புதன், 20 ஏப்ரல், 2022

இளைஞர்கள் திரைப்பட மோகத்திலிருந்து விடுபட என்ன செய்யலாம்?

 

  கீதா சாம்பசிவம் : 

இன்றைய இளைஞர்கள் திரைப்பட மோகத்திலிருந்து விடுபட என்ன செய்யலாம்?

# மாற்றம்  ஒருவருடைய மனம் விரும்பினால் மட்டுமே ஏற்படும்.  மற்றபடி வேறு யார் எது செய்தாலும் இன்னொருவரிடம் மாற்றம்  ஏற்பட வாய்ப்பில்லை.  இளைஞர்கள் திரைப்பட நடிகர்கள் மோகம் பிடித்து அலைகிறார்கள்  என்று  எதை வைத்து சொல்கிறோம்?   படம் வெளிவரும்போது தோரணம் கட்டி பாலபிஷேகம் செய்து என்றெல்லாம் படிக்கிறதை வைத்துச் சொல்கிறீர்களோ ?  இவை எல்லாம் அவரவர்கள் கூலிப்பட்டாளம் மூலமாகச் செய்து கொள்ளும் விஷயங்கள்.   சரியான அடிப்படை இல்லாத எந்த ஆர்வமும் காலக்கிரமத்தில் குறைந்து போய்விடும்.

& நாம் இளைஞர்களாக இருந்த காலத்தில், இதே கேள்வியை நாம் முந்தைய தலைமுறையினர் கேட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். 

நடிகரால் அவங்களுக்குக் காலணாவுக்குப் பிரயோசனம் இல்லை. ஆனாலும் குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்கள் தியேட்டரையே உடைத்து நொறுக்குகிறார்கள். இதெல்லாம் எவ்வகையான மனோநிலை?

# இதற்கு தனியாக பதில் தர வேண்டியதில்லை என்று தோன்றுகிறது.

& அராஜகங்கள், அழிவுகள் செய்வது 'show of strength ' என்று நினைக்கும் மூடத்தனம்.  

விஜய் நடித்த படங்கள் என்றால் அவர் ரசிகர்கள் ஏன் இப்படிக் கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொள்கின்றனர்?

விஜய் ரசிகர்கள் என்ன அக்கிரமம் செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது.  பெரும்பாலும் ஏதோ இரண்டு நடிகர்கள் இடையே ஒரு கடுமையான போட்டி இருப்பதாக ஒரு எண்ணத்தை அவர்களே கூட உருவாக்கி வைத்திருக்கிறார்கள் .  இதன் காரணமாகப் பல சங்கடங்கள் வருகின்றன. N நம் மக்களுக்கு அறிவும் அனுபவமும் போதாத போது அதை பற்றி கவலைப்பட்டு என்ன பயன் ? அதை சரி செய்ய ஆயுதம் நம்மிடம் இல்லை..  ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

பொதுவாகத் தமிழ்ப்படங்கள் எல்லாமே குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை என்றாலும் வசூலில் குவிப்பது எப்படி?

# ரொம்ப சுமாரான படங்கள் கோடிக்கணக்கில் வசூல் செய்வது எப்படி என்று நானும் பல சமயம் வியப்பு அடைந்திருக்கிறேன் . பொதுவாக சொல்லப்படுவது என்ன என்றால் எந்த ஒரு ஹீரோவும் திரையில் செய்வதை தாம் செய்வதாக கற்பனை செய்து ரசிகர்கள் திருப்தி அடைகிறார்கள்.  அதேபோல கதாநாயகன் வில்லனை அடித்து நொறுக்கும் போது நமக்கு பிடிக்காத ஒருவரை நாம் வெறுக்கும் ஒருவரை நாமே அடித்து நொறுக்குவது  போல ஒரு திருப்தி மன அளவில் உண்டாகிறது.  இதன் காரணமாக,  குறும்புத்தனம் கூடிய காதல் காட்சிகள் அல்லது கடுமையான சண்டை காட்சிகள் நிறைந்த படங்கள் யாவும் வெற்றி பெறுகின்றன என்று நான் கணிப்பது உண்டு.

திரைப்படத்திற்கு முன்னெல்லாம் அதிகம் போனால் ஒரு வீட்டின் குடும்ப நபர்களுக்கு 20 ரூ செலவானால் பெரிது. ஆனால் இப்போது அங்கே வாங்கும் பாப்கார்னுக்கே 500ரூ வரை செலவு ஆவதாகச் சிலர் சொல்கின்றனர். அப்படியும் விடாமல் ஏன் போகிறார்கள்? ஏன் வாங்கறாங்க? புரியலையே?

#  வசதி இருப்பதற்கு ஏற்ப ஆடம்பரம் அதிகரிக்கும்.  இது ஒரு பொதுவான நியதி.  மேலும் அந்தக் காலத்தில் 5000 ரூபாய் என்பது பெரிய சம்பளமாக கருதப்பட்டது.  இப்போது இரண்டரை லட்சம் அல்லது மூன்று லட்சம் மாத சம்பளம் வாங்கும் மக்கள் நிறைய உண்டு ..சில வீடுகளில் கணவன் மனைவி இருவருமே நிறைய சம்பாதிப்பது சகஜமாகிவிட்டது. N எனவே ஆடம்பர செலவு அதற்கேற்ப பிரம்மாண்டமாக அதிகரித்திருக்கிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை என்று சொல்லலாம்.

 வசதி அதிகம் இருக்கிறதா நிறைய சேமித்து வை வாரிசுகளுக்கு சொத்துக்கள் சேர் என்று ஒரு காலம் இருந்தது இப்போது இருக்கிறதை அனுபவி இருக்கும்வரை அனுபவி போதாவிட்டால் கடன் வாங்கியாவது அனுபவி என்கிற கன்ஸ்யூமெரிஸம் ஆட்சி செய்கிறது.

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

தமிழை ஒரு மொழியாக பார்க்காமல் தமிழணங்கு என்று அதற்கு ஒரு உருவம் கொடுப்பது அவசியமா? மற்று மொழிகளில் இப்படி செய்கிறார்களா?

# தமிழுக்கு பல சிறப்புக்கள் உண்டு.  கவிதை நயம் சொல்லாட்சி சிலேடை சித்திர கவி போன்ற சில  புதுமைகள் கிட்டத்தட்ட வேறு எந்த மொழியிலும் இல்லை என்றே  சொல்லலாம்.  

எனவே தமிழை இளமை மாறாத அழகி என்று உருவகம் செய்வது பெரிய தவறில்லை. 

தமிழ் அணங்கு நவ நாகரீக மங்கையாக பவனி வருவதைப் பார்க்கிறோமே .

வேறு மொழிக்காரர்கள் இப்படி மொழி ஆராதனை செய்கிறார்களா என்று தெரியவில்லை.  தமிழைப் பார்த்து தெலுகு தல்லி பிறந்ததை அறிவோம்.  வங்காள, மராத்தி கன்னட மக்களும் தங்கள் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை அறிவோம். அது ஆராதனை அளவுக்குப் போகவில்லை என்று சொல்லலாம்.

இளமை மாறாமல் இருக்கும் தமிழணங்கு தற்சமயம் நவீனமாக மாறியிருக்க மாட்டாளா?

$ இதென்ன நாயம்? இப்ப இந்த மாறி பேசி ஒரு ப்ரோஜனமும் இல்லை.  தேர் தேராகவே இருக்கும் போது கார் மட்டும் மகிழுந்து ஆவதேன் ?

நெல்லைத்தமிழன்: 

தனியார் நிறுவனங்களில் 20,000 சம்பளம், ஆனால் முழுமையான வேலை, அரசு பள்ளிகளில் லட்சத்தில் சம்பளம், வேலையோ கமிட்மென்டோ இல்லை என்ற நிலைமை எதனால்? இதேபோல தனியார் வல்கி, அரசு வங்கி...என அரசு மூக்கை நுழைத்து அள்ளிக் கொடுத்து, பென்ஷனும் கொடுப்பதால் என்ன பயன்? 

#  வசதிக்குறைவான ஏழை மாணவர்களில் அதிகம் பேர் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள்.  எல்லா அரசுப்பள்ளி ஆசிரியர்களும் திறமையற்றவர்கள் என்று சொல்லிவிட முடியாது. 

பென்ஷன் குறித்து இருதரப்பிலும் நியாயங்கள் கற்பிக்கப்படுகின்றன. இது பற்றி பென்ஷன் பெறும் நான் சொல்வது சரியாக இராது.

முன்பெல்லாம் சம்பளம் அதிகம் பென்ஷன் கிடையாது என்று ஒரு நிலை இருந்தது.  காலக்கிரமத்தில் பென்ஷன் யாருக்கும் இல்லை என்று ஆக சாத்தியம் இருக்கிறது.

எம்எல்ஏ எம் பி க்களே பென்ஷன் பெறுவதால் அது அழிந்து போகாது என்பதும் வாஸ்தவம்தான்.

எங்கள் குடும்பத்திலேயே கடமையில் கண்ணாகப் பணியாற்றுகிற அரசு ஊழியர் / ஆசிரியர் சிலர் இருக்கிறார்கள்.

\& " லட்சத்தில் சம்பளம், வேலையோ கமிட்மெண்ட்டோ இல்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.  வேலை பிழிந்தெடுக்கிறார்கள்" என்கிறார் ஓர் அனுபவசாலி. 

சிலர் இடது கையால் மட்டும் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். பழக்கமா இல்லை மூளை சம்மந்தமான காரணமா?

#  பழக்கம் காரணமாக மூளையில் ஆழமான பதிவு உண்டாவது ...

தெரிவு வேறு தெளிவு வேறு.  புகை போதை தீது என்று அறிந்த பின்பும் அவற்றை விட முடியாதது போல .

$ நாகையில் என் நண்பர்கள் ஒரு வருட காலம் இடது கையால் சாப்பிடுகிறேன் என்று வேண்டுதல் காரணமாக அப்படி சாப்பிடுவது கண்டதுண்டு.

இன்றைக்கும் நான் ஸ்பூன் உபயோகித்து இடது கையால் சாப்பிடுவது உண்டு.

எப்படி வாழணும், நீண்டகாலம் வாழ்வது எப்படி?, என்றெல்லாம் பிறருக்கு ஆலோசனை கூறும் நூல்கள் எழுதுபவர்களால் தங்கள் வாழ்க்கையில் அவைகளைக் கடைபிடிக்க முடியாமல் போவதன் காரணமென்ன?

$ தொப்பையை குறைப்பது எப்படி என்று கேட்டவர்களுக்கு இலவச ஆலோசனை கொடுத்து வந்தார் ஜெமினி கணேசன்.  அவர் செய்த தப்புகளை செய்யாமலிருக்க ஆலோசனை கொடுத்து இருப்பார் என்று நம்புகிறோம்.

& ' எப்படி வாழணும், நீண்டகாலம் வாழ்வது எப்படி ' என்றெல்லாம் புத்தகம் எழுதுபவர்கள் - எழுதாமல் விட்ட ஒரு பாயிண்ட் : " எப்படி வாழணும், நீண்டகாலம் வாழ்வது எப்படி என்றெல்லாம் காசு சம்பாதிக்க சிலர் புத்தகங்கள் எழுதுவார்கள் - அதை எல்லாம் நம்பி அப்படி வாழ உன் நடைமுறைகளை மாற்றிக்கொள்ளாதே - நீ நீயாகவே இரு! " இதைத்தான் அவர்கள் கடைபிடிப்பார்கள்! 

= = = = =

படம் பார்த்து கருத்து எழுதுங்க :

1) 


2) 


3) 

= = = = =

148 கருத்துகள்:

 1. கேள்விகள் எப்படி இருந்தாலும் விவரமாக ஆராய்ந்து பதில்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. பென்ஷன் பற்றிய கேள்விக்கு நியாயமாக பதில் அளித்தது சரி. ஆனால் பென்ஷன் வாங்கும் நீதியரசர்கள் நியாயம் அநியாயம் பார்ப்பதில்லை, எல்லாம் ஏட்டில் உள்ள சட்டப்படி. 

  படக்கருத்துக்கள் 

  1. நாய் வண்டி யார் ஏன் செய்தார்கள்? சர்க்கஸில் தான் இது போன்ற காட்சிகள் வரும். 

  2. photoshop என்றாலும் இப்படியா? 

  3. உயரமான சைக்கிள் என்றாலும் உபயோகம் ஒன்றும் உயராது. 

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏட்டில் உள்ள சட்டத்தை அப்படியே பின்பற்றுவது சரியா?  கால, காரண, காரியங்கள் பார்த்து மாற்றங்கள் செய்ய வேண்டாமா?!!

   நீக்கு
  2. ஏட்டில் உள்ள சட்டப்படி - இது ஒரு கைட்லைன்ஸ் என்பதுபோல வைத்துக்கொள்ளணும். நியாய தர்மம் பார்த்துத்தான் தீர்ப்பளிக்கணும். 17 வயது 11 மாத பையன் ரேப் செய்தால் அவனைத் தண்டிக்காமல் விட்டுவிடுவது ஏட்டில் உள்ளதைப் பார்த்துச் செய்வது. லஞ்சம் வாங்கித் திருப்பித் தந்துவிட்டால் விட்டுவிடுவது என்பது இன்னொரு முறை.

   நீக்கு
  3. கருத்துரைகளுக்கு நன்றி.

   நீக்கு
 2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  ஆரோக்கிய வாழ்வு என்றும் தொடர இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. கேள்விகளும் விவரமான பதில்களும் சுவாரஸ்யம்.
  கேள்விகளே கேட்காத எங்களுக்கு
  இந்தப் பதிவே சிறப்பாக இருக்கிறது. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // கேள்விகளே கேட்காத எங்களுக்கு
   இந்தப் பதிவே சிறப்பாக இருக்கிறது// அது எப்படி!

   நீக்கு
 4. ஃபோட்டோ ஷாப் திறமை விருத்தி அடைந்து வருகிறது.

  பதிலளிநீக்கு
 5. இந்தப் பதிவு என் டாஷ்போர்டுக்கு வராமல் துரை எழுதிய "கண்ணாத்தா" என்னும் பதிவுக்கான அறிவிப்புத் தான் வந்திருக்கு. அதில் க்ளிக்கினால் பதிவே இல்லை. நமக்குத் தான் எல்லாம் வியர்டாக வரும்னால் உங்களுக்குமா? :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்ணாத்தா!..
   2023 ஏப்ரலுக்கான பதிவாயிற்றே!.. இது எப்படி டாஷ் போர்டுக்கு வந்தது!?...

   நீக்கு
  2. ஹாஹாஹா கீதாக்கா எனக்கும் வியர்டாக நடந்துகொள்கிறது ப்ளாகர்!!!!!! ரோபோ வேறு நேற்றிலிருந்து!!!

   துரை அண்ணா பதிவுகள் எதுவும் எனக்கு அப்டேட் ஆகவில்லை. இன்றும் எதுவும் வரவில்லை என்று நினைக்கிறேன்.

   கீதா

   நீக்கு
  3. வணக்கம் அனைவருக்கும்.

   நான் சகோதரி கீதா சாம்பசிவத்திற்கு அளித்த பதிலில், எனக்கும் சகோதரர் துரை செல்வராஜ் எழுதிய கதைப்பதிவுதான் வருகிறது என்பதையும் மேலும் இன்றைய கருத்துப் பெட்டி புதுமையையும் குறிப்பிட்டிருந்தேன்.
   அந்த கருத்தும் தனியாக கீழிறங்கி போய் விட்டது. ஏன் அப்படி? அது போல் சகோதரி பானுமதி அவர்களின் பதிவிலும், சகோதரி கீதாரெங்கன் அவர்கள் சொல்வது போல் கருத்துப் பெட்டி மாறுதல். ஆக மொத்தம் இந்த கருத்துப்பெட்டி முறை எனக்கு சரியாக வரவில்லை. நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  4. எல்லோருக்கும் நல்ல செய்தி! எனக்கும் தடங்கல்கள் கருத்து பதிவதில் இன்று வருகிறது. எனவே நீங்கள் தனி ஆள் இல்லை - நானும் உங்களுடன்!!

   நீக்கு
  5. ஆடுவோமே, பாடுவோமே, ப்ளாகரில் தப்புத்தப்பாய் வருவதற்கு ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம்.

   நீக்கு
  6. எனக்கும் "கண்ணாத்தா" டாஷ்போர்டுக்கு வந்தது.நான் தவறுதலாக வந்து இருக்கும் என்று நினைத்தேன்.

   நீக்கு
  7. எனக்கும் அடிக்கடி எரர் என்று வந்து கருத்துகள் செல்வதில் பிரச்சினை:(((

   நீக்கு
 6. வணக்கம் சகோதரி

  எனக்கும் இப்படித்தான் வந்துள்ளது. என்னடா நாட்கள் இப்படி பின்னோக்கிச் சென்று விட்டனவா..... என்ற ஒரு வியப்புடன் வந்தவளுக்கு கருத்திடும் இடத்திலும் எப்போதும் போல் இல்லாமல் ஒரு புதுமையாக உள்ளது. என்னவோ எல்லாம் விசித்திரமாக உள்ளது. ஒன்றும் புரியவில்லை. நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவங்களை எங்கோ பார்த்த நினைவு வருதே

   நீக்கு
  2. ஹா ஹா ஹா. ஒரு வேளை கடந்த ஜென்மத்தில் பார்த்ததாக நினைவு வருகிறதா? .. :))
   ஆனாலும், எனக்கு உங்களை இந்தப் பிறவியில் பார்த்ததாகத்தான் நினைவு. ஹா. ஹா. எப்படியோ இந்த கருத்துப் பெட்டியிலும், இப்படி பலமுறை கருத்துக்கள் அளித்து பழகிக் கொள்கிறேன். :)) நன்றி சகோதரரே.

   நீக்கு
  3. கருத்துப்பெட்டி எனக்கு எப்போவும் போல்தான் இருக்கு. ஒண்ணும் புதுமையா இல்லையே?

   நீக்கு
  4. ஊருக்கெல்லாம் ஒரு வழின்னா - - - - உங்களுக்கு !!

   நீக்கு
  5. ஹாஹாஹாஹா, அதுதான் நம்ம தனித்தன்மை! :)))))

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் வணக்கம்.

  பதிலளிநீக்கு
 9. 1. நாய்களால் நாய்களுக்காக நாய்களின் வண்டி
  2. அலையென திரண்ட மேகம்
  3. இத்தனாம் பெரிய சைக்கிளை வைத்துக் கொண்டு என்ன செய்வது? மாடியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் காதலியின் அறைக்குள் குதிக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாய்களுள்ளும் மாற்றாந்தாய் குழந்தை மனப்பான்மை இருப்பதைக் கவனிக்கவில்லையா?

   நீக்கு
  2. :))) கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 10. அன்பின் வணக்கம்
  அனைவருக்கும்...

  இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

  வாழ்க நலம்..
  வாழ்க தமிழ்..

  பதிலளிநீக்கு
 11. ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
  மாய மகளிர் முயக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொருள்
   வஞ்சக எண்ணங்கொண்ட ``பொதுமகள்'' ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட ``மோகினி மயக்கம்'' என்று கூறுவார்கள்.

   நீக்கு
 12. //இளமை மாறாமல் இருக்கும் தமிழணங்கு தற்சமயம் நவீனமாக மாறியிருக்க மாட்டாளா?..//

  தேர் தேராகத் தான் இருக்கும்.. கடல் கடலாகத் தான் இருக்கும்..

  அவள் என்ன - இன்றைய தமிழ்நாட்டுப் பெண்ணா?.. அரையுறை அணிந்து திரிவதற்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதெல்லாம் இருக்கட்டும். அந்தக் காலத்து அணங்கு என்றாலும் பொதுவில் பார்ப்பது சங்கடமாகத்தான் இருக்கும், கோவில் பிரகாரங்களில் உள்ள சிலைகள் போல

   நீக்கு
  2. பொதுவில் உங்களது உள்ளத்தின் உறுதியை எடை போடுவதற்கானவை அவை!..

   நீக்கு
  3. து செ - நல்ல கருத்து. Meaning is in the beholder's mind ( / eyes)

   நீக்கு
  4. ஆன்மிகப் பெரியோரும் இதே கருத்தையே வலியுறுத்தி உள்ளனர், பரமாசாரியார் உள்பட.

   நீக்கு
 13. கருத்துரைப் பெட்டி மாற்றம்...

  இருக்கின்ற பிரச்னைகள் போதாது என்று இது வேறு!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை அண்ணா உங்களுக்கும் மாறியிருக்கிறதா எங்களுக்கும், பானுக்கா பதிவில் அப்புறம் இங்கு மாறியிருக்கிறது.

   கீதா

   நீக்கு
  2. தெரியலையே.. இதோ போய்ப் பார்க்கிறேன்..

   நீக்கு
  3. மாற்றங்கள் நாங்கள் செய்தவை அல்ல. blogger விளையாடுகிறது

   நீக்கு
  4. ஹிஹிஹிஹி, ஜாலியோ ஜாலி! எனக்கு மாறலையே, எல்லோருக்கும் மாறி இருந்தா எனக்கு மாறாது. ஒருத்தருக்கும் மாறாதப்போ எனக்கு மட்டும் (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) மாறித் தொலைந்து பிராணனை வாங்கும்.

   நீக்கு
 14. //தமிழை ஒரு மொழியாக பார்க்காமல் தமிழணங்கு என்று அதற்கு ஒரு உருவம் கொடுப்பது அவசியமா? மற்று மொழிகளில் இப்படி செய்கிறார்களா?///\

  இந்து கலாச்சார பாதிப்பின் விளைவாக இப்படி தமிழுக்கு இந்தியாவிற்கு ஒரு உருவம் கொடுத்து அந்த உருவத்தை அன்னையாக கருதிஅதற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற பழக்கம்/ வழக்கமே இதற்கு காரணம் என் நினைக்கின்றேன்

  பதிலளிநீக்கு
 15. கருத்துரைப் பெட்டி மாற்றம்...ஏன்?

  கருத்துகள் பதிய அது எளிதாக இல்லை

  பதிலளிநீக்கு

 16. கருத்துரைப் பெட்டி மாற்றம்...ஏன்?

  கருத்துகள் பதிய அது எளிதாக இல்லை

  இந்த கருத்து அவர்கள் உண்மைகளின் கருத்து

  பதிலளிநீக்கு
 17. @ நெல்லை..

  //பொதுவில் பார்ப்பது சங்கடமாகத்தான் இருக்கும், கோவில் பிரகாரங்களில் உள்ள சிலைகள் போல..//

  அந்த காலத்து ஆடவர்கள் மிக எளிதாகக் கடந்து சென்றிருப்பார்கள்.. ஏனெனில் உண்மையிலேயே அவர்கள் நான்கும் தெரிந்தவர்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியல்ல. அவைகளை சாதாரணமா கடந்து போகும் படியான மனநிலை அப்போது. இப்போ (30 வருடங்கள்)தொலைக்காட்சி மீடியானால மனநிலை மாற்றம்

   நீக்கு
  2. கோவில்களுக்கு சென்றே வெகு நாட்கள் ஆகிவிட்டன. அடுத்தமுறை செல்லும்போது பார்க்கலாம்!

   நீக்கு
  3. இல்லைனா... நான் எடுத்த புகைப்படங்களை ஞாயிறில் வெளியிட்டால், கோவில் செல்லாமலேயே பார்த்துவிடலாம். (சிலவற்றை எடுக்க முடியவில்லை, செல்ஃபோனுக்கு அனுமதி இல்லாததால்)

   நீக்கு
  4. கோயில்களில் எத்தனையோ சிலைகள்/சிற்பங்கள் இருக்க உங்கள் கண்களில் வேண்டாதவை மட்டும் படுவானேன்?

   நீக்கு
  5. எது வேண்டும் சிற்பம், எது வேண்டாத சிற்பம்?

   நீக்கு
  6. கலை என்பது பார்ப்பவர் கண்களில். உ பு பெற்ற சிற்பங்கள் ஓவியங்களை எபி மே வெளியிடமாட்டாங்க ஹாஹா

   நீக்கு
  7. அந்தக் காலம் இந்தக் காலம் என்று தேவையே இல்லை. காமம் என்பது எல்லாக்காலக்கட்டத்திலும் ஒன்றுதான். ஆண் பெண் இருக்கும் வரையில்..எல்லாக் காலத்திலும் மாறாத ஒன்று இந்த விஷயம். அந்தக் காலத்தில் எந்த வகை மீடியாவும் இல்லை. அதனால் வெளியில் தெரியவில்லை. அப்போதும் இப்போதைய போல் ஆடவர்கள் இருகக்த்தான் செய்தார்கள். பெண்களும். அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப!!!

   நாங்கள் பேருந்தில் பயணித்த போது அதுவும் பிதுங்கி வழியும் கூட்டத்தில் தொடக் கூடாத இடங்களில் தொடப்பட்டிருக்கிறோம், தாவணி அணிந்த காலத்தில் அதைவிட....ஆனால் வீட்டில் சொல்ல முடியாது. படிப்பை நிறுத்திவிட்டால்?

   ஏன் இன்றைய நவநாகரீக உடை போல் அன்றே பழைய படங்களில் கதாநாயகிகள் அணிந்து வரலையா? அதுவும் உடம்பை ஒட்டிய தினுசில்? அரை டிராயர்? தொடைகள் தெரிய? சில அங்கங்கள் வெளியில் தெரியும் படி? கேப்ரே டான்ஸ் இருந்ததில்லையா? க்ளப்புகள் இருந்ததில்லையா? உடல் தெரியும் வகையில் மெல்லிய சாரி அணிந்ததில்லையா? திரைப்படங்கள் என்றில்லை. யதார்த்த வாழ்விலும். ஆனால் வெளியில் பேசப்பட்டது கம்மி.

   .

   எல்லாம் எப்போதும் உண்டு. ஆனால் இப்போது மீடியாவின் வெளிச்சம் இருப்பதால் எல்லாம் வெளியில் தெரிகிறது. அப்போது ரகசியமாய் இருந்தவை இப்போது வெளியில். அப்போது ப்ளூஃபில்ம் என்று ரொம்பவே இருந்தது. இப்போது ஹைடெக்காக...

   இப்போதைய ஆட்வர் கோயிலுக்குச் சென்று இதையெல்லாமா உற்றுப் பார்க்கிறார்கள்!!!!! கை அடக்கத்திலேயே எல்லாமும் கிடைக்கும் போது!!!!

   அப்படி என்றால் ஏன் பெண் சிலைகளை அப்படி வடிக்க வேண்டும்?!!!!! அதுவும் கோயில் சிற்பங்களை? அதுவும் ஆணும் பெண்ணும் இணைதல் போன்ற சிற்பங்கள்..இன்னும் சொல்லலாம்..தவிர்க்கிறேன்....ஆண் வடித்ததுதானே?..அந்த சிந்தனை மனதில் இருந்து வெளிப்பட்டதுதானே? கோயிலில் இருந்தால் புனிதம்!???? அதே போன்ற ஒரு சிலை பார்க்கில் இருந்தால்? அதுவும் கல்லினால் இல்லாமல் வேறு வகைப் பொருளில் இருந்தால்? வேறு அர்த்தம்?

   ஸோ கௌ அண்ணா சொல்லியிருப்பது போல் மனக்கண் தான் எல்லாமே!

   கீதா

   நீக்கு
  8. திருச்சி உத்தமர் கோவிலில் பிச்சாண்டார் என்ற பிறந்த மேனி கோலத்தில் சிவனது வடிவம் உள்ளது. ஆண் பெண் யாவரும் கும்பிடுகின்றனர். 

   உத்தமர் கோவில் : மும்மூர்த்திகள் + சரஸ்வதி கோயில். 

    Jayakumar

   நீக்கு
  9. தாருகாவனத்தில் பிச்சாண்டார் தானே இந்தக் கோலத்தில் சென்று ரிஷிபத்தினிகளை மயக்கினார்! இத்ன் பின்னே உள்ள தத்துவம் யாருக்கும் புரிவதில்லை.

   நீக்கு
  10. //எது வேண்டும் சிற்பம், எது வேண்டாத சிற்பம்?// ஈசனின் 108 கரணங்களும் வேண்டும் சிற்பங்கள். இது போல ஶ்ரீகிருஷ்ணாவதாரம், ஶ்ரீராமாவதாரம், தசாவதாரச் சிற்பங்கள் என எத்தனையோ பார்த்து அனுபவிக்க உள்ளன. ஆனால் நாம் தேடிச் சென்று பார்ப்பது வேறு எனில் அது நம் குற்றமே!

   நீக்கு
  11. சிறப்பான கருத்துப் பரிமாற்றங்கள். எல்லோருக்கும் நன்றி.

   நீக்கு
 18. ஒரு சில மணித்துளிகள் திக் என்று ஆகிவிட்டது! எங்கள் தளத்தில் எங்கள்ப்ளாக் அப்டேட் ஆகவே இல்லை. தேடி தேடிப் பார்த்தேன் எங்கள் ப்ளாகைக் காணவே இல்லை. ஆஆஆஆ என்ன ஆயிற்று என்று முகவரி கூகுளில் டைப் ப்செய்து வந்து பார்த்தபிறகுதான் சமாதானம்! ஹப்பான்னு. அதுக்கு அப்புறம் இங்கு கமென்ட் பாக்ஸ் மாறியிருக்கிறது....ப்ளாகர் என்ன செய்கிறது. கில்லர்ஜிக்கு மாறவில்லை. பானுக்காவுக்கும் முந்தா நாளே கருத்து போடும் போது மாறியிருந்தது. வெங்கட்ஜி தளம் நேற்று வரை மாறவில்லை. இன்று தெரியவில்லை. மற்றதளங்கள் வல்லிம்மா தளம் மாறியிருக்கவில்லை.
  எனக்கு மட்டும் தான் இப்படியா?

  கீதா

  பதிலளிநீக்கு
 19. கூத்தாடிகளையும், ரசிகர்களையும் பிரிப்பது நடக்காத காரியம்.

  பதிலளிநீக்கு
 20. மக்கள் தான் திரைப்பட மோகத்திலிருந்து வெளியேற வேண்டும். வேறு யாரையும் சொல்ல முடியாது

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா ரங்கன்(க்கா)... திரைப்பட மோகத்திலிருந்தா இல்லை.... கதாநாயகிகள் மீதான மோகத்திலிருந்துமா? ஹா ஹா ஹா

   நீக்கு
  2. ஹாஹாஹாஹா நெல்லை..... அது ரெண்டும் தான்...அந்தக் கேள்விக்கானது
   எங்க வரீங்கனு தெரியுது!!!!! ஹாஹாஹா....

   சரி சரி தமனா படம் அடுத்தபுதன் அல்லது நாளைய வியாழனில் போட்டுருவாங்க...

   கீதா

   நீக்கு
 21. எம்ஜார் படத்தில் பாட்டு ஒன்றிலேயே வரும் - " நாலும் தெரிஞ்சவர் யார்.. யார்?.. " - என்று..

  இந்த நாலும் என்பது எவை?.. எவை?.. தமிழ்நாட்டில் தமிழ் அல்லாத வேறு வழியில் படித்தவர்களுக்கு இவற்றைத் தெரிந்து வைத்திருப்பதற்கோ பின்பற்றுவதற்கோ வாய்ப்புகள் கிடைத்திருக்குமா?..

  பதிலளிநீக்கு
 22. எனது தளத்தில் இப்போது வரை மாற்றம் ஏதும் இல்லை..

  பதிலளிநீக்கு
 23. எல்லாருடைய கருத்துக் களும் நன்றாகவே உள்ளது

  பதிலளிநீக்கு
 24. //இளைஞர்கள் திரைப்பட மோகத்திலிருந்து// - கீசா மேடம்... இந்தக் கேள்வி நியாயமா? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. எங்க அம்மா சொல்வாங்க, எம்.கே.டி தியாகராஜ பாகவதர் திருநெவேலிக்கு வந்தபோது அவர் நடந்த மண்ணை எடுத்து நெற்றிக்கு இட்டுக்கொண்டார்கள் என்று (60கள்). எம்ஜிஆர் வெற்றி பெறணும் என்று (முதல் இடைத் தேர்தல், தாமரைச் சின்னம் என்று நினைவு) சம்பந்தமில்லாத பூலாங்குறிச்சியில் (இராமனாதபுரம்) தன் கடைக் கரும்பை 10 ரூபாய்க்குப் பதில் 5 ரூபாய்க்கு விற்றான் நண்பன். எம்ஜிஆர் அண்ணன் சக்ரபாணி கஞ்சித் தொட்டி திறக்க 8 மணி நேரம் தாமதமாக வந்தும் கூட்டம் காத்திருந்தது. பிற்காலத்தில் சில்க் கடித்த ஆப்பிள் 500 ரூபாய்க்கு விலை போனது தெரியும். ஏதோ இப்போதான் இளைஞர்களுக்கு சினிமா மோகம் வந்துவிட்டதா? ஏதோ பெரியவர்கள் நீங்கள்லாம் (அப்படீன்னாங்க..உங்க இளமைக் காலத்தவர்கள்) நடந்துகொண்டதைப் பார்த்து பிற்கால சந்ததியும் அப்படியே செய்யுது போலிருக்கு. ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை நான் சொல்ல நினைத்ததை - அதாவது இப்படி டேட்டாவுடன் இல்லை...ஹிஹிஹி டேட்ட தெரியாது ஆனால் நிகழ்வுகள் ஓரளவு தெரியும். அதை நீங்கள் சொல்லிட்டீங்க. ஹைஃபைவ்! எல்லாக் காலத்திலும் முதல் ஷோவுக்கு முண்டியடித்த கூட்டம் உண்டு. அப்போது எல்லாம் எங்கே வீட்டிலிருந்து பார்க்கும் வசதி எனவே கூட்டம் முண்டியடிக்கும் அடிதடியும் நடந்ததுண்டு. சிவாஜி படம், என் ஜீ ஆர் படம் இரு கட்சி அடிதடி எல்லாம் உண்டு. வெட்டிவிடும் அளவுக்கு அடிதடி உண்டு. பாட்டில்கள் பறக்கும். ஏன் திரையில் கத்தியை எறிந்ததும் உண்டு. இளைஞர் இளைஞிகளுக்குள் ஹீரோ ஹீரோயின் வொர்ஷிப் உண்டு. புத்தங்களுக்கு இடையில் படங்கள் வைத்துப் பார்ப்பதும் உண்டு. வீட்டுச் சுவற்றில் ஒட்டியதுண்டு கேலண்டர்...என்று எங்கள் வீட்டுப் பெரியவர்கள் சொல்லியதுண்டு.

   கீதா

   நீக்கு
  2. திரைப்பட மோகம் இருந்தது. அப்போதும்/இப்போதும்/எப்போதும், ஆனால் திரைப்படங்களில் நடிப்பதை உண்மை என யாரும் நினைத்தது இல்லை.அது போல் நிஜ வாழ்வில் நடக்கும் என எண்ணினதே இல்லை. இப்போ என்னன்னா ரொம்பவே மோசமாக இருக்கு. திரைப்படக் கதாநாயகர்கள் வந்து தான் நம் மாநிலத்தைச் சீர்த்திருத்துவாங்க என நினைக்கும் அளவுக்குப் போயிட்டாங்க. இந்தப் போக்கு எம்ஜிஆர் முதல்வராக ஆனதில் ஆரம்பித்து ஜெயலலிதாவினால் தொடர்ந்து இப்போதும் உதயநிதி, விஜய் போன்றவர்களை முதல்வராக்குவதில் முனைந்திருப்பதில் முடிந்துள்ளது. இவங்கல்லாம் வந்தால் அப்படியே தமிழ்நாட்டைத் தலைகீழாக மாற்றிவிடுவார்கள் என்னும் நம்பிக்கை இளைஞர்களிடையே அதிகமாக இருக்கிறது.

   நீக்கு
  3. யோசிக்கவேண்டிய விஷயம்.

   நீக்கு
  4. கீதா அக்காவின் கருத்தோடு என்னால் ஒத்துப் போக முடியவில்லை(எப்போதும் போல). சினிமாவில் நடப்பதெல்லாம் நிஜம் என்று இப்போது யாரும் நம்புவதில்லை. பாதிக்கு மேல் கிரஃபிக்ஸ் என்று சின்ன குழந்தைகளுக்கே தெரியும்.

   ஜெயலலிதா அரசியலுக்கு வந்ததும் அவரை அரசியல்வாதியாகத்தான் பார்த்தார்கள்.

   ராகுல் காந்தியையும் உதயநிதியையும் தூக்கி பிடிப்பது அரசியல் நிர்மூடத்தனம் அல்லது மோகம்.

   நீக்கு
  5. சினிமாவில் நடப்பது நிஜம்னு நம்பறாங்கனு சொல்லலை. அந்தக்குறிப்பிட்ட கதாநாயகர் வந்தால் நாட்டை முன்னேற்றிக் காட்டுவார் என்றே நம்புகின்றனர் பெரும்பாலான இளைஞர்கள். ரஜினி வந்தால் தமிழ்நாடு மாற்றம் அடையும்னு நம்பினவங்க/நம்பறவங்க இப்போவும் உண்டு. நீங்க ஒத்துப்போகாட்டிப் பரவாயில்லை. எல்லோரும் எல்லாக் கருத்தையும் ஏத்துக்க முடியுமா? அவரவர் கருத்து அவரவருக்கு. :))))

   நீக்கு
 25. //இளமை மாறாமல் இருக்கும் தமிழணங்கு தற்சமயம் நவீனமாக மாறியிருக்க மாட்டாளா?// - நவீனம்னா என்ன? எனக்குப் புரியலை.

  பதிலளிநீக்கு
 26. //முன்னெல்லாம் அதிகம் போனால் ஒரு வீட்டின் குடும்ப நபர்களுக்கு 20 ரூ செலவானால் பெரிது// - தரை பெஞ்ச் சேர் டிக்கெட் என்று சாதாரணமாகப் படம் பார்த்தால் செலவு குறைவுதான். ஆனால் நமக்கு ஏசி வேண்டியிருக்கு, சாஞ்சுக்கிட்டு பார்க்கவேண்டியிருக்கு, 2 மணி நேரத்தை-படம் பப்படம் என்பதால், செலவழிக்க ஏதாவது கொறிக்க வேண்டியிருக்கு. திரையரங்குகள் நமக்கு சொகுசுகளைச் செய்து தருவதாலும், அரசாங்கம் டிக்கெட் விலையை நிர்ணயிப்பதாலும், வேறு குறுக்கு வழிகளில் சம்பாதிக்க முயல்கிறான். நீங்க ஓரிரண்டு பேர் போகாம, மொத்த டிக்கெட்டையும் நீங்களே வாங்கிக்கிட்டு ஹவுஸ் ஃபுல் ஆக்கினீங்கன்னா அவன் ஏன் வேறு வழிகளில் சம்பாதிக்கப் போகிறான்?

  நாம இப்போல்லாம் எதையும் கொண்டாட நினைக்கிறோம். கோவிலுக்கு தரிசனத்தை விட, கொண்டாட்டமா நேரம் செலவழிக்கப் போகிறோம். அங்க பட்சணக் கடை, யானைட்ட ஆசீர்வாதம் என்றெல்லாம்.. தியேட்டரிலும் அப்படித்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த 20 ரூபாய் அப்போது பெரிய தொகை இல்லையா?

   கீதா

   நீக்கு
  2. நாங்க தியேட்டரில் போய்ப் படம் பார்த்ததே குறைவு. அதிலும் கல்யாணம் ஆனப்புறமா எண்ணினாப்போல் தான். ஆனால்தியேட்டரில் விற்கும் எந்த உணவுப் பொருளையும் நாங்களோ/குழந்தைகளோ வாங்கிச் சாப்பிட மாட்டோம். வயிறு கெட்டுவிடுமே!

   நீக்கு
  3. நாகை பாண்டியன் தியேட்டரில் அந்தக் காலத்தில் (தரை டிக்கெட் 25 பைசா காலம்) சூடான போண்டா இடைவேளையில் தியேட்டருக்குள் விற்கப்படும். ஒரு போண்டா (அல்லது ஒரு செட்?) ஐந்து பைசா. நானும் என் அண்ணனும் அங்கு படம் பார்க்க செல்லும்போதெல்லாம் இடைவேளையில் போண்டா வாங்கி சாப்பிடாமல் இருந்ததில்லை! அந்த சுவையும் மணமும் சூடும் எப்போதும் ஞாபகம் இருக்கும்!

   நீக்கு
 27. //வேலை பிழிந்தெடுக்கிறார்கள்" என்கிறார் ஓர் அனுபவசாலி. // - இதையெல்லாம் நான் நம்புவதில்லை. ப்ரைவேட் பள்ளி, கல்லூரிகளில் நிச்சயம் கொடுக்கும் காசுக்கு மேல் வேலை வாங்கிவிடுகின்றனர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹையோ நெல்லை இந்த ப்ரைவேட் கல்லூரி, பள்ளி பற்றி நிறைய இருக்கு...ஆமாம் சில சமயம் சம்பளமே போடுவதில்லை..இதோ என் தோழி ஹோசூரில் ஒரு கல்லூரியில் சேர்ந்த்துவிட்டு பாவம்.....

   கீதா

   கீதா

   நீக்கு
  2. தி/கீதா சொல்லுவது போல் இங்கே இரு பேராசிரியர்கள் இருவருமே தங்கப் பதக்கம் வாங்கிப் பொறியியல் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள். இருக்காங்க. எப்படிக் குடும்பம் நடத்தறாங்கனு நாங்க தலையைப் பிய்ச்சுப்போம்.

   நீக்கு
 28. //வசூலில் குவிப்பது எப்படி?// - முன்னெல்லாம் ஒரு மிகப் பெரும் நகரத்தில் ஐந்து தியேட்டர்களில் வெளியாகும். கம்யூனிகேஷன் குறைவு. நல்ல படம் நூறு நாட்கள் ஓடுவது சகஜம். இப்போ படத்தைப் பற்றி விமர்சனம் வந்தாலே பயப்படும்படியாக படம் எடுக்கறாங்க. அதனால ஆயிரம் தியேட்டரில் 2 நாள் ஓடி போட்ட காசை எடுத்து, 3வது நாள் வெற்றி வெற்றி என்று போஸ்டர் அடிக்கறாங்க. ஆர்.ஆர்.ஆர், காஷ்மீர் ஃபைல்ஸ், கேஜிஎஃப் போன்ற சில படங்கள்தான் உண்மையில் வெற்றியடைகின்றன.

  பதிலளிநீக்கு
 29. திரும்பவும் பழைய முறையில் கருத்துரையிடுமாறு மாறிவிட்டது இப்போது.

  பதிலளிநீக்கு
 30. @ நெல்லை..

  // நவீனம்.. னா என்ன? எனக்குப் புரியலை..//

  அது அப்படி!.. என்று யாரும் சொன்னால் -

  அப்படியெல்லாம் இல்லை என்று ஒரு கூட்டமாகக் கிளம்புவது..

  பதிலளிநீக்கு
 31. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 32. நவீனம்..ன்னா..

  நடனப் பெண்ணின் ஜடை அலங்காரம் - என்று திருநெல்வேலி கோயிலில் சிலையைப் போட்டோ எடுத்து வாட்ஸாப்பில் போடுவது..

  அந்தச் சிலையின் கலையழகைப் படம் எடுப்பதற்குத் தலைவிரி கோலமாக கோயிலுக்கு வருவது!..

  பதிலளிநீக்கு
 33. @ கௌதமன்..

  // து செ - நல்ல கருத்து. Meaning is in the beholder's mind (/eyes)..//

  மகிழ்ச்சி.. நன்றி..

  இதற்கென வாய்ப்பு கொடுத்தால் நான் உணர்ந்தவற்றை அனுப்பி வைப்பேன்..

  பெரியோர்கள் ஆசீர்வதிக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செய்ங்க. முடிஞ்சால் பதிவாகவே போட்டுடுங்க. காத்திருக்கேன்.

   நீக்கு
 34. @ கீதாக்கா...

  // ஆன்மிகப் பெரியோரும் இதே கருத்தையே வலியுறுத்தி உள்ளனர், பரமாசாரியார் உள்பட.. //

  ஆன்றோர்களும் சான்றோர்களும் உரைத்தவைகளையே இங்கு சொல்லி இருக்கின்றேன்..

  மகிழ்ச்சி.. நன்றியக்கா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது பற்றி ஒரு பதிவு எழுதணும்னு நினைச்சேன். எழுதி இருக்கேனோ/தெரியலை. ஶ்ரீகிருஷ்ணனின் ராசலீலை பற்றியும் இப்படித்தான் தவறான கோணத்தில் பேசுகின்றனர். அதற்கும் ஒரு பதிவு போட்டிருந்தேன்.

   நீக்கு
 35. @ கீதா..

  //கோயிலில் இருந்தால் புனிதம்!????..//

  கோயிலில் இருப்பதால் தான் புனிதம்..

  குளிப்பதற்கான தண்ணீரில் மூழ்கிக் குளித்தால் தான் குளியலின் அருமை தெரியும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி துரை அண்ணா. அண்ணா, எனக்கு அந்த அளவுக்கு ஞானம் வரலியே!!!!!!!!

   கீதா

   நீக்கு
  2. உண்மை. இன்னிக்கு மேலே தண்ணீர்த்தொட்டியைச் சுத்தம் செய்கிறேன் பேர்வழினு ஆரம்பிச்சுட்டுப் பாதியிலே விட்டுட்டுப் போயிட்டாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். சுமார் நான்கு மணி நேரம் கழிவு நீர் போலக் குழாயிலிருந்து நீர்! இப்போத்தான் அரை மணி நேரமாக சுமாராக வருது. அது போலத் தான் துரை சொல்லி இருப்பதும். மனதில் கழிவுகள் அதிகமாக இருந்தால் எல்லாமே அப்படித்தான் தெரியும். மனது சுத்தமாக இருந்தால் எல்லாமே புனிதமாகத் தெரியும்.

   நீக்கு
  3. //மனது சுத்தமாக இருந்தால் எல்லாமே புனிதமாகத் தெரியும்.// - கேஜிஜி சார்.. நோட் தெ பாய்ண்ட். நாளை அல்லது அடுத்த புதன் 'தெய்வீக' படங்கள் எதிர்பார்க்கலாமா?

   நீக்கு
  4. அசத்திடுவோம். என் பெயர் கௌதமன் - கௌ'தமன்னா' கௌதமன் !!

   நீக்கு
 36. கேள்வி பதில்கள் நன்று. சினிமா மோகத்தில் இருநது மக்கள்தான் திரும்பவேண்டும்.

  நாட்டு நிலைமையும் பஸ்வண்டி ஓட்டங்கள் சில இடங்களில் தடைப்பட்டுள்ளது. அங்காடிகளில் உணவு பொருட்கள் இல்லை. சில்லறைகடைகளில் ஓரளவு கிடைக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் ஊரில் உணவு பொருட்கள் கிடைக்கவில்லை என்று கேட்கும் போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.
   சில்லறைகடைகளில் கிடைக்கிறது என்றால் அதுவும் ஓரளவு என்றால் என்ன செய்வார்கள் மக்கள்?
   உங்கள் உடல் பூரணமாக நலம் பெற்று விட்டதா மாதேவி?

   நீக்கு
  2. விரைவில் இயல்புநிலை திரும்பவேண்டும் என்று பிரார்த்திப்போம்.

   நீக்கு
  3. மின்வெட்டு, சமையல் காஸ் இல்லை என்பதால் மக்கள் புரிந்துகொண்டு ஓரளவு சமையல்தான் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

   நலம் விசாரித்த அன்புள்ளங்களுக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 37. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
  எல்லா பின்னூடங்களும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 38. @ மாதேவி..

  // அங்காடிகளில் உணவு பொருட்கள் இல்லை. சில்லறைகடைகளில் ஓரளவு கிடைக்கிறது.. //

  தங்கள் நாட்டில் விரைவில் இயல்பு நிலை திரும்படி வேண்டும்.. வளங்கள் பெருகிட் வேண்டும்..

  பிரார்த்தனை செய்து கொள்வோம்..

  பதிலளிநீக்கு
 39. கருத்துப்பெட்டி மாறியிருக்கான்னு சோதிச்சேன்!

  பதிலளிநீக்கு
 40. @ ஜெயகுமார் சந்திரசேகர்..

  // பிச்சாண்டார் என்ற பிறந்த மேனி கோலத்தில் சிவனது வடிவம் உள்ளது.. //

  பிட்சானர் மட்டுமல்ல.. வைரவர் கோலமும் அப்படித்தான்!..

  ஏன் அப்படி?...

  அதற்கு விடை இங்கே சொல்ல முடியாதது.. அவரவரும் சிந்தித்துத் தெளிவு பெற வேண்டிய விஷயம்..

  கோயில் பிரகாரத்தில் அங்கே இங்கே என்று ஆடையற்ற நிலையாய் தனது கைத் திறமையைக் காட்டிய சிற்பி மூலஸ்தானத்தில் ஏன் ஒரு தேவியை அப்படிக் காட்ட வில்லை!?..

  சிந்திக்கவும்!..

  காமாக்யா தேவி ரூபம் கேள்விப்பட்டிருப்பீர்கள்..

  ஜன்ம சாபல்யம்!..

  புரிந்தவனுக்கும்
  புரியாதவனுக்கும் வேறுபாடு!..

  பதிலளிநீக்கு
 41. கேள்வி பதில்கள் நன்று.

  கருத்துரை பெட்டியில் மாற்றம் இல்லையே? சரியாகவே இருக்கிறது.

  படங்களை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!