ஞாயிறு, 2 மே, 2021

வானூர்திகள்
மைசூர் போய்  வந்த கடைசி கார்டு எங்கே என்று தேடப்போய்,  அதில் அர்ஜுன் சேர்த்து வைத்த படங்கள் ஒன்று தவிர மீதி எல்லாம் மொட்டை மாடியில் . 
அந்த ஒன்று பொம்மை ஏதோ போட்டியில் ஜெயித்ததற்கு கொடுத்தார்களாம் 

பர பர  என்று எங்கும் ஓடாமல் எதையோ கவனித்துக் கொண்டிருந்த அணில் 

கீழே உள்ள எல்லாப்படங்களும் மாடியிலிருந்து ...டர்போ ப்ரொப் ..என்ன அழகாக இருக்கிறது? லேண்டிங் கியர் இருக்கும் இடமே தெரியவில்லை 
ஒவ்வொன்றுக்கும் ஒரு விஷயம் புதிதாகக் கிடைக்கும் .. 

33 கருத்துகள்:

 1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கவனமாகவும் பாதுகாப்புடனும் இருந்து அனைவரும் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டிப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா அக்கா..  வாங்க...   இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 2. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 3. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா அக்கா..  வாங்க...    இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 4. ஹிஹிஹி, சனி, ஞாயிறு என்றால் எனக்குனு ஒதுக்கிட்டாங்க போல எல்லோரும். யாரையுமே காணோமே! எல்லா விமானங்களும்/விமானப் படங்களும் அருமை. அணிலையே விதம் விதமாய்ப் படம் எடுத்திருக்கலாம். இப்படி நின்னு ஃபோட்டோ பிடிக்க போஸ் கொடுத்திருக்கே! இங்கே ஒரே ஓட்டம் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா?  வியாழன் வெள்ளியில் உங்களை ரொம்ப நேரம் காணோம்னு பார்த்தேனே!!  வியாழனன்று நெல்லை காணாமல்போய் இரவுதான் வருகை புரிந்தார்!

   நீக்கு
  2. அன்னிக்கெல்லாம் அதிர்ச்சியான செய்திகள் அடுத்தடுத்து. சரிப்படுத்திக்கொள்ளவே முடியவில்லை. சாப்பாடு கூட அன்னிக்கு ரெண்டுங்கெட்டான் தான்! :( இப்போ 2 நாட்களாகக் கொஞ்சம் பரவாயில்லை மனமும்/உடலும். :( காலை வேளையில் உங்களை வருத்தப்படுத்தி விட்டேனோ?

   நீக்கு
  3. முகநூலில் மட்டும் கொஞ்சம் நேரம் செலவு செய்தேன்.

   நீக்கு
  4. அதெல்லாம் இல்லை.  அதிர்ச்சி செய்திகளை நானும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

   //முகநூலில் மட்டும் கொஞ்சம் நேரம் செலவு செய்தேன்.//


   ம்ம்ம்..  கிருஷ் சார் கூட பேஸ்புக்குக்குப் போயிட்டார்.  வாசு பாலாஜி ஸார் அங்கேயே குடி இருக்கார்!

   நீக்கு
  5. @ஸ்ரீராம், யாரு அது கிருஷ் சார்? வாசு பாலாஜி எப்போவுமே அங்கே தான் இருக்கார்! :))))) நான் அவ்வளவெல்லாம் போகலை. கேஷவின் படங்களைப் பார்க்கப் போவேன். அப்படியே ஒரு சில கண்ணில் படும் முகநூல் பதிவுகள் மட்டும்! அரை மணி நேரம் இருந்தால் அதிகம். என்னை முகநூல் அவ்வளவாக ஈர்க்கவில்லை. ஆனாலும் கணக்கு இருக்கு/தினமும் ஒரு முறை போய்ப் பார்ப்பேன்.

   நீக்கு
 5. ஞாயிறு உலா படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
  //பர பர என்று எங்கும் ஓடாமல் எதையோ கவனித்துக் கொண்டிருந்த அணில்//

  சின்ன அணில் பிள்ளை மனம் கவர்ந்தார்.
  நானும் இங்கு தோட்டத்திற்கு வரும் அணில்களை நிறைய படம் எடுத்து வைத்து இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கோமதி அக்கா.  மற்ற படங்களின் அணிவகுப்பிலிருந்து தனித்து நிற்கும் ஒரு படம் எப்போதுமே கவனம் கவரும்!!

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. மைசூர் இயற்கை காட்சிகள் கொண்ட படங்களை எதிர்பார்த்து வந்தேன். "நீங்களே உங்களுக்கு பிடித்தமான வானூர்தியில் ஏறி உங்களுக்கு விருப்பமான இடங்களுக்கு சென்று இயற்கையை ரசித்துக் கொள்ளுங்கள்.." என சாய்ஸில் விட்டு விட்டீர்கள்.

  அத்தனை வானூர்தி படங்களும் அருமை. மொட்டை மாடியில் இவ்வளவு அருகாகவாக அத்தனை விமானங்களும் பறந்தது... எல்லாமே தெளிவாக இருக்கின்றனவே...!

  "அணிலாரும் இதைக்கண்டுதான் வியந்து இருந்த இடத்திலேயே ஓடாமல் நின்று விட்டரோ," என நினைக்குபடி அவரை படமெடுத்த கோணமும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துரைக்கு நன்றி. இரசிப்புக்கு நன்றி.

   நீக்கு
  2. எல்லாப் படங்களுமே அர்ஜுன் எடுத்தவை மட்டுமே. கேனான் D1200 டெலிலேன்ஸ் உடன். 150 படங்கள் வைத்திருப்பதுடன் அவற்றைப் பற்றி நிறையத் தகவல்களுடன்

   நீக்கு
 7. வானூர்திகளை பார்ப்பது எப்போதும் மகிழ்ச்சிதான். மகன் வீட்டில் தோட்டத்தில் நின்றால் நீல வானத்தில் வெள்ளி மீன்களாக மேகங்களுக்கு இடையே நீந்தி போவதை பார்ப்பேன்.

  வானூர்தி படங்கள் எல்லாம் அழகு.

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  எல்லோரையும் இறைவன் நன்றல்லாத செய்திகளிடமிருந்தும் காக்க வேண்டும். கீதாமா,
  ஸ்ரீராம் இருவரும் சொல்வது போல

  எங்கிருந்து என்ன செய்தி வருமோ என்ற பயம்
  விடமாட்டேன் என்கிறது.

  பதிலளிநீக்கு
 9. போயிங்க் விமான பொம்மை,
  உயிர்த்துடிப்போடு அணில்.
  அது ஏன் நம்மை அப்படிப் பார்க்குமோ என்று நானும்
  வியந்திருக்கிறேன்.
  சட்டென்று ஓடிவிடும். வெகு அழகு,.

  அனைத்து விமானப் படங்களும் பார்க்க மிக அருமை.
  அழகாகப் படம் எடுத்திருக்கிறார்கள். இத்தனை வகை விமானங்களை
  இப்போதுதான் ஒன்றாகப் பார்க்கிறேன்.
  பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 10. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  நலம் வாழ்க எங்கெங்கும்..

  பதிலளிநீக்கு
 11. பார்க்கப் பார்க்க திகட்டாதவற்றுள் விமானமும் ஒன்று... அழகு.. அழகு..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!