வெள்ளி, 8 ஏப்ரல், 2022

வெள்ளி வீடியோ : காம குரோதத்தைக் கட்டுப்படுத்தியே பூமியில் வாழ்பவன் பாக்கியவான்...

 ராமநவமி.  ஸ்ரீராமநவமி.. வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ராமநவமி.

சைத்ர மாதத்தின் ஒன்பதாவது நாள்.  அதாவது தமிழ் முதல் மாதமான சித்திரை ஒன்பதாம் நாள், வசந்த நவராத்திரியின் ஒன்பதாவது நாள் அயோத்தியில் விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ஸ்ரீராமர் அவதரித்ததாய் வரலாறு.

இனி அவ்வப்போது தனிப்பாடல் பகிரப்போவதாய் முன்னரே சொல்லி இருந்தேன்.   ராமநவமியை முன்னிட்டு நான் சிறுவயதில் ரேடியோவில் அதிகாலை பக்தி மாலையில் அடிக்கடி கேட்டு ரசித்த டி எம் எஸ் பாடிய இரண்டு பாடல்களை இன்று பகிர்கிறேன்.

இந்த இரண்டு பாடல்களும் கேட்கக் கிடைக்காமல் சில வருடங்களுக்கு முன்னால் கூட பேஸ்புக்கில், நணபர்களிடம், ஆல் இந்தியா ரேடியோவில் மற்றும் தூர்தர்ஷனில் பணிபுரியும் இரண்டு நண்பர்கள் என்று எல்லோரிடமும் சில பாடல்களை கிடைக்குமா என்று கேட்கும் லிஸ்ட்டில் இவற்றையும் வைத்திருந்தேன்.

சில நாட்களுக்கு முன்னால் இந்த இரண்டு பாடல்களும் திடீரென என் கண்ணில் பட்டது.  இந்த இரு பாடல்களை உங்களில் எத்தனை பேர் கேட்டிருப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது.  

இந்த இரண்டு பாடல்களையும் யார் இயற்றியது என்று யாம் அறியோம் பராபரமே..  யார் எழுதியது என்று பொதுவெளியில் சொல்ல முடியாமல் இருப்பது துரதிருஷ்டம்.  அருமையான பாடல்கள்.

முதல் பாடல் ராமன் பிறந்ததைக் குறித்துக் கொண்டாடும் பாடல். டி எம் எஸ் குழுவினருடன் பாடிய பாடல்.

அருளே மானிட வடிவாகி அயோத்தி நகரில் பிறந்தது
அது ராமனின் அவதாரம் ஸ்ரீராமனின் அவதாரம்

அருளே நிறைந்த மண்ணுலகில் மறுபடி
தர்மங்கள் வளரட்டும் என்று (அருளே)

பெற்றவர் மகிழும் பிள்ளையென்றும் உடன்
பிறந்தவர் மகிழும் அண்ணன் என்றும்
வாழ்ந்திடச் சொன்னவர் பலராகும்
வாழ்ந்திடச் சொன்னவர் பலராகும்
இங்கு வாழ்ந்தது ராமனின் கதையாகும்
இங்கு வாழ்ந்தது ராமனின் கதையாகும் (அருளே)

அழகிய சீதை துணையாக அந்த
அனுமான் வல்லமை வெளியாக
மனிதன் பாதை தெளிவாக
மனிதன் பாதை தெளிவாக
வந்த ரகுகுலம் விளக்கும் சுடராக
வந்த ரகுகுலம் விளக்கும் சுடராக (அருளே)

வீரத்தில் விளைந்த வில்லெடுத்தான் உயர்
ஞானத்தில் தெளிந்த சொல்லெடுத்தான்
பாசம் கருணை அன்பாகும்
பாசம் கருணை அன்பாகும்
மணம் பரவிடும் மலராய் உருவெடுத்தான்
மணம் பரவிடும் மலராய் உருவெடுத்தான்   (அருளே) 
அடுத்த பாடலும் முந்தைய பாடலும் ஜோடியாகவே ரேடியோவில் அப்போது போடுவார்கள்.  எனவே ஒரு பாடலை நினைத்தால் இன்னொன்று தானாக ஞாபகத்துக்கு வந்து விடும்.

ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்
ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்
ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்

காம குரோதத்தைக் கட்டுப்படுத்தியே பூமியில் வாழ்பவன் பாக்கியவான்
பூமியில் வாழ்பவன் பாக்கியவான்
பொய்யுரைக்காமல் மெய் சிதைக்காமல் வையத்தில் உள்ளவன் பாக்கியவான்
வையத்தில் உள்ளவன் பாக்கியவான்

ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்

கள்ளம் கபடுகள் உள்ளத்தில் இல்லாமல் வெள்ளை குணத்தவன் பாக்கியவான்
வெள்ளை குணத்தவன் பாக்கியவான்
நண்பர்களுடைய நலத்தினைக் கோரும் பண்புடையவனே பாக்கியவான்
பண்புடையவனே பாக்கியவான்

பெற்றவரைப் பேரானந்தப் படுத்தும் குற்றமற்றவனே பாக்கியவான்
குற்றமற்றவனே பாக்கியவான்
ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்
ஆசை எண்ணியே மோசம் போகாமலே பாசமற்றவனே பாக்கியவான்
பாசமற்றவனே பாக்கியவான்

துன்பம் வந்தாலும் துக்கம் இல்லாமல் இன்பமாக்குபவன் பாக்கியவான்
இன்பமாக்குபவன் பாக்கியவான்
யாதொரு ஸ்தீரியையும் மாதாவென்றெண்ணிடும் போரில்லாதவனே பாக்கியவான்
போரில்லாதவனே பாக்கியவான்

ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்
ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்
பூமியில் அவனே பாக்கியவான் பூமியில் அவனே பாக்கியவான்
**********************************************************************

சிந்துபைரவி ராகத்துக்கு எப்போதுமே ஒரு தனி ஈர்ப்பு உண்டு.  1968 ல் வெளியான லட்சுமி கல்யாணம் படத்தில் இடம்பெற்ற பாடல் பி சுசீலா குரலில் 'ராமன் எத்தனை ராமனடி' பாடல்..  இது அந்த ராகத்தில் அமைந்த பாடல். 

இந்தப் படத்தின் பிரிந்தாவனத்துக்கு வருகின்றேன் பாடல் ஒருமுறை பகிரவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.  இந்தப் படத்தின் எனக்கு பிடித்த இன்னொரு பாடலான 'யாரடா மனிதன் இங்கே' பாடலை முன்னரே பகிர்ந்திருக்கிறேன்.

பாடல்கள் அத்தனையும் கண்ணதாசன்.   வசனமும் அவர்தான்.  படத்துக்கு இயக்கம் ஜி ஆர் நாதன்.  இசை மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன்.

இந்தப்படம் அந்த வருடத்தின் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த ஆண்குரல், சிறந்த பெண்குரல் என்று விருதுகளை அள்ளி இருக்கிறது.

இனி பாடல்..  

ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி

தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெய ராமன் ராமன்

ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்

வம்சத்திற்கொருவன் ரகு ராமன்
மதங்களை இணைப்பவன் சிவ ராமன்
வம்சத்திற்கொருவன் ரகு ராமன்
மதங்களை இணைப்பவன் சிவ ராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன்
முடிவில்லாதவன் அனந்த ராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன்
முடிவில்லாதவன்  அனந்த ராமன்

ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமனின் கைகளின் நான் அபயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமனின் கைகளின் நான் அபயம்

ராம்ராம்..ராம்ராம்.
ராம்ராம்.ராம்ராம்.
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்

ராமன் எத்தனை ராமனடி.

64 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  என்றும் ஆரோக்கியம் நிறைந்திருக்க இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Back to Form? வாங்க வல்லிம்மா..  வணக்கம்.  பிரார்த்திப்போம்.  முழுவதும் நலமாகி விட்டீர்களா?

   நீக்கு
  2. 😀😀😀😀😀😀😀😀😀😀 Trying get back on the Track:)Thank you ma.

   நீக்கு
  3. கவனமாயிருங்கள்.  அதிகம் ஸ்ட்ரெயின் செய்ய வேண்டாம்.

   நீக்கு
  4. ரேவதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். ஒருவேளை நாளையா இருந்தால் முன் கூட்டிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

   நீக்கு
  5. அடடே.. அப்படியா?


   இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா.

   நீக்கு
  6. நன்றி மா. அன்பின் கீதாவுக்கு அபார ஞாபக சக்தி!!!

   நாளைதான் மா. என்றும் எல்லோரும் வளமாக
   வாழ ராமன் அருள வேண்டும்.

   நீக்கு
 2. மூன்றுமே முத்தான பாடல்கள். முதல் இரண்டும்
  நான் இதுவரை கேட்டதில்லை.
  மூன்றாவது எப்பொழுதும் கேட்டு ரசித்த பாடல்.
  சுசீலாம்மா உருகி உருகிப் பாடும்
  அந்தப் பாடலைக் கேட்கும்போது
  கண்கள் கலங்கும். எத்தனை உன்னதமான
  கவிதைவரிகள்.
  ராம நாம ஜபம் என்னாளும் நம்மைக் காக்கும்.

  லட்சுமி கல்யாணம் படமும்
  சிறப்பான படம்.
  தங்கத் தேரோடும் பாடல் ,சிவாஜி கணேசன்
  நடிப்பில் அற்புதமாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //முதல் இரண்டும் நான் இதுவரை கேட்டதில்லை.//

   இப்போது கேட்டீர்களா?  எப்படி இருந்தது?  சிறுவயதில் அடிக்கடி கேட்டு வரிகளே மனதில் நின்று விட்ட பாடல்கள்.  பல நாட்களாய் முகநூலில் உட்பட பல நண்பர்களிடம் கிடைக்குமா என்று கேட்டுக்கொண்டிருந்த பாடல்கள்!

   சுசீலாமா குரலுக்கு சொல்லவும் வேண்டுமா?

   நிஜவாழ்வில் நம்பியார் எப்படிப்பட்ட மனிதர் என்று தெரியும்.  படங்களில் அவரை கேவலப்படுத்தி வசனங்கள் வரும்போது கஷ்டமாக இருக்கும்.  தங்கதேரோடும் வீதியிலே பாடலும் ரசிக்கவைக்கும் பாடல்.

   நீக்கு
 3. ''ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
  நம்பிய பேருக்கு ஏது பயம்
  ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
  நம்பிய பேருக்கு ஏது பயம்
  ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
  ராமனின் கைகளின் நான் அபயம்
  ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
  ராமனின் கைகளின் நான் அபயம்''


  கண்ணனை அனுபவிக்கும் கண்ணதாசன்
  ராமனையும் அனுபவித்துப் பாடியது நம் பாக்கியம். எளிதாக மனத்தில் குடியேறிய
  அர்த்தமுள்ள பாடல்.
  மிக நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதே படத்திலேயே இதே சுசீலாம்மாவின் இனிமையான குரலில் 'பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்' என்ற மகா இனிமையான கிருஷ்ணன் பாடலும் எழுதி இருக்கிறார் கண்ணதாசன்.  அதை வேறொரு சந்தர்ப்பத்தில் பகிர்வேன்!!

   நீக்கு
 4. ஸ்ரீராம் பக்த ஹனுமான் என்று ஒரு படம் வந்தது. அதில் ஹனுமான்
  ராமனை நினைத்துப்
  பாடும் பாடலும் மிக நன்றாக
  இருக்கும். அது டப்பிங்க் செய்து எடுத்த படம்
  என்பதுதான் ஒரு வித்தியாசமாகத் தெரியும்.
  ராமராக என் டி ராமராவையே

  பார்த்து வளர்ந்த காலம்:)
  ராம சீதா லக்ஷ்மண ஹனுமார் படம் இல்லாத
  வீடே இருக்காது.

  ராமன் அருளால் நாடு நலம் பெற வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படம் கேள்விப்பட்டு இருக்கிறேன்.  ராமனாகவும் நடித்திருக்கிறார், கிருஷ்ணனாகவும் நடித்திருக்கிறார் என் டி ஆர்.  

   ஆந்திராவின் தேவுடு அவர்!

   நீக்கு
  2. ஆமாம் மா.

   லவகுசா படம் நன்றாக இருக்கும். ஜகம் புகழும் புண்ய
   கதை மிக மிகப் பிடிக்கும்.

   அந்த இரண்டு பாடல்களையும் இப்போது கேட்கிறேன்.

   டி எம் எஸ் ஸார் அத்தனை கடவுள்களையும்
   வழிபட்டு,
   நமக்கு அத்தனை நன்மைகளையும்
   கொடுக்கிறார்.
   சுசீலாம்மாவின் 'ப்ருந்தாவநத்துக்கு''
   பாடல் பக்தியும் சோகமும் இழையும்.

   'க்ரிஷ்ணா நானொரு பாவியோ
   என் கேள்விக்குப் பதிலென்ன கேலியோ''

   நம் கண்ணதாசன் போல யார்.

   நீக்கு
  3. லவகுசா பாடல் அருமையான பாடல்.


   //நம் கண்ணதாசன் போல யார்? //


   உண்மைதான்.

   நீக்கு
 5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

  வாழ்க நலம்..
  வாழ்க தமிழ்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க வாழ்கவே..

   வாங்க துரை செல்வராஜூ ஸார்..  வணக்கம்.

   நீக்கு
 6. முதல் பாடல் கேள்விப்பட்டதில்லை. கேட்டுப் பார்க்கிறேன்.

  மற்ற இரண்டு பாடல்களும் ரசித்தவை. கொஞ்சம் பழைய காலத்துக்குச் சென்றதுபோன்ற நினைவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி.  இரண்டாவது பாடல் இங்கு வரவில்லை என்பதை இப்போதுதான் கவனிக்கிறேன்.  பிறகு வந்து இங்கு வரக்கூடிய காணொளி இணைக்க முடிகிறதா என்று பார்க்கவேண்டும்.

   நீக்கு
  2. https://www.youtube.com/watch?v=vYuXzF6nkPQ

   இங்கு போய் கேட்டேன்.
   எனக்கு பிடித்த பாடல். அடிக்கடி கேட்ட பாடல்.

   நீக்கு
  3. இப்போது இங்கேயே பாடல் கேட்கும்படி இணைப்பை இணைத்திருக்கிறேன்.

   நீக்கு
  4. முதலில் நான் கொடுத்திருந்த இணைப்பும் இதுதான்.  அதாவது கோமதி அக்கா கொடுத்திருக்கும் இணைப்புதான் இங்கு இணைத்திருந்தேன்.  அது இங்கு நாட் அவைலபில் என்றதும் வேறு கொடுத்திருக்கிறேன்.  அந்த நாட் அவைலபில் மெசேஜில் கடைசி வரியை க்ளிக் செய்திருந்தாலும் இந்த இணைப்புக்குதான் செல்லும்.

   நீக்கு
 7. பதிவின் முதல் பாடலைக் கேட்டதில்லை..

  இரண்டாவது பாடலை அப்போதைய வானொலியில் பலமுறை கேட்டிருக்கின்றேன்..

  இப்போதெல்லாம் இப்படியான பாடல்களை எழுதுவாரும் இல்லை.. பாடுவாரும் இல்லை...

  ஸ்ரீ ராம.. ராம..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். இவற்றையே எழுதியது யார் என்று தெரியவில்லை.

   நீக்கு
 8. கவியரசர், டி.எம்.எஸ், சீர்காழியார், மெல்லிசை மன்னர்,திரையிசைத் திலகம் இவர்களது காலத்தில் வாழ்ந்தோம் என்பதே நாம் பெற்ற பேறு..

  பதிலளிநீக்கு
 9. எல்லாருக்கும் இனிய காலை வணக்கம்.!!

  ஆமாம் ஞாயிறு ஸ்ரீராமநவமி. எல்லாப் பாடல்களும் அதிகமாகவே கேட்டிருக்கிறேன். முதல் இரு பாடல்களும் ஊரில் டீக்கடைகளில் காலை நேரப் பாடலாக ரேடியோவில் கேட்டிருக்கிறேன். பேருந்துக்குக் காத்திருக்கும் சமயம்...மிகவும் பிடித்த பாடல்கள். அந்த நேரத்தி ல் கேட்கும் போது ஒரு சந்தோஷம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா வணக்கம்.  நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?

   நீக்கு
  2. ஆமாம் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். வரிகள் பார்த்ததுமே டக்கென்று நினைவுக்கு வந்துவிட்டது.

   இரண்டாவது பாடல் யுட்யூபில் போய் கேட்டேன். அதுவும் வரிகள் பார்த்ததுமே தெரிந்துவிட்டது.

   கீதா

   நீக்கு
 10. இப்போது வெளியாகும் பக்தி இசைப் பாடல்கள் கூட அபத்தமாக இருக்கின்றன..

  ஆந்திராவின் கோஷ்டி கானம்!..

  அனுமாருக்கும் ஒரே மெட்டு.
  ஆஞ்சநேயருக்கும் ஒரே மெட்டு.

  அனுராதா புத்வாள் தெரியாமல் சில இசைக் கோர்வைகளைக் கொடுத்து விட்டார்... அதையே திருப்பிப் போட்டு சக்கையாக அடித்துக் கொண்டிருக்கின்றார்கள் - இங்குள்ளவர்கள்..

  பதிலளிநீக்கு
 11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுசீலா அம்மா அவர்கள் பாடி வைத்த -

   ராமன் எத்தனை ராமனடி - பாடல் காலம் நமக்களித்த பொக்கிக்ஷம்.. அதைப் புகழ்வதற்கு வார்த்தைகளே இல்லை..

   நீக்கு
 12. முதல் பாடல் வானொலியில் கேட்ட ஞாபகம் இருக்கிறது.

  இரண்டாவது பாடல் இயக்கமில்லை.

  மூன்றாவது பாடல் பல்லாயிரம் முறைகள் கேட்டதுண்டு ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல்லாயிரம் முறையா?  அண்ணாமலை படித்த புத்தகங்கள் போலவா  ஜி?!

   இப்போது இரண்டாவது பாடலை இங்கேயே கேட்கலாம்.

   நீக்கு
 13. ஸ்ரீ ராம பக்த ஹனுமான் படத்தில் Tms அவர்களது பாடல்

  மகிமை அற்புதம்
  ஆகும் ராமனின்
  மகிமை அற்புதம் மா!..

  யூ டியூப்பில் இருக்கின்றது..

  ஜெய் ராம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சட்டென நினைவுக்கு வரவில்லை. போய்க் கேட்டால் தெரியும். பார்க்கிறேன்.

   நீக்கு
  2. ராம பக்த ஹனுமான் பார்த்தாப்போல் நினைவு. ரொம்பவே சின்னக் குழந்தையாய் இருந்தேனோ? இஃகி,இஃகி,இஃகி. மாயா பஜார் நன்றாக நினைவில் இருக்கு. நல்ல ஜூரம் வேறே எனக்கும் தம்பிக்கும். அந்தப் படம் பார்க்கும்போது.

   நீக்கு
 14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 15. //இந்த இரு பாடல்களை உங்களில் எத்தனை பேர் கேட்டிருப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது. //

  நான் கேட்டு இருக்கிறேன் ஸ்ரீராம். என் அப்பா ஒரு ராமர் பக்தர் அதனால் என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல். அப்பா பதிவு செய்து வைத்து இருந்தார்கள்.
  முன்பு ஒரு தடவை நீங்கள் ராம நாமத்தை சொல்பவன் எவனோ பாடல் கிடைக்கவில்லை என்ற சமயமும் சொல்லி இருக்கிறேன்.

  டி.எம்.எஸ் அவர்களின் மற்றவர்களுக்கு என்று பாடாமல் தன் குரலில் உருகி பாடிய பாடல் இவைகள்.சம்பூர்ணராமாயணம் படத்தில் ராமர் பிறந்த போது வரும் பாடல் டி.எம்.எஸ் மிகவும் நன்றாக பாடி இருப்பார். தசரதன் எப்படி பெருமையோடு நடந்து போனார் என்று. அந்த பாடலும் ஒரு நாள் போடுங்கள்.

  ராமன் எத்தனை ராமனடி பாடலும் மிகவும் பிடிக்கும். "லவகுசா" பாடல் ஜெகம் புகழும் புண்ணிய கதை பாடல்தான் அப்பா முதன் முதலில் டேப் ரிக்காடர் வாங்கிய போது பதிவு செய்த பாடல்.

  பகிர்ந்த மூன்று பாடல்களும் மிகவும் பிடித்த பாடல்கள்.
  கேட்டு மகிழ்ந்தேன். நன்றி, நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா..   அப்பாவுக்கு பிடித்த பாடல்களா?  பலமுறை கேட்டிருக்கிறீர்கள் என்பது சந்தோஷம் அக்கா. 

   நீக்கு
 16. வை. கோபாலகிருஷ்ணன் சார், உங்களை ஒவ்வொரு தடவையும் அழைப்பதும் நினைவுக்கு வந்தது.}ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் " என்று தானே சொல்வார்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. ஹா... அவரை நினைவு படுத்தி விட்டீர்கள். ரொம்ப நாளாச்சு அவர் கமெண்ட் பார்த்து..

   நீக்கு
 17. இந்த இரு பாடல்களிலுமே டி எம் எஸ் அவர்களின் குரல் தனிக்குரல். படத்திற்குப் பாடுவதற்கும் இதற்கும் வித்தியாசம் நன்றாகத் தெரியும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 18. ராமன் எத்தனை ராமனடி பாடலும் கேட்டு ரசித்த பாடல்.

  கீதா

  பதிலளிநீக்கு
 19. அனைத்துப் பாடல்களும் கேட்டிருக்கேன் என்றாலும் இரண்டாவது பாடல் இங்கே வரவில்லை. வேறு முறையில் முயற்சி செய்யணும். லக்ஷ்மி கல்யாணம் திரைப்படம் கண்னதாசனின் சொந்தப் படம் இல்லையோ? நான் மதுரையில் தேவி திரை அரங்கில் இந்தப் படம் என் சிநேகிதியோடு போய்ப் பார்த்தேன். அதன் பின்னர் சில/பல முறை தொலைக்காட்சி தயவிலும். ராகங்கள் எல்லாம் தெரியாட்டியும் மிகவும் அர்த்தமுள்ள பாடல்கள். பகிர்வுக்கு மி9க்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாதாரணமாக இங்கு பாடல் வராத நிலையில் அதில் காணப்படும் வரிகளில் கடைசி வரியில் க்ளிக் செய்தால் யு டியூபில் அந்த பாடல் இருக்கும் இடத்துக்குச் சென்று விடும்.  ஆனாலும், இப்போது இங்கேயே கேட்கும் வண்ணம் வேறு இணைப்பு கொடுத்திருக்கிறேன் கீதா அக்கா.

   நீக்கு
 20. மூன்று பாடல்களும் நல்ல பாடல்கள்... முதலிரண்டு பாடல்கள் கேட்டதாக ஞாபகம் இல்லை...

  பதிலளிநீக்கு
 21. ‘முடிவில் ஆதவன் அனந்த ராமன்’

  முடிவில்லாதவன் அனந்த ராமன் என்று வரவேண்டும்

  பதிலளிநீக்கு
 22. குமுதம் பாணியில் எப்படியோ உங்களுக்கும் ஒரு தலைபபு சிக்கி விடுகிறது... !

  பதிலளிநீக்கு
 23. முதல் பாடல் கேட்ட நினைவில்லை. இரண்டாவது பாடல் நிறைய கேட்டிருக்கிறேன். எனக்கு திறக்கவில்லை. கோமதி அக்கா கொடுத்த லிங்கில் கேட்டேன். கோமதி அக்காவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை நான் கொடுத்திருந்த லிங்க்தான் வேலை செய்யவில்லை.  மதியம் கொடுத்த (இந்திய நேரப்படி) வேலை செய்கிறதே...திறக்கிறதே...

   நீக்கு
 24. தான் பாடிய பாடல்களில் தனக்கு மிகவும் பிடித்த பாடல்களுல் ஒன்று என்று 'ராமன் எத்தனை ராமனடி..' பாடலை குறிப்பிட்டிருக்கிறார் பி.சுசீலா.

  பதிலளிநீக்கு
 25. முதல் இரண்டு தனிப் பாடல்கள் கேட்ட நினைவில்லை. மூன்றாவது பாடல் கேட்டு ரசித்த பாடல். காணொளிகள் இனிமேல் தான் பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!