நேற்று இரவு என்ன டிபன் என்று என் சினேகிதி கேட்டாள். நான், 'ஹோட்டல் ரவா தோசை' என்றேன். அதற்கு அவள், அது என்ன ரவா தோசை எனக் கேட்க நான் உடனே ஹோட்டல் தோசை மொறு மொறு வென்று பொன் நிறத்தில் இருக்கும்.. என்றேன். உடனே அவள் அந்த ரெசிபியை கூறு என்றாள் அவளுக்கு மட்டும் என்ன உங்களுக்கும் கூறுகிறேன் நீங்களும் செய்து என்ஜாய் செய்யுங்கள்
தேவையான பொருட்கள்:
ரவை ஒரு கப்
மைதா முக்கால் கப்
அரிசி மாவு முக்கால் கப்
சீரகம் ஒரு டீஸ்பூன்
இஞ்சி பொடியாக நறுக்கியது கொஞ்சம்
பச்சை மிளகாய் ஒன்று பொடியாக நறுக்கியது
முந்திரி ஒரு கைப்பிடி அளவு பொடியாக நறுக்கியது
ஒரு கொத்து கருவேப்பிலை
பெருங்காயம் அரை டீ ஸ்பூன்
தண்ணீர் ஐந்து கப்.
செய்முறை:
ரவையில் ஒரு கைப்பிடி அளவு தனியாக எடுத்து வைக்கவும். ரவை மைதா அரிசி மாவு மூன்றையும் நான்கு கப்தண்ணீர் விட்டு நன்றாக கலக்கவும். அதை அரை மணி நேரம் மூடி ஊற வைக்கவும்.
அரை மணி நேரத்திற்கு பின் மற்ற பொருள்களை அதில் சேர்த்து, தேவையான உப்பையும் சேர்க்கவும். நன்றாக கலக்கவும். அப்பொழுது தனியாக எடுத்து வைத்துள்ள ரவையை அதில் கொட்டி நன்றாக கிளறவும் மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். அடுப்பில் தோசை கல்லை போட்டு நன்றாக சூடாக்கவும் பின்பு அடுப்பை சிறிதாக்கி விட்டு மாவை கீழிருந்து மேலாக ஊற்றவும். எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் சுற்றிலும் நடுவிலும் ஊற்ற வேண்டும், பொன் முறுகலாக வந்ததும் இரண்டாக மடித்து எடுத்து வைக்கவும் திருப்பிப் போட வேண்டிய அவசியம் இல்லை. இந்த தோசையில் பல ஓட்டைகள் இருக்கும் அதுதான் இந்த தோசையின் ஸ்பெஷாலிட்டி.
வெங்காய ரவா தோசை என்றால் வெங்காயத்தை மிகப் பொடியாக நறுக்கி முதலில் கல்லில் தூவி விட்டு பிறகு மாவை ஊற்ற வேண்டும்.
இந்த தோசைக்கு தக்காளி சட்னி தேங்காய் சட்னி போன்ற சட்னிகள் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிட சூப்பரோ சூப்பர்.
= = = = = = = = =
எனக்கு மிகவும் பிடித்த ரவா தோசை செய்முறை இன்று . சூப்பர்
பதிலளிநீக்குஎனக்கு சாம்பார் சட்னி கலவையோடு சாப்பிட மிகவும் பிடிக்கும். ஆல் டைம் ஃபேவரைட் மோர் சாதம் மிக.பொடி எண்ணெய் ரவா தோசை
:))) தகவல்களுக்கு நன்றி.
நீக்குநெல்லை அன்னிக்கு நீங்க சொல்லிருந்தீங்கன்னா சாம்பாரும் செய்திருப்பேனே.
நீக்குநீங்க மி பொடி சொன்னதால் செய்யலை.
நல்லாருந்துச்சா இல்லையான்னு சொல்லலாம்ல. மக்களுக்கும் கொஞ்சம் தெரியும்ல!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இப்படிச் சொன்னதுக்காக எல்லாம் நீங்க சொல்ல வேண்டாம். உண்மையா நேர்மையா சொல்லோணுமாக்கும்!!!!!!!!!!!!!!!!ஹிஹிஹிஹி....
கீதா
ஹப்பா, நெல்லைய இழுத்தாச்சு. பரமதிருப்தி!! மீக்கு
நீக்குகீதா
ரவா தோசை என்னோட செய்முறை பிரகாரம் நீங்க அன்னைக்குச் செய்திருந்ததால ரொம்ப நல்லா இருந்தது கீதா ரங்கன் க்கா ஹாஹாஹா
நீக்குஎன்னோட செய்முறை பிரகாரம் //
நீக்குஹாஹாஹாஹா.... நினைச்சேன்.
தோசை செய்திட்டிருந்தப்ப உங்க ஹஸ்பண்டு சொன்னாங்க, இந்த மொறுமொறுப்பு அவருக்குப் பிடிக்கும் ஸோ இந்த தோசைய அவருக்குக் கொடுத்திடுங்க. எனக்கு இந்த மொறுமொறுப்பு இல்லாம கொஞ்சம் ஸாஃப்டா செய்தா போதும்னு.
என்னவோ செஞ்சேன் போங்க. சும்மா உங்களை வம்புக்கு இழுக்கதான் அப்படிக் கேட்டேன்.
இருந்தாலும் நன்னி கேட்டோ!!!
கீதா
ரொம்ப மெலிதாக கேரட் சீவிப்போட்டாலும் நல்லா இருக்கும். ஆனால் முந்திரி ரவா தோசையின் சுவையைக் குறைப்பதாகத் தோன்றும்
பதிலளிநீக்குமுந்திரி, மிளகு, பச்சை மிளகாய் யாவுமே ரவா தோசைக்கு சுவை கூட்டும் - அளவோடு இருந்தால்!
நீக்குரெசிப்பி படமும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குமைதா இவ்வளவு போட்டால் தோசை மொறு மொறு என்று வருமா தெரியவில்லை.
ரவையும் அரிசி மாவும் சம பங்கு எடுத்துக் கொண்டு, மைதா / கோதுமை மாவு ஜஸ்ட் ஒரு டேபிள் ஸ்பூன் - எடுத்துக் கலந்து சரியாகத் தண்ணீர் கலந்து செய்தால் நடுவிலும் கூட மெலிதாக வரும்.
என்னைப் பொருத்தவரை ஹோட்டலை விட நன்றாக வரும்.
கீதா
ஏன் ஹோட்டலை விட என்று சொன்னேன் என்றால், ஹோட்டல் ரவா தோசையில் நடுவில் கொஞ்சம் கொழ கொழ என்று இருக்கும். கூடவே பிழியும் அளவு எண்ணை இருக்கும்.
நீக்குகீதா
மைதாவுக்குப் பதிலாக, தோசை மாவு ஒரு கரண்டி மற்றபடி ரவை அரிசிமாவு அளவு சேம். சேர்த்துச் செய்தாலும் நன்றாக வரும்.
பதிலளிநீக்குசியாமளா மாமி சொல்லிருப்பது போல் கொஞ்சம் ரவையை கடைசியில் சேர்த்துச் செய்யும் போது மொறு மொறுப்பு கூடும்.
கீதா
ஹெப்பார் கிச்சன் யூ டியூபில் பார்த்துவிட்டு ரவா தோசை செய்ததாகவும், அது மிகவும் நன்றாக இருந்தது என்றும் என் மகன் சொன்னதன் பேரில் நானும் முயற்சி செய்தேன். நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குஇன்று சியாமளா மாமி ரெஸிபி! இதுவும் நன்றாக இருக்கும் என்ரு நம்புகிறேன்.
இன்று நன்றி நவிலும் நாளாம்(Thanks giving day). என்னுடைய படைப்புகளை வெளியிட்டு, ஆதரவு அளிக்கும் எங்கள் பிளாகிற்கும், அதன் வாசகர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி __/\__ __/\__
பதிலளிநீக்கு