ஞாயிறு, 9 மே, 2021

மாடித் தோட்டத்தில் மலர்ந்தவை

 

இந்த  வாரம் ஒரு மாறுதலுக்கு நம் வீட்டு மாடியில் வளர்த்த என்பதை விட வளர்ந்த என்று சொல்வதே சரி. ஏன் என்பது படங்களை பார்த்தால் புரியும் 

இலைகளே இல்லாத மலர்கள்!


சென்ற ஜூன் லில்லி மலர்கள் பூத்து முடிந்ததும் தொட்டிக்குள் இருந்த பல்புகளை எடுத்துக் கழுவியபின் ஒரு அட்டைப்பெட்டியில் போட்டு எங்கோவைத்து விட்டது எப்போது நினைவு வந்தது தெரியுமா?


நான்கு முனைப் போட்டி! 

மேலிருந்து பார்த்தாலும் அதே 


வரிசை வரிசையாய் 


அட்டைப் பெட்டியின் இடுக்கில் இருந்து இரண்டு மொட்டுக்களை பார்த்த பின் தான் - - 


உடனே ஒரு தொட்டிக்கு ஒன்று என்று 10 தொட்டிகளில் வைத்த பின்னும், மீதியிருந்த பல்புகளை கூவிக்  கூவிக்  கொடுத்தோம் நண்பர்கள் மற்றும்  உறவினர்களுக்கு 

அவற்றை பூத்த பின் அப்படியே விட்டுவிட்டோம் 


இந்த சீசன் இலையுடன் பூ 


62 கருத்துகள்:

 1. காலை வணக்கம் எல்லாருக்கும்.

  பதிவு அப்டேட் ஆகவே இல்லை எங்கள் தளத்திலும் கூட புதியதைக் காட்ட மாட்டேங்குது...

  படங்களைப் பார்த்தால் புரியும்!!! பழைய வீட்டு மாடிதானே?!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு எங்கேயுமே அப்டேட் ஆவதில் தாமதம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது கீதா.   காலை வணக்கம்.  வாங்க..  இனிய அன்னையர்தின வாழ்த்துகள்.

   நீக்கு
  2. ஆமாம், எனக்கு இப்போதெல்லாம் புதிய பதிவுகள் வருவதே இல்லை. அதை ரொம்பக் கவனித்தால் பிகு பண்ணிக்கும் என்பதால் நானும் விட்டுட்டேன். தெரியறச்சே தெரியட்டும்! இஃகி,இஃகி,இஃகி!

   நீக்கு
  3. ஸ்ரீராம் நன்றி அன்னையர் தின வாழ்த்துகளுக்கு. பாஸ் காலையில் வாழ்த்து சொல்லியதில் தெரிந்தது இன்று அன்னையர் தினம் என்று.

   அனைத்து ஜீவராசி அன்னையர்களுக்கும் வாழ்த்துகள்!

   கீதா

   நீக்கு
 2. அப்புறம் உள்ள படங்கள் இப்போதைய மாடி போல இருக்கிறதே//

  லில்லி மலர்கள் செமையா இருக்கு...லில்லி மலருக்குக் கொண்டாட்டம்...யாரைப் பார்க்கையிலே!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 3. தொட்டிக்குள் இருந்த பல்புகளை எடுத்துக் கழுவியபின் ஒரு அட்டைப்பெட்டியில் போட்டு எங்கோவைத்து விட்டது எப்போது நினைவு வந்தது தெரியுமா?//

  பல்பு கொடுத்துருச்சோன்னு நினைச்சா அட்டைப் பெட்டிலருந்து எட்டிப் பார்த்திருக்கே...

  ஸ்ரீராம் நீங்க கூவியது எனக்குக் காதுல விழலியே...விழுந்திருந்தா நானும் ஒன்றோ ரெண்டோ கேட்டிருப்பேனே!!!

  எல்லா படங்களுமே அழகாக இருக்கு 10 வது படம் அட்டகாசம்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல்ப் என்று குறிப்பிட்டிருப்பது உண்மையான பல்பையா? அல்லது நான் இதில் பல்ப் வாங்கப் போறேனோ?

   நீக்கு
  2. சரி சரி ஸ்ரீராம் நீங்க கூவலை!!!! கே ஜி அண்ணாதான் என்பது புரிந்தது.

   கீதாக்கா ஹா ஹா ஹா ஹா ஹா அது லில்லியின் பல்பு!!!

   கீதா

   நீக்கு
 4. ஆஹா இது கௌ அண்ணாவின் வீட்டு மலரா? ஓ ஸாரி இப்பதான் கீழ பார்த்தேன்...ஸாரி கௌ அண்ணா..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கௌ அண்ணா வீடும் அல்ல!!!

   நீக்கு
  2. இஃகி,இஃகி, கௌதமன் சார் இருப்பது குடியிருப்பு வளாகம். பல முறை சொல்லி இருக்காரே தி/கீதா!

   நீக்கு
  3. ஞாயிற்றுக்கிழமை என்றால் கேஜிஎஸ் தினம். திங்கள், செவ்வாய் (வாசகர்கள்) தினம், புதன் கேஜிஜி, வியாழன், வெள்ளி ஶ்ரீராம், மறுபடி சனி இப்போல்லாம் கேஜிஜியே எடுத்துக்கறார்.

   நீக்கு
  4. ஆமாம் புரிந்து விட்டது ஸ்ரீராம் அண்ட் கீதாக்கா...

   கௌ அண்ணா வீடு குடியிருப்பு என்று தெரியும் ஆனால் குடியிருப்பிலும் மொட்டை மாடியில் தோட்டம் போடுறாங்களே

   ஒவ்வொரு நாள் யார் தினம் என்பதும் மனதில் இருந்தாலும் திடீர்னு இப்படி டக்குனு மூளை கோணங்கி செய்யும்!! ஹிஹிஹிஹி

   கீதா

   நீக்கு
  5. கீதா அக்கா சரியாகச் சொல்லி இருக்கிறார்.

   நீக்கு
  6. ஸ்ரீராம் சரியாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் இப்போ சனிக்கிழமைப் பதிவுகள் நாங்கள் இருவரும் பகிர்ந்துகொண்டு தயாரிக்கிறோம்.

   நீக்கு
 5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். புதுசு புதுசாகப் பயமுறுத்தும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதோடு எல்லாவற்றுக்கும் பிரதமரே காரணம் என்னும் கண்டுபிடிப்பும் வந்து கொண்டே இருக்கின்றன. விரைவில் அனைவரும் நலம் பெறவும் இந்தக் கொடுமையான உலகை ஆட்டி வைக்கும் தொற்று விரைவில் அடியோடு மறையவும் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்.  வாங்க கீதா அக்கா...   இந்த மாதத்தை எவ்வளவு வேகமாகவும் பாதுகாப்பாகவும் கடக்கிறோமோ அவ்வளவு நல்லது.  பிரார்த்தனை செய்வோம்.

   நீக்கு
 6. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 7. இந்த லில்லிப் பூக்கள் தானாக வந்திருந்தன அம்பத்தூர் வீட்டில். தானாகப் போயும் விட்டன. எல்லாப் படங்களும் நன்றாக இருக்கின்றன, விளக்கங்களும் சேர்ந்து!

  பதிலளிநீக்கு
 8. இலை இல்லா பூக்களும், இலைகளுடன் பூக்களும் அழகு.

  பதிலளிநீக்கு
 9. அனைவருக்கும் இனிய நற்காலை வணக்கங்கள்.
  இறைவன் எல்லோரையும் எப்போதும் காக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா...  வணக்கம்.  பிரார்த்திப்போம் இணைந்து,

   நீக்கு
 10. நம் குழுமத்தில் இருக்கும் அனைத்து அன்னையருக்கும் வாழ்த்துக்கள்.
  பூக்கள் இங்கேயே இருப்பதால்
  பதிவாசிரியருக்கும் நன்றி.
  இளம் சிவப்பு வண்ண மலர்கள் அனைவருக்கும்
  ஆரோக்கியத்தையும் மன நிம்மதியையும் தரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிம்மா.   இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.

   நீக்கு
 11. லில்லிப்பூக்கள் மிக அழகு. கவனிக்காமல்
  விட்ட பல்புகள் எத்தனை ஆசையாக வளர்ந்திருக்கின்றன.
  எங்கும் நோய் மறைந்து
  நல்ல நாட்கள் மலர வேண்டும்.
  அத்தனை படங்களும் அழகு.
  மிக மிக நன்றி.

  பதிலளிநீக்கு
 12. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
 13. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா அக்கா..  வாங்க..  இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 14. அழகிய மலர்கள். தன் மனதுக்குள்ளேயே கூவியதால் எனக்குக் கேட்டிருக்கவுல்லை போலிருக்கு.

  பதிலளிநீக்கு
 15. யாருக்கும் அப்டேட் ஆக மாட்டேங்குது என்பதால் இங்க சொல்லிக் கொள்கிறேன். கூச்சமாகத்தான் இருக்கு இருந்தாலும்...ஹிஹி நம்ம தளத்துல அம்மாக்களை வாழ்த்துவதற்குத்தான்!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் அங்கு சென்றுவிட்டுதான் இங்கு வந்து பதில் அளித்துக் கொண்டிருக்கிறேன் கீதா...

   நீக்கு
 16. மாடி கைப்பிடி சுவரும், வெளிப்பக்கம் நெருங்கியே இருக்கும் தரைப் பிரதேசமும் தான் யார் வீடு இல்லை என்பதற்கு க்ளூ !...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நெருங்கியே இருக்கும் தரைப் பிரதேசமும்//

   வாகனங்களின் மிரரில் சிறிய எழுத்துகளில் எழுதப் பட்டிருக்கும் வாசங்கள் நினைவிருக்கிறதா ஜீவி ஸார்?

   நீக்கு
  2. ரியர் வ்யூ மிர்ரர் வாசகங்களைத் தானே சொல்கிறீர்கள்?
   ஹஹ்ஹாஹா..

   நீக்கு
 17. வணக்கம் சகோதரரே

  இங்கு வரும் தோழியர்கள் அனைவருக்கும், உலகமெங்கும் இருக்கும் அனைத்து அன்னையர்களுக்கும் அன்பான அன்னையர் தின வாழ்த்துகள்.

  அழகான மலர்கள். படங்கள் அனைத்தும் பார்ப்பதற்கே ரம்மியமாக உள்ளது. ஒவ்வொரு படங்களும் போட்டி போட்டுக் கொண்டு நான்தான் அழகு என சொல்கிறது.பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 18. முயற்சி திருவினை ஆக்கும்..
  முன்னின்று மலரும் முகம் காட்டும்..
  முன்னின்று முகம் காட்டும் மலரே வாழ்க..
  முத்தமிழ் அமுதம் போல் மகிழ்ச்சியே தருக..

  பதிலளிநீக்கு
 19. அழகான மலர்களின் படங்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 20. மலர்கள் எத்தனை தடவைப் பார்த்தாலும் சலிப்புத் தராதவை. மேகங்களைப் போலவே..

  பதிலளிநீக்கு
 21. அழகு.
  எங்கள் வீட்டில் முன்பு இருந்தது. இப்பொழுது வேறு இனங்கள் இருக்கிறது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!