திங்கள், 4 ஏப்ரல், 2022

"திங்க"க்கிழமை  :  சால்னா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 

 

 சால்னா


தேவையான காய்கறிகள்:

உருளைக்கிழங்கு - 2

காரட்                         -  2

பீன்ஸ்                       -  10

பட்டாணி                  - 1 கப்

இவைகளை சிறிய மீடியம் சைஸில் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

வதக்க:

வெங்காயம்        -  2

தக்காளி                - 2

அரைக்க:

தேங்காய் துருவல் - அரை மூடி

பச்சை மிளகாய்.    -  4

இஞ்சி.                       - 2 இஞ்ச்

பூண்டு.                       - 3 பல் 

முந்திரி பருப்பு.       - 7 அல்லது 8

சீரகம்.                        - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

முதலில் நறுக்கி வைத்துள்ள காய்களை சிறிது தண்ணீர் விட்டு 1/4 டீ ஸ்பூன் உப்பு, சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். 

அரைக்க வேண்டியவைகளை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். 

ஒரு அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி, 1/4 டீ ஸ்பூன் சீரகம் தாளித்து முதலில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். பிறகு தக்காளியை சேர்த்து வதக்கி, வேக வைத்த காய்கறிகளையும் சேர்த்து அதோடு அரைத்த விழுதையும் சேர்த்து தேவையான அளவு உப்பு (நான் 1டீ ஸ்பூன் சேர்த்தேன்) போட்டு இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி மேலே பொடி யாக நறுக்கிய கொத்துமல்லி தூவினால்  சப்பாத்தி, பரோட்டாவுடன் சாப்பிடலாம். 



30 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். யாரும் எங்கே இருந்தும் எட்டிப்பார்க்கலையே? நான் தான் ஃபர்ஷ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா..  வணக்கம்.  பிரார்த்திப்போம்.  நீங்கள்தான் முதல் பின்னூட்டம்.

      நீக்கு
    2. நான் முதலில் வந்து வணக்கம் வைத்தேன். ப்ளாக் ஏற்றுக் கொள்ளாமல் எரர் காண்பித்து விட்டது.

      நீக்கு
  2. கடைசியில் பார்த்தாக்க (முதலில் இருந்தே தான்) இந்தச் சால்னா என்பது நான் சப்பாத்திக்கு அடிக்கடி பண்ணிய குருமா தான்! ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ! என்னவோ/ஏதோ என ஆவலுடன் ஓடோடி வந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயம் பெயர் மாற்றம் அடையும்போது ஒரு ஆர்வம் வரும்.  மேலும் சால்னா என்பது குருமாவின் ஒரு வடிவம்தானே?

      நீக்கு
    2. அது சரி. என்னோட பெரிய நாத்தனார் இப்போவும் சொல்லிக்கொண்டே இருப்பாங்க அவங்க குழந்தைகளிடம். மாமி ஓட்டலில் பண்ணறாப்போல எல்லாம் பண்ணுகிறாள் என்று. ஆனால் இப்போவும் பண்ணினாலும் பூண்டு வைப்பதை நிறுத்திட்டேன்.

      நீக்கு
    3. சால்னா என்பது வேறு. அது கொஞ்சம் டார்க் நிறத்தில் இருக்கும்.

      இது குருமா. இதிலேயே தயிர் சேர்த்தால் தயிர் குருமா. இதை நான் விரும்பிச் சாப்பிடுவேன்.

      இதில் சொன்ன காய்கள் தவிர, காலிஃப்ளவர், நூல்கோல் போன்ற பலவற்றையும் சேர்க்கலாம்.

      இன்று இதனைப் பண்ணச் சொல்கிறேன்.

      நீக்கு
    4. //இந்தச் சால்னா என்பது நான் சப்பாத்திக்கு அடிக்கடி பண்ணிய குருமா தான்// இதை, இதை, இதைத்தான் எதிர்பார்த்தேன் :))))

      நீக்கு
  3. பதில்கள்
    1. வெள்ளைக்குருமா என்பது நாங்கள் வேறுவகையிலும் செய்வோம். பெரிய வித்தியாசம், மாற்றங்கள் இருக்காது.

      நீக்கு
    2. ஆமாம். வேறு வகையிலும் செய்யலாம். பச்சை மிளகாயோடு கொத்துமல்லி, இஞ்சி வைத்து அரைச்சும் பண்ணுவோம்.

      நீக்கு
  4. வலது கண்ணிலே கட்டி வந்திருக்கு. இன்னிக்கு மருத்துவரிடம் போகணும். கூட்டமாக இருக்கும் என்பதை நினைத்தால் இப்போவே கவலையா இருக்கு! :( அப்புறமா வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லபடியா போய்ப்பார்த்துட்டு  வாங்க...    எனக்கு கூட கண் டாக்டர் கிட்ட போகணும்.  இன்றிலிருந்து மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயம் இல்லைனு தமிழக அரசு சொல்லி இருக்கு, பார்தீர்கர்களா?  யாரையும் இனி 'ஏன் மாஸ்க் போடலை, தள்ளி நில்லுங்க'ன்னு சொல்ல முடியாது!

      நீக்கு
    2. கண்ணைக் காட்டிட்டு வந்தாச்சு. வீக்கம் இருப்பதால் இப்போ டைலேட்டர் எல்லாம் ஊற்றிப் பரிசோதனை செய்ய முடியாதுனு சொல்லிட்டாங்க. உள்ளுக்குச் சாப்பிட மாத்திரைகள், கண்ணுக்கு விட்டுக்கச் சொட்டு மருந்து, ஆயின்ட்மென்ட் கொடுத்திருக்காங்க. நேத்திக்குப் போட்டுண்டேன். இன்னிக்கு ரொம்பவே மசமசமச! என்னை மாதிரி! :)))))

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம்! வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
  6. சால்னா செய்முறையும், படங்களும் அருமை.
    நானும் இப்படி செய்வேன் குருமா என்பேன்.
    சீரகம் மட்டும் தாளித்தது இல்லை. மற்றபடி குருமா செய்முறை இப்படித்தான் செய்வேன். சப்பத்திக்கு இப்படி தளர்வாய், பூரிக்கு கொஞ்சம் கெட்டியாய் செய்வேன்.
    பிள்ளைகளுக்கு பூரிக்கு உருளைதான் பிடிக்கும், எங்களுக்கு காய்கறி கலவை பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு

  8. இணையத்தில் எங்கு சென்றாலும் பானுமதியம்மா பெயர்தான்.. இப்படியே போனால் அவங்கள் கூடிய சீக்கிரம் ஏதாவது கட்சியின் தலைவராக வாய்ப்புகள் அதிகம்.. தலைவரானால் இந்த மதுரையை மறந்துவிடாதீங்க

    பதிலளிநீக்கு
  9. இந்த கேரட், பீன்ஸ், பட்டாணி மூன்றையும் தூக்கிக் கிடாசி விட்டு மு..மு..முந்திரிப் பருப்பைக் கொஞ்சம் தூக்கலாக அரைத்துச் சேர்த்து விட்டால் -

    இதன் பெயர்
    தேன்நிலவு குருமா!..

    இதற்கு இன்னும் பெயர்கள்
    முந்திரி குருமா/ வெள்ளை குருமா..

    அந்தக் காலத்துல - கல்யாண கோலத்தில் தங்கை மறுவீடாக அக்கா வீட்டுக்கு வரும்போது இடியாப்பமும் வெள்ளைக் குருமாவும் பரிமாறுவார்கள் என்று கேள்வி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடியாப்பம்,சொதி என்றுதான் கேள்விப் பட்டிருக்கிறேன்.

      நீக்கு
    2. சமையல் எல்லாம் -
      ஆளுக்கு ஆள்
      வீட்டுக்கு வீடு
      நாட்டுக்கு நாடு

      - மாற்றங்களை உடையது..

      இதில் இன்னும் புதிதாய் குழப்பங்களைச் செய்வதற்குத் தான் குழாயடி (யூ டியூப்) இருக்கின்றதே!..

      சோறு மீதமாகி விட்டால் அதை எப்படி நெல்லாக ஆக்குவது என்று தான் இன்னும் வரவில்லை..

      நீக்கு
  10. பானுக்கா சூப்பர் சால்னா!!! நன்றாக இருக்கு. படங்களும்...

    எனக்கு ரொம்பப் பிடிக்கும் சால்னா, குருமா, சொதி வகைகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதனுடன் கூட கர்நாடகா சாகு ஸ்டூ குருமா எல்லாம் ஒத்துப்போகிறது சிறு மாறுதல்கள் சால்னாவும் மிக நன்றாக இருக்கிறது பானுமதி எழுத கேட்பானேன் அன்புடன்

      நீக்கு
    2. நன்றி கீதா.

      நன்றி காமாட்சி அம்மா.

      நீக்கு
  11. சுவையான குறிப்பு. குருமா எனக்கு அவ்வளவாக பிடிக்காது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!