திங்கள், 7 செப்டம்பர், 2020

"திங்க"க்கிழமை : அக்கி ரொட்டி - கீதா ரெங்கன் ரெஸிப்பி 


அக்கி ரொட்டி

அன்பார்ந்த எபி திங்க வாசகர்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.

வல்லிம்மா, அவங்க அம்மா செய்யும், காய்கள் எல்லாம் சேர்த்த அரிசி ரொட்டி பத்தி போட்டிருந்தாங்க. கேரளத்தில் அரிசி ரொட்டியை பத்ரி என்பாங்க. கர்நாடகாவில் அக்கி ரொட்டி. அக்கி என்றால் அரிசி. பேஸ் அரிசி மாவுதான் என்றாலும் சேர்மானம் சேர்த்துப் பல வகைகளில் செய்யலாம். பேஸ் உலர்ந்த அரிசி மாவிலும் செய்யலாம். இது கூர்க் ஸ்டைலில் செய்தது. அரிசி மாவுடன் சூடாக வடித்த குழைந்த சாதம் கலந்து செய்வது.

இதை பல வகைகளில் செய்யலாம். ஜீரகம் சேர்த்து, ப்ளெயினாகவும் செய்யலாம். கேரட், கொத்தமல்லி சேர்த்தும் செய்யலாம். காய்கள் சேர்த்தும் செய்யலாம். எல்லாம் அவரவர் விருப்பம்.

ரெசிப்பி: 


எபி ஆசிரியர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. நட்புகள், கருத்திடுபவர்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
====

மின்நிலா 016 :  இங்கே சுட்டு(க்கு)ங்க 

=== 

79 கருத்துகள்:

  1. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் வணக்கம் துரை மற்றும் இனி வரப் போகும் அனைவருக்கும்.
      என்றும் மகிழ்ச்சி நிறை ஆரோக்கிய வாழ்வே

      கிடைக்க இறைவன் அருள வேண்டும்.

      நீக்கு
    2. வணக்கம், வணக்கம், எங்கள் வணக்கம்!

      நீக்கு
    3. எல்லோருக்கும் வணக்கம். வல்லிம்மா மிக்க நன்றி. வல்லிம்மா சொன்னாங்க இன்று இந்த திங்க பதிவு என்று.

      இடையில் வந்து பதில் தருகிறேன்.

      மிக்க நன்றி எபி ஆசிரியர்களுக்கு.

      கீதா

      நீக்கு
  3. அன்பு கீதா ரங்கன் அளித்திருக்கும்
    அக்கி ரொட்டியைப் படித்து விட்டு வருகிறேன்.
    வாழ்த்துகள் கீதா.

    பதிலளிநீக்கு
  4. ஓஹோ இதில் சாதம், மெயின் .
    அதனால் ஒரு மீல் மாதிரி ஆகிவிட்டது.

    இது போல செய்து பார்க்கிறேன்.
    நல்ல காய்கறிகள், எல்லாம் ஸேர்த்து
    சுவையான உணவாக அதே சமயம் மொறு மொறு அடை போல இருக்கும்.
    மாமியார் வெறும் அரிசி மாவு வேகவைத்து செய்வார்.
    அத்தோடு உ.கிழங்கும் கலக்கும் போது
    மிக ருசியாக இருக்கும். மிக மிக நன்றி மா கீதா.
    அழகான படங்கள் நல்ல செய்முறை விளக்கம். வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமியார் வெறும் அரிசி மாவு வேகவைத்து செய்வார்.
      அத்தோடு உ.கிழங்கும் கலக்கும் போது
      மிக ருசியாக இருக்கும். //

      ஆமாம் அரிசி மாவு வேகவைத்து செய்வது செய்வாங்க அரிசி ரொட்டின்னு என் பாட்டியும், கேரளத்திலும் அப்படித்தான் செய்வாங்க.

      உருளைக்கிழங்கு கலந்து ஆஹா செஞ்சு பார்த்துவிடுகிறேன்!!

      மிக்க நன்றி வல்லிம்மா

      கீதா

      நீக்கு
  5. என் பெயரை வேற சேர்த்து, அடடா. மகிமைதான்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா நீங்க உங்க ப்ளாக்ல போட்டதைப் பார்த்ததும் அடுத்த முறை செய்யறப்ப ஃபோட்டோ எடுக்க முடிஞ்சா எடுத்து திங்கவுக்கு அனுப்பலாம்னு தோன்றியது.

      மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
    2. வல்லி போட்டதுக்கும் லிங்க் கொடுங்க. நான் படிக்கலை போலிருக்கே! எனக்கு நினைவில் வரலை.

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்தனைகளுக்கு எங்கள் நன்றி.

      நீக்கு
    2. யெஸ் கமலாக்கா ஆமாம் டிட்டோ உங்கள் கருத்திற்கு.

      நன்றி கமலக்கா

      கீதா

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்களில் அருமையான செய்முறையாக அக்கி ரொட்டியை படங்களுடன், செய்முறை விளக்கத்தையும் அழகாக தந்து பகிர்ந்திருக்கும் நம் சகோதரி கீதாரெங்கன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    இந்த ரொட்டி நான் இதுவரை செய்ததில்லை. வேறு எங்கும் சாப்பிட்டதுமில்லை. இங்குள்ள பல உணவகங்களில் இதைப் பார்த்திருக்கிறேன். வெறும் அரிசி மாவில் இதைச் செய்வார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் குழைந்த சாதமும் உடன் சேர்த்து செய்யலாம் என இப்போதுதான் அறிந்து கொண்டேன். சகோதரி அளித்திருக்கும் படங்கள், அதன் விளக்கங்களைப் பார்க்கும் போது சுலபமாக செய்து விடலாம் எனத் தோன்றுகிறது. ஒரு நாள் செய்து பார்க்கிறேன் சகோதரி. பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெறும் அரிசி மாவில்தான் செய்வாங்க கமலாக்கா இது கூர்க் ரெசிப்பின்னு இங்கு சில வருடங்களுக்கு முன் இருந்தப்ப தெரிந்து கொண்டது.

      செஞ்சு பாருங்க வெறும் அரிசிமாவிலோ அல்லது சாதம் கலந்தோ.

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
    2. சாதம் சேர்ப்பது எனக்கும் புது விஷயம். ஆகவே விரத நாட்களில் இதைச் செய்ய முடியாது. அதோடு வெங்காயமும் தேவை போல! தாலி பீத் அடிக்கடி பண்ணுவேன். ஆனால் ரொம்பக் கொஞ்சமாக! ஆளுக்கு ஒன்றரை! சாப்பிடுவதற்குள் போதும் போதும்னு ஆயிடும்.

      நீக்கு
    3. 'தாலி பீத்' பற்றி ரொம்பவே யாரோ பீத்திக்கறாங்களே... நாங்க தமிழர் உணவு மட்டுமே சாப்பிடுவோம். இருந்தாலும் அந்த்ச் சுட்டியைப் போய்ப் பார்க்கிறேன்.

      நீக்கு
  8. அக்கி ரொட்டி - எங்க வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும், என்னைத் தவிர

    நேற்று சேமியா இட்லி சரியா வரலை, வாயில் போட்டுண்டால் போஸ்டர் ஒட்டற பேஸ்ட் சாப்பிட்ட ஃபீலிங்.

    இந்த அக்கி ரொட்டில சாதம் வேற சேர்க்கணும் என்று சொல்லியிருக்கீங்க, அதிலும் சாதம் அதிகம், அரிசி மாவு குறைவு. சரிப்படுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேமியா+ரவை இரண்டையுமே தனித்தனியாக நிறைய நெய்/எண்ணெய் விட்டுச் சிவக்க வறுத்துக்கணும். ஆறியதும் கொஞ்சம் புளித்த தயிரில் கலந்து பத்தே நிமிஷம் வைத்த பின்னர் மீண்டும் தேவையான தயிரைச் சேர்த்து உடனே இட்லித்தட்டில் நீர் சூடானதும் விட்டு வார்த்துடணும். தேவையான பொருட்களைச் சேர்ப்பதூ என்பது வறுக்கும்போதே தாளிதம் மாதிரிப் போட்டுடலாம். கடுகு, க.பருப்பு, உ,பருப்பு, முந்திரி, பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை, பெருங்காயம் போன்றவை. பின்னர் இட்லி வார்க்கையில் பிடித்தால் பொடியாகக் கொத்துமல்லி நறுக்கிச் சேர்க்கலாம். இதுக்கு கொத்சு தான் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. இப்போவெல்லாம் நான் இதெல்லாம் பண்ணுவதே அரிதாகி விட்டது.

      நீக்கு
    2. இதைத்தானே நேற்று பண்ணினேன் கீசா மேடம். நான் சாப்மிட்டால்தான் எண்ணெய் பற்றிக் கவலைப்படுவேன். பசங்க மனைவிக்கு என்பதால் எண்ணெய் நிறையவே விட்டேன், ஆனால் இரண்டையும் சேர்த்துத்தான் வறுத்தேன், இரண்டும் வறுத்த சேமியா, வறுத்த ரவையாக இருந்தபோதும்.

      சில நேரங்களில் காரணம் தெரியாமல் சொதப்புது. ஈனோ போட்டிருக்கணுமான்னு தெரியலை

      நீக்கு
    3. நெல்லை சாதம் சேர்க்காமலும் செய்யலாம் இது கூர்க் என்று பிடிஎம் லே அவுட்டில் இருந்தப்ப கற்றுக் கொண்டது. வீட்டு ஓனர் மல்டி பிசினஸ். அதுல கேட்டரிங்கும் உண்டு. அப்படி அவரிடம் கற்றுக் கொண்டது.

      சாதம் குழைவாக வெந்த தன்மைக்கு ஏற்ப அரிசி மாவு என்பதால் கூட எல்லாம் செய்யாது. சில சமயம் ஈக்வலாகவும் போட வேண்டி வரும். நீங்கள் சூடாகத் தண்ணீர் கலந்து கொண்டும் சாதம் + அரிசி மாவு சேர்த்துப் பிசையலாம். அதனால் தான் அளவு என்று சொல்லவில்லை. ஒரு வேளை எக்ஸ்பெர்ட்ஸ் கரெக்டா அளவு சொல்லுவாங்களா இருக்கலாம். நான் எக்ஸ்பெர்ட் இல்லையே நெல்லை. ஸோ கண்ணளவில் செய்வதால் அளவுந்னு இப்படித்தான் சொல்ல வருகிறது.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  9. ஐந்து ரொட்டிக்கு மூணு சின்ன மிளகாயா?

    காய்லாம் இருப்பதால் தொட்டுக்க எதுவும் வேண்டாம்னு நினைக்கிறேன்.

    படங்களும் செய்முறையும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு காரம் குறைவாகத்தான் வேண்டும் அதனால். கூடுதல் என்றால் நீங்க கூடுதல் போட்டுக் கொள்ளலாம். இதுக்கெல்லாம் அளவு கிடையாது. உங்கள் விருப்பப்படி.

      ஆமாம் காய் இருப்பதால் இதற்குத் தொட்டுக் கொள்ள எதுவுமே வேண்டாம். அப்படியே சாப்பிடலாம் நல்லாருக்கும். கூர்க் ஸ்டைல் என்றால் எள்ளு சட்னி/எள்ளு பாஜி என்று கொடவாஸ் செய்வது. அது போல என்னெகயி/கத்தரிக்காயில் செய்யும் டிஷ் அதுவும். ரொம்ப நல்லாருக்கும்.

      நான் கற்றுக் கொண்டது 3-4 பங்கு சாதம் ஒரு பங்கு அரிசி மாவு.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  10. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவரின் நல்வாழ்வுக்காகவும், மன அமைதிக்காகவும் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  11. அக்கி ரொட்டி போனவாரம் கூடப் பண்ணவானு கேட்டேன். ம்ஹூம்! அப்புறமாப் பண்ணிட்டு நான் மட்டுமே சாப்பிடணும்! ஆனால் மராட்டி தாலி பீத் (கிட்டத்தட்ட அக்கிரொட்டி மாதிரித்தான்) பண்ணி இருக்கேன். ஒன்று சாப்பிடும்போதே வயிறு நிறைந்து விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா தாலி பீத் நல்லாருக்கும். ஒன்றே வயிறு ஃபில்லிங்க்.

      போன வாரம் செஞ்சேன். ஃபோட்டோ எடுக்க முடியவில்லை. அடுத்த முறை செய்யறப்ப எடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  12. http://sivamgss.blogspot.com/2016/04/blog-post.html இங்கே இருக்கு நான் தாலி பீத் பண்ணின கதை! முடிஞ்சவங்க போய் எட்டிப் பாருங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்கிறேன். பையன், தனியா என்னிடம் வந்து என்னை வைத்து டெஸ்ட் பண்ணாதீங்கோன்னு சொல்றான். அதான் யோசனையா இருக்கு ஹிஹிந

      நீக்கு
    2. கீதாக்கா உங்க குறிப்பையும் பார்க்கிறேன்.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
    3. கீதாக்கா என்னது இது இந்த லிங்க் போனால் அங்கும் உங்க கண் பிரச்சனைதான் முதல் வரியா இருக்கு!!!!! இப்பவும் கண் பிரச்சனை...

      கீதா

      நீக்கு
    4. ஹாஹாஹா, இந்தக் கண் பிரச்னையாலேயே நான் கணினிப் பயன்பாட்டைக் குறைத்து விட்டேன். அதிகம் கண்களுக்கு ஓய்வு! மாலை நேரம் சிரமப்பட்டுக்கொண்டு பார்ப்பதைத் தவிர்த்துவிடுகிறேன்.

      நீக்கு
    5. நான் வாசித்திருப்பேன் என்ற நினைவு வந்தது. முதல் லைன் வாசிச்சதுமே என்ன இது வாசித்த பதிவு போல இருக்கிறதே என்று. தோன்றியது. பார்த்தா கரீக்டு நம்ம கமென்டும் அங்கு இருக்கு. இப்ப சொல்ல நினைச்ச அதே கமென்டுதான் அங்கும் போட்டிருக்கிறேன்.

      ம ம குறிப்பு தாலிபீத் போல இல்லையே என்று. நீங்க பதிவுல சொல்லியிருப்பதுதான் தாலிபீத்.

      பூனாவில் நெருங்கிய உறவினர் இருப்பதால் கற்றது.

      கீதா

      நீக்கு
  13. கன்னடத்தில் அக்கி என்றால் அரிசி.
    தமிழில் அக்கி என்றால் குழந்தைகளுக்கு வரும் சிரங்கு.
    அரபியில் அக்கில் என்றால் உணவு.
    அடடே... எல்லாம் மிக்ஸர்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இஃகி, இஃகி, இஃகி என்றால் என்ன?

      நீக்கு
    2. கில்லர்ஜி எல்லா உணவுகளுக்கும் பாத்தீங்கனா சேம் தான் கொஞ்சம் ப்ராசஸ் வித்தியாசத்துல. பேர் தான் மாறுது..

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
    3. தி/கீதா சொல்லிட்டாங்க, இருந்தாலும் நானும் சொல்றேன். நண்பர் ஒருத்தர் தனித்தமிழ் ஆர்வலர் ஹ, ஜ, ஷ, ஸ பயன்படுத்த மாட்டார். அவர் ஹிஹிஹினு சிரிப்புக்குப் போடாமல் இஃகி,இஃகி,இஃகினு போடுவார். அவரைக் கேலி செய்யப் போட ஆரம்பித்து எனக்கும் சில சமயங்களில் அதுவே வழக்கமாகி விட்டது. உ.வே.சா. கட்டுரைகளையும் இன்னும் சிலவற்றையும் விக்கிபீடியாவில் ஏற்றிக் கொண்டிருந்தேன். அதைத் தவிர்த்தும் சில ஆன்மிகப் பயணக்கட்டுரைகளையும் ஏற்றினேன். அப்புறம் பார்த்தால் அதில் நான் போட்டிருந்த ஹ, ஷ, ஸ, ஜ போன்றவற்றைத் திருத்தி இருந்தார்கள். ஜூன் மாதம் சூன் மாதமாக ஆகிவிட்டது. ஜில்லாவை மாவட்டம்னு எழுதி இருந்தாக் கூடப் பேசாமல் இருந்திருக்கலாம். சில்லா! எனப் போட்டிருந்தார்கள். கேட்டால் மூலத்தில் "ஜில்லா" என இருப்பதை ஒரே ஒரு எழுத்தை மட்டும் மாற்றி இருக்கோம் என்றனர். உடனேயே செல்வகுமாரிடம் சொல்லிட்டு விலகிட்டேன்! அதே தமிழ் மரபு அறக்கட்டளையில் ஏற்றிய போது என் இஷ்டத்துக்கு மூலத்தில் உள்ளபடியே எழுத்துக்களை அப்படியே எழுதி ஏற்றினேன். அங்கே தடை சொல்லவில்லை. என்றாலும் இப்போது மரபு விக்கி வேலையையும் சில, பல காரணங்களால் நிறுத்தி விட்டேன். :( இஃகி,இஃகி, என்னைப் பிடித்துக்கொண்ட நீண்ட வரலாறு இது! துரை சொன்னது போல் ஜூலையை "சூலை" என எழுதுவதால் அர்த்தமே மாறிப் போகிறது. சொன்னால் விரோதம்! ஒதுங்கி இருப்பதே நல்லது!

      நீக்கு
    4. இந்த கீசா மேடம் இன்னும் திருந்தி தனித் தமிழ்ல எழுதக் கத்துக்கலையே.

      இஷ்டம் - இட்டம். கஷ்டம் - கட்டம். விரோதம் - தவறு. பங்கஜம் - பங்கயம். வைஷ்ணவன் - வைட்டினவன் இப்பீல்லாம் எழுதக் கத்துக்கோங்க. வாழ்த்துகள்.

      நீக்கு
  14. வெறுமரிசியில் தேங்காய் சேர்த்து அரைத்துஅடையாக வார்க்கலாம் ருசியாக இருக்கும் எங்கள் வீட்டில் செய்வது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பச்சரிசியா அல்லது புழுங்கல் அரிசியா?

      நீக்கு
    2. ஜிஎம்பி சார் எங்க வீட்டுலயும் செய்வதுண்டு நீங்கள் சொல்லியிருப்பது. பாலக்காட்டு ஸ்பெஷல்

      மிக்க நன்றி ஜி எம்பி சார்.

      கௌ அண்ணா இது புழுங்கலரிசியில் செய்வதுண்டு. நல்லா ஊற வைச்சு கரகர என்று அரைக்கணும். தேங்காயும் சேர்த்து ரொம்ப தண்ணி சேர்க்காமல் கெட்டியா அரைச்சு கையால தட்டியும் செய்யலாம். என் மாமியார் கொஞ்சம் நைசாக அரைத்து கட்டி தோசை போல செய்வார். ஏனென்றால் அவரால் கடிக்க முடியாது என்பதால். நல்ல டேஸ்டியா இருக்கும். இதுல பெருங்காயம் வற்றல் மிளகாய் சேர்த்து அரைத்தும் செய்யலாம்

      பானுக்கா கூடச் செய்வாங்க!!!!!!

      பச்சரிசியில் செய்வதானால் அது வேறு பெயர்.

      கீதா

      நீக்கு
    3. வெறும் அரிசி அடை எங்க வீட்டிலும் பண்ணுவோம். இதில் முருங்கைக்கீரை போட்டு நான் பண்ணுவேன். பானுமதி இதை "திங்கக்" கிழமைப் பதிவில் போட்டப்போக் கூட எழுதி இருந்தேன். பச்சரிசியிலும் தேங்காய் சேர்த்து நன்கு நைசாக அரைத்து நீர் தோசை அல்லது ஆப்பம் மாதிரிப் பண்ணுவேன். ஆப்பச் சட்டியை இப்போல்லாம் தூக்க முடியாததால் தோசைக்கல்லிலேயே பண்ணி விடுவேன். சிவப்பு மிளகாய் வற்றலை ஊறவைத்துத் தேங்காய்+பொட்டுக்கடலை போட்டு அரைக்கும் சட்னி இதுக்கு நன்றாக இருக்கும்.

      நீக்கு
  15. ஆஹா... அக்கி ரொட்டி

    எனக்கு ரொம்ப பிடிக்கும் ...நானும் செய்வது உண்டு...ஆனால் இப்படி சாதம் சேர்த்து செஞ்சது இல்ல...அடுத்த முறை இப்படி try பன்றேன் கீதா அக்கா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அனு. இப்படியும் செஞ்சு பாருங்க...நல்லாருக்கும்

      மிக்க நன்றி அனு

      கீதா

      நீக்கு
  16. செய்முறையுடன் பல்வேறு குறிப்புகள்...
    சமையலறை வசப்பட்டிருந்தால் செய்திருக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா அதானே! உங்க வசப்பட்டிருந்தால் எப்போ முடிகிறதோ செய்து பாருங்க துரை அண்ணா

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  17. அக்கி ரொட்டி இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயர் தான் கர்நாடகா பெயர் ஐயா. நம்மூரில் அரிசி ரொட்டி அவ்வளவுதான்

      மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா

      கீதா

      நீக்கு
  18. இது போல் செய்ததில்லை... ஆனாலும் நன்றாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிடி உங்க வீட்டுல சொல்லுங்க..செஞ்சு தருவாங்க. நம்மைப் போல இனிமையானவங்களும் சாப்பிடலாம்!!!!!! ஹா ஹா ஹா

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  19. ரொம்ப ரொம்ப வருஷத்துக்கு முன்னே பெங்களூரு ஹாஸ்டலில் என் தங்கையுடன் இரு நாட்கள் தங்கியிருந்த போது இந்த அக்கி ரொட்டி சாப்பிட்டிருக்கிறேன், காய்கறிகள் இல்லாமல்!! இப்போது உங்கள் சத்தான செய்முறை கிடைத்தது -மிக்க நன்றி! செய்து பார்க்கிறேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பொதுவாகப் ப்ளெயினாகத்தான் செய்வதுண்டு. அதுதான் ஒரிஜினல். நம் வீட்டில் அப்படியும் செய்வதுண்டு. இப்படிக் காய்கள் சேர்த்தும் செய்வதுண்டு. கொஞ்சம் நல்லதாச்சே என்று.

      செய்து பாருங்க மிகிமா

      மிக்க நன்றி மிகிமா

      கீதா

      நீக்கு
  20. கூர்க் அக்கி ரொட்டி படங்களுடன் செய்முறை அருமை.
    செய்து பார்க்கிறேன் கீதா.

    பதிலளிநீக்கு
  21. கோவையில் என் அத்தை வீட்டு பின் வீட்டில் இருப்பவர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் அவர்களிடம் கற்றுக் கொண்டு அக்கை ரொட்டி செய்வோம் எங்கள் வீட்டில்.
    சாதம் கலந்து கூர்க் அக்கி ரொட்டி செய்தது இல்லை . சாதம் கலந்து செய்வதால் சாப்பிட முறுகலாகவும், மெதுவாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா வெறும் பதப்படுத்திய அரிசி மாவில் செய்வதும் நன்றாக இருக்க்ம் என்றாலும் இதுவும் நீங்கள் சொல்வது போலத்தான் இருக்கும்.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  22. கேரளத்து பத்திரி வேறு. அதுமிக்க மெலிதாக இருக்கும். பெரும்பாலும் அசைவ பதார்த்தங்களுடன் சாப்பிடப் படும். வறுத்த பச்சரிசி மாவில் செய்வது.

    சோற்றில் காய் சேர்த்து ரொட்டி உண்டாக்குவதற்கு பதில் பிரைய்ட்  ரைஸ் ஆக சாப்பிடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்திரியும் வறுத்த அரிசி மாவில் செய்வதுதான். அக்கியும் வறுத்த அரிசி மாவு/பதப்படுத்திய மாவில் செய்வதுதான். மெலிதாகத்தான் தட்டுவது இரண்டுமே. நான் பத்திரியும் செய்வதுண்டு. அத்னால்தான் சொல்கிறேன் அதிகம் வித்தியாசம் கிடையாது என்று.

      சோற்றில் மட்டும் செய்வதில்லை இது. இது வேறு சுவை, ஃப்ரைட் ரைஸ் வேறு சுவை. இரண்டிற்கும் சுவை வேறுபாடு உண்டு.

      மிக்க நன்றி ஜேகே அண்ணா

      கீதா

      நீக்கு
  23. யாருமே மின்நிலா பார்க்கவில்லையா! சுட்டி கொடுத்தது வெட்டிதானா !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போத் தான் போய்ப் பார்த்தேன்.வல்லியின் நாடி ஜோதிடம் பற்றிய கடைசிப் பகுதி கொஞ்சம் சப்பென்றாகி விட்டது. தாமிரம் பற்றிச் சொல்லி இருப்பவை ஏற்கெனவே அறிந்தாலும் மீண்டும் படித்தேன். எடுத்தவுடனே போட்டிருக்கும் தாமிரச் செம்பு+தம்பளர் சேர்ந்த பாத்திரம் வடக்கே ரொம்பப்பிரபலம். நல்லா இருக்கு.

      நீக்கு
    2. தாமிரப் பாத்திரத்தில் இளநீர் வைத்துக் குடித்தவர் உயிருக்குப் போராட்டம் என்றொரு வாட்ஸாப் பார்வேர்ட் பார்த்தேன்!

      நீக்கு
    3. கௌ அண்ணா மின் நிலா டவுன்லோட் செய்துவிட்டேன். இனிதான் வாசிக்க வேண்டும். கொஞ்சம் வேலைப்பளு. அத்னால்தான் சொல்ல இயலவில்லை...வாசிக்கிறேன்.

      கீதா

      நீக்கு
    4. தாமிரப் பாத்திரத்தில் தண்ணீர் தவிர வேறு எதுவும் வைக்கக்கூடாது. அட! ஸ்ரீராம்!!

      நீக்கு
    5. @Sriram, Welcome back! இளநீரெல்லாம் தாமிரப் பாத்திரத்தில் வைக்கக்கூடாது. அதே போல் உள்ளே ஈயம் பூசாமல் சமைக்கவும் கூடாது. பொதுவாகச் சமைப்பதைத் தவிர்ப்பது நல்லது.

      நீக்கு
  24. மின்னூல் எங்கே இருக்கிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் இறுதியில் உள்ள சுட்டியில் click செய்யவும்.

      நீக்கு
  25. படித்தேன். மிக நன்றாக இருந்தது. செம்பின் பயணமும்,
    மைனா,மலர் அனைத்துமே நன்று.

    இன்னும்சிறக்க என்ன செய்யலாம் என்று
    யோசனை வருகிறது.

    பதிலளிநீக்கு
  26. நல்லதொரு குறிப்பு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!