வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

வெள்ளி வீடியோ : பிறந்தபோது பிறந்த சொந்தம் நிறைந்ததம்மா நினைவிலே வளர்ந்தபோது வளர்ந்த சொந்தம் மலர்ந்ததம்மா மனதிலே

 ​1962 ல் வெளியான பாதகாணிக்கையில் இல்லாத நல்ல பாடல்களா?  

அதிலிருந்து ஒரு பாடல்.

பி ஸுசீலாவும் எல் ஆர் ஈஸ்வரியும் பாடியிருக்கும் ஒரு இனிய பாடல் இந்த வாரம்..

ஜெமினி கணேசன் சாவித்ரி நடித்துள்ள இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் கே சங்கர்.  கண்ணதாசன் பாடல்களுக்கு இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி.

உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
உனது நிலா விண்ணிலே எனது நிலா கண்ணிலே
உனது நிலா விண்ணிலே எனது நிலா கண்ணிலே
உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே

உனது மலர் கொடியிலே எனது மலர் கையிலே
உனது மலர் கொடியிலே எனது மலர் கையிலே
உனது நிலா வானிலே எனது நிலா அருகிலே
உனது நிலா வானிலே எனது நிலா அருகிலே
உனது மலர் கொடியிலே எனது மலர் கையிலே

கண் மயங்கிப் பயணம் போகும் உனது தோணி கடலிலே
கண் மயங்கிப் பயணம் போகும் உனது தோணி கடலிலே
காலம் பார்த்து வந்து சேரும் எனது தோணி கரையிலே
காலம் பார்த்து வந்து சேரும் எனது தோணி கரையிலே
காற்றினாலும் மழையினாலும் எனது சொந்தம் மாறுமா
காயுமா ………கனியுமா கையில் வந்து சேருமா
கையில் வந்து சேருமா

பிறந்தபோது பிறந்த சொந்தம் நிறைந்ததம்மா நினைவிலே
வளர்ந்தபோது வளர்ந்த சொந்தம் மலர்ந்ததம்மா மனதிலே
ஆற்று வெள்ளம் தடையை மீறி பாய்ந்து செல்லும் அவரிடம்
ஆசையா........இன்னுமா .. அந்த நெஞ்சம் என்னிடம்
அந்த நெஞ்சம் என்னிடம்

உனது மலர் கொடியிலே
எனது மலர் மடியிலே
உனது நிலா விண்ணிலே
எனது நிலா கண்ணிலே
உனது மலர் கொடியிலே
எனது மலர் மடியிலே


= = = = =
வெள்ளித்திரை இலக்கிய பிம்பங்கள் (KGG) 

புறநானூறு 112 ஆவது பாடல் : 

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில், எந்தையும் உடையேம், எம் குன்றும் பிறர் கொளார்; இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில், வென்று எறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! 

பொருள் : அந்த மாதத்தில், இந்த வெண்ணிலவு இப்படியே எரிக்கும் வேளையில், எம் தந்தையை உடையவராயும் இருந்தோம்; எம் குன்றினையும் பிறர் கைக்கொள்ளவில்லை. இந்தத் திங்களில், இவ் வெண்ணிலவில், வென்றெறி முரசின் வேந்தர்கள் எம் குன்றையும் கவர்ந்து கொண்டனர்; யாமோ எம் தந்தை இல்லாதவராகவும் ஆயினேம்!


படம் : நாடோடி. பாடல் : கண்ணதாசன் 

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே

அந்த ஒரு நாள் ஆனந்தத் திருநாள்
இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ?
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாவை மேனியிலே
நீ பார்த்தாயே வென்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவள் இருந்தாள் என் அருகே நான்
அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே

வானும் நதியும் மாறாமல் இருந்தால்
நானும் அவளும் நீங்க்காமல் இருப்போம்
சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
காதல் மேடையிலே நீ
சாட்சியடி வென்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே நான்
அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே

ஆடும் கனியை ஆடாமல் எடுத்தான்
வாடும் மலரை வாடாமல் தொடுத்தான்
ஆடும் கனியை ஆடாமல் எடுத்தான்
வாடும் மலரை வாடாமல் தொடுத்தான்
சூடிக் கொடுத்தான் பாடி முடித்தான்
பாவை மேனியிலே நீ
பார்த்தாயே வென்ணிலவே


= = = =

79 கருத்துகள்:

  1. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் என்னாளும் சுக சௌக்கியங்களுடன் வாழ இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. இரண்டுமே அமுதான பாடல்கள்.

    பாத காணிக்கை படத்தின் எல்லாப் பாடல்களுமே
    நன்றாக இருக்கும்.
    வீடு வரை உறவு இதில் தானே வரும்..
    அசோகன், சாவித்திரி, ஜெமினி, விஜயகுமாரி எல்லோருமே
    போட்டி போட்டு நடித்திருப்பார்கள்.

    அத்தை மகனே போய் வரவா. என்ன அருமையாக
    இருக்கும். குரல்கள், நடிகர்கள், இசை,பாடல்வரி
    எல்லாமே மிக மிக சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். அந்தக் காலத்துப் பாடல்களில் ஆழம் இருந்தது.

      நீக்கு
  3. ''காற்றினாலும் மழையினாலும் எனது சொந்தம் மாறுமா
    காயுமா ………கனியுமா கையில் வந்து சேருமா
    கையில் வந்து சேருமா''

    ஆசையா இன்னுமா அந்த நெஞ்சம் என்னிடம்....
    பதின்ம வயதில் கேட்ட பாடல் இரு எழுத்துக் கூட மறக்கவில்லை.
    எப்படித்தான் இசைதார்களோ,
    எப்படித்தான் அமைத்தார்களோ.
    என்னாளும் மனதில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். பழைய நினைவுகளை மேலே கொண்டுவரும் பாடல்கள்.

      நீக்கு
  4. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  5. ''வானும் நதியும் மாறாமல் இருந்தால்
    நானும் அவளும் நீங்க்காமல் இருப்போம்
    சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
    சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
    காதல் மேடையிலே நீ
    சாட்சியடி வென்ணிலவே''

    எம் ஜி ஆர் நன்றாக நடித்திருப்பார்.
    அந்தக் காலத்தில் பார்வையில்லாமல் நடிப்பது என்றால் இடைவிடாமல்
    கண் சிமிட்டுவது:))))

    பாடல் இலக்கியத்திலிருந்து இங்கேயும் வந்தது.
    பெரிய வீட்டுப் பெண் படத்திலும் வந்தது!!!
    இரண்டு சிறந்த பாடல்களுக்கும்
    மிக மிக நன்றி.
    ஸ்ரீராம் அன்பு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை வணக்கம்.

    இனிமையான இரு பாடல்கள்.

    அந்த நாட்களின் பாடல்கள், இசையமைப்பவர், பாடலாசிரியர், கேட்பவர் என எல்லோரையும் மனமகிழ்ச்சியில் ஆழ்த்திய பாடல்கள்.

    குப்பை டமுக்கு டப்பாக்கள் கோடியில் சம்பளம் வாங்கும்காலம். எத்தனை சொன்னாலும் பழைய சாத்த்தின் மகிமை, வாரத்தில் எப்பவாவது கிடைக்கும் டிபனின் மகிமை, வருடத்தின் சிலபல நாட்களில் கிடைக்கும் பட்சணங்கள், பணம் என்பதே குறுக்கே வராத (ஒரு பசங்கள்டயும் வெளில ஊர்சுத்த விதவிதமாச் சாப்பிட பைசா இருக்காது) நட்பு, மிக எளிமையான வாழ்க்கை... இதன் இன்பம் இப்போதுள்ளவர்களுக்குப் புரியாது, தெரியாது

    பதிலளிநீக்கு
  7. சமீபத்திய வெள்ளித் திரை இசைப் பதிவுகளில் -

    இதுவே சிறப்பு...

    பாட்டும் பொருளும் இசையும் பதமும் நடிப்பும் நளினமும் - ஆகா!..

    என்னே யாம் பெற்ற வரம்!..

    பதிலளிநீக்கு
  8. நான் பிரபந்தங்கள் படித்துக்கொண்டிருக்கும்போது, சட் என.. இதனை கண்ணதாசன் இந்தப் பாட்டில் சொல்லியிருக்கிறாரே என்று தோன்றும். குறித்து வைத்ததில்லை. இனி அப்படி வாய்ப்பு வந்தால் கேஜிஜி சாரிடம் பெஇர்ந்துகொள்கிறேன்.

    நல்ல பகுதி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம். பகிருங்கள். வாசகர்களுக்கு அளிப்போம்.

      நீக்கு
    2. இருவர் படத்தில் நறுமுகையே நறுமுகையே பாடல் கேட்டிருக்கிறீர்களா?

      நீக்கு
    3. அற்றைத் திங்கள் அந்நிலவில்…
      நெற்றிதரல நீர்வடிய…
      கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…

      நீக்கு
    4. அர்த்தமில்லாமல் சங்க இலக்கியத்தில் வரியை உருவிப் போட்டு கவியில் சிறந்தவன் என டமாரமடிக்கும் அன்பர்களின் வரிகள் என்னைக் கவர்வதில்லை

      நீக்கு
    5. நறுமுகையினால் சூடாயிட்டீங்க போலிருக்கு.

      நீக்கு
  9. அன்றொரு நாள் இதே நிலவில்.... சட் என மனது இளமைக் காலத்துக்குச் செல்கிறது. இனிமையான நாட்கள்... அப்பா அம்மாவின் அரஙணைப்பு... திரும்ப வருமா? 7ம் வகுப்பு படிக்கும்போதே எட்டிப்பார்த்த இனிமை...

    எதைஎதையோ எண்ண வைக்கிறான் இந்தக் கண்ணதாசன்.

    அந்த நாள் சாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே.... இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைவுகள் சிறகடித்துப் பின்னோக்கிப் பறக்கின்றன!

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. ஹையோ நெல்லை....டைம் மெஷின்னு ஒன்னு இருந்தா பேசாம அந்தக் காலத்துக்குப் போய்டமாட்டோமான்னு எனக்கு அவ்வப்போது தோன்றும். அதுவும் இப்ப சமீபமா ஊருக்குப் போய் வந்த பிறகு ரொம்பத் தோன்றுகிறது. அங்கேயே இருந்திருக்கலாமோ என்றும் //அப்பா அம்மாவின் அரஙணைப்பு..// யெஸ் ...பிறந்தவீட்டு அன்பு கலகலப்பு. திரும்ப வருமா? என்றும் தோன்றிக் கொண்டே இருக்கிறது

      கீதா

      நீக்கு
    4. ஆனால் அவங்களுக்கு இவன்/இவள் எப்போ தன் நாட்டைப் பார்த்துக்கொண்டு செல்லப்போகிறான்னு தோணியிருக்கும் ஹா ஹா

      நீக்கு
  10. வெள்ளித் திரையிசைப் பதிவு - இலக்கிய பிம்பங்கள் என்ற புதிய சிறகினை விரித்திருக்கின்றதா!..

    சொல்லுங்கள்...

    ஒற்றை வரியில் -
    ஒற்றை வார்த்தைக்குள் இலக்கியத் தூறல் ஏராளம்...

    போட்டுத் தாக்கி விடுவோம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடக்கம். தொடர, உங்கள் ஆதரவு தேவை!!

      நீக்கு
    2. அருமை. தேர்ந்தெடுத்து அளித்த கேஜிஜிக்கும் தொடரப்போகும் தம்பி துரைக்கும் முன் கூட்டிய வாழ்த்துகள்.

      நீக்கு
  11. கேட்கக் கேட்க ரசித்துக்கொண்டேயிருக்கலாம். அருமையான பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  12. @ கௌதமன்..

    // தொடக்கம். தொடர, உங்கள் ஆதரவு தேவை!..//

    தாங்களே நடமாடும் நல்கலைக் கழகம்..

    லட்டு கேசரியை உகப்பதா!...

    பதிலளிநீக்கு
  13. அருமையான பாடல்கள் இரண்டுமே...

    பதிலளிநீக்கு
  14. இரு பாடல்களும் செமையான பாடல்கள். இன்று டக்கென்று தெரிந்தும்விட்டது!!!!

    ஆஹா கௌ அண்ணா சூப்பர் இப்படி இலக்கியப் பாடலுடன் திரைப்படப் பாடலைப் பொருத்தி ஒரு பகுதி பகிர்ந்தமைக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  16. இன்று பகிர்ந்த பாடல்கள் இரண்டும் மிகவும் பிடித்த பாடல். அன்று ஒரு நாள் பாடல் என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல். என் அப்பா பாடுவார்கள்.
    கேட்டு மகிழ்ந்தேன். நன்றி.
    கண்ணதாசன் அவர்கள் இலக்கியங்களிலிருந்து நமக்கு எளிமையாக கொடுத்த பாடல்கள் ஏராளம்.

    பதிலளிநீக்கு
  17. KGG சாரின் பாட்டுக்கு பாட்டு புதிய பகுதி நன்றாக உள்ளது. இதை ஒரு ரெகுலர் பகுதியாக வெள்ளிக்கிழமைகளில் தொடரலாம். வாசகர்களின் பங்களிப்பையும் கோரலாம்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
  18. 'அற்றைத் திங்கள்' பாடலின் சோகம் நீண்டு சிவாஜி படத்தில் கொண்டு போய் விட்டு எரிச்சலாய் முடியும் எனக்கு.

    பதிலளிநீக்கு
  19. பழைய பாடல்களில் நிறைந்த அர்த்தங்கள்.

    பதிலளிநீக்கு
  20. நிலவென்றாலே தண்ணிலவு தான்:
    எரிக்கும் நிலவு இல்லை.

    திங்கள் என்ற வார்த்தைக்கு நிலவு என்றும் பொருள் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சார்... அதுக்கு நீங்க பெண்ணாய்ப் பிறந்திருக்கணும். காதலன் வருவான் வருவான்னு இரவில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கணும். காதலன் வராமலே இரவு நீண்ட இரவாகவும் நிலவு உடம்பை எரிப்பதாகவும் தோன்றும். தேடினீங்கன்னா சங்கப் பாடல் அகப்படும்.

      நீக்கு
  21. 'இந்த வெண்ணிலவு இப்படியே எரிக்கும் வேளையில் எம் தந்தையை உடையவராய் இருந்தோம்' என்று சொல்வது கருத்துப் பிழை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் - நெருப்பாய் எரிகிறது?

      நீக்கு
    2. விக்ரமாதித்தனின் ஒரு மனைவிக்கு நிலவொளியால் உடம்பில் கொப்புளங்கள் ஏற்படுமாம். :))))))

      நீக்கு
  22. பெண்ணை நிலவாய் பாவித்து எழுதியது அது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலும் பூமியின் அதிகபட்ச வெப்பநிலை 56 டிகிரி செல்சியஸ். சந்திரனின் அதிகபட்ச வெப்பநிலை 127 டிகிரி செல்சியஸ். நிலவு சுடுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

      நீக்கு
  23. //நிலவு சுடுவதற்கு இதுவும் ஒரு காரணம்.// சுடும் நிலவு, சுடாத சூரியன், ஓடும் வருஷம், உறையும் நிமிஷம் எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா காதலித்து பார் என்று உன்னி கிருஷ்ணன் குரலில் ஒரு பாடல் உண்டு. வெள்ளி யன்று ஸ்ரீராம் பகிரலாம், ஆனால் நான் கேட்டதே மில்லை என்று சொல்லாமல் இருக்க வேண்டும். கொஞ்சம் பழைய பாடல்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டிருக்கிறேன்... ரீதிகௌளை லிஸ்ட்டில் அதுவும் உண்டு!


      https://www.youtube.com/watch?v=-NV2ov1ELmA

      நீக்கு
  24. நேற்று நான் போட்ட பின்னூட்டங்கள் போகாமல் வெறுப்பேற்றின. எ.பி., கீதா அக்கா, வல்லி அக்கா, கோமதி அக்கா, வெங்கட் எல்லோருடைய பதிவுகளுக்கும் கருத்துரையிட்டேன். சேர்த்துச் சோ சேரலையோ..?

    பதிலளிநீக்கு
  25. இரண்டு பாடல்களுமே அர்த்தம் பொதிந்த பாடல்கள். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்கள்... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. பாதகாணிக்கை பீம்சிங் படம் என்று நினைத்தேன். இதில் தானே சிறுவன் கமல்ஹாசன் பெண் வேடமிட்டுக்கொண்டு "சொன்னதெல்லாம் பலித்திடுமோ சொல்லடி கிளியே" பாடலில் நடனமாடுவார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய தகவலாக இருக்கே. பார்க்கிறோம்.

      நீக்கு
    2. ஆமாம், பானு சரியாக சொன்னீர்கள்.

      நீக்கு
    3. இதில் தானே சிறுவன் கமல்ஹாசன் பெண் வேடமிட்டுக்கொண்டு "சொன்னதெல்லாம் பலித்திடுமோ சொல்லடி கிளியே" பாடலில் நடனமாடுவார்?

      ஆமாம்.

      நீக்கு
  27. இரண்டு பாடல்களும் கேட்டிருந்தாலும் நாடோடி படத்தையும் பார்த்துத் தொலைச்சதினால் இன்னமும் நன்றாய் நினைவில் வருது. பாரதியைப் போய் எம்ஜிஆருக்கு ஜோடியாய்ப் போட்டுக் கெடுத்துட்டாங்க. நல்லவேளையாப் பாரதியைப் பாதிப் படத்துக்கு முன்னாடியே சாகடிச்சுட்டு அவங்க தங்கையாம் ஜரோஜா தேவி! பின்னர் அவங்க தான் நடிச்சிருப்பாங்க கண் தெரியாதவளாக! :))))

    பதிலளிநீக்கு
  28. அருமையான பாடல்கள் மிகவும் ரசித்துக் கேட்ட பாடல்கள். பகிர்விற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி.

    வெள்ளித்திரை இலக்கிய பிம்பங்கள் புதிய பகுதியையும் ரசித்தேன், கேஜிஜி சார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!