புதன், 19 மே, 2021

வீட்டுத் தலைவருக்கு மரியாதை; வேலைக்காரருக்கு மரியாதை இல்லையா?

 

சென்ற வாரமும் நீங்க எல்லோரும் கேள்விகள் கேட்க மறந்துவிட்டீர்கள். அதனால் ஒரு கேள்வி - பதில்களுக்குப் பிறகு எங்கள் கேள்விகள் !!

நெல்லைத்தமிழன் : 

ஒருநாவல் எழுதும்போது, வீட்டுத் தலைவர் என்றால், அவர் இவர் என்று எழுதுவதும், வேலைக்காரர்கள் என்றால், அவன் வந்தான் என்று ஒருமையில் எழுதுவதும் எதனால்?

$ திருவைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும் 

   திரு உடையருக்கும் காட்டப்படும் வேற்றுமை.

# நாவல் அந்தந்த வட்டார வழக்கையும் அந்தந்தக் கால கட்டத்தில் நிலவிய நிலவுகிற பழக்க வழக்கங்களையும்தான் பிரதிபலிக்கும்.

& திருடுபவனை 'திரு'டன் என்றும், பிடிப்பவரை 'போ'லீஸ் என்றும் கூடத்தான் சொல்கிறார்கள்! 

கம்பன் என்ன சொன்னான், வள்ளுவன் உரைத்த வாய்மை என்ன .." என்றெல்லாம் எழுதுபவர்கள், " விஜய் மால்யா கூறினார்"  என்றுதானே எழுதுகிறார்கள்? 

கம்பர்  - இராமனை ஒருமையில்தானே குறிப்பிடுகிறார்? 

குழைக்கின்ற கவரி இன்றி,
     கொற்ற வெண்குடையும் இன்றி,
இழைக்கின்ற விதி முன் செல்ல,
     தருமம் பின் இரங்கி ஏக,
‘மழைக்குன்றம் அனையான் மௌலி
     கவித்தனன் வரும்’ என்று என்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்முன்,
     ஒரு தமியன் சென்றான்.

ஆனால், அந்த இராமன் - குகனோடு ஐவரானோம் என்று சொல்லி குகனை சேர்த்துக்கொள்ளவில்லையா! 

= = = = = =

உங்களுக்கு, எங்கள் கேள்விகள் : 

கீழே சில படங்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் பார்க்கும்போது உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்று கருத்து கூறுங்கள். 

1) 

2) 

3) 

4) 

5) 

மேற்கண்ட ஐந்து  படங்களையும்  இணைத்து கதை / கவிதை எழுத முடிந்தவர்களுக்கு பரிசு உண்டு. 

= = = = =

81 கருத்துகள்:

 1. அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 2. அட? இன்னுமா யாரும் வரலை?

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்திக்கிறோம்.
  அதானே! இதோ பானுமதி எட்டிப் பார்த்துட்டாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய பிரார்த்தனையை அனைவரும் இணைந்தே செய்வோம்.  வாங்க கீதா அக்கா..  வணக்கம்.

   நீக்கு
 4. கீழிருந்து 3 ஆவது படம், அந்த இளம்பெண் எனக்கு Wuthering Heights கதையையும் அதன் கதாநாயகியையும் நினைவூட்டுகிறார்.
  செல்லம் சாப்பிடறது சரி. அதென்ன கண்களுக்கு அருகே?
  குட்டிப்பையருக்கு என்ன வேண்டுமாம்? உதட்டைப் பிதுக்குகிறார்>

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 3 அது என்ன ஆங்கிலப்படமா?
   செல்லத்தின் முடிதான்
   தெரியலையே !

   நீக்கு
  2. //செல்லத்தின் முடிதான்
   தெரியலையே !// அந்த இடத்தின் நிறமாற்றம் அழகான இரு பொட்டுக்களாகத் தெரிகிறது. ஹிஹிஹி, நானே கண்டுபிடிச்சுண்டேன். :)

   நீக்கு
  3. Wuthering Heights படிச்சது இல்லையா? ரொம்பவே பிரபலமான நாவல்/கதை. எங்க பெண்ணிற்கு ஆங்கிலப் பாடம் இரண்டாவது தாளிற்குப் பத்தாம் வகுப்பிலேயோ என்னமோ இந்தப் புத்தகம். சுருக்கப்பட்ட பதிப்பு அது. பின்னால் மூலமும் வாங்கிப் படிச்சேன். தூர்தர்ஷனில் இரண்டாவது சானல் அறிமுகத்தின்போது தமிழ்நாட்டில் மெட்ரோ சானல் என்று வந்தது அல்லவா? அதில் இரவு நேரத்தில் இது ஒளிபரப்பானது. இரவு நேரம் கழித்து வந்ததால் எல்லாமும் பார்க்க முடியலை. வித்தியாசமான காதல் கதை.

   நீக்கு
  4. பிறகு படிக்கிறேன்.

   நீக்கு
 5. முதல் படத்தில் எல்லோரும் எதைப் பார்த்துப் பயப்படுகின்றனர்? புலியா, சிங்கமா?

  பதிலளிநீக்கு
 6. சோகத்தோடு மாவு பிசையும் பெண். சப்பாத்தி பண்ணும்போதாவது சிரிக்கட்டும். நமக்கும் அது ஜீரணம் ஆகணுமே! உணவு சமைக்கும்போது நமது மனோநிலை நல்லா இருக்கணும் இல்லையோ!

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  நோய் விலகி நல்ல செய்திகள் காதில் விழ வேண்டும்.

  பதிலளிநீக்கு
 8. நெல்லைத் தமிழனின் கேள்விகள் எபியின் பதில்கள்
  சுவாரஸ்யம். கம்ப ராமாயணப் பாடல் இன்னும் இனிமை.

  பதிலளிநீக்கு
 9. முதல் படத்தில் குழந்தைகள் அதிசயப் படுகிறார்கள்.
  அம்மா சோகம் காட்டுகிறார்.
  அப்பா அதிர்ச்சி !

  சப்பாத்தி மாவு பிசையும் பெண்ணிக்கு வேலை அதிகமோ.
  பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் வாங்கி பலம் காட்டிப்
  பிசையலாமே!!

  செல்லத்தின் கண்கள் தெரியவில்லை. கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடுகிறதோ.

  குழந்தை ஆணோ பெண்ணோ>?
  எதையோ தர மறுக்கிறார்கள். அப்பாடி என்ன எக்ஸ்ப்ரஷன்!!!!!

  பதிலளிநீக்கு
 10. மோட்டார் ஹோம் விளம்பரம்? சந்தோஷமாக இறங்குகிறார் மாடல்.
  நீல கௌன் வெகு அழகு.

  கீதாமா வுதரிங்க் ஹைட்ஸ் நினைவிருக்கிறது.
  அதைவிட ப்ரைட் அண்ட் ப்ரெஜுடிஸ் ரொம்பப் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரிய தலைங்க எல்லாம் பேசிக் கொள்கிறீர்கள் - நான் ஊமையாக வேடிக்கை பார்க்கிறேன்.

   நீக்கு
  2. Pride and Prejudice?அதுவும் சினிமாவா வந்திருக்கு இல்லையோ? மிஸ்டர் பென்னெட்டோ என்னவோ பெயர்! சரியா நினைவில் வரலை. உதரிங் ஹைட்ஸ் கதைக்காக எனக்கு ரொம்பப் பிடித்தது. வித்தியாசமான காதல்! அதோட ஆவியெல்லாம் வருமே! ஹிஹிஹிஹி!

   நீக்கு
  3. அந்த ஹீரோயின் நல்ல நடிப்புமா. ஹீரோவும்
   moody handsome guy.
   எல்லா சகோதரிகளுக்கும் கல்யாணம் ஆன பிறகு இவளுக்கு ஆகும். ஹிந்தில கூட வந்தது.
   பேரு மறந்து போச்சு.

   நீக்கு
 11. இரண்டு கேள்விகள் கேட்க வேண்டும் என்று நினைத்து கேட்காமலேயே விட்டு விட்டேன். நானும் பார்த்து விட்டேன் நான் கேள்வி கேட்காத நாட்களில் யாரும் கேட்க மாட்டார்கள். நெ.த. சில சமயங்களில் விதி விலக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே! இந்த வாரம் கேட்டுடுங்க .

   நீக்கு
  2. போன வாரம் நான் கேட்டிருக்கிறதா நினைச்சிருந்தேன். கடைசியிலே (ஆரம்பத்திலே இருந்தே) கேட்கலை போல!

   நீக்கு
 12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 13. 1. வித்தியாசமான செல்ஃபி போஸ்

  2. என் அக்கா வீட்டில் வளர்க்கப்படும் நாய் இரண்டு நாட்கள் சாப்பிடவில்லை. அதற்கு உடம்பு சரியில்லையா? டாக்டரிடம் செல்ல வேண்டும்? என்றெல்லாம் யோசித்தார்கள். இரண்டு நாட்களாக ரேஷன் அரிசி சாதம் போட்டிருப்பது தெரிய, அதை மாற்றி நல்ல அரிசி சோறு போட்டதும் சாப்பிட்டு விட்டது.

  3.இப்படி ரயில் படிக்கட்டில் பயணிக்க ஆசைப்பட்டதுண்டு. பெண்ணின் கவுன் அழகு.

  4. இருபது சப்பாத்திதான்மா, இருபது நிமிடத்தில் இட்டு விடலாம்.

  5. அச்சச்சோ! பட்டு குட்டியை யார் என்ன சொன்னார்கள்!

  பதிலளிநீக்கு
 14. கேள்வியும் பதிலும் அருமை.

  பதிலளிநீக்கு
 15. 1. "அங்கே பாரு அழகான வித்தியசாமான பறவை" !
  2. செல்லத்துக்கு ஒரு காதை காணோம் , கண்ணை மூடிக் கொண்டு என்ன சாப்பாடு என்று சொல் பார்க்கலாம்.

  3. வனதேவதையின் பல நாள் கனவு உதகை ரயில் பயணம் .

  4. இன்று இறைவன் ரொட்டிக்கு வழிசெய்து விட்டான் நாளை?

  5. யாரும் என் கூட விளையாடவரவில்லை

  பதிலளிநீக்கு
 16. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  நலமே விளைக எங்கெங்கும்..

  பதிலளிநீக்கு
 17. கம்ப இராமாயணப் பாடல் அழகு..
  ஸ்ரீ ராம ராம...

  பதிலளிநீக்கு
 18. உதரிங் ஹைட்ஸ் படித்த மாதிரியும் இருக்கிறது, சரியாக நினைவில் இல்லை. Pride& prejudiceதான் 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' என்று தமிழாக்கப் பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா? நான் கண்டு கொண்டேன், கண்டு கொண்டேனும் பார்க்கலை. ஆனால் பிரைட் அன்ட் ப்ரெஜுடிஸ் ஜேன் ஆஸ்டின் தானே? படிச்சாப்போலயும் இருக்கு! இல்லை போலவும் இருக்கு. விக்கி, விக்கிப் போய்ப் பார்த்துக்கறேன்.

   நீக்கு
  2. சாரி, தவறாக சொல்லி விட்டேன். சென்ஸ் & சென்சிபிலிட்டிதான் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்.  

   நீக்கு
 19. முதல் படம் - ஏதோ பார்க்/ஜூ போலவும் இருக்கு...குழந்தைகள் ஆச்சரியப்படுகின்றனர், அம்மா வருத்தம், அப்பா அதிர்ச்சி, கோபம் காட்டுகிறார்.

  இரண்டாவது படம் செல்லம் - நிம்மதியாக சந்தோஷமாகச் சாப்பிடுகிறது...ஹப்பா இன்றைக்கான சாப்பாடு கிடைச்சிருச்சு என்று.

  3 - ஆஹா என்ன அற்புதமான இயற்கைக் காட்சிகள் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டு வியந்து கொண்டு பயணிக்கும் பெண்..மலைப்பயணம் (நான் இப்படித்தான் ரயிலில் இப்படி நின்று கொண்டு பயணிப்பதை விரும்புபவள். பயணித்தும் இருக்கிறேன் மகனோடு செல்லும் போது) நானும் மகனும் படிக்கட்டில் அமர்ந்து கொண்டும் பயணித்ததுண்டு. தில்லி செல்லும் போது.

  4 - பையன் அடடா நம்ம தங்கைக்கு இப்படி வேலை செய்ய வேண்டியதாகிப் போச்சே என்று பார்க்கிறார் போலும். பெண் குழந்தை கொஞ்சம் சோகத்துடன்...

  5 - வாட்சப்பில் வந்தது. அக்குழந்தையின் எக்ஸ்ப்ரஷன் செம !! வாவ்!!!! நான் ரொம்ப ரசித்தேன் வாட்சப்பில் வந்தப்ப.... என்னை ஏன் இப்படிப் படுத்தறீங்க! ஹோம்வொர்க் பண்ண சொல்லி...ஏன் கூட வந்து விளையாடுங்களேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 20. 4 - அம்மா இப்படி எனக்கு வேலை கொடுத்துட்டுப் போய்ட்டாங்க அவங்க எல்லா திரும்பி வரதுக்குள்ள ரெடியா வைக்கணும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் அப்படித் தோன்றியது. முந்தைய படத்தில் இருப்பவர் உல்லாசப் பயணம் போகும் அம்மா என்றுகூட நினைத்தேன்.

   நீக்கு
 21. பெண் என்றால் சப்பாத்தி தயார் பண்ணணும், பையன் என்றால் கால் மடித்து ரெஸ்ட் எடுக்கணும் என்பது எப்போது மாறுமோ?

  விபரீதம் அறியாமல் போஸ் கொடுக்கும் பெண் தந்திக் கம்பத்தில் அடிபட்டுக்கொண்டாரான்னு யார் சொல்லுவா?

  நாய் - கார்ப்பெட்ல நின்னு பால்சோறு ஊட்டறாங்க. ஆனால் எனக்கென்னவோ நாயை எல்லோரும் கொடுமைப்படுத்தறாங்கன்னு தோணுது. வாளாகத்துல காலைல நாய் வளர்க்கிறவங்க அதுக்கு காலைக்கடன், வாக்கிங் அழைத்துச் செல்வதைப் பார்க்கிறேன். சுதந்திரத்தைப் பறித்தவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கப்போகிறதோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களின் இன்னொரு பரிமாணத்தை சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

   நீக்கு
 22. 1. அதோ பார் மைனா. அப்பா பேர் நைனா.2.அமெரிக்கா வாழ் இந்தியரின் செல்லம். சோறு இறங்கவில்லை. 3. ஊட்டி மலை ரயில்.4. அண்ணன் தங்கையிடம் சீக்கிரம் செய் ரொம்ப பசிக்குது என்று பார்க்கிறான். 5. இந்த சட்டை நல்லாவே இல்லை.

   Jayakumar

  பதிலளிநீக்கு
 23. 1. ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொரு உணர்வுகள். செல்ஃபி எடுப்பது போல இருக்கிறது

  2. இன்றைக்கு சாப்பாடு கிடைத்துவிட்டது

  3. சந்தோஷமான சுற்றுலாப்பயணம் அப்பெண்ணிற்கு

  4. சப்பாத்தி செய்யச் சொன்னால் அங்கு என்ன பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறாய்?

  5. குழந்தை மிக அழகாக இருக்கிறது. எதுவோ தனக்குப் பிடிக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது ஆதங்கத்துடன்

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 24. அனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள் ! தொற்று நீங்கி, அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  1.காயப்போட்ட வடாம் காக்கா தூக்கிட்டு போகுது. பாத்துக்க சொல்லிட்டு உள்ள போனேன். சத்தம் கேட்டு சமையல் வேலை பாதியில் விட்டுட்டு வெளியில் வந்து பாத்தா பசங்க போன் பாக்கறாங்க. குடும்பத்தலைவரும் அதை வீடியோ எடுக்க சொல்றார். என் வடாம் எல்லாம் வந்து வந்து தூக்கிட்டு போகுதே என்ன செய்வேன்?

  2.இன்னிக்கு எனக்கு சைவ சாப்பாடா?

  3. என் கண்களுக்கு Jane Austen ஆகவே தெரிகின்றார்.

  4.அவன்: நானும் சப்பாத்தி பண்ணுவேன்...நானும் சப்பாத்தி பண்ணுவேன்னு சொன்னல்ல ? இப்போ பன்னு. நான் எந்த உதவியும் பண்ண மாட்டேன். நீ எப்படி பன்றேன்னு பாக்கறேன்.

  அவள்: (மனதிற்குள் - என் வாயை குடுத்து மாட்டிக்கிட்டேன். அம்மா வர்றத்துக்குள்ள எப்படி செய்வேன்? இந்த சிடு மூஞ்சி கிட்ட யார் பேசுவா ? ம் எப்படியோ செய்ய வேண்டியது தான்).

  5. இந்த வெய்யில்ல எனக்கு diaper போட்டு, socks போட்டு, full dress போட்டு , கூடவே A .C யும் போட்டு ஏன் என்னை கொடுமை படுத்தறீங்க? தாங்க முடியலை. எல்லாம் போட்டுகிட்டேன்.ஒரு பார்க் உண்டா ? பீச் உண்டா? ஐஸ் கிரீம் ஆவது உண்டா? கேட்டா lock down ன்னு சொல்றீங்க. உங்க கூட முடியலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹாஹா! ஐந்தாவது கமெண்ட் மிகவும் ரசித்தேன்.

   நீக்கு
 25. கேள்வி - பதில் இன்று குறைவே! எனக்கு கேட்க மட்டும் தான் தெரியும்னு சொல்லி யாரும் கேள்வி கேட்கலையே! :)

  படங்கள் - படங்களுக்கு இது வரை வந்த விளக்கங்கள் நன்று. ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 26. ஆண்கள் சமையலில் சிறந்தவர்களா? பெண்களா?
  கல்யாணம் போன்ற பெரிய விசேஷங்களில் ஏன் ஆண்களே சமைக்கின்றனர்?
  நளபாகம் என்பது உண்மையில் அடுப்பில் வைத்துச் சமைக்காத சாப்பாடு செய்யும் முறை. ஆனால் நன்றாகச் சமைப்பவர்களை (அடுப்பில் வைத்துச் சமைப்பவர்கள்) நளன் மாதிரிச் சமைக்கிறான் என்று சொல்வது ஏன்?
  பீமனும் சரியான சாப்பாட்டு ராமன் மட்டுமில்லாமல் சமைக்கவும் தெரிந்தவன். ஏன் பீம பாகம் என்று சொல்வதில்லை? திருப்பதியில் தான் எனக்குத் தெரிந்து பீம விலாஸ் சங்கிலி ஓட்டல்கள் உண்டு.
  சில வீடுகளில் இரவு வரைக்கும் சாப்பாடைக் காலையிலேயே செய்து வைத்துவிடுகிறார்கள். அது நன்றாக இருக்குமா? அவ்வப்போது தேவைக்கு ஏற்பச் சமைப்பது நன்றாக இருக்குமா?
  உங்களுக்குப் பிடித்த உணவு எது? ஏன்?
  உங்கள் மனைவி உங்களுக்காக முதல் முதல் என்ன சமைத்துத் தந்தார்கள்? உங்கள் விருப்பமா? அல்லது அவங்க விரும்பினபடியா?
  அறிவு ஜீவிப் பெண்கள் எனில் சமையல் செய்யக் கூடாதா?
  அறிவு ஜீவி என்றால் என்ன? அவங்களுக்குத் தனியா என்ன அடையாளம்?
  சில பெண்கள் சமையல் செய்வதைக் கேவலமாக நினைப்பதோடு அல்லாமல் பெண்கள் புத்தகம் என்றால் அதில் "பாகற்காய் அல்வா" போன்ற செய்முறைகளைத் தான் போடுவார்கள். நான் இதெல்லாம் படிக்க மாட்டேன் என்கிறார்கள். அவங்கல்லாம் சாப்பிடவே மாட்டாங்களா? சாப்பிட்டால் யார் சமைத்துச் சாப்பிடுவார்கள்?

  பதிலளிநீக்கு
 27. கொஞ்சம் அறிவு ஜீவித்தனமாய்க் கேட்கத்தான் நினைச்சேன். ஆனால் அதுக்கு பதில் எல்லாம் வருமானு ஜந்தேகமா இருந்துச்சா! சரி வேண்டாம்னு விட்டுட்டேன். :))))

  உங்க குழந்தைகளுக்கு நீங்க சமைச்சால் பிடிக்குமா? இல்லை அவங்க அம்மாக்கள் சமைப்பது தான் பிடிக்குமா?
  எங்க குழந்தைங்க அப்பா சமையல்னாலே ஓடுவாங்க! மொத்தமாக ஒரு சாம்பார்/ரசம்னு வைச்சுடுவார் நிறையத் தக்காளி போட்டு! மேலே எடுத்தால் ரசம். அடியில் சாம்பார்! கலக்கினால் சாம்பார் ரசம்! தொட்டுக்க அநேகமா உ.கி. பொடியாக நறுக்கி வதக்குவார்.

  பதிலளிநீக்கு
 28. அதிரா இல்லாத எங்கள் பிளாக் கடுகு தாளிக்காத சாம்பார் போன்று உள்ளது.

   Jayakumar

  பதிலளிநீக்கு
 29. பதில்கள்
  1. ஓஹோ! பெயர் கேட்டிருக்கேன், பார்த்த நினைவு இருக்கு. ஆனால் கதைக் கரு மறந்து விட்டது.

   நீக்கு
 30. யாருமே கேள்வி கேட்கவில்லை என்ற கவலை வேண்டாம் இதோ உங்களுக்கான அடுத்தவார கேள்விகள்


  1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த மிக தைரியமான விஷயம் என்ன?

  2. உங்களுக்கு வேண்டிய மூன்று வரத்தை கடவுள் தருவதாக சொன்னால் நீங்கள் விரும்பும் வரங்கள் என்ன?


  3. உங்கள் பள்ளி பருவ நண்பர்களுடன் நீங்கள் இன்னும் தொடர்பில் இருக்கிறீர்களா?

  4, நீங்கள் இதுவரை வாங்கிய பொருட்களில் மிக விலையுயர்ந்த பொருள் எது

  5 , இன்றைய வாழ்வில் எது உங்களை மிகவும் பயமுறுத்துகிறது? (கொரோனாவை தவிர)

  6. நீங்கள் சிக்கலில் இருக்கும்போது நீங்கள் அழைக்கும் முதல் நபர் யார்?

  7. உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தினர் எப்போதும் தவறாகப் புரிந்து கொள்ளும் ஒரு விஷயம் என்ன?

  8 நீங்கள் எப்போதும் செய்ய விரும்பிய ஆனால் இதுவரை செய்யாத ஒரு விஷயம் என்ன?

  9. உங்களால் ஏதாவது ஒரு இசை கருவியை இசைக்க முடியுமா?


  10 .நீங்கள் சிறப்பாக சமைக்கும் டிஷ் எது

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!