வியாழன், 18 மார்ச், 2021

குறை... குறை... குறைகளைக் குறை...

குறையில்லாத மனிதர்கள் யார்?  நாம் அடிக்கடி சொல்லும் வார்த்தை.  அது வேறு அர்த்தம்.  'குணம் நாடி குற்றமும் நாடி' பொருளில் வரும்.  அவர்களிடம் குறை அதாவது திருடுதல்,  ஏமாற்றுதல், வஞ்சித்தல், பொய்ச்சொல்லுதல் ன்று குணத்தில் குறை இருந்தாலும் பாராட்டக் கூடாது என்னும் பொருளில்.
நான் சொல்ல வருவது வேறு.  கோடி கோடியாய் பணம் இருந்தாலும் அதை வைத்திருப்பவர்களுக்கு மனதில் ஏதோ குறை இருந்து கொண்டே இருக்கும்!

பார்த்துப் பார்த்து எவ்வளவு செய்தாலும் ஒரு நொடி சிரித்து மறுநொடி அதிலும் ஏதாவது ஒரு குறை காணும் குணம்.  எல்லாமே எப்போதுமே மனதுக்கிசைந்தபடி வசதியாய் அமைந்துவிடுமா என்ன!  

வீட்டில் பார்த்து வைத்துத் திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர், காதலித்து மணந்துகொண்ட தன் தோழியிடம்,  'உங்களுக்குள் நல்ல அண்டர்ஸ்டேண்டிங் இருக்கும்' என்கிற ரீதியில் குறைப்பட, பதிலுக்கு அவர் 'அப்படி எல்லாம் இல்லை.  உனக்காவது உன் குறைகளை உன் வீட்டில் சொல்லலாம், ஆனால் நான் அப்படிச் சொல்ல முடியாது.  நானே தேடிக்கொண்டது என்று இடிக்கிறார்கள்' என்றார்.

'உனக்கும் கீழே உள்ளவர் கோடி..  நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு' என்று ஈஸியாகப் பாடி வைத்துவிட்டுச் சென்று விட்டார் கவிஞர்.  அவ்வளவு எளிதாக முடிகிறதா என்ன?  பணவிஷயம் என்று இல்லை.  எல்லா விஷயத்திலும்.

குறுகிய தெரு ஒன்றில் இரவில் நடந்து  கொண்டிருந்தபோது மின்சாரம் தடைப்பட்டுவிட, கும்மிருட்டில் குழம்பிப்போனவன் "அடச்சே..."  என்று வாய்விட்டே அரற்றிவிட, "என்னாச்சு" என்கிறான் கூட வந்து கொண்டிருந்த கண் தெரியாத நண்பன்.  "கரன்ட்டு போச்சு...  ஒரே இருட்டு"  என்று சொல்லும் இவனுக்கு அவனிடமிருந்து  "ஓ."  என்பதைத்தவிர பதில் இல்லை.  மேஜர் சந்திரகாந்த் நினைவுக்கு வருகிறதா?

ஒவ்வொரு வார்த்தையிலும் குறை வைத்திருக்கும் நண்பர் ஒருவர் இருக்கிறார்.  பேச ஆரம்பித்தால் நமக்கு அலுத்துவிடும்.  மருமகள் கீரையே வாங்கி சமைப்பதில்லை என்பதிலிருந்து அன்றாட வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் குறையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவர்.  எனக்குத் தெரிந்து நிறையாக அவர் எதுவும் சொல்லிக் கேட்டதே இல்லை நான்.  மனைவியிடமும், அவர் பெற்றோரிடமும் கூட அவர் நிறைகளைக் கண்டதில்லை.  "அப்போல்லாம் தம்பிக்கு மூணு பூரி நாலு பூரி கொடுப்பார் அம்மா..  எனக்கு எப்பவும் ரெண்டுதான்!"

தன் மனதில் உள்ள குறைகளை யாரிடமாவது சொன்னால் பாரம் குறையும்தான். எப்போதும், எல்லோரிடமும் சொன்னால்?  இதில் இன்னொரு விஷயம் இப்படி எல்லாவற்றிலும் திருப்தி இல்லாதவர்கள் தன் மக்களை பற்றி மற்றவர்களிடம் சொன்னால் அந்த மக்களை மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள்?  இல்லை, இவரைப்பற்றியே என்ன நினைப்பார்கள்?

ஒருவர் இருக்கிறார்    இன்று நிறையாக சொல்லும் ஒன்றையே மறுநாள் மூட் மாறி குறையாக மாற்றி வாதிடும் குணம்.  

"எனக்கு யாரும் இல்லை, என்னிடம் யாரும் பேசுவதில்லை, எனக்கு யாரும் எதுவும் செய்ததில்லை"  என்று வேறொருவர்.  இவர் யாரிடமும் தானாக பேச மாட்டார்.  ஆனால் எல்லோரும் இவரிடம்  வந்து பேசவேண்டும்.  சரி, போனால் போகிறது என்று அப்படிப் பேசினால்தான் கலகலப்பாக மனம் திறந்து பேசி விடுவாரா என்றால், அதுவும் கிடையாது.  பாதி நேரம் தொலைக்காட்சியில்  உருப்படாத வாய்ச் சண்டைகள், அழுவாச்சித் தொடர்கள் என்று பார்த்துக் கொண்டு அரைகுறையாக உம் கொட்டி பாதி மௌனத்தில் பேசுவார்.  பிறகு அவரிடம் பேசுவதை யார் விரும்புவார்?

இவ்வளவு பேசற உன்னிடம் குறையே கிடையாதா?  உண்டுங்க..  இல்லாமல் இருக்குமா?  யாரிடமும் சொல்வதில்லை, மேலும் முடிந்தவரை அவற்றில் இயன்றவற்றை நானே நிவர்த்தி செய்துகொள்கிறேன்.  முடியாததாகி அவ்வளவுதான் என்று விட்டு விடுகிறேன்.  

குறை இல்லாத பெரு வாழ்வு வாழவேண்டும் என்கிற வாழ்த்துக்கு வேறு பொருளும் உண்டு போலும்!

====================================================================================================

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஸ்ரீஹரி வைத்தியம் பற்றி பேசிய ஞாபகம்.  நான் சில எடுத்து வைத்திருந்தேன்.  அதில் கிடைத்த ஒன்று...



=========================================================================================

சக்தி இல்லையேல்.....



=========================================================================================

கலாப்ரியாவும், ஞானக்கூத்தனும் கல்யாண் ஜியும்... 



===============================================================================================

தினமலர் 'சொல்கிறார்கள்' பகுதியில் படித்த ஒரு சுவாரஸ்யம்.  நான் வளர்த்த இரண்டு செல்லங்களுக்கும் வைத்தியம் பார்த்த அனுபவமும், அல்லது வைத்தியம் பார்க்கும்போது பிடித்துக்கொண்ட அனுபவமும் என்று சொல்வது பொருந்தும்.   அதிலும் என் இரண்டு செல்லங்களில் இவன் ரொம்ப முரடன்.  எங்களையே பார்த்து பற்களைக்  காட்டுவான்!  கோபக்காரன்.  ஆனால் இவனுக்குதான் அதிக வைத்தியம் செய்ய வேண்டி இருந்தது.


கேஜிஎஸ் வீட்டில் அவர் வளர்த்த செல்லத்துக்கு வைத்தியம் பார்க்கும்போது அதைப் பிடித்துக்கொண்ட அனுபவமும் எனக்கு உண்டு. அதன் பெயர் பென்ஜி.   'இரும்பு கேட்'டில் கட்டி, கேட்டுக்குப் பின் சங்கிலியை வளைத்துப் பிடித்துக்கொண்டு...  நாம் வளர்க்கும் செல்லம்தான்.  ஆனால் அந்த நொடி இதயத்தில் அடிக்கும் துடிப்பு இருக்கிறதே....  இனி அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!

செல்லப் பிராணிகளாக கால்நடைகளை வளர்க்கும் போது, கவனமாக இருக்க வேண்டும் என, தன் அனுபவத்தை கூறும், டாக்டர் பா.நாகராஜன்: 

'நோய் நாடி நோய் முதல் நாடி' என, திருவள்ளுவர் சொல்வது போல, செல்லப் பிராணிகளுக்கு என்ன நோய் வந்துள்ளது என கண்டறிவது அவசியம்.

நோய்களை கண்டறிய, மனிதர்களுக்கு இருப்பது போன்ற பல கருவிகள் இப்போது உள்ளன. சில ஆண்டு களுக்கு முன் அப்படி இல்லை. நகரின், வி.ஐ.பி., ஒருவர், தன் செல்ல நாயை என்னிடம் அழைத்து வந்தார்.

நிற்க முடியவில்லை. எழுந்து நிற்கும்; உடனே மயங்கி விழுந்து விடும். அதற்கு என்ன பிரச்னை என்று தெரியாமல் மிகவும் கலங்கிப் போயிருந்தார். சில அடிப்படை சோதனைகளை செய்ததும், அந்த நாயின் கணையத்தில் கட்டி இருப்பதை கண்டறிந்தேன்.



ரத்த சர்க்கரை அளவை பொருட்படுத்தாமல், இன்சுலின் தொடர்ந்து சுரந்து கொண்டிருக்கும், 'இன்சுலினோமா' என்ற நோய் இருப்பதாக கூறினேன்.

நான் சொன்னதை உறுதிப்படுத்த, அந்த, வி.ஐ.பி., வெளிநாட்டு டாக்டர்களிடம் எல்லாம் கருத்து கேட்டு, கடைசியில் நான் சொன்னது தான் சரி என்பதை உணர்ந்தார். அந்த கட்டியை அகற்றி, சில நாட்களில் அந்த நாய்க்கு இருந்த பிரச்னையை சரிப்படுத்தினேன்.

நாயோ, பூனையோ நம் கிளினிக் வரும் போது, அதை கையாளும் விதம், அதை கட்டுப்படுத்தும் முறைகள் முக்கியம். குறிப்பாக, வீடுகளில் அமைதியாக இருக்கும் செல்லப் பிராணிகள், கிளினிக் போன்ற இடங்களுக்கு வந்ததும், அசுரத்தனமாக மாறி விடும்.

'நான் என்ன சொன்னாலும், என் செல்லம் கேட்கும்' என, செல்லப் பிராணிகளின் உறவினர்கள் கேட்பதை நம்பக் கூடாது.

முன்னெச்சரிக்கையாக பல நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு தான், அந்த பிராணிகளை கையாள வேண்டும். உரிமையாளர்கள் கூறியதை நம்பி, அவர்களின் செல்லப் பிராணிகளிடம் கடி வாங்காத டாக்டர்களே இருக்க முடியாது.

அதுபோல, சில பிராணிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து, மயங்க வைத்திருப்போம். அவை மயங்கித்தானே கிடக்கிறது என பக்கத்தில் சென்றால், அவ்வளவு தான்.

இப்படித் தான் ஒரு முறை, நாய் ஒன்றுக்கு ஆப்பரேஷன். மயக்க மருந்து கொடுத்து, மயங்க வைத்து, அறுவை சிகிச்சை செய்து, கையை கழுவிக் கொண்டிருந்தேன்.

தற்செயலாக பின்னால் திரும்பிப் பார்த்தேன். கர்ண கடூரமாக பார்த்தபடி நின்று கொண்டிருந்தது அந்த நாய். அதன் கடியிலிருந்து தப்பிக்க, நான் ஓடிய ஓட்டம் இருக்கிறதே... அதை சொல்லி மாளாது.

நாய், பூனைகளை அழைத்து வரும் போது, அதன் கழுத்து பட்டை, வலுவாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். வீட்டில் சாதுவாக இருக்கும் அவை, எங்களைப் பார்த்த உடன், கழுத்து பட்டையை பிய்த்து, பாய்ந்து விடும்!

====================================================================================================

அவ்வளவு பசிச்சா எடுத்துக் போட்டு சாப்பிட வேண்டியதுதானே மிஸ்டர்....!


*******************************************************************************************************

125 கருத்துகள்:

  1. வளாகத்தில் நாய்களுக்காக தனி இடம் உண்டு. நாய் வளர்ப்பவர்கள் அங்கு நாயைக் கூட்டிச் சென்று காலைக்கடன்களை முடிப்பர். அந்த வழியாக நடந்து வந்துகொண்டிருந்தபோது ஒரு நாய் குலைத்தது. வளர்ப்பவர்களுக்குச் செல்லம் என்றாலும் மற்றவர்களுக்கு அது விலங்குதானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம்.  மற்றவர்களுக்கு பயமாகத்தான் இருக்கும்.

      நீக்கு
    2. அன்பின் ஸ்ரீராமுக்கும் வரப் போகும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..
      எல்லா.
      நாட்களும் ஆரோக்கியம் பொலிந்து
      அனைவரும் நல் வாழ்வு பெற வேண்டும்.

      நீக்கு
    3. வாங்க வல்லிம்மா...  வணக்கம்..  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. மிக சுவாரஸ்யமான வியாழக்கிழமை.ஸ்ரீராமுக்கு
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. கடைசி ஜோக்.. நகைச்சுவைதான்.
    பசியோ... இல்ல அவருக்குப் ஃபோன் பேசணுமோ!!!!!!!
    என்ன முகபாவம்:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பவும் விடாமல் போன் பேசும் பழக்கம் இருக்கிறதே...  என்ன, அப்போது லேண்ட்லைன், இப்போது அலைபேசி!

      நீக்கு
  4. இங்கே பல செல்லங்கள் நடைக்கு அழைத்துச் செல்கின்றன. ஒன்றைத்தவிர மற்றவை அனைத்தும் நிஜமாகவே செல்லங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே நான் சொல்லி உள்ள என் செல்லம் போல சில முரடுகளும் இருக்கும்தான்!!

      நீக்கு
  5. கேஜி எஸ்ஸின் பதிவு வெகு சிறப்பு.
    அவர் கால் நடை மருத்துவரா??
    ஆபரேஷன் செய்யப்பட்ட நாயின் கதை மெய் சிலிர்க்க வைக்கிறது. குலை நடுங்குகிறது என்பார்களே அது போல்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேஜிஎஸ் சொன்னதல்ல அது.  நாகராஜன் எனும் கால்நடை மருத்துவர் சொன்னது.  அதனுடன் என் அனுபவத்தைச் சேர்த்திருக்கிறேன்.

      நீக்கு
  6. 'உனக்கும் கீழே உள்ளவர் கோடி.. நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு' என்று ஈஸியாகப் பாடி வைத்துவிட்டுச் சென்று விட்டார் கவிஞர். அவ்வளவு எளிதாக முடிகிறதா என்ன?////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////// குறை இல்லாத மனிதர்கள் யார். ஏதோ குறை ஏதொ
    புலம்பல். என் மாமியாரின் ஒன்று விட்ட சகோதரி
    அவ்வளாம் பெரிய பணக்காரர்.

    சில தினங்கள் அவர் வந்து பேசிவிட்டுப் போகும் போது,அம்மா சொல்வார்.
    ''அழறத்துக்குன்னே இங்கே வருகிறாளே.
    நேத்திக்கு சினிமா போன போது என்னை அழைத்துப் போயிருந்தால்
    அதையும் பார்த்துட்டு இன்னிக்கு இந்தப் பேச்சையும் கேட்கலாம்.
    இங்கே என்ன கௌன்சலிங்க் நு போர்ட் போட்டிருக்கோ" என்று அலுத்துக் கொள்வார்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா...  ஹா...    சிவாஜி சௌகார் படமாய்  இருந்தால் சினிமாவிலும் அழுதிருக்கலாம்!

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் இனிமையும் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் பெருகப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா.. வணக்கம். இணைந்தே பிரார்த்திப்போம்.

      நீக்கு
  8. எங்க மோதியை மருத்துவர் கிட்டேக் காட்டும்போது ஸ்ரீராம் சொல்றாப்போல் தான் வாசல் இரும்புக் கதவு அல்லது வராந்தாவின் இரும்புக்கதவில் கட்டிப் போட்டு வாயில் துணியை அடைத்துவிட்டு இறுக்கிப் பிடித்துக் கொள்வோம். நானே பிடித்துக் கொண்டிருந்திருக்கேன். இப்போது அதெல்லாம் முடியுமா என்பதே சந்தேகம். எங்க பெண் இப்போதும் அவள் செல்லத்திக்கு சிசுருஷைகள் செய்து வருகிறாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வளர்ப்பவர்கள் பிடித்துக் கொள்வதே கூட ரிஸ்க் ஆக இருக்கும். இப்போது என் மகன்கள் அவ்வளவு பொறுமையாக குளிப்பாட்டுவது, பார்த்துக் கொள்வது எல்லாம் செய்வார்களா என்பது சந்தேகமே..

      நீக்கு
  9. குறைகள் இல்லாத மனிதரே இல்லை. இருக்கவும் மாட்டார்கள். பொதுவாக லௌகிக விஷயங்களில் குறை என்பதைப் பொருட்படுத்த வேண்டியதே இல்லை. ஆனால் மனக்குறை எனில் அதை தீர்க்கமாகக் கவனித்துச் சரி செய்யணும் என்பது என் கருத்து. மத்தபடி அவங்க பேசலை, இவங்க பேசலை, இவங்க சாப்பிடக் கூப்பிடலைனு எல்லாம் குறை இருந்தால் தள்ளிவிட்டுப் போகணும். அவங்க அவங்களுக்கூ என்ன வேலையோ கூப்பிடலை. பேசலை. நேரம் இருந்து பேசறாங்களா அப்போ நாமும் பேசலாம்.

    பதிலளிநீக்கு
  10. சிலருக்கு அதிகம் உறவாடுவதோ, கொடுத்து வாங்குவதோ பிடிக்காது. சென்னையில் அம்பத்தூரில் அக்கம்பக்கம் கொடுத்து வாங்குவது அதிகம். சில சமயங்களில் பக்கத்து வீட்டு மாமிகள் இன்னிக்கு இது பண்ணப் போறேன். சாப்பிடும்போது கேட்டு வாங்கிக்கோ என்றோ நான் சாப்பிடும் முன்னால் கொடுத்துடுவாங்க.இங்கே அப்படி எல்லாம் கொடுத்து வாங்க முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். தஞ்சை, மதுரையில் எங்கள் ஏரியாவிலும் இந்தப் பழக்கங்கள் இருந்தது. சென்னை வந்து இல்லை.

      நீக்கு
    2. ஹாஹாஹா, நான் சென்னையில் இருந்தது என்பதை நீங்க இல்லை என்கிறீர்களே ஸ்ரீராம்?இஃகி,இஃகி,இஃகி! இப்போவும் மாம்பலத்தில் தம்பி வீட்டில் எது பண்ணினாலும் நிறையப் பண்ணணும். எதிர் வீடு, கீழ் வீடுகள் எனக் கொடுப்பாள் தம்பி மனைவி. அவங்களுக்கும் அதே போல் வரும். நேத்திக்கு சேவை பிழியும்போது இரண்டே தட்டுத் தான் வைச்சேன் இட்லியாக மாவை வார்க்க. இதுவே சென்னை/அம்பத்தூரானால் இது போதுமா என்னும் எண்ணமும் கூட வே வந்தது. அங்கே எதிர், பக்கத்து வீடுகள், அண்ணா வீடு, நாத்தனார் வீடு/அவங்களோடயே வசிக்கும் அவங்க ஓரகத்திகள் எனப் பெரிய பட்டியல்!

      நீக்கு
    3. காலையில் பாதி கருத்துச் சொல்லிட்டிருக்கும்போதே பெண் கூப்பிட்டதால் போயிட்டேன். பின்னர் வர முடியலை. கவிதைகள் காலையிலேயே படிச்சாலும் கருத்துச் சொல்ல முடியலை. மோசிகீரனார் பற்றிய கவிதையும் கல்யாண்ஜியின் கவிதையும் கணையாழியிலேயே படிச்ச நினைவு. இப்போதும் கணையாழி வருது இடது சாரிச் சிந்தனைகளோடு. திரு கஸ்தூரி ரங்கனும், சித்தப்பாவும் இருந்திருந்தால் என்னும் எண்ணம் தோன்றியதைத் தவிர்க்க முடியலை. இப்போதெல்லாம் கணையாழி என்ன எந்த வார, மாத இதழ்களுமே படிப்பதில்லைனு வைச்சிருக்கேன்.

      நீக்கு
    4. 1. எங்களை பொறுத்தவரை சென்னையில் இல்லை கீதா அக்கா.   ஏனென்றால் எங்கள் வீட்டுக்கு அருகில் இரண்டே வீடு!  தஞ்சையில், மதுரையில் நாங்கள் இருந்தது ஹௌசிங் யூனிட்டில்.  எனவே அங்கு வாய்ப்பு அதிகம்.

      நீக்கு
    5. 2. கணையாழி இன்னும் வாங்கறீங்களா?   ஆச்சர்யம்தான்.  முன்பு போல இல்லை என்பதுதான் கணையாழியின் நிலையும் என்று தோன்றும்.

      நீக்கு
    6. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கணையாழி வாங்கறதே இல்லை. நடுவில் நின்று போய் ஆரம்பித்த பின்னர் அவை சுத்ததமிழர்கள் கைகளில் இப்போ இருக்கிறது. மின் தமிழின் ஒருங்கிணைப்பாளரும், ஆரம்பித்தவருமான சுபாஷிணி தான் அதன் ஆசிரியராக இருந்தார். இப்போ நிலவரம் தெரியாது. கணையாழியைப் பார்த்தோ/படித்தோ 30வருடங்களுக்கும் மேல் ஆகின்றன. இப்போதைய கணையாழி இதழ்களின் விமரிசனங்கள் மின் தமிழ்க் குழுமத்தில் வந்து கொண்டிருந்ததை நான் தனியாக ஒரு பதிவில் இணைத்து வரும் வேலையைச் செய்து கொண்டிருந்தேன்.

      நீக்கு
    7. //இப்போதும் கணையாழி வருது //

      இந்த வரியைப் படித்ததும் உங்கள் வீட்டுக்கே வருகிறது என்று நினைத்து விட்டேன்!! :)))

      நீக்கு
  11. இங்கே நான் பார்த்த வரையில் வீட்டில் வளர்க்கும் நாய்கள்கிட்ட தைரியமாக செல்லலாம் சில நாய்கள் பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்கும் ஆனால் அதைன் அருகில போனால் அவ்வளவு சாதுவாக இருக்கும் ஆனால அதை சமயத்தில் சிலர் நாய் வளர்ப்பார்கள் அதன் பக்கத்தைல் நாம் போக முடியாது அவை வேட்டை நாய்கள் மிக மிக பெரிதாக இருக்கும் அப்படிபட்ட நாய்கள் இருக்கின்றன என்பதே எனக்கு தெரியாது சில ஆண்டுகள் முன்பு என் கொளுந்தியா வீட்டிற்கு போய்விட்டு வரும் போது ( அது நீண்ட பயணம்) வரும் வழியில் பாதி தூரத்த்தில் ரூம் எடுத்து தங்கலாம் என்று போனால் எங்குமே ரூம் கிடைக்கவில்லை கடைசியில் ஒரு இடத்தில் ஒரு ரூம் கிடைத்தது அப்போது விசாரித்ததில் அந்த ஊரில் அன்று இரவு அந்த மாநிலத்தில் உள்ள வேட்டை நாய்கள் வளர்க்கும் அனைவரும் அங்குள்ள காட்டில் வேட்டையாட வந்து இருக்கிறார்கள் அது ஒரு காம்படிசனாம் எந்த நாய் அதிக மிருகங்களை வேட்டையாடுகிறதோ அதற்கு பரரிசுகள் உண்டாம் அந்த நாய்களை நாம் கிட்ட கூட போய் பார்க்க முடியாது அவ்வளவு பெரிதாக இருக்கிறது



    என் வீட்டு நாய்க்குட்டியை ஹாஸ்பிடலுக்கு கூட்டி போகும் போது அது சின்னபுள்ளை பயப்படுகிற மாதிரி பயந்து சாவும் எங்கிட்ட அப்படியே ஒட்டிக்கும் அதன் ஹார்ட் பீட் மிகவும் வேகமாக அடிக்க தொடங்கும் அதை பார்க்கும் போதே நம் மனது அதை விட வேகமாக அடித்து கண்ணில் கண்ணீரே வரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அது சின்னபுள்ளை பயப்படுகிற மாதிரி பயந்து சாவும் எங்கிட்ட அப்படியே ஒட்டிக்கும் அதன் ஹார்ட் பீட் மிகவும் வேகமாக அடிக்க தொடங்கும் //

      படிக்கவே பாவமாக இருக்கு. நான் வளர்த்த செல்லங்களைக் குளிக்கக் கூப்பிட்டுப் போதே பெரும்பாடு. தரையைத் தேய்த்துக் கொண்டே சண்டித்தனம் பண்ணும்.

      நீக்கு
    2. ஹாஹாஹா, குளிப்பாட்டுவது அவர் வேலை. அதைச் சங்கிலியோடு விளையாடிக் கொண்டே இழுத்துச் செல்வார். மோதியும் இப்படித் தான்! எப்படியோ புரிஞ்சுக்கும். தரையைத் தேய்த்துக்கொண்டே போகும். கடிக்கிறாப்போல் பயமுறுத்தி எல்லாம் பார்க்கும். சங்கிலியை நெருக்கிக் கட்டி விட்டு ட்யூபால் தண்ணீரை அதன் மேல் அடிப்பார். பின்னர் அதற்கென இருந்த சோப்பைத் தேய்த்துக் குளிப்பாட்டுவார். அதற்கு நகர முடியாமல் இருக்கும் என்பதால் திரும்பி எல்லாம் எதுவும் செய்ய முடியாது. குளித்த பின்னர் வெயிலில் காய வைக்கலாம்னு விட்டால் நேரே மணலில் அல்லது தோட்டத்து மண்ணில் போய்ப் புரண்டு விட்டு வரும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    3. ஆமாம்.  நான் குளியலறைக்கு கதவை  மூடி விடுவேன்,  குளித்ததும் மண்ணுக்கு ஓடும் என்பதால் வாசல் கதவையும் மூடி விடுவேன்.   வாசலுக்கு ஓடி, கதவு மூடி இருக்கிறது என்று தெரிந்ததும் அங்கு வைத்திருக்கும் கால் மிதியில் வந்து விழுந்து புரளும்.  வீடு முழுக்க நிற்காமல் இங்கும் அங்கும் விடாமல் ஓடும்!  சட்டென என் மடியில் தாவி ஏறி கைலியில் புதைந்துகொள்ளும்! 

      நீக்கு
    4. எனக்கு இந்த பிரச்சனை எல்லாம் இல்லை சன்னி குளிக்கவா என்றால் அவன் பாட்டுக்கு ஷவர் இருக்கும் இடத்திற்கு போய்விடுவான் அதன் பின் முதலில் ஷாம்பு போட்டு அதன் பின் கண்டிஷனர் போட்டு குளிக்க வைத்து வெளியே வந்ததும் துண்டால் துடைத்து ஹேர் டிரையர் வைத்து அதன் முடிகளை காய்வைத்து அதன் பின் சீப்பால் முடிகளை நல்லா வாரிவிட்ட பின் அவன் பெட்டில் போய் மூஞ்சியை நன்றாக தேய்த்து கொள்வான் சில சமயங்களில் குளிக்கவா என்றால் பெற்றுமில் இருக்கும் டேபிள் அடியில் போய் உட்கார்ந்து கொள்வான் லேசா சத்தம் போட்டு கூப்பிட்டால் உடனே வந்துவிடுவான் 2 மாதங்களுக்கு ஒரு தடவை முடி மட்டும் நகம் வெட்டி குளிக்க வைக்க கடைக்கு அழைத்து செல்வோம் அப்போது அங்கே தனியாக விட்டு வரும் போது மனசு கிடந்து அடிச்சுக்கும் குறைந்தது 3 மணினேரம் தனியாக விட்டு வரவேண்டும்

      நீக்கு
  12. குறை என்பதில் பல அர்த்தங்கள். உடல்குறை, மனக்குறை, பணக்குறை, பற்றாக்குறை என்று பல. இக்குறைகளில் பல எல்லோருக்கும் இருக்கும். பல குறைகள் 2 பூரி குறை மாதிரி கற்பனையாகவும் இருக்கும். இதில் முக்கியமானது என்னவென்றால் நம்முடைய சில குறைகள் பிறர் சொல்லத்தான் நமக்கு தெரிய வரும். 

    ஸ்ரீ ஹரி வைத்தியம் படிக்க முடியவில்லை. out of focus. 
    கவிதைகளில் முதல் கவிதை புரியவில்லை. மோசிகீரா என்ன? மோசிகீரனார் எப்போது அரசாங்க கட்டிடத்தில் தூங்கினார். 

    இரண்டாவது கவிதையில் நதி மட்டுமா இரு கரை கொண்டுள்ளது என்று கேட்க வைக்கிறது. வேஷ்டி புடவை போன்றவையும் இரு கரை கொண்டுள்ளன. கிழித்தால் சிரிக்கின்றன. மதன் ஜோக் உண்மை. எல்லா வீட்டிலும் நடப்பது தான். ஆனால் ஒரு வித்தியாசம். செல் போனில் பேசிக்கொண்டே  கொண்டே பரிமாறுவார்கள். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JC சார்...   
      ஆம்.  பல குறைகள் இருக்கின்றன .  குறையில்லாமல் நிறைய சொல்லலாம்தான்!
      ஸ்ரீகுரு வைத்தியம் இருந்த பக்கம் ரொம்பவே மக்கி விட்டது.  இது முன்னர் ஒரு வருடத்துக்கு முன் எடுத்த புகைப்படம்.  மறுபடி கிடைத்தால் (தேடவேண்டும்!)  நல்லதாய் ஒன்று வெளியிடுகிறேன்.

      அரசு கட்டிலில் துயின்றவர்தானே மோசி கீரனார்!  மன்னர் சாமரம் வீசுவாரே..   நினைவில்லையா!

      நீக்கு
  13. மனசாட்சியிடம் உரையாடியது போலிருந்தது பதிவின் சாரம்.

    எனது குறைகளை தேடி களைய வேண்டும் என்ற சிந்தையும் மனதில் எழுகிறது.

    பதிலளிநீக்கு
  14. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலமே வாழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் பதிவு அருமை. கதம்பத்தில் உங்களின் முதல் கட்டுரை எப்போதுமே சிறப்பானது. அனைத்து மனித வாழ்வின் சிறப்பாம்சங்களை தொட்டு அலசிப் போகும் உங்களது இந்த கட்டுரைகள் ஒவ்வொரு தனி மனித மனதுகளிலும் சிறிது சலனங்களையோ, அதை கண்டு பிடித்து நிவர்த்தி செய்து சந்தோஷமடையவோ ஏதுவாக உள்ளதென்பதுதான் இவ்வலசல் கட்டுரைகளின் சிறப்பாம்சம். பாராட்டுக்கள்.

    இவ்வுலகில் குறைச் சொல்லா மனிதர்கள் இல்லை எனறுதான் நினைக்கிறேன். மனிதனுக்கு இரண்டு மனங்களை தந்த அந்த இறைவன்தான் சமயத்தில் அவர்கள் மனதில் இந்த குறைகளை நிறையாக்குகின்றான். நிறைகளை குறையுமாக்குகின்றான். எல்லாம் பார்க்கும் கண்ணோட்டத்தின் உண(ர்)வை மனது ஜீரணிக்க மறுக்கும் போது சில நிறைகளும் குறைகளாகி போகின்றன. இது ஒவ்வொருவருக்கும் "அவன்" தரும் வாழ்வின் பலாபலன்கள்தான். வேறு என்ன சொல்வது?

    /குறுகிய தெரு ஒன்றில் இரவில் நடந்து கொண்டிருந்தபோது மின்சாரம் தடைப்பட்டுவிட, கும்மிருட்டில் குழம்பிப்போனவன் "அடச்சே..." என்று வாய்விட்டே அரற்றிவிட, "என்னாச்சு" என்கிறான் கூட வந்து கொண்டிருந்த கண் தெரியாத நண்பன். "கரன்ட்டு போச்சு... ஒரே இருட்டு" என்று சொல்லும் இவனுக்கு அவனிடமிருந்து "ஓ." என்பதைத்தவிர பதில் இல்லை/

    இந்த வரிகளை மிகவும் ரசித்தேன். பழகிப் போனவனுக்கு இருட்டின் குறை, நிறை எப்படித் தெரியும்.? இது போல் அனைத்தையும் சமமாக எண்ணுகிற மனதை அந்த ஆண்டவன் இனியாவது அனைவருக்கும் தர வேண்டுமென மனது பிரார்திக்கிறது. நல்ல அலசல். மிகுதி பகுதிகளையும் படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா...   எபப்டியோ எதையோ எழுதி தப்பித்து வருகிறேன்!

      இரண்டு மனமா?  மனம் ஒரு குரங்கு பாடல் நினைவுக்கு வரவில்லையா?  உண்மையில் இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் எக்ட்டேன் பாடல்தான் நினைவுக்கு வரவேண்டும் இல்லையா!  எலலவற்றையும் ஜீரணிக்க முடியவிதில்லை!

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  18. நல்லதொரு கதம்பம். பதிவின் வழி சொன்ன விஷயங்கள் நன்று - குறிப்பாக கால்நடை மருத்துவரின் அனுபவம்.

    குறைகள் இல்லாத மனிதர்கள் யார் - குறைகள் பற்றிய அலசல் நன்று.

    கடைசி ஜோக் - ஹாஹா...

    பதிலளிநீக்கு
  19. இன்றைய கதம்பம் மிக நன்றாக இருக்கிறது.

    //உனக்கும் கீழே உள்ளவர் கோடி.. நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு'
    என்று ஈஸியாகப் பாடி வைத்துவிட்டுச் சென்று விட்டார் கவிஞர். அவ்வளவு எளிதாக முடிகிறதா என்ன?//

    ஆமாம், பாட்டை கேட்கும் போது மட்டும் நினைக்க தோன்றும்.
    மற்ற நேரங்களில் கொஞ்சம் கஷ்டம்தான். திரும்ப, திரும்ப மனதிற்கு நினைவு படுத்த வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலவற்றை அவ்வளவு எளிதாக பின்பற்ற முடியாததால்தான் பாட்டாக எழுதி மனதுக்குள் புகுத்துகிறார்களோ என்னவோ...  நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  20. இதற்கும் அதற்கும்
    பாலம் போடுவது
    புரிகிறது.
    உபயோகிப்போர்
    கூடினால் மகிழ்ச்சியே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குதான் அபுரி!  எனக்கே தெரியாமல் ஏதோ நடந்திருக்கிறது.

      நீக்கு
    2. அந்த நாள் கவிதைப் படைப்புலகிற்கும்
      இந்த நாள் வாசிப்புலகிற்கும் பாலம் போடும் முயற்சியாக நினைத்தேன். வாசகரின் ரசனை எப்படியாக இருக்கப் போகிறது என்ற ஆவலும் இருந்தது.
      குமுதத்திற்குக் கூட ஒரு தீராநதி தேவைப்பட்டது. வியாழக்கிழமை இந்த மாதிரி முயற்சிகளில் கவனம் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

      நீக்கு
    3. கலாப்பிரியா ஒரு கலவையான படைப்பாளி. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது நெல்லையில் ஆரம்பித்து செங்கோட்டை வரை தார்சட்டி ஏந்தி இந்தி எழுத்துக்களை அழித்தவர்.
      இவருக்கு பிற்காலத்தில் இந்திப் படங்கள் என்றால் பாடலுக்காகவும் அதன் இசைக்காகவும் உயிராயிற்று.
      ராம் அவுர் ஷ்யாம், கிலோனா, பூந்த் ஜோ பன் கயே மோத்தி, சச்சா ஜூத்தா, ஜிக்ரி தோஸ்த் என்று அவர் மனம் பறி கொடுத்த இந்திப் படங்களை வரிசை படுத்தும் பொழுது பிரமிப்பாய் இருக்கும். அவரது நினைவின் தாழ்வாரங்கள் வாசித்து ரசிக்க வேண்டிய புத்தகம்.

      நீக்கு
  21. பதில்கள்
    1. உயர்ந்த வகையிலான
      ஒப்பீட்டு சுயசோதனைகள்
      ஒப்பிட்டுப் பார்ப்போரை
      உயர வைக்கும்
      என்பது ஆன்றோர் வாழ்வியல் உண்மை.
      இதனாலேயே
      தனக்குத் தெரிந்ததைத்
      தாண்டி வர இயலாதவர்கள்
      தன்னளவிலேயே
      தேங்கி விடுகின்றனர்.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. சுய பரிசோதனைகள் செய்யும் செயல்களில் கண்டிப்பாக உயர வைக்கும்... அதற்கு நம் பலவீனத்தை முழுவதும் அறிந்து தெரிந்து புரிந்திருக்க வேண்டும்... பல அவமானங்களும் தோல்விகளும் அடைந்து ஓரளவு எனக்கு புரியவும் வைத்தன... அவை பெருங்கதை... சுருக்கமாக :-

      வலைப்பூ வந்த நேரத்தில் → மனிதனின் பிரச்சனைக்குக் காரணமான குணம் என்ன...? ← என்று எழுதி இருந்தாலும், → மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன...? ← என்பதையும் ஏதோ சிந்தித்து உள்ளேன்...

      நீக்கு
    4. அவமானம், தோல்வி என்று அவற்றை ஏன் நினைக்கிறீர்கள்? இன்றைய வெற்றிக்கான படிக்கட்டுகள் அல்லவோ அவை? என்ன நினைக்கிறீர்கள்? இது பற்றி உங்கள் அனுபவப் புரிதல் என்ன? பிறருக்கும் வழிகாட்டலாய் இருக்கும். சொல்லுங்கள்.

      நீக்கு
    5. இரண்டு கட்டுரைகளையம் வாசித்து விட்டேன், நண்பரே!

      நீக்கு
    6. முற்றிலும் மாறிய வாழ்க்கை சூழல்... அதனால் தொடர்ந்து அந்த சிந்தனைப் பதிவுகள் போல் எழுத முடியவில்லை... எழுத வேண்டும்... எழுதுவேன்...

      10 ஆண்டு முந்தைய சிந்தனையை ரொம்ப பேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன்... மிக்க நன்றி...

      நீக்கு
    7. அன்பு தனபாலன்,
      வாசித்து விட்டு முதல் பதிவில் என் கருத்தையும் பதிந்திருக்கிறேன்.

      நீக்கு
  22. இன்றைய பதிவு வழக்கம் போல கதம்பம்...

    பதிலளிநீக்கு
  23. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  24. // உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு...//

    அவை கவியரசரின் வார்த்தைகள்..

    அதற்கு மூலம் ஸ்ரீகுமரகுருபரர் அருளியவை.

    தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
    அம்மா பெரிதென்று அகமகிழ்க!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ’அம்மா’ பெரிதென்று அகமகிழ்ந்தே
      அரசியலில் ஆடுகின்றார் ஆங்கே..!

      நீக்கு
    2. ஆகா!!!...

      அதற்கும் இங்கே பதிலுண்டு...

      ஆடும் வரை ஆட்டம்.. ஆயிரங்
      கோடிகளில் நாட்டம்..
      கூடி வரும் கூட்டம் - பெட்டி
      குறைந்த பின்னும் வருமா?..

      நீக்கு
    3. ஆஹா.....  நல்ல பகிர்வுகள்...

      நீக்கு
    4. பெட்டி குறைந்த பிறகா - பூனைக்
      குட்டி கூட வராது !

      நீக்கு
  25. கவியரசரின் வேறு சில வைர வரிகள்..

    சம்சாரி ஆசை சந்நியாசம் அந்த
    சந்நியாசியின் ஆசை சம்சாரம்!...

    பதிலளிநீக்கு
  26. எல்லாம் உங்களால் வந்தது! கலாப்ரியா, கணையாழி, கல்யாண்ஜி என்றெல்லாம் நினைவுபடுத்தியதால், கிரிக்கெட்டைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு, கவிதை ஒன்றை பதிவிலிடும்படி ஆயிற்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் கணையாழி, கல்யாண்ஜி என்றெல்லாம் பெயர் பார்த்து பகிர்ந்து விட்டேனே தவிர இன்று பகிர்ந்துள்ள கவிதைகளில் எனக்கே முழு திருப்தி இல்லை!

      நீக்கு
    2. கவிதைகள் முழு திருப்தி தரவேண்டுமென்ற அவசியமில்லை. முடியவும் முடியாது. ஏனெனில் திருப்தி என்பதாகவே ஒன்று.. இல்லை!

      நீக்கு
    3. ம்ம்ம்ம்...  கவிதைக்கும் அப்படிதான் வரையறையா?

      நீக்கு
  27. பெரியவர்கள் எல்லாரும் சொல்லி வைத்தார்கள்.. கூடவே நாமும் கொஞ்சம் சொல்லி வைப்போம்!..

    எங்கும் குறை எதிலும் குறை.
    குறை என்று ஏதும் இலை
    குறை கூட நிறை குணம் என்ற
    ஒளி கொண்டு குறை தனையே மறை..

    பதிலளிநீக்கு
  28. அனைவருக்கும் முகம் காலை வணக்கங்கள்! அருமையான கதம்பம். குறை காணாது நிறை வாழ்வு வாழ இறைவனை பிரார்த்திப்போம். நகைச்சுவை பகுதி அருமை. நாய்களென்றால் எனக்கு எப்பொழுதும் பயம் தான். பைரவன் இருக்கும் வீட்டினில் நுழைய தயக்கமாகவே இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வானம்பாடி.   பைரவர்களிடம் எனக்கு சின்ன வயதிலிருந்தே நெருக்கம் அதிகம்!

      நீக்கு
  29. ஶ்ரீஹரியின் வீட்டு வைத்தியம் பெரிசாக்கிப் படிக்க முயன்றேன். முடியலை. மறுபடி பார்க்கணும். கீழே உள்ள காஞ்சிப் பெரியவரோடது தெய்வத்தின் குரலில் படிச்சேனோனு நினைக்கிறேன்.
    வழக்கம்போல் மதன் நகைச்சுவை அருமை. ஆனாலும் தொண்டை வற்றும்படி இவ்வளவு பேச என்ன இருக்கும்? எனக்கெல்லாம் ஐந்து நிமிஷங்களுக்கு மேல் எதுவும் தோணாது. பொதுவாகவே நான் பேச்சுக்குறைவு. எங்களுக்குள்ளேயே அதிகம் பேச்சு இருக்காது. என்னிடம் தங்கி இருந்தப்போ என் அப்பாவுக்கு ஆச்சரியமா இருக்கும். காலம்பர எழுந்து அவர் அலுவலகம் செல்லும் வரைக்கும் இரண்டு பேரும் எதுவுமே பேசிக்காமல் எப்படி இருக்கீங்க? வீடே அமைதியாய் இருக்கே! என்பார்! அவ்வப்போது வரும் tug of war கவனிக்கலை போல! ஹிஹிஹி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேச என்ன இருக்குமா?  அதுதானே தெரியவில்லை!  ஆனால் பேசிக் கொண்டே.....   இருக்கிறார்களே....!!!   ஸ்ரீஹரி வைத்தியம் அப்புறம் தேடி நல்ல படமாகப் போடுகிறேன்.  நன்றி கீதா அக்கா.

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஆதி சங்கரரோடது பற்றிய குறிப்பை நானும் சொல்லி இருக்கேனே! ஆனால் காஞ்சிப் பெரியவரோட தெய்வத்தின் குரலில் படிச்ச நினைவு. அதைச் சொன்னதிலே சரியாச் சொல்லலை போல! போகட்டும்! பரிசு கமலாவுக்கே கொடுத்துடுங்க! :)))))))

      நீக்கு
  30. குறைபட்டுக் கொண்டே இருப்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்ட விஷயங்களை அடையாளம் கூட கண்டு கொள்ள முடியாமல் போகிறார்கள். நல்ல அலசல்.

    பகிர்ந்த கவிதைகள் அருமை. கால்நடை மருத்துவர் இறுதிப் பத்திகளில் சொல்லியிருப்பது புன்னகைக்கவும் அதே நேரம் இத்துறையில் இருக்கும் அபாயத்தைப் புரிய வைக்கவும் செய்தது.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு
  31. செல்லங்களின் ட்ரீட்மெண்ட் நாம் அடிக்கடி பார்த்தது பார்த்து வளர்ந்தது இப்பவும் பார்ததுக்கொண்டிருப்பது தான் .டாக்டர் நாகராஜன் கட்டுரை புத்தகத்தில் வந்ததா ? .இப்போல்லாம் சென்னையில் நிறைய பிரைவேட் வெட் க்ளினிக்ஸ் வந்திடுச்சின்னு கேள்விப்பட்டேன் ..எங்க ஜெசி பூனைகளுக்கான பாஸ்கட்டை பார்த்தாலே பயப்படுவா .அதை எடுத்ததும் தெரிஞ்சிடும் எஸ்கிப் ஆகப்பார்ப்பா :) இவ்வளவும் வாக்சினுக்கு ஆண்டுக்கொருமுறை போறதுக்கே இவ்ளோ அலட்டல் .நானா ஆரம்பம்முதலே உணவில் கேர்புல்லா யிருக்கிறேன் .செல்லங்களின் உணவு விஷயத்தில் கவனமா யிருக்கணும் நிறையபேர் அளவுக்கதிகமா அம்மா சாப்பிடும் ஸ்வீட்ஸ் பிஸ்கட்ஸ் எல்லாம் தரங்க அது கெட்டது .பூனைகளுக்கு பால் தருவதும் கெட்டது .ளாக்டொஸ் அலர்ஜி வரும் .இப்படி நிறைய இருக்கு .இம்முறை ஜெசியை வேக்சினுக்கு கொண்டுபோனப்போ உள்ளே எங்களை அனுமதிக்கலை டாக்டரே வந்து பாஸ்கட் எடுத்துட்டுப்போய் ஊசியும் போட்டு வெளியில் எடுத்து வந்தார் :)) அவர் சொன்னார் ஜெசி பயத்தில் மூச்சா எல்லாமே போய் மூக்கு காதெல்லாம் வேர்த்தாம் :) பாவம் குழந்தை ரெண்டு நாளுக்கு என்கிட்டயே ஓட்டிட்டிருந்தா 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா..  ஹா...  இந்த செல்லங்கள் எப்பவுமே பார்க்க ரொம்பவும் சுவாரஸ்யமா இருக்கும் இல்லையா?  மருத்துவர் உங்கள் துணை இல்லாமல் அவரே ஊசி போட்டு விட்டது ஆச்சர்யம்.

      நீக்கு
  32. அந்த டெலிபோன் கார்டூனில் கர்ர்ர் எப்பவும் பெண்களைத்தான் கிண்டல் பண்றங்க :)உங்களுக்கு ஒன்று சொல்லணும் ஒரு ஆண் நண்பர் ஒரு நாளில் போனை எடுத்து பேசின அவைக்கவே மாட்டார் அவர் குடும்பத்தில் பெரிய பிரச்சினை அவர் வாரிசே  சொல்லி புலம்பியது அப்பா எப்ப பார்த்தாலும் கோஸ்ஸிப் போனில் என்று :) நான் மனதில் யோசிப்பேன் பேசாம போன் ஒயரை கட் பண்ணனும் இல்லைனா போனில் ரிசீவரை தொடும்போது ஷாக் மைல்டா அடிக்க வைக்கணும்னு :)நெருங்கிய நண்பர் குடும்பம்தான் :) என் கணவரோ நண்பர் ஒருவரும் அப்படிதான் வெளிநாட்டில்  இருந்து பேசினால் 1 மணிநேரம் அதுவும் அவர் நாட்டுக்கும் எங்களுக்கு 10 மணி நேர வித்யாசம் ..இனிமே மதன் கார்டூனில் ஆண்களை  போட சொல்லுங்க :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

      நீக்கு
    2. உண்மைதான் ஏஞ்சல்...   எங்கள் அதிகாரி ஒருவர் வேலையே பார்க்காமல் எப்போதும் போன் பேசிக்கொண்டே இருக்கிறார்,  ஆனால் ஆண்கள் அப்படி தொடர்ந்து போன் பேசுவது குறைவுதான்!

      நீக்கு
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்ரீராம், நம்மவர் தொலைபேசியிலே பேசறதைப் பார்க்கலை நீங்க. மணிக்கணக்காய்ப் பேசுவார். அதுவும் இந்த அனாமத்து அழைப்புக்கள் இருக்கே அதைக் கூட விடமாட்டார். அவங்க கிட்டே ஊர்க்கதை எல்லாம் பேசி எதுக்கு அழைச்சீங்க, ஏன் அழைச்சீங்க, நம்பர் எப்படிக் கிடைச்சதுனு எல்லாம் கேட்டுட்டுக் கடைசியில் மிரட்டிட்டு ஒரு வழியா ஃபோனை வைப்பார். நான் எடுத்த எடுப்பிலேயே புரிஞ்சுண்டதும் பதிலே கொடுக்காமல் போனை வைச்சுடுவேன். அது அவர் கிட்டே நடக்காது. :))))))

      நீக்கு
  33. எக்கரை என புரியாத நதியின் சிரிப்பு கவிதை நல்லா இருக்கு 

    பதிலளிநீக்கு
  34. ஸ்ரீஹரி வைத்தியம் படம் எழுத்து முழுதா   தெளிவாயில்லை ஆனால் அந்த செடிக்கு நீர் ஊற்றும் படம் பலதை புரியவைக்கிறது   

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவேளை சரியாகி செட்டில் ஆகுமுன் வலை ஏற்றிவிட்டேனா?  எப்படியோ அடுத்த முறை கவனமாக இருக்கிறேன்.

      நீக்கு
  35. ஓகே குறைக்கு கடைசியா வரேன் :) பெரும்பாலும் ஒருகாலத்தில் நிறையை தெரிந்தவைதான் பின்னாளில் குறையாக படுகிறது .இது காலத்தின் கோலமா அல்லது நாலைந்து பேர் ஒரே விஷயத்தை பற்றி குறைப்படும்போது அது இன்க்ரீஸ் ஆகுதோன்னும் தோணுது :)கடவுளே நேரில் வந்தாலும்  தீர்க்க முடியாதது :) ஒரு விஷயம் பிடிக்கலை விலகிடனும் அதை விட்டு அதைப்பற்றி புலம்பி நாலுபேருக்கு அழுத்தத்தை தருவதும் குறைதான் 

    பதிலளிநீக்கு
  36. கதம்பம் படித்து,ரஸித்து,பின்னூட்டங்களையும் கதம்பமாக ரஸித்து படிக்கும் வாய்ப்பை அளிக்கிறீர்கள். கோடானுகோடி நன்றி எங்கள் பிளாகிற்கு. அன்புடன்

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் சகோதரரே

    வைத்திய பகுதியை கொஞ்சம் படிக்க இயலவில்லை. ஆதிசங்கராச்சாரியாரும், பராசக்தியும் தெய்வீக பகுதி படித்து தெரிந்து கொண்டேன். கவிதைகள் நன்றாக உள்ளன. குறிப்பாக நதிக்கவிதை நன்று.

    நாய் வளர்ப்பில் இவ்வளவு சிரமங்கள் இருக்கின்றன என என் சின்ன நாத்தனார் பெண் சொல்லி கேள்விபட்டுள்ளேன். நாய் வளர்ப்பின் போது அவர்களில் (கணவன், மனைவி) யாராவது ஒருவர் எந்த வீட்டு விஷேடத்திற்கும் வர மாட்டார்கள். அதனால் எங்கள் வீட்டிலும் இந்த மாதிரி செல்லங்களை வளர்க்கும் ஆசை போய் விட்டது.

    ஜோக் அருமை. இப்போது அலைபேசியில் பேசுவது இதை விட செளகரியமானது. பேசுவதற்கு டாபிக் கிடைத்தால், தூங்கும் நேரம் தவிர்த்து பாக்கி நேரங்களில் பேசிக் கொண்டேயிருக்கலாம். அனைத்து பகிர்வினுக்கும் மிக்க நன்றிகள்

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆதி சங்கராச்சார்யார் பற்றி நீங்கள் மட்டுமே குறிப்பிட்டுள்ளீர்கள்!!!!  பூனைகளாவது பரவாயில்லை...  நாய் வளர்ப்பில் இதுமாதிரி சில சிரமங்கள் உண்டு.

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  38. எங்கள் வீட்டுச் செல்லப் பிராணி ஜுலியை மருத்துவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று கடிபட்டிருக்கிறேன்
    அதில் இருந்துதான முன்னெச்சரிக்கையாக இருக்கத் தொடங்கினேன்

    பதிலளிநீக்கு
  39. இன்றைய கதம்பத்தில் குறை பற்றி எழுதியிருப்பது ஶ்ரீராமா..? நம்ப முடியவில்லை. வழக்கமான ஶ்ரீராமின் நடையில் இல்லாமல் வித்தியாசமாக இருந்தது.
    ஶ்ரீஹரியின் கட்டுரை என்னால் மட்டும்தான் படிக்க முடியவில்லை என்று நினைத்தேன்.
    வண்ணதாசன் கவிதை கூடவா உங்களுக்குப் பிடிக்கவில்லை?
    மிருக வைத்தியரின் அனுபவம் பயங்கரம்!
    மதன் ஜோக் வாஸ்தவமான ரசனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ...    அப்படி என்ன நடை?  அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?  இதைவிட நல்ல கவிதைகள் இருக்கின்றன.  அப்படிச் சொல்ல வந்தேன்.  நன்றி பானு அக்கா.

      நீக்கு
  40. செல்லங்கள் பற்றி டாகடர் சொல்லி இருப்பது சரியே.

    //நான் என்ன சொன்னாலும், என் செல்லம் கேட்கும்' என, செல்லப் பிராணிகளின் உறவினர்கள் கேட்பதை நம்பக் கூடாது.//
    கோவையில் அத்தை வீட்டுக்கு பக்கத்தில் இருப்பவர் அப்படித்தான் சொல்வார்.
    இன்னொன்றும் சொல்வார், "நமக்கு இரண்டு கால் அதற்கு நாலு கால் அவ்வளவுதான் வித்தியாசம்"" நம்மை போலத்தான் பயபடாதீர்கள் என்பார்கள்.

    வளர்ப்பு செல்லங்களுக்கு ஊசி போடுவது நகம் வெட்டுவது , முடி வெட்டுவது என்று குழந்தையை போல நிறைய பார்க்க வேண்டும். அதற்கு ஒரு கஷ்டம் என்றால் நமக்கும் கஷ்டம் தான்.
    உங்கள் ஒரு செல்லத்திற்கு கோபம் அதிகம் வரும் என்று சொல்லி இருக்கிறீர்கள் அதற்கு உடல் தொந்திரவுகள் வந்து இருந்ததால் கோபம் வந்து இருக்குமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நகம் எல்லாம் வெட்டா விட்டாலும், குளிப்பட்டி சிசுரூஷை செய்திருக்கிறேன்.  அது என் அருகிலேயே இருக்கும்.  கையில் புத்தகத்துடன் அமர்ந்து மோதி என்று அழைத்தால் தலைமாட்டில் வந்து படுத்துக்க கொள்ளும், நான் தலைவைத்து படுத்துக்கொண்டு புத்தகம் படிக்க வசதியாக!

      இவனுக்கு கோபம் அதிகம் என்பதற்கு அது வளர்ந்த விதமாயிருக்கலாம்.  அதை எடுத்து வீட்டில் வைத்துவிட்டு நன் சென்னை வந்துவிட்டேன்!

      நீக்கு
  41. குறை எனச் சொல்லும்போது, குறை என்பது நெகடிவ் சிந்தனைதானே.. நிறையப்பேர் திருந்தவே மாட்டினம், எங்கள் உறவிலும் ஒருவர் இருக்கிறார்.. எப்ப பார்த்தாலும் நெகடிவ்வான பேச்சு, தனக்கும் ஒன்றும் சரியில்லை அதில்லை இதில்லை என்பார், அதேபோல நம்மையும் குறையாகவே சொல்வார்.. உதாரணத்துக்கு.. நான் யூரியூப் சனல் தொடங்கியிருக்கிறேன் என்றால்.. அதைத் தொடங்கி என்ன காணப் போறீங்க ச்சும்மா வேஸ்ட் ... ஹா ஹா ஹா இப்படித்தான் இருக்கும் பேச்சு....

    ஆனா குறை இல்லாமல் பேசுவதை நான் கண்டது எங்கள் அப்பாவிடமும் அடுத்து மாமி[என் கணவரின் அம்மாவிடமும்] இருவரும் குறை சொல்ல மாட்டினம் எப்பவும் பொஸிடிவ்வான பேச்சுக்களே பேசுவார்கள்.. நிறையச் சொல்ல வருது.. வேண்டாம்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா...  என்னைக்குறை சொல்வதைவிட தனது வாழ்க்கையில் குறைகளாகவே கண்டு பேசும் ஆட்கள் இருக்கிறார்கள்.  அவர்களிடம் பேசினால் நமக்கே விரக்தியாக இருக்கும்.  உற்சாகம் எல்லாம் வடிந்து போகும்!

      நீக்கு
  42. பழைய பேப்பர்களைப் புரட்டி எடுத்து வந்து போஸ்ட் போடுவதில் ஸ்ரீராமை அடிக்க யாருமில்லை, 2ம் இடத்தில் கோமதி அக்கா இருக்கிறா ஹா ஹா ஹா.

    செல்லங்கள் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்.

    ஊரில எனில் பலசமயம் எதுவும் புரியாது நமக்கு.. சமீபட்த்ஹில் டெய்சிப்பிள்ளையை ஊசி போடக் கூட்டிப் போனோம்.. வருடம் வருடம் போடும் ஊசி.

    அப்போ ஆளௌக்கும் பொடிசெக்கப் நடக்கும், அதில கண்டுபிடிச்சினம், ஒரு பல்லு உடைஞ்சிருக்காம்.. அதை அப்படியே விடக்கூடாதாம் கூட்டி வரட்டாம், மயக்க மருந்து கொடுத்து அப்பல்லின் அடிப்பாகத்தை ஒபரேட் பண்ணி எடுத்து விடுகிறார்களாம்.. வெறும் 600-700 பவுண்டுகள்வரைதான் செலவாகுமாம்.. ஹா ஹா ஹா.. 60- 70 ஆயிரம் இந்திய ரூபாயில்.

    இவ்ளோ செலவளிச்சு, ச்சும்மா ஹப்பியாக இருக்கும் பிள்ளையை மயக்கி வெட்டி.. சித்திரவதை செய்யோணுமோ?:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா...  ஹா...  நிறைய பழைய புத்தகங்கள் பின்னே எதற்கு வைத்திருக்கிறேனாக்கும்!

      பாவம் அதன் பல்லை உடைக்க 70 ஆயிரமா?  அநியாயம்...   அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டும்.  ஹா..  ஹா..  ஹா...

      நன்றி அதிரா.

      நீக்கு
  43. திருச்சியில் இருந்தபோது ஒரு காக்கர் ஸ்பாநியல்பெண்நாய் வளர்த்தோம் மாதம்ஒரு முறை மிருக வைத்தியர் வீட்டுக்கே வந்து நாயை செக் செய்வார்அவருக்கு நாயைகண்டால் பயம் எங்கள் நாய்க்கு அவரைக்கண்டால் பயம் தூர் இருந்தபடியே நய் நலமாக இருப்பதாக் கூறுவார்குளீர் காலத்தில் குளிக்ககூப்பிட்டச்ல் சோஃபாஅடியில் சென்று வ்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலருக்கு குறைகளை பகிர்ந்தால் மன பாரம் குறையும். ஆனால் அதில் கேட்பொரின் மன அமைதி கெட கூடாது.
      எனக்கு என் யோகா வகுப்பில் பகிர்தல் பற்றி அறிந்த பின், சில நினைவுகளை பகிர்வது நிம்மதியே தரும்.
      அதில் ஒரு தோழி எனக்கு கணினி பதிவு போன்ற நினைவாற்றல் கொண்டவர்.அவரிடம் பேசி பதிந்து விடுவேன்.சிலசமயம் அவர் அதை வைத்து என்னை வகுந்தும் விடுவார்.
      குடும்பம்,பொழுது போக்கு,அலுவலகம்,வழி என்று நிறைய பகிர்தல் இருக்கும்.எல்லாம் ஒரு சுவாரஸ்யம் தான்.
      அவஸ்தை களை கூட,நான் ஜெயிலுக்கு
      போறேன்ஜெயிலுக்குு போறேன் என சிரிப்பாக பகிர்வது அவர்களுக்கும் பொழுது போக்கு.
      பணி இடத்தில் நிறைய விஷ கிருமிகள் உண்டு.நம் மன நலம் நம் கையில் என்று சேரிடம் அறிந்து சேர வேண்டும்.
      எல்லாம் மனப்பக்குவம் தம் பத்திரம் தான்.நன்றி.

      நீக்கு
    2. //சிலருக்கு குறைகளை பகிர்ந்தால் மன பாரம் குறையும். ஆனால் அதில் கேட்பொரின் மன அமைதி கெட கூடாது.//

      ரசித்த வரி.

      //அதில் ஒரு தோழி எனக்கு கணினி பதிவு போன்ற நினைவாற்றல்//

      ஹா..  ஹா..  ஹா...

      மொத்தத்தில் ரசனையான கமெண்ட்.  நன்றி உஷா.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!