சனி, 5 பிப்ரவரி, 2022

‛ஐயா.. நான் ஏதாவது கொடுக்கலாமா?' - நான் படிச்ச புத்தகம்

 திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சின்னவீரம்பட்டியில் தாயம்மாள் என்ற பெண் தனது கணவர் ஆறுமுகத்துடன் சேர்ந்து நீண்ட காலமாக இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு இரு குழந்தைகள் சின்னவீரம்பட்டி அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.

பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடந்துள்ளது. அப்போது, குழந்தைகள் படிக்க நல்ல வகுப்பறை கட்ட வேண்டியுள்ளது அதற்கு நிதி திரட்டுவதில் சிக்கல் இருப்பதாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இதைக்கேட்ட தாயம்மாள் ‛ஐயா நான் ஏதாவது கொடுக்கலாமா?' என்று கேட்டுள்ளார். இளநீர் விற்கும் பெண் ஆர்வத்தால் கேட்கிறார் அதிகம் போனால் ஐம்பதோ நுாறோ கொடுக்கப் போகிறார் என்று எண்ணினாலும், அவரது வார்த்தையை அலட்சியப்படுத்தாமல்,‛ நீங்க எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கிறோம்' என்று கூறியுள்ளனர்.

சிறிது நேரம் பொறுங்கள் என்று சொல்லிவிட்டு விடு விடுவென வீட்டிற்கு சென்றவர் தனது கணவருடன் கலந்து பேசி தனது நீண்ட கால சேமிப்பான ஒரு லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு வந்து ‛ ஏதோ என்னால் முடிந்தது' என்று சொல்லி பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக ஒரு லட்சம் ரூபாயை நிதியாகக் கொடுத்துள்ளார்.இவ்வளவு பெரிய தொகையை இளநீர் விற்கும் தாயம்மாளிடம் இருந்து எதிர்பாராததால் அங்கு இருந்தவர்கள் ஆச்சரியத்தில் ஆடிப்போயினர்.தாயம்மாளையும் அவரது கணவரையும் பாராட்டி மகிழ்ந்தனர்.
எனது குழந்தைகள் மட்டுமல்லை எனது கணவரும் இந்தப் பள்ளியில்தான் படித்தார், கட்டிடம் நல்லாயிருந்த பிள்ளைகள் நிம்மதியா நல்லா படிப்பாங்கதானே, பல ஏழைக்குழந்தைகள் முன்னேற உதவும் பள்ளிக்கூடம் என்பது என்னைப் பொறுத்தவரை கோயில்தான் ஆகவே அங்கு ஒரு நல்ல பணி நடக்க என்னால் இயன்றதைக் கொடுத்தேன் என்றார்.
இந்த நிகழ்வைக் கேள்விப்பட்ட பிரதமர் மோடி தனது ‛மன்கி பாத்' நிகழ்வில் தாயம்மாளை பற்றிக் குறிப்பிட்டு மனம் திறந்து பாராட்டினார். .தாயம்மாளுக்கு சொந்தமாக அவரது ஊரில் ஒரு சின்ன நிலம் கூட இல்லை இருந்தும் தனது சேமிப்பை தனக்காக தனது குடும்பத்தினருக்காக வைத்துக்கொள்ளாமல் இளநீர் விற்று சிறுகச் சிறுக சம்பாதித்த பணத்தில் இந்த அற்புதமான தொண்டை செய்துள்ளார்.இது பலருக்கும் முன்மாதிரியான செயலாகும்.இவரைப் போன்றவர்களால் கல்வி விழிப்புணர்வு பெருகியுள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இதை அடுத்து மாவட்ட கலெக்டர் முதல் கிராம மக்கள் வரை தாயம்மாளை பாராட்டி வருகின்றனர்,பிரதமர் பாராட்டு தனக்கு பெரிதும் மகிழ்வை தருவதாக குறிப்பிட்ட தாயம்மாளின் கண்களில் நல்ல காரியம் செய்த மனநிறைவு. 
-எல்.முருகராஜ்.
============================================================================================

பன்னா : மத்திய பிரதேசத்தில், காவல் நிலையம் ஒன்றில் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் எடுத்து வரும் போலீஸ் அதிகாரி ஒருவர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பன்னா மாவட்டத்தில் உள்ள பிரஜ்பூர் கிராமத்தில், பகத் சிங், 41, என்பவர் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார்.ஆசிரியராக இருந்து தற்போது காவல் துறையில் பணியாற்றி வரும் இவர், மாணவர்களுக்கு இலவசமாக பாடம் எடுத்து வருகிறார்.

காவல் நிலைய வளாகத்தில், மாணவர்களுக்காக நுாலகம் ஒன்றையும் அமைத்துள்ளார்.தினமும் காலை 7:00 முதல், 10:00 வரை ஆசிரி யராக இருந்து, மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் அவர், 10:00 மணிக்குப் பின், போலீஸ் அதிகாரியாக தன் கடமைகளை செய்து வருகிறார்.நான்காம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு அவர் பாடம் சொல்லித் தருகிறார்.   இது மட்டுமல்லாமல், 'சிவில் சர்வீசஸ்' உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவர்களையும், அவர் தயார்படுத்தி வருகிறார்.அந்த கிராமத்தில் தலித் மக்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் அதிக அளவில் உள்ளனர்.  வறுமையில் வாடும் அவர்களின் கல்வி வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், பகத் சிங் இந்த முயற்சியை எடுத்து உள்ளார். அவரது இந்த சேவைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

========================================================================================================================

செலவுகளைப்பற்றி கவலைப்படாமல் ஐம்பது பேரில் தொடங்கி இன்று ஐந்தாயிரம் பேர்களுக்கு மேல் இலவச உணவு அளிக்கும்...

"இப்படியும் சில நல்லவர்கள்" இருக்கத்தான் செய்கிறார்கள்!


================================================================================================

இந்த வயதில் வெற்றி பெற்றது ஒரு சிறப்பு.  அப்புறம் அதை வீட்டுக் கொடுத்தது அதைவிட சிறப்பு..

தருமபுரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற 61 வயது ஆசிரியர் சிவப்பிரகாசம்...

=======================================================================================================

பந்தலுார், :நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் இருவர், மருத்துவ படிப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மருத்துவ படிப்பு பொது பிரிவினருக்கான 'கவுன்சிலிங்'கில், நீலகிரி மாவட்டம், பந்தலுார் அம்பலமூலா அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் மனோகர் நிதின், மாணவி அனகா ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

மஞ்சள்மூலா குக்கிராமத்தை சேர்ந்த மனோகர் நிதின், 2020 - -21ம் கல்வியாண்டில் 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற போதும், முன்னுரிமை கிடைக்காததால் மீண்டும் சுயமாக படித்து இந்த முறை நீட் தேர்வு எழுதினார்.   இதில், 342வது இடம் பிடித்து மருத்துவ படிப்புக்கு தேர்வு பெற்றார். இவரது பெற்றோர் பிரகாசன் - அனிதா தம்பதி மாடு வளர்ப்புடன், விவசாய தொழில் செய்கின்றனர்.  நிதின் கூறுகையில், ''ஆர்வத்துடன் படித்தால் சாதிக்க முடியும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் படி சுயமாக படித்து, நம்பிக்கையுடன் 'நீட்' தேர்வு எழுதியதால் வெற்றி பெற முடிந்தது,'' என்றார்.அய்யங்கொல்லி பரிவாரம் பகுதியைச் சேர்ந்த மாணவி அனகா, வீட்டிலிருந்தே படித்து நீட் தேர்வில், 543வது இடம் பிடித்து, பல் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி உள்ளார். இவரது தந்தை பாலச்சந்திரன் விவசாயி. தாய் பிரதீபா 100 நாள் வேலை திட்டத்தில் கூலி வேலை பார்த்து வருகிறார்.சாலை மற்றும் இணையதள சேவை முழுமையாக இல்லாத கிராமங்களில் இருந்து, இருவர் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி, சாதித்துள்ளனர்.

============================================================================================



நான் படிச்ச புத்தகம்

ஜீவி 



எனக்குத் தெரிந்த டாக்டர் ருத்ரன் அவர்களை உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்.  மனநல மருத்துவர்.  அதைத் தாண்டி தம் பதிவுகள் மூலமாக நம் பதிவுலக நண்பர்கள் பலருக்கும் பரிச்சயமானவர்.
அவர் பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்டு அவர் பதில்களைப் பெறுவது ஒரு சுவாரஸ்யமான  அனுபவம். அந்த சுவாரஸ்யத்தை பல  தடவைகள் நான் சுகித்திருக்கிறேன்.

கவிதா பப்ளிகேஷன் வெளியீடாக வந்திருக்கும் அவரது 'உறவுகள்' என்ற நூலை வாசித்தது அற்புத அனுபவம்.  நறுக்குத் தெரித்தாற் போன்ற சொல்லாடலுக்கு பிரசித்திப் பெற்றவர் டாக்டர் ருத்ரன்.   வாழ்க்கையில் நமக்கு சித்திக்கும் பல்வேறு  வகையான உறவுகளில் எதையும் விட்டு விடாமல் டாக்டர் தமக்கே உரிய பாணியில் விவரிக்கும் பொழுது 'அட, ஆமாம்லே' என்று புன்முறுவல் பூக்காமல் இருக்க முடியாது.  

வாழ்க்கைப் போக்கில் பலரிடம் பரிச்சயம் கொள்வது இயல்பாக நேரும் விஷயம்.  பரிச்சயம் பழக்கமாகி,நெருக்கமாகி ஒரு உறவாக அமைவதும் உண்டு. யதேச்சையாக ஒரு பயணத்தில் ஏற்படும் பரிச்சயம் கூட பின்னாளில் வாழ்வில் பிணைப்பாகவோ, பிரித்தெறிய முடியாத விலங்காகவோ மாறக்கூடும் என்பதால் பரிச்சயங்களில் அவற்றிற்கு உரிய கவனம் கொள்ள வேண்டும் என்பது டாக்டரின் ஆலோசனை.  உறவின் நிலையை பரிச்சயமே  நிர்ணயிக்கும் என்பதால் ஆரம்பத்திலேயே அந்தப் பழகும் விதத்திற்கு காதல், பாசம், கருணை என்றெல்லாம் பெயர் வைக்காமல், உறவு வளர்ந்த பிறகு அதை அடையாளம் காணும் பக்குவம் நமக்கு  வேண்டும் என்பார் ருத்ரன்.


அலுவலக உறவுகள் வேடிக்கையானவை.   ஆண்-பெண் பழக்கமும் இங்கே சமுதாயக் கேள்விகளின்றி ஏற்படுகிறது.  பொதுவாக எல்லாப் பழக்கங்களுமே நெருக்கத்தை ஏற்படுத்தும். 

அலுவலகத்திலுள்ள ஆணையும் பெண்ணையும் தன் கணவனோடும் மனைவியோடும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்களும் உண்டு.  இவர்களுக்குத் தான் பிரச்சினை கள் உருவாகும்.  ஒரு அலுவலகத்தில் இணைந்து பணியாற்றும் பொழுது இனிமையாகப் பழகுவது இயல்பு மட்டுமல்ல;  அவசியமும் கூட.  இதைப் புரிந்து கொள்ளாமல் 'இவர் எவ்வளவு நிதானமா பொறுமையா பேசறார்' என்று அங்கலாய்க்கும் பெண்களும், 'இவள் எப்படி எப்பவும் நீட்டா ட்ரிம்மா இருக்கா' என்று உடன் பணியாற்றும் பெண்ணையும் மனைவியையும் ஒப்பிட்டுப் பார்க்கும் கணவர்களும் தேவையற்ற ஏக்கங்களை எதிர்பார்ப்பாகி வாழ்வில் சலிப்பெய்துகிறார்கள். வேலை நிமித்தமான ஒரு அவசியத்தை, இது தான் வாழ்க்கை என்று வீட்டிலும் எதிர்பார்ப்பதால் தான் இந்தக் குழப்பம்,சிக்கல், சண்டை, கோபம், சலிப்பு எல்லாம்....  அலுவலக உறவுகளாலும் அறிமுகங்களாலும் சில வீடுகளில் சந்தேகம் காரணமாக பிரச்சனைகள் உருவாகின்றன.   இவற்றையெல்லாம் தவிர்க்கக் கூடிய மன வளர்ச்சி பெறுவது அவசியமாகும்.

பிறரிடம் நாம் கொள்ளும் நட்பைப் பற்றி டாக்டர் ருத்ரன் என்ன சொல்கிறார் என்பதைச் சொல்லத் தோன்றியது.  நட்பின் முக்கியமான அடையாளம் நம்பிக்கையும் நெருக்கமும் தானாம்.  ஒரே கருத்து ஒத்திருப்பது நண்பர்களிடையே இருக்க வேண்டியதில்லை. நட்புக்கு ஆன்-பெண் பாகுபாடும் வயது வித்தியாசமும் தடையாகாது; நட்பிற்கு அடிப்படை நம்பிக்கையும் நெருக்கமும் மட்டுமே.  இவை இரண்டும் இருந்தாலும் இரு நண்பர்களிடையே கருத்து பேதம் இருக்கலாம்.  பேதம் கருத்தில் அந்த கருத்து சார்ந்த விஷயத்தில் மட்டும் தான்..  ஒரே விஷயத்திற்கு இருவரும் கொள்ளும் அபிப்ராயங்கள் மட்டும் தான் வித்தியாசம்.  இருவருடையே உள்ள அன்பும் அக்கறையும் இதை மீறி ஆழமானது, நிஜமானது என்ற நம்பிக்கையே நட்பு என்பார் டாக்டர் ருத்ரன்.

மனவியல் கருத்துப்படி காதல் என்பது அக்கறை, நெருக்கம், இணைந்திருத்தல் ஆகிய மூன்றின் கலவையாம்..  காதலிப்பவர்களை விட காதலிப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவரே அதிகமாம்.  காதல் உன்னதமான, உற்சாகமான, உயர்வான, உயரும் வழிக்கான உறவு என்றாலும் அது அடிப்படையில் ஓர் ஒப்பந்தம் என்ற புரிதல் இருக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளபடுவது தான் திருமணம் என்பார் டாக்டர். திருமணம் பகிரங்கம்.  இருமனம் சேரும் திருமண வாழ்வில் ஏற்படும் உறவு பிற உறவுகளை விட வித்தியாசமானது.  தீவிரமானது;  நுட்பமானது; நெருக்கமானது; பிரத்யேகமானது. 'பெரும்பாலான திருமணங்கள் நம் நாட்டில் பிறரால் நிச்சயக்கப்படுபவையே. இதனாலேயே காதலித்தவரை கல்யாணம் செய்து கொண்டு கஷ்டங்களை வெல்லப் போராடும் வாழ்வை விட கல்யாணம் செய்து கொண்டவரைக் காதலிப்பது வசதியாகவும் உகந்ததாகவும் கருதப்படுகிறது' என்பார் டாக்டர்.

தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்ற முதுமொழி உடன்பிறப்பு உறவில் அதிகம். பெற்றோரை எதிர்ப்பவர்களைக் கூட சிலர் புரியாமல் விட்டு ஒதுங்குவார்கள்.  அதுவே உடன் பிறப்பைப் பழித்தால் உதிரம் கொதிக்கும். இதற்கு முக்கிய காரணம் இருவருமே ஒன்றாய் வளர்ந்து, ஒரே சூழலில் இருந்து வாழ்வைப் பார்த்தவர்கள் என்பதால் தாங்கிக் கொள்ள முடியாது என்பார் டாக்டர் ருத்ரன்.

ரசிகன்-தொண்டன் உறவு, பக்தி, அக்கம்-பக்கம், மருத்துவ உறவு என்று இன்னும் பல்வேறு அத்தியாயங்களில் மனித உறவுகளின் நேர்த்தியையும் அவலங்களையும் மன நல நோக்கில் விண்டு உரைக்கிறார் டாக்டர்.  எல்வாற்றையும் ஒரு நூலை அறிமுகப்படுத்தும் நேரத்தில் வாசகர்களுக்குக் கூறி விட முடியாது; கூறவும் கூடாது என்றளவில் இதுவே போதும் என்று நினைக்கிறேன்.  வாழ்க்கையின் பல நிலைகளில் பாடமாகிப் போகும் அருமையான மன நல நூல் இது. வாசித்துப் பாருங்கள்.

புத்தகம் பற்றிய விவரம்:

மன நல மருத்துவர் 
டாக்டர் ருத்ரன் அவர்களின்

உறவுகள்
கவிதா பப்ளிகேஷன்
8, மாசிலாமணி தெரு,
தி. நகர்,  சென்னை- 600017

= = = =

64 கருத்துகள்:

  1. தாயம்மாள் அவர்களின் செயல் போற்றுதலுக்குரியது...

    உலக மக்கள் அனைவரும் வாழ்த்துவோம், பாராட்டுவோம் ஆனால் ஓர் அரசியல்வாதி பாராட்டுவது இடிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியல்வாதி, நடிகர்கள் எல்லோரும் சமூகத்தின் அங்கத்தினர்கள்தானே!!

      நீக்கு
  2. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். மனதுக்கு
    உற்சாகம் தரும் பாசிடிவ் செய்திகளுக்கு மிக நன்றி.
    எல்லோரும் என்றும் நலமுடன் இருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. இளனீர் விற்றுச் சேர்த்த பணத்தை
    மனதார தானம் செய்த தாயம்மாள் குடும்பத்துடன் நீண்ட நல் வாழ்வு
    பெற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. இளைஞர் நிதின், இளம்பெண் அனிகா
    இருவரும் நீட் தேர்வில் வெற்றி பெற்றார்கள்
    என்பது மிக மகிழ்ச்சி தருகிறது.
    முயற்சி செய்தால் முடியாதது இல்லை.
    என்றும் வெற்றி அவர்களைத் தொடர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. இன்ஸ்பெக்டர் பகத் சிங் அவர்களின் தன்னலமற்ற ஸேவை
    அளவிடற்கரிய உதவியாகும். எதிர்காலத்தை
    வளமாக்கும் இது போல உயர்ந்த மனிதர்கள் நம் நாட்டிற்கு மிகத் தேவை.

    பதிலளிநீக்கு
  6. இத்தனை நல்லுயிர்களைக் காக்கும் தனலக்ஷ்மி அம்மாள்
    சிறப்பாக வாழ வேண்டும். கொடை கொடுப்பவர்களும் அதிகரிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  8. காதலிப்பவர்களை விட காதலிப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவரே அதிகமாம்"

    Ahaa. திரு ஜீவி அவர்களின் விமரிசனம் விவரமாக
    இருக்கிறது. திரு ருத்ரனை தொலைக் காட்சியில்
    பார்த்த நினைவு.
    மனித உறவுகளையும், அதன் எல்லைகளையும்,
    கட்டுக்கோப்பில் வைத்திருக்கும்
    கட்டுப்பாடுகளையும் மனித உணர்வுகள், நட்பு,
    காதல் எல்லா உணர்ச்சிகளையும் அழகாகச் சொல்லி இருக்கிறார்.
    மிக நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்,அந்நாட்களில் DD சேனலில் உரையாற்றினார். அவர் வா
      ர்த்தைகளை கையாள்கிற லாவகம் எனக்குப் பிடிக்கும். ஒரு விதத்தில் ஜெயகாந்தனை மாதிரி.

      நீக்கு
  9. நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பதிவில் குறிப்பிட்ட செய்திகள் அனைத்தும் சிறப்பு. அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுகள்.

    தனது ‛மான்கி பாத்' - மன் கி பாத்; தாயாம்மாள் - தாயம்மாள்....

    ருத்ரன் அவர்களின் ஒரே ஒரு நூல் நான் வாசித்திருக்கிறேன். நின்று நிதானித்து படிக்க வேண்டிய புத்தகங்கள் அவருடையது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. திருத்தங்கள் செய்துவிட்டோம்.

      நீக்கு
    2. இந்தக் காலத்திலுஎம் இவரது நூல்கள் மிக மலிவானவை. ரூ.50/-க்கும் கீழே. பனுவல் வெளியீட்டார்கள் வெளியிட்டவை. நீங்கள் அவரது புத்தகம் ஒன்றை வாசித்திருப்பதால் அவர் ஒரு விஷயத்தை விளக்கும் முறை பழக்கப்பட்டிருக்கும். எதுவும் மனம் போன போக்கில் எடுத்தேன் கவிழ்த்தேன் இல்லை என்பதும் தெரிந்திருக்கும் வெங்கட்ஜி!

      நீக்கு
  10. லஞ்சம் வாங்கி வயிறு வளர்த்துப் பிழைப்பதையும் பொதுப் பணத்தை மடை மாற்றி பதுக்கி வைப்பதையுமே தொழிலாய்க் கொண்ட அரசு ஊழியர்கள் நிறைந்த இந்நாட்டில் இப்படியும் சில நல்லவர்கள்!..

    பதிலளிநீக்கு
  11. ஜீவி சாரின். டாக்டர் ருத்ரன் அவர்கள் எழுதிய புத்தக அறிமுகம் மிகவும் ரசிக்க வைத்தது. ஜீவி சார் மிக அருமையாக நூல் அறிமுகம் செய்துவைத்துள்ளார்.

    அவர் எழுதியதில் இந்தப் பத்தி நன்று, இந்த வாக்கியம் நன்று எனப் பிரித்துப் பார்க்க இயலாதபடி நல்ல அறிமுகம் செய்திருக்கிறார்.

    வாய்ப்பு கிடைக்கும்போது வாசித்துப் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நேரங்களில் அளவான தேர்ந்தெடுத்த மாதிரியான வார்த்தைப் பிரயோகங்கள். பல நேரங்களில் அடிச்சு விட்ட நேரிடையான உரையாடல் போல. எந்தவிதத்தில் நீங்கள் எழுதினாலும் சோபிக்கிறீர்கள், நெல்லை. எடுத்துக் கொள்ளும் விஷயத்திற்கு ஏற்ற மாதிரி எழுதுவது சிலராலேயே முடியும். அதில் நீங்கள் ஒருவர் நெல்லை.

      நீக்கு
  12. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியமே மேலோங்கி அல்லல்கள் அகன்றிடப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  13. தாயா!ம்மாள் இல்லையோ! தாயம்மாள் தானே! அவரைப் பற்றி தினசரிகளிலும் படித்தேன். அரசுப்பள்ளி மாணவன், மாணவி பற்றியும் வந்திருந்தது. உணவளிக்கும் தம்பதிகள் நெகிழ்ச்சியுறச் செய்தார்கள். அவர்களையும் தினமலர் குறிப்பிட்டிருந்தது. மற்றச் செய்திகளுக்கு நன்றி. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்/பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூவை புய்ப்பம்னும் சொல்லலாம் பூன்னும் சொல்லலாம் கீசா மேடம்... (நண்டு டக் டக்னு வளைக்குள்ள போய்விடுவதுபோல நீங்க தலை காட்டிட்டு அப்புறம் காணாமப் போயிடறீங்க)

      நீக்கு
    2. ஹாஹாஹா, நெல்லை, பையருக்குக் கொடுத்திருக்கும் எக்ஸ்டென்ஷன் வரும் வாரத்தில் நிறைவடைகிறது. அவங்க நல்லபடியாக் கிளம்பிச் செல்லும் வரை டென்ஷனாகவே இருக்கும். போகும் முன்னால் எடுக்க வேண்டிய பரிசோதனைகள் எல்லாம் இருக்கே! எல்லாவற்றிலும் பாஸாகணும்.

      நீக்கு
    3. எதிலும் எந்தப் பிரச்சனையும் வந்துடாது. கொஞ்சம் கூடுதல் கவனமா இருங்க. அவ்ளோதான். இப்போல்லாம் ஏர்போர்ட்லயும் 6 மணி நேரம் முன்னால் போய், டெஸ்ட் எடுத்து நெகடிவ் வந்த பிறகுதான் ஃப்ளைட்ல ஏற விடறாங்க (இண்டர்நேஷனல்)

      நீக்கு
  14. இந்தவாரம் பாசிட்டிவ் செய்திகள் கூடுதல் ஆகிவிட்டபடியால் சில செய்திகளை நேரடியாக பிரசுரிக்காமல் சுட்டிகளை கொடுத்து விட்டீர்கள். இது போன்ற அதிகரிப்பே நாட்டில் நல்லவர்கள் மிகுவதை உணர்த்துகிறது. நன்று.

    பாவம் ஆசிரியர் சிவப்பிரகாசம். அவரது மகன் கூறுவதிலும் உடன் பட வேண்டியிருக்கிறது.

    அய்யா ஜீவி அவர்களின் "நான் படிச்ச புத்தகம்" சுருக்கமாக அதே சமயம் முக்கியமான பாயிண்டுகள் எதையும் விடாமல் எல்லாவற்றையும் கூறும் ஒரு சிறந்த அறிமுகம் ஆக இருக்கிறது. நன்றி.

    நான் முதலில் உறவுகள் என்று பார்த்தபோது நீல பத்மநாபனின் உறவுகள் என்று நினைத்தேன்.


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! நீல. பத்மநாபனின் 'உறவுகள்'
      வாசித்திருக்கிறீர்களா? சந்தோசஷமாக இருந்தது.

      அவரது 'பள்ளிகொண்டபுரம்' பற்றி
      ஒரு சனிக்கிழமை பதிவாக எழுதுங்களேன்.

      நீக்கு
    2. நீல.பத்ம்நாபனின் "தலைமுறைகள்" படித்துப் பல மாதங்கள் மனதளவில் ஓர் பாரம்/அழுத்தம்/ இறுக்கம் இருந்து கொண்டே இருந்தது. பள்ளிகொண்டபுரம், உறவுகள் இரண்டுமே படிச்சேன். உறவுகளும் படிச்ச நினைவு. ஜெயமோகன் இந்த நாவல்களை எல்லாம் அலசி ஆராய்ந்திருக்கார் வழக்கம் போலவே! :)))))

      நீக்கு
    3. // இந்தவாரம் பாசிட்டிவ் செய்திகள் கூடுதல் ஆகிவிட்டபடியால் சில செய்திகளை நேரடியாக பிரசுரிக்காமல் சுட்டிகளை கொடுத்து விட்டீர்கள்.//

      இல்லை JC sir.. தினமணியிலிருந்து காபி பேஸ்ட் செய்ய முடியாது. அதுதான் காரணம்.

      நீக்கு
  15. // நட்பின் முக்கியமான அடையாளம் நம்பிக்கையும் நெருக்கமும் தானாம்.  ஒரே கருத்து ஒத்திருப்பது நண்பர்களிடையே இருக்க வேண்டியதில்லை. நட்புக்கு ஆன்-பெண் பாகுபாடும் வயது வித்தியாசமும் தடையாகாது; நட்பிற்கு அடிப்படை நம்பிக்கையும் நெருக்கமும் மட்டுமே.  இவை இரண்டும் இருந்தாலும் இரு நண்பர்களிடையே கருத்து பேதம் இருக்கலாம்.  பேதம் கருத்தில் அந்த கருத்து சார்ந்த விஷயத்தில் மட்டும் தான்..  ஒரே விஷயத்திற்கு இருவரும் கொள்ளும் அபிப்ராயங்கள் மட்டும் தான் வித்தியாசம்.  இருவருடையே உள்ள அன்பும் அக்கறையும் இதை மீறி ஆழமானது, நிஜமானது என்ற நம்பிக்கையே நட்பு என்பார் டாக்டர் ருத்ரன்.//

    இதை படித்தவுடன் சென்ற இரு வாரங்களாக ஸ்ரீராம் அவர்கள் வியாழன் கதம்பதில் இரு நட்புகளுடான உறவு பற்றி எழுதியது நினைவில் வந்தது. ஸ்ரீராம் அப்படி எழுத காரணம் இதைப் படித்ததாலா? அப்படியே ஒத்து போகிறது. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நட்புக்கு ஆண்-பெண் பாகுபாடும் வயது வித்தியாசமும் தடையாகாது;// - ஆனால் ஆண்-ஆண் நட்பில் இன்னொருவரின் presence or தயக்கமோ இருப்பதில்லை. ஆண்-பெண் நட்பில் பலவித தடைக்கற்கள் இருக்கும், மனத்தடங்கல்கள் இருக்கும், மற்றவர்களைக் காரணியாகக் கருதவேண்டியதும் இருக்கும். மனதளவில் 'நட்பு' என்ற உணர்வு மாத்திரம் ஒன்றாக இருக்கலாம்.

      நீக்கு
    2. சரியாகச் சொன்னீர்கள் நெல்லை. இதில் அலுவலக நட்பு மட்டும் விதிவிலக்கு எனலாமோ?

      நீக்கு
    3. எந்த நட்பாக இருந்தாலும், ஆண்-ஆண் நட்புக்கு எதுவுமே தடையில்லை (நண்பனின் மனைவி மட்டும் என்ன இது.. அவருக்கு முக்கியத்துவம் என்று சொல்லுவார்). ஆனால் ஆண்-பெண் நட்புக்கு எல்லாவிதத் தடைக்கற்களும் உண்டு

      நீக்கு
  16. தாயம்மாள் மற்றும் பகத்சிங்க் இருவருமே வெகு சிறப்பு பாராட்டுகள் வாழ்த்த வேண்டும் இருவரையும்.

    இப்படியும் சில நல்லவர்கள் ஆம் இருக்கிறார்கள் நம்மிடையே

    ஆசிரியர் சிவப்பிரகாசம் பற்றிய செய்தியை வாசிக்கும் போது ஏனோ மனம் கொஞ்சம் வருந்தினாலும் அவர் மகன் சொல்லுவதும் நியாயம்தான்....ஆசிரியர் தன் ஆர்வத்தை அவர் மருத்துவப் படிப்பு படிக்காவிட்டாலும் புத்தகங்கள் பல வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ளலாம்...அவர் சொல்லியிருப்பது போல் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம்

    கிராமத்து ஏழைக் குழந்தைகள் இருவர் மருத்துவம் படிக்கத் தேர்வாகியிருப்பது மிக்க மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது!! அதுவும் மனோகர் நிதின் இரண்டாம் முறை முயற்சியில் தானே உழைத்து!!! இப்படியும் மாணவர்கள் இருக்க எதற்காக அனாவசியமான தற்கொலைகளோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஸ்ரீராம் அப்படி எழுத காரணம் இதைப் படித்ததாலா? //

      இல்லை. இதற்கு முன்னரே எழுதி வைத்தது என்னுடைய பகிர்வு.

      நீக்கு
  17. ஜீவி அண்ணாவின் புத்தக விமர்சனம் அறிமுகம் வெகு அருமை. அழகாகன பாயின்ட்ஸ். முக்கியமான பாயின்ட்ஸை எடுத்துச் சொல்லி அழகாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

    ருத்ரன் அவர்கள் நட்பு பற்றிச் சொன்னது செம...என் அனுபவத்திலும் கண்டது. ஸ்ரீராமின் அனுபவமும் நினைவுக்கு வந்தது.

    //உறவின் நிலையை பரிச்சயமே நிர்ணயிக்கும் என்பதால் ஆரம்பத்திலேயே அந்தப் பழகும் விதத்திற்கு காதல், பாசம், கருணை என்றெல்லாம் பெயர் வைக்காமல், உறவு வளர்ந்த பிறகு அதை அடையாளம் காணும் பக்குவம் நமக்கு வேண்டும் என்பார் ருத்ரன்.//

    இது அருமையான கருத்து. யதார்த்தமான கருத்து. ஆனால் இதில்தான் பலரும் உணர்ச்சிவசப்பட்டுச் சிக்குவதால் மனச் சிக்கல்கள்.

    எந்த ஒரு உறவையும் ஒரு ஃப்ரேமுக்குள் வைக்காமல் நல்ல நட்பு ரீதியாகப் பார்த்தால் எதிர்பார்ப்புகள் அவ்வளவாக இருக்காதுதான். குடும்பச் சிக்கல்கள் பல வருவதும் இதனால்தான்.

    ஜீவி அண்ணா ரொம்ப அழகா புத்தகத்தை அறிமுகப்படுத்தியிருக்கீங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் சரி, சகோ. நீங்கள் ஏன் இந்த பகுதிக்கு எழுத முயற்சிக்கக் கூடாது?

      நீக்கு
  18. நறுக்குத் தெரித்தாற் போன்ற சொல்லாடலுக்கு பிரசித்திப் பெற்றவர் டாக்டர் ருத்ரன். வாழ்க்கையில் நமக்கு சித்திக்கும் பல்வேறு வகையான உறவுகளில் எதையும் விட்டு விடாமல் டாக்டர் தமக்கே உரிய பாணியில் விவரிக்கும் பொழுது 'அட, ஆமாம்லே' என்று புன்முறுவல் பூக்காமல் இருக்க முடியாது. //

    ஆமாம் அண்ணா. நானும் அவரது கட்டுரைகள் பல வாசித்ததுண்டு.

    அவரும் ஆன்மீகம் பேசுபவர். பல கலைகளில் வித்வத் உடையவர். ஆர்ட்டிஸ்ட், சிற்பக்கலை அறிந்தவர், கவிஞர், டிராமாக்கள் இயக்கியவர்...உள்வியலில் டிராமா தெரப்பி பயன்ப்டுத்துபவர்....

    அவர் தனது ஆன்மீக அனுபவம் பற்றி எழுதியிருந்த ஒரு பதிவை வாசித்த போது எனக்குக் கேள்விகள் நிறைய எழுந்தன. அதே ஆன்மீகத் தேடலினால் சிலர் மனச்சிக்கல்களுக்கு உள்ளாகிறார்களே அவர் பதில் என்னவாக இருக்கும் என்று அறிய! ஆனால் அங்கு கருத்து சொல்லிக் கேட்கத் தயக்கம் எனவே சொல்லவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சில நாட்கள் என்னுடன் மெயில் தொடர்பில் இருந்தார். பின்னர் அவரும் வரலை. நானும் தொடரவில்லை. :)

      நீக்கு
    2. கீதா ரங்கன்(க்கா) உங்கள் கேள்விகள் என்ன?

      நீக்கு
    3. கீசா மேடம்...சிங்கழகரும் நேற்று என் கனவில் இதைத்தான் சொன்னார்... ஏழு மாதமா அவரை நீங்க அம்போன்னு விட்டுட்டதா

      நீக்கு
    4. ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ, சிங்கழகரா? யாரைச் சொல்றீங்க நெல்லை? நரசிங்கத்தையா? இல்லை, இல்லை, தப்பு, தப்பு! போட்டுக்கறேன். ஓ, புரிஞ்சது, புரிஞ்சது, சிங்கழகரைப் பார்க்க வரேன். எனக்கு ஒரு நிமிஷம் நம்ம காட்டழகிய சிங்கர் தான் நினைவில் வந்து போனார். விரைவில் சிங்கழகரையும் கண்டுக்கலாம். :)))))

      நீக்கு
    5. நெல்லை அந்தக் கேள்விகள் விவாதிற்குரியவை.

      மனநல மருத்துவர்களில் மதம் சார்ந்த ஆன்மீகத் தத்துவங்கள், இறை நம்பிக்கை அற்றவர்களால் இப்படியான சிக்கல்களை அவர்கள் கையாள்வது ஒரு விதம் என்றால் மதம் சார்ந்த ஆன்மீகம், ஆன்மீகத் தத்துவங்கள், இறை நம்பிக்கை உடைவர்கள் கையாள்வது வேறு விதம். பெரும்பாலும் அவர்களின் நம்பிக்கை, கருத்துப்படியே இருக்கிறது ட்ரீட்மென்ட். இரண்டிற்கும் இடையில் நின்று உளவியல் எனும் பொதுவிதியில் எப்படி அதைக் கையாள்வார்கள் ஆள்கிறார்கள் என்பது பற்றி...

      அதில் ஒரு கருத்து (அதில் நான் உளவியல் அவ்வளவாகப் பேசவில்லை யதார்த்தம் மட்டுமே சொல்லியிருந்தேன்) சார்ந்த எனது கதை இங்கு எபியில் கேவாபோக வில் வந்ததே.

      கீதா

      நீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  20. பாராட்டப்பட வேண்டிய செய்திகள் பகிர்வு சிறப்பு.

    பதிலளிநீக்கு
  21. இந்த வார பாஸிடிவ் செய்திகள் எல்லாமே கல்வி சம்பந்தபட்டவையாக இருப்பது சிறப்பு. பிரதமரால் பாராட்டப்பட்ட இளநீர் விற்கும் தாயம்மாள், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி கற்க உதவும் பகத்சிங் இருவருமே போற்றத் தக்கவர்கள்.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. முதல் செய்தி ஏற்கனவே படித்துள்ளேன். இங்கும் படித்தேன். ஏழ்மையிலும் கல்விக்காக பள்ளிக்கு சிறந்த தொண்டாற்றிய தாயம்மாளை பாராட்டுவோம். மற்ற செய்திகளையும் அறிந்து கொண்டேன். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.பாராட்டுகள்

    ஜீவி சகோதரின் நூலறிமுகம் நன்றாக உள்ளது. ஆசிரியர் டாக்டர் ருத்ரன் அவர்கள் எழுதிய நிறைய பயனுள்ள விஷயங்களை எடுத்துக்கூறி நான் படித்த கதை பகுதியை சுவையாக்கித் தந்த ஜீவி சகோதரருக்கு என் மனமார்ந்த நன்றிகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  23. இன்றைய பாசிடிவ் செய்திகள் கல்வி சிறப்பு செய்திகளாக அமைந்து விட்டன. இளநீர் விற்கும் தாயம்மாள் பள்ளிக்கு நன்கொடை கொடுத்ததும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக்கு உதவும் பகத்சிங் கும் போற்றப்பட வேண்டியவர்கள்.

    பதிலளிநீக்கு
  24. மனநல மருத்துவரின் உறவுகள் நூல் அறிமுகம் கச்சிதம். உடன்பிறப்புகள் கொஞ்சம் ஸ்பெஷல் என்று எனக்கும் தோன்றும்.

    பதிலளிநீக்கு
  25. பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் அருமை, எல்லாமே கல்வி சார்ந்து என்பது கூடுதல் சிறப்பு. "ஐயா நான் ஏதாவதுகொடுக்கலாமா?" தாயம்மாள் போற்றப்பட வேண்டியவர்.

    ஜீவி சார் அவர்களின் புத்தக அறிமுகம் அருமை. வீட்டில் சானல்கள் மாற்றப்படும் போது எப்போதோ ஒரு தமிழ்ச்சானலில் இவரைப் பார்த்து முதலில் ஏதோ சாமியார் என்று நினைத்தேன் பின்னர் தெரிந்தது மனநல மருத்துவர் என்று.

    புத்தகத்தின் கருத்துகள் கண்டிப்பாக இனி வரும் தலைமுறையினருக்கு தேவைப்படும் என்றே தோன்றுகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  26. உதவிக் கரங்களை வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!