வெள்ளி, 7 மே, 2021

வெள்ளி வீடியோ : நல்ல இரவில்லையா... தென்றல் வரவில்லையா.. முழு நிலவில்லையா.. தனி இடமில்லையா

 1966 இல் மெட்றாஸ் டு பாண்டிச்சேரி என்று ஒரு படம் வந்தது.   ரவிசந்திரன்  ஹீரோவாக நடித்த இத் திரைப்படம் பெரிய வெற்றி பெற்றதால் 1972 இல் ஹிந்தியில் பாம்பே டு கோவா என்று வந்தது.  ஹிந்தியில் அமிதாப் நடித்திருந்தார்.

ஒரு கதையோ, தலைப்போ வெற்றி பெற்றால் அதே மாதிரி படங்கள்  வர ஆரம்பிக்கும் இல்லையா?  அது போல வந்தததுதான் 1972 இல் வெளியான இந்த 'டெல்லி டு மெட்றாஸ்' திரைப்படம்.  ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா நாகேஷ் நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு கவிஞர் மாயவனாதன் பாடல்கள் எழுதி உள்ளார்.  இந்தப் பாடம்தான் அவர் கடைசியாக பாடல்கள் எழுதிய படம்.
இந்தத் திரைப்படத்தைத் தழுவிதான் விஜய் நடித்த 'போக்கிரி' திரைப்படம் எடுத்தார்கள் என்று ஒருவர் சொல்லி இருக்கிறார்!

வி. குமார் இசை அமைத்துள்ளார்.  ஐ என் மூர்த்தி என்பவர் இயக்கி உள்ளார்.

ஒருநாள் இரவு டி எம் எஸ் சுசீலா பாடிய இந்தப் பாடல் திடீரென நினைவுக்கு வந்தது.   அதிகம் கேட்பதில்லை என்றாலும், அப்போது ரேடியோவில் அதிகம் ஒலிபரப்பப்பட்ட பாடல்களில் ஒன்று.  ஒருமுறை கேட்கலாம் என்று இன்று அந்தப் பாடலைப் பகிர்கிறேன்.

ஏதோ ஒரு படத்தில் ஜெய்சங்கரைக் காதலித்து ஆனால் சேரமுடியாமல் இருக்கும் ஸ்ரீவித்யா இதில் ஜெய்சங்கரின் ஜோடி.

நாகேஷ் நடனம் ஒன்று உண்டு படத்தில்.  சுட்டியைத் தொட்டால் நாகேஷ் நடனம்,அவரது வழக்கமான நடன அசைவுகளுடன் பார்த்து ரசிக்கலாம்.  இந்தக் காட்சியில் நாகேஷுக்கு குரல் கொடுத்திருப்பவர் மலேஷியா வாசுதேவன்!   தமிழ்ப்படங்களில் அவரது முதல் பாடல் இதுதான்.  அந்தப் பாடல் பற்றிய கமெண்ட் ஒன்று ..


"தண்ணிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க ..  என்று படித்தால் மட்டும் போதுமா திரைப்படத்தில் தன் முத்திரைப் பாடலாய் தன் முதற்பாடலை எழுதிய கவிஞர் பூலாங்குளம் மாயவநாதன் தான் மரணமெய்துமுன் தன் இறுதிப் பாடலாய் இந்த பாலு விக்கிற பத்துமா பாடலை எழுதினார்..  அதுவே மலேசிய வாசுதேவனுக்கு முதற் பாடலாயிற்று.. கவிஞர் மரணத்தில் பாடகர் ஜனனம்..  எல்லாம் விதியின் வசம்.."

இந்தப் பாடலுக்குப் பிறகு எம் எஸ் விஸ்வநாதன் 'பாரத விலாஸ்' படத்தில் வரும் 'இந்தியநாடு என் வீடு' பாடலில் வரும் பஞ்சாபி வரிகளுக்கு இவரைக் குரல் கொடுக்க வைத்தாராம்.  பின்னர் 'தலைப்பிரசவம்' படத்தில் ஒரு பாடல் பாடி இருக்கிறார்.  பின் குன்னக்குடி வைத்தியநாதன் 'குமாஸ்தாவின் மகள்' படத்தில் 'காலம் செய்யும் விளையாட்டு' பாடல் தந்தார். 

ஆனால் மலேசியா வாசுதேவனின் வெற்றிக்கு முழுக்காரணம் இளையராஜாதான்.  16 வயதினிலே படத்தில் பாடத்தொடங்கி, பின்னர் வரிசையாக நிறைய பாடல்கள் அவர் இசையில் பாடி புகழ் பெற்றார்.

சரி, இனி இன்றைய பகிர்வுப் பாடலுக்கு வருகிறேன். பாடலைப் பாடி இருப்பவர்கள் டி எம் சௌந்தர்ராஜனும் பி சுசீலாவும்.  இந்தப் பாடலை வி. குமார் டி எம் எஸ்ஸை மனதில் வைத்துதான் இசை அமைத்தாரா என்று தோன்றும்.  எஸ் பி பி யை மனதில் வைத்திருந்திருப்பரோ என்றும் தோன்றும்!

புன்னகையோ பூமழையோ பொங்கிவரும் தாமரையோ 
மானினமோ நாடகமோ மாதரசி யார் உறவோ 

தென்பொதிகை சந்தனமோ சிந்திவிழும் செந்தமிழோ 
மங்கையரின் மாளிகையோ மன்னவரின் மார்பகமோ 

என்னை பந்தாடும் நடையல்லவா - கன்னிப் 
பழமான இதழல்லவா 
வந்து விளையாட மனமில்லையா 0 இனி 
விடிகின்ற பொழுதில்லையா 

நான் பெண்ணென்ற நினைவில்லையா - இது 
பேசாத உறவில்லையா 
இங்கு விளையாட இடமில்லையா - பொழுது 
விடிந்தாலும் நமதில்லையா 

நல்ல இரவில்லையா தென்றல் வரவில்லையா 
முழு நிலவில்லையா தனி இடமில்லையா 

இது விரிகின்ற மலரல்லவா - மது 
வழிகின்ற குடமல்லவா 
கையில் வழிகின்ற கனியல்லவா - இன்னும் 
சரியென்று நான் சொல்லவா 

உடல் கல்வாழை இலையல்லவா 
குழல் கடலோர அலையல்லவா 
காதல் பொல்லாத கலையல்லவா -நாம் 
போராடும் களமல்லவா 

நல்ல இரவில்லையா தென்றல் வரவில்லையா 
முழு நிலவில்லையா தனி இடமில்லையா 


57 கருத்துகள்:

 1. காலை வணக்கம் அனைவருக்கும்

  பதிலளிநீக்கு
 2. இந்த தளத்தில் முதல் கருத்து போட்டவங்களுக்கு வடை தருவாங்களா இல்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பா உண்டு மதுரை..   உடனே கிளம்பி அங்கே பக்கத்துல எந்தக் கடைல வடை இருந்தாலும் கேட்டு வாங்கிக்குங்க!

   நீக்கு
  2. இனிய வெள்ளி காலை வணக்கம்
   அன்பு ஸ்ரீராமுக்கும் மதுரைத் தமிழனுக்கும்
   இன்னும் வரப் போகிறவர்களுக்கும் என்னாளும் நன்னாளாக
   இருக்கப் பிரார்த்தனைகள்.

   நீக்கு
  3. வாங்க வல்லிம்மா...  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
  4. //உடனே கிளம்பி அங்கே பக்கத்துல எந்தக் கடைல வடை இருந்தாலும் கேட்டு வாங்கிக்குங்க!// அங்கெல்லாம் இப்படித் தேநீர்க்கடைகளும் அவற்றில் வடை, போண்டோக்களும் கிடைத்தால் நல்லாத் தான் இருக்கும். ஆனால் அபப்டி எல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாதே! அதனால் நீங்களே வடை கொடுத்துடுங்க. இஃகி,இஃகி,இஃகி!

   நீக்கு
  5. இன்று ஏகாதசி, நீங்கள் கொடுத்தாலும் எனக்கு வடை வேண்டாம்.

   நீக்கு
  6. இது ரமதான் மாதமாயிற்றே, மாலையில்தானே வடை, போண்டா எல்லாம் சாப்பிடுவார்கள்? மதுரைத்தமிழன் காலையிலேயே வடை கேட்கிறார்..? ஓ! அவருக்கு மாலையோ?

   நீக்கு
  7. இப்படி எல்லாம் குழப்பினால்  மதுரைத்தமிழன் எனக்கு வடையே வேண்டாம்னு போய்விடுவார்!!

   நீக்கு
 3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் மன அமைதியும் ஆரோக்கியமும் பெருகி நோயற்ற வாழ்வு வாழப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா...   வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 4. மெட்ராஸ் டு பாண்டிச்சேரி, தூர்தர்ஷன் தயவில் பார்த்திருக்கேன். அதிலே தான் காதர் பக்கோடா காதர் என்ற பெயர் பெற்றார்னு நினைக்கிறேன். நல்லா இருக்கும். நடு நடுவில் ஊறுகாயை விடக் கொஞ்சமாக (எனக்கெல்லாம் ஊறுகாய் நிறைய வேணும்.) த்ரில்லிங்க் இருக்கும். டெல்லி டு மெட்ராஸ், படம் வந்ததே நினைவில் இல்லை. மும்பை டு கோவா பார்த்திருக்கேனோ? இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இரண்டு படமும் பார்த்ததில்லை.  மும்பை டு கோவா என்று படம் இருக்கிறதா என்ன?!

   நீக்கு
  2. ஹாஹாஹா, அப்போவெல்லாம் அது பாம்பே இல்லையோ? பழக்க தோஷம்! :)))))

   நீக்கு
  3. பதிவு படிக்கவில்லையோ?!!! முதல் பாராவிலேயே நானே சொல்லி இருக்கிறேனே...!

   நீக்கு
  4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், படிச்சேன் என்பதால் தான் அப்போ பம்பாய்/இப்போ மும்பை எனக்குப் பழக்க தோஷத்தில் வந்துடுத்துனு சொல்லி இருக்கேன்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரோ க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

   நீக்கு
  5. 1972 இல் ஹிந்தியில் பாம்பே டு கோவா என்று வந்தது. ஹிந்தியில் அமிதாப் நடித்திருந்தார்.//

   மும்பை டு கோவா என்று படம் இருக்கிறதா என்ன?!//

   ஹா ஹ ஹா ஸ்ரீராம்

   கீதாக்கா இப்போதைய பேரில் சொல்லியிருக்கிறார்!!!!!!!!!

   கீதா

   நீக்கு
  6. அந்த ஹிந்திப்படத்தில் கிஷோர்குமார் பாடும் ஒரு பாடல் எனக்குப் பிடிக்கும்.  பாடலைக்கேட்க மட்டும்.  காட்சியைப் பார்க்க அல்ல!

   நீக்கு
  7. சொல்ல நினைத்தேன் சொல்லி விட்டீர்கள்.

   நீக்கு
 5. மெட்ராஸ் டு பாண்டிச்சேரி படப் பாடல்களும் நன்றாக
  இருக்கும்.
  இந்தப் படம் டெல்லி டு மெட்ராஸ்
  கதை என்னவாக இருக்கும்? நினைவில்லை. பாடல்வரிகள்
  அருமையாக அமைந்திருப்பது
  கவிஞர் மாயவ நாதனுக்கே உரிய பெருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சி ஐ டி போலீஸ் அதிகாரி ரௌடி போல நடித்து அவர்களை பிடிக்கும் கதைக்குமா..

   நீக்கு
 6. ஜெய்சங்கரைக் காதலித்து மணக்காமல் போவது நூற்றுக்கு நூறு
  படம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.  சொல்லணும்னு நினைத்தேன்.  சந்தேகமா இருகாது.

   நீக்கு
 7. ஏகப்பட்ட இல்லையா:) பரவாயில்லை என்று சொல்லலாம் இல்லையா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அபுரி!  இல்லையான்னு நிறைய வந்துடுச்சா?

   நீக்கு
  2. பாடல் வரிகளில் இல்லையாவும் அல்லவாவும் நிறைந்திருக்கின்றன.
   அதைச் சொல்ல நினைத்தேன்.:)

   நீக்கு
 8. பாட்டு கொஞ்சமே கொஞ்சம் நினைவிருக்கு...அத்தனை கேட்டதில்லை...ஸ்ரீராம்

  பாடல் ஒகே...வேறு ஏதோ ஒரு பாடலை நினைவுபடுத்துகிறது!!!

  இந்தப் படம் த்ரில்லரா?

  நம்பர் 20 மெட்ராஸ் மெயில் என்று ஒரு படம் மலையாளப் படம் அது 1990 த்ரில்லர்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க த்ரில் ஆனீங்கன்னா அது த்ரில்லர்தான்!!!  பாட்டு திடீரென நினைவுக்கு வந்து தொல்லைப்படுத்தியதால் பகிர்ந்தேன்!

   நீக்கு
 9. மலேஷியா வாசுதேவனுக்கு முதலும் மாயவ நாதனுக்கு முடிவுமான படம்.
  பாவம் தான்.

  பதிலளிநீக்கு
 10. நல்ல பாடல் ஜி

  நீங்கள் சொல்வதைப் பார்த்தால் மாயவநாதனின் மரணத்துக்கு மலேஷியாவின் வருகைதான் காரணம் என்று நினைக்க தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் அப்படிக் கொனஷ்டையாகவா சொல்லி இருக்கேன்?!!!!

   நீக்கு
  2. என்ன சொல்கிறீர்கள் ஶ்ரீராம் கில்லர்ஜி கொனஷ்டையாக புரிந்து கொள்கிறார் என்கிறீர்களா? நாராயண!நாராயண!

   நீக்கு
 11. அன்பின் வணக்கமும் அனைவருக்கும்...
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  பதிலளிநீக்கு
 12. அனைவருக்கும் காலை வணக்கம். மெட்ராஸ் டு பாண்டிச்சேரி படம் ஒரு முறை தொலைகாட்சியில் போட்ட பொழுது பார்க்கலாம் என்று உட்கார்ந்தேன், முடியவில்லை. இதில் சோ உண்டு இல்லையா? வசனம் அவர்தானோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊஹூம்  சோ கிடையாது.  அது வேறு படம்.  வாங்க பானு அக்கா..  வணக்கம்.

   நீக்கு
 13. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இணைந்தே பிரார்த்திப்போம்.  வாங்க கமலா அக்கா...  வணக்கம்.

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  மெட்ராஸ் டு பாண்டிச்சேரி படம் தெரியும். படமும் தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன் என நினைக்கிறேன். ஆனால், இப்போது அதன் கதை நினைவிலில்லை. அதற்கு முன்பா /பின்பா திருமலை டு தென்குமரி என்றொரு படம் வந்தில்லையா..? அதில் பாடல்கள் நன்றாக இருக்கும். சீர்காழி அவர்கள் பாடிய "திருப்பதி மலை வாழும் வெங்கடேசா" அதில்தான் என நினைக்கிறேன்.

  இப்படி ஒரே மாதிரி ஊர், ஊராக செல்லும் படங்கள் அப்போதெல்லாம் ஒன்றிரண்டுக்கு மேலாக வந்திருக்கிறது போலும். அதைக் குறித்து நீங்களும் இன்றைய பதிவில் விபரமாக கூறியிருப்பதை படித்து தெரிந்து கொண்டேன்.

  இன்றைய பகிர்வு பாடல் இதுவரை கேட்டதில்லை. படமும் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். பாடல் இப்போது கேட்டேன். நன்றாக உள்ளது. இந்த மாதிரி பழைய படங்களே பார்க்காதது நிறைய உள்ளன. ஆனால் வீட்டில் பழைய கருப்பு வெள்ளை படங்கள் என்றால் அவ்வளவாக விரும்புவதில்லை. எடுத்தவுடனேயே வன்முறை காட்சிகள் கொண்ட படங்கள் எனக்கு விருப்பமில்லை. நீங்கள் ஒரளவு பழைய பாடல்களை பகிர்வது பிடித்துள்ளது. இன்றைய பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 15. கல்லூரி நாட்களில் இந்தப் பாடல் மிகவும் பிரபலம்...

  பாடலின் தரம் சரியில்லை என்பது அப்போது பலரது அபிப்பிராயம்..

  அரசுக் கல்லூரியின் அப்போதைய தறுதலைகள் வேறு விதமான விளக்கம் கொடுத்து சுவர்களை அசிங்கப்படுத்தி இருந்தார்கள்..

  தமிழ்த்துறைத் தலைவர் வந்து அந்த அலங்கோலத்தைப் பார்த்து விட்டு ஆட்களை வைத்து சுத்தம் செய்து வைத்தார்..

  பதிலளிநீக்கு
 16. இந்தப் பாடலை எழுதியவர் மாயவநாதன் என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன்..

  பதிலளிநீக்கு
 17. தண்ணிலவு தேனிறைக்க.. - என்றெல்லாம் இயற்றி விட்டு இப்படியும் எழுதுவற்கு நேர்ந்ததே!... - என்று அவர் விரக்தி அடைந்திருக்கலாம்...

  பதிலளிநீக்கு
 18. இது மாதிரி Spb பாடி வைத்த (அவரே மறந்து விட்ட) கசடுகள் - ஸ்ரீராம் அவர்களுக்கு மட்டும் கிடைப்பது தான் பெரிய ஆச்சர்யம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கசடுகள்!!!!

   இது SPB இல்லை துரை செல்வராஜு ஸார்.

   நீக்கு
  2. இது spb இல்லை தான்...

   இது மாதிரி = இந்தப் பாடலைப் போல!..

   நீக்கு
 19. நிறைய செய்திகள் படிக்க . படித்து தெரிந்து கொண்டேன்.
  பாடல் அடிக்கடி கேட்டது, படமும் பார்த்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!