திங்கள், 11 அக்டோபர், 2021

'திங்க'க்கிழமை  :  நிலக்கடலை கிரேவி / மசாலா / கறி - கீதா ரெங்கன் ரெஸிப்பி

 

 நிலக்கடலை கிரேவி / மசாலா / கறி


நம்ம எபி சமையலறைக்கு வருகை தரும் அனைத்து ரசிகப்!!!! பெருமக்களுக்கும் எபி சமையல் குழு அன்புடன் வரவேற்கிறது. இது வட இந்தியாவில் செய்யப்படுவது என்றாலும் இன்று இங்கு பகிர்ந்திருப்பது நான் செய்யும் ஒரு முறை. (இதை என் மனதில் தோன்றியபடி பல முறைகளில் செய்வதுண்டு. மற்ற கிரேவிகளையும் சேர்த்துதான் சொல்கிறேன்)  இந்த வகை சப்பாத்தி, பூரி வகையறாக்களுக்கு நல்ல சேர்க்கை.

இருந்தாலும் நிலக்கடலை வைத்துச் செய்யப்படும் கிரேவி மஹாராஷ்டிராவில் பிரசித்தம். நான் அங்கு சென்றிருந்த போது உறவினரின் நட்பு வீட்டில் விரதம் என்று சாபுதானா கிச்சடி அதான் ஜவ்வரிசி கிச்சடிக்குத் தொட்டுக் கொள்ள தான்யாச்சி ஆம்ட்டி / दाण्याची आमटी / Danyachi Amti செய்திருந்தாங்க. நன்றாக இருந்தது. விடுவேனா உடன் செய்முறை தெரிந்துகொண்டேன். இது தயிர், கோக்கம் கலந்தது. கிட்டத்தட்ட புளிசேரி/மோர்க்குழம்பு வகை என்று சொல்லலாம்.

ஷெங்க்தானா ஆம்ட்டி/Shengdana Amti शेंगदाना आमटी, Shengdanyachi Amti/ஷெங்க்தான்யாச்சி ஆம்ட்டி என்றெல்லாம் சொல்லப்படுவது தயிர் கலக்காமலும், தேங்காய் சேர்த்தும் சேர்க்காமலும் செய்வதுண்டு. வேறொரு முறையிலும் செய்வாங்க.  இவற்றை நான் வீட்டில் செய்ய நேரும் போது பிறிதொரு திங்க வில் பகிர்ந்து கொள்கிறேன். கண்டிப்பாக வரும். பல முறை எல்லா வகைகளும் செய்திருந்தாலும் படம் எடுக்காததால் பகிர முடியவில்லை.

இன்றைய திங்கவில் இந்தச் செய்முறை... அதற்கு முன்...

படங்களை நான் ஆட்டோ கொலாஜ் முறையில் செய்வதில்லை. ஒவ்வொரு பெட்டியிலும் அந்தப் பெட்டியில் நான் கோர்க்கும் படங்களுக்கான விவரணங்கள் மட்டும் கொடுப்பதால் எடுத்திருக்கும் படங்களில் சரியாக உள்ளதை எடுத்து படங்களின் எண்ணிக்கை, விவரணங்களுக்கு ஏற்ப ஒவ்வொன்றின் அளவையும் மாற்றிப் போட்டுச் செய்கிறேன். அதனால்தான் சில சமயம் படங்கள் அதிகமாக இருந்தால் சிறிதாகிவிடுகிறது. பெட்டிகளையும் குறைக்க எண்ணியதால் எழுத்துகளும் ஒரளவு வாசிக்க முடிந்த அளவில் தட்டச்சு செய்து வந்தேன். 

சென்ற திங்கவில் நட்புகளின் பரிந்துரைப்படி இம்முறை கொலாஜில் படங்களைச் சற்று பெரிதாகவும் எழுத்துகளையும் பெரிதாகக் கொடுத்திருக்கிறேன். சரியாக உள்ளதா என்று சொல்லவும். என் மனதைப் போல் வெள்ளையான (ஹிஹிஹி) பின்புலம் தற்போது அந்தப் பட்டியலில் இல்லை. எனவே கொஞ்சம் புகை போன்ற பின்புல நிறத்தைக் கொடுத்துள்ளேன்.  எழுத்துகள் வாசிக்க முடிகிறதா என்று சொல்லுங்கள்.

அடுத்து பெட்டியிலேயே செய்முறையை எழுதுவதால் மொபைலில் வாசிப்பது  கொஞ்சம் கஷ்டமாக இருக்கு என்பதற்கு, இந்த முறை எழுத்துகளைப் பெரிதாக்கியுள்ளேன். மொபைலில் எப்படி உள்ளது என்று சொல்லவும். பெட்டியிலேயே எழுதுவதற்குக் கொஞ்சம் மன்னிச்சுக்கோங்க. 😁😁 அது மகனுக்கும் அனுப்புவதால் இப்படி. பதிவிலேயே படங்களும் அல்லது பெட்டியில் படங்கள் கொடுத்து, செய்முறையை வெளியில் கொடுத்தால் அந்தச் சுட்டியை மகனுக்கு அனுப்பினாலும் அவன் அதைப் பார்ப்பது அரிது என்பதாலும் அவன் சேமித்து வைப்பதும் கடினம் என்பதால் இப்படிச் செய்கிறேன். அதனால் கொஞ்சம் பொறுத்துக்கோங்க!!!  😊😊

சரி இனி செய்முறை...




எபி ஆசிரியர்கள் மற்றும் எபி சமையலறை ரசிகப்பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.  மற்றொரு திங்கவில் சந்திப்போம் சுவைப்போம். அதுவரை உங்கள் அடுக்களையில் ருசித்து சுவைத்துக் கொண்டிருங்கள்! 


36 கருத்துகள்:

  1. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் என்னாளும் நலமுடன் இருக்க
    இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. நம் கீதா ரங்கனின் நிலக்கடலை சட்டினி

    அமர்க்களமாகப் பதிவாகி இருக்கிறது.
    என்னைக் கேட்டால் அவர் தனியாக ஒரு அறுசுவை கிச்சன் நடத்தி

    பெரிய அளவில் சம்பாதிக்க முடியும்.
    அத்தனை திறமை இருக்கிறது அவரிடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா நீங்க அன்பினால் என்னை ரொம்பப் புகழ்ந்திட்டீங்க. அதெல்லாம் ஒன்றுமில்லை. சாப்பிட்டுப் பார்த்தால்தானே தெரியும் ஹாஹாஹாஅஹ

      என்றாலும் உங்கள் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க மிக்க நன்றி அம்மா.

      கீதா

      நீக்கு
  3. ஷெங்க்தானா ஆம்ட்டி/
    நிலக்கடலை மசாலா கறி,
    படங்கள் வரிசையாக வர,
    ஒன்றுமே தெரியாதவர்கள் கூடப்
    புரிந்து கொள்ளும் வகையில்
    படத்துக்குள் விளக்கங்கள் பார்த்தாலே பிரமிப்பாக இருக்கிறது.

    குக்கிங்க் வகுப்பு தனியாக எடுப்பது போல
    அருமையாகச் செய்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா மீண்டும் அம்மா...

      மிக்க மிக்க நன்றி வல்லிம்மா. உங்கள் ஊக்கம் தரும் கருத்திற்கும், பாராட்டிற்கும்.

      கீதா

      நீக்கு
  4. காலை வணக்கம் அனைவருக்கும்.

    பதிவைப் பார்த்துவிட்டேன். பிறகுதான் முழுமையாகப் படிக்கணும், நேரம் கிடைத்தால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெதுவா பாத்துக்கோங்க நெல்லை. நீங்கள் ரொம்ப பிஸி என்று தெரிகிறது

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கொரோனா தொற்று அதிகரித்திருப்பதாய்த் தொலைக்காட்சித் தகவல். விரைவில் குறைந்து நல்ல நிலைக்குத் திரும்பப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  7. நேத்திக்கு எங்க வீட்டுக் கொலுவிற்கு வேர்க்கடலைச் சுண்டல். செய்யும்போதே நினைத்துக் கொண்டேன். சப்பாத்திக்குப் பண்ணறாப்போல் ஒரு நாள் பண்ணணும் என. இங்கே வந்தால் இன்னிக்குக் கீதா ரெங்கனின் செய்முறை. நல்லா இருக்கு/ ஆனால் என்னதான் வேக வைத்தாலும் வேர்க்கடலை குழைவதில்லை. வாயில் போட்டால் குழைந்திருப்பது தெரியும். சப்ஜியில் முழுசாகவே தெரியும். சேர்ந்த்துக்கறது கொஞ்சம் கஷ்டம். அதான் கொஞ்சம் வேர்க்கடலையைஅரைத்து விடுகிறோம். நல்லதொரு செய்முறைக்குறிப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா கடலை குழைவதில்லை. ஆனால் நீங்கள் சொல்லுவது போல் வாயில் போட்டால் குழைந்திருப்பது தெரியும்தான். ஆமாம் அதுக்குத்தான் அரைத்துவிடுவது. கொண்டைக்கடலை சப்ஜிக்குக் கூட வெந்த கொண்டைக்கடலையை அரைத்துவிடுவதுண்டு.

      நல்லதொரு செய்முறைக்குறிப்புக்கு நன்றி.//

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
    2. அட? ஆமாம், பானுமதி சொன்னாப்போல் இதே ரெசிபி இந்த வாரம் "திங்க"ச் சொல்லி இருக்காங்களே! என்ன வித்தியாசம்னா இதில் அம்சூர் பொடி, ஜீரகப்பொடி, சோம்புப் பொடி சேர்க்கச் சொல்லி இருக்காங்க. அதில் சுக்குப் பொடி! அம்புடுதேன்! :))))))

      நீக்கு
    3. இது அதிகமா போணி ஆகலை! இந்த வாரம் ஆயிருக்கோ? போய்ப் பார்க்கிறேன்.

      நீக்கு
  8. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  9. வித்தியாசமான வேர்க்கடலை குறிப்பிற்கு அன்பு நன்றி கீதா! சேர்த்திருக்கும் பொருள்களைப்பார்த்தால் மிகவும் சுவையாக இருக்குமென்று நினைக்கிறேன். விரைவில் செய்து பார்க்கிறேன். நீங்கள் காய்ந்த வேர்க்கடலையை ஊறவைத்து செய்திருக்கிறீர்கள். பச்சை வேர்க்கடலையில் செய்தால் இன்னும் ருசி கூடுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மனோ அக்கா காய்ந்த கடலையைத்தான் ஊற வைத்துச் செய்திருக்கிறேன் மனோ அக்கா, பச்சைக்கடலயில் செய்தால் மணம் கூடுதலாக இருக்கும் தான். இது செய்த போது சீசன் இல்லை அதனால் கடலை ஊற வைத்து

      இங்கு ஃப்ரெஷ் இப்ப்போது நன்றாகக் கிடைக்கிறது.

      அக்கா இந்த ரெசிப்பி நல்ல சுவையாக இருக்கும்.

      மிக்க நன்றி மனோ அக்கா

      கீதா

      நீக்கு
  10. செய்முறை விளக்கம் அருமை... படத்தை சொடுக்கியும் பெரிதாக்கி வாசிக்கலாம்... இந்த நுட்பமும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி உங்கள் கருத்திற்கு. வாசிக்க முடிகிறது இல்லையா? நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  11. இது பலரும் விரும்பும் வகையில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு, பொதுவாக நிலக்கடலை எல்லாருக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன்

      கீதா

      நீக்கு
  12. சுவையாகத்தான் இருக்கும் போல் தெரிகிறது. செய்து பார்த்து விடலாம். நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவையாக இருக்கும் பானுக்கா. செய்து பாருங்க. மிக்க நன்றி பானுக்கா, கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  13. சுவையாக இருக்கும் போல... நிறைய புரதம். செய்து பார்க்கத் தூண்டுது.

    ஆமா.. தயிர் கோக்கம் கலந்ததுனு போட்டிருக்கிங்க, செய்முறைலயோ படங்கள்ளலயோ தயிரைக் காணோமே? கோக்கம்னா என்னனு தெரியாது அதனால கோக்கம் இருந்தாலும் இல்லாட்டாலும் ஒண்ணு தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அப்பாதுரை ஜி.

      இது அந்த ரெசிப்பி இல்லை என்று போட்டிருக்கிறேனே. கோக்கம், தயிர் கலந்து இருக்கும் ரெசிப்பி வேறு. அதுவும் செய்யறப்ப போட்டோ எடுத்துப் போடுறேன் இங்கு.

      மிக்க நன்றி அப்பாதுரைஜி

      கீதா

      நீக்கு



  14. மேலே இருக்குற ரெண்டு வரிக்கான இடைவெளி உங்க மனசா நினைச்சுக்குங்க... ரெசிபிக்கு நன்றி. கோக்கம்னா என்னனு மட்டும் சொல்லிடுங்க, தூக்கம் வராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோக்கம் - குடம்புளி. நல்ல கறுப்பா இருக்கும்!
      ஊற வச்சு சேர்க்கணும். எனக்கு பெரிய வித்தியாசம் தெரியரது இல்லை. எங்க வீட்ல யாருக்கும் பிடிக்கிறதும் இல்லை.

      ‘கோக்கம்னா என்னனு மட்டும் சொல்லிடுங்க, தூக்கம் வராது.’
      இப்போ போய் நல்லா தூங்குங்க…

      நீக்கு
    2. மேலே இருக்குற ரெண்டு வரிக்கான இடைவெளி உங்க மனசா நினைச்சுக்குங்க...// ஹாஹாஹாஹாஹா

      அப்பாதுரைஜி, இரண்டு வகை இருக்கு. கோக்கும், குடம்புளி இரண்டும் ஒன்று என்று சாதாரணமாக நினைப்பதுண்டு. இரண்டுமே ஒரே குடும்பம்தான்!!! ஆனால் கொஞ்சம் வித்தியாசம் உண்டு.

      கோக்கும் கோவா, மஹாராஷ்ட்டிரா கொங்கன் பகுதிகளில் பயன்படுத்துவாங்க. குடம்புளி கேரளத்தின் மலபார் பகுதியில் பயன்ப்டுத்துவாங்க. மலபாரில் பொதுவாக மீன் சமைக்கப் பயன்படுத்துவாங்க.

      கொங்கன், மஹாராஷ்ட்டிரா கோவாவில் கோக்கும் ஜூஸ் கிடைக்கும் வீட்டிலும் தயாரிக்கலாம். கோக்கும் ஜூஸ் சம்மர்ல குடிக்கறது நல்லது.

      இரண்டுமே புளிப்புத் தன்மை உள்ளது. புளிக்குப் பதிலா பயன்படுத்தப்படுவது.

      காயவைக்கப்பட்டு கிட்டத்தட்ட நார்த்தாங்கா ஊறுகாய் போல ஆனா கறுப்பு கலரில் கிடைக்கும்.

      கோக்கும் பல மருத்துவ குணங்கள் கொண்டது. இன்னும் எழுதலாம். ஆனா பதிவு போல ஆகிடும் ஸோ ஒரு லிங்க் தரேன். அங்க வித்தியாசம், மருத்துவ குணங்கள் எல்லாம் இருக்கும்

      இங்க ஒரு லிங்க் தரேன்

      https://recipesaresimple.com/tamarind-gambooge-kokum/#:~:text=Kokum%20is%20quite%20often%20used,well%20as%20Non%2DVeg%20Curries.

      மிக்க நன்றி அப்பாதுரை ஜி

      கீதா

      நீக்கு
    3. கேள்விப்பட்டடேயில்லை. கோக்க அதாவது மிக்க நன்றி.

      நீக்கு
  15. அப்பாதுரை ஜி....

    இருந்தாலும் நிலக்கடலை வைத்துச் செய்யப்படும் கிரேவி மஹாராஷ்டிராவில் பிரசித்தம். நான் அங்கு சென்றிருந்த போது உறவினரின் நட்பு வீட்டில் விரதம் என்று சாபுதானா கிச்சடி அதான் ஜவ்வரிசி கிச்சடிக்குத் தொட்டுக் கொள்ள தான்யாச்சி ஆம்ட்டி / दाण्याची आमटी / Danyachi Amti செய்திருந்தாங்க. நன்றாக இருந்தது. விடுவேனா உடன் செய்முறை தெரிந்துகொண்டேன். இது தயிர், கோக்கம் கலந்தது. கிட்டத்தட்ட புளிசேரி/மோர்க்குழம்பு வகை என்று சொல்லலாம்.

    ஷெங்க்தானா ஆம்ட்டி/Shengdana Amti शेंगदाना आमटी, Shengdanyachi Amti/ஷெங்க்தான்யாச்சி ஆம்ட்டி என்றெல்லாம் சொல்லப்படுவது தயிர் கலக்காமலும், தேங்காய் சேர்த்தும் சேர்க்காமலும் செய்வதுண்டு. வேறொரு முறையிலும் செய்வாங்க. இவற்றை நான் வீட்டில் செய்ய நேரும் போது பிறிதொரு திங்க வில் பகிர்ந்து கொள்கிறேன். கண்டிப்பாக வரும். பல முறை எல்லா வகைகளும் செய்திருந்தாலும் படம் எடுக்காததால் பகிர முடியவில்லை.//

    இதுல சொல்லிருக்கேன் பாருங்க. இந்த ரெண்டு பாரால உள்ள ரெசிப்பிஸ் அப்புறம் செய்யும் போது படம் எடுத்துப் போடுகிறேன். ந்னு சொல்லிருக்கேன்.

    இன்றைய ரெசிப்பி பொதுவா வட இந்தியாவில் செய்யும் க்ரேவி வகை நான் செய்யும் முறையில் செய்ததைப் பகிர்ந்திருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. படங்களுடன், செஉமுறை அருமையாக இருக்கிறது கீதா.
    அடுத்து உங்கள் ரெசிபிகலை வரவேற்கிறேன்.
    வட இந்திய முறைதான் தான் நிறைய இருக்கே! உங்களின் சமையல் பலவித முறையில் செய்து பார்க்கும் ஆர்வம் எல்லாம் உங்கள் திறமையை சொல்கிறது.

    வல்லி அக்கா சொன்னது போல் செய்யலாம். அல்லது
    சமையல்கலை கற்று கொடுக்கும் வகுப்பு நடத்தலாம்.


    ரசிக பெருமக்களின் விருப்பம்.


    //கோக்கும் பல மருத்துவ குணங்கள் கொண்டது. இன்னும் எழுதலாம். ஆனா பதிவு போல ஆகிடும் ஸோ ஒரு லிங்க் தரேன். அங்க வித்தியாசம், மருத்துவ குணங்கள் எல்லாம் இருக்கும் //

    போய் பார்க்கிறேன் நானும்.

    பதிலளிநீக்கு
  17. மிதமான சூட்டில் சமைப்பது நல்ல குறிப்பு.
    நான் அப்படித்தான் செய்வேன்.

    பதிலளிநீக்கு
  18. //அது மகனுக்கும் அனுப்புவதால் இப்படி. பதிவிலேயே படங்களும் அல்லது பெட்டியில் படங்கள் கொடுத்து, செய்முறையை வெளியில் கொடுத்தால் அந்தச் சுட்டியை மகனுக்கு அனுப்பினாலும் அவன் அதைப் பார்ப்பது அரிது என்பதாலும் அவன் சேமித்து வைப்பதும் கடினம் என்பதால் இப்படிச் செய்கிறேன். அதனால் கொஞ்சம் பொறுத்துக்கோங்க!!! 😊😊//

    படிக்க முடிகிறது. இப்படியே அனுப்பலாம் கீதா.

    பதிலளிநீக்கு
  19. இதெல்லாம் எனக்கு பார்த்துக் கொள்ள மட்டுமே.. பச்சைக் கடலையில் குழம்பு வைத்ததெல்லாம் அந்தக் காலம் ஆகி விட்டது...

    விரிவான சமையல் குறிப்புகள் அனைவருக்கும் ஆகட்டும்..

    மனதார பாராட்டுகின்றேன்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  20. நல்ல செய்முறை. மொபைலில் வாசிக்கக் கூடியதாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!