ஞாயிறு, 18 ஜூலை, 2021

மாடியிலே மலரும் பூ என்ன பூ?

 

இந்தப் படத்தில் என்ன வித்தியாசமாக உள்ளது? 


இந்தப் பூக்கள் சாதாரணமாக திசை காட்டி போல நான்கு திசைகளைக் காட்டும் நான்கு மலர்கள் இருக்கும். இங்கு ஐந்தாவதும் உள்ளது! 


பிரம்ம கமலம் - ஒரு வருடம் முன்பு


பிரம்ம கமலம் - - இப்போது 


இன்று - - 


எலுமிச்சம் புல் ! lemon grass !! முன்பு - - 


இப்போது - - -


புளிச்ச கீரையும், சோத்துக் கற்றாழையும் 


நாகல் பழ மரம் 


அடுத்த தெருவில் காட்டுத் தீ ! (Forest  flame )


மரு(தாணி) தோன்றி .. 


சங்கு புஷ்பம் 


ரஜினிகந்தா - ரஜினி அரசியலுக்கு வரும்போது பூக்கலாம் என்று காத்திருக்கிறதோ? 


அலிபாபாவும் - - -

40 திருடர்களும் ! 


திருநீற்றுப் பச்சிலை (திருநீற்றுப் பச்சிலை இலைகளும் மணம் வீசுவதுண்டு. உருத்திரசடை, பச்சை, பச்சிலை, சப்ஜா என்ற பெயர்களும் இதற்கு உண்டு.) 


Gardenia blossomed and stayed on for a week with delectable fragrance
(கார்டேனியா மலர்ந்து ஒரு வார காலம் இனிய மணம் பரப்பியது) 



= = = = =

38 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. பசுமையான காட்சிகள் நன்று.

    பதிலளிநீக்கு
  3. பசுமையான , குளிர்ச்சியான படங்கள் ...

    பதிலளிநீக்கு
  4. குளிர்ச்சியாக செடிகளின் ஊர்வலம் நன்று

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    நல்ல அழகான செடிகள், மலர்களுடன் பதிவு அருமையாக உள்ளது. படங்களுக்கேற்ற வரிகள் கவர்ந்தன. அலிபாபாவும், 40 திருடர்களும் என்ற வாசகப் படங்கள் நன்றாக உள்ளன. இறுதியில் இடம் பெற்ற பூக்கள் அழகாக கண்களுக்கு விருந்தாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  7. மாடித்தோட்டம் அருமை.

    நாகல் பழ மரம் தொட்டியில் வைத்து இருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  8. நாவல்,வாழை,சீதா,அசோகா,தென்னை,நாரத்தை,கறிவேப்பிலை,ரங்கோன் மல்லி,பிரண்டை எல்லாமே தரையில் தான்

    பதிலளிநீக்கு
  9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. மாடித் தோட்டத்திற்கு
    ஏதோ நம்மால் ஆன சிறு கவிதை!..

    ஆடி வரும் அழகிளைய
    அணி வண்ணப் பூச்சிகட்கு
    ஆகட்டும் என்றிவர் தான்
    மாடியிலே தோட்டம் கண்டார்
    மனங்குளிர வாசம் கொண்டார்
    பாடி வரும் குருவி கட்கும்
    நாடி வரும் தென்றலுக்கும்
    பந்தல் நிழல் ஈதென்று
    நெஞ்சம் எல்லாம் ஈரம் கொண்டார்
    நிழல் இருத்திப் புனிதம் கொண்டார்..

    தேன் கொண்ட மலர்களைத் தான்
    தினம் பலவாய் பூத்து நிற்கும்
    பொன்மலர்கள் தனை நோக்கி
    கண் பனித்துக் களித்திருக்கும்..
    கவிதையிலே அழகு தனை
    அன்புடனே சொல்லச் சொல்ல
    அங்கிருக்கும் தென்றலில் தான்
    தண் தமிழும் கலந்திருக்கும்...
    ஃஃஃ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

      ஆகா அழகான கவிதை. ரசித்துப் படித்தேன்.

      மாடித்தோட்டத்தை கண்களால் கண்டதும் உங்களுக்கு கவிதை வந்தது. கவிதையை பாடிப் பார்க்க பார்க்க ஜில்லென்ற பசுமை மிகு மாடித்தோட்டமும் எங்கள் மனதுக்குள் என்றும் மணம் வீசிக்கொண்டே நிற்கின்றது. அருமையான கவிதை. அழகான கவிதைக்கு பாராட்டுக்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. மலர்கள் மட்டுமா மணக்கின்றன, தமிழும் மணக்கின்றது.  நன்றி துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    3. தங்கள் அன்பினுக்கு நன்றி.. நன்றி..

      நீக்கு
    4. ஆஹா! அருமையான கவிதையைப் பெற்ற தோட்டம்! அழகுத்தமிழ் கொஞ்சி விளையாடுகிறது.

      நீக்கு
    5. கவிதையை ரசித்தேன். நன்றி.

      நீக்கு
    6. தோட்டமும், கவிதையும் அருமை!

      நீக்கு
  12. தோட்டமும் தோட்டத்துச் செடிகளும் அருமை. நல்ல உழைப்பு. கவனம். கடைசியில் உள்ள பூவைப் பார்த்தால் பாரிஜாதம் போலத் தெரிகிறதே! அப்புறமா பிரம்ம கமலம் என்று சொல்வது! பிரம்மகமலம் தானா? தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரம்ம கமலம் - பூத்தால்தான் சரியாகச் சொல்லமுடியும் ?

      நீக்கு
  13. நவாப்பழ மரம் தானே அது நாகல் பழம் என்று சொல்கிறீர்கள்? நாங்க காசியில் விட்டு விட்டோம். ஆகையால் நவாப்பழம் சாப்பிடுவதில்லை. சங்குப்பூ வெள்ளை, ஊதா என எங்க வீட்டிலும் இருந்தது. இதை எல்லாம் பார்க்கையில் மறுபடி தோட்டம் உள்ள வீட்டில் வாழ வேண்டும் என்னும் ஆசை தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாகையில் நாகப்பழம் என்றே சொல்லுவார்கள். என் மனைவி (மதுரை என்பதால் ) நவ்வாப்பழம் என்று சொல்வாள். இன்னும் சிலர் நாவல் பழம் என்பார்கள். குரங்கு + முதலைக் கதையில் கூட நாவல் மரம் / நாவல் பழம் என்று படித்த ஞாபகம். Call by any name - a rose is a rose ---

      நீக்கு
  14. அனைத்துப் பசுமை காட்டும் செடி கொடி ,மரங்கள் மிக இனிமை. தழைத்தோங்கி வளரட்டும். மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
  15. பசுமை ததும்பும் செடிகளும், பூக்களும் மனதைக் கவர்ந்தன.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. அழகிய தோட்டம்.
    புளித்த கீரை, லெவன் கிராஸ், நாவல்பழம்,பிரமகமலம் எங்கள் வீட்டில் இல்லை. சங்குப்பூ நீலநிறமும் இருக்கிறது.


    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!