திங்கள், 24 மே, 2021

'திங்க'க்கிழமை :  பாலக் பனீர் - கீதா ரெங்கன் ரெஸிப்பி 

 

பாலக் பனீர்

ஹாய் ஹாய் எபி கிச்சன் ரசிகர்கள் அனைவருக்கும் எபி கிச்சன் அன்பர்களின் வணக்கம்.

இந்த செய்முறையை நான் என் நட்பு வட்டத்தில் இருக்கும் ஒருவரிடம் - சென்னையில் ஒரு பெரிய உணவகத்தில் பணிபுரிபவரிடம் அவர் செய்து எங்களுக்குப் பரிமாறிய போது கற்றுக் கொண்டேன். இது நான் அடிக்கடி செய்வது என்றாலும் படம் எடுத்து இரு வருடங்களுக்கும் மேல் ஆகிறது. இப்போதுதான் அதை எபிக்கு அனுப்ப்யிருக்கிறேன். மகனின் நண்பரின் தம்பியும் கேட்டரிங்க் படித்தவர். அவரிடமும் சிலது கற்றுக் கொண்டதுண்டு. 

கீரையை நன்றாக மை போல் பேஸ்டாக அரைக்க வேண்டும். என் மிக்சி கொஞ்சம் மக்கர். ப்ளேட் எல்லாம் வீக். அதனால் அத்தனை மையாக வரவில்லை.

வலைப்பக்கம் வராத போது யுட்யூபும் பார்க்கவில்லை என்பதால் நம் நட்புகள் சமையல் கில்லாடிகள் ஆதிவெங்கட், அதீஸ் பாலஸின் ராணியம்மா, சௌம்யா (எல் கார்த்திக்), பானுக்காவின் சகோதரியின் குறிப்புகள், வெங்கடேஷ் பட் என்று எதுவும் பார்க்கவில்லை. 

இப்போது வெங்கட்ஜி யின் தளத்தில் ஆதியின் ஃபெல்லூடா செய்முறை சுட்டி, ஏஞ்சல் தளத்தில் பகிர்ந்திருக்கும் அதீஸ் பாலஸின் யுட்யூப் சுட்டிகளைப் பார்த்ததும் அதைப்பார்க்கலாம் என்று போனால் வெங்கடேஷ் பட்டின் பல செய்முறைகள் வரிசை கட்டி நின்றன/நிற்கின்றன. இன்னும் பார்க்கவில்லை. சில பெங்காலி, காஷ்மீரி என்று லிஸ்ட்! கூடவே பச்சை வண்ணத்தில் பாலக் பனீர்! ஆஹா! நாம் வேறு குறிப்பெழுதி கொலாஜ் செய்து விட்டோமே! காப்பி என்று யாரேனும் சொல்லிவிட்டால்? 

ரொம்பவே யோசித்தேன் அனுப்புவதற்கு. ஏனென்றால் நான் செய்திருக்கும் காஷ்மீர் புலாவ், தம் ஆலு (வித்தியாசமான முறை என்று நான் சிம்லா-மணாலி சென்ற போது பல பல வருடங்களுக்கு முன், உணவகம் ஒன்றில் சமையல் செய்பவரிடம் கற்றது!) ஹைதராபாத் செய்முறைகள் என்று அடுத்து கொலாஜ் செய்து குறிப்பெழுதி எபிக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தேன். இவையும் வெங்கடேஷ் பட்டின் லிஸ்டில் இருந்தது!!! நான் இன்னும் கொலாஜ் செய்து குறிப்பு எழுதவில்லை.  பாலக் பனீர் மட்டுமே ரெடியாக இருந்தது. 

இதையே அனுப்ப யோசிக்கும் போது அவற்றை எப்படி அனுப்புவது என்று யோசனையில் இருக்கிறேன். வேறு ஒன்றுமில்லை, காப்பி என்று பெயர் வந்துவிடுமே என்ற தயக்கம் தான். 

ஆனால் ஒன்று! வெங்கடேஷ் பட் அவர்களின் செய்முறை, குறிப்புகள்தான் நன்றாக, சரியாக பெர்ஃபெக்டாக இருக்கும் என்பதை ஆணித்தரமாகச் சொல்லலாம், என்பதால் நம்முடையதை யாரும் வகை வைக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில், தைரியமாகப் பகிரலாம் என்றும் மற்றொரு எண்ணம்! நானுமே அவரது விசிறியாச்சே!!!

இன்னும் ராஜஸ்தானி குறிப்புகள் வேறு இருக்கிறது. 

எனவே அந்த வீடியோக்களைப் பார்த்துவிட்டு நான் கற்று செய்த முறை சிறிதேனும் வித்தியாசமாக இருந்தால் பகிரலாம் என்று முடிவு செய்து இப்போதைக்கு பாலக் பனீர் செய்முறையை ரொம்பவே யோசனையுடன் தான் பகிர்கிறேன். அவரது வீடியோவை இனிதான் பார்க்க வேண்டும்.

எனக்குச் சொல்லிக் கொடுத்த அண்ணா சொன்னது கிட்டத்தட்ட 50 கிராம் க்கும் மேல் வெண்ணை. செய்முறையில் நான் பயன்படுத்தியிருக்கும் வெண்ணை குறைவுதான்.வேறு ஒன்றுமில்லை வந்திருந்த நம் நெருங்கிய உறவுகள் கொஞ்சம் உடல் உபாதைகள் உள்ளவர்கள் என்பதால். விருந்திற்கு என்றால் 50கிராம் வெண்ணை சேர்க்கலாம். 

சரி, இனி கொலாஜ் பெட்டிகள் பேசும்!!


நான் இதை அனுப்பும் முன் பட்டின் வீடியோவையும் பார்த்துவிட்டேன். கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது! ஹப்பா! பிழைத்தேன்! பெருமூச்சு!

அவரது முறை அட்டகாசம் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்!

சரி நட்புகளே! அடுத்து வேறொரு ரெசிப்பியுடன் வரும் முன் உங்களுக்கு எபி கிச்சன் அன்பர்களிடம் இருந்து  பை பை இப்போது. மீண்டும் சந்திப்போம்!

78 கருத்துகள்:

 1. அனைவருக்கும் காலை வணக்கம்

  பதிலளிநீக்கு
 2. காலை வணக்கம் அனைவருக்கும்.

  என்னவோ ஒரு பட்சி சொல்லிச்சு இன்னிக்கு நம்ம திங்க வா இருக்குமோன்னு....ஆனால் என்ன ரெசிப்பி அனுப்பினேன் என்பதே மறந்து போச்சு....ஹா ஹா

  பார்த்தா இந்த ரெசிப்பி...

  பானுக்கா ஸ்ரீராம் தவிர யாரையும் காணலை! போணியாகலை போல பாலக் பனீர்.

  வேலை முடித்து அப்புறம் வருகிறேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பானுக்கா ஸ்ரீராம் தவிர யாரையும் காணலை! போணியாகலை போல பாலக் பனீர். //


   கீதா ரெங்கன் இப்படி எல்லாம் நினைத்து எப்போது சோர்ந்து விடக் கூடாது பின்னூட்டங்களை எதிர்பார்த்து பதிவு எழுத வேண்டாம் பதிய வேண்டாம்

   நீக்கு
  2. ஹா ஹா ஹா மதுரை நிச்சயமாக! எதிர்பார்த்தால் சில சமயம் சோர்வுதான் வரும்.. மிக்க நன்றி மதுரை உங்களின் ஊக்கம் கொடுக்கும் வரிகளுக்கு

   அது சும்மா சொன்னதுதான்...விளையாட்டாக! கீதாக்காவின் வரிகள் போணியாகலை என்பது அவருக்குத்தான் ராயல்டி!

   கீதா

   நீக்கு
  3. //போணியாகலை போல பாலக் பனீர்// - இப்போதான் பத்து நிமிடம் இணையத்தில் இருக்க முடியும். அதனால இப்போதான் பார்த்தேன். 5 மணிக்குக் கிளம்பினால் 8 1/4க்குத்தான் வருவேன். பிறகு வரிசையாக வேலைகள்.

   நான் மெத்தி ஆலு எழுதலாம்னு நினைக்கிறேன். எனக்கு அது ரொம்பவே பிடித்துவிட்டது, பாலக் பனீரைவிட.

   நீக்கு
  4. மேத்தி ஆலு செம ரெசிப்பி நெல்லை...போடுங்க..
   நான் நம் வீட்டில் செய்வதுண்டு. ரொம்ப பிடிக்கும்

   க்ரேவியா? ட்ரை செய்முறையா?

   கீதா

   நீக்கு
 3. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்ல செய்திகளே
  நம்மை வந்து அடைய வேண்டும்.இறைவன் நம் அனைவரையும் காக்க
  கருணை வைக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் வல்லிம்மா...ஒவ்வொரு லாக் டவுன் தளர்வின் போதும் மக்கள் கொஞ்சம் கூட சமூகப் பொறுப்பு, தன் சக மனிதர்களை நினைத்து நாம் இருக்க வேண்டும் என்றில்லாமல் இருப்பது மனது வேதனை அடைகிறது.

   நம் மக்கள் திருந்தாத வரையில் ஒன்றும் செய்ய இயலாது.

   இன்று மதுரையின் பதிவும் இதுதான்

   கீதா

   நீக்கு
 4. வெங்கடேஷ்பட் ஒன்றும் எல்லாம் ரிசிப்பிக்களுக்கும் ஒரிஜனல் ஒனர் அல்ல கவலைப்படாதீங்க நீங்க எப்படி சமைக்கிறீங்க என்பதை உங்கள் பாணியில் கொல்லுங்க கீதா ரெங்கன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓனர் இல்லைதான்....

   அவர் செய்முறைகள் ப்ரெசெண்டேஷன் அதுதான் அவர் கற்ற முறையைச் சொல்லியும் செய்வது..

   இது நான் என் நட்பு அண்ணாவிடம் கற்றது. நான் செய்யும் போது வெங்காயம் தக்காளி வதக்கி அரைத்துவிடுவதும் உண்டு. அது போல சில சமயம் பனீரை வெண்ணையில் லைட்டாக வதக்கிக் கொண்டும் செய்வதுண்டு. பனீரை போட்டு அதிக்ம கொதிக்க விடாமல் சேர்ப்பது என்று வேறு வேறு வகையிலும் செய்வதுண்டு

   கீதா

   நீக்கு
  2. மிக்க நன்றி மதுரை அண்ட் கீதாக்கா

   கீதா

   நீக்கு
 5. அன்பின் சின்ன கீதாவின் பாலக் பனீர்

  படங்கள் அற்புதம். கூடவே சொல்லி இருக்கும் முறைகள்
  மிக அழகு.

  கீரையின் பச்சை வண்ணமும், வெண்ணெயின் வெண்மையும்,
  பனீர் துண்டங்களின் மினுமினுப்பும் அருமை.
  இங்கே கிடைக்கும் டோஃபூ தான் நாங்கள் உபயோகிப்போம்.

  வெங்கடேஷ் பட்ட்., சொல்வதற்கு முன்பே
  நாம் இதெல்லாம் செய்து கொண்டுதானே
  இருக்கிறோம். அதனால் கவலைப் பட வேண்டாம்மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வல்லிம்மா....உங்களின் அன்பான கருத்திற்கு

   //வெங்கடேஷ் பட்ட்., சொல்வதற்கு முன்பே
   நாம் இதெல்லாம் செய்து கொண்டுதானே
   இருக்கிறோம். அதனால் கவலைப் பட வேண்டாம்மா.//

   மிக்க மிக்க நன்றி அம்மா.

   அது வேறு ஒன்றுமில்லை நான் எனது ஒரினினல் படைப்பைத்தான் வெளியிட்டிருந்தேன் ஆனால் அந்த அனுபவம் கற்றுத் தந்த பாடம்..சட்டைரிக்கலாக எழுதுவதை மாற்றிக் கொண்டேன்.
   அது என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. எனவே தான் பயம் ஒவ்வொரு பதிவு வெளியிடும் போதும் வரும்..காப்பி என்று சொல்லப்பட்டுவிடுமோ என்று

   ஆனால் இங்கு கருத்துகளைப் பார்க்கும் போது மனசு லேசாகிறது

   மிக்க நன்றி அம்மா

   கீதா

   நீக்கு
 6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். தமிழ்நாட்டில் பெருகி வரும் தொற்று முற்றிலும் ஒழிய வேண்டும். மக்களுக்கு நல்ல புத்தி வந்து கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். கூட்டம் கூடக் கூடாது. பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழர்களை இதுவரை கொஞ்சம் புத்திசாலிகள்தான் என்று நினைத்து வந்தேன் நான் நேற்று தமிழகத்தில் நடை பெற்றதை பார்த்த பொழுது அவர்களைப் போல முட்டாள்களை நான் பார்த்ததே இல்லை வட நாட்டவர்களை கிண்டல் செய்ய இவர்கலுக்கு தகுதியே இல்லை... ஊரடங்கு அறிவித்த பொழுது அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்ல வேண்டும் ஆனால் இவர்கள் நகைக்கடைக்கும் துணி கடைகளுக்கும் பெட் வாங்கவும் சென்று இருக்கிறார்கள் அதைபார்த்த போது இவர்கல் வாழ்வதை விட சாகட்டும் என்றுதான் சாபம் இட்டேன்

   நீக்கு
  2. சமுக உணர்வு கொஞ்சம் கூட இல்லாத இந்த மக்கள் வாழ்வதைவிட சாகலாம் இதை மிக கோபத்தோடுதான் இங்கு பதிகின்றேன்

   நீக்கு
  3. கொஞ்சம் கூட பொறுப்புணர்வு இல்லாத மாக்கள்.. சக மனிதனின் துயர் அறியாத ஜடங்கள்..

   நீக்கு
  4. நாம் தான் புலம்பிக்கணும். மக்கள் மாறவே மாட்டார்கள். எனக்கெல்லாம் வராது என்னும் அலட்சியம் தான்! வரும் முன்னர் காக்கவேண்டும் என்னும் எண்ணமே இல்லாத மக்கள்.

   நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

   நீக்கு
  6. ஆம் சமுகப் பொறுப்பு இல்லை. கூட்டத்தைப் பார்க்கும் போது மனது பயப்படுகிறது.

   ஸ்ரீராம் கூட இங்கு ஒரு வியாழன் பதிவில் உறவினர் ஒருவரால் ஒரு நிகழ்வில் பரவியது குறித்தும் அதில் இருவர் போனது பற்றியும்...நம்மைச் சுற்றி உள்ளவர்களின் இம்யூனிட்டி எப்படி என்பது நமக்கு எப்படித் தெரியும்? எல்லோரது நலனுக்காகவும் நாம் கவனமாக இருக்கத்தான் வேண்டும்

   கீதா

   நீக்கு
  7. இங்க நடப்பது எதுவும் நல்லதுக்கில்லை. யாருக்கும் பொறுப்புணர்வு இல்லை. இன்று தொலைக்காட்சியில், போலீஸ், பில்லியனில் அமர்ந்து வந்தவனை லத்தியால் சாத்தினதைப் பார்த்தேன். ஓட்டினவன் வண்டியோடு ஓடிவிட்டான்.

   நான் காலையில் பழங்கள் வாங்கப் போலாமா என்று பார்த்தேன். வீட்டில் தடா போட்டுட்டாங்க. ஷீல்டு போட்டுக்கொண்டாலும் போகக்கூடாதுன்னுட்டாங்க.

   மதுரைத்தமிழன் சொன்ன மாதிரி, நகை, உடை போன்றவற்றை வாங்கச் செல்பவர்களுக்கு மலேஷியா லத்தி தண்டனை கொடுத்தால்தான் சரிப்படும்.

   நீக்கு
 7. யார் பண்ணினாலும் பாலக் பனீரின் அடிப்படைச் செய்முறை இது தான். ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம். உதாரணமாக நானோ/எங்க மருமகளோ செய்வது எனில் தக்காளி, வெங்காயத்தையும் அரைச்சுச் சேர்ப்போம். வதக்கிச் சேர்ப்பதில்லை. இப்படிச் சில உண்டு. என்றாலும் அடிப்படை ஒன்றே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதாக்கா. நானும் தக்காளி வெங்காயம் வதக்கி விட்டு அரைத்துச் சேர்ப்பேன். இது அண்ணாவிடம் கற்றதால் இப்படியும் செய்து பார்த்தேன்.

   அது போல பனீரை சில சமயம் வெண்ணையில் லைட்டாக வதக்கிக் கொண்டும் சேர்ப்பேன். கடைசியில் இறக்குவதற்கு கொஞ்சம் முன்

   கீதா

   நீக்கு
  2. மிக்க நன்றி கீதாக்கா

   கீதா

   நீக்கு

 8. அவர் நல்ல செஃப்தான் ஆனால அவர் சொல்லும் ரிசிப்பு எல்லாம் மிக சரி என்று நான் ஒத்துக் கொள்ளமாட்டேன் ராவா தோசை ரிசிப்பியை அவர் சொன்ன முறைப்படி சிறிதும் மாறமல் செய்து தந்தேன் என் வீட்டில் உள்ளவர்கள் இனிமேல் அது மாதிரி செய்யாதீர்கள் நல்லாவே இல்லை என்று சொல்லிவிட்டார்கள் இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை முன்பே இதைப் பற்றி எங்கள் ப்ளாக்கில் சொல்லி இருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதுரை நானும் அவர் வீடியோ பார்த்தேன்..

   நானும் அந்த அளவு மைதா சேர்ப்பதில்லை. உங்கள் ரெசிப்பியை உங்கள் பதிவிலும் போட்டிருந்தீர்கள் இங்கும் சொன்ன நினைவு...

   மிக்க நன்றி மதுரை

   கீதா

   நீக்கு
  2. மதுரை--- நான் அதே மாதிரி ரவாதோசை செய்து (கிச்சன் என் கையில் வந்தபோது) நல்லா இருக்குன்னு வீட்டில் சொன்னாங்க. (ஆனால் மகள், இவ்வளவு எண்ணெய்லாம் போட்டுப் பண்ணாதீங்கன்னுட்டாள். நான் ஸ்மார்ட். நான் செய்வது எல்லாமே மத்தவங்களுக்குத்தான். எண்ணெய் அதிகம் சேர்த்தாலும் நான் சாப்பிடமாட்டேன் ஹாஹா)

   நீக்கு
  3. என்னைப் பொறுத்தவரையில், ரேவதி ஷண்முகம் அவர்கள் செய்முறை மிகச் சரியாக வரும். அடுத்ததுதான் வெங்கடேஷ் பட். பல சமையல் வித்தகிகள், வித்தகர்கள் யூடியுபில் சும்மா போட்டுடறாங்க. அதை நம்பி நாம செய்தால் வரலாம் வராமவும் போகலாம். நான் எனக்கு இண்டெரெஸ்டிங் ஆக உள்ள செய்முறைகளை ஒரு நோட்டில் எழுதிக்கொள்வேன், யார் சொன்னது என்ற பெயரோடு. அது எப்படி வந்தது என்பதையும் அதிலேயே எழுதிக்கொள்வேன். உதாரணம், ரிப்பன் பகோடா by Damu, Failure, சேமியா இட்லி-ராகேஷ் ரகுநாதன் - Below Average,

   நீக்கு
  4. ரவா தோசைக்கு மைதாவே சேர்க்காமல் கோதுமை மாவு போட்டோ அல்லது அரிசி மாவு+உளுத்தமாவு போட்டோப் பண்ணலாமே! நான் மைதாவின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்து விட்டேன். போளி கூட இப்போதெல்லாம் கோதுமை மாவில் தான்!

   நீக்கு
  5. கீதாக்கா நானும் கோ மா அல்லது உ மா, (கைவசம் பெரும்பாலும் இருக்கும்) அல்லது தோசை மாவு கொஞ்சமே கொஞ்சம் மீறும் போது அதிலும் நல்லா வரும் மெலிதாக ஹோட்டலை விட நன்றாகவே வரும்.

   ஆனால் வீட்டில் உறவினர் சில மைதான்னா மைதாதான் ஒரு ஸ்பூன் போட வேண்டும் அப்பத்தான் அது ரவா தோசை அப்படினு சொல்றவங்களுக்காக மைதா...ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  6. நெல்லை தாமு அவரது ரெசிப்பி நீங்க ட்ரை பண்ணுவீங்களா?!!!

   நான் என் பாட்டி, அம்மா, மாமியார் என் சித்தி என் வீட்டு கிச்சன் கில்லாடிகள் இவர்களது ரெசிப்பிஸ் தான்...

   அப்புறம் இப்ப நம்ம கீதாக்கா ரெஃபரன்ஸ் பண்ணிக்குவேன்...அவங்க பக்கத்துல..கீதாக்கா அளவு மட்டும் நீங்க எந்தக் கிண்ணம்னு படம் எடுத்து போட்டா நல்லாருக்கும். ஏனென்றால் என்னதான் நீங்க சொல்லிருப்பதை நான் குறித்து செய்தாலும் நீங்க செய்யறாப்ல கிட்டத்தட்டவேனும் வருமான்னு தெரியலை...அதனாலதான் நீங்க கிண்ணம்னு சொல்றது கரண்டி/ஸ்பூன்னு சொல்றது எதுன்னு சொன்னா நல்லாருக்கும்...இது நான் என் பாட்டியிடம் இப்படித்தான் சரியா அளவு சொல்லுன்னு சண்டை போடுவேன் அப்படின்னு வைச்சுக்கோங்க ஹா ஹா ஹா ஹா

   என் பையன் இப்ப எங்கிட்ட சண்டை போடுகிறான்...நீ சும்மா இம்புட்டு அம்புட்டு ஸ்பூன் கப் நு சொல்லக்கூடாது என்ன கப் ஸ்பூன்னு கரெக்ட்டா சொல்லனும்...அதுக்காகவே இப்ப திங்க எல்லாம் இப்படி அவனுக்கு அனுப்புவதற்காகவே செய்யறது

   நெல்லை நீங்க, பானுக்கா, ஏஞ்சல் கொடுக்கறது..நோட் செஞ்சு செஞ்சதுண்டு.

   வெங்கடேஷ் பட் உடுப்பி ரசப் பொடி அளவு நோட் பண்ணிக் கொண்டேன். பிசிபேளா பாத் பொடி செய்முறை அதுவும் நோட் செய்து கொண்டேன் இந்த இரண்டும் செம... அவர் ப்ரசெண்டேஷன் நல்லாருக்கும் ஆனா அவரும் கண்ணளவு இல்லேனா போடும் அளவு ஒன்று சொல்வது ஒன்றாக இருக்கும்...ஹா ஹா ஹா இதுவரை அவரது மற்ற ரெசிப்பியும் முயற்சி செய்யவில்லை. அதிகமாக எண்ணை, நெய் என்பதால் நமக்கு அத்தனை தாங்காது.

   யுட்யூப் சானல்களில் ரேவதி ஷண்முகம் எனக்கு ஃபேவரைட். ரொம்ப கரெக்ட்டா சொல்லுவாங்க...என் ஃபேவரைட்டில் இவங்கதான் முதல் இடம்..ஆனால் இவங்க ரெசிப்பிஸும் முயற்சி செய்யலை.

   கீதா

   நீக்கு
  7. அவரோட ரிப்பன் பகோடா மட்டும் முயன்று தோன்று, மனைவியின் கர்ர்ர்ர்ர்ர் வாங்கிக்கொண்டேன். அப்புறம் அவர் ரெசிப்பி பக்கமே போவதில்லை. வெங்கடேஷ் பட் செய்முறையும் நல்லா இருக்கும், ஆனால் பலவற்றை செய்ய முடியாது. ஒரு தடவை இரயில் சட்னி செய்து, என் பெண், என்னை கிச்சன் பக்கமே போகக்கூடாதுன்னுட்டா (நான் டேஸ்ட் பார்த்து, அதில் ஜலம் சேர்ப்பதற்கு முன்பு அவள் உபயோகித்தாள். காரம் பிச்சிடுச்சு). ரே.ஷ நான் அப்போ அப்போ டிரை பண்ணுவேன். கல்லிடைக்குறிச்சி ஜெயஸ்ரீயும் ஓகே. இன்னும் சிலர் இருக்காங்க.

   இதோ கிச்சன் என் வசம்.... குறைந்தபட்சம் இரண்டு புது டிஷ் செய்துபார்ப்பேன்

   நீக்கு
 9. பனீரை நான் கொஞ்சம் நெய்யில் வறுத்துப்பேன். வெங்கட் கூட (நம்ம தில்லி வெங்கட்) வறுக்க வேண்டாம்னு தான் சொன்னார். ஆனால் எனக்குச் சொன்ன ராஜஸ்தானி அம்மா எப்போவும் கொஞ்சம் நெய்யில் பிரட்டி எடுத்துக்கச் சொல்லுவார். அதே பழக்கம் ஆகிவிட்டது. அதோடு பாலக் கலவை கொதிக்கையில் போடாமல் கீழே இறக்கும் முன்னர் போட்டுட்டு ஒரே கொதியில் இறக்குவேன். சில சமயம் இறக்கினதும் கூடப் போட்டது உண்டு. உங்கள் செய்முறை எளிமையாகவும் சுலபமாகவும் செய்ய முடியும். இதுவும் நன்றாகவே இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் பன்னிரை வறுக்காமல்தான் போடுவேன் அப்பதான் அது சாஃப்ட்டாக சாப்பிடுவதற்கு
   அருமையாக இருக்கும் இதை பற்றி நேஏறு நானும் என் மகளும் பேசிக் கொண்டு இருந்தோம் நேற்று நான் பண்னிய பன்னீர் பட்டர் மசாலா அதிலும் நான் வறுக்காமல்தான் போடுவேன்

   நீக்கு
  2. கீதாக்கா நானும் லைட்டாக வதக்கியும் சேர்ப்பதுண்டு அப்படியேயும் சேர்ப்பதுண்டு...

   மதுரை, வறுக்க வேண்டும் என்றில்லை லைட்டாக பிங்க் கலரில் வந்ததும் அதை கொஞ்சம் சூடு தண்ணியில் போட்டு வைத்தால் ஸாஃப்டாக இருக்கும் என்று எனக்குக் கற்றுக் கொடுத்த அண்ணா சொல்லியிருக்கிறார்.

   பனீர் பட்டர் மசாலாவில் நானும் வறுக்காமல் பொடுவேன் ஆனால் தாபாவில் வறுத்துப் போடுவதைப் பார்த்து என் மகன் கேட்ட போது அப்போது என் நட்பு அண்ணா இந்த டிப்ஸ் கொடுத்தார்

   மிக்க நன்றி கீதாக்கா

   மிக்க நன்றி மதுரை (நீங்கள் நன்றாகச் சமைப்பீர்கள் என்று தெரியும்!! நான் சாப்பிட்டதில்லைதான் ஆனால் பட்சி சொல்லியது ஹிஹிஹி)

   கீதா

   நீக்கு
  3. //பனீரை நான் கொஞ்சம் நெய்யில் வறுத்துப்பேன்.// நானும் அப்படியே. பனீரை வதக்கும் முன், துண்டங்களாக நறுக்கி, வென்னீரில் கொஞ்ச நேரம் போட்டு வைப்பேன்.

   நீக்கு
 10. பால் க்ரீம் செய்முறை டிப் சுவை. !!!!
  இங்கே வெண்ணிய் சேர்ப்பதில்லை.
  ஸ்பினச் ரொம்ப நல்ல வண்ணத்தில் கிடைக்கிறது எளிதில்
  அரைத்து விட்டு டோஃபு வறுத்துப் போட வேண்டியதுதான்.

  சப்பாத்திக்கு நல்ல துணை ரெடி.
  மிக இக அழகான செய்முறைக்கு நன்றி மா.
  ஸ்ரீராமுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பால் க்ரீம் செய்முறை டிப் சுவை. !!!!//

   இது நான் என் அனுபவத்தில் மேனேஜ் செய்த ஒரு தில்லுமுல்லு! ஹா ஹா ஹா. உறவினர்கள் சிலர் வந்தப்ப அவர்கள் வட இந்திய உணவுதான் வேண்டும் என்று சொல்ல நானும் கொஞ்சம் ரிச்சி ரெசிப்பி எடுத்துக் கொண்டுவிட்டேன். இப்போது எல்லாம் க்ரீம் வகை வகையாக பல ப்ராண்ட்ட்களில் கிடைக்கிறது. இது நான் சொல்வது ஒரு 20 வருடங்களுக்கு முன்...அப்போது பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில்தான் கிடைக்கும். அன்று பார்த்து க்ரீம் கிடைக்கவில்லை. அமுலும் கிடைக்கவில்லை. ஆனால் ரெசிப்பி முக்கால்வாசி செய்தாகிவிட்டது. பனீர் டிஷ். சரி இப்படிச் செய்து பார்த்தால் என்ன என்று தோன்றிட அதைச் செய்தும்விட யாரும் கண்டு பிடிக்கவில்லை ரிச்சாக இருந்ததாகச் சொன்னதும்...நான் சீக்ரெட்டை அப்போது சொல்வேனா?!!! ஹா ஹா ஹா...ஏனென்றால் சிலருக்கு சைக்கலாஜிக்கலா க்ரீம் என்றால் க்ரீம் என்று இருப்பவர்களுக்கு இப்படிச் செய்தேன் என்றால் அவர்களுக்கு சுவை வித்தியாசம் தெரியாவிட்டாலும். ஓ அப்படியா அதான் ஏதோ போல இருக்கு என்ரு சொல்லி ஒதுக்கிவிடுவாங்க..அதுவும் வீட்டிற்கு வந்த விருந்தினரில் ஒருவர் நாக்கின் டேஸ்ட் பட்ஸ் செம ஷார்ப் நுணுக்கமானதைக் கண்டுபிடித்துவிடுவார்..அதனால், எல்லாம் முடிந்தபின் மெதுவாக வெளியிட்டேன்!!! அப்போது அந்தக் குறிப்பிட்ட நபர் I can't believe its not butter என்று பீநட் பட்டருக்குச் சொல்வது போல் சொன்னார்!!!!!!!

   அப்பலருந்து க்ரீம் கிடைக்கலைனா இப்படித்தான் ஹா ஹா ஹா

   மிக்க நன்றி அம்மா

   இங்கு நான் டோஃபூ கிடைத்து வாங்கினால் அதையும் செய்வதுண்டு. அத்வும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆமாம் அங்கு நன்றாகவே கிடைக்குமே. ஸ்பினாச்சும் நல்ல வண்ணத்தில் இருக்கும்...

   மிக்க நன்றி அம்மா

   கீதா

   நீக்கு
  2. நல்ல கொழுப்புச் சத்துள்ள பாலோடு கொஞ்சம் பாலேட்டைக் கலந்து கடைந்து க்ரீமுக்குப் பதிலாகச் சேர்ப்பேன். அம்பேரிக்காவில் இருந்தப்போ ஹாஃப் & ஹாஃப் பாலை விட்டுடுவேன். டோஃபூ வாங்கியதே இல்லை. பார்த்ததும் இல்லை. சுவைத்ததும் இல்லை.

   நீக்கு
 11. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் துரை அண்ணா

   நல்லநாளாக அமையட்டும்

   கீதா

   நீக்கு


 12. கீதா இந்த ரிசிப்பி செய்முறை மிக நன்றாக வந்து இருக்கிறது ஆனால் நீங்கள் செய்த கொலாஜ் இந்த தடவை நன்றாக வரவில்லை இதை சொல்லக் காரணம் அடுத்த தடவை இது போல நீங்கள் பதிவிடும் போது சரியாக வர வேண்டும் என்பதால்தான் மற்றவர்களிடம் இப்படி மனதில் உள்ளதை அப்படியே சொல்ல முடியாது அருமை என்று சொல்லி நகர்ந்து விடுவேன்

  கொலாஜில் படம் சற்று பெரியதாகவும் அதில் உள்ள எழுத்துக்கள் சற்று பெரியதாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மதுரை. நீங்கள் சொன்னது சந்தோஷம் தான் மதுரை.

   ஆமாம் எழுத்து ரொம்பச் சின்னதாக வந்துவிட்டது தெரியும்..பதிவில் சொல்ல நினைத்து மறந்து விட்டுவிட்டேன்...அது இந்த கொலாஜ் முறையில் நாம் சேவ் செய்துவிட்டால் எடிட் செய்ய முடியாது. மீண்டும் முதலிலிருந்தா என்று சூரி காமெடி போல முதலில் இருந்து தொடங்க வேண்டும் ...கொலாஜ் செய்து எழுத்தைப் பெரிது செய்ய எவ்வளவு முயன்றும் எழுதியது எல்லாம் அழிந்ததே அல்லாமல் ஃபான்ட் சைஸ் மாறவே இல்லை..எனக்குப் போதுமடா என்று சலிப்பு வர அப்படியே சேவ் செய்துவிட்டேன்..

   இனி கவனமாகச் செய்கிறேன் மதுரை. படங்களும் பெரிதாகப் போட்டு...

   மிக்க நன்றி மதுரை

   கீதா

   நீக்கு
 13. நல்ல சுலபமான செய்முறை. இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து, பூண்டும் தனியாக போட்டிருகிறீர்கள், பூண்டு வாசனை அதிகம் இருக்காதா?
  இன்னொன்று சொல்ல நினைத்தேன், கொலாஜில் படமும் போட்டு, செய்முறையையும் அதிலேயே போடும் பொழுது, செல்ஃஃபோனில் படிப்பது கஷ்டமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை பானுக்கா பூண்டின் டேஸ்ட் அவ்வளவு தெரியலை...

   ஓ பானுக்கா அடுத்த முறை மதுரை சொல்லியிருப்பது போல் எழுத்து சைச் பெரிதாக்கிவிடுகிறேன் படங்களும்....2, 3, 4 பாக்ஸ் வரலாமாக இருக்கலாம்.

   இது மகனுக்கும் அனுப்புவதால் இப்படியே செய்துவிடுகிறேன். படத்தை மட்டும் தனியாகக் க்ளிக்கிப் பார்த்தால் கொஞ்சம் பெரிதாகத் தெரியுமே பானுக்கா...அப்படியும் தெரியவில்லையோ.?

   அடுத்த முறை கவனமாக இருக்கிறேன்

   மிக்க நன்றி பானுக்கா

   கீதா

   நீக்கு
 14. யூ டியூபில் பார்திருப்பீர்களே, பாலக் பனீர் என்று போட்டால் ஒரு நூறு ரெசிபிகள் வரும். அவரவர் செய்வது அவரவருக்கு. நீங்கள் ஏன் வெங்கடேஷ் பட்டை பார்த்து பயப்ப்டுகிறீர்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிஹிஹிஹி அதென்னமோ உண்மைதான் பானுக்கா

   இது இந்த அண்ணாவிடம் கற்ற ரெசிப்பி கிட்டத்தட்ட அது போல இருக்கோ என்று தோன்றியதால், மனதில் ஆழமாகப் பதிந்த முன் அனுபவத்தால் வந்தது பானுக்கா

   மிக்க நன்றி பானுக்கா

   கீதா

   நீக்கு
 15. பாலக் பனீர் செய்முறை, படங்கள் எல்லாம் அருமை.
  செய்முறை ,படங்களை பெரிது செய்து பார்த்தேன்.
  படங்கள் நிறைய இருப்பதால் கொலாஜ் செய்து போடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
  யாரிடம் கற்றுக் கொண்டாலும் உங்கள் கைத் திறமையும் இணையும் போது நன்றாக இருக்கும். பால்க்ரீம் செய்முறை மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் நிறைய இருப்பதால் கொலாஜ் செய்து போடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.//

   ஆமாம் அதே கோமதிக்கா....ஒவ்வொரு ஸ்டெப்பும் எடுப்பதால் மகனுக்கும் அனுப்புவதால்....இப்படி

   யாரிடம் கற்றுக் கொண்டாலும் உங்கள் கைத் திறமையும் இணையும் போது நன்றாக இருக்கும். பால்க்ரீம் செய்முறை மிக அருமை.//

   மிக்க மிக்க நன்றி கோமதிக்கா...

   மிக்க நன்றி கோமதிக்கா! கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 16. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
  பாலக் பனீர் குறிப்பு நன்றாக இருக்கிறது கீதா! அதுவும் கடைசியில் கிரீமுக்கான ஐடியா அருமை! மதுரை தமிழன் சொன்னது போல எழுத்துக்களும் படங்களும் சற்று பெரிதாக இருந்திருந்தால் படிக்க இன்னும் வசதியாக இருந்திருக்கும். குறிப்பு சுவாரஸ்யமாக இருந்தது என்றால் அதைத் தொடர்ந்து வந்த அனைவரின் கருத்துக்களும் மிக மிக சுவாரஸ்யம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மனோக்கா. கருத்திற்கு..இப்படிக் க்ரீம் எப்படி நான் தில்லு முல்லு செய்த அனுபவம் நு வல்லிம்மாக்கு பதிலில் சொல்லியிருக்கிறேன்.

   கண்டிப்பாக கொலாஜ் கவனத்தில் கொள்கிறேன் மனோக்கா.

   மிக்க நன்றி மனோக்கா

   கீதா

   நீக்கு
 17. பனீர் வாரத்தில் இரண்டு நாட்கள்.. ஆனாலும் இவ்வளவு தொழில் நுட்பத்துடன் செய்வதில்லை... ராட்சசப் படை வேலை முடிந்து வருவதற்குள் சமையலை முடித்து விடுவேன்...

  சென்ற வார்ச்ம் பனீர் குருமா செய்த போது அத்தனை துண்டுகளும் உடைந்து கரைந்து விட்டன...

  இருந்தாலும் விடவில்லை காலி செய்தாயிற்று.. (வேற வழி!?..)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராட்சசப் படை வேலை முடிந்து வருவதற்குள் சமையலை முடித்து விடுவேன்...//

   !!!!!!!!!! அதான் சொல்லியிருந்தீங்களெ துரை அண்ணா உங்கள் அறையில் இருப்பவரைப் பற்றி! கஷ்டமான விஷயம்தான் துரை அண்ணா

   //ஆனாலும் இவ்வளவு தொழில் நுட்பத்துடன் செய்வதில்லை...//

   ஹா ஹா ஹா ஹா அண்ணா!!!

   அண்ணா பனீர் அத்தனை மென்மையா இருந்ததோ? உடைந்து கரைந்தாலும் சுவை குறையாதே சாப்பிட்டுவிடலாமே...அதுவும் ஒரு சுவைதானே!

   மிக்க நன்றி துரை அண்ணா

   கீதா


   நீக்கு
 18. யூ டியூப் சமையல் குறிப்புகளைப் பார்ப்பதே இல்லை என்று சொல்ல முடியாது...

  அப்படிப் பார்த்தாலும் ரசிப்பதில்லை.. செய்வதற்கு முயற்சி எடுப்பதில்லை...

  சமைத்துக் காட்டுபவர்களின் தமிழைக் கேட்டாலே .... என்ன கொடுமையடா இது? என்று தோன்றும்..

  கிரிஸ்ப்பியா.. முறுமுறுப்பா... சாப்டா... நைஸ்சா... டேஸ்ட்டியா... ஹெல்த்தியா... - போதும்.. சாமீ.. போதும்!..

  அவர்களுக்கு அவர்களே சான்றிதழ் கொடுத்துக் கொள்கிறார்கள்..

  இதைப் பற்றி ஒரு பதிவு போட வேண்டும் என்று ஆசை.. பார்க்கலாம்...

  பதிலளிநீக்கு
 19. பாலக் பாக்கிஸ்தானியர்கள் கடையில் நன்றாக செய்வார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ அப்படியா கில்லர்ஜி! பாகிஸ்தானியர் கடையில் சாப்பிட நேர்ந்தால் கற்றுக் கொண்டுவிடுகிறேன் அவர்கள் முறையையும்!!

   மிக்க நன்றி கில்லர்ஜி

   கீதா

   நீக்கு
 20. சில படம் இல்லை என குறிப்பிட்டது உட்பட செய்முறை விளக்கம் அருமை...

  பதிலளிநீக்கு
 21. //காப்பி என்று பெயர் வந்துவிடுமே என்ற தயக்கம் தான். // - இதுக்கெல்லாம் கவலைப்படக் கூடாது. வித்தியாசமாக இருக்கணும்னா, "இதுக்கு பாலக் பனீர் என்று பெயர் இருந்தாலும், கீரையும் பனீரும் சேர்ந்த கலவைதான் முக்கியம். இந்தக் கொரோனா காலத்தில் நீங்க வேப்பிலைக்கொழுந்தும் பனீரும் சேர்த்து இதே செய்முறையில் பாலக் பனீர் பண்ணலாம். வேப்பிலை கிடைப்பதில் கஷ்டம் இருந்தால் வாழை இலையிலும் பண்ணலாம்' என்று அடிச்சுவிட வேண்டியதுதானே. என்ன சொல்றீங்க?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா ஹா நெல்லை சிரித்துவிட்டேன்!!!! முடிலப்பா....

   ஆமாம் ல அப்படியும் செஞ்சுட்டா போச்சு...நல்ல ஐடியா நெல்லை!!

   கீதா

   நீக்கு
 22. செய்முறை விளக்கம் நன்றாக இருந்தது. எங்க வீட்டுல, நான் 6 மணிக்குள் சாப்பிட்டுடுவேன். பசங்க 8 மணிக்கு மேலதான் சாப்பிடலாமா என்று யோசித்து 9 மணிக்கு சாப்பிடறாங்கன்னு நினைக்கறேன். பாலக் பனீர் அல்லது சப்பாத்திக்கான சைட் டிஷ் வாரத்தில் இரண்டு மூன்று முறை உண்டு.

  பாராட்டுகள் கீதா ரங்கன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்களும் சீக்கிரமாகவே இரவு உணவை முடித்துக் கொண்டு விடுவது. 6 மணிக்குள்.

   கீதாக்கா நடுல ஒரு கருத்தில் சொல்லிருந்தாங்க உங்களுக்குப் பதிலில். 6 மணிக்கு என்றால் பிரார்த்தனை நேரம் அப்போது சாப்பிடக் கூடாது என்று. நாங்களும் 6 க்குள் முடித்துக் கொண்டு விடுகிறோம். சீக்கிரம் தூங்கி விடுவதால்.

   குழந்தைகள்....அந்த வயது நெல்லை.

   அப்புறம் மாறிடுவாங்க.

   இங்கும் வட இந்திய உணவு அடிக்கடி சமைப்பதுண்டு. சமீபத்தில்தான் இல்லை.

   மிக்க நன்றி நெல்லை

   கீதா

   நீக்கு
  2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆறு மணிக்கெல்லாம் சாப்பிடக் கூடாதுனு தான் நான் சொன்ன நினைவு. நீங்க 2 பேரும் உங்க வசதிக்கு எடுத்துட்டு இருக்கீங்க. ஐந்தரையிலிருந்து ஆறரை வரை பிரதோஷ வேளை. அதோடு நரசிம்மர் ஹிரண்யனை வதம் செய்த காலம் வேறே! அதனால் அந்தக் காலத்தில் நிலைப்படியில் நிற்கவோ, உட்காரவோ, சாப்பிடவோ கூடாது என்பார்கள். முக்கியமாய்த் தலை வாரக் கூடாது/சாப்பிடக் கூடாது. அது டிஃபனாகவே இருந்தாலும். :( பிரார்த்தனை நேரம்னு எல்லாம் சொல்லலை. அப்போவும் இதே மாதிரித் தான் சொல்லி இருந்த நினைவு.

   நீக்கு
  3. அசுர வேளை எனச் சொல்லி இருந்தேனோ? நினைவில் வரலை இப்போது! :(

   நீக்கு
  4. அதான் கீதாக்கா 6 மணிக்கெல்லாம் சாப்பிடக் கூடாதுன்னு ....//ஐந்தரையிலிருந்து ஆறரை வரை பிரதோஷ வேளை.//

   ஓ ஒகே கீதாக்கா நோட்டெட்!

   நன்றி நன்றி

   கீதா

   நீக்கு
  5. நினைவில் இருக்கு கீசா மேடம்... இப்போல்லாம் என்ன சொன்னாலும் 6 1/2க்கு மேலதான் தட்டு வருது. ஹாஹா

   நீக்கு
 23. கொலாஜ்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால், பழைய பத்திரிகையிலிருந்து கட் பண்ணி எடுத்த மாதிரியான டிசைன். கொஞ்சம் படிக்கும்படி, வெள்ளை பின்னணியில் கருப்பு எழுத்துகள் வைத்தால் ஆகாதா?

  சரி...இருக்கற கஷ்டத்துல எப்படியோ கஷ்டப்பட்டு கொலாஜ்லாம் பண்ணி எழுதறீங்க. அதைப் பாராட்டாம குறை சொல்வானேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை வெள்ளைப் பின்னணி வைத்தேன் அது என்னாச்சுனா சேவ் செய்தப்ப எழுத்தே தெரியாமல் எல்லாம் கறுப்பாகவே ஆகிவிட்டது. நல்ல காலம் நெட்டில் இருந்ததை மாற்றாமல் வைத்திருந்தேன் அதனால் மீண்டும் பேக் க்ரவுன்ட் கலர் மாற்றினேன் எழுத்து தெரிந்தது. ஹப்பா என்றது இல்லேனா மீண்டும் முதலிலிருந்து தொடங்கணும் படம் கோர்ப்பதிலிருந்து...அதுவும் இணையம் ஒத்துழைக்க வில்லை என்றால் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்...ஆனாலும் மகனுக்காக இதை விடாமல் செய்கிறேன்.

   அடுத்த முறை வெள்ளை மீண்டும் முயற்சி செய்கிறேன் முன்பு செய்திருக்கிறேன்..

   எழுத்து சின்னதாகிவிட்டது இந்த முறை ஆனது பற்றி மேலே சொல்லிருக்கிறேன்.

   மிக்க நன்றி நெல்லை

   கீதா

   நீக்கு
 24. 25 வருடங்களுக்கு முன் உட்லென்ஸ் ஹோட்டெலில் ரொட்டிக்கு தொட்டுக்க முதல்ல வாங்கினது. அது முதல் நான் இதுக்கு அடிமை.
  அருமை மேடம்.
  வீட்டில் விரைவில் செய்து பார்க்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ அரவிந்த் உங்களுக்குப் பிடித்ததா..

   செஞ்சு பார்க்க சொல்லுங்க

   மிக்க நன்றி அரவிந்த்

   கீதா

   நீக்கு
 25. பாலக் பனீர் - ஆஹா... வடக்கே இது மிகவும் அதிகமாக, குறிப்பாக சீசன் நாட்களில் அதிகமாக சமைப்பது வழக்கம். சுற்று வட்டார கிராமங்களில் குமுட்டி அடுப்புகளில் மண் பாத்திரங்களில் பாலக் வேக வைத்து, கடைந்து சமைப்பார்கள் - அப்படி ஒரு சுவை! வீட்டிலேயே எடுத்த பனீர் வேறு என்பதால் சுவைக்குக் கேட்கவே வேண்டாம். நண்பர் கிராமத்திலிருந்து இது போன்ற உணவு பதார்த்தங்கள் எடுத்து வரும்போது அவருக்கு எங்கள் உணவை கொடுத்து விட்டு அவரது உணவை ரவுண்ட் கட்டி அடிப்போம்! ஹாஹா சுவைப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட்ஜி ஹையோ அந்த கிராமத்து சுவை நானும் சுவைத்திருக்கிறேன். தில்லியில்தான். முன்பு வந்தப்ப கும்முட்டி அடுப்பில் உறவினர் வீட்டில் கமைப்பவர் (பஞ்சாபி) அவர் வீட்டில் கும்முட்டி அடுப்பில் சமைத்துக் கொண்டு வந்தார். அது போல பனீர் பட்டர் மசாலாவும் ஹையோ செம டேஸ்ட். நாம் இங்கு வீட்டில் செய்தாலும் அந்த தீ அடுப்பு மணம் வருவதில்லை. அதற்கு க்ரேவியில் கடைசியில் கரித் துண்டை ஒரு கிண்ணத்தில் தணலுடன் போட்டு மூடி வைக்கச் சொல்றாங்க அப்ப அந்த மணம் வரும்னு...

   அந்த நினைவுகளை நினைவுபடுத்திட்டீங்க. மிக்க நன்றி வெங்கட்ஜி

   கீதா

   நீக்கு
  2. பேசாம பஞ்சாபி, ஹிமாச்சல் நண்பர்களை (வெஜ் ஆட்கள்தான்) பிடித்துக்கொண்டு அவங்களுக்கு நாம காலம் காலமா சாப்பிட்டு நொந்துபோன இட்லி, ஊத்தாப்பத்தைத் தள்ளிவிட்டுட்டு, அவங்கள்டேர்ந்து சப்பாத்தி, சைட் டிஷ் வாங்கிக்கொண்டுவிடலாம்.

   நீக்கு
  3. நெல்லை, இப்போ எப்படியோ தெரியாது, நான் சின்ன வயசிலேயே ராஜஸ்தான் போயிட்டேனா? போன புதுசில் ஒரு தரம் இட்லி வேணும்னு கேட்டு இரண்டு அலுவலக நண்பர்கள் ஒருத்தர் சர்தார்ஜி, இன்னொருத்தர் தாடி இல்லாத பஞ்சாபி இட்லி சாப்பிட வந்தாங்க. கடைசியில் எங்களுக்கு மிஞ்சலை. சாம்பார் பத்தாமப் போயிடுத்து. கிண்ணங்களில் ஊற்றிக் குடிப்பாங்க. இட்லி எத்தனைனு கணக்கே இருக்காது. கடைசியா நாங்க ஜாம்நகரில் இருந்து சென்னை வரும் முன்னர் அங்கேயும் இப்படித்தான். பக்காப்படிக்கு ஒரு படி அரிசி போட்டு அதற்கேற்ற உளுந்து போட்டு பெரிய பாத்திரங்களில் (நல்லவேளையா இருந்ததே!) சாம்பார், சட்னி பண்ணிப் பெரிய தூக்குகளில் போட்டு அலுவலகத்துக்குக் கொடுத்து அனுப்புவேன். முன் அனுபவம் காரணமாக எங்களுக்குத் தனியா எடுத்து வைச்சுப்பேன்.

   நீக்கு
 26. ஆஆஆஆஆஆஆ எல்லோரும் நலம்தானே.. இன்று போவோம் நாளை போவோம் என பல நாட்கள் உருண்டோடிட்டுது:).. இன்று என்னமோ போ போ என மனம் சொல்லியதால், பார்க்க வந்தேன், கீதா, என்னைப்பற்றியும் போஸ்ட்டில் எழுதியிருக்கிறா, இதுதான் உள்ளுணர்வு அழைத்து வந்துவிட்டது போலும்:)...

  பதிலளிநீக்கு
 27. பாலக் கீரை செய்முறை அழகு கீதா. ஆனா முதல்ப்படம் பெரிய படமாகப் போடுவதை, இனிமேல் கறியின் முடிவில் வரும் படத்தைப் போட்டால் பார்க்க இலகுவாக இருக்கும். கறி முடிவில் எப்படி வந்திருக்கு என்பதைப் பெரிதாகப் பார்க்க முடியவில்லை:)).. நான் ஊ ரியூப் ஓனர் எல்லோ கீதா:).. அதனால இப்போ எல்லாத்தையும் மைக்றோஸ்கோப் வச்சுப் பார்க்கிறேனாக்கும்:))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!