிண்ணத்தில் குழைத்துக் கொண்டு ஓடி வந்தாள்...

'' நீ ஆட்டுக்கிட்ட உட்கார்ந்து அதுக்கு இதமா தடவிக் கொடு!.. '' - என்றபடி
புதிய வரவின் தொப்புள் கொடியை அகற்றி விட்டு கால் குளம்புகளைக் கிள்ளி நீக்கினாள் கஸ்தூரி...

'' ஏம்மா ஆட்டுக்குட்டியோட காலை கிள்ளி விடுறே?... '' வெண்ணிலாவின் வினா..

'' இந்த மாதிரி கிள்ளி விடலேன்னா குளம்பு வளர்றப்போ வளைஞ்சிக்கும்... குட்டிக்கு நடக்க முடியாம இடைஞ்சலா ஆகிடும்... குளம்பை சீக்கிரமா கிள்ளி விடணும்... இல்லேன்னா இறுகிப் போய்டும்!... ''

கஸ்தூரி சொல்லிக் கொண்டிருக்கையில் ஆடு ஒருக்களித்தபடி தலையைத் திருப்பி தன் குட்டியைப் பார்த்தது...

கஸ்தூரி குட்டியைத் தூக்கி எடுத்து அதனருகில் நீட்டினாள்..
ஆடு தன் குட்டியை முகர்ந்து பார்த்தது... நாவினால் நக்கிக் கொடுத்தது..

அதற்குள் வேப்ப மரத்துக் கிளையில் ' கா.. கா... ' என்றபடி - சில காக்கைகள் வந்து அமர்ந்தன...

காக்கைகள் போதாதென்று ' பரட்.. பரட்.. ' - என்று சாலையைத் தேய்த்தவாறு ஓடி வந்த மணியன் சற்று அருகாக அமர்ந்து கொண்டான்...

'' இந்த மணிப்பயலை விரட்டு...ம்மா!.. '' - என்றாள் கஸ்தூரி...

'' அவங்க வீட்டு ஆடு தானே...ம்மா!.. '' - என்றாள் வெண்ணிலா...

'' அவங்க வீட்டு ஆடா இருந்தாலும் ஒரு சமயம் போல இருக்காது..
அடுத்த தெரு ரவுடிப் பசங்க வந்துட்டா ஒருத்தனுக்கு ஒருத்தன் சண்டை
வந்திடும்... முதல்ல இந்த மணிப் பயலை விரட்டு!... ''

'' டேய்... போடா!.. '' - என்று மணியனை அதட்டினாள் வெண்ணிலா..

மணியன் அங்கிருந்து எழுந்து ரெண்டடி தள்ளி அமர்ந்தான்...

'' ஏய்!.. டெலிவரி ஆகிற எடத்துல உனக்கு என்னடா வேடிக்கை?... ''
- என்று சத்தம் போட்டபடி கல்லெடுத்து எறியும் பாவனையில் கையைக் காற்றில் வீசினாள்..

அவ்வளவுதான்...

'' லொள்!.. '' - என்ற சத்தத்துடன் தலை தெறிக்க ஓடிப்போய்
அந்த அரச மரத்துக்கு அந்தப் பக்கம் போய் நின்று கொண்டான்...

ஆனாலும் வாலை ஆட்டுவதை மட்டும் நிறுத்தவில்லை..

இதற்குள் பூமிக்கு வந்து சில நிமிடங்கள் கூட ஆகியிருக்காத
இளங்குட்டி எழுந்து நிற்க முயற்சித்தது...

குட்டியின் தொப்புள் கொடியில் மஞ்சள் குழைவைத் தடவி
துணியைக் கிழித்து வாட்டமாகக் கட்டி விட்டாள் கஸ்தூரி...

கைகள் பரபரத்தாலும் அவளது கண்கள் ஆட்டின் வயிற்றிலேயே இருந்தது...

'' இன்னொரு குட்டியும் இருக்கு வெண்ணிலா!... ''

சொல்லி முடிக்கையில் அந்தக் குட்டியும் வெளி உலகினை எட்டிப் பார்த்தது...

'' அவ்வளவுதான்!.. '' - என்று ஆடும் மெல்ல எழுந்து கொண்டது...

முதற்குட்டிக்கு செய்த மாதிரியே இந்தக் குட்டிக்கும் குளம்பு கிள்ளி விட்டு
தொப்புள் கொடியில் மஞ்சள் வைத்துக் கட்டினாள் - கஸ்தூரி...

ஆடு தன் நாவினால் நக்கித் துடைத்தது போக குட்டிகளின் மீது எஞ்சியிருந்த ஈரத்தை எல்லாம் பழைய துணியினால் மெதுவாக ஒற்றியெடுத்த கஸ்தூரியின் முகத்தில் நிம்மதி பரவியது...

'' ம்மே.. ம்மே!... '' - என்று இளங்குரலெடுத்தன ஆட்டுக் குட்டிகள்...

ஒவ்வொன்றாக அள்ளியெடுத்த கஸ்தூரி வெண்ணிலாவிடம் ஒன்றையும் மலர்விழியிடம் ஒன்றையும் கொடுத்தாள்...

மூத்தவள் பத்திரமாக கையில் வாங்கிக் கொண்டாள்...
இளையவளோ இப்படியும் அப்படியுமாகக் குதித்தாள்...

'' க்யூட்.. ஸோ க்யூட்!... '' - என்றபடி சிரித்தாள்.. சிலிர்த்தாள்...

'' புள்ளைங்களை எறக்கி விடுங்கப்பா!.. '' - என்கிற மாதிரி
அவர்களின் மேல் உரசிக் கொண்டு நின்றது ஆடு...

அதற்குள் வீட்டுக்குள்ளிருந்து வெதுவெதுப்பான தண்ணீரில்
மஞ்சளைக் கரைத்துக் கொண்டு வந்த கஸ்தூரி அந்தத் தண்ணீரால் ஆட்டின் இடுப்பையும் திரண்டிருந்த மடியையும் நன்றாகக் கழுவி விட்டாள்...

'' சரி.. சரி... குட்டிகளைக் கொடுங்க!.. '' என்றபடி குட்டிகளை வாங்கி - தாயின் மடியூட்டினாள்...



தாயின் மடியில் முகம் பதித்த குட்டிகள் மளுக்.. மளுக்.. என்று
சுறுசுறுப்புடன் பால் குடிக்கத் தொடங்கிய வேளையில் -

'' மகமாயீ... மகமாயீ!... '' - செல்லம்மா ஓடி வந்தாள்...

இங்கிருந்து நாலாவது வீடு செல்லம்மாளுடையது.. பால் வியாபாரம்.. ரெண்டு நாட்டுப் பசுக்கள்.. கூடவே சில ஆடுகள்... கோழிகள்...
கணவன் மனைவி பிள்ளைகளுமாக பார்த்துக் கொள்வதும் பராமரிப்பதும்...

'' ரேசனுக்குப் போய்ட்டு வர்றதுக்குள்ளே... இந்தக் கதையா?... நான்
காலைலயே கவனிச்சேன்... இன்னிக்குக் குட்டி போட்டுடும்..ன்னு.. அது என்னமோ மகராசி.. உங்கையால பேறுகாலம் ஆகியிருக்கு!... ''

'' செல்லம்.. ஒன்னும் கவலைப்படாதே... பேறுகாலம் பார்த்ததுக்காக காசு
எல்லாம் கேக்க மாட்டேன்!.. '' - கஸ்தூரி சிரித்தாள்...

'' நீங்க வேணாம்..ன்னாலும் நான் உட்டுடுவேனா!.. மூனாம் நாள்..ல இருந்து பால் தெளிய வரைக்கும் சீம்பால் எல்லாம் உங்க ஊட்டுக்குத் தான்!... '' என்ற செல்லம்மா அந்த இடத்தைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்....

'' சீம்பால்... ன்னா என்னம்மா?... '' - கேட்டார்கள் வெண்ணிலாவும் மலரும்...

'' மடி சுரக்கிற முதல் பால் ...ம்மா!... கொஞ்சம் கெட்டியா இருக்கும்...
ரெண்டு மூனு நாள்..ல தெளிஞ்சிடும்... ரொம்பவும் சத்து இது... திரட்டுப்
பால்..ன்னு செய்வாங்க!... ''

'' எப்படிம்மா!... இதெல்லாம் எப்படிம்மா?... அம்மா..ன்னா சும்மா..ன்னு நெனைச்சிருந்தோமே!.. '' பிள்ளைகளுக்கு ஆச்சர்யம்...

'' கிராமத்துப் பொண்ணுங்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்...பசங்களா!.. ஒரு தடவை நானும் என்னோட சிநேகிதிகளும் நம்ம வீட்டுப் பசு கன்னு போடுறப்ப கூட இருந்து எல்லாம் செஞ்சிருக்குறோம்... தாத்தா பாட்டி வெளியூர்..ல இருந்து வந்ததும் விஷயம் தெரிஞ்சு எனக்கு ஒரு பவுன் மோதிரம் போட்டாங்க.. கூட இருந்த பொண்ணுங்களுக்கு பட்டுப் பாவாடை தாவணி எடுத்துக்
கொடுத்தாங்க... எனக்குக் கைராசின்னு.. அக்கம் பக்கத்திலயும்
கூப்பிடுவாங்க!... ''

மெல்லச் சிரித்தாள் கஸ்தூரி..

'' அம்மா.. த கிரேட்!..''

கஸ்தூரியைக் கட்டிக் கொண்டார்கள் பிள்ளைகள் இருவரும்..

'' சரி.. தாயீ... மக்க மனுசாளோட நல்லாருக்கணும் நீங்க!... நான் போய்ட்டு நாளைக்கு சீம்பாலோட வரேன்!...''

குட்டிகளைத் தூக்கிக் கொண்டு செல்லம்மா நடக்க அவளைத் தொடர்வதற்கு யத்தனித்த ஆடு மெதுவாகத் திரும்பிப் பார்த்தது...

’’ ம்மே.. ஏஏ!...‘’

ஃஃஃஃஃ


114 கருத்துகள்:

  1. வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத் தனையது உயர்வு..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக்களம் காண வரும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  4. இன்று எனது கதையைப் பதிவு செய்வதுடன் அல்லாமல் அழகழகாய் படங்களைச் சேர்த்து மேலும் மெருகூட்டும் ஸ்ரீராம் மற்றும் கௌதம் ஜி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி...  நன்றி...  கேஜிஜிக்குதான் சேரவேண்டும்.

      நீக்கு
    2. இருக்கட்டும்.. இருக்கட்டும்...
      இருவருக்கும் ஒருசேர நன்றி.. நன்றி...

      நீக்கு
    3. அழகான படங்கள் சேர்க்க scope கொடுத்த உங்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. ஆகா..
    படங்கள் ஒவ்வொன்றும் அழகு...
    பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கின்றார் கேஜிஜி...

    கலா ரசனை மிக்கவர்...
    ( எதற்கும் பக்கத்தில் பூரிக்கட்டை இல்லை உறுதி செய்து கொள்வோம்!..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ !! புகழ்ந்துவிட்டு பிறகு பூரிக்கட்டையையும் நினைவுறுத்திவிட்டாரே! நான் என் செய்வேன்!

      நீக்கு
  6. சொல்ல மறந்துட்டேன்.  கதையில் நானும் வந்திருக்கிறேனே....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை அனுப்பி இத்தனை மாதம் கழித்தா
      இதனைக் கவனிப்பது!?..

      நீக்கு
    2. படித்த உடனே உங்களுக்கு பதில் அனுப்பி இருப்பேனே...    ஓ...   அதில் இதைச் சொல்லவிலையோ...

      நீக்கு
    3. அப்போது -
      என்ன சூழ்நிலையோ... ஸ்ரீராம் இதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!.. - என்று நினைத்துக் கொண்டேன்..

      நீக்கு
    4. ஆமாம், கதையில் ஸ்ரீராம் வருவதை நானும் கவனித்தேன். அதே போல் கடைசி பஞ்ச் வார்த்தை. இரண்டையும் காலையில் குறிப்பிட முடியவில்லை. ஆடு நன்றி தெரிவித்த விதம் அலாதி!

      நீக்கு
  7. இன்னும் ஒரு மின்னஞ்சலை தங்கள் பெட்டியில் காத்துக் கிடக்கிறது.. தயை கூர்ந்து கவனிக்கவும்.. நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மின்னஞ்சலில் உங்கள் மெயில் ஒன்றும் இல்லையே...

      நீக்கு

  8. அன்பின் அனைவருக்கும் இனிய செவ்வாய் காலை வணக்கமும் வாழ்த்துகளும்.
    அன்பு துரை, ஸ்ரீராம் எல்லோருக்கும் இனிய நாளைக்கான
    வாழ்த்துகள். முருங்கை இலையும் நெய்யுமாக மணத்து,
    ஆட்டின் கர்ப்பம் திறக்க பிரசவம் பார்த்த அன்பு
    கஸ்தூரி.
    வார்த்தைகளில் அடங்காத ஆச்சர்யம்.

    கிராமத்தில் வளர்ந்தவர்களுக்கு இதெல்லாம் பாடங்களா.!!!
    திருமணம் கை கூடி வரப் போகிறது
    என்று நினைத்துக் கொண்டிருக்கிற போது

    அம்மாக்காரிக்கு எத்தனை லாவகம்.
    ஒரு படபடப்பு இல்லாமல் சுலபமாகப்
    பிரசவம் பார்த்து விட்டார்களே.

    பெண் குழந்தைகளின் படங்கள் நல்ல சாய்ஸ்.

    மீண்டும் ஒரு தடவை படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      முந்தைய கிராமத்து வாழ்க்கையின் ஒவ்விரு நாளும் பாடங்கள் தான்... படிப்பினை தான்...

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா...

      நீக்கு
  9. இதில் யார் வெண்ணிலா. யார் மலர்:)
    பள்ளி முத்திரையோடு இருக்கும் பெண் சின்னவளோ.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடர்ந்து தொற்று நோய்களால் பயமுறுத்தும் சீனாவில் முதலில் அமைதி நிலவட்டும். அப்போத்தான் உலக நாடுகளுக்குத் தொற்று பரவாது. உலகெங்கும் அமைதி நிலவப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகெங்கும் அமைதியும் ஆரோக்கியமும் நிலவப் பிரார்த்திப்போம்...

      நீக்கு
  11. ஆட்டின் பிரசவத்தைக் கதைக்கருவாக்கி அதை அழகான தமிழ்நடையில் எழுதிய துரைக்கு வாழ்த்துகள். குவெய்த்தில் ஏதோ அவசர நிலைமை என நேற்றுப் படித்தேன். துரைக்கு ஒன்றும் பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டுமே என வேண்டிக்கொண்டேன். பிரச்னைகள் ஏதும் இல்லாமல் நல்லபடியாக நாட்கள் கழிந்து விரைவில் நல்ல நிலைமைக்குத் திரும்பவும் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே நிலவும் பிரச்னை கடந்த சில ஆண்டுகளாகப் பேசப்படுவது தான்...

      இப்போது கொரானா ஒரு வாய்ப்பாக ஆகி விட்டது...

      பொறியியல் துறை தவிர்த்து -
      ஏனெனில் கட்டுமானத்துறைக்கு எந்த நாட்டில் இருந்தும் ஆட்களும் வல்லுனர்களும் வரலாம்

      மற்றபடி - மருத்துவத்துறையில் டாக்டர்களையும் நர்ஸ்களையும் நீக்கி விட்டு என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை...

      மூன்றாம் நிலை கடை நிலை ஊழியர்களை அப்புற்ப்படுத்தி விட்டால் அதன் பிற்கு என்ன ஆகும் என்று அவர்களுக்கே தெரியும்...

      ஆனாலும் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்...

      பார்க்கலாம்.. என்ன நடக்கிறது என்று...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  12. வெண்ணிலாவும், மலரும் எந்தவிதமான தடைகளும் இல்லாமல் வாழ்க்கையில் அவரவர் விருப்பத்திற்கேற்ப வாழவும் வாழ்த்துகள். அருமையான கிராமிய மணம் கமழும் கதைக்களத்தில் துரைக்கு அடுத்து பரிவை குமார் தான். இருவருமாகக் கிராமிய வாழ்க்கையைக் கண்ணெதிரே கொண்டு வந்து விடுகின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
  13. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    ஆகா . ஆவலுடன் எதிர்பார்க்கும் செவ்வாயில் இன்று சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் எழுதிய கதை. அவர் எழுதும் ஒவ்வொரு கதையும் படித்தவுடன் மிகவும் அருமையாக அன்று முழுவதும் மனதுக்குள் இதமான மணம் வீசிக் கொண்டேயிருக்கும். இன்று காலை கண் திறக்கவே தாமதமாகி விட்டது. இன்னமும் கொஞ்ச நேரத்தில் படித்து விட்டு வருகிறேன்.அதற்கும் கொஞ்சம் கால தாமதமானாலும் பொறுத்துக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிதானமாக வாங்க. இன்றைய கதை நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும்.

      நீக்கு
    2. தங்களது கருத்துரைக்குக் காத்திருக்கிறேன்...

      நீக்கு
  15. காலை வணக்கம் அனைவருக்கும்.

    இன்று துரை செல்வராஜ் சாரின் கதையா? பிறகு வந்து படித்துக் கருத்திடறேன். கொஞ்சம் நேற்றிலிருந்து உடல்நிலை சரியில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீக்கிரம் நலம் பெருக! வாழ்க வளமுடன்!

      நீக்கு
    2. அன்புன் நெல்லை..
      உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள்...

      நீக்கு
    3. நெல்லை, என்ன உடம்புக்கு? உடல் நலனைக் கவனிக்கவும். பிரார்த்தனைகள்.

      நீக்கு
  16. கேஜிஜி சார் படங்கள் இணைப்பதில் கெட்டிக்காரர்.. இணைப்பதற்கு முன் பெண்படங்களைத் தேடித் தேடி இளைத்திருப்பாரோ! ஃபிட்டாக இருக்க இப்படி ஒரு யுக்தியா?

    அழகான, ஆரோக்யமான ஆடு. கீழே அவசரமான குட்டிகள்.

    ‘’ஆட்டுக்குட்டி.. ஆட்டுக்குட்டி மாமாவைப் பாரு.. அவர்
    ஆம்பளையா பொம்பளையா என்னன்னு கேளு..!’’

    - ஞாபகம் வருது. அந்தக்கால திரை கிராமியப் பாடல்களில் ஒரு அழகு, நயம், இனிமை, லேசான விஷமம்(!) எல்லாம் இருந்திருக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசனையான கருத்துரைக்கு நன்றி!

      நீக்கு
    2. ஆட்டுக்குட்டி பாடல்கள் நிறையவே...

      ஆனாலும் தாங்கள் குறிப்பிட்டுள்ள பாடல் இனிமையானது..

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  17. எத்தனையோ ஆடு, மாடுகளை, கோழி, குருவிகளைப் ப்ரியம் காட்டிப் பேணிக்காத்த கிராமத்து கஸ்தூரிகளின் சந்ததிகள் இப்போ -

    ” போயும்போயும் ’டிக்-டாக்’-குக்குத் தடை போட்டுட்டானே பாவி.. இவனெல்லாம் எப்ப சாவானோ !” - என அங்கலாய்த்துக்கொண்டு திரிகின்றனவோ என்னவோ..

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம். ஆட்டின் பிரசவத்தை மலர் வீடியோ எடுத்தாளோ இல்லையோ,துரை சார் அழகான சித்திரமாக்கி வெளியிட்டு விட்டார். ஒரு நல்ல எழுத்தாளர் கருவைத்தேடி அலைய மாட்டார், இருக்கும் இடத்திலேயே அவருக்கு கரு கிடைக்கும் என்று சுஜாதா அடிக்கடி கூறுவார். துரை இப்போது வேறு எங்கோ வசித்தாலும், எப்போதோ பார்த்த விஷயங்களை மறக்காமல் அழகான கதைகளாக்கி வருகிறார். பாராட்டுகள். வாழிய நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      திரு சுஜாதா அவர்களது கருத்தினை மேற்கோளாகக் காட்டியுள்ள கருத்து..

      அந்நாட்களில் படித்த இதுவும் மனதில் இருக்கிறது...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  19. அக்காவாக அஞ்சலி, தங்கை எப்போதோ திரைப்படங்களில்,நடித்து, இப்போது காணாமல் போய் விட்ட இளவரசிதானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நதிமூலம், ரிஷிமூலம், மற்றும் எங்கள் ப்ளாக் படங்கள்மூலம் பார்க்கக்கூடாது!

      நீக்கு
    2. அது தானே!...

      அஞ்சலி அல்லவா அந்தப் பெண்...
      கனியாக நடித்து எல்லார் மனதையும் கவர்ந்தவர்...

      பாவம் அந்தக் கனி.. என்ன குற்றம் செய்தாள் என்று கதி முடிவில் கொடும் தண்டனை கொடுத்தார் அந்த இயக்குனர்...

      அந்த இயக்குனரின் மீது இன்னமும் கோபம் குறையவில்லை...

      நீக்கு
    3. அஞ்சலி? ஏதோ ஓரிரு படம் பார்த்திருக்கேன். "கனி" யாரு? துரை சொல்வதைப் பார்த்தால் படம் நன்றாக இருந்திருக்கோ?

      @பானுமதி, அந்த இன்னொரு பெண் இளவரசியா? இளவரசி முகம் இன்னும் கொஞ்சம் வேறே மாதிரி இருக்காதோ? ஸ்ரீதரோட ஒரு படத்தில் அவர் நடிச்சுப் பார்த்திருக்கேன். ஶ்ரீதர் படம் என்பதால் பார்த்த நினைவு. மற்றபடி குடும்பம் ஒரு கதம்பம் படத்திலும் வருவார்னு நினைக்கிறேன். அல்லது சம்சாரம் அது மின்சாரமா?

      நீக்கு
    4. அங்காடித் தெரு எனும் படத்தில்
      சென்னை ரங்கநாதன் தெரு ஜவுளிக் கடையில் வேலை செய்யும் பெண்ணாக அஞ்சலி நடித்திருப்பார்...

      சேர்மக்கனி என்பது கதாபாத்திரத்தின் பெயர்...

      படத்தின் முடிவில் கதாநாயகிக்கு ஏன் தண்டனை என்று தெரியவில்லை...

      மனம் மிகவும் வருந்தும்...

      அங்காடித் தெரு படத்தை ஒருமுறை பாருங்கள் அக்கா..

      நீக்கு
    5. இப்போது முழுப்படமும் யூட்யூப்பில் இருக்கிறது...

      நீக்கு
    6. அப்படியா துரை? விரைவில் பார்க்கிறேன். அஞ்சலி துடுக்காக நடிப்பது எனக்குப்பிடித்தது.

      நீக்கு
    7. நேற்று மாலை "அங்காடித்தெரு" பார்க்க ஆரம்பித்துவிட்டேன். முழுதாகப் பார்க்க நேரம் வாய்க்கவில்லை. இன்று பார்த்து முடித்துவிடுவேன். இப்படி ஒரு படம் வந்திருக்கு என்றே இப்போத் தான் தெரியும். வெகு இயல்பாக நடித்திருக்கின்றனர். முக்கியமாய்க் கண்களைக் கூசும் மேக்கப் இல்லை.

      நீக்கு
  20. சுகப் பிரசவம்..
    கதையும் !
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ரிஷபன் ஐயா அவர்களது வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  21. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  22. கதை மிக அருமை.

    படங்கள் மிக நன்றாக இருக்கிறது.
    //ஆகையால் கதைக் களத்துக்குள் தந்தையும் மகனும் வருவதற்கு வாய்ப்பே இல்லை...//

    ஆகையால் அவர்களுக்கு படம் இல்லை.

    ' //இந்த மாதிரி கிள்ளி விடலேன்னா குளம்பு வளர்றப்போ வளைஞ்சிக்கும்... குட்டிக்கு நடக்க முடியாம இடைஞ்சலா ஆகிடும்... குளம்பை சீக்கிரமா கிள்ளி விடணும்... இல்லேன்னா இறுகிப் போய்டும்!...//

    நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.

    //பூமிக்கு வந்து சில நிமிடங்கள் கூட ஆகியிருக்காத
    இளங்குட்டி எழுந்து நிற்க முயற்சித்தது...//

    இதுதான் எனக்கு ஆச்சிரியத்தை கொடுத்த விஷயம். எங்கள் வீட்டுக்கு முன் இருக்கும் திடலில் கழுதைக்கு நடந்த பிரசவம், கழுதைகுட்டி அழகாய் பிறந்தவுடன் துள்ளி குதித்த காட்சி , அப்புறம் திருவெண்காட்டில் கீழ் வீட்டு லட்சுமி பசு கன்று ஈன்ற போது கன்று துள்ளி குதித்த காட்சி எல்லாம் ஆச்சிரியம் ஏற்படுத்தியது.
    கிராம மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி கொள்ளும் செய்தி இந்த கதையில் இருக்கிறது பக்கத்து வீட்டு அம்மாவின் ஆடுக்கு பிரசவம் பார்த்த அம்மா மிக மிக உயர்ந்தவர்தான்.


    //அது என்னமோ மகராசி.. உங்கையால பேறுகாலம் ஆகியிருக்கு!... '//
    செல்லம்மாவின் பாராட்டும் அருமை.

    வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒட்டகச் சிவிங்கியின் குட்டி தடாலென்று பூமியில் விழுந்த சில நிமிடங்களில் குச்சிக் குச்சி கால்களை ஊன்றி எழுவதும் விழுவதும் தள்ளாடுவதும் .. பரிதாபமாக இருந்தாலும் அழகு..

      இறைவனின் கருணையே கருணை..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. ஆமாம் கோமதிக்கா அண்ட் துரை அண்ணா அக்குட்டிகள் வந்ததும் துள்ளும் பாருங்கள் கொஞ்ச நேரத்தில் அந்த அழகு!! இயற்கை உலகப் படைப்பில் அற்புதங்கள் வியப்புகள் விந்தைகள் பல பல.

      கீதா

      நீக்கு
    3. இறைவன் கருணை மிகுந்தவர் தான் சகோ.அவைகள் தங்களை வேற்று உயிர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள கடவுள் கொடுத்த வரம்தான்.

      நீக்கு
    4. கீதா , இயற்கை உலகப் படைப்பில் அற்புதங்கள் , வியப்புகள் , விந்தைகள் பல பலதான்.

      உங்கள் மகன் நிறைய சொல்லுவார் இனி.

      கண்ணழகியின் அம்மா பிரசவம் எல்லாம் பார்த்த அம்மா நீங்கள்.

      நீக்கு
    5. இயற்கையின் விந்தை தான் இவை எல்லாம். பிறந்த குழந்தை தாயின் மார்பில் இருந்து பாலைக்குடிக்க வாயைக்குவித்துக் கொண்டு தேடுகிறதே! அதற்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்? இதைத் தான் "வாசனை" என ஆன்மிகம் கூறும்.

      நீக்கு
    6. இங்கு சகோ கீதா அவர்களும் ஸ்ரீமதி கோமதி அரசு அவர்களும் கீதா அக்கா அவர்களும் இயற்கையின் விந்தைகளை மனம் நெகிழும் வண்ணம் சொல்லி இருக்கின்றீர்கள்..

      இயற்கையோடி இசைந்த வாழ்வு இளைய தலைமுறைக்கு இனி கிடைக்குமா...

      இதையெல்லாம் பார்த்து வளர்ந்த நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள்...

      நீக்கு
  23. கதை மிக மிக அருமை துரை அண்ணா. ஆட்டின் பிரசவம் கண் முன்னே.

    ஒரு நிகழ்வைக் கதையாக்கிய விதம் செம. மலரும் வெண்ணிலாவுக்கும் சொல்வது போல் விஷயங்களைச் சொல்லிச் சென்ற விதம் ஆஹா.

    நானும் ஆட்டின் பிரசவத்தைப் பார்த்திருக்கிறேன். மாட்டின் பிரசவம் கூட நேரில் பார்த்திருக்கிறேன். பழகியவர்கள் என்றால் மட்டுமே அருகில் விடும் அல்லது மனிதர்கள் இருக்க ஈனும். இல்லையேல் தனி இடம் தேடி யாரும் பார்க்காத வகையில்தான் குட்டி போடும்.

    கஸ்தூரி அன்புடன் அதற்கு முருங்கை இலை எல்லாம் கொடுத்து அந்த அன்பு பரிச்சயமாகி இருப்பதால் ஆடும் அவளது அன்பை சரியான நேரத்தில் பெற்றிருக்கிறது...அன்பு எத்தகைய மகத்தானது!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு மகத்தானது...
      அதற்கு ஈடு இணையே இல்லை...

      அந்த மணியனைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லியிருக்கல்சம்..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  24. என் மகனுக்கும் எனக்கும் இப்படியான ஒரு அனுபவம் உண்டு. அது இப்போது எங்களிடம் இருக்கும் கண்ணழகியின் அம்மாவின் பிரசவம். இங்கு இப்ப சொன்னால் பதிவு போல் ஆகிவிடும் எனவே இங்கு சொல்லவில்லை.

    அழகான கதைக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி..

      கண்ணழகியின் அம்மாவின் பேறு காலத்தையும் வாய்ப்புக் கிடைக்கும்போது
      பதிவிடுங்கள்...

      நன்றி.. மகிழ்ச்சி...

      நீக்கு
  25. பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  26. துரை செல்வராஜு சார் மிக அழகான உங்கள் கதைக்கு வாழ்த்துகள் பாராட்டுகள். ஆட்டிற்கு ஒரு அன்னமிட்ட ஆதரவுக்கை அதுவும் பேறுகாலத்தில் கனிவுடனான சேவை. இப்படியும் கதை புனையலாம் என்பதற்கான உதாரணம்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  27. இயல்பான நடையில் எழுதப்பட்ட கிராமீயச் சூழ்நிலையோடு கூடிய கதை.

    கிராமங்களில்தான் அடுத்த வீடுகளின் வேலையும் தன்னுடைய வேலையாக நினைத்துச் செய்வார்கள்.

    மிகவும் ரசித்தேன். நல்லா எழுதியிருக்கிறார் துரை செல்வராஜு சார். பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..
      தங்கள் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  28. படங்கள் நல்லதா இணைக்கவேண்டும் என்று கேஜிஜி சார் மெனெக்கெட்டிருக்கிறார். அதற்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கௌதமன் அவர்கள்
      அழகான படங்களை இணைத்தது தான்
      கதைக்கு மேலும் நெருக்கத்தைக் கொடுத்துள்ளது.. மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  29. காடுகளில் குட்டியை ஈனும் Beast, ஒட்டகச் சிவிங்கி, மான், யானை போன்றவைகளின் காணொளியை அனிமல் ப்ளேனட் சேனல்களில் பார்த்திருக்கிறேன். அதில் ஆச்சர்யம் என்னவென்றால், குழந்தை பூமிக்கு வந்ததும் உடனே எழுந்து, தங்களைத் துரத்திவரும் சிங்கம் சிறுத்தை புலி போன்றவைகளைக் கண்டு ஓடுவதுதான். இறைவன் படைப்பில் இது மிகுந்த ஆச்சர்யம். மனுசப்பயலுகதான் குழந்தையை கொஞ்சி ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் (கவிழ, உட்கார, தலை நிக்க, நிமிர) மெனெக்கெடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! ஆச்சரியமான உண்மை!

      நீக்கு
    2. கோழியின் முட்டைக்குள் இருந்து குஞ்சு வெளிவருவதைப் பார்த்திருக்கின்றீர்களா நெல்லை...

      முட்டைக்குள் இருக்கும் காற்று தீர்ந்ததும் தனது பிஞ்சு அலகால் முட்டையைத் துளைத்து வெளிக் காற்றைச் சுவாசித்து சிறகுகளை அசைத்து முட்டை ஓட்டைப் பிளந்து கொண்டு வெளிவரும்..

      முட்டைக்குள் கோழி வைத்து
      கோழிக்குள் முட்டை வைத்து
      வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்
      அந்த ஏழையின் பெயர் தன் இறைவன்..
      - கவியரசர்...

      நீக்கு
  30. தம்பி உடையான் படைக்கஞ்சான் என்பார்கள்.

    இளவல் துரை இருக்க, கதைக் கலைக்கள மேன்மைக்கு கேட்பானேன்?.. கிராமச் சூழல் கதை என்றாலே நினைவுக்கு வருகிறவராக பட்டயம் பெற்றிருப்பதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி அண்ணா அவர்களது அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  31. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    கதை மிக,மிக அருமை. வழக்கப்படி கிராம கதையாக ஆரம்பித்து வேறு மாதிரியான இயற்கை வரங்களுடன் முடித்ததை மிகவும் ரசித்தேன்.

    முருங்கை இலையின் நெய் வாசம் போல் கதையின் முடிவு வரை வாசமான (படிக்கும் எங்கள் மனங்களை பிடித்து இழுத்து வைத்து வசமாக்கிய) கதை. ஒரு இயற்கையை இயற்கையாக எழுதிய உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    கிராமத்து பொண்களுக்கு இதெல்லாம் சாதாரணம் என்று ஆட்டிற்கு அருகில் நின்று சுகப்பிரசவம் பார்த்த கஸ்தூரியை நினைக்கும் போது மனது மகிழ்கிறது. அவர் வாயால் எத்தனை நல்ல செய்திகள்.

    /இந்த மாதிரி கிள்ளி விடலேன்னா குளம்பு வளர்றப்போ வளைஞ்சிக்கும்... குட்டிக்கு நடக்க முடியாம இடைஞ்சலா ஆகிடும்... குளம்பை சீக்கிரமா கிள்ளி விடணும்... இல்லேன்னா இறுகிப் போய்டும்!.../

    எத்தனை தெரியாத விஷயங்களை உங்கள் மூலமாக வடித்த கஸ்தூரியால் தெரிந்து கொண்டோம். அருமை. கதை மனதில் ஆழமாக பதிந்து விடும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமேயில்லை.. ஏனெனில் இது உண்மை கதா மாந்தர்களை கொண்டு கதை என திசை திருப்பாமல், வடிக்கப்பட்ட நிஜங்கள்.

    இறுதியில் ஆடு தன் நன்றியை கூறிச் சென்ற விதம் கண்கலங்க வைத்தது. மனிதருக்கு கூட அந்த சமயத்தில் அது இயற்கையாக வருவதில்லை. சரியான நேரத்தில் அதன் நன்றியை இணைத்து எழுதிய உங்களைப் பாராட்ட எனக்கு வார்த்தைகளேயில்லை. மீண்டும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்.

    கதைக்கு தகுந்தபடி அழகான படங்களை அமைத்துக் கொடுத்த கொளதமன் சகோதரருக்கும் எனது அன்பான பாராட்டுக்கள்.. நன்றிகள். பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொளதமன் சார்பில் நன்றி சகோதரி!

      நீக்கு
    2. மன்னிக்கவும். துணையாக ஒர் எழுத்து என்னையறியாமல் ஒட்டி வந்ததை இதுவரை கவனிக்கவில்லை.(என் கண்களின் பிழை.) பிழையை சுட்டிக் காட்டுவதற்காக பிழையாலேயே பதிலா? ஹா.ஹா.ஹா. பழிக்குப்பழி, ரத்தத்திற்கு ரத்தம், வைரத்தை வைரத்தால் அ. வேண்டும் என்பது மாதிரி..:) இன்னும் இது போல் நிறைய இருக்கலாம்.! சொல்லத் தெரியவில்லை. ஆனாலும் பதிலை ரசித்தேன். நன்றி.

      நீக்கு
    3. ச்சும்மா ... கலாய்த்தல் ! டேக் இட் ஈசி!

      நீக்கு
    4. ஹா.ஹா.ஹா. கலாய்த்தலை புரிந்துதான் நானும் கலாய்ப்புக்காக பதிலளித்தேன். இதில் தவறாக நினைக்க ஒன்றுமேயில்லை சகோதரரே.

      நீக்கு
    5. ஸ்ரீமதி கமலாஹரிஹரன் அவர்களது கருத்துரையால் மனம் நெகிழ்ந்தேன்..

      கதையை அவ்வாறு முடித்ததுமே மனம் கலங்கிற்று...

      தங்களது கருத்துரையைக் கண்டதும் கண்ணீர் வந்து விட்டது...

      இப்படியான கருத்துரைகளுக்கு மேல் வேறென்ன வேண்டும்!...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  32. //குட்டிகளைத் தூக்கிக் கொண்டு செல்லம்மா நடக்க அவளைத் தொடர்வதற்கு யத்தனித்த ஆடு மெதுவாகத் திரும்பிப் பார்த்தது...

    ’’ ம்மே.. ஏஏ!...‘’ //

    இந்தக் கடைசி வரி என் மனசை பிசைந்து எடுத்து விட்டது.

    "ம்மே... ஏஏ.." பேறு கால பாரத்தை குறைக்க தோன்றாத் துணையாக இருந்ததற்கு குரல் கொடுத்து ஓசை எழுப்பிற்றா, அந்த ஆடு?..

    "ம்மே.. ஏஏ.." 'செஞ்சார நன்றி. போய் வருகிறேன், தாயே!' என்று கண்ணீர் மல்க விடைபெற்றதாகவே உணர்ந்தேன் நான்.

    வாயில்லா ஜீவன் என்று வக்கணையாக சொல்லத்தான் தெரிந்திருக்கிறது நமக்கு.
    வாயுள்ள சீவர்களிடம் இல்லா உன்னத உணர்வுகள் எந்த அளவுக்கு அவற்றில் மண்டிக்கிடக்கிறது என்று வாசிக்கும் மனசில் ஈரம் சுரக்கத் தான் செய்கிறது.
    நல்லதொரு படைப்பை மனசில் சுமந்து அழகாக வெளிப்படுத்தியமைக்கு பாராட்டுக்கள், சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ** செஞ்சார -- நெஞ்சார

      நீக்கு
    2. ஜீவி அண்ணா..
      தங்களது கருத்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றி... மகிழ்ச்சி...

      நீக்கு
  33. @ Kamala Hariharan

    //இறுதியில் ஆடு தன் நன்றியை கூறிச் சென்ற விதம் கண்கலங்க வைத்தது. மனிதருக்கு கூட அந்த சமயத்தில் அது இயற்கையாக வருவதில்லை. சரியான நேரத்தில் அதன் நன்றியை இணைத்து எழுதிய உங்களைப் பாராட்ட எனக்கு வார்த்தைகளேயில்லை. மீண்டும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்.//

    ஒரே நேரத்தில் இருவர் மனசில் ஒரே எண்ணத்தை துளிர்க்க வைத்ததே இந்த படைப்புக்குக் கிடைத்த பாராட்டு. நினைத்தாலே மனம் சிலிர்க்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சகோதரரே.

      /ஒரே நேரத்தில் இருவர் மனசில் ஒரே எண்ணத்தை துளிர்க்க வைத்ததே இந்த படைப்புக்குக் கிடைத்த பாராட்டு. நினைத்தாலே மனம் சிலிர்க்கிறது/

      ஆமாம். எனக்கும் ஆச்சரியமாக உள்ளது. ஆனால் அந்த ஆடு நன்றி தெரிவிக்கும் விதத்தை தாங்கள் சொல்லிய விதம் மிக அழகாக இருக்கிறது.

      சிறப்பாக,அற்புதமாக எழுதும் ஒரு நல்ல எழுத்தாளாரால்தான், மற்றொரு சிறப்பாக எழுதும் எழுத்தாளரின் எழுத்துக்களை கூர்ந்து கவனித்து தக்க இடத்தில் பாராட்ட இயலும் என்பதற்கு தங்களின் கருத்துக்கள் சான்று.

      உங்களின் நல்லதொரு கருத்துக்கள் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.அணிலான என்னையும் சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. எழுத்தாளர்கள் என்று தனிப் பிறவி ஏதுமில்லை, சகோதரி! நல்ல வாசகரே பிறர் எழுத்தை வாசித்து வாசித்து பழக்கப் பட்டு 'நாமும் எழுதிப் பார்ப்போமே'
      என்ற உந்துதலில் அடுத்த கட்ட வளர்ச்சியான எழுதும் நிலைக்குப் போகிறார்கள்.
      ஆக, வாசகர் தான் Base.
      சித்திரமும் கைப்பழக்கம் மாதிரி எழுதி எழுதி பழக்கமாவது இது. அவ்வளவு தான்.

      நீக்கு
    3. ஆக, நல்ல வாசகரான நீங்களும் எழுதலாமே! இவ்வளவு நன்றாக எழுதுகிற
      ஆர்வமுள்ள நீங்கள் ஏற்கனவே கதைகள் எழுதி பழக்கப் பட்டவராகத் தான் இருப்பீர்கள். ஒரு கதையை எழுதி எ.பி--க்கு அனுப்பித் தான் பாருங்களேன், சகோ..

      நீக்கு
    4. ஸ்ரீமதி கமலாஹரிஹரன் அவர்களது கருத்துரையால் மனம் நெகிழ்ந்தேன்..

      கதையை அவ்வாறு முடித்ததுமே மனம் கலங்கிற்று...

      தங்களது கருத்துரையைக் கண்டதும் கண்ணீர் வந்து விட்டது...

      இதனையே ஜீவி அண்ணா அவர்களும் குறிப்பிட்டுப் பேசும் போது - என்னே யான் பெற்ற பேறு...

      இப்படியான கருத்துரைகளுக்கு மேல் வேறென்ன வேண்டும்!...

      மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    5. ஸ்ரீமதி கமலாஹரிஹரன் அவர்களும் நன்றாக எழுதுவார்களே..

      நானும் அன்புடன் அழைக்கிறேன்..

      நீக்கு
  34. ஆரம்ப விவரிப்பே அமர்க்களம்... அழகான கதை... அருமையான கதை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  35. ஏதோவொரு குக்கிராமத்துக்குள் நுழைந்து வெளியேறிய உணர்வு வந்தது ஜி

    //ஆகையால் கதைக் களத்துக்குள் தந்தையும் மகனும் வருவதற்கு வாய்ப்பே இல்லை//
    மிகவும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  36. கதைக்கு களம் அவர் வாழ்ந்தகிராமிய சூழல் எனத்தெரிகிறது ஒரு நிகழ்வை கதையாக்கும் துரை செல்வராஜுவுக்கு பாராட்டுகள் பாசாங்கு இல்லாத எழுத்து வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  37. நான் ரசித்த பின்னுட்டம் இது ஜிஎம்பி சார்.

    'பாசாங்கு இல்லாத'-- எவ்வளவு அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்!!

    பதிலளிநீக்கு
  38. ஆஹா... கதை நிகழும் களத்தினை கண் முன் நிறுத்தும் எழுத்து. மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  39. அன்பான கருத்துரைகளால் மனம் நெகிழ்ந்திருக்கிறேன்...

    அனைவருக்கும் நன்றி.. மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!