அன்னக்கிளி வந்து வெற்றிபெற்ற சூட்டில் எடுக்கப்பட்ட படம் பொண்ணு ஊருக்கு புதுசு. அன்னக்கிளிக்கு கதய்வ ஆசனம் எழுதிய ஆர் செல்வராஜ்தான் இந்தப் படத்தின் இயக்குனர். படம் 1979 ல் வெளிவந்தது.
அன்னக்கிளி செல்வராஜ் இயக்கிய முதல் படம். 'எங்கம்மா சபதம்' செல்வராஜ் எழுதிய முதல் திரைக்கதை. அவர் வாழ்வில் அன்னக்கிளி ஒரு சூப்பர்ஹிட். எனவே அவரை அன்னக்கிளி செல்வராஜ் என்றே அப்புறம் அழைக்கத்தொடங்கினர்.
ஜூவியில் எழுதிய ஒரு தொடரில் தெலுங்குத் தயாரிப்பாளர் திரு ராமாநாயுடுவிடம் அவர் சொல்லிய ஒரு கதையை பட்டென 'எனக்குப் பிடிக்கவில்லை' என்று சொல்லி வெளியே வந்தததைச் சொல்கிறார் ஆர் செல்வராஜ். அது அப்புறம் 'திருமாங்கல்யம்' என்கிற பெயரில் திரைபபடமாக வெளிவந்து தோல்வியுற்றதாம். அதேபோல கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலிருந்து அதன் கதைப்போக்கு பிடிக்காமல் வெளியேறி இருக்கிறார்.
இவரும் பாரதிராஜாவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கதை சொல்லப்போய், அந்தக் கதை அவருக்கும் பிடித்து நடிக்கவும் ஒப்புக்கொண்டு பின்னர் யாரோ கலைத்து விட்ட காரணத்தால் விலகிக்கொள்ள, அந்தப் படம்தான் புதுமைப்பெண் என்று ரேவதி நடிப்பில் வெளியானதாம்.
M G வல்லபன், முத்துலிங்கம் பாடல்களுக்கு இசை இளையராஜா.
சுதாகர், சரிதா நடித்திருக்கும் இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே அப்போது ஹிட். இளையராஜாவே ஆண் குரலாக பாடியிருக்கும் பாடல்கள். எஸ் பி ஷைலஜா இந்தப் படத்தில் வரும் இந்தப் பாடலால்தான் தமிழில் முதலில் அறிமுகமானார்.
சோலைகுயிலே காலைக்கதிரே
அள்ளும் அழகே துள்ளும் ராகமே துள்ளும் ராகமே
சோலைகுயிலே காலைக்கதிரே
அள்ளும் அழகே துள்ளும் ராகமே துள்ளும் ராகமே
வண்ணதெங்கழனி காலைக்கு வாழ்த்து பாடுதே
சின்னபூங்குருவி நாளைக்கும் சேர்த்து தேடுதே
அசைவில் இசையில் கன்னிதமிழே
வாடையில் ஆடிடும் கோடையின் நீரலை
மேடையின் மீது கண்ணாலே கவி பாடி பொன் வண்ண மீனாடுதே
முல்லை மாலைகளை சூடிடும் வெள்ளி மேகங்கள்
நெல்லுப் பானைகளை சுமக்கும் கன்னி கோலங்கள்
அசைவில் இசையில் கன்னி தமிழே
செங்கதிர் சிந்திடும் சித்திரை பங்குனி திங்களில்
நாளில் மந்தாரை செந்தாழம் வந்தாடும் ஊர்கோலமே
இதே படத்தில் வரும் ஒரு டூயட் பாடல். இளையராஜாவும் எஸ் பி ஷைலஜாவும் இணைந்து பாடும் பாடல்.எனக்கு மிகவும் பிடித்த இளையராஜா குரல் பாடல்களில் ஒன்று.
தனித்தனியாக ஒரு சரணம், இருவரும் இணைந்து ஒரு சரணம் என்று அமைத்துக் கொண்டு, முதல், கடைசி சரணத்தை தனியாகவும், நடு சரணத்தை இணைந்தும் பாடி இருக்கின்றனர். பாடலின் இடையில் வரும் இசை பாடலுக்கான மூடைக் அமைத்துத் தருகிறது.. குறிப்பக மூன்றாவது சரணத்துக்கு முன்..
சாமக்கோழி ஏன் கூவுதம்மா
சாமக்கோழி ஏன் கூவுதம்மா
ஆசையுள்ள சேவல் ஊருக்கென்ன காவல்
பக்கத்தில் வந்து சொல்லவா வெக்கத்தை விட்டு
ஏக்கத்திலே தூக்கமின்றி கூவுதம்மா பாவம்
எண்ணமெல்லாம் சொல்லி வைக்க தேடுதம்மா மோகம்
மோகத்திலே ஹேய்.. தேடித் தேடி
ஜோடியைத்தான் பார்த்துவிட்டால் சேர்த்துக்கொள்ள தாவும்
தாகம் இன்று தீரும் நேரமம்மா
சாமக்கோழி ஏன் கூவுதம்மா
பாடலுக்கு ராகமின்றி காத்திருந்தேன் நானும்
ராகத்துடன் பாவம் கொண்டு ஓடிவந்தாய் நீயும்
நீயும் உண்டு ஹேய் நானும் உண்டு
காதலுக்கு பாதை உண்டு கைகளுக்குள் வாடி
கட்டிக்கொள்ள போறேன் பேரழக
சாமக்கோழி ஏன் கூவுதம்மா
பூஞ்சிறகில் கோலமிடும் ஜாடை சொல்லும் கண்கள்
தேனிதழில் சேர்த்து வைத்த மோக ரசம் பொங்கும்
சேர்த்துக்கொள்ள நான் சாய்ந்துகொள்ள
தோள்களிலே போட்டு வைத்தாய் பொன்னழகு மஞ்சம்
சொல்லித்தர வேணும் பாடங்களை
சாமக்கோழி ஹேய் கூவுதம்மா
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குதொற்று சீக்கிரமே விலகி மக்கள் நலம் அடைய வேண்டும்.
வாங்க வல்லிம்மா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க் எங்கெங்கும்...
வாங்க துரை செல்வராஜூ சார்... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குபாடல்கள் இரண்டும் இனிமை.
பதிலளிநீக்குமுதல் பாட்டு மிகப் பிரபலம். ரேடியோ சிலோனில்
வைத்துக் கொண்டே இருப்பார்கள்.
பாடல்வரிகள் இப்போதுதான் பார்க்கிறேன்.
இரண்டாம் பாடலும் அருமை.
ஜாமக் கோழி என்று கேட்கும்:)
எனக்கும் இளைய ராஜாவின் குரல் சில
பாடல்களில் பிடிக்கும். சிலசமயம்
ஆஃப்கீ யாக ஒலிப்பது போலத் தோன்றும்.
இசை சிறப்பாக இருக்கும்.
நன்றி அம்மா. நான் ஒரு கெஸ்ட் வைத்திருந்தேன். பி சுசீலாவுக்கென்று, எஸ் ஜானகிக்கென்று, வாணி ஜெயராமுக்கென்றெல்லாம் தனித்தனிக் கேசட்டுகள் வைத்திருந்தபோது பெண்குரல் என்று சொல்லி மற்ற பெண் பாடகிகள் பாடிய எனக்குப் பிடித்த பாடல்களை அதில் பதிவு செய்து வைத்திருந்தேன். அதில் முதல் பாடல் இது!
நீக்கு//ஆஃப்கீ யாக ஒலிப்பது போலத் தோன்றும்.//
அப்படி என்றால்?
ஸ்ரீராம் என் சிற்றறிவுக்கு எட்டியபடி ஆஃப் நோட் என்பது அந்தப் பாடலுக்கான அல்லது எதிர்பார்க்கும், பிச்ச் ஃப்ரீக்வென்சியில் இல்லாமல் பாடுவது அஅல்லது வேண்டுமென்றே.
நீக்குகீதா
சரியான கீ நோட் இல்லாமல்
நீக்குகீதா
ஆஃப் கீ நம்ம ஊர்ப்படி சொல்றதுன்னா சரியான சுருதியில் இல்லாமல், சுருதி விலகி..
நீக்குகீதா
எதுக்குடா ஹிந்தி வார்த்தைகள்லலாம் கீதா ரங்கன் எழுதறார்னு யோசித்தேன். பிறகுதான் அது, half key என்று புரிந்தது. ஆப் கீ டமிள் அச்சா நஹின் தீதி
நீக்கு//ஆஃப் கீ நம்ம ஊர்ப்படி சொல்றதுன்னா சரியான சுருதியில் இல்லாமல், சுருதி விலகி..// இப்படி சுலபமாக சொல்வதை விட்டு விட்டு கஷடப்பட்டு சுற்றி வளைக்கிறாரே என்று நினைத்தேன். :)
நீக்கு🤣😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
நீக்குஸ்ரீராம்,
நீக்குசுருதி விலகல், மற்றும் சுருதி பேதம் தெரிவது.
எனக்கு மட்டுமான குறையாக இருக்கலாம்.
என் மாமா ஒருவர் இளையராஜா குச்சி குச்சியாய்ப் பாடுகிறார் என்பார்!
நீக்குஎஸ் பி .ஷைலஜாவின் சோலைக் குயிலே,மிக அழகு.
பதிலளிநீக்குஒரே கிராமத்துக் கதையாக வந்த காலம்.
பல பல பாடல்கள் நினைவுக்கு வருகிறது.
எல்லாக் கதா நாயகிகளும் ஊஞ்சலிலோ, வயல்களிலோ,
சோலைகளில்
பாடிய படி அறிமுகம் ஆவார்கள்.:)
பாடல்களைக் காட்சியில்லாமல் கேட்க இனிமை.
அனாவசியமாகக் காட்சிகள் இல்லை என்றால்
பாடல் ரசிக்கலாம்.
நல்ல பாடல்களுக்கு நன்றி ஸ்ரீராம்.
நன்றி அம்மா.. ஆம், சில பாடல் காட்சிகளை பார்க்காமல் பாடலை மட்டும் ரசிப்பதே சுகம்.
நீக்குஒரே கிராமத்துக் கதையாக வந்த காலம்.//
நீக்குஹா ஹா ஹா அம்மா அது எப்பவுமே நம்ம சினிமாக்காரங்க வழக்கம். ஒரு படம் ஹிட் ஆயிடுச்சுன்னா உடனே அதே மாதிரி பல எடுப்பாங்க வரிசையா ஒரு சீசன் மாதிரி.
விளையாட்டுப் பின்னணி கொண்ட படம் ஹிட் ஆனதும் அது மாதிரி நிறைய வந்தது..இப்படி சொல்லலாம்
சாதி மாறி காதல் வெட்டு குத்து இப்படி...அது ஒரு சீசன்
கீதா
(●'◡'●)(●'◡'●)(●'◡'●)(●'◡'●)(●'◡'●)(●'◡'●)(●'◡'●)(●'◡'●)(●'◡'●)(●'◡'●)Geetha
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் தொற்றுப் பரவல் குறைவதோடு அல்லாமல் அதை விட வேகமாகப் பரவும் வதந்திகளும் முற்றிலும் ஒழிய வேண்டும்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் வாங்க...
நீக்குஷைலஜா பாடல் ஸூப்பர் அடிக்கடி ரசித்து கேட்டது.
பதிலளிநீக்குநன்றி ஜி
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்! விரைவில் இந்த உலகின் துன்ப இருள் மறைந்து நம்பிக்கை வெளிச்சம் எங்கும் பரவட்டும்!
பதிலளிநீக்குவணக்கம். வாங்க மனோ அக்கா.
நீக்குசோலைக்குயிலே பாட்டு மிக மிக புகழ்பெற்ற பாடல்! எனக்கு மிகவும் பிடித்தது. மத்யமாவதி ராகம் என்று சொல்லப்படுகிறது. அடுத்தப்பாட்டு அவ்வளவாக கவனம் பெறவில்லை ரசிகர்களிடம்!
பதிலளிநீக்குஇந்த இரண்டு பாடல்களும், இன்னும் இரண்டு பாடல்களும் இந்தப் படத்தில் எனக்குப் பிடிக்கும்.
நீக்குஹையோ ஸ்ரீராம் இரண்டுமே ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடித்த பாடல் அதுவும் இரண்டாவது பாடல் வாவ்...மிக்க நன்றி ரொம்ப வருஷம் அப்புறம் கேட்கத் தந்ததுக்கு...
பதிலளிநீக்குமத்த தகவல் எல்லாம் புதுசு
கீதா
நன்றி கீதா.
நீக்குசெல்வராஜ் டைரக்டர் என்பதே புதுசு ஹிஹிஹிஹி
பதிலளிநீக்குஅவர் பற்றிய தகவல் எல்லாம் சுவாரசியம் அதுவும் கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலிருந்து கதைப் போக்கு பிடிக்காமல் வெளியேறியது என்பதெல்லாம்...
கீதா
//செல்வராஜ் டைரக்டர் என்பதே புதுசு// மணிரத்தினத்தின் ஃபேவரிட் திரைக்கதாசிரியராம் செல்வராஜ். அலைபாயுதே, சுஜாதாவின் கதையாக இருந்தாலும் டைட்டிலில் கதை.திரைக்கதை செல்வராஜ் என்றுதான் போட்டிருப்பார்கள்.
நீக்குநன்றி கீதா, பானு அக்கா.
நீக்குஷைலஜாவின் குரலில் ஒரு annoying shriek இருக்கும். அவர் கொஞ்சம் லோ பிட்சில் பாடியிருக்கும் பாடல்கள் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குஎல்.ஆர்.ஈஸ்வரியை ஒழித்துக் கட்டிய இளையராஜா அவர் பாட வேண்டிய பாடல்களை ஷைலஜாவிற்கு கொடுத்தார். அந்த வகையில் நெற்றிக்கண் படத்தில் இவரும், எஸ்.பி.பியும் பாடியிருக்கும் 'ராஜா ராணி ஜாக்கி' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இந்த ப் பாடலையும் சரி, ரிக் ஷாகாரன் படத்தில் பி.சுசீலா 'ஆனிப்பொன் தேர் கொண்டு..' என்று கீ...ச்..சு குரலில் துவங்கும் பாடலையும் சரி என்றால் ரசிக்க முடிந்ததில்லை.
இளையராஜா தனக்கென்று ஒரு பாணி, பாடகர்கள் என்று வைத்துக்கொள்ள விரும்பினார். பாடலும் அவரது பாணி தனி. அப்படிச் செய்ததால்தான் எம்.எஸ்.வி போன்ற போட்டியாளர்களிடமிருந்து தனித்துத் தெரிந்தார்.
நீக்குஅப்போ விவித பாரதி(?)ல, வாரத்தில் ஒரு நாள் மதியம் புதுப்பாடல்கள் போடுவாங்க. நான் எம்.எஸ்.வி எத்தனை பாடல் என்றும் தம்பி, இளையராஜா எத்தனை பாடல் என்றும் எண்ணுவோம். ஆரம்பத்தில் சரிசமமாக இருந்தது போகப்போக இளையராஜாவின் ஆதிக்கமாக ஆகிவிட்டது.
BHANU MA, I wanted to point that out. Susilaamaa song was good. only the scenes were bad.
நீக்குஎனக்கு ஷைலஜாவின் குரலில் சில பாடல்கள் பிடிக்கும். இதுவும் ஒன்று.
நீக்குஅது சரி முதல் பாடலில் லாங் ஷாட்டில் சைக்கிள் ஓட்டுவது சரிதாதானா? இந்தப் படத்தில் தானே 'ஓரம் போ,ஓரம் போ ருக்குமணி வண்டி வருது.. பாடல்..?'
பதிலளிநீக்குஆமாம். ஆமாம்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.. வாங்க...
நீக்குஷைலஜா பாடல் பிடித்த பாடல். அடிக்கடி கேட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குஅடுத்த பாடலும் கேட்டேன்.
நன்றி அக்கா.
நீக்குஇந்த இரண்டு பாடல்களும் ஒருகாலத்தில் ரேடியோவில் அடிக்கடி ஒலிக்கக் கேட்டிருக்கிறேன். அவற்றை பற்றிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஆமா ஷைலஜாவின் முதல் பாடல். ஹை சுருதியில் கொஞ்சம் கஷ்டப்பட்டுப் பாடுவது போல் இருக்கும்.
பதிலளிநீக்குகீதா
நன்றி.
நீக்குஅருமையான பாடல்கள்
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஇரு பாடல்களையும் ரசித்துள்ளேன்...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஎன்னை என் +1 காலத்துக்குக் கொண்டுசென்றுவிட்டீர்கள்.
பதிலளிநீக்குநான் சோலைக்குயிலே பாடலை நன்றாக அப்போது பாடுவேன். எனக்கு எப்போதுமே பெண் குரலில் உள்ள பாடல்கள் பாடுவதற்கு அப்போ எளிதாக இருக்கும். வார்த்தைகளும் மனப்பாடம்.
சாமக்கோழி பாடல் ஹாஸ்டல்ல ஒலிபரப்புவாங்க. ரசித்திருக்கிறேன். அந்தச் சமயத்தில்தான் எஸ் ஜானகி கிழவி குரலில் பாடிய பாடலும் வந்தது. சரிதா, சைக்கிள் ஓட்டிக்கொண்டு பாடும் பாடல் (சட்னு நினைவுக்கு வரலை)..
//சைக்கிள் ஓட்டிக்கொண்டு பாடும் பாடல் (சட்னு நினைவுக்கு வரலை)..// என்னுடய பின்னூட்டத்தை பார்க்கவில்லையா நெல்லை?
நீக்குநன்றி நெல்லை.
நீக்குஇரு பாடல்களுமே ரேடியோவில் அதிகம் ஒலித்தவை அப்போது. நிறையக் கேட்டு ரசித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குதுளசிதரன்
நன்றி துளஸிஜி.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇரண்டு பாடல்களுமே இனிமையான பாடல்கள். பலமுறை கேட்டு ரசித்த பாடல்கள்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஇன்றைய பதிவின் பாடல்கள் இரண்டுமே எனக்குப் பிடித்தமானவை... இலங்கை வானொலியில் பல முறை கேட்டு மகிழ்ந்தவை....
பதிலளிநீக்கு