திங்கள், 29 மார்ச், 2021

"திங்க"க்கிழமை :  ஆப்பிள் / காஷ்மீரி புலவு -  கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 காஷ்மீரி புலவு எனப்படும் இந்த முறை பிரியாணியைக் கட்டாயமாய் பாஸ்மதி அரிசியில் தான் செய்யணும்.  இதைச் செய்வதும் எளிதே.

 தேவையான பொருட்கள் கீழே கொடுத்திருக்கேன். சுமார் நான்கு பேருக்கானது.

பாஸ்மதி அரிசி ஒரு கிண்ணம்.

நல்ல சிவந்த ஆப்பிள் ஒன்று பெரிதாக இருக்கலாம். பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.




கிடைத்தால் மாதுளை முத்துக்கள் அரைக்கிண்ணம்

பாஸ்மதி அரிசியைக் களைந்து கொண்டு  ஒரு மேஜைக்கரண்டி நெய்யில்/வெண்ணெயில் வறுத்து ஒன்றே கால் கிண்ணம் வெந்நீரை ஊற்றி ஊற வைக்கவும். அது தனியாக இருக்கட்டும்.


வதக்கவேண்டிய பொருட்கள்

நறுக்கிய ஆப்பிள் துண்டங்கள்
வெங்காயம் பொடியாக நறுக்கியது ஒன்று/ ஒரு தேக்கரண்டி சர்க்கரை வெங்காயம் வதங்க
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது ஒன்று
இஞ்சி ஒரு துண்டம் துருவிக்கொள்ளவும். அல்லது பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பிரிஞ்சி இலை
ஸ்டார் அனிஸ் எனப்படும் பூ ஒன்று
லவங்கப்பட்டை ஒரு சின்னத் துண்டு
கறுப்பு ஏலக்காய் ஒன்று
கிராம்பு 2 (அதிகம் போட்டால் காரமாய் இருக்கும்)
தாளிக்க எண்ணெய்/வெண்ணெய்/நெய் ஏதேனும் ஒன்று அவரவர் விருப்பம் போல்
காஷ்மீரி மிளகாய்த் தூள்/இல்லை எனில் சாதா மிளகாய்த் தூள் அரைத் தேக்கரண்டி. 
மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
கரம் மசாலா அல்லது காஷ்மீரி மசாலா ஒரு தேக்கரண்டி
காஷ்மீரி மசாலா செய்ய சோம்பு, சுக்கு, தனியா, ஜீரகம், மிளகு, கருஞ்சீரகம், ஏலக்காய் சிறிது வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும். இதிலிருந்து ஒரு தேக்கரண்டி அல்லது அரைத்தேக்கரண்டி மசாலாப் பொடி இந்தப் புலவுக்குத் தேவை.
கடைசியில் மேலே தூவ
முந்திரிப்பருப்பு ஒரு கைப்பிடி, பாதாம் ஊற வைத்துத் தோலுரித்தது ஒரு கைப்பிடி, பிஸ்தா தோலுரித்தது ஒரு கைப்பிடி, கிஸ்மிஸ் பழம் ஒரு கைப்பிடி
இவை அனைத்தையும் நெய்யில் வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.



இப்போது அடுப்பில் குக்கரை வைத்துவிட்டு சமையல் எண்ணெய் அல்லது நெய் அல்லது வெண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி போடவும். முதலில் பிரிஞ்சி இலை, ஸ்டார் அனிஸ் ஆகியவற்றைப் பொட்டுப் பொரிந்ததும் லவங்கப்பட்டை, கறுப்பு ஏலக்காய், கிராம்பு தாளிக்கவும். வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்க ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கலாம். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பச்சை மிளகாயைச் சேர்த்துக் கொள்ளவும். 




இப்போது காஷ்மீரி மிளகாய்த் தூள்/சாதா மிளகாய்த்தூள், மஞ்சள் பொடி, மசாலாப் பொடி/காஷ்மீரி மசாலாத் தூள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்க்கவும். எண்ணெயில் அவை கருகாமல் பார்த்துக் கொள்ளவும். 


எண்ணெய் பிரியும்போது ஆப்பிள் துண்டங்களைச் சேர்த்துச் சற்றே வதக்கவும். ஆப்பிள் துண்டங்கள் அந்தக் கலவையோடு நன்றாகச் சேர்ந்ததும். ஊற வைத்த அரிசியை அதில் சேர்க்கவும். தேவையான உப்பைச் சேர்த்துக் கிளறவும். தண்ணீர் அதில் இருந்ததே போதும். குக்கரை மூடி வெயிட் போடவும். ஒரே விசிலில் அடுப்பை அணைத்துவிடவும். குக்கர் தானாகத் திறக்க வந்ததும். 


சாதத்தில் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, பாதாம், பிஸ்தா பருப்பு வகைகள்,  கிஸ்மிஸ் பழங்கள் ஆகியவற்றைக் கொட்டி ஒரு கிளறு கிளறிச் சூடாக வெங்காயப் பச்சடியோடு பரிமாறவும்.

65 கருத்துகள்:



  1. அருமை ஆப்பிள் / காஷ்மீரி புலவு

    பதிலளிநீக்கு
  2. குழந்தைகளுக்கு வித்தியாசமாக செய்து கொடுக்க இந்த ரிசிப்பி உதவும் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் நாட்களில் அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் பெருகி மன மகிழ்வுடன் வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  4. ஆப்பிள் புலவு - கேள்விப்பட்டதில்லை.... ஆனால் அருமையாக செய்முறை கொடுத்திருக்கீங்க. இனிப்பாக இருக்காதா? ஒருவேளை பச்சை ஆப்பிள் இன்னும் நன்றாக இருக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக இதன் பெயர் காஷ்மீரி புலவு தான். நான் தான் ஆப்பிள் புலவு எனச் சொல்லி இருக்கேன்.

      நீக்கு
  5. சேலத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது சென்னைக்கு ஆபீஸ் வேலையாக வந்த என்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தங்கச் சொன்னார்கள். ஒரு நாளைக்கு (90ல்) 750 ரூபாய் உணவுக்கு செலவழிக்கலாம். என்ன சாப்பிட்டாலும் 200 ரூபாயே வராது (3 வேளைக்கு). என் தம்பி என்னைப் பார்க்க வந்தபோது அவனுக்கு காஷ்மீரி "நான்" ஆர்டர் பண்ணினேன் (அதுதான் விலை உயர்ந்தது என்பதால்). எனக்கு அது என்ன என்றும் தெரியாது. ஒரே இனிப்பு..நன்றாகவே இல்லை. அதுதான் என் காஷ்மீர் உணவின் அனுபவம்.

    ஆப்பிள் புலாவும் அப்படி இருந்துடுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஷ்மீரி நான்? கேட்டதில்லை. பொதுவாக நான் வடமாநிலங்களில் செய்யப்படுவது. அதுவும் அநேகமாக மைதாவில் என்பதால் எனக்கு அவ்வளவு பிடிக்காது. இந்தப் புலவில் பச்சை மிளகாய், இஞ்சி, மி.பொடி, கரம் மசாலாப்பொடி, மசாலா சாமான்கள் தாளிப்பு என இருப்பதால் அவ்வளவு இனிப்பாக இருக்காது.

      நீக்கு
    2. இந்தப் புலவு பத்தித் தெரியும். இதற்கு மிக முக்கியமாகக்குங்குமப்பூவும் தேவை. காஷ்மீர் காரங்களுக்குக் குங்குமப்பூ கிடைச்சுடும். எனக்கெல்லாம் வாங்க முடியாது என்பதால் அதைச் சேர்க்கலை. பாலில் ஊற வைத்துக் கொண்டு கடைசியில் சேர்ப்பார்கள்.

      நீக்கு
    3. காஷ்மீரி நான் என்பது, பெரிய Nanன் மேல் எல்லாவித பழங்களும் கட் பண்ணிப் போட்டு அவன்ல வைத்த மாதிரி இருந்தது.

      நீக்கு
    4. //அநேகமாக மைதாவில் என்பதால்// - சமீபத்தில் ஐயங்கார் உணவு என்று ஒரு காணொளி பார்த்தேன். அதில் அக்கார வடிசிலுக்கு, கடைசியில் மைதாமாவைக் கரைத்து சுடவைத்துச் சேர்க்கிறார்கள் (sizeable அளவு). அப்போதான் அந்த பிசுபிசுப்போட அக்காரவடிசல் இருக்குமாம். இந்த அநியாயத்தை எங்க போய்ச் சொல்றது? செய்தவர் திருச்சியின் பிரபல காடரர்.

      நீக்கு
    5. நானும் ஏஞ்சல் சொல்றாப்போல் நீங்க வேறே ஏதோ ஆர்டர் செய்திருப்பதாய் நினைக்கிறேன். நெல்லைத்தமிழரே!

      நீக்கு
    6. ஹாஹாஹா கமெண்ட்ஸ் படிக்கும்போது கை குறுகுறுன்னுச்சி :) அதான் பார்த்தவுடன் எழுதிட்டேன் :)அது வந்துக்கா உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும் அநேகமா இந்த புரசைவாக்கம் டு பெரியார்நகர்  மாதவரம் வரை வசிப்போர் கண்டிப்பா அஜந்தா பேக்கரி ஐட்டம்ஸ் சாப்பிட்டிருப்பாங்க .அவங்க பேக்கரில // நான் // இப்படித்தான் இனிப்பு   அவல் candied fruits ,தேங்காய் சுகர் சிரப் சேர்த்து செய்வாங்க  ..நானும் அதுதான் naaan என்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு வரும்   காலம்வரை .
      இங்கே ஒரு குவைத் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஸ்வீட் pizza செய்து கொண்டாந்தார் .சே நானா அதோட ரெசிப்பி   கேட்க மறந்துட்டேன் . சுவையா இருந்துச்சி 

      நீக்கு
    7. // you ordered dilpasand ordilkush// ஹாஹாஹா... எனக்கு சில மறக்கவே மறக்காது. அதிலும் ஒன்றைத் தவறா புரிஞ்சுக்கிட்டு ஆர்டர் பண்ணி அசடு வழிந்தது மறக்கவே மறக்காது. ஆனா அதை வெளில காண்பித்துக்கொள்ள முடியுமா? நான் அதில் இருந்த பழங்களை மட்டும் சாப்பிட்டுட்டு மிகுதியை வேஸ்ட் பண்ணினேன். (நடந்தது உட்லண்ட்ஸ் ஹோட்டல்ல-அங்கதான் தங்கவும் செய்தேன். இது ராதாகிருஷ்ணன் சாலைல). அது நம்ம நார்மல் நான் baseமேல எல்லாவித பழங்களையும் கட் பண்ணிச் செய்திருந்தது. இது நடந்தது 1989-90.

      தில்பஸந்த், தில்குஷ்லாம் பெங்களூர்ல 98களுக்குப் பிறகு.

      நீங்க எழுதியிருந்ததுக்காக இணையத்துல தேடினேன். நீங்களும் Kashmiri Nan என்று தேடுங்கள். நான் என்ன சொல்கிறேன் என்று தெரிந்துவிடும். ஹாஹா

      நீக்கு
    8. இதுதான் நானா சொன்னேனே மேலே கமெண்ட்டில் ஸ்வீட் பீட்ஸா அந்த குவெய்த் பொண்ணு காஷ்மீர் பொண்ணுதான் ஆனா குவைத்க்காரரை  கல்யாணம் பண்ணி குவைத்தில் செட்டிலாகிட்டா  :) அவளிப்படிதான் பார்ட்டிக்கு செய்து கொண்டாந்தா :) நான் தான் பிட்ஸான்னு நினைச்சுட்டேன் போலெ .:)) அதுதான் nan :)

      நீக்கு
    9. காஷ்மீரி நான் எனத் தேடிப் பார்க்கிறேன் நெல்லை. நான் கேட்டதே இல்லை.

      நீக்கு
    10. நீங்க சொல்றாப்போல் நான் சாப்பிட்டுப் பார்க்கலை ஏஞ்சல். ஒரு வேளை அது தான் காஷ்மீரி நான் தானோ என்னமோ!

      நீக்கு
    11. https://www.mydaintysoulcurry.com/kashmiri-naan/

      Search பண்ணினா நூற்றுக்கணக்கா இருக்கும்.

      நீக்கு
    12. பார்த்துக் கொண்டும்/படித்துக் கொண்டும் இருக்கேன். நன்றி. முதல் முறையாய்க் கேள்விப் படுகிறேன்.

      நீக்கு
  6. ஏற்கெனவே தெரிந்தாலும் இந்தப்புலவை வீட்டுக்கு வருபவர்கள் யாரேனும் ஆப்பிள் பழங்களை வாங்கி வந்தால் தான் நினைத்துக் கொண்டு பண்ணுவேன். ஏனெனில் எனக்கு ஆப்பிளை அப்படியே நறுக்கிச் சாப்பிட்டால் உடனே இருமல் வந்துடும். ஆகவே மிக்சியில் அடித்துச் சாறாகவோ இந்த மாதிரியோ பண்ணிச் சாப்பிடலாமே! ஆப்பிள் கேசரியும் சில சமயம் பண்ணுவேன். பச்சை ஆப்பிள் எனில் துண்டம் மாங்காய் போலவோ ஆவக்காய் போலவோ ஊறுகாய் போட்டுடலாம். தொக்குக் கிளறிடலாம். செலவாகிடும். கொஞ்சம் அரைப்புளிப்பு ஆப்பிள் சின்னதாக இருந்தால் பஜ்ஜியாகவும் போட்டுடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆப்பிளை வைத்து விதவிதமாக நீங்கள் சொல்லும் உணவு தயாரிப்புகள் நன்றாக இருக்கிறது. நிறைய ஆப்பிள் வாங்கும் சமயத்தில் ஆப்பிள் ஜூஸ் செய்து சாப்பிட்டுள்ளோம். இனி நீங்கள் சொன்ன மாதிரி ஆப்பிள் கேசரி செய்து பார்க்கலாம். பலவிதமான பகிர்வுகளுக்கும் நன்றி சகோதரி.

      நீக்கு
    2. ஹாஹாஹா, எங்க வீட்டில் எல்லோரும் இருந்தால் ஆப்பிள்கள் அப்படியே செலவாகிடும். ஆனால் நாங்க இரண்டு பேர் மட்டும் இருக்கும்போது வரும் ஆப்பிள்களை என்ன செய்வது. வீட்டு வேலை செய்யும் அம்மாவுக்கும் கொடுப்போம் தான். இருந்தாலும் என்னால் ஆப்பிள் நறுக்கிச் சாப்பிட முடியாததால் இம்மாதிரிப் பண்ணிடுவேன்.

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நன்மை செழிக்கப் பிரார்த்தனைகள்.

    அன்பு கீதாவின் கஷ்மீரி ஆப்பிள் புலாவை ரசித்துப்
    படித்தேன். இவ்வளவு மசாலாப் பொருட்களையும்,

    பாதாம், பிஸ்தா நெய்யில் வறுத்துக் கொட்டும் சமயம் எனக்கே வாசனை வந்த மாதிரி
    இருந்தது.

    ஆப்பிள் கேசரி கேள்விப்பட்டதே இல்லை.
    வித விதமான செய்முறைகளில்
    இந்த ரெசிப்பிகளைப் பார்க்கும்போது அன்பு கீதாவின்
    பலவகைப் பட்ட திறனை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

    புகைப்படங்களும் அழகாக வந்திருக்கின்றன.
    மிக நன்றி கீதாமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பைனாப்பிள் புட்டிங்/பைனாப்பிள் கேசரி சாப்பிட்டிருப்பீங்க தானே ரேவதி! அதே போல் தான் ஆப்பிள் கேசரியும். பைனாப்பிள் துண்டங்களைச் சர்க்கரை சேர்த்த நீரில் கொதிக்க வைத்துச் சேர்ப்பது போல் தான் இதிலேயும் சேர்க்கணும். ஆப்பிளைத் துருவிட்டு ரவையோடு சேர்த்து வறுத்தும் சேர்க்கலாம். ஆப்பிள் வாயில் கடிபடணும்னால் பொடியாக நறுக்கி சர்க்கரை கலந்த வெந்நீரில் போட்டு ஒரு கொதி விட்டுச் சேர்த்தாலும் நன்றாக இருக்கும்.

      நீக்கு
    2. நன்றி சொல்ல மறந்துட்டேன். நன்றி ரேவதி.

      நீக்கு
    3. 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 Very many thanks Geetha ma. Kettup paarkkiREn. mudinthaal seyyalaam.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    இன்றைய திங்களில் தங்கள் கை வண்ணமாக செய்திருக்கும் காஸ்மீரி ஆப்பிள் புலவு நன்றாக உள்ளது. வித்தியாசமாகவும் உள்ளது. படங்கள் அனைத்தும், மற்றும் விளக்கமாக சொன்ன செய்முறைகளும் அருமை. எத்தனை விதமான பொருட்கள் இதில் ஒன்று கூடி சேர்ந்திருக்கின்றன. அதனால் ருசியும் மிகவும் அருமையாகத்தான் இருக்கும் என உணர்கிறேன். மதுரை தமிழர் சொல்லியிருப்பது போன்று குழந்தைகளுக்கு கொடுக்க இது சத்துள்ள உணவு அவர்களுக்கும் விரும்பி சாப்பிடுவார்கள். அருமையான சத்துள்ள உணவை அறிமுக படுத்தியமைக்கு பாராட்டுக்கள் சகோதரி. பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா. செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். எல்லோருக்கும் பிடிக்குமா என நெல்லை எழுதி இருப்பதைப் பார்த்தால் சந்தேகமாகவும் இருக்கு!

      நீக்கு
  10. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    நலமே வாழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!!

    பதிலளிநீக்கு
  12. நல்லதொரு குறிப்பு. தெளிவாக விபரமாக எழுதியிருக்கிறீர்கள். பொதுவாக உலர்ந்த பழ வகைகளும் குங்குமப்பூவும் தான் காஷ்மீரி புலவின் ஸ்பெஷல். நீங்கள் உபயோகபப்டுத்தியிருப்பது சிம்லா ஆப்பிளா? பச்சை ஆப்பிள் வைத்து ஒரு முறை பண்ணி பார்க்க வேண்டும்.
    பழ கேசரி பண்ணும்போது பைனாப்பிள், சிம்லா ஆப்பிள, மாம்பழம், பேரீச்சை எல்லாம் உபயோகித்து எப்போதும் பண்ணுவேன். பழ ஜாம் செய்வதென்றாலும் ஆப்பிள் சேர்த்து பண்ணுவேன். பச்சை ஆப்பிள் ஊறுகாயும் மிகவும் சுவையாக இருக்கும். நீங்கள் சொல்லியுள்ள ஆப்பிள் பஜ்ஜி மட்டும் நான் செய்து பார்த்ததில்லை இனிப்பாக இருக்குமே என்பதால்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா, மனோ சாமிநாதன், நான் பயன்படுத்தியது வீட்டுக்கு வந்தவர்கள் வாங்கி வந்த ஆப்பிள்! எக்கச்சக்கமாய் இருந்தன. எங்களுக்குனு ஒரு ஆறை வைத்துக் கொண்டு மற்றவற்றை விநியோகம் செய்தோம். அதில் இரண்டை ஆப்பிள் ஜூஸாகப் போட்டுவிட்டு ஒன்றைப் புலவு செய்தேன். மற்ற மூன்றை அவர் நறுக்கிச் சாப்பிட்டுக் கொண்டார்.

      நீக்கு
    2. நானும் பழ கேசரியில் பைனாப்பிள் கிடைத்தாலும், மாதுளை கிடைத்தாலும் போடுவேன். மாம்பழம் அவ்வளவாப் போட்டதில்லை. தனி மாம்பழத்தில் கேசரி பண்ணலாமே! பேரிச்சை வீட்டில் எப்போது இருக்கும். ஜாமெல்லாம் இப்போது செலவாகிறதே இல்லை என்பதால் பண்ணலாம். ஆப்பிள் பஜ்ஜி அப்படி ஒண்ணும் தித்திப்பாக இல்லை.

      நீக்கு
    3. பேரிச்சை வீட்டில் எப்போதும் இருக்கும். ஜாமெல்லாம் இப்போது செலவாகிறதே இல்லை என்பதால் பண்ணுவதில்லை. ஆப்பிள் பஜ்ஜி, ப்ரெட் பஜ்ஜி, அப்பள பஜ்ஜி, அப்பள சமோசானு நான் குழந்தைகள் இருக்கையிலே விதம் விதமாகப் பண்ணிக் கொடுப்பேன். பனீரிலும் பஜ்ஜி, பகோடா போடலாம். நன்றாக இருக்கும். ப்ரெட் ஸ்லைஸ் இரண்டுக்கு நடுவே பனீர்த்துண்டை வைத்தும் பஜ்ஜி போட்டால் நன்றாக இருக்கும். சீஸையும் வைக்கலாம்.

      நீக்கு
  13. செய்முறை சுலபமாகத் தெரிகிறது நன்றி.

    பதிலளிநீக்கு
  14. அதாவது வெஜிடபிள் பிரியாணியில் வெஜிடபிள் இல்லாமல் ஆப்பிள் போட்டால் காஷ்மீரி புலாவ் அப்படித்தானே?

     Jayakumar

    பதிலளிநீக்கு
  15. ஆப்பிள் புலவு செய்முறை எளிதாக உள்ளது... நன்றி...

    பதிலளிநீக்கு
  16. நல்லதொரு சமையல் குறிப்பு. வித்தியாசமாக இருக்கும். பச்சை ஆப்பிள் கொண்டு இங்கே சிலர் சப்பாத்திக்கான சப்ஜி செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட், ஆமாம், பார்த்திருக்கேன். சாப்பிட்டதில்லை. எப்படி இருக்குமோனு எண்ணம். அதே ஊறுகாயாகச் சாப்பிடுகையில் எதுவும் தோன்றவில்லை. காமாட்சி அம்மா கொய்யாப்பழப் பச்சடி செய்முறை சொல்லி இருக்காங்க. கொய்யாப்பழம் வாங்கி வரச் சொல்லி வாங்கி வந்திருக்கார். பண்ணிப் பார்க்கணும். :))) போணி ஆகுமோனு கவலைதான்!

      நீக்கு
  17. காஷ்மீரி புலாவ் என்று ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிட்டிருக்கிறேன். அதில் ஆப்பிள் இருந்ததா? என்று நினைவில் இல்லை. அசட்டு தித்திப்பாகவும் இல்லை நன்றாகத்தான் இருந்தது. ஆனால் என் மகன் பழங்களே சாப்பிட மாட்டான்,அதுவும் வாழைப்பழமும் ஆப்பிளும் பரம விரோதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி, ஆப்பிள் இல்லாமல் வெறும் பாதம், பிஸ்தா, அக்ரூட், முந்திரி, காய்ந்த திராக்ஷை வகைகளைப் போட்டும் பண்ணலாம். நன்றாகவே இருக்கும். முக்கியத் தேவை நல்ல வாசனை வரும் பாஸ்மதி அரிசி. காஷ்மீரிலேயே விளையும் பாஸ்மதி அரிசியில் ஒரு வாசனை வரும். அந்த வாசனையோடு இந்தப் புலவைச் சாப்பிடும்போது நன்றாக இருக்கும்.

      நீக்கு
  18. சாதாரணமாக புலவு செய்யும் முறை இதுதான்..

    மாட்டுப் பெண் போல ஆப்பிள் வந்து சேர்ந்திருக்கிறது... கைப்பக்குவமும் கற்பனைத் திறனும் சேரும்போது இன்னும் பல விதங்கள் தோன்றலாம்...

    இன்றைக்குக் கொய்யாப் பழத்தைக் கொதிக்க வைத்திருக்கின்றேன் என்பது பின் குறிப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை. ஆமாம், புலவு எனில் மசாலா சாமான்களை வறுத்து/தாளித்துச் சேர்த்துச் செய்யும் முறை தான். கொய்யாப்பழத்தில் என்ன செய்தீர்கள் என்பதை சாயந்திரமாய்ச் சொல்லுங்கள்.

      நீக்கு
  19. கூடிய சீக்கிரமே
    வாழைப் பழ புலவு அல்லது சாம்பார்!..

    இப்போதே வாழைப்பழம் - தோசை/ உப்புமா வரைக்கும் வந்து விட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அப்பத்திற்குக் கட்டாயமாய்க் கனிந்த வாழைப்பழங்கள் சேர்ப்பேன். உப்புமா/தோசை/புலவு/சாம்பார்னு எல்லாம் பண்ணினதில்லை. இது/ஆப்பிள் புலவு/காஷ்மீரி புலவு பல வருஷங்களாகச் செய்முறையில் இருப்பது. 40 வருடங்கள் முன்னரே சாப்பிட்டிருக்கேன்.

      நீக்கு
  20. கீதாக்கா இதுக்கு பச்சைGranny Smith    ஆப்பில் நல்லா இருக்கும் .காரணம் அது பிரவுன் நிறமாகாதது அதோட ஸ்லைட் புளிப்பு சுவையும் இருக்கும் .இந்த ஆப்பிளை சாலட்டிலும் சேர்க்கிறாங்க .இந்த pilau ரைஸ் பார்ட்டி வகை உணவுக்கு நல்லா இருக்கும்  .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள் வருகைக்கு நன்றி ஏஞ்சல். நான் அப்படி எல்லாம் தேடிப் பிடித்துப் போவதில்லை. வீட்டுக்கு வர ஆப்பிள்களைச் செலவழிக்கணும். அதான்! :))))) அன்னிக்கு என்னமோ நம்மவரும் இதுக்கு ஓகே சொல்லவே பண்ணிட்டேன்.

      நீக்கு
  21. என்னுடைய டில்லி மருமகள் அடிக்கடி செய்வாள். நிறைய ட்ரைப்ரூட்ஸும்,நெய்யும்,மஸாலாவும்,பாஸுமதிரைஸ் வறுத்ததும் சேர்த்துச் செய்து இறக்கும்போது குக்கரைத் திரந்ததுமே ஒரு வாஸனை ஊரைத்தூக்கும். குங்குமப்பூ சேர்த்தால் இன்னும் ஒருபடி மேலேதான். ஆப்பிள் சேர்த்தது இல்லை. வெளிநாடாக இருந்தால் கோல்டன் ஆப்பிள்,கிரீன் ஆப்பிள் என்று ஸர்வம் சுலபமா கிடைக்கும்.கொய்யாப்பழப் பதிவு ஒரு ஜெயின் முறை. என்னிடம் இப்படி பலது. காஷமீரிப்புலவு மனதாலேயே சாப்பிட்டு விட்டேன். நல்ல ருசி மணம். போட்ட ஸாமான்களில் இனிப்பு ஒன்றும் தெரியவில்லை. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா, நமஸ்காரங்கள். இது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்றே எதிர்பார்த்தேன். குங்குமப்பூவெல்லாம் ஒரு கிராமே ஆயிரக்கணக்கில் விலை! :)))))) வெளிநாட்டில் ஆப்பிள்கள் விதம் விதமாய்க் கிடைத்தாலும் இந்தியப் பழங்களின் ருசி இல்லை. கொய்யாப்பழப் பச்சடி நாளைக்குப் பண்ணலாம்னு இருக்கேன். மேலிடம் ஒப்புதல் அளிக்கணும். மாங்காய்ப் பச்சடியே பிடிக்காது. :))))))

      நீக்கு
  22. ஆப்பிள் / காஷ்மீரி புலவு நன்றாக இருக்கிறது.
    செய்முறையும் எளிதாக இருக்கிறது.
    ஆப்பிள் ரஸம் செய்து இருக்கிறேன்.
    பச்சை அப்பிளில் ஊறுகாய் போட்டு இருக்கிறேன்.
    இது மாதிரி செய்து சாப்பிடலாம்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி. ஆப்பிள் ரசம் செய்ததில்லை. அதையும் ஒரு முறை செய்து பார்க்கிறேன். பச்சை ஆப்பிளில் விதம் விதமாய் ஊறுகாய் போடலாம். இங்கே/இந்தியாவில் பச்சை ஆப்பிள் அவ்வளவாய்க் கிடைப்பதில்லை.

      நீக்கு
  23. ஆஹா சுவையான ஒரு ரெசிப்பி.. இதைச் செய்து என் ஊ ரியூப் சனலில் போட்டு அசத்திடலாம் போல இருக்கே ஹா ஹா ஹா...

    படமெடுக்கும்போது , கையை ஆட்டுறீங்கள் போல கீசாக்கா, அதனாலதான் படங்கள் கலங்கலாகிப்போகுது.. இனி மாமாவைப் படமெடுக்கச் சொல்லுங்கோ:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரடி யூ ட்யூப் செஃப் அதிரா, எப்படிப் போயிட்டிருக்கு? என்னால இன்னமும் வந்து பார்க்க முடியலை. உங்க ஊ ரியூப் சானலில் இதைப் போட்டு அசத்துங்க. வேண்டாம்னு சொல்லை. ஆனால் என் பெயரைச் சொல்லணுமாக்கும். இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
    2. எல்லோரும் என்னமோ மாமா எனக்கு இந்த விஷயத்தில் எல்லாம் நிறைய உதவி செய்வார்னு நினைக்கறீங்க போல! உண்மையில் மாமாவுக்குத் தான் நான் உதவிட்டு இருக்கேன். இந்தப் படம் எடுக்கிற வேலைக்கெல்லாம் மாமா வர மாட்டார். "இந்தா! போய் நீயே எடு எல்லாத்தையும்!"னு சொல்லிடுவார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    3. //
      Geetha Sambasivam30 மார்ச், 2021 ’அன்று’ பிற்பகல் 2:37
      வாங்க அதிரடி யூ ட்யூப் செஃப் அதிரா, எப்படிப் போயிட்டிருக்கு? என்னால இன்னமும் வந்து பார்க்க முடியலை. //

      வல்லிம்மாகூட வந்திட்டா, நீங்கள்தான் இன்னும் வரவுமில்லை சப்ஸ்கிரைப் பண்ணவுமில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கர் சத்தம் கேட்குதோ?:)) பெரிசாச் சொன்னேன்:)) ஹா ஹா ஹா.

      மாமா உங்களுக்குப் பெமிசன் தந்து விடுவதே பெரிய விசயமெல்லோ:)).. அப்பூடி மாத்தி யோசிக்கோணும்:)).. நீங்க என்னதான் மூக்கால அழுதாலும் என் வோட் மாமாவுக்கே:)) ஹா ஹா ஹா மீ ஓடிடுறேன்:))

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!