திங்கள், 3 மே, 2021

'திங்க'க்கிழமை "  கத்தரிக்காய் புளி கோஸு /  கொத்ஸு - கீதா ரெங்கன் ரெஸிப்பி 

 

 கத்தரிக்காய் புளிக்கோஸு/கொத்ஸு

ஹாய்! எபி வாசகர்கள், பார்வையாளர்கள், கருத்து சொல்பவர்கள் அனைவருக்கும் வணக்கம். நட்புகளுக்கு ஸ்பெஷல் வணக்கம். 

எபி கிச்சனில் எட்டிப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. பல காரணங்கள். முன்பு போல் தொடர்ந்து வர ஆசைதான். முயற்சி செய்கிறேன். இரவல் கணினி....என் தோழியின் கணினியில் தான் அடிக்கிறேன். 

இது வெளி வரும் போது நான் இப்போது டைப் செய்யும் இந்த இரவல் கணினி இருக்க வேண்டும். (நிற்க. டைப்பும் என்று அடித்தால் ரைப்பும் என்று வருகிறது அதீஸ் அரண்மனையின் நம் ராணியம்மா ஏன் ரைப் என்று அடிக்கிறார் என்பது புரிந்தது. எனவே மக்களே அவர் தமிழுக்குக் காரணம் கணினிதான் என்று அடித்துச் சொல்வேன்!! ஹிஹி) 

இந்தப் புளிக்கோஸு ரெசிப்பி என் பாட்டியின் ஃபேவரைட். "அம்மா ஒரு மெனு சொல்லு" என்றால் உடனே "கத்தரிக்கா இருக்கா. இருந்தா புளிக்கோஸு பச்சைப் புளிக்கோஸு செய்யேன் என்பார். ஒவ்வொன்றும் செய்யும் போதும் பாட்டியின் நினைவு. 

செய்முறையில் படத்தில் சிவப்பு மிளகாய் 4 இருக்கும்,  எழுதிய போது 2 என்று சொல்லி ப்ராக்கெட்டில் கொடுத்திருக்கிறேன். (இதற்கென்றே வருவார் ஒருவர் அதுவும் என்னை ஓட்டுவது என்றால் அவருக்கு வெல்லம்! அதுவும் ரொம்ப நாளாகிடுச்சே!!! படங்கள் சில எடுக்க இயலவில்லை...சிமி, கவே இணுக்கியது..கவே பொரிந்த படம்...

சரி செய்முறையைச் சொல்கிறேன்
எபி ஆசிரியர்களுக்கு மிக்க நன்றி. நட்பூஸ், கருத்து சொல்பவர்கள், பார்த்துவிட்டு அமைதியாகக் கடந்து செல்லும் அனைவருக்கும் மிக்க நன்றி!

(அப்படியே ஸ்காட்டிஷ் அதீஸ் அரண்மனையில் ராணியம்மாவிற்கு செஃப் தேவையா என்று கேட்டுச் சொல்லுங்க. ஒரு அப்ளிக்கேஷன் போடலாம் என்று இருக்கிறேன்!!!!!!!!! 🐈)


68 கருத்துகள்:

 1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். மன அமைதியுடன்கூடிய ஆரோக்கியமான வாழ்க்கைக்குப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 2. அரிசி உப்புமா என்றால் அம்மா இதைத் தான் பண்ணுவார். கொதிக்க வைத்துப் பண்ணுவதை விடக் கொதிக்க வைக்காமல் பண்ணுவதே அதிகம். ரொம்பப் பிடிச்சதும் கூட. கொத்துமல்லி சேர்த்த நினைவு இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்ப்தான் பார்த்தேன் நம்ம ரெசிப்பி...

   கீதாக்கா ஆமாம் அரிசி உப்புமாவுக்கு இது செய்வாங்க.

   பாட்டியும் கொதிக்க வைக்க மாட்டார் பச்சைப்புளிக்கோஸு தான்..கொத்தமல்லி சேர்க்க மாட்டார்...கொடுத்திருக்கேனே பெட்டில...

   இது கொதிக்கவிடுவது மாமியார் மாமனாருக்கு முதன் முதலில் நான் செய்து கொடுத்த போது மாமியார் சொன்னாங்க கொஞ்சம் கொதிக்க விடு என்று. அப்படி அவங்களுக்குச் செய்ததையும் கொடுத்திருக்கிறேன். ஒரிஜினல் ரெசிப்பி கொதிக்க விடமாட்டாங்கதான்

   மிக்க நன்றி கீதாக்கா

   கீதா

   நீக்கு
 3. இது அரிசி உப்புமா வகையறாவோடு நான் ஏற்கெனவே எ.பி.யில் கொடுத்திருக்கும் நினைவு. ஆனால் கொதிக்க வைத்துக் கொத்துமல்லி+மி.வ.வறுத்துப் பொடித்துச் சேர்த்திருப்பேன். இன்னிக்கும் நான் தான் முதல்லே! ஆனால் பதிவு அப்டேட் ஆகவே இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. லேசா நினைவு தட்டுது நீங்க கொடுத்திருக்கீங்களோன்னு..

   பார்க்கணும்

   மிக்க நன்றி கீதாக்கா

   கீதா

   நீக்கு
  2. https://engalblog.blogspot.com/2017/11/blog-post_13.html இங்கே இருக்கு தி/கீதா, பாருங்க. இதிலே நீங்க பண்ணி இருக்கும் இந்த கொத்சு பற்றியும் சொல்லி இருக்கேன்.

   நீக்கு
 4. வெறும் கொத்சு மட்டும் கொடுக்காமல் கூடவே அரிசி உப்புமாவையும் கொடுத்திருந்தால் யாரானும் வந்திருப்பாங்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் மட்டும்தான் வரணும். எங்க வீட்டில் அரிசி உப்புமாலாம் ஆடிக்கொருதரம் செய்தால்தான் போணியாகும். பசங்க சின்னவங்களா இருக்கும்போது உருட்டி, உப்புமா கொழுக்கட்டை என்று கொடுத்ததெல்லாம் இப்போ நடக்கவே நடக்காது.

   நீக்கு
 5. ரொம்ப நாட்கள் கழிச்சு வந்திருக்கும் தி/கீதாவுக்கு வாழ்த்துகள். அடுத்து நான் குக்கரில்/வெண்கலப்பானையில்/ரைஸ் குக்கரில் சாதம் வைப்பது எப்படினு எழுதலாம்னு இருக்கேன். இஃகி,இஃகி,இஃகி,இஃகி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிஹிஹி

   கீதாக்கா நன்றி ஆனா இன்றும் டக்கு பக்குனு வந்துட்டு போய் விடுவேன். அப்புறம் வர முடியுமா தெரியலை பார்க்கிறேன். முடிந்தால் நைட் வந்து பின்னர் வருபவர்களுக்குப் பதில் கொடுக்க வேண்டும்

   கீதா

   நீக்கு
  2. கீசா மேடத்துக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தெரிவிக்கும் விதமாக, நான் மூன்று செய்முறை (ஒரு வாரத்துக்கு ஒன்று என்று) எழுதி அனுப்புகிறேன் (தி.பதிவுக்கு). அப்புறம் என்ன சொல்லப்போறீங்களோ. (ராகி கஞ்சி போடுவது எப்படி, வெந்நீர் வைப்பது எப்படி என்றெல்லாம் எழுதி அனுப்பலாம் என்று உங்களுக்குத் தோணியிருக்கும் ஹாஹா)

   நீக்கு
 6. போரடிக்குது. நான் வந்தால் யாருமே எட்டிப் பார்ப்பதில்லை. காஃபி வேணுமானு கேட்கிறதில்லை. கோவிச்சுண்டு போறேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாமா என்னிடம் ஸ்டிரிக்டா சொல்லியிருக்கார்... காபிலாம் கொடுக்கக்கூடாது. ஏதாவது கொடுக்கணும்னு ஆசையா இருந்தால் மோர்விட்டு கொஞ்சம் கஞ்சி கொடுக்கலாம், உப்பே போடாம என்று சொல்லியிருக்கார். அதனால் இந்தாங்க..மோர்க்கஞ்சி மைனஸ் உப்பு, வேணுமா?

   நீக்கு
 7. அன்பின் அனைவருக்கும் ஸ்பெஷலா முதலில் வந்த கீதாமாவுக்கும் ,கொத்சு பதிவெழுதிய சின்ன கீதாவுக்கும்,
  எபி குழுமத்துக்கும் இனிய காலை வணக்கங்கள்.
  எல்லோரும் இறைவன் கருணையுடன் சுகமாக
  இருக்கப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பதிவெழுதிய சின்ன கீதாவுக்கும்// - இது என்ன புது டைட்டில் வல்லிம்மா? இந்த கீதா ரங்கன், எனக்கு அக்கா வேணும். அப்போ நான் எப்படிச் சொல்றது?

   நீக்கு
  2. நினச்சேன் நினைச்சேன் என்னை இழுக்க என் அருமை அண்ணே (தம்பி) வந்துருவாரேன்னு!!!!! என் அம்மா பின்னே என்னை எப்படி சொல்லுவாங்களாம்!!! கரெக்ட்டா சொல்லிருக்காங்க! அம்மா நன்றி நன்றி!! அம்மா உங்களை சின்ன முரளின்னு சொல்லுவாங்கன்னு எதிர்பார்த்தீங்களாக்கும்?!! ஆசை தோசை!...

   கீதா

   நீக்கு
  3. அதுதானே. பெரிய கீதா இருப்பதால், அவரே ஒரு குழந்தை, இந்த கீதாவை
   சின்ன கீதானு தான் சொல்லணும் முரளிமா.
   வேற முரளி 70 வயதில் இருந்தால் உங்களைச் சின்ன முரளின்னு சொல்லணும்.
   ஹாஹாஹா.

   நீக்கு
 8. சூப்பர் கொத்சு செய்முறை.
  பச்சையாகப் புளிகரைத்த கரைசிலில்
  சுட்ட கத்திரிக்காய் மற்றும் இதர பண்டங்களைச்
  சேர்த்து, கடுகு கருவேப்பிலை
  தாளிப்பார். கொத்தமல்லி கிடையாது.
  திருனெல்வேலி முறையோ. அம்மாவும் இந்த
  ரெசிப்பி தான் எனக்கு எழுதிக் கொடுத்தார்,
  நிறைய சொதப்பின பிறகு சரியாகச் செய்தேன்.

  புக்ககத்தில் கடுகு தாளித்துப் புளிக்கரைசல் இட்டு
  கொதிக்க வைத்து ஆறியதில் சுட்டக் கத்திரிக்காய்
  சேர்க்கப்படும்.
  கும்பகோண முறையோ என்னவோ !!!

  சின்ன கீதாவின் படங்களும் அருமை.
  சொல்லி இருக்கும் முறையும் அருமை.
  அன்பு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் வல்லிம்மா திருநெல்வேலி முறைதான் பச்சையாகப் புளிகரைத்த கரைசிலில்
   சுட்ட கத்திரிக்காய் மற்றும் இதர பண்டங்களைச்
   சேர்த்து, கடுகு கருவேப்பிலை
   தாளிப்பார். கொத்தமல்லி கிடையாது.
   திருனெல்வேலி முறையோ.//

   அதே அதே கொத்தமல்லி கிடையாது பெட்டியில் கடைசியில் சொல்லிருக்கிறேன்
   பாருங்க...பாட்டி இப்படித்தான் செய்வது.

   //புக்ககத்தில் கடுகு தாளித்துப் புளிக்கரைசல் இட்டு
   கொதிக்க வைத்து ஆறியதில் சுட்டக் கத்திரிக்காய்
   சேர்க்கப்படும்.
   கும்பகோண முறையோ என்னவோ !!!//

   அப்படித்தான் நினைக்கிறேன் மாமியார் சொல்லித்தான் அவங்களுக்காகக் கொதிக்கவிடுவது. கொத்தமல்லி சேர்ப்பதும் அப்படித்தான் வந்தது எனக்கு.

   அல்லாமல் பாட்டிக்கு, என் வீட்டில் என்றால் பச்சைதான்..னோ கொத்தமல்லி

   மிக்க நன்றி வல்லிம்மா

   கீதா

   நீக்கு
  2. //ஆமாம் வல்லிம்மா திருநெல்வேலி முறைதான் பச்சையாகப் புளிகரைத்த கரைசிலில்// அநியாயமாய் இல்லையோ? மதுரைப் பக்கங்களிலும் இப்படித்தான் பண்ணுவோம். கல்யாணம் ஆனப்புறமாத் தான் கொதிக்க வைப்பாங்க என்பதே தெரியும். ஆனால் அதில் புளி கொஞ்சம் கெட்டியாகக் கரைப்பாங்க. என் புக்ககத்திலேயே சாம்பார், ரசம், வத்தக்குழம்பு எல்லாத்திலேயும் புளி கெட்டியாகத் தான் கரைப்பாங்க. நான் தான் நீர்க்கக் கரைப்பேன்.

   நீக்கு
  3. ஹலோ கீதாக்கா மதுரையும் திருநெல்வேலியும் பிரிக்க முடியாதாக்கும்!! ஹா ஹா ஹா

   கல்யாணம் ஆனப்புறமாத் தான் கொதிக்க வைப்பாங்க என்பதே தெரியும். //

   ஹைவைவ் கீதாக்கா நானும் அதே தான்....

   பாட்டி கெட்டியாகத்தான் புளித்தண்ணீர் கரைப்பார். அப்புறம் வீட்டில் பலரும் கொஞ்சம் புளி மட்டாகட்டுமே என்று சொல்ல கொஞ்சம் நீர்க்கக் கரைத்துக் கலந்து விடுவார்.

   கீதா

   நீக்கு
 9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  நலம் வாழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
 10. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

  பதிலளிநீக்கு
 11. கொத்சு குறிப்பிற்கு அன்பு நன்றி கீதா! ரொம்ப நாட்கள் கழித்து உங்களை இங்கே பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
  சிதம்பரம் கொத்சு நினைவுக்கு வருகிறது. ஆனால் அதில் வற்றல் மிளகயோடு, தனியா, கடலைப்பருப்பு, சீரகமெல்லாம் வறுத்து பொடி செய்து போட வேண்டும்.நான் பச்சையாக கொதிக்க வைக்காமல் செய்ததில்லை. செய்து பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மனோ அக்கா...

   ஆமாம் அக்கா சிதம்பரம் கொத்சு அது ஒரு வகை சுவை.

   பச்சையாகச் செய்வது தென்னகம் பக்கம் என்று நினைக்கிறேன்...நான் கொதிக்கவிட்டும் செய்வதுண்டு...இரண்டும் செய்வதுண்டு அக்கா

   மிக்க நன்றி மனோ அக்கா

   கீதா

   நீக்கு
 12. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 13. அனைவருக்கும் வணக்கம். கத்தரிக்காய் கொத்ஸீ பிடிக்காதவர்கள் இருப்பார்களா? மிகவும் எளிதாக இருக்கிறது. 2 மினிட்ஸ் கொத்ஸீ என்று பெயர் கொடுத்திருக்கலாமோ? கொதிக்க விடாவிட்டால் பச்சை வாசனை அடிக்காதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா பானுக்கா //2 மினிட்ஸ் கொத்ஸீ//

   இதுவும் நல்லாருக்கே!!!

   அக்கா புளி அதிகம் இல்லாமல் கொஞ்சமே கொஞ்சம் கரைத்து நீர்க்க வைத்துக் கொண்டு அதில் செய்தால் பச்சை வாசனை அத்தனை அடிக்காது பானுக்கா அது ஒரு சுவை. என் பாட்டிக்கு வயசான பிறகு அதிகம் கேட்டுச் சாப்பிட்ட ஒன்று...

   ஆமாம் பெரும்பான்மையானவர்க்கு கத்தரிக்காய் கொத்ஸு பிடிக்கும் என்றே தோன்றுகிறது..

   மிக்க நன்றி பானுக்கா

   கீதா

   நீக்கு
 14. சிதம்பரம் கொத்ஸீ என்று நான் ஒரு முறை ஒரு பதிவு அனுப்பினேனோ??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் பானுக்கா இங்கு திங்கவில் வந்ததே!!!

   கீதா

   நீக்கு
 15. படங்களோடு சொன்ன விதம் அருமை.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

  உங்களை எ.பி கிச்சனில் பார்த்து நாளாகி விட்டது. இன்றைய வருகைக்கு ரொம்ப சந்தோஷம். இனியும் தொடர்ந்து வந்து பல சமையல் ரெசிபிக்களை தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

  நீங்கள் செய்துள்ள கத்திரிக்காய் புளி கொத்ஸு செய்முறை படங்களுடன் நன்றாக உள்ளது. நீங்கள் கூறியபடி அரிசி உப்புமாவுக்கு இது ரொம்பவும் பொருத்தம். எங்கள் அம்மா வீட்டில் கும்முட்டி அடுப்பில் கத்திரிக்காயை சுட்டு இந்த ரெசிபி எங்கள் பாட்டி அடிக்கடி செய்வார்கள். சுட்ட கத்திரியின் வாசம் இன்னமும் என் நினைவுகளில் உள்ளது. அதன் பின் எனக்கு கேஸ் அடுப்பில் இது சுடுவதற்கு கொஞ்சம் சிரமமாக இருக்கும். (அப்போதெல்லாம் க்ரிலின் உதவியை தெரிந்து கொள்ளவில்லை) அம்மியில் வறுத்ததையும் புளியுடன் சேர்த்து அரைத்து செய்திருக்கிறேன். ஆனாலும் இப்பவும் சரி, அப்போதும் சரி இந்த முழுதான கத்திரியை நம்ப எனக்கு ரொம்ப சந்தேகம். :)) அதனால் கூடிய வரை நறுக்கியே வேக வைத்து விடுவேன். ஆனால் தணலில் சுட்ட வாசனையே தனிதான். (கூழுக்கும் ஆசை..... ஆசை கதைதான்.ஹா.ஹா.)

  உங்கள் செய்முறைகள் மிகவும் நன்றாக உள்ளது.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கமலாக்கா ஆமாம் பாட்டியும் அப்போது கும்முட்டி அடுப்பில் தான் சுடுவார்.

   அக்கா முழு கத்தரிக்காய் இத்தனை பெரிது இல்லை என்றாலும் மற்றதிலும்செய்யலாம்...மேலே ஓட்டை அல்லது புழு சென்ற தடம் அடைத்து இருக்கும் அது இல்லை என்றால் தைரியமாகச் சுட்டுச் செய்யலாம் கமலாக்கா..

   மற்றொரு ஐடியா கமலாக்கா...பெய்ங்கன் பர்த்தா செய்யும் போது இப்படியான முழு கத்தரிக்காயை நடுவில் 4 ஆக வகுந்து கொண்டு அதாவது நறுக்காமல், இப்படிச் சுட்டு எடுக்கலாம்...அப்படிச் செய்யும் போது உள்ளே புழு இருக்கா என்பதும் தெரிந்துவிடுமே

   மற்றொன்று கத்தரிக்காயை பெரிய துண்டங்களாக கட் செய்து அதை இந்த க்ரில் சட்டம் மேலே பரப்பியும் சுட்டு முயற்சி செய்யலாம் கமலாக்கா.

   மிக்க நன்றி கமலாக்கா

   கீதா

   நீக்கு
  2. வணக்கம் சகோதரி

   நீங்கள் கூறும் வழி முறைகளிலும் கத்திரியை சுடுவதற்கு முயற்சி செய்யலாம். நன்றாக நிறைய ஐடியாக்கள் தந்து விட்டீர்கள். மிக்க நன்றி. நானும் உங்கள் வழிமுறைகளின்படி கத்திரிக்காயை சுட்டுக் கொண்டு,இங்கு பகிர்ந்திருக்கும் முறைப்படியும் செய்கிறேன். நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. மிக்க நன்றி கமலாக்கா!! கொஞ்சம் கத்தரிக்காயை கொதிக்க விடாம செய்து பாருங்க மீதிய கொதிக்க விட்டுச் செய்து பாருங்க..

   எஞ்சாய்!!!!

   கீதா

   நீக்கு
  4. @தி/கீதா, பைங்கன் பர்த்தா பண்ணும்போது நாலாக வகிர்ந்து கொண்டு அதில் பச்சை மிளகாயையும் இரண்டாகப் பிளந்து உள்ளே வைத்துவிட்டுச் சுடுவாங்க பஞ்சாப் பக்கம். அதிலும் கட்டையை எரித்துக் கொண்டு அதில் போட்டுச் சுடுவார்கள்.

   நீக்கு
  5. ஆமாம் கீதாக்கா...அதில் பூண்டும் கூட வைத்துச் சுடுவாங்களே...பஞ்சாபில். நான் பஞ்சாபி பெய்ங்கன் பர்த்தா செய்து போட்டோ எடுத்து வைத்து ரொம்ப நாளாகுது. அதை எபிக்கு இனிதான் படங்கள் கோர்த்து பதிவு எழுதி அனுப்ப வேண்டும்...

   கீதா

   நீக்கு
  6. நமக்குப் பூண்டுன்னா அலர்ஜியாச்சே! அதனால் அது கிடையாது!

   நீக்கு
 17. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 18. கத்தரிக்காய் புளி கோஸு / கொத்ஸு நன்றாக இருக்கிரது கீதா ரெங்கன்.
  படங்களும், செய்முறைகுறிப்பும் அருமை.
  பதிவுலகத்திற்கு தொடர்ந்து வர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கோமதிக்கா..

   தொடர்ந்து வர முயற்சி செய்கிறேன்..

   கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது தற்போதைக்கு..

   கீதா

   நீக்கு
 19. திங்க பதிவுக்கு தலைப்பிடுவதிலேயே குழப்பமா? கோஸு, கொத்ஸு - ஏன் கொஜ்ஜுவை விட்டுட்டீங்க?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை கோஸு என்று என் பாட்டி சொல்வதுன்னு சொல்லிருக்கிறேனே....நம் வீட்டில் கொஜ்ஜு ந்னு சொல்றதில்லையா அதனால டக்குனு தோன்றவில்லை. இல்லைனா அதையும் சேர்த்திருப்பேன் ஹா ஹா ஹா

   மிக்க நன்றி நெல்லை

   கீதா

   நீக்கு
  2. கர்நாடகாவின் கொஜ்ஜூ முழுக்க முழுக்க வேறே இல்லையோ? அங்கே அன்னாசிப் பழத்தில், பாகற்காயில் என்று எல்லாவற்றிலும் கொஜ்ஜு பண்ணுவாங்க. அதிலும் கேழ்வரகுக்களிக்கு/ கூழுக்குத் தொட்டுக்கப் பாகற்காய் கொஜ்ஜு இருக்கும்.அநேகமாக நம்ம ஊர்ப் பிட்லை தான்!

   நீக்கு

 20. //மக்களே அவர் தமிழுக்குக் காரணம் கணினிதான் என்று அடித்துச் சொல்வேன்!!//


  @கீதா யாரை அடித்து சொல்லப் போகிறேன் என்று சரியாக சொல்லவில்லையே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்குப் புரிந்தது, அதிராவை ஓட்டும் மதுரைத் தமிழனை அடித்துச் சொல்லப் போகிறேன் என்றுதான் நான் வாசித்தேன். நீங்க எப்படி இந்த வரியைப் படிக்காமல் விட்டீங்க மதுரைத் தமிழன்?

   நீக்கு
  2. @கீதா யாரை அடித்து சொல்லப் போகிறேன் என்று சரியாக சொல்லவில்லையே//

   ஹா ஹா ஹா ஹா வாங்க மதுரை!!!

   நெல்லை மதுரையை இழுப்பதை!!! பார்க்கலையா மதுரை!!! ஹா ஹா ஹா

   அதுக்குக் காரணமான ராணியம்மா பேலஸில் ரொம்ப பிஸி போல!!!!!!!

   கீதா

   நீக்கு
 21. @கீதா புளி கொத்ஸு எனக்கு சாப்பிட தந்த பின் தான் டேஸ்ட் பார்த்துவிட்டு நல்லா இருக்க இல்லையா எண்ரு சொல்வேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா....வாங்க வீட்டுக்கு.. செஞ்சு தருகிறேன்...அதுக்கு நீங்களே வீட்டுல ட்ரை செய்யலாமே அதுவும் கிச்சன் கில்லாடியான உங்களுக்கு சிரமமா என்ன?!!!!!!!

   கீதா

   நீக்கு
 22. ஒரு கொதியாவது புளித்தண்ணீரை கொதிக்க வைக்கணும்னு சொல்லியிருக்கீங்க. அப்புறம் ஏன் பச்சை புளிக்கோஸு?

  புளி கொதித்திருந்தால்தான் நல்லா இருக்கும். ஒரு தடவை கொதிக்கவைக்காத புளிஜலத்தில் செய்திருந்த சாத்துமதை பாரிஸில் சாப்பிட்டு, எனக்கு கொஞ்சம்கூடப் பிடிக்கலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒயிங்கா பெட்டியைப் படிக்கலையோ...பாட்டியின் செய் முறைன்னு சொல்லிருக்கேன்....பாருங்க...நெல்லை...இரண்டு முறையும் உண்டு...நான் முதலில் கற்றது பச்சைப் புளிக்கோஸு. அப்புறம் மாமியார் மாமனாருக்குச் செய்த போது மாமியார் ஒரு கொதி கொதிக்க விடச் சொன்னாங்க...

   ஆனால் ரசம் போல இல்லை நெல்லை இது...புளி குறைவாக நல்ல நீர்க்க இருந்தால் பச்சை தெரியாது அதில் பெருங்காயமும், நொறுக்கிய க்ரிஸ்பி மிளகாய் வற்றலும் கறிவேப்பிலையும் சேர்ந்து நல்ல டேஸ்ட் கொடுக்கும்...கூடவே சுட்ட கத்தரியும்..

   மிக்க நன்ரி நெல்லை

   கீதா

   நீக்கு
 23. With available limited resources, தி.பதிவுக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் செய்து அனுப்பியிருக்கீங்க. பாராட்டுகள் கீதா ரங்கன்.

  இதை என்ன செய்யறது? குழம்புக்குப் பதிலாகவா? இல்லை அரிசி உப்புமாவுக்குத் தொட்டுக்கவா?

  அந்தக் காலத்தில் விறகு அடுப்பில் சுடும் கத்திரிக்காயும், இப்போ கேஸ் அடுப்பில் சுடும் கத்திரிக்கும் சுவையில்தான் எவ்வளவு வேறுபாடு. இதற்கு பிடி கத்தரி (ரொம்பப் பெரிசா இருக்குமே அது) ரொம்ப சரியா இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை இது ஏற்கனவே என் ஃபோல்டரில் ரொம்ப நாளாக இருந்தது. படங்கள். அதைத்தான் குறிபபக எழுதிக் கொடுத்தேன்..

   மிக்க நன்றி நெல்லை. இப்ப ஒரே ஒரு கணினிதான்...அது ஃப்ரீயாகும் போதுதான் வலைப்பக்கம்..

   //அந்தக் காலத்தில் விறகு அடுப்பில் சுடும் கத்திரிக்காயும், இப்போ கேஸ் அடுப்பில் சுடும் கத்திரிக்கும் சுவையில்தான் எவ்வளவு வேறுபாடு.//

   கண்டிப்பாக..அதுவும் கும்முட்டி அடுப்பு அது தனி சுவைதான்...அதிலும் அடியில் கரி மேலே க்ரில் போல இரும்பு ஜல்லி இருக்குமே அதில்தானே பாத்திரம் வைப்பாங்க அதுல வைச்சு சுடுவாங்க சிலப்போ அதிலும் கரி சுத்தி போட்டு அதன்மேல் கத்தரி வைச்சு அடுப்பை ஊதி ஊதி சுடுவாங்க..

   நன்றி நெல்லை

   கீதா

   நீக்கு
  2. கொத்சை வெறுமனயே சாப்பிடலாமே.முரளிமா.
   கொத்சுக்குப் பொங்கல் தொட்டுக்கலாம், அப்பளம்,
   அரிசி உப்புமா, தேங்காய்த் தொகையில் பிசஞ்ச சாதம்,
   சப்பாத்தி ,தோசை நீளும் பட்டியல்:)

   நீக்கு
 24. கொத்சு செய்முறை அருமை... எளிதான செய்முறை குறிப்புகள்...

  பதிலளிநீக்கு
 25. வெகு நாட்களுக்கு பிறகு இக்கிட்சனில் தங்களை சந்திப்பது மிக்க மகிழ்ச்சி ஜூனியர் கீத்தா மேடம்.
  கொத்ஸீ சாப்பிட ஆசைதான்.
  ஆனால் கத்தரிக்காய் என்றாலே வீட்டில் கொஞ்சம் பயப்படுகிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அரவிந்த். ஓ கத்தரிக்காய் அலர்ஜியா உங்க வீட்டில?!

   அலர்ஜி உடல்நலம் சம்பந்தப்பட்டதுனா ஓகே..

   இல்லைனா என்றைக்காவது ஒரு நாள் செஞ்சு தரச் சொல்லுங்க..இந்த கொத்ஸு என்றில்லை, கத்தரிக்காயில் பல வெரைட்டிஸ் செய்யலாம் அதுக்காக..

   மிக்க நன்றி அரவிந்த்

   நீக்கு
 26. நல்லாயிருக்கு.. செஞ்சு பார்க்கலாம் தான்..
  அவ்வப்போது இந்தக் கத்தரிக்காய் உடலுக்கு ஒத்துக் கொள்ளாமல் போகிறது - கூடவே புளியும்...

  இருந்தாலும் இவற்றை விடுவதாக இல்லை..
  அவையும் என்னை விடுவதாக இல்லை..

  காவிரியின் கத்தரிக்காய்க்கு ஈடு தான் ஏது.. இணை தான் ஏது!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருந்தாலும் இவற்றை விடுவதாக இல்லை..
   அவையும் என்னை விடுவதாக இல்லை..//
   ஹா ஹா ஹா துரை அண்ணா என்றைக்காவது ஒரு நாள் ஒரு கை பார்த்துடுங்க!!!

   மிக்க நன்றி துரை அண்ணா

   கீதா

   நீக்கு
 27. கத்தரிக்காய் கொத்ஸு இப்படிதான் செய்வார்கள். அதுவும் உப்புமாவுக்கு ஜோடியாக. கொதிக்க வைப்பதில்லை. வீட்டில்கொட்டை நீக்கிய புளி.பார்த்து பார்த்து தேர்வு செய்தது. மைக்ரோவேவில் கூட கத்தரிக்காயைச் சுட்டு நான் பலவிதங்களில் செய்து இருக்கிரேன். நன்றாக இருக்கும் ருசியானதை ஞாபகப்படுத்திவிட்டீர்கள். ருசிக்கு அடிமையாகும் நாக்கு. அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க காமாட்சி அம்மா!!! ஹப்பா கொதிக்க விடாமல் செய்யும் ரெசிப்பிக்கு நம்ம கீதாக்கா, வல்லிம்மா நீங்க ஆச்சு என் சைட்!!! ஹா ஹா ஹா

   //நன்றாக இருக்கும் ருசியானதை ஞாபகப்படுத்திவிட்டீர்கள். //

   ஆமாம் இல்லையாம்மா நல்லாருக்கும் இல்லையா...என் பாட்டி செய்வது எனக்கு ரொம்பப் பிடிக்கும்...

   //மைக்ரோவேவில் கூட கத்தரிக்காயைச் சுட்டு நான் பலவிதங்களில் செய்து இருக்கிரேன்.//

   சூப்பர் காமாட்சி அம்மா...உங்களுக்குத் தெரியாத ரெசிப்பியா? அதுவும் உங்கள் அனுபவத்திற்கு....!!!

   மிக்க நன்றி அம்மா

   கீதா

   நீக்கு
 28. ஆஆஆ இன்று கீதாவோ.. ரெசிப்பி நன்றாக இருக்குது ஆனாலும் எப்போதான் கீதாவின் ரெசிப்பி வருமோ?:)).. ஏனெண்டால் பாட்டியின் ரெசிப்பி அம்மாவின் ரெசிப்பி எனத்தானே போடுறா எப்பவும்:)).. சரி சரி மீ ஓடிடுறேன், எல்லோரும் நலமோ எனப் பார்க்க வந்தேனாக்கும்:).

  பதிலளிநீக்கு
 29. கத்தரிக்காய் இருக்கிறது கோசைக் காணோமே என்று தேடிப்படித்ததில்.. கொத்சு கோசு ஆனதா? அல்லது கோசு கொத்சானதா?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!