வியாழன், 20 மே, 2021

புரியாத வேண்டுதல்கள்

 எனக்கு விதியில் நம்பிக்கை உண்டு.  நடப்பதுதான் நடக்கும் என்பதில் நம்பிக்கை உடையவன்.  

அதாவது வேறு வழியில்லை.  வேண்டிக்கொண்டால், முயன்றால் மாற்றலாம் என்று முயன்றால், அது நடக்கவில்லை என்றால்,  வரக்கூடிய ஏமாற்றத்தைத் தவிர்க்க மனதை அப்படி தயார் செய்து கொள்வது வழக்கம்!  

கடவுளிடம் ஜாக்கிரதையாக வேண்டுவது.  என் ஜாக்கிரதையைக் கண்டு கடவுள் புன்னகைக்கக்கூடும்.  கும்பகர்ணன் வேண்டியதுபோல வார்த்தை தவறாகி விடும் என்கிற அர்த்தத்தில் சொல்லவில்லை.  வேண்டுதலை நிறைவேற்ற நம்மால் முடியும் முடியாததை யோசித்து வேண்டுவது!  

புரியாத வேண்டுதல்கள்  
புன்னகைக்கிறார் கடவுள் 
நிறைவேற்றுவதா 
வேண்டாமா.. 
நிலுவையில் வைத்து விடுகிறார்!

முதலில் எல்லாம் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு பிள்ளையாரிடம் வேண்டிக்கொள்வேன்.  வழக்கம் போல ரொம்ப ஃபேமஸ் பிள்ளையார் அவர். இந்த வேண்டுதல் நிறைவேறினால் ஒரு தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டிக்கொள்வேன்.  அப்புறம் உடைத்தும் விடுவேன்.  பின்னர் தேங்காய் உடைக்க முடியாமல் இரண்டு தேங்காய், மூன்று தேங்காய் என்று கடன் சேர ஆரம்பித்தது.  ஏதாவது கஷ்டம் வந்தால் இந்தத் தேங்காய் உடைக்காததுதான் தப்பு என்றும் தோன்றும்.  அந்த அளவு பிள்ளையார் அரசியல்வாதி போல நடக்கமாட்டார் என்றும் தோன்றும்!  ஆனாலும் பாஸ் உட்பட சிலர் பயமுறுத்திக் கொண்டே இருப்பார்கள்!

பார்த்தேன்..   ஒருமுறை என் தேங்காய்க் கடனை எல்லாம் முடித்தபிறகு என் வேண்டுதலின் மாற்றம் கொண்டுவந்தேன்!!  "இந்த வேண்டுதல் நிறைவேறினால் லோகநாதனை விட்டு ஒரு தேங்காய் உடைக்கச் சொல்கிறேன்..."  லோகநாதன் என் அலுவலக வாட்ச்மேன்.  சில நாட்கள் அப்படி.  அப்புறம் இதைச் செய்கிறேன் அதைச் செய்கிறேன் என்று கடவுளிடம் பேரம் பேசுவதை விட்டு விட்டேன்.  

நடப்பதுதான் நடக்கும்.  நடக்கட்டும்.  அதை எதிர்கொள்வோம் என்கிற மனோபாவம்!  

கடவுளை அவனுக்கு இதுதான் உருவம் என்று முதலில் படைத்தவன் யார்? எந்தச் சிற்பி எதை, அல்லது யாரைப் பார்த்து கடவுளை வடித்தான்?  

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என்பது போலோ, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என்பது போலோ  மேலே சில தனித்தனி உலகங்கள்..  அதில் இந்து, முஸ்லீம் கிறிஸ்துவ ஆட்சிகள் தனித்தனியாக நடக்கிறது என்றோ எண்ணம் இல்லை.  ஒரு பெரிய மாளிகையில் முருகன், சிவன், பிள்ளையார், விஷ்ணு என்று தனித்தனி அறைகளில் இருக்கிறார்கள் என்றும் எண்ணம் வருவதில்லை.  ஆனால் நமக்குத் பிடித்த உருவத்தைக் கற்பனை செய்து மனதில் இருத்திக் கொள்வதிலும் வழக்கம் இல்லாமல் இல்லை!  நமக்கு மேலே (மேலே என்றால் ஆகாயத்தில் அல்ல!) நம்மால் விளங்கி கொள்ளமுடியாத நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்கிற எண்ணம் மட்டும் வலுவாக மனதில் உண்டு.  அந்த பயம்தான் மனிதனை ஆட்டி வைத்துக் கொண்டிருப்பதும், கொஞ்சமாவது நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்க வைத்துக் கொண்டிருப்பதுவும்!  அதுவும் ஆட்டம் காணும் நாளில் கடவுள் சித்தாந்தம் காணாமல் போகும்!

முன்னர் வேறு ஒரு வழக்கமும் உண்டு.  நல்லவேளையாய் கஷ்டப்பட்டு அதை சமீப காலமாய் மாற்றிக்கொண்டிருக்கிறேன்.  ஏதாவது ஒரு சாதாரண வேலையைச் செய்யும்போது இதைச்  செய்வதற்குள் இப்படி ஆகாமல் இருந்தால் என் அந்த கஷ்டம்  தீரும், இந்தத் தொல்லை தீரும் என்பது போல..  உதாரணமாக சாலையில்  செல்கிறேன் என்று வைத்துக் கொள்வோம்...  எதிரில் ஒரு சைக்கிள் வந்து கொண்டிருக்கிறது என்றும் வைத்துக் கொள்வோம்.  இடையில் ஒரு மரம் தெரிகிறது.  என் மனதுக்குள் ஒரு எண்ணம் ஓடும்.  "அந்த மரத்தை நான் அடைவதற்குள் சைக்கிள் என்னைத் தாண்டாமலிருந்தால்..."  

அது நிறைவேற என் வேகத்தைக் கூட்டவும் கூடாது.  தானாக நடக்கவேண்டும்.  இந்தப் பழக்கம் ஏன், எப்படி, எப்போது வந்ததது தெரியாது.  சமீபத்தில்தான் மாற்றிக்கொண்டேன்.  நடக்காமல் போனால் அனாவசிய மனவருத்தம்.  ஆனால் இதெல்லாம் மனத்திலும் நிற்காது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

பாஸுக்கு ஒரு வழக்கம் உண்டு.  காலை எழுந்ததும் விளக்கேற்றி விடுவார்.  அப்புறம்தான் பால்காய்ச்சுவது.  பாலை ஒரு சிறு வெள்ளி டம்ளரில் எடுத்து சாமி அலமாரியில் வைத்து கைகாட்டியபின்தான் காஃபி.  சமீபகாலமாக காலை நாலரைக்கு எழுந்துவிடும் நான் காஃபி போடுகிறேனா, என்னையும் அதேபோல செய்யச் சொல்வார்.

இதில் ஒரு சங்கடம்..   நான் விளக்கேற்றி வைத்து, பாலையும் வைத்தபின் பாஸ் வந்து பார்க்கும்போது  விளக்கு அணைந்து இருந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள்..  அவருக்கு ஆயிரம் சந்தேகம் வரும்..   "விளக்கு ஏற்றினீர்களோ...  ஏற்றியது ஏன் அணைந்து விட்டது?  ஏதாவது தப்போ..."  

"ஆமாம்..  எண்ணெய் போதுமான அளவு இருந்திருக்காது.  அல்லது திரி சின்னதாயிருந்திருக்கும்!  அதுதான் தப்பு" என்பேன்.

இவர் கேட்கும் கேள்வியில், அப்புறம் ஒரு தீக்குச்சியில் விளக்கு பற்றிக்கொள்ளவிலை என்று வைத்துக் கொள்ளுங்கள்..  நம் மனதும் கிலேசம் அடையும்!  இத்தனைக்கும் திரியை நிரடி விட்டு, எண்ணெய் இருக்கிறதா என்று பார்த்துதான் விளக்கு ஏற்றுவது...

அலுவலகத்தில் என் இருக்கையின் முன்னே வீட்டு பூஜையறையில் என் அம்மா அப்பா வைத்திருந்த காசி விசாலாக்ஷி அம்மன் படம் இருக்கிறது.  நான் வேலையில் சேர்ந்த மறுநாள் என்னுடன் எடுத்துச் சென்று அலுவலகத்தில் வைத்தது.  அவரை வணங்காமல் ஒருநாளும் நான் வேலையைத் தொடங்கியதில்லை. 

====================================================================================================

எதையோ படிக்கும்போது தோன்றிய சிந்தனை என்றாலும், இந்தத் தொற்றை நினைக்கும்போது இப்படி ஒரு நிலை வந்துவிடக் கூடாது என்றும் பயம் வருகிறது!

நீளக் கடற்கரையில் 
நான் மட்டும்.. 
தனிமைத் தெருக்களை 
இப்போதுதான் தாண்டி வந்தேன் 
காலியான கட்டிடங்களில் 
புறாக்களின் படபடப்பு கூட 
கேட்காத மௌனம் 
அன்றாடம் பார்க்கும் 
சூரியனும் 
அழகான அலைகளின் ஓசையும் 
அச்சுறுத்தலாய்.. 
எங்கே போனார்கள் எல்லோரும்?
ஒரு முகமாவது, 
ஒரு புன்னகையாவது 
இப்போது வேண்டும் எனக்கு 
இல்லை,
என்னை யாராவது 
அடிக்கத் துரத்துங்களேன் 
தனிமை தாளவில்லை 

==========================================================================================================

எஸ் ஏ பி பற்றி சென்ற சில வாரங்களில் பேசியபோது அதுபற்றி எழுத ஜீவி ஸார் ஒப்புக்கொண்டிருந்தார்.  இந்த வியாழன் முதல் தொடங்குகிறது.  இந்த வாரம் பொறுத்துக் கொள்ளுங்கள்...   இந்தத்தொடரைப் படிக்க எளிதாக இருக்க அடுத்தவாரம் வியாழனின் கனத்தைக் குறைத்து விடுகிறேன்!

*********

குமுதம் 
(1)
ஜீவி 


க்கத்திலேயே ரயில்வே லெவல் கிராஸிங்.

நாங்கள் அந்த ர.லெ. கிராஸை ஒட்டிய  தனித்த மேடான பகுதியில் அமர்ந்திருந்தோம்.   

நாங்கள் என்றால் நானும்,  ரகுவும்.   ரகு யாரென்றால் என் அருமை நண்பன்.  உடன்பிறப்பு என்ற உறவைத் தாண்டிய உடன்பிறவா சகோதரன் அவன்..  ரகு என்னை விட ஒரு வயது பெரியவன்.  இரண்டு பேருக்குமே பள்ளி இறுதி வகுப்பை முடித்திருந்த தருணம் அது.  அந்த  மேட்டுக்குக் கீழேயே அவன் வீடு இருந்ததால் இந்த இடத்தை எங்கள் சந்திப்புகளுக்குத் தேர்ந்தெடுத்திருந்தோம்.

வெள்ளைக் காகிதத்தை க்ளிப்பிட்டு செருகிய கார்ட்போர்டு அட்டை என் கையில்.  அதில் காகிதத்தில் 'பளீரென்று வெளிச்சம்.  60 வாட்ஸ் பல்பு தான்.  இருந்தாலும்..'  என்று நான் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கையில்,  "நீளமா வேண்டாம்டா.  ஆரம்பம் ஒற்றை வரிலே இருக்கணும்" என்றான் ரகு. 

"பளீரென்று வெளிச்சம் -- அது மட்டும் முதல் வரியா இருக்கட்டும்.  அதுக்குக் கீழே அந்த 60 வாட்ஸ் பல்பு தான்' இரண்டாவது வரியா வரட்டும்" என்று திருத்தினான் ரகு.

 இந்த  ஒற்றை வரி ஆரம்பம் நூல்  கண்டில் பிரிந்திருக்கிற ஒரு முனையை பற்றி இழுக்கற மாதிரி.  

வாசிப்பு பழக்கமானவர்களுக்கு   நாமும் எதையாவது எழுதிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுவது இயல்பு.  அப்படியான தாபம்  கொண்ட பெரும்பாலோரின் நுழைவு வாயில் தான் இந்தப் பதிவுலகம் என்பது நிச்சயம்.  இந்த இணைய எழுத்துலகில் விரல் பதித்திருக்கும் சிலர் தம் இளம் வயதில் கையெழுத்துப் பிரதி நடத்தி தங்கள்  ஆசையை வளர்த்தும் கொண்டிருப்பார்கள்.

நானும் ரகுவும் கூட அந்தப் பருவத்தில் அதைத் தான் செய்தோம்.  அந்தக் கையெழுத்துப் பிரதிக்காகத் தான் அப்பொழுது  எழுதிக் கொண்டிருந்தோம்.  மொத்தம் 40 பக்கங்கள். நிறைய ஐட்டங்கள்.  ஒரு  தொடர்கதை வேறே..  கலர் பென்சிலில் படம் வரைய சோமு இருந்தான்.  சோமுவைத் தவிர இன்னும் நாலைஞ்சு பேர். ஆளுக்கொரு  வேலை.  ஒவ்வொரு மாத ஆரம்பத்திலும் எங்கள் 'புரட்சி' வெளிவந்து விடும்.  

நாங்கள் சைக்கிளில் வீடு வீடாக விஜயம் செய்து  நாவல்கள்,  மாத-- வார பத்திரிகைகளை வாசிக்கக் கொடுக்கும் லெண்டிங் லைப்ரரி வைத்திருந்தோம்.  சர்குலேஷன்லாம்  தூள் கிளப்பும்.  அன்றைய சேலம் நகரின் தெருக்கள் நெடுகிலும் எங்கள் வாடிக்கையாளர்கள் இருந்தார்கள்.  பெரும்பாலும் மகளிர் தாம். அந்தக் காலத்து வீட்டுப் பெண்மணிகளில் பலரின் பொழுது போக்கு பத்திரிகை வாசிப்பு என்றிருந்தது எங்கள் சர்க்குலேஷனுக்கு ரொம்பவும் அனுகூலமாகவும் பலமாகவும் இருந்தது.  ரொம்பவும் பழக்கப் பட்டவர்கள் சிலருக்கு உரிமையுடன் இந்தக் கையெழுத்துப் பிரதியையும் 
சேர்த்துக்  கொடுப்போம்.  எங்கள் எழுத்து ரசனையை அவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்று தான்.   இப்படி ஆரம்பித்தது  "உங்கள் கையெழுத்துப் பத்திரிகையில் நாங்களும் எழுதலாமா?" என்று தீராத எழுத்து மோகத்தோடு சில மகளிர் வாடிக்கையாளர்களும் கேட்ட பொழுது இரட்டை மடங்கு சந்தோஷத்தோடு ஒப்புக் கொண்டது,   எங்களுக்குள்  பத்திரிகை வாசக - எழுத்தாளர் குழாம் ஒன்றே செயல்படுவதற்கு ஆதர்சமாக இருந்தது.  அதெல்லாம் பற்றி இந்தப் பகுதியில் வேண்டாம்.  வேறொரு சமயம் அதற்கென்று வாய்க்கும் பொழுது தனிக் கச்சேரியாக அதை வைத்துக் கொள்ளலாம்.

பண விஷயங்களில் சிக்கலே இல்லை.  எப்படியோ புரட்டி விடுவோம். எங்கள் வாடிக்கையாளர்களின் அதீத ஆதரவு எங்களுக்கு எப்பொழுதுமே இருந்தது.
எந்த விதத்திலும்  கையைக் கடிக்காமல் காசு வந்து  கொண்டிருந்ததால் எங்களுக்கு இதெல்லாம் அந்த வயதில் இனிமையான பொழுது போக்காக இருந்தன.

'கையெழுத்துப்  பிரதியை  இவ்வளவு கஷ்டப்பட்டு தயாரிக்கிறீர்களே..  எம்ஜிஆருக்கு அனுப்பி வையுங்கள்.  பெரிய  அளவில்  ஏதாவது  உதவி செய்வார்' என்று மேட்டுத்தெரு பெரியவர் ஒருத்தர் சொல்லி பதிவுத் தபாலில் ஒரு பிரதியை ரொம்ப யோசனைக்குப் பிறகு  அனுப்பி வைத்தோம்.  அனுப்பிய ஒரு வாரத்தில்,  முகவரி பகுதியில் சிவப்பு இங்க் கோடுகள் எல்லாம்  குறுக்கு நெடுக்காக இழுத்து,  'Return to sender' என்று திரும்பி வந்து விட்டது. 

எங்களுக்கு ஒண்ணும் புரிலே.  "சாதாரண தபாலில் அனுப்பக் கூடாதா?  இந்த மாதிரி ரிஜிஸ்தர் தபாலாம் என்னவோ ஏதோன்னு சிலர் வாங்க மாட்டாங்க..' என்று எங்கள் லெண்டிங் லைப்ரரி கஸ்டமர் ஒருத்தர்.  'ஆரெம்வி அகழியைத் தாண்டி கோட்டைக்குள் போகணும்னா கஷ்டம்தான்.  அந்த என்ட்ரி லெவல்லேயே திருப்பப் பட்டிருக்கும்' என்று இன்னொருத்தர்.  'ஏம்ப்பா..  ரோஜா, மல்லிகைன்னு ஏதாவது சாதாரணப் பெயரா பத்திரிகைக்கு வைக்கக் கூடாதா? அதென்ன புரட்சி, புடலங்காய்லாம்?.,,   சில பேருக்கு இந்தப் பெயரெல்லாம் அலர்ஜி.. தெரியுமோ'ன்னு இன்னொருத்தர்.

எது  வேணா காரணமா இருக்கட்டும்.  நாங்க கஷ்டப்பட்டு எழுதின கையெழுத்துப் பிரதி எங்க கைக்கு உருப்படியா வந்து சேர்ந்ததிலே கிடைத்த சந்தோஷம் அந்தத்  திரும்பி வந்ததை ஒரே நாளில் மறக்கச் செய்தது.  இனிமே இந்த மாதிரி தப்பெல்லாம் பண்ணிடக் கூடாதுன்னு அப்பொழுதே ஒரு மனதாக ஒன்று கூடி சூளுரைத்துக் கொண்டோம்..

முக்கியமான விஷயத்தைச் சொல்லாம எங்கேயெல்லாமோ எழுத வந்தது இழுத்தடிக்கறது.  எதை எழுதணும்னாலும்  நறுக்குத் தெரிந்தாற் போல ஒற்றை வரி ஒண்ணுலே ஆரம்பிச்சு ஆரம்பித்ததின் முன்னே, பின்னே என்று விஷயத்தை ஓட்டற சாமர்த்தியத்தை அந்த வயசிலேயே எங்களுக்குக் கற்றுக் கொடுத்தது  குமுதம் பத்திரிகை ஆசிரியர் எஸ்.ஏ.பி. தான்.

இப்படி எழுதற கலைலே அவர் கற்றுக் கொடுத்த பாடங்களையெல்லாம் சொல்றதுக்குத் தான் இந்தப் பகுதி..  அப்படியே அவர் பேராசிரியராய் இருந்த அந்த சர்வகலாசாலை 'குமுதம்' இதழ் பற்றியும்.  சரியா?..  சரி..  அந்த  ஒற்றை வரி ஆரம்பத்திற்கு வருவோம்.

அவரோட 'நீ'  என்கிற ஒற்றை எழுத்து தலைப்பிட்டிருந்த நாவலே---

பொட்டென்று மணிக்கட்டில் விழுந்தது ஒரு மழைத்துளி   -  என்று தான் ஆரம்பிக்கும்.

மிஞ்சி மிஞ்சிப் போனா  எனக்கு அப்போ  16 வயது இருக்கும். ஏறக்குறைய  எங்கள் ஜமாவே இந்த வயசொத்தவங்க தான்.   ரகுக்கும் எனக்கும் பத்திரிகை வாத்தியார் எஸ்.ஏ.பி. அவர்கள் தான்.  எப்படிலாம் எழுதணும்ங்கறதைக் கத்துக் கொடுத்த மானசீக குரு.  ஏகலைவர்களாக கற்றோம்.   அவர் தொடர்கதை எழுதறார்ன்னா  எங்களுக்கு பாட வகுப்பு ஆரம்பித்த மாதிரி தான்.  

போதாக்குறைக்கு எங்க சர்குலேஷன் லைப்ரரிலே  குமுதம் ரிலீஸாகும் நாளன்னைக்கே நாலைந்து வீடுகளில் 'என்ன, குமுதம் கொண்டு  வர்லையா'ன்னு கேப்பாங்க..  அதனாலே வாரா வாராம் குறைந்தபட்சம் ஐந்து குமுதமாவது வாங்குவோம்.  ஆ.வி.  ரெண்டு வாங்குவதே சர்க்குலேஷனில் எந்தக் குழறுபடியும் ஏற்பட்டு விடாமல் சமாளிக்கப் போதுமனதாக இருக்கும்.

குமுதம் வந்த அன்னிக்கே கடை வாசல்லேயே நின்னு விடுவிடுவென்று மேலோட்டமா ஒரு  பார்வை பார்த்தாத் தான் மனசுக்குத் திருப்தி.   அப்பவே அந்த இதழ்லே என்னன்ன இருக்குன்னு மனசுக்கு மனப்பாடம் ஆகி விடும் . குமுதம்ன்னா அப்படியொரு கிரேஸ்.
 
அதனாலோ  என்னவோ எங்கள் கையெழுத்துப் பிரதியும் கிட்டத்தட்ட
குமுதம் சாயலிலேயே உருவானது.   'புரட்சி' என்ற பத்திரிகையின் பெயரைக் கூட முகப்பு அட்டையில் அச்சு அசலாக 'குமுதம்' மாதிரியே எழுதி சந்தோஷப்பட்டோம்.

(வளரும்)


===============================================================================================


இவரை அறிவீர்கள்தானே?


"நடுத்தர உயரம், ஒல்லியான உடல், கருத்த மேனி, கழுத்து வரை பொத்தான் போட்ட கோட்டு, அங்கவஸ்திரம், பஞ்சகச்சம், தலையில் குல்லா, காலில் கட் ஷூ, கையில் தடி, நெற்றியில் எப்போதும் திருமண், வாய் நிறைய வெற்றிலை (பெரிய வாய்) புகையிலை, தினமும் தங்கபஸ்பம் சாப்பிடுவார் இளமையோடிருக்க..."


யார் அவர்?  


வடுவூரார்தான்!   கைநிறைய சம்பாதித்து கவலையற்றிருந்த இந்த உல்லாச மனிதர்  வீட்டுக்கு அந்நாளைய பிரபலங்கள் ஜே ஆர் ரங்கராஜு, ஆரணியார், பம்மல் சம்பந்த முதலியார், வை மு கோ, எஸ் எஸ் வாசன் ஆகியோர் வந்து போவாராம்.



மைனர் ராஜாமணி என்கிற இவர் நாவல் திரைபபடமாக வந்ததும் ஒரு சாராரை இழிவுபடுத்துவதாக வழக்கு தொடரப்பட்டு நிறுத்தப்பட்ட அதிர்ச்சியில் ரத்தக்கொதிப்பு வந்து மாண்ட இவர் காலம் 1880-1942.  இவர் எழுதிய மேனகா நாவல் படமாக்கப்பட்டபோது அதில்தான் பாரதியாரின் பாடல்கள் முதன்முதலில் ஒலித்ததாம்.


இவர் சமகால எழுத்தாளரான ஜே ஆர் ரெங்கராஜு இரண்டு வருடங்களுக்கு ஒரு பரபரப்பான துப்பறியும்  நாவல் எழுதி வெளியிட்டு வந்தாராம்.  இவர் எழுதிய வரதராஜன் என்கிற தொடர் புத்தகம் இலக்கியத் திருட்டு என்று வழக்கு தொடரப்பட்டு தடைசெய்யப்பட்டதோடு 1000 ரூபாய் அபராதம் ஆறு மாதம் ஜெயில் தண்டனை என்று தீர்ப்பாகி,  ஜெயிலிலிருந்து வந்ததும் எழுதுவதை நிறுத்தி விட்டாராம் ரெங்கராஜு.  வடுவூரார் வைஷ்னவர் என்றால், ரங்கராஜு வைஷண நாயுடு என்கிறார் கநாசு.


வடுவூரார் பெரும்பாலும் அயல்நாட்டுக் கதைகளை காப்பியடித்துதான் எழுதி இருக்கிறார்.  சரித்திரக் கதைக்கு முன்னோடி கல்கி என்று சொல்வோர் உண்டு.  வடுவூரார் அவருக்கும் முன்னோடி.  1924 லிலேயே விலாசவதி என்கிற சரித்திர நாவலை எழுதி இருக்கிறார்.  அது மூன்று ஆண்டுகளில் ஐந்து பதிப்புகள் வெளிவந்ததாம்.  



எகிப்தில் தலைமுறை தலைமுறையாக அரசாண்ட ஃபாரோக்கள் என்கிற பெயருடன் அரசாண்ட மன்னர்கள் தென்னாட்டிலிருந்து அங்கு (மிஸிர தேசம்!) சென்ற வடகலை அய்யங்கார்கள்தான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த வடுவூரார் அது சம்பந்தமாக Long Missing Link என்கிற 900 பக்க நூல் எழுதி, தானே வெளியிட்டு புத்தகம் விற்காமல் போன நஷ்டத்தில் மெரினா பீச் சாலையில் (பைகிராப்ட்ஸ் ரோட்) வாங்கியிருந்த வீட்டை விற்றுவிட்டு கிராமத்துக்குப் போய்விட்டார் என்கிறார் கநாசு.  அந்தப் புத்தகம் கூட அவரிடம் இருந்ததாம்.  இந்தப் புத்தகம் எல்லாம் இப்போது நமக்குத் படிக்கக் கிடைப்பதில்லை.  அதுவும் இந்தப் புத்தகம் கிடைத்தால் சுவாரஸ்யமாகப் அப்பிடிக்கலாம்.  சொல்லப் போனால் திகம்பர சாமியாரே கிடைக்கவில்லை! வடுவூரார் படம் கூட பகிரக் கிடைக்கவில்லை!


இணையத்தில் சிலிகான் ஷெல்ப், டோண்டு உட்பட அனைவரும் இந்த விவரங்களையே மறுபடி மறுபடி தொகுத்து எழுதி இருக்கிறார்கள்.

========================================================================================================


அந்தக் கால ஆனந்த விகடன்!  1967 ம் வருடம்.  அதன் அட்டைப்பட ஜோக்.





இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இலக்கியப்பக்கம் என்றே வந்த ஆனந்த விகடன்.

அட்டைப்படச் சான்று இல்லாவிட்டால் கல்கி என்றே எண்ணத் தோன்றியிருக்கும்!

மாணவப் பத்திரிகையாளர் திட்டம் எவ்வளவு பழசு பாருங்கள்....  இப்போது இந்த மாணவர்கள் எல்லாம் எங்கிருப்பார்கள்?!

இரண்டு ஸ்ரீதர் ஜோக்ஸ்....




கோபுலுவின் விளம்பர ஐடியாக்கள்!


182 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  2. ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! எம்புட்டு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமான பதிவு! படிச்சுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் நீளமான பதிவுதான்.  அடுத்த வாரம் குறைத்து விடுகிறேன் என்று பதிவிலும் வாக்கு கொடுத்திருக்கிறேன்!!

      நீக்கு
    2. கீதாக்கா ஹா ஹா ஹா...பரவால்லக்கா மெதுவா ஒவ்வொரு பார்ட்டா வாசிச்சுக் கருத்து போடுங்க. பாவம் ஸ்ரீராம் அவர் சொல்ல நினைப்பதைச் சொல்லிவிட்டுப் போகட்டும்....பந்திக்கு முந்திக்கணும் என்பது போல!!

      நான் இப்படித்தான் பல கதைகளைப் பெரிசு பெரிசு என்று ஒதுக்கி வைத்து வெளியிடாமல் வைத்திருக்க அதே போல அல்லது அதை ஒத்த கதைகள் வந்துவிடுகின்றன....பதிவும் கூட முன்ன அப்படி ஆச்சு!!!!!!

      கீதா

      நீக்கு
    3. பதில்களின் வெள்ளத்தில் ஜீவி ஸாரின் கட்டுரை முக்கியத்துவம் இழந்துவிடக்கூடாது என்கிற கவலையும் இருக்கிறது எனக்கு.

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இன்றிலிருந்து அடுத்த நான்கு நாட்கள் கடினமான ஒன்று என நேற்றில் இருந்து எச்சரிக்கை வந்து கொண்டே இருக்கிறது. அனைவரின் நலனுக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா அக்கா...   வாங்க..  இணைந்து பிரார்த்திப்போம்.  கொரோனா போதாது என்று கறுப்புப் பூஞ்சை வேறு மிரட்டுகிறது.  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
    2. இன்றிலிருந்து அடுத்த நான்கு நாட்கள் கடினமான ஒன்று என நேற்றில் இருந்து எச்சரிக்கை வந்து கொண்டே இருக்கிறது.// எங்கிருந்து வருகிறது?

      நீக்கு
    3. நானும் கேள்விப்படலையே எங்கிருந்து?!!!!

      ஆனால் இங்கு இன்றிலிருந்து காலையிலேயே லாக்டவுன். மூன்று நாட்கள் என்று தெரிந்தது.

      கீதா

      நீக்கு
    4. ஆமாம்..  எங்கிருந்து?  பயங்கர சஸ்பென்ஸ் வச்சுட்டு காணாமப் போயிட்டாரே கீதா அக்கா.

      நீக்கு
    5. அதிகாரபூர்வமான செய்தி என வாட்சப்பில் யாரேனும் ஒருத்தர் அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னொரு முறை வரும்போது யாருக்கானும் ஃபார்வர்ட் பண்ணுகிறேன்.

      நீக்கு
    6. வாட்ஸாப்பில் வருவதை நான் பெரும்பாலும் படிப்ப்பதே கூட இல்லை.

      நீக்கு
    7. இனிமே யோசிச்சு அனுப்பறேன். இஃகி, இஃகி, இஃகி! :))))))

      நீக்கு
  4. உங்களை போலத்தான் நானும். விதியில் நம்பிக்கை உண்டு. அதே போன்று பிள்ளையார் என் இஷ்ட தெய்வம்.பழவங்காடி பிள்ளையார் ரொம்ப பிரசித்தம். தேங்காய் சிதறு காய் உடைத்தால் எல்லாம் நேராகும் என்ற நம்பிக்கை. ஆனால் தற்போது எல்லாம் மறந்து விதியே என்று தான் இருக்க வேண்டியிருக்கிறது. உங்களை போல் எத்தனை தேங்காய் பாக்கி இருக்கிறது என்று தெரியவில்லை. மறந்து விட்டேன்.
     
    புரியாத வேண்டுதல் என்று ஒன்று இல்லை. கடவுளுக்கு எல்லாம் தெரியும். Man proposes God disposes  தான். 

    கடவுளுக்கு உருவம் படைத்தது ராஜா ரவிவர்மாவும் கொண்டைய ராஜுவும் என்று நான் நினைக்கிறேன். இவர்கள் வரைந்த படங்கள் தான் வீடுகளில் அதிகம்  காணப்படும்.

    நீள(ல)க்கடற்கரையில் தனிமை கவிதைக்கு வெங்கட் வர்களின் புகைப்படம் சேர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். 

    வடுவூரார் நாவல்கள் ரமணிச்சந்திரன் தளத்தில் இலவசமாக கிடைத்ததாக நம்புகிறேன். ஒன்றிரண்டு நாவல்கள் நானும் தரவிறக்கம்  செய்தேன். 

    8-12-57 இல் நீங்கள் பிறந்திருக்க மாட்டீர்கள். அப்பாவுடைய கலெக்சன். இரண்டு குடை ஜோக்கும் கவலையை மறக்கும் ஜோக்கும் நினைவில் நிற்கும்.இன்றைய பதிவு கொஞ்சம் நீளம் அதிகம்.  
    என் கமெண்டும் நீளம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழவங்காடி பிள்ளையார் என் ஃபேவரைட். திருவனந்தபுரத்தில் கோட்டைக்குள்ளேதான் வாசம் அப்போது (இப்ப கோட்டை ஏரியாவே மாறியிருக்கிறது!) எம்ஜி ரோடு எல்லாமே..செம ட்ராஃபிக் வேறு) தினமும் காலை மாலை போய்விடுவேன்.

      எல்லா வசதிகளும் உள்ள ஏரியா கோட்டை ஏரியா. சாப்பாடு முதல் கோயில் வரை எல்லாமே நடந்து சென்றே முடித்துவிடலாம்.

      கீதா

      நீக்கு
    2. நீளமான பதிலுக்கு மிக்க நன்றி JC ஸார்.  நம்முடைய அஜாக்கிரதைக்கும் வயதுக்கும் ப்ராயச்சித்தம்தான் தேங்காய் உடைத்தல் போன்ற பிரார்த்தனைகள்!  அதனால் என்ன பயன் விளையும் என்று தெரியவில்லை.
      ராஜா ரவிவரர்மா இதைப் பார்த்து வரைந்திருப்பார்?  பழங்காலக் கோவில்களில் உள்ள சிலா ரூபங்கள் எதை வைத்து உருவாக்கப்பட்டன?!!
      //தனிமை கவிதைக்கு வெங்கட் வர்களின் புகைப்படம்??

      நல்ல ரசனை.  நல்ல யோசனை.  சேர்த்திருக்கலாம்!
      9-12-57 அன்று நான் பிறக்கவில்லை!  அப்பாவுடைய கலெக்ஷன் அலலது அப்பாவின் சகோதரி, என் அத்தையின் கலெக்ஷன்!  ஏனென்றால் அட்டையில் எழுதி இருக்கும் எழுத்து அவருடையது!

      நன்றி JC ஸார்.

      நீக்கு
    3. உங்கள் பிறந்த ஊர் நாகர்கோவில் என்று நினைத்திருந்தேன். தற்போது பழவங்காடி பிள்ளையார் கோவிலில் தமிழ்நாடு பாணியில் இருந்த கோபுரத்தை இடித்து விட்டு கேரளா குருவாயூர் பாணியில் கோபுரம் கட்டியிருக்கிறார்கள். அது அவ்வளவாக பொருந்தவில்லை, 
      Jayakumar

      நீக்கு
    4. நான் பிறந்த ஊர் நாகர்கோவில்தான் ஜேகே அண்ணா. ஆனால் திருவனந்தபுரத்தில்தான் உறவுகள். நாகர்கோவில் திருவனந்தபுரம், கொச்சி பந்தம் கூடுதல். என் அப்பாவின் அப்பா திருவனந்தபுரத்தில் புத்தன் தெருவில்தான் இருந்தாராம் முதலில் ..என்னைப் பார்த்தே அவரின் பேத்தியா என்று கேட்பார்கள்.

      திருமணத்திற்குப் பிறகு திருவனந்தபுரத்தில் தான் முதல் 8 வருடங்கள்...கணவர் சென்னை ஆனால் தும்பா ராக்கெட்டில் பணி அப்போது..

      ஆமாம் பழவங்காடி கோயிலின் கோபுரம் மாறியிருக்கிறது.

      கீதா

      நீக்கு
    5. அல்ல்ல்ல்லோ //திருவனந்தபுரத்தில் புத்தன் தெருவில்தான்// - அது எங்க தெரு (2ம், 3ம் புத்தன் தெரு ஹாஹா)

      நீக்கு
    6. புத்தன் தெருவில்தான் என் அண்ணியின் உறவினர்களும் இருந்தார்கள்.

      நீக்கு
  5. எல்லாம் நன்றாக இருக்கின்றன. உங்கள் "தனிமை"க் கவிதை மனதைக் கொஞ்சம் அச்சுறுத்தத் தான் செய்தது. ஆ.வி.ஜோக்குகள், ஶ்ரீதர் ஜோக்குகள் அரைகுறை நினைவில். கோபுலுவின் விளம்பர யுக்தியும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்கள் "தனிமை"க் கவிதை மனதைக் கொஞ்சம் அச்சுறுத்தத் தான் செய்தது./

      ஆனால் இதை நான் கொரோனாவை வைத்து எழுதவில்லை!

      நீக்கு
    2. ஹிஹிஹி, சொல்லி இருக்கேனா, தெரியலை. கோபுலுவோட விளம்பரக் கம்பெனிக்கு எனக்கு ரொம்ப நெருங்கியவர் வேலை செய்தார். பின்னால் அவர் பேத்தியை (ஒண்ணுவிட்ட) என் தம்பி பிள்ளைக்குப் பார்த்தாங்க. ஆனால் பெண்ணின் பெரியப்பா ஒத்துக்கலை. பையருக்குச் சம்பளம் குறைச்சல்னு சொல்லிட்டார். சுமார் 80,000/- மாசத்துக்கு வாங்கிட்டு இருந்தார் தம்பி பையர். அது போதாதுனு சொல்லிட்டார். :(

      நீக்கு
    3. அப்படியா...    இன்னும் இன்னும்  எதிர்பார்த்தாங்க போல!

      நீக்கு
  6. ஜீவி சாரின் இந்தக் கட்டுரையும் படிச்சாப்போல் நினைவு. வேண்டுதல்கள் என நான் எதையும் ரொம்ப வைச்சுக்கறது இல்லை. அதிகம் போனால் கொழுக்கட்டை போடறேன் என்பதே! ஏனெனில் என்னால் அது தான் செய்ய முடியும். இல்லைனால் சுந்தரகாண்டம் படிப்பேன். அதுவும் ஓர் வேண்டுதலுக்காக. மற்றபடி பெரிய அளவில் வேண்டுதல்கள் எல்லாம் செய்துக்கறதே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு மட்டும் இப்போ பதில். மற்றவைகளுக்கு அப்புறம்! ஜீவி ஸார் இப்போது புதிதாக எழுதி அனுப்பி இருக்கும் கட்டுரை இது. விஷயங்கள் நமக்குத் தெரிந்தவையும் அதிலிருந்தால் அப்படித் தோன்றலாம்.

      நீக்கு
    2. கொழுக்கட்டை நல்ல வேண்டுதலாயிருக்கிறதே...   அருகிலிருப்போருக்கும் லாபம்.  ஆனால் நான் அப்படி எல்லாம் வேண்டிக்கொள்ள மாட்டேன்.  கொழுக்கட்டையைக் கொண்டுபோய்ப் பிலாலியாரிடம் வைத்ததும், அவர் கோபித்துக் கொண்டு "கொழுக்கட்டை என்று சொன்னாயே, எங்கே?" என்று கேட்டால் என்ன செய்ய!

      நீக்கு
    3. கீசா மேடம், 'கொழுக்கட்டை' என்று வேண்டுதல் பண்ணுவேன் என்று சொல்லியிருக்காரேயொழிய எத்தனை என்று சொல்லவில்லை. அதனால், முடியலைனு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு பண்ணியிருந்தால், அருகிலிருப்பவருக்கு என்ன லாபம்?

      நீக்கு
    4. // "கொழுக்கட்டை என்று சொன்னாயே, எங்கே?"// - அப்படி எதுவும் கேட்கமாட்டார். பிள்ளையார்பட்டி, திருச்சி மலைக்கோட்டையில் செய்யும் கொழுக்கட்டைக்கும், கீசா மேடம், நீங்க நினைக்கும் கொழுக்கட்டைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள தூரம்...ஹாஹா இதுல சில கோவில்ல லட்டு என்று ஒரு லட்டு செய்வாங்க, ஆனால் அது பாத்திரத்தில் மொத்தமா பூந்தியைப் போட்டால் அதற்குப் பேர் லட்டு என்று நினைத்துக்கொள்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரையில் லட்டு என்றால் உருண்டையாக இருக்க வேண்டாமோ?

      நீக்கு
    5. நான் போடுவது தேங்காய்ப் பூரணம், உளுத்தம்பூரணம் வைத்த கொழுக்கட்டை தான். ஒரு ஆழாக்கு அரிசி (சுமார் 250 கிராம்) நனைப்பேன். ஒரு தேங்காய் மூடி தேங்காய்+வெல்லம் பூரணத்துக்கு. 100 கிராமுக்குக் கொஞ்சம் குறைவாக உளுந்து+இரண்டு தேக்கரண்டி து.பருப்பு+இரண்டு தேக்கரண்டி க.பருப்பு. எங்க வீடுகளில் ஸ்ராத்தம் தவிர்த்த மற்ற நாட்களில் தனி உளுந்து நனைச்சு எதுவும் பண்ண மாட்டோம். கொழுக்கட்டை ஊரெல்லாம் விநியோகம் செய்யும்படி வந்துடும்.

      நீக்கு
    6. நெல்லை நீங்கள் சொல்வது முக்குறுணி விநாயகருக்கு படைக்கும் அல்லது மலைக்கோட்டைப் பிள்ளையாருக்குப் படைக்கும் கொழுக்கட்டை போல சைஸ்னா..  அம்மாடி...   ஒண்ணு போதும் எனக்கு!   ஹிஹிஹிஹி...

      நீக்கு
    7. // கொழுக்கட்டை ஊரெல்லாம் விநியோகம் செய்யும்படி வந்துடும். //

      அடுத்தமுறை சென்னைக்கும் விநியோகம் பண்ணுவீங்கன்னு நம்பறேன்!

      நீக்கு
    8. ஹாஹாஹா, ஊசிப் போய்விடாதோ?

      நீக்கு
  7. காலை எழுந்ததும் பிரம்ம முஹூர்த்தத்தில் விளக்கேற்றுவது ரொம்பவே நல்லது. நான் நினைவு தெரிஞ்சதில் இருந்து அம்மா விளக்கேற்றுவதையும் பார்த்திருக்கேன். நான் கல்யாணம் ஆகி வந்ததில் இருந்து தினமும் விளக்கு ஏற்றிப் பால் நிவேதனம் செய்துட்டுத் தான் பால் காய்ச்சுவதே. காய்ச்சிய பால் எனில் சர்க்கரை போட வேண்டும். ஆகவே பச்சைப்பாலையே தினமும் இருவேளையும் சுவாமிக்குக் காட்டுவேன். பல் தேய்த்து, விளக்கேற்றியதும் காஃபிக்கு டிகாக்‌ஷன் போட அடுப்பை மூட்டும் வேலையே! கஞ்சியும் பின்னர் தான். முதல்லே உம்மாச்சிக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...   பாஸ் விவரமாத்தான் செய்கிறார் போல...   காய்ச்சிய பாலில் சர்க்கரை போட்டுதான் அம்சி செய்வது!

      நீக்கு
    2. ஆமாம், காய்ச்சிய பாலில் கொஞ்சமானும் சர்க்கரை சேர்க்கணும். குஜராத்தில் கிருஷ்ணனுக்கு அதுவும் துவாரகையில் காலை முதல் முதல் நிவேதனத்துக்கு வெண்ணெயில் சர்க்கரையைப் போட்டுக் கலந்து ஏலக்காய், பச்சைக்கற்பூரம் போட்டு நிவேதனம் செய்து காலை முதலில் அதான் நிவேதனம். கொடுப்பாங்க எல்லோருக்கும். அவ்வளவு ருசி! கிருஷ்ணர் தங்கத்தால் ஆன பல் தேய்க்கும் பிரஷில் தான் பல் தேய்ப்பார். :)

      நீக்கு
    3. பற்பசை என்னனு தெரியலை. மறந்துட்டேனே! ம்ம்ம்ம்ம்ம்? கேட்டுச் சொல்றேன்.

      நீக்கு
  8. நமக்கு என்ன வேண்டுமோ, என்ன தரணுமோ அதைக் கடவுள் மறக்காமல் கொடுத்துடுவார் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு. கூடவோ குறையவோ செய்யாது. அதோடு கஷ்டங்களையும் கர்மவினை என ஏற்றுக்கொள்ளும் சுபாவமும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அப்படி நினைத்துக் கொள்வேன்.  ஆனாலும் அல்ப மனித மனம் சமயங்களில் வேண்டுதல்களை வைத்த காலம் உண்டே...

      நீக்கு
    2. முன்னாடி எல்லாம் கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்த காலங்களில் பிரதக்ஷிணம் செய்ய நேர்ந்துப்பேன். அதுக்கு மேல் பணம் செலவழித்துச் செய்யும் பிரார்த்தனைகளுக்கு நான் மற்றவர்களை எதிர்பார்க்கணும் என்பதால் அதெல்லாம் கிடையாதுனு உம்மாச்சிட்டே அடிச்சுச் சொல்லிடுவேன். அவரும் சரினுடுவார்.

      நீக்கு
    3. பாருங்க...நீங்க பிரதக்ஷணம் பண்ணுவீங்க, உங்க கிட்டே இருந்து உம்மாச்சிக்குக் கிடைப்பது அடி ஒண்ணுதான் போலிருக்கு..

      நீக்கு
    4. ஆமாம், நெல்லையாரே, சண்டை எல்லாமும் போடுவேன். திட்டுவேன்! பேசாமல் இருப்பேன்! எல்லாமும் உண்டு. அவரிடம் தான் நம்ம கோபத்தைக் காட்ட முடியும். :)

      நீக்கு
    5. முரட்டு பக்தியா இருக்கே...!

      நீக்கு
  9. மதுரையில் தெற்காவணி மூலவீதியில் ஓர் பெருமாள் கோயில் மண்டபத்தில் ஓர் தாத்தா நூலகம் வைச்சிருந்தார். அருமையான புத்தகங்கள் இருந்தன. அவருடைய நூலகமும், என் அம்மாவின் அப்பா (தாத்தா) வைத்திருந்த புத்தகச் சேமிப்புக்களும் தான் நான் அதிகம் படித்தவை. அங்கே ஆனந்தரங்கம் பிள்ளை டயரியில் இருந்து வடுவூரார், ஆரணி குப்புசாமி முதலியார், ஜே.ஆர். ரங்கராஜூ, வை.மு.கோ, பிரதாப முதலியார் சரித்திரம் என்று பழையதும்/கல்கியின் நாவல்கள், தேவனின் நாவல்கள்/கொத்தமங்கலம் சுப்பு எனப் புதுமையும்(அப்போதைய நாட்களில்) கலந்து படிச்சிருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது இந்த பின்னூட்டம் (இந்த வார்த்தையை முதலில் மாற்றவேண்டும்) படிப்பதற்கு சுவாரஸ்யம். வடுவூர் துரைசாமி ஐயங்கார் பற்றி ஒரு கட்டுரை எனது மின்னூலுக்காக தயார் செய்திருக்கிறேன் சில நாட்கள் முன்பு. 1920-களில் துப்பறியும் நாவல்களை எழுதி வாசக உலகைக் கலக்கிய ஆளுமை. ஜாலியான ஆசாமி! முடிந்தால் பிறகு வலைப்பக்கத்தில் எழுதுவேன்..

      நீக்கு
    2. அந்தக் காலத்து நூலகம் என்றாலே அதற்கும் பழைய புத்தகங்கள்தான் இருந்திருக்கும்.  பொக்கிஷங்கள்தான்.  கவனிப்பாரற்ற நூலகம் எதையாவது கொள்ளை அடிக்கலாமா என்கிற உத்தேசம் வருகிறதே...!  ஆனால், யாருக்காக?!

      நீக்கு
    3. அடடே...   வரப்போகும் மின்னூலுக்கு வாழ்த்துகள் ஏகாந்தன் சார்.

      நீக்கு
    4. @ஏகாந்தன், இந்தப் புத்தகங்கள் பற்றிப் பேசப்போனால் நிறைய இருக்கு பேசவும் எழுதவும்.அந்தக் காலத்து விநோத ரசமஞ்சரி கலெக்‌ஷன் தாத்தாவிடம் இருந்தது. நான் கல்யாணம் ஆகிப் போனப்போவே சில புத்தகங்களை எடுத்துட்டுப் போயிருக்கணும். மாமா வீடு சொந்த வீடுதானே! புத்தகங்கள் அலமாரியில் தானே இருக்குனு வரச்சே போகிறச்சே பார்த்துக்கலாம்னு இருந்துட்டேன். கல்யாணம் ஆகிப் போனப்புறமா தாத்தா வீட்டுக்குப் போனதே ஓரிரு முறைதான். அதுவும் அவசரத்தில்! புத்தகங்கள் நினைவிலேயே இல்லை. அப்படி ஒரு வாழ்க்கை! சில வருடங்களில் மாமாக்கள் மதுரையை விட்டே சென்னை வந்துவிடப் புத்தகங்கள் மதுரை விக்டோரியா எட்வர்ட் ஹால் நூலகத்திற்கு தானமாகக் கொடுக்கப்பட்டன. தாத்தா அங்கே உறுப்பினர். மதுரையின் வக்கீல்கள் சங்கம்னு அதைச் சொல்லலாம். மாலையில் அது தான் ஆங்கிலப் படம் போடப்படும் ரீகல் டாக்கீஸ். பகலில் நூலகம். டவுன்ஹால் ரோடு கடைசியில் இருக்கும்/இருந்தது/ இப்போ இருக்கா? தெரியாது! டவுன்ஹால் ரோட் பக்கம் போயே வருஷங்கள் ஆகின்றன.

      நீக்கு
    5. ரீகல் தியேட்டரில் படமே பார்த்திருக்கேன்.  இப்போதும் இருக்கிறதா என்று எனக்கும் தெரியவில்லை.

      நீக்கு
    6. //உங்களது இந்த பின்னூட்டம் (இந்த வார்த்தையை முதலில் மாற்றவேண்டும்)// நான் எப்போவோ கருத்துரை என மாற்றி விட்டேன் ஏகாந்தன்.

      நீக்கு
    7. நான்86ல் ரீகல் தியேடரில் படம் பார்த்தேன் என்று நினைவு. ரொம்ப பழையகால லுக் இருக்கும்.

      நீக்கு
    8. வாழ்த்துக்கு நன்றி ஸ்ரீராம். ரொம்ப நாளாகத் தயாராகிவருகிறது..மௌனியைப் போல படிப்பதும், அடிப்பதுமாக இருக்கிறேன். ஒருவழியாகக் கொண்டுவரப் பார்க்கிறேன்..

      நீக்கு
    9. முயற்சி சீக்கிரம் திருவினையாக வாழ்த்துகள் சார்.

      நீக்கு
  10. சித்ரலேகா படங்களுடன் வந்த சிலம்புச் செல்வம்/கி.வா.ஜ. கட்டுரைகள், நாரண.துரைக்கண்ணனின் இலக்கியக் கட்டுரைகள் என நிறையவே ஆனந்த விகடனில் வந்தப்போப் படிச்சிருக்கேன். அப்போதெல்லாம் குமுதம் படிக்க அனுமதியே கிடைக்காது. ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், அமுதசுரபி, மஞ்சரி ஆகியவையே அதிகம் படித்தவை. தாத்தா வீட்டுக்குப் போனாலோ, பெரியப்பா வீட்டுக்குப் போனாலோ அடித்துப் பிடித்துக் கொண்டு குமுதம் படிப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குமுதம் பற்றிய அபிப்ராயங்கள் ஜீவி சார் கட்டுரையினால் மாறலாம்.  தொடர்ந்து படியுங்கள்.

      நீக்கு
    2. ஶ்ரீராம், குமுதம் பற்றி நான் சொல்லி இருப்பது என் சொந்த அபிப்பிராயம் ஏதும் இல்லை. எங்க வீட்டில் அனுமதிக்க மாட்டாங்க. பின்னால் கல்யாணம் ஆகி முதல் பிரசவத்துக்கு மதுரை வந்தப்போ நானே குமுதம் வாங்கி இருக்கேன். அப்பாவும் படிச்சிருக்கார். அப்போ ஒண்ணும் சொல்லலை. கல்யாணம் ஆகிப் போகும் வரை குமுதம் படிக்கமுடியாது/படிக்கக் கூடாது. சொல்லப் போனால் படிப்பது தெரிந்தால் அடி நொறுக்கிவிடுவார் அப்பா! :)))))

      நீக்கு
    3. //அப்போ ஒண்ணும் சொல்லலை. கல்யாணம் ஆகிப் போகும் வரை குமுதம் படிக்கமுடியாது/படிக்கக் கூடாது. சொல்லப் போனால் படிப்பது தெரிந்தால் அடி நொறுக்கிவிடுவார்//

      திருமணம் ஆகிறவரை, பெண்ணிற்குப் பொறுப்பு தந்தை. கல்யாணம் பண்ணித் தந்தாகிவிட்டால் மாப்பிள்ளை பாடு, பெண் பாடு. அவருக்கு அந்தப் பொறுப்பு இல்லை இல்லையா?

      நீக்கு
  11. ஜீவி சார் சொல்லி இருக்கிறாப்போல் கையெழுத்துப் பிரதிகளெல்லாம் அந்நாட்களில் நான் அதிகம் பார்த்தது இல்லை. லென்டிங் லைப்ரரி என்னும் அறிமுகமே கல்யாணம் ஆகி வந்ததும் தான் வேலைக்குப் போகும் நாட்களில் தெரிய வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளிக் காலங்களில் கே ஜி ஜவர்லால் நாகையில் ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்த, அதைப் பார்த்து என் மூத்த சகோதரர் 'வசந்தம்'  என்று ஒரு கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பிக்க, நான் மட்டும் என்ன, சும்மாவா இருப்பேன் என்று நானும் 'தென்றல்' என்ற பெயரில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தி இருக்கிறேன்.  அந்தக் கால லைப்ரரி அனுபவங்கள் முன்னரே எழுதி இருக்கிறேன்.  நாங்கள் அப்போது தஞ்சையில் இருந்தோம்!

      நீக்கு
    2. நான் சுமார் 20 வயது வரைக்கும் கையெழுத்துப் பிரதி எனக் கேள்விப் படவே இல்லை. அல்லது என் வட்டத்தில் அது தெரிந்திருக்கவில்லை.

      நீக்கு
  12. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
  13. கனம் தரும் அம்பிகையின் விழிகள் அனைவருக்கும் நலம் தரட்டும்.. ஓம் சக்தி..

    பதிலளிநீக்கு
  14. இனிய காலை வணக்கம் அன்பின் ஸ்ரீராம், கீதாமா,மற்றும்
    ஜயக்குமார் சந்த்ர சேகரன்.

    எல்லோரும் பாதுகாப்புடன் இருக்க இறைவன் அருளட்டும்.

    பதிலளிநீக்கு
  15. என் வாழ்க்கை முழுவதும் பிரார்த்தனை தான்.
    மாமியார் சொல்லிச் சொல்லி திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட
    பிரார்த்தனைகளை முக்கால் வாசி (பணம்)செலுத்தி விட்டேன் என்றே
    நம்புகிறேன். அங்கப் பிரதட்சிண பிரார்த்தனை இனிமேல்
    செய்வது கடினம்.

    லஸ் பிள்ளையாருக்குத் தேங்காய் அளவு
    அதிகரிக்கும்:)
    எனக்கும் இது இப்படி என்றால் சிந்தனை உண்டு.
    இப்போது அதெல்லாம் இப்போது தாண்டி வந்தாச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அங்கப் பிரதட்சிண பிரார்த்தனை இனிமேல்
      செய்வது கடினம்.// உங்கள் சார்பில் உங்கள் மகனோ, மருமகளோ செய்யலாம்.

      நீக்கு
    2. லஸ் பிள்ளையார் வேறு, ராஜ் டீவி புகழ் நவசக்தி கணபதி பிள்ளையார் வேறா அம்மா?

      நீக்கு
    3. நம்ம ரங்க்ஸ் எல்லாத்துக்கும் தேங்காய் தான் வேண்டிப்பார். அம்பத்தூரில் இருந்தப்போப் பக்கத்தில் இருந்த பால விநாயகர். இங்கே வந்தப்புறமா ஒரு விநாயகர்! ஊர்களுக்குப் போகும்போதும் தெற்கு கோபுரம் வழியாப் போனால் அந்தப் பிள்ளையாருக்கு டாட்டா காட்டிட்டுப் போவோம்.

      நீக்கு
    4. எந்தப் பிள்ளையாரா இருந்தாலும் அவர் ராமராஜன், ரஜினி மாதிரி உடனே பேமஸ் ஆகி சூப்பர் ஸ்டார் ஆகிவிடுவார்!

      நீக்கு
  16. ஸ்ரீதர் அவர்களின் நகைச்சுவை எப்பொழுதும் போல
    மிக இனிமை.

    சித்திரச் சிலம்பு எழுதியவர் எங்கள் பேராசிரியை
    மறைந்த திருமதி இந்திரா.
    என்ன அழகான சித்திரங்கள். மிக மிக நன்றி
    ஸ்ரீராம்.

    குமுதத்துக்காகக் காத்திருந்த நாட்களும் உண்டு. பக்கத்து வீட்டில் குமுதம் வாங்கினால்
    நாங்கள் விகடன் வாங்குவோம் .இன்னோருவர்
    கல்கி வாங்குவார்.
    வெகு நாட்கள் கழித்துதான் லெண்டிங்க் லைப்ரரி வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சித்திரச் சிலம்பு எழுதியவர் எங்கள் பேராசிரியை
      மறைந்த திருமதி இந்திரா.//

      அடடே...    செய்தி.   எழுத்தாளர் திருமதி எம் ஏ சுசீலா என் பாஸுக்கு தமிழ் எடுத்திருக்கிறார்.  தேனம்மைக்கும் அவர் வகுப்பெடுத்திருக்கார்.  அவருக்கு சுசீலா மேடம் ரொம்ப நெருக்கம்.

      நீக்கு
  17. வடுவூரார் கதைகள் பாட்டிக்காக லைப்ரரியில் இருந்து எடுத்து வந்திருக்கிறேன்.
    பெரிய பெரிய புத்தகங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது படிக்க சுவாரஸ்யமாய் இருந்திருக்கும்.  நான் பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை வாசித்திருக்கிறேன்.  "அகோ வாரும் பிள்ளாய்..." என்று...

      நீக்கு
  18. சற்றே நீண்ட பதிவு என்பதை ஏற்கனவே இரண்டு பேர் சொல்லி விட்டார்கள். மூன்றாவதாக நானும் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. அவரே விளம்பரக் கம்பெனி நடத்தினாரே.கோபுலுவின் விளம்பர ஐடியாக்கள் மிக அருமை
    கோபுலுவின் விளம்பர ஐடியாக்கள் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  20. முதல் பகுதி அட்டகாசம்! ஹைஃபைவ் சொல்லிக் கொள்கிறேன் ஸ்ரீராம். பல கருத்துகள் டிட்டோ செய்யலாம். உங்கள் எழுத்தும் அருமை மிகவும் ரசித்து வாசித்தேன் ஸ்ரீராம்.

    நானும் பேரம் பேசுவதில்லை ஸ்ரீராம். அது போல நம்மை மீறி ஒரு மாபெரும் சக்தி பிரபஞ்ச சக்தி இருக்கிறது இந்த உலகையே இயக்கும் சக்தி. அப்படித்தான் நான் நினைப்பது. ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல உருவம் கொடுத்தால் - எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் எனும் போது அவரைப் பார்த்தது இல்லை என்றால் அவருக்குள்ளும் சக்தி இருக்கிறது என்று ஒரு சக்தியாக நினைக்க முடியுமோ ?!!!! ஹிஹிஹிஹி!!!- ஸ்ரீராம் இப்படி இருப்பார் என்று பார்த்ததினால் வரும் உருவம் தானே இப்போது ஸ்ரீராம் என்றாலே எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் உருவம் வந்துவிடுகிறது!! அப்படித்தான் இறைவடிவங்கள்! இது சும்மா நான் நினைப்பது..ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   எங்கே......யோ போயிட்டீங்க கீதா!

      நீக்கு
    2. //நானும் பேரம் பேசுவதில்லை ஸ்ரீராம்// - அதை ஏன் பேரம்னு மலிவா நினைக்கறீங்க? எனக்கு இதைச் செய், அதற்குப் பதிலாக நான் இந்த அபராதத்தை ஏற்றுக்கொள்கிறேன் என்பதுபோல நினைச்சுக்கோங்க.

      சாதாரண ஜனங்களுக்கு இறை சக்தியிடம் மனதை ஒருமுகப்படுத்த ஒரு உருவம் தேவையாக இருக்கிறது. ஆனால் இறைவன் ஒருவனே. எதையாவது சாக்காக வைத்து மனது இறைவனிடம் செல்லவேண்டும் என்பதால் பல உருவங்கள். ஸ்ரீராமுக்கு முருகன், இன்னொருவருக்கு ஹனுமான், ரஞ்சனி நாராயணன் மேடத்தின் சகோதரிக்கு நம்பெருமாள், இன்னொருவருக்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் என்பது போல.

      நீக்கு
    3. அதே நெல்லை!!!! பேரம் என்பது சும்மா நாம் பேச்சு வழக்கில் வீட்டில் சொல்லிக் கொள்வதுண்டு. இறைவனிடம் எதையும் கேட்கக் கூடாது என்பதுதான் பாடம் வீட்டில். பிரபந்தம் சொல்லிக் கொடுத்த எங்கள் ஆசிரியர் உங்கள் பெரியப்பாவும் அதைத்தான் சொல்லிக் கொடுத்தார்.

      இறைவனை இறைவனுக்காகத் தொழுவது! அதுதான் நான் கற்றது.

      கீதா

      நீக்கு
  21. உங்கள் தனிமைக் கவிதை தீட்டும் ஓவியம் திகில் தான். எல்லாம் சரியாக இருக்கப்
    பிரார்த்தனைகள்.ஜீவி சாரின் பக்கம் தனியே படிக்க வேண்டும்.
    கையெழுத்துப் பிரதி பற்றி முன்பே வாசித்திருப்பது போல
    நினைவு. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஷயம் பரிச்சயமானது.  கட்டுரை புதுசு அம்மா.

      நீக்கு
  22. //எதிரில் ஒரு சைக்கிள் வந்து கொண்டிருக்கிறது என்றும் வைத்துக் கொள்வோம். இடையில் ஒரு மரம் தெரிகிறது. என் மனதுக்குள் ஒரு எண்ணம் ஓடும். "அந்த மரத்தை நான் அடைவதற்குள் சைக்கிள் என்னைத் தாண்டாமலிருந்தால்..."// அட! எனக்கும் இப்படிப்பட்ட எண்ணங்கள் உண்டு. சிலது பதிந்திருக்கிறது, பலது பொய்த்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...   ஆம், சிலதுதான் நடக்கும் - நம்மைக் குழப்ப!

      நீக்கு
  23. எஸ் நடப்பதுதான் நடக்கும்! நம் வேண்டுதல் பிரார்த்தனைகளும், நமக்கு நடக்க வேண்டும் என்ற விதி இருந்தால் இரண்டும் இணையும் புள்ளியில் அது நிறைவேறுகிறது. நாம் நினைக்கிறோம் வேண்டிக் கொண்டதால் என்று. அப்படி இல்லை என்பதே என் புரிதல். நடப்பதுதான் நடக்கும். அதைக் கடந்து செல்ல அந்த நம்பிக்கை என்ற பிரார்த்தனை நமக்கு கண்டிப்பாக உதவுகிறது.

    இது மனித இயல்பு. வேண்டிக் கொள்வது....எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் எனும் விரக்தி நிலை...பற்றிக் கொள்ளத் துடிக்கும் மனது.

    மற்றொன்று நம் மனதில் பல வழிகள் தோன்றும் தான் பிரச்சனைக்குத் தீர்வுகள்...ஆனால் நாம் எந்த வழியைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் இருக்கு.

    எல்லாமே நீதான் என்று விடும் போது மனம் நம்பிக்கையில் பயணிக்கிறது. மனித இயல்பு.

    நடப்பதுதான் நடக்கும் என்று மனதை திடமாக வைத்துக் கொள்பவர்கள் மனதை சஞ்சலப்படாமல், அமைதியாக வைத்துக் கொள்பவர்கள் கண்டிப்பாக ஞானி நிலைக்கு அருகில் வருவதாகத் தோன்றும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் இந்த மாதிரி விஷயங்களில் எல்லா திசைகளிலும் யோசித்து வைத்து விடுகிறோம் இல்லை? - அரசியல்வாதி பிரசங்கங்கள் மாதிரி!

      நீக்கு
  24. ஸ்ரீராம் கவிதை அட்டகாசம்! ஹைஃபைவ்...ஆனால் எனக்குக் கவிதையாக வரலை மனதில்.. நேற்று கூட நான் பிரார்த்தனையில் ஒரு கேள்வி கேட்டேன் பிரபஞ்ச சக்தியிடம், எத்தனாவது நம்பர் க்யூவில் என் பிரார்த்தனை? எப்ப பரிசீலனைக்கு வரும்? வேற ஒன்றுமில்லை உலகம் இப்படி இந்த மாயாவியிடம் சிக்கித் தவிக்கிறதே அதுவும் இப்ப எங்க நாடு....இது எப்ப தீர்ப்பாய் என்று.....இன்னும் கேள்விகள் வைத்தேன்...

    மனதில் தோன்றிய எண்ணம்..இப்படி எத்தனைப் பேர் இறைஞ்சுகிறார்கள் ஒரே வேண்டுதல்...மாஸ் அப்ளிக்கேஷன் - சமூகத்திற்கான பொதுநல வழக்கு!! ஸோ எல்லாத்தையும் ஒரே டைம்ல பரிசீலிக்கலாமே...ஏனப்பா கேஸ் அட்ஜோர்ண்டா? அடுத்த தேதி என்ன? இப்படி பல கேள்விகள்!!! ஹா ஹா ஹா இன்று உங்கள் கவிதை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  நீங்கள் சொல்லி இருப்பதையும் கவிதையாக்கலாம்!

      நீக்கு
  25. தனிமைக் கவிதை அச்சுறுத்துகிறது.

    ஸ்ரீதர் ஜோக்ஸ் கிச்சு கிச்சு மூட்டுகின்றன.

    கோபுலுவின் விளம்பர ஐடியாக்களில் ஒன்றைப் பார்க்கும் பொழுது கிரிக்கெட் வீரர்கள் நினைவுக்கு வந்தார்கள்.

    சற்றே பருமனான பெண்கள் முதுகு திறந்திருக்கும் படி ரவிக்கை அணிந்திருப்பதை பார்த்தால், அதை புகைப்படம் எடுத்து,'இங்கே நோட்டீஸ் ஒட்டக் கூடாது' என்ற கேப்ஷனோடு பகிரத் தோன்றும். ஒரு முறை அப்படி செய்தும் இருக்கிறேன்;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. பயமாய்த்தான் இருக்கிறது இன்றைய உலகின், இந்தியாவின், தமிழகத்தின் நிலைமை...   ஆனால் தனிமைக்கு கவிதை வேறொரு சூழலைப் படித்தபோது தோன்றியது!

      //ஒரு முறை அப்படி செய்தும் இருக்கிறேன்;)//

      :>))

      நீக்கு
  26. ஜீ.வி. சாரின் கட்டுரைத் தொடர் சுவாரஸ்யமாக தொடங்கியிருக்கிறது.

    அப்போது வாசிப்பதில் ஆர்வம் கொண்ட பலர் கையெழுத்து பிரதி நடத்தியிருக்கிறார்கள். சாவி பத்திரிகையில் சிறப்பான கையெழுத்து பிரதிக்கு பரிசு கூட கொடுத்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாவியின் கையெழுத்துப் பத்திரிகை விவரங்கள் படித்து மாலன் திசைகள் தொடங்கியபோது என் என் அண்ணனுக்கெல்லாம் அழைப்புய வந்தது.  இவர் தொடரவில்லை.

      நீக்கு
  27. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  28. மஸ்கட்டில் தமிழ்ச் சங்கத்தில் ,'சங்க நாதம்' என்ற கையெழுத்து பத்திரிகை வெளியிட்டார்கள். நான் கூட அதன் ஆசிரிய குழுவில் கொஞ்ச நாட்கள் இருந்திருக்கிறேன். அதற்கு பெண்களின் பங்களிப்பு தான் அதிகமாக இருந்தது. சமையல் குறிப்புகள் அனுப்பாதீர்கள் என்று கோரிக்கை வைக்க வேண்டி வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன்?  அதுதான் அதிகம் வந்ததா?  இன்று உழுந்துஇல்லாத தோசை வாரத்துக்கு கொடுத்தார் பாஸ்.  ஆபீஸில் அதைச் சாப்பிட்டுப் பார்த்த மூன்று பேர்கள் 'எப்படி எப்படி' என்று கேட்க, பாஸைக் கேட்டு அவர்களுக்குச் சொன்னேன்.

      நீக்கு
    2. ஶ்ரீராம், உங்க பாஸ் எப்படிப் பண்ணினாரோ? ஆனால் மங்களூர் நீர் தோசை, ஆப்பம் இதெல்லாம் உளுந்து சேர்க்காமல் அரிசி+தேங்காய் சேர்த்துத் தான் பண்ணுவார்கள். மெலிதாக ஓரங்களில் முறுகலுடன் நடுவில் கொஞ்சம் மெத்தென்று வரும். ஆனால் தொட்டுக்கும் சட்னி நல்ல காரசாரமாக இருக்கணும்.

      நீக்கு
    3. தேங்காய் சேர்க்கவில்லை.  மூன்று புழுங்கலரிசிக்கு ஒரு அவல், ஒரு ஸ்பூன் வெந்தயம்.  நோ தேங்காய்.  இன்று அதற்கு கொடுத்த தக்காளி சட்னி ப்ரமாதமோ பிரமாதம் போங்க...

      நீக்கு
    4. ஓ, வெந்தய தோசையா? என் மாமியார் பண்ணுவாரே! புழுங்கல் அரிசியும், வெந்தயமும் மட்டும் போட்டு! அவல் சேர்த்தது இல்லை. ஏனெனில் நான் அரைச்சிருக்கேனே! தோசை உள்ளே லேயர் லேயராக வரும். சமீபத்தில் மெசெஞ்சரில் ஷோபா ராமகிருஷ்ணன் கூட இந்த முறை கேட்டுச் சுட்டி கொடுத்தேன்.

      நீக்கு
    5. இன்னொரு முறையில் 4 கிண்ணம் பச்சரிசி, ஒரு கிண்ணம் உளுந்து, அரைக்கிண்ணம் வெந்தயம், அரைக்கிண்ணம் அவல் சேர்த்து ஊற வைத்து அரைத்தும் தோசை வார்க்கலாம். இது நம்ம ரங்க்ஸுக்கு அவ்வளவாப் பிடிக்கலை. போணி ஆகிறதில்லை. என்னதான் கொஞ்சமாய்ப் போட்டாலும் கொஞ்சமானும் மாவு மிஞ்சும். அதைச் செலவு செய்வதற்குள் போதும் போதும்னு ஆயிடும்.

      நீக்கு
    6. ஸ்ரீராம் இந்த தோசை பன் தோசை என்று சொல்வது...வெந்தயம் அரிசி அவல் சேர்த்துச் செய்வது.

      வெந்தய தோசை என்றால் நோ அவல்..கீதாக்கா சொல்லியிருப்பது போல்

      தட்டே இட்லி ந்னு இங்கு கர்நாடகாவில் செய்வது அவல் ஜவ்வரிசி உளுந்து பச்சரிசி எல்லாம் சேர்த்துச் செய்வது...

      கீதாக்கா கடைசில சொல்லிருப்பதும் என் அம்மா ஏதோ புக்கில் படித்து செய்து நானும் அதைக் குறித்துக் கொண்டு செய்வது உண்டு...

      கீதா

      நீக்கு
    7. இன்னொரு வகை தோசை பாண்டிச்சேரியில் தோழியின் அம்மாவிடம் கற்றுக் கொண்டது....அவங்க செய்யற வெந்தய தோசை - பு அ 4 கப் அல்லது 3 1/2 பு அ 1/2 ப அ. 1/4 கப் வெந்தயம், 1/4 கப் துவரம் பருப்பு.

      நல்லாருக்கும் து ப போடுவதால் சீக்கிரம் பொங்கிவிடும். இதற்கு அவங்க பூண்டுக் காரச் சட்னிதான் (பூண்டு புளி உப்பு, சி மிளகாய்) அரைத்தது. செம டேஸ்டியா இருக்கும்

      ஆ! திங்கக் கிழமை கருத்து போல ஆகுதோ..மீ எஸ்கேப்

      கீதா

      நீக்கு
    8. இது மீனாக்ஷி அம்மாளின் "சமைத்துப்பார்" புத்தகத்தில் உள்ள செய்முறை. நானும் பண்ணி இருக்கேன். ஆனால் போணி ஆகலை.

      நீக்கு
    9. அப்படீல்லாம் வருத்தப்படாதீங்க கீசா மேடம்... நாங்க வரும்போது பண்ணிப்போடுங்க, அவளுக்கு மி.பொடி...ஹாஹா

      நீக்கு
    10. வெந்தயம் கால் கப் எல்லாம் போட்டால் எடுபடுமோ?  தோசை கல்லை விட்டே எழுந்திரிக்காதே...

      நீக்கு
    11. உளுந்து போடுவதில்லை அல்லவா? வெந்தயத்தை முதலில் கிரைண்டரில் போட்டு அரைத்தால் உளுந்து மாவு மாதிரிப் பொங்கிக் கொண்டு வரும். அதன் பின்னர் மற்ற சாமான்களைப் போட்டு அரைக்கணும். துவரம்பருப்புப் போடுவதால் கொஞ்சம் விறைப்புத் தன்மை இருக்கத் தான் செய்யும். அவ்வளவு மிருதுவாக இருக்காது.(என் அனுபவம்.)

      நீக்கு
  29. இதைச் செய்யாததால் இது நடக்கவில்லையோ அது நடக்கவில்லையோ ஏதோ தப்போ என்றெல்லாம் இது வரை தோன்றியதில்லை ஸ்ரீராம்.

    அப்படித் தோன்றத் தொடங்கிவிட்டால் மனம் வேறு நிலைக்குப் போய்விடும் அபாயம் உண்டு...இறைவன் நம்மிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

    பாஸ் ஹா ஹா சொல்லியிருக்கிறார்.

    எங்கள் வீட்டிலும் காலையில் எழுந்ததும் விளக்கு ஏற்றி பால் காய்ச்சி இறைவனுக்கு வைத்துவிட்டுத்தான் காபி. இது என் பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி செய்வது அப்படியே வந்துவிட்டது எனக்கும்.

    ஆனால் வீட்டில் வேறு யாரேனும் காலையில் பால் காய்ச்சும் போது எதிர்பார்ப்பதில்லை சொல்லுவதில்லை. அவர்கள் இஷ்டம். சொன்னால் சில சமயம் வாக்குவாதம் வரும். காலை வேளையில் எதற்கு!!

    ஆனால் பாசிட்டிவ் விஷயங்கல் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம். அவர்கள் பின்பற்றுவதும் பற்றாததும் அவர்கள் விருப்பம். என்ன சொல்லிக் கொடுத்தாலும் இதைச் செய்யவில்லை என்றால் தெய்வக் குற்றம், கெட்டது நடக்கும், என்று மட்டும் சொல்லிக் கொடுத்து அப்படியான நம்பிக்கைகளை வளர்ப்பது வேண்டாம் என்று தோன்றும். ஒவ்வொருவர் மனமும் ஒவ்வொரு மாதிரி என்பதால் அது எப்படிக் கையாளப்படும் என்பதில் சில சிக்கல்கள் வருவதைக் கண்டிருப்பதால்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதைச் செய்யாததால் இது நடக்கவில்லையோ அது நடக்கவில்லையோ ஏதோ தப்போ என்றெல்லாம் இது வரை தோன்றியதில்லை ஸ்ரீராம்.//

      வேண்டியதற்கு மாறாக நடந்தால் அப்படித் தோன்றும் கீதா.

      என் குழந்தைகளுக்கு இனி சொல்லிக்கொடுத்துப் பயனில்லை!

      நீக்கு
    2. //ஆனால் வீட்டில் வேறு யாரேனும் காலையில் பால் காய்ச்சும் போது எதிர்பார்ப்பதில்லை சொல்லுவதில்லை. அவர்கள் இஷ்டம். சொன்னால் சில சமயம் வாக்குவாதம் வரும். காலை வேளையில் எதற்கு!!// அதே! அதே!

      நீக்கு
  30. முன்பு சனிக்கிழமைகளில் ரமா ஸ்ரீனிவாசன் போல, இனி வியாழக்கிழமைகளில் ஜீவி-சாரா! எழுதட்டும். படிக்க சுவாரஸ்யமான அந்தக்கால சமாச்சாரங்கள் வரும் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அவர் எழுதி இருப்பது பற்றியும் நண்பர்கள் விவாதித்தால் நன்றாயிருக்கும்.

      நீக்கு
  31. தனிமைக் கவிதை அட்டகாசம் ஸ்ரீராம். ரசித்தேன் ஆனால் கொஞ்ச்ம வேதனையும் கூடவே..

    கீதா

    பதிலளிநீக்கு
  32. ..அலுவலகத்தில் என் இருக்கையின் முன்னே வீட்டு பூஜையறையில் என் அம்மா அப்பா வைத்திருந்த காசி விசாலாக்ஷி அம்மன் படம் இருக்கிறது. நான் வேலையில் சேர்ந்த மறுநாள் என்னுடன் எடுத்துச் சென்று அலுவலகத்தில் வைத்தது. //

    ”அரசாங்க அலுவலம் இது. சிக்கூலர் ! சாமி படம்லாம் (ஹிந்து சாமி படம் எனப் புரிந்துகொள்க) இங்க வைக்கக்கூடாது” என்று யாராவது ’பகுத்தறுவு’ இன்னும் மிரட்டலயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னைத் தவிர வேறு யாரும் அங்கு வரமாட்டார்கள்.  வருபவர்களும் அப்படிப்பட்ட ஆட்கள் அல்ல.

      நீக்கு
  33. முன்பு நிறைய வேண்டுதல்கள் நானும் செய்து கொண்டு இருந்தேன். இப்போது வேண்டுவது இல்லை.
    விரதங்கள் இருப்பேன் வேண்டிக்கொண்டு. முன்பு திருப்பதிக்கு வேண்டிக் கொண்டு அதை நிறைவேற்ற பட்ட கஷ்டங்களை சொல்லி இருக்கிறேன்.

    குழந்தைகளுக்கு, கணவருக்கு என்று வேண்டிகொண்டு உண்ணாவிரதங்கள் மெளனவிரதம் எல்லாம் இருந்து இருக்கிறேன் பலவருடங்கள்.


    இப்போது எது எனக்கு நல்லதோ அதை செய்யுங்கள் எனக்கு எந்த முடிவும் எடுக்க முடிவது இல்லை இறைவா! என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.



    தனிமை கவிதை பயமுறுத்துகிறது .



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்ணாவிரதங்களும், மௌன விரதங்களும் உடம்புக்கு/மனதுக்கு   சேர்ந்து விடுகின்றன!  பிரார்த்தனைகள் அலுத்துப்போகும் காலமும் வரும் போல!

      நீக்கு
  34. முன்பெல்லாம் பிள்ளையாருக்கு தேங்காய், ஆஞ்சநேயருக்கு வடைமாலை என்று நேர்ந்து கொள்வதுண்டு. இப்பொழுதெல்லாம் ஏதாவது நடக்க வேண்டுமென்றால், அது நடக்கும் வரை பிடித்த விஷயங்களை விலக்கி வைப்பேன் உதாரணமாக இனிப்பு, சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவை சாப்பிடாமல் இருப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தன்னைத்தானே (சிறிய அளவிலாவது) வருத்திக் கொள்ளுதல்!  அந்தக் காலத்து தவம் செய்பவர்கள் செய்தது போல...

      நீக்கு
  35. ..அதுவும் ஆட்டம் காணும் நாளில் கடவுள் சித்தாந்தம் காணாமல் போகும்!//

    போகாது. உங்களிடம் ஆட்டம் கண்டிருக்கும் நாளில், வேறொரு இடத்தில் அது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா இடத்திலும்தானே விளக்கம் கிடைக்கும்?  வேறு ரூபம் எடுக்கலாம்!

      நீக்கு
  36. எஸ் ஏ பி அவர்களைப்பற்றியும், கையெழுத்துப் பத்திரிகை அனுபவங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    தொடர்வது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  37. வடுவூரார்பற்றி தெரிந்து கொண்டேன். திகம்பரசாமியார் சினிமா நம்பியார் நடித்த படம் பார்த்து இருக்கிறேன். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு. நிறைய வேடங்களில் மிகவும் அருமையாக நடித்து இருப்பார். கதையும் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவராத்திரி படத்துக்கு முன்னரே அதைவிட அதிக வேண்டங்களில் நம்பியார் நடித்த படம்.  நான் பார்த்ததில்லை.  ஆனால் இது pdf  புத்தகமாகக் கிடைக்கவில்லை!

      நீக்கு
    2. கும்பகோணம் வக்கீல் என்ற தலைப்பில் தேடிப்பாருங்கள். விலைக்குத்தான் கிடைப்பதுபோல இருக்கு

      நீக்கு
  38. சிரிப்பு, இலக்கிய பக்கம், இலக்கிய சித்திரம், கோபுலுவின் விளம்பர ஐடியாக்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  39. ஜீவி அண்ணாவின் தொடர் வெகு சுவாரசியம். இன்னும் நிறைய வரும் என்று தெரிகிறது. நல்ல அனுபவங்கள் அவருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா..   தொடர்ந்து வரும்.  அவருக்குப் பிடித்த களம்.  அனுபவித்து எழுதுவார்.

      நீக்கு
  40. வடுவூரார் பெரும்பாலும் அயல்நாட்டுக் கதைகளை காப்பியடித்துதான் எழுதி இருக்கிறார். //

    நானும் இதை வலையில் எங்கோ வாசித்த நினைவு. இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும்கதையும் இன்னும் சில கதைகளும் நான் டவுன்லோட் செய்து வைத்திருக்கிறேன். ஆனால் எல்லாமே இப்ப ரிப்பேர் ஆன கணினியில் இருக்கிறது.

    இந்தக் க்தையை வாசிக்கத் தொடங்கிய சமயம் கணினி ரிப்பேர் ஆனது.
    தகவல்கள் சுவாரசியமாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில் ஏதாவது மர்மம் இருக்கிறதோ கீதா?

      நீக்கு
    2. நா வாசித்த வரையில் இன்னும் வரவில்லை. தொடர வேண்டும் ...இப்போஒது பென் ட்ரைவில் நான் சேமித்து வைத்திருப்பது தெரிந்துவிட்டது தொடர்ந்து வாசிக்க வேண்டும்..சொல்கிறேன் ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    3. //இந்தக் கநான் கேட்டது இதை!தையை வாசிக்கத் தொடங்கிய சமயம் கணினி ரிப்பேர் ஆனது.//

      நான் கேட்டது இதை!

      நீக்கு
  41. வடுவூரார் என் மாமியாருக்கு உறவு என்று சொல்லுவாங்க. மாமியார் வடுவூர். மாமனார் வாங்கல்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...  ஒரு பதிவிட்டால் எவ்வளவு விஷயங்கள் வெளியே வருகின்றன பாருங்கள்!

      நீக்கு
  42. சௌந்தர கோகிலம், மேனக, மதன கல்யாண்ம, திவான் லொடபடசிங்க் பகதூர், பூர்ண சந்திரோதயம் இவை என்னிடம் ரிப்பேர் ஆன கணினியில் இருக்கு


    https://tamilbookspdf.com/genre/vaduvoor-k-duraiswamy-iyengar/

    இங்கிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

    கீதா

    பதிலளிநீக்கு
  43. மாயாவினோதப் பர்தேசி, வசந்த மல்லிகா இரண்டும்

    https://poovascollections.blogspot.com/p/vaduvur-kduraisamy-iyyangar-novels.html

    இந்தச் சுட்டியில் இருக்கிறது மற்ற மேலே சொன்ன புத்தகங்களும் இச்சுட்டியில் இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  44. யாருக்கேனும் வேண்டும் என்றால் சொல்லுங்கள் இப்புத்தகங்கள் அனைத்தையும் உங்களுக்கு மெயிலில் அனுப்புகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திகம்பர சாமியார் இருக்கா?

      நீக்கு
    2. தி சா தேடிக் கொண்டிருக்கிறேன் ஸ்ரீராம் கிடைத்ததும் தருகிறேன்...இதுவரை கிடைக்கவில்லை

      கீதா

      நீக்கு
  45. ...நிலுவையில் வைத்து விடுகிறார்!//

    அடுத்த கடவுள் வந்து பார்த்துக்கொள்ளட்டும்...

    பதிலளிநீக்கு
  46. ஆவி அட்டைப்பட ஜோக் ரசித்தேன்.

    அப்பவே ஆவி மாணவர் திட்டம் எல்லாம் செஞ்சுருக்காங்களே..

    ஸ்ரீதர் ஜோக்ஸ் ஹா ஹா ஹா ரகம்..!!!

    கோபுலுவின் விளம்பர ஐடியா செம!!!

    அனைத்தும் ரசித்தேன் ஸ்ரீராம், வியாழன் வெரி இன்ட்ரெஸ்டிங்க்!

    கீதா

    பதிலளிநீக்கு
  47. கடவுள்ட வேண்டிக்கக்கூடாது, எதையும் கேட்கக்கூடாது என்றுதான் எங்களுக்குச் சொல்லிக்கொடுத்தாங்க. ஆனால் அப்படி இருக்க முடிகிறதா? நமக்கு ப்ராப்தம் இருந்தாலோழிய வேண்டுதல்களை பெருமாள் சட்டைசெய்வதில்லை என்பது என் அனுபவம்.

    இன்னொன்று, நமக்கு என்ன வேணும்னு கேட்கத் தெரியாது. டக்குனு கடவுள் என் முன் தோன்றி என்ன வரம் வேணும்னு கேட்டால், ஒல்லியாயிடணும் என்று அசட்டுத்தனமாகத்தான் கேட்கத் தோன்றும்.

    நீங்க படிச்சிருப்பீங்க. கடவுளிடம் ஒருவன், தனக்கு சாவே வரக்கூடாது என்று வேண்ட, கடவுளும் அந்த வரத்தைக் கொடுத்துவிட்டாராம். அப்புறம் சொந்தக்கார்ர்களைக்கூட, கைப்புமி, ராமமி என்றுதான் கூப்பிட முடிந்ததாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // குப்புமி, ராமமி... //

      இது நல்லா இருக்கே!..

      சாம்பார் வேண்டும் அவனுக்கு..
      எப்படிக் கேட்டிருப்பான்?..

      நீக்கு
    2. சுயநலமாக எதுவும் வேண்டிக் கொள்ளக்கூடாது என்று சொல்வார்கள்.  நானும் வேண்டிக்கொள்வதில்லை.  டக்கென்று எதிரில் தோன்றிய கடவுளிடம் அப்போதைய தேவையான ஒரு மூட்டை சிமெண்ட் கேட்டதாய் ஒரு ஜோக் உண்டு!

      நீக்கு
  48. அனைத்தும் ஒரு நம்பிக்கை... அதற்காக கோவை கொரோனா தேவி உட்பட என்று சொல்ல முடியாது...(!)

    வடுவூரார் பற்றிய தகவல்கள் + மற்ற பகுதிகளும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவையில் கொரானா தேவி என்று வைத்து கேவலப்படுத்தி விட்டார்கள்...

      நீக்கு
    2. இன்னும் வடக்கே சென்ற ஆண்டு கொரானா சமயத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அப்படியே பெயர்
      வைத்தவர்களை என்னவென்று சொல்வது?..

      நீக்கு
    3. நன்றி DD.  எதையும் கொஞ்சம் ஓவராய்ச் செய்து வாங்கி கட்டிக்க கொள்கிறவர்கள் இருக்கிறார்களே...

      நீக்கு
    4. அப்போது பிறந்த  குழந்தைக்கு கொரோனா என்று பெயர் வைத்திருக்கிறார்களா?  என்ன கொடுமை!

      நீக்கு
    5. அந்தக் குழந்தைதான் அவர்களுக்கு எமன் !

      நீக்கு
  49. வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல் (அதைத்தொடர்ந்து நிறையபேர் நாவல்கள் எழுத வந்துவிட்டதைப்) பற்றி விமர்சித்த ஒருவர் எழுதியது,

    'ர'கர "ற"கரங்களைச் சரியாக வழங்கத் தெரியாதவர்களும், தமிழ் எழுத்தாளர்களாகத் துணிவு கொள்வதும் தமிழ் மொழியின் சனி தசை என்றே கொள்ளவேண்டும். ஒன்றோ இரண்டோ விட புருஷர்கள் (வில்லன்கள்), இரண்டோ மூன்றோ நாணமற்ற கன்னியர்கள், ஒரு துப்பறியும் கோவிந்தன் அல்லது கோபாலன், ஒரு ஆகாவழி ஜமீந்தார் - தமிழ் நாவல் பூர்த்தியாகிவிடுகிறது. தற்காலத்தில் துப்பறியும் நாவல்களெல்லாம் பிற நாட்டுப் பழக்கவழக்கங்களையும் மனோபாவங்களைத் தமிழகத்தில் பரப்பித் தமிழ் மக்களை அனாசாரப் படுகுழியில் தலைகீழாக வீழ்த்துகின்றன.


    இது எப்படி இருக்கு?

    பதிலளிநீக்கு
  50. நீண்ட பதிவு என்றாலும் சிறப்பான பதிவு (தொகுப்பு) வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  51. கையெழுத்துப் பத்திரிகை, சர்குலேஷன் லைப்ரரி என்று மிக ரசனையாகத் தொடங்கி கடைசிப் புள்ளியாக குமுதத்தில் வந்து நிறுத்தியிருக்கிறார் ஜீவி சார்... இதற்கு முன்பு எழுதியிருந்தாலும் (குமுதம், எஸ் ஏ பி....) அதனையும் இந்தத் தொடரில் cover செய்யணும் என்று கேட்டுக்கறேன். In my opinion, இந்தத் தொடரை வேறு தினத்துக்கு (சனி ஞாயிறு) அலாட் செய்திருக்கலாம்.

    சர்குலேஷன் லைப்ரரி - இதை ஆரம்பிப்பவர்களின் முதல் நோக்கமே ஓசியில் எல்லாப் பத்திரிகையையும் படித்துவிடலாம், மெம்பர்களிடமிருந்து காசு வேறு வரும், என்பதாகத்தானே இருந்திருக்கும்? நானும் பதின்ம வயதில் சர்குலேஷன் லைப்ரரியில் வாங்கி நிறைய பத்திரிகைகள் படித்துள்ளேன்.

    சில வருடங்களுக்கு முன்பு, அடையாரில் அப்படி ஒரு சர்குலேஷன் லைப்ரரியைப் பார்த்தபோது, அவரிடம் மாதம் 500 ரூபாய் கட்டி, மேகசின்கள் நிறைய வாங்கிப் படிக்கலாமே என்று தோன்றியது. ஆனால் வீட்டில், இந்தப் புத்தகங்களையெல்லாம் யார் யார் எங்க வச்சுப் படிச்சிருப்பாங்கன்னு தெரியாது, அதனால் இந்த மாதிரி லைப்ரரியிலிருந்து பத்திரிகைகள் வாங்கக்கூடாதுன்னு தடா போட்டுட்டாங்க. அவங்க சொன்ன காரணமும் சரிதானே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யதேச்சையாக ஒரு லெண்டிங் லைப்ரரி காரருக்கு நான் தொலைபேசப்போக அவர் விடாம துரத்துகிறார்.  அவர் சொல்லும் காசு எனக்கு கட்டுப்படியாகவில்லை.  வாங்கினாலும் நான் மட்டும் படிக்க வேண்டும்.  அதுவும் வேகம் வேகமாக...

      நீக்கு
    2. Problem என்னன்னா...இப்போல்லாம் கதைப் புத்தகங்களை சௌசாலயாவில் வைத்துப் படிக்கிறார்கள். அதனால்தான் தடா..

      நீக்கு
  52. ஸ்ரீராம் ஜி உங்கள் கவிதைகள் அருமை.

    கடவுள், வேண்டுதல் பற்றி சொன்னதை ரசித்து வாசித்தேன். நானும் ஆத்மார்த்தமான பிரார்த்தனை செய்வதோடு சரி. வேண்டுதல் என்று வைத்துக்கொள்வதில்லை. எல்லாம் இறைவன் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில்.

    ஜீவி சாரின் தொடர் நல்ல தொடக்கம். நிறைய விஷயங்கள் அறிந்தவர் என்பது அவரது வலை வாசிக்கும் போது அறிந்திருக்கிறேன்.

    ஜோக்குகள் ரசித்தேன்.

    வடுவூர் துரைசாமி ஐயாங்கார் பற்றி இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன்.

    கொரோனாவினால் நெருங்கிய உறவுகள் இழப்புகள் என்று மனம் வருந்தித்தான் இருக்கிறது. நிறைய இழப்புகள் நம் நாட்டில் இம்முறை.

    எல்லாப்பகுதியுமே மிகவும் ரசித்தேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துளஸிஜி.   நீங்கள் தொடர்ந்து படித்து வருவதே மகிழ்ச்சியும், உற்சாகமும் ஊட்டுகிறது.

      நீக்கு
  53. ஜீவி அண்ணாவின் கையெழுத்துப் பத்திரிகை நண்பர் ரகு பற்றி அவர் தன் தளத்தில் எழுதியிருக்கிறார். அப்போதே கையெழுத்துப் பத்திரிகை நல்லா போச்சு என்று சொல்லியிருந்தார்.

    அதைப் பற்றி இங்கு மீண்டும் இன்னும் நிறைய சொல்லியிருக்கிறார்.

    குமுதம் அவர் நாளில் நல்ல நிலையில் தரமாக இருந்தது போலும். எங்கள் பிறந்த வீட்டில் இதழ்கள் எதுவும் வீட்டிற்குள் வரக் கூடாது அதுவும் குமுதம் என்றால் கேட்கவே வேண்டாம்.

    ஜீவி அண்ணா எஸ் ஏ பி பற்றியும் குமுதம் பற்றியும் சொல்வதை வாசிக்க ஆவலுடன் இருக்கிறேன். அழகாகச் சொல்லவும் செய்வார்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தரம்// - இது நம்முடைய துலாக்கோலைப் பொறுத்தது இல்லையா? பதின்ம வயது, பெண்கள் இவர்களுக்கு குமுதம் ரொம்பவே பிடிக்கும். இப்போதுமே எனக்கு குமுதம் (70-85) படிக்க ரொம்பப் பிடிக்கும். எங்கு கிடைக்கும்?

      நீக்கு
  54. அமேஸானில் வடுவூராரின் சில புத்தகங்கள் (வஸந்த கோகிலம், கும்பகோணம் வக்கீல், வித்யாசாகரம், மேனகா, திரிபுர சுந்தரி அல்லது திகம்பர சாமியார் திடும் பிரவேசம்..) கிண்டில் எடிஷனாகக் கிடைக்கின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிண்டில் எல்லாம் எனக்கு ஒத்துவரவில்லை ஏகாந்தன் சார்.  

      நீக்கு
    2. ஹெஹெஹெ, எனக்கும் கிண்டில் ஒத்து வரதில்லை. :)

      நீக்கு
  55. சிறப்பான வியாழன் பகிர்வு. ஒவ்வொரு பகுதியும் ஸ்வாரஸ்யம். ஸ்ரீதர் ஜோக்ஸ் மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!