புதன், 13 ஏப்ரல், 2022

இளைஞர்கள் அவர்கள் மனம் விரும்புவதை செய்யலாமா ?

 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

 இப்போது வரும் திரைப்படங்கள் இளைஞர்களை அவர்கள் மனம் விரும்புவதை செய்யச் சொல்கின்றன  இது ஆரோக்கியமானதா?

# இல்லை. தமது தொழில் தேர்வு ,  மேல் படிப்பு போன்றவற்றில் விருப்பத்துக்கு முக்கியத்துவம் தருவது தவறில்லை. மற்றபடி "மனம் போன போக்கில்"  நடந்து கொள்வது விபரீத விளையாட்டுதான்.

& ஒரு ஞானியிடம் ஒரு மனிதர் வந்தார். ஞானியிடம் கேட்டார் - " எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும்? "

ஞானி : " எது உங்களுக்கு சந்தோஷமோ அதை எப்பொழுதும் செய்யுங்கள் "

வந்தவர் மிகவும் சந்தோஷமாக " ஆஹா - அப்படியே செய்கிறேன் " என்று கூறி புறப்பட்டார். 

ஞானி அவரிடம், " கொஞ்சம் பொறுங்கள் - உங்கள் சந்தோஷத்திற்காக நீங்கள் சொல்லும் சொல்லோ அல்லது செய்யும் செயலோ மற்ற எந்த மனிதருக்கோ அல்லது உயிரினத்திற்கோ துன்பம் அளிக்கக்கூடாது - போய் வாருங்கள் " என்றார். 

வந்தவர் வீட்டுக்கு சென்று யோசித்தார். அவருக்கு ஞானம் வந்துவிட்டது. 

ஞானி கூறிய முதல் விஷயம் போன்றதுதான் - இளைஞர்களை, அவர்கள் விரும்பியதை செய்யச் சொல்வது. இரண்டாவது பகுதி, ' அப்படி நீங்கள் செய்வது, உங்களுக்கு, உங்கள் பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும் ' என்று கூறினால் முழுமை அடையும். 

நெல்லைத்தமிழன் :

எதனால் விவாதங்களால் ஒருவரை கட்சி/(மதம், திரை ஹீரோ... எனப் பலவற்றிலும்) மாற்ற முடிவதில்லை? அதேசமயம் ஆசை காட்டி மாற்ற முடிகிறது?

# ஆசை காட்டுவதாலும் மாற்ற முடியாது.  உடனடி லாபத்துக்காக நாம் கேட்பதைச் செய்வார்கள் .  அவ்வளவுதான்.  தானே மாறவேண்டும் என விரும்பினால் மட்டுமே மாற்றம் என்பது ஏற்படும்.

வைஷ்ணவி: 

1. உயிர் போன பின் ஆண், பெண் பேதமில்லை. எல்லாம் ஒன்றே. பேய், பிசாசு, பூதம் என்று ஏன் பிரித்து சொல்கிறோம்? என்ன வித்தியாசங்கள்?

# தீவிர ஆராய்ச்சிக்குப் பின் தெரிய வந்தது: 

பேய் : ஒரு மனிதப்பிறவி  ஸ்தூல சரீரத்தை விட்டு ஆவிரூபமாக இருத்தல்.  காரைக்கால் அம்மையார் பேய் வடிவு எடுத்து கைலாசம் சென்றார் என்று சொல்லப் படுகிறது.

பிசாசு:  அற்பாயுளில் இறந்தவர் ஆவி ரூபமாக சிலருக்கு மட்டும் புலப்படுதல் .  கெடுதல் விளைவிக்கக் கூடிய இயல்பும் அபார சக்தியும் கொண்டவை. 

பூதம்: மனிதப் பிறவிக்குத் தொடர்பில்லாத,  தேவதைகளுக்கு அடுத்ததாகவும்,  ராட்சசர்களுக்கு மேலாகவும் இருக்கும் அமானுஷ்ய திறன்கள் படைத்த கணங்கள்.

2. ‘குடியும் குடித்தனமும்’ - குடி என்பது இங்கு என்ன? இன்றைய கால கட்டத்தில் இதை எப்படி சொல்லணும்?

# குடி என்றால் குடிமக்களைக் குறிக்கும்.  குடித்தனம் என்பது குடும்ப வாழ்க்கை.

3. சமீப காலமாக தமிழ் வெகுவாக மாறியுள்ளது. உதாரணமாக:

பிரயோஜனம் - ப்ரோஜனம், நியாயம் - நாயம், விளையாடி இருக்கேன் - விளையாண்டிருக்கேன், முருங்கை - முரிங்கை…

நீங்களும் எழுதலாம்.

# நீங்கள் குறிப்பிட்டிருப்பது மாற்றம் அல்ல .  மொழியின் கொச்சை வடிவம்.  இது மாதிரி இன்னும் ஆயிரம் சொல்லலாம்.  அதனால் பலன் ஒன்றும் இல்லை.  

பிரயோஜனம் என்பதை ப்ரோஜனம் என்று யாரும் சொல்லி நான் கேட்டதில்லை.

$ முரிங்கை : மலையாளம் 

நாயம் : சென்னை செந்தமிழ்! 

= = = = 

படம் பார்த்து, உங்களுக்குத் தோன்றும் கருத்தை எழுதுங்க. 

1) 


2) 


3) 


இந்த வாரம், குழந்தைகள் / விலங்குகள், மூதாதையர் இல்லாத, வெயில் காலத்தின் வெப்பத்தைத் தணிக்கும் படங்களாக வெளியிட்டுள்ளோம். 

= = = = =

71 கருத்துகள்:

 1. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு..

  குறள் நெறி வாழ்க..

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

  வாழ்க நலம்..
  வாழ்க தமிழ்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க வாழ்கவே...

   வாங்க துரை செல்வராஜூ ஸார்..   வணக்கம்.

   நீக்கு
 3. கேள்வி பதில்கள் எல்லாமே சிறப்பாக இருந்தது.

  இரண்டாவது படம் சூப்பர் ஜி

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  எல்லோருக்கும் ஆரோக்கிய வாழ்வை இறைவன்
  அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. // பேய், பிசாசு, பூதம் என்று ஏன் பிரித்து சொல்கிறோம்?..//

  நல்லவேளை... இப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என்று சொல்லாமல் விவரமான பதில் தரப்பட்டிருக்கின்றது...

  பதிலளிநீக்கு
 6. ப்ரோசனம் . கூடச் சென்னைத் தமிழ் தான்.
  எங்க முனியம்மா சொல்வார். பையனால் ப்ரோசனமே இல்லைன்னு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எடுத்துக்கோ, விட்டுடு. என்று ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டு

   நீக்கு
  2. ஆமாம்.... பேச்சு வழக்குல ரொம்ப விஷயங்க ஒரு மாதிரியா மாறிடும்!

   நீக்கு
 7. பதில்கள்
  1. அட, வேதாளத்தை மறந்துட்டோமே...   பிசாசுலயே ரெண்டு வகை...  நல்லவாய், கொள்ளிவாய்!

   நீக்கு
  2. இந்த இடத்துல பல்கொட்டிப்பேயையும் நாம கவனத்துல வைக்கணும்!

   நீக்கு
  3. முனி, சைத்தான் மறந்து விட்டீர்களே...

   நீக்கு
  4. முனி இந்த வெரைட்டியா?  ஷைத்தானும் பிசாசும் ஒன்றேவோ?

   நீக்கு
  5. // ஆளை விடு. எனக்கு ராத்திரி வேளை:) //

   ஹா.. ஹா.. ஹா...

   நீக்கு
 8. கேள்விகளும் விவரமானவை. பதில்களும் சுவாரஸ்யம்.

  லக்ஷம் பணம் கொடுத்தால் ஏழைகள் சிலர் மாறுகிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பலர் ஆயிரங்களுக்கே...   இன்னும் பலர் ஒரு குவார்ட்டருக்கும், பிரியாணிக்குமே...

   நீக்கு
  2. என்ன செய்யலாம். வறுமை.பசி. எத்தனையோ
   காலமாக நடக்கிறதே.

   நீக்கு
  3. காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா என்று பாடவேண்டியதுதான்!

   நீக்கு
 9. முதல் படம்
  ஒரு தோணியும் , முழு நிலவும் இருந்தால்
  நல்ல கவிதை பிறக்கும்.
  அழகான ஆத்தங்கரை.
  இரண்டாவது படம்,
  சிவப்பு ஆடை, மஞ்சள் ஆடை உடுத்து
  மகளிர் செல்வது அனேகமாக அம்மன் கோவிலாக
  இருக்கலாம். மேகாலயாவோ?

  மூன்றாவது படம்,
  காவேரிக் கரையிருக்கு
  கரை மேலே பூவிருக்கு
  பூப்போலப் பெண் இருக்கு.

  பதிலளிநீக்கு
 10. இந்த வாரம், குழந்தைகள் / விலங்குகள், மூதாதையர் இல்லாத, வெயில் காலத்தின் வெப்பத்தைத் தணிக்கும் படங்களாக வெளியிட்டுள்ளோம். '':))))))
  நல்ல சுவையான படங்கள்.

  பதிலளிநீக்கு
 11. வேதாளம்...

  அது மனிதருக்கு இடைஞ்சல் செய்வதில்லை.. வேதாளம் பிள்ளையாரிடம் அடக்க ஒடுக்கமாக இருப்பது..

  பூத வேதாள சம்ஸேவ்ய என்று சாஸ்தா ஸ்லோகங்களில் காணலாம்..

  பதிலளிநீக்கு
 12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 14. கேள்விகளை பார்த்தவுடன் தோன்றும் ஏதோ பதில்களை ஒதுக்கி விட்டு ஆராய்ச்சி செய்து விவரமான பதில்கள் இன்றைய கேள்விகளுக்கு அளிக்கப் பட்டிருக்கின்றன. இது நன்றாக இருக்கிறது

  படக்கருத்துக்கள்.

  முதல் படம் : கேரளம் + ஜப்பான். ஓடையும் தோட்டமும் கேரளம். பாலம் ஜப்பான்.

  இரண்டாம் படம்: முதலில் வருபவர் பெரிய ஆஃபீசராக இருக்கவேண்டும் பின்னால் ஒருவர் அவருடைய பையையும் கொண்டு பணிவுடன் வருகிறார்.

  Jayakumar

  பதிலளிநீக்கு
 15. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள்,பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் புதிய தொற்றினால் பாதிப்பு ஏதுமின்றிக் கழியப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 16. கேள்விகளும், பதில்களும் சுவாரசியம். இன்றைய இளைஞர்கள் திரைப்பட மோகத்திலிருந்து விடுபட என்ன செய்யலாம்?
  நடிகரால் அவங்களுக்குக் காலணாவுக்குப் பிரயோசனம் இல்லை. ஆனாலும் குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்கள் தியேட்டரையே உடைத்து நொறுக்குகிறார்கள். இதெல்லாம் எவ்வகையான மனோநிலை?

  பதிலளிநீக்கு
 17. முதல் படம் ஆங்கிலப் படங்கள்/அல்லது கதைகளில் வரும் வர்ணனை போல் உள்ளது. ஹூஸ்டனில் குடியிருப்பு வளாகத்துக்குள் இருக்கும் ஏரிக்கரையில் இப்படியான பாலம் உண்டு.
  இரண்டாவது படம் எந்த மலை? கூர்ந்து பார்க்கணும். ஆனால் பார்த்த உடனே தோன்றியது தொட்டபெட்டா மலைச்சிகரமா? வேடிக்கை பார்க்கப் போனவர்கள் இருட்டிக் கொண்டு மழையும் தூறலும் வருவதால் திரும்புகிறார்களோ?
  மூன்றாவது படத்து மோகினி யாருடைய வரவுக்குக் காத்திருக்காளோ?

  பதிலளிநீக்கு
 18. பேய், பிசாசு, பூதம், குட்டிச்சாத்தான், ஆவி முதலியவற்றின் விளக்கங்கள் நன்றாக இருக்கு/ பின்னாடி வரேன். இன்னிக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. கடமைக்குப் பின்னர் பொழுது போக்கிக்கலாம்.

  பதிலளிநீக்கு
 19. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 20. கேள்விகளும் பதில்களும் மிக அருமை.

  படங்கள் எல்லாம் மிக அழகு. அருமையான இயற்கை காட்சி. ஓடை, மலை, ஆறு எல்லாம் எப்போதும் ரசிக்கலாம்.

  பதிலளிநீக்கு
 21. இப்போது வரும் திரைப்படங்கள் இளைஞர்களை அவர்கள் மனம் விரும்புவதை செய்யச் சொல்கின்றன இது ஆரோக்கியமானதா?//

  இதற்கான பதில்கள் நன்று.

  நியாயமான விருப்பங்கள் தவறில்லை. இரண்டாவது பதிலில் கூடவே இருக்கும் //அப்படி நீங்கள் செய்வது, உங்களுக்கு, உங்கள் பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும் ' என்று கூறினால் முழுமை அடையும். //

  யெஸ் யேஸ்

  கீதா

  பதிலளிநீக்கு
 22. முரிங்கை என்பதைப் பார்த்ததும் நம் பூஸார் தானே பயன்படுத்துவார் என்று நினைக்கத் தோன்றியது.

  இந்தக் கேள்விக்கான பதிலும் சூப்பர்.

  கீதா

  பதிலளிநீக்கு
 23. முதல் படம் பார்த்ததும், நிலவும் மலரும் ஆடுதே, ஆஹா இன்ப நிலாவினிலே....என்று தோன்றினாலும் படகில்லை, நிலா இல்லை!

  யாரங்கே ஜீம்பூம்பா!!! இந்தக் கீதாவுக்கு இந்த அழகான வாய்க்கால் அருகில் ஒரு வீடு!!!!! பெரிய வீடெல்லாம் வேண்டாம்...ஒரே ஒரு ரூம் இருந்தா போதும்! வாய்க்காலைப் பார்க்கும்படி ஜன்னலுடன்....!! குறுக்கே பாலம் எனக்கு இப்படி இருக்கும் இடங்கள் ரொம்பப் பிடிக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
 24. 2 வது படம் - அது ஒரு அதிகாரி என்று தோன்றுகிறது. கூடவே வரும் ஆணின் செக்யூரிட்டி? கழுத்தில் ஐடென்டிட்டி கார்ட் தொங்குகிறது. பின்னாடி படையே போகுதே!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 25. 3 வது இடம் - அழகான இடம். அந்தப் பொண்ணு ஃபோட்டோ ஷூட் போல....

  கீதா

  பதிலளிநீக்கு
 26. பதில் அளித்த அனைவருக்கும் நன்றி.
  வைஷ்ணவி

  பதிலளிநீக்கு
 27. கேள்விகளுக்கான பதில்கள் மிக நன்று.

  படங்களும் அழகாக இருக்கின்றன. அழகான இயற்கைக்காட்சிகள்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 28. கேள்வி பதில் ரசித்தேன். புகைப்படங்கள் ரசனையாக இருந்தன.

  பதிலளிநீக்கு
 29. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் !

  பதிலளிநீக்கு
 30. விஜய் நடித்த படங்கள் என்றால் அவர் ரசிகர்கள் ஏன் இப்படிக் கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொள்கின்றனர்?

  பொதுவாகத் தமிழ்ப்படங்கள் எல்லாமே குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை என்றாலும் வசூலில் குவிப்பது எப்படி?

  திரைப்படத்திற்கு முன்னெல்லாம் அதிகம் போனால் ஒரு வீட்டின் குடும்ப நபர்களுக்கு 20 ரூ செலவானால் பெரிது. ஆனால் இப்போது அங்கே வாங்கும் பாப்கார்னுக்கே 500ரூ வரை செலவு ஆவதாகச் சிலர் சொல்கின்றனர். அப்படியும் விடாமல் ஏன் போகிறார்கள்? ஏன் வாங்கறாங்க? புரியலையே?

  பதிலளிநீக்கு
 31. கேள்வி பதில்களை ரசித்தேன். இந்த வாரத்தின் படங்கள் நன்று - குறிப்பாக முதல் படம்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!